இமை 57
விதுரனும் ஷக்தியும் தங்கள் ஊருக்கு கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில்..
“சார் நாம நினச்ச விசயம் அதுவாகவே நடந்திருச்சு சார்..” தயாளனிடம் உற்சாகமாக கூறி கொண்டு இருந்தான்.. அந்த ரௌடி..
“அப்போ நமக்கு வேலை மிச்சம்.. சரி நான் சொல்றபடி அச்சு பிசகாமல் அப்படியே செய்.. நான் நினைச்சது நடக்கும்..” ரௌடிக்கு உத்தரவிட்ட தயாளன் சில விசயங்களை கூற, “அப்படியே செஞ்சிடறேன் சார்..” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்..
சில மணி நேரத்தில் மீண்டும் தயாளன் அலைபேசிக்கு அழைத்த ரௌடி சார் நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சிட்டேன்..” என்று தகவல் கூறி இணைப்பை துண்டிக்க தயாளன் முகத்தில் கர்வ புன்னகை.. “பொடி பயலே விஜய் என்கிட்டயே உன் விளையாட்டை காட்டிட்டேல்ல.. இப்போ தெரியும் டா நான் யார் என்று?..” தான் நினைத்தது நடக்க போகும் என்ற உவகையுடன் சந்தோஷமாக தன் மகன் அஷ்வினை பார்க்க சென்றார்..
இங்கு தன் வீட்டில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி துயரத்துடன் படுத்து கிடந்தான் விஜய்.. மனதில் ஏதோ ஒரு வெறுமை சூழ எந்த வேலையும் செய்ய தோன்றாமல் அப்படியே கிடந்தான்.. “இப்போ தான் எல்லாம் சரியாக நடந்தது.. அதுக்குள்ள இப்படி ஆகிருச்சே.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்..? எல்லாம் அந்த கிராதகனால வந்தது.. அவன் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா?..
நான் கொஞ்சம் சுதாரித்து இருந்திருந்தால் இந்த நிலைமை எனக்கு வந்திருக்குமா? பசியோடு இருந்தவன் கிட்ட பிரியாணி கொடுத்து அதை ஆசையாக சாபிட்றதுக்குள்ள பிரியாணியை பிடுங்கின மாதிரி ஒரே நேரத்தில்என் ராங்ஙியையும், என் பேபியையும் பிடுங்கிட்டாங்களே..” வேதனையோடு மருகி கொண்டு இருக்க
விஜய்யை தேற்ற தான் ஆள் இல்லை.. சில நிமிடங்கள் தனக்குள் மருகி கொண்டு இருந்த விஜய் ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் உருண்டு கொண்டு இருக்க, அவன் அருகில் சுமித்ரா வந்து அமரவும், அவர் மடியில் தலை வைத்து படுத்தான்.. சுமித்ரா அவன் தலையை மென்மையாக வருடி கொடுக்க
“ஏன் மா இப்படி ஆகிடுச்சு?..” வேதனையோடு அவரிடம் கேட்க
“சில விசயங்களை கடந்து தான் ஆகணும் கண்ணா.. இன்னும் கொஞ்ச நாள் இப்படி இருக்கும் கால போக்கில் எல்லாம் மாறும்..” விஜய்யை ஆறுதல் படுத்தி கொண்டு இருந்த நேரம்
விஜய்யின் அலைபேசி சத்தமிட்டு அவனை எழுப்ப, எழ மனமில்லாமல் அலைபேசி உயிர்பித்து காதில் வைத்தான்.. அவன் ஹோட்டல் மேனேஜர் தான் அழைத்திருந்தார்
“சார் இங்க நம்ம ஹோட்டல் ரெய்டு வர போறாங்களாம்.. உடனே கிளம்பி வாங்க..” பதட்டமாக அவர் அழைக்க
“அதுக்கு இப்போ என்ன? ஒவ்வொரு ரூம் கதவையும் நான் வந்து திறந்து காட்டணுமா?..” இவன் எரிந்து விழ
“சார்…!? மறுமுனையில் அவர் திகைத்து நிற்க
“என்ன சார் எல்லாம் நானே பார்க்கணும் என்றால் நீங்க எதுக்கு இருக்கிங்க?.. இதை கூட நீங்க பார்க்க மாட்டிங்களா?. அப்பறம் மேனேஜர் என்று எதுக்கு இருக்கிங்க நீங்க..? பாருங்க சார்.. என்னால இப்போ வர முடியாது..” என்று கோபத்தோடு பேசிவிட்டு இணைப்பை துண்டிக்க..
“என்னாச்சு?.” சுமித்ரா கேட்க
“அங்க ஹோட்டல்ல ஏதோ பிரச்சினையாம் என்னை வர சொல்றார் மேனேஜர்..” விஜய் கடுப்பாக சொல்ல, “வேலை என்று வந்தால் நீ இப்படி இருக்க மாட்டியே.. நீ கிளம்பி போப்பா.. வேலைக்கு போய் உன் மனசை மாத்திக்க பாரு..” என்று சொல்ல
“நான் போகலை என்னை தொந்திரவு செய்யாதிங்க..” என்றுவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்து கொண்ட விஜய்யை பெருமூச்சுடன் சுமித்ரா பார்த்து கொண்டு இருக்க
“என்னவாம் உன் மகனுக்கு?.. கேட்டபடி உள்ளே வந்த மணிகண்டனிடம்,
“ஹ்க்கும் அவன் எதாவது நல்ல விசயம் செஞ்சா உங்க பையன்.. ஆகாத விசயம் செஞ்சா என் பையனாக்கும்?.. நல்லா இருக்கு உங்க நியாயம் என சுமித்ரா நொடித்துக் கொள்ள சரி சரி விடும் இப்ப என்ன ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தீங்க? என மணிகண்டன் கேட்க
“அதுவா அங்க ஹோட்டல்ல ஏதோ பிரச்சனையாம் இவனை கூப்பிடுறாங்க.. இவன் போக மாட்டேங்குறான்.. என்ற சுமித்ரா அலுத்தபடி கூற
“ஏன் என்னாச்சு? எதுக்கு போக மாட்டிங்கிறான்?”
“அதுவா எழிலையும், நேத்ராவையும் இவங்க கல்யாணம் வரைக்கும் எழில் அம்மா அப்பா கூட இருக்கட்டும் என்று அவங்க கூட அனுப்பி வச்சோம்ல சாருக்கு அந்த கோபம்.. அதான் வாழ்வே மாயம் மாதிரி சோக கீதம் வாசிச்சுட்டு இருக்கான்.. நானும் சொல்லி சொல்லி பார்க்கிறேன் கேட்க மாட்க்கிறான்..” தன் கணவரிடம் புகார் சொல்ல
“இப்ப எல்லாம் இவங்க உன் பேச்சு எங்க கேட்க போறான் சொல்றவங்க சொன்னா கேக்க போறான்” என்று விஜய்யை கேலியாக பார்த்தபடி
தன் அலைபேசியில் யாருக்கோ அழைத்து சில நொடிகள் பேசிவிட்டு தன் அலைபேசியை விஜய்யிடம் கொடுக்க, “யார் சொன்னாலும் நான் போக மாட்டேன்..” என்று அலைபேசியை அலட்சியமாக வாங்கி காதில் வைத்தவன்,
மறுமுனையில் இருந்தவரின் குரல் கேட்டதும் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தவன், அலைபேசியை படுக்கையில் வைத்து விட்டு வேக வேகமாக குளியலறை சென்று குளித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பாக கிளம்பி ஜெட் வேகத்தில் தயாராகி வந்தவனை சுமித்ரா வாய் பிளந்து பார்த்தார் என்றால்,
மணிகண்டன் “எப்புடி?!.” மீசையை முறுக்கியபடி சுமித்ராவை பார்த்து புருவம் உயர்த்தி கேட்க,
“அப்படி யாருக்கு போன் செஞ்சிங்க?! சுமித்ரா ஆச்சரியமாக கேட்க
“யார் சொன்னா பையன் பொட்டி பாம்பாக அடங்குவானோ அவங்களுக்கு போன் செஞ்சேன்..” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே
“ஓ நம்ம மருமகளுக்கு கூப்பிட்டிங்களா?! என்று கேட்க மணிகண்டன் ஆம் என்று தலையசைக்க, “இது எனக்கு தோணாம போச்சே?.” என்று ஆதங்கபட்ட சுமித்ரா, ஏதோ முணுமுணுத்து கொண்டே விஜய்க்கு உணவை எடுத்து வைக்க கீழே சென்றார்..
ஷக்தியும், விதுரனும் கிளம்பியதும் எழிலின் பெற்றோரும் கிளம்புவதாக சொல்ல, விஜய்யும், அவன் பெற்றோரும் இருவரையும் தங்களுடன் இருக்கும் படி சொல்ல அவர்கள்
“இல்ல தம்பி எங்களுக்கு எங்க வீட்டில இருந்தால் தான் நிம்மதி.. நாங்க அங்கேயே இருக்கோம் தம்பி..” அவர்கள் நாசுக்காக மறுக்க, விஜய் குடும்பம் அவர்களின் உணர்வை புரிந்து கொண்டு வர்புறுத்தவில்லை..
“மதிம்மா நீயும் எங்களோடு வர்றியா?!. இருவரும் ஆர்வமாக எழிலிடம் கேட்க, எழில் விஜய்யை கேள்வியாக பார்க்க,
“போகாத.. இங்கேயே இருக்கேன்னு சொல்லு..” விஜய் வேகமாக தலையசைத்து மறுக்க, “உன்னை பிரிஞ்சி இத்தனை வருஷம் நாங்க தனியா இருந்துட்டோம்.. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை கட்டி கொடுக்க போறோம். அதுவரைக்கும் நீயும், பேத்தியும் எங்க கூட இருங்கம்மா..” என்று கேட்க
அவர்கள் கேட்ட விதம் விஜய்யாலேயே மறுக்க முடியாது போது எழில் எப்படி மறுப்பாள்?.. அவர்களுடன் செல்ல சந்தோஷமாக சம்மதித்தாள்.. விஜய் தான் அவர்களை வீட்டில் விட்டு வந்தான்.. புதிதாக கிடைத்த அப்பா உறவை விட மனமில்லாமல் நேத்ரா விஜய்யை விட மறுக்க நேத்ரா உறங்கும் வரை அளுடனே இருந்தான்..
சிவகாமி இரவு உணவு தயாரித்து கொண்டு இருக்க உதவிக்கு வந்த எழிலிடம், “நீ மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு இரு மதி..” என்று அனுப்பி வைத்த சிவகாமி
மொட்டை மாடியில் நேத்ராவோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தான் விஜய்,
“அப்பா நான் இங்கே இருக்கேன் பிடிங்க.. அச்சோ ஏமாந்துட்டிங்க..” விஜய்க்கு அங்கும் இங்கும் போக்கு காண்பித்து மான் குட்டி போல் அங்கும் இங்கும் துள்ளி குதித்து ஒடிய நேத்ரா முகத்தில் இத்தனை சந்தோஷத்தையும், உற்சாகத்தை எழில் இதுவரை பார்த்ததே இல்லை..
விஜய்யுடன் உற்சாகமாக விளையாடி இருக்கிறாள் தான்.. ஆனால் அதில் ஒரு அமைதி இருக்கும்.. கொஞ்சமே கொஞ்சம் விலகல் தெரியும்.. ஆனால் இப்போ ஆர்ப்பாட்டமாக குழந்தைக்கு உரிய துறுதுறுப்புடன் விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து மனம் மகிழ்ந்தாள்..
ஏதோ மாயாஜாலம் போல் சொடக்கு போட்ட நொடியில் தன் வாழ்க்கை முற்றிலும் மாறியதை வியப்பாக நினைத்தபடி மாடி சுவரில் கைப்பிடியை பிடித்து கொண்டு நிலவை ரசித்து கொண்டு இருந்த எழிலை இரு வலிய கரங்கள் பின்னிருந்து அவளை அணைத்து கொண்டு
“பேபி அவுட்..!! அப்பா உன்னை பிடிச்சிட்டேன்..” என்று கூவியபடி எழிலை தூக்கி சுற்ற, “அச்சோ நான் நேத்ரா இல்லை விடுங்க..” எழில், விஜய்யின் கரத்தில் இருந்து திமிறியபடி சொல்ல, “எனக்க தெரியுமே கிடச்ச வாய்ப்பை தவற விட நான் என்ன லூசா..” சுற்றுவதை நிறுத்தாமல் எழில் காதில் முணுமுணுத்தவனை “ஃப்ராடு!!” விஜய்யை திட்டியபடி அவனை திரும்பி பார்த்து முறைத்த எழிலை நேத்ரா அறியாமல் அவள் முதுகில் முத்தமிட
“அப்பா.. அது நான் இல்லை நான்னு நினச்சு அம்மாவை மாத்தி தொட்டுட்டிங்க..”
“ஆமா டா.. இது நீ இல்லை.. இவ்வளவு வெய்ட்டா இருக்கும் போதே நினைச்சேன்.. மாத்தி தூக்கிட்டேன்.. யாருன்னு தெரியலயே பார்ப்போம்..” கண் கட்டை அவிழ்த்தபடி கூறிய விஜய்யிடம், “அப்பா அது அம்மா.. மறுபடியும் நீங்க அவுட்.. நான் தான் ஜெயிச்சேன்..” நேத்ரா கை தட்டி உற்சாகமாக குதிக்க..
“ஆமா என் பேபி தான் ஜெயிச்சாங்க அப்பா நான் தான் அவுட்..” விஜய் இரு கரங்களை உயர்த்தி சரணடைந்தவன் போல் கூற, “அடேங்கப்பா தோல்வியை ஏற்காத மிஸ்டர் விஜயேந்திரன் இந்த குட்டி பொண்ணு கிட்ட தோற்று போய்ட்டாங்களே..” எழில் கேலி பேச
“பிடிச்சவங்க கிட்ட தோற்று போறதுல ஒரு சந்தோஷம் இருக்கு ராங்கி..” என்று கண்சிமிட்டி கூறிய அந்த ஹோட்டல்காரனை அவ்வளவு பிடித்தது எழிலிற்கு.. இவ்வளவு பேசறிங்க ஆனா அது எப்படி அன்னைக்கு காலேஜ்ல என்னை பார்த்ததும் அடையாளம் தெரியாத மாதிரி நடந்திங்க..” எவ்வளவு முயன்றும் அவள் குரல் கோபமும் ஆதங்கமும் கலந்திருந்தது..
“ஓ மேடத்துக்கு அந்த கோபமும் இருக்கா?! கேலி பேசியவனை எழில் முறைத்து பார்க்க
“ஒகே.. ஒகே கூல் பேபி.. எனக்கு ஒரு விபத்தில் செலக்டிவ் அம்னீஷியா வந்து சில விசயங்கள் மறந்து போய்ட்டேன் ராங்கி.. அதுல உன் விசயமும் அடக்கம்.. ஆனாலும் அன்னிக்கு காலேஜ்ல உன்னை பார்க்கும் போது என்னை அறியாமல் ஒரு தடுமாற்றம் சிலிர்ப்பு.. ஏதோ ஒரு தேடல்.. அந்த தேடல் உன்னை பார்த்ததும் நிறைவடைந்த மாதிரி உணர்வு..
உடனே உன் கிட்ட வர முடியாமல், என் மனதில் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்த ஒரு தவிப்பான குரல்.. இரண்டுக்கும் இடையில் நான் தான் மாட்டி தவிச்சேன்.. அப்பறம் தான் ரெண்டு பேரும் ஒரே ஆள் தான் தெரிஞ்சது.. உன்ன கப்புன்னு பிடிச்சிட்டேன்..” என்று விஜய் கண்சிமிட்டி சொல்ல
“எப்பவும் நான் தான் தப்பாவே யோசிக்கிறேன்.. நீங்க என்னை கண்டுக்காம இருந்ததும் உங்க மேல கொஞ்சம் கோபம்..” எழில் அன்றைய தன் மனநிலையை கூற, “சரி விடு அதெல்லாம் முடிஞ்சு போன விசயம்.. என்னை பத்தி இன்னும் வேற எதாவது சந்..” என்று கூறி கொண்டு இருந்த விஜய்யின் வாய் மூடிய எழில் எதுவும் பேசாதே என்று மறுப்பாக தலையசைக்க அவள் உள்ளங்கையில் முத்தமிட்டவன்
“லவ் யூ சோ மச் ராங்கி.”
“நானும் தான் லவ் யூ தீரா..”
“,அப்போ நானு..? நேத்ரா இருவருக்கிடையில் வந்து நிற்க
“நீ தான் லவ் யு லாட்ஸ் பேபி” என்று நேத்ராவை தூக்கி கொண்டான்..
எழிலும், விஜய்யும் நேத்ராவோடு சிறிது நேரம் விளையாடி விட்டு கீழே வர சிவகாமி உணவு பதார்த்தங்களை உணவு மேசையில் எடுத்து வைத்து கொண்டு இருக்க, எழிலும் அவருடன் இணைந்து கொண்டாள்..
விஜய் அவர்களுடன் உண்டு விட்டு நேத்ரா உறங்கும் வரை அங்கே இருந்தவன், நேத்ரா உறங்கிய பின் தன் வீட்டிற்கு வந்தான்..
காரை ஹோட்டல் நோக்கி செலுத்தி கொண்டே நடந்த விசயங்களை நினைத்து பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஜய்யின் உதட்டில் தன் பேபியையும், ராங்கியை நினைத்து அழகான புன்னகை..
“ராங்கி அம்மா வீட்டில் இருந்து ஆட்டுவிக்கிறா..” செல்லமாக வைதபடி, “இப்போ ரெண்டு பேரும் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க..?” சிந்தித்தவன், “எதுக்கு யோசிச்சிட்டு அவங்களுக்கே கூப்பிடுவோம்.. “ முடிவெடுத்து தன் அலைபேசியில் எழிலுக்கு அழைக்க போகும் நொடியில், தயாளன் அவனுக்கு அழைத்திருந்தார்..
அழைப்பை ஏற்காமல் ஒரு நொடி யோசித்தவன மறு நொடி அதை உயிர்ப்பித்து காதில் வைக்க
“ என்ன தம்பி உன் ஹோட்டல் ஏதோ ரெய்டாமே.. பத்திரிகைகாரங்க உன் ஹோட்டல் முன்னாடி வரிசை கட்டி நடிக்கிறாங்க.” குரலில் ஏகத்திற்கும் நக்கல் ஒளிந்திருந்தது..
“ஓ இதுக்கு நீங்க தான் காரணமா..? சரி தான் என் ஹோட்டல் இன்னும் எப்படி எல்லாம் டெவலப் செய்யலாம் என்று யோசிச்சுட்டே இருந்தேன்.. பட் நீங்க அதுக்கு உதவி செஞ்சிட்டிங்க.. உங்க உதவியை எப்பவும் மறக்க மாட்டேன்..
இதுக்கு பதிலாக உங்களுக்கு இன்னும் பெருசாக சிறப்பாக செய்வேன் மிஸ்டர் தயாளன்.. இப்போ நான் என் ஆளு கிட்ட பேச போறேன் சோ போனை கட் பண்றிங்களா?!” படு நக்கலாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்த விஜய்க்கு ஏதோ ஒன்று உறுத்தி கொண்டே இருந்தது..
“இந்த தயாளன் வேற ஏதோ திட்டம் போட்றான்.. என்னவாக இருக்கும்..” என்று சிந்தித்த படி தன் ஹோட்டல் வந்தவன் அங்கு இருந்த குளறுபடிகறளை சரிசெய்து கொண்டு இருந்த நேரத்தில்
விஜய் உள்ளுணர்வு கூறியது பொய்க்காமல் இங்கு தயாளன் எழிலையும், நேத்ராவையும் கடத்தி இருந்தான்…
இமை சிமிட்டும்