இமை 51
விஜய்யை துரத்தி வந்த எழில் யார் மீதோ மோத வந்து கடைசி நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவள், அங்கு கண்ணில் கொலை வெறியோடு எழிலை முறைத்து பார்த்தபடி நின்றிருந்த அஷ்வின் தந்தையை பார்த்து திகைத்து நின்றாள்..
அவர் கண்களில் தெரிந்த பழி வெறியில் ஒரு கணம் விதிர்த்து நின்றாள். அடுத்த நொடி என் தங்கை இறப்பதற்கு காரணம் ஆனவன் இவரோட பையன் இவருக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் போது எந்த தப்பும் செய்யாத நான் எதுக்கு இவருக்கு பயப்படும்?. அதுவும் ஹோட்டல் கார் என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்ன பயம்?..” என்று தனக்கு தானே தைரியம் கூறிக்கொண்டு தலை நிமிர்ந்து தயாளனை நேருக்கு நேராக திமிராக பார்த்து நின்றாள்..
எழிலின் இந்த திமிரான பார்வையே தயாளன் கோபத்தை இன்னும் அதிகரிக்க “உனக்கு எவ்வளவு திமிர்.. என் முன்னாடியே இவ்வளவு தைரியமா திமிராக நிக்கிற?.. அதுவும் இந்ந அருவருப்பான மூஞ்சியை வச்சிக்கிட்டு…” என்று கோபமாகவும் எழில் முகத்தை பார்த்து ஏளனமாகவும் கேட்க, “அழகு என்கிறது என் உருவத்தில் இல்ல.. அது பாக்குற உங்க பார்வையில் இருக்கு.. அது சரி உங்க மனசு அழுக்கா இருந்தால் பாக்கிற எல்லாம் அப்படித்தானே தெரியும்..” என்று நக்கலாக கூறிய எழில்
“அதென்ன உங்க முன்னாடியேன்னு கேட்கறிங்க? நீங்க என்ன நரியா? இல்லை தேவாங்கா?. உங்களை பார்த்து நான் பயப்பட?… அவ்வளவு திருட்டுத்தனம் செய்ற ஒரு பொறுக்கியை பெத்த நீங்களே இவ்வளவு தைரியமா நிக்கும் போது நான் நிக்க மாட்டேனா என்ன..? கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு அழுத்தமாக கேட்ட எழிலை
“என்னடி வாய் நீளுது?.. என் பையன் கிட்ட பேசற மாதிரி என்கிட்டேயும் பேசினா நான் உன்னை சும்மா விட மாட்டேன்..” என்ற தயாளனை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் ஓங்கி அரைந்திருந்தாள்..” அவர் அதிர்ந்து பார்க்க, “இஎன்ன டா டி போட்டு பேசறடா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்டா.. இனி என்கிட்ட இப்படி பேசின..” என்று விரல் நீட்டி எச்சரித்து சென்ற எழில்
மீண்டும் வந்து தயாளன் மறு கன்னத்தில் அடித்து “இந்த அடி உன் பொறுக்கி மகனுக்கு விழ வேண்டியது.. அவன் நல்ல நேரம் இப்போ என் கண்ணில் படல.. இப்ப மட்டும் அவன் என் கண் முன்னாடி இருந்திருந்தா தான் அவன் குடலை உருவி மாலையாக போட்டிருப்பேன்..” என்று கண்களை உருட்டி காளி தேவியாக மாறி நின்ற எழிலை பார்த்து ஒரு கணம் விதிர்த்து நின்றார் தயாளன்.. பின்னர் தன்னை சுதாரித்து தன்னை அடித்த எழிலை
“என்னையாடி அடிச்ச?. அடிச்சு போட்டா ஏன்னு கேட்க ஆள் இல்லாத கழுதை உனக்கு இவ்வளவு தைரியமா?.” என்று ஆத்திரமாக கேட்டபடி பெரும் கோபத்துடன், எழில் முடியை பிடிக்க வர, அதற்குள் ஒரு வலிமையான கரம் ஒன்று தயாளன் கரத்தை பிடித்து பின்னால் மடக்கி முறுக்கியது.. “பொண்ணுங்க கிட்ட ராங்கா பேசறதே தப்பு.. இதுல அடிக்க வேற போறியே இது ரொம்ப தப்புல்ல..” என்று ஒரு இரும்பு குரல் தயாளனை மிரட்ட
“இங்க என்னடா நடக்குது?.. ஹீரோ நான் நியாயமா நான் தான் எதாவது பஞ்ச் டயலாக் பேசி இந்த ஆளோட கையை உடைக்கணும்..” என்று புலம்பிக் கொண்டே அங்கு வந்த விஜய்யிடம், தயாளனின் கையை பிடித்திருந்த ஷக்தி “அநியாயம் எங்க நடந்தாலும் தட்டி கேட்கணும் என்று என் டாடி சொல்லியிருக்காங்க.. நீ ஸ்லோவா வந்தா நான் என்ன செய்ய..” என்று தோள் குலுக்கிய ஷக்தியை விஜய் முறைத்து பார்த்தவன்
“அடே மச்சி என் ஆளு சூப்பரா இந்த தயாளனுக்கு பதிலடி கொடுத்திட்டு இருந்தா.. நான் அதை ரசித்து பார்த்துட்டு இருந்தேன்.. அதுக்குள்ள நீ வந்துட்ட..” என்று போலியாக அலுத்து கொள்ள
“அழகுல மெய் மறுக்குறதுன்னு சொல்ற மாதிரி நீ சிஸ்டர் மிரட்டலில் மெய் மறந்து நின்று விட்டாயா?!.. சரி விடு இப்போ என்ன இந்த ஆள் கையை நீ பிடிக்கணுமா இந்தா பிடிச்சிக்கோ..” என்று ஷக்தி தான் பின்னால் முறுக்கி இருந்த தயாளன் கரத்தை அப்படியே விஜய்யை நோக்கி நீட்டினான்.. ஏற்கனவே ஷக்தி தன் கரத்தை முறுக்கியதில் வலியில் துடித்த தயாளன் இப்போது ஷக்தி முறுக்கி இருந்த தன் கரத்தை அசைக்க வலி இன்னும் அதிகமாக
“டேய் என் கையை விட்றா..” தயாளன் கத்தி கொண்டு இருக்க, தயாளன் கத்துவதை கண்டு கொள்ளாமல், இந்த ஆள் கை என்ன கார்பரேஷன் குழாயா?.. ஆளாளுக்கு கை வைக்க? நீ தானே முதல்ல அந்த ஆள் கையை பிடிச்ச அப்போ நீயே பிடிச்சுக்கோ..” என்று விஜய் தயாளன் கரத்தை இன்னும் முறுக்கி மீண்டும் ஷக்தியை நோக்கி நீட்ட,
“ஆ..ஆ.” தயாளன் வலியில் தன் வயதை மீறி வலியில் துள்ளி குதிக்க, இருவரின் அலப்பறைகளை பார்த்த விதுரன், அடேய் ஒரு வயசான ஒரு ஆளை போட்டு ரெண்டு பேரும் என்ன பாடு படுத்துறீங்க.. விடுங்கடா அவரை..” என்று விதுரன் ஷக்தியின் பிடியில் இருந்த தயாளன் கரத்தை விடுவித்தான்.. தன் கரத்தை தேய்த்தபடி அங்கிருந்த அனைவரையும் முறைத்து பார்த்த தயாளன் விஜய்யிடம் திரும்பி
“நல்லவன் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டேல்ல.. உன்..”
“உன்னை சும்மா விட மாட்டேன்” இதை தானே சொல்ல வந்திங்க மிஸ்டர் தயாளன்..?” என்று தயாளன் கூற வந்ததை இடைமறித்து தான் முடித்து வைத்த விஜய், “நான் நல்லவன் என்று உங்க கிட்ட சொல்லவே இல்லையே.. என்னை பார்த்ததும் உன் மகன் தான் சொன்னானே அதை கூட உன்னால புரிஞ்சிக்க முடியல.. மகனுக்கு புரிஞ்சுது கூட உனக்கு புரியல நீ எல்லாம் என்னத்த பிசினஸ் செஞ்சியோ?!” என்று படு நக்கலாக பேசிய விஜய், குரோதமாக பார்த்த தயாளன்
“என் பையன் மேலயும் என் மேலயும் கையை வச்சு நீ ரொம்ப தப்பு பண்ணிட்ட விஜய்.. இதுக்கான விளைவுகள் நீ சந்திச்சு தான் ஆகணும்..” என்று தயாளன் மிரட்ட
“போங்க மிஸ்டர் தயாளன்.. போய் அடிபட்டிருக்க உங்க பையனை போய் பாருங்க.. இத்தனை வருஷம் மதியோட குடும்பம் அனுபவித்த துன்பத்திற்கும் திவிம்மா இறப்புக்கும் உங்க பையன் நிச்சயமாக பதில் சொல்லியே ஆகணும்.. உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து உங்களை மன்னிச்சி விடலாம் நினைக்கிறேன்.. ஆனால் லிமிட் கிராஸ் செஞ்சிங்க என்றால் அப்பறம் நடக்கிற விபரீதத்திற்கு நான் பொறுப்பு இல்லை போங்க போய் உங்க பையனை பத்திரமா பார்த்துக்கங்க..” என்று அவரை அனுப்பி வைக்க,
“நீயும் உன் பொண்ணை பத்திரமாக பார்த்துக்க மிஸ்டர் விஜய்..” என்று எச்சரித்து செல்ல, இப்போது எழில் அதிர்ந்து பார்த்தாள்.. “உங்களுக்கு பொண்ணு இருக்கா?.” என்று அதிர்ந்து கேட்க, அவள் தலையில் வலிக்கும்படி கொட்டிய விஜய், “நீ எதையும் சரியா புரிஞ்சிக்க மாட்ட.. ஆனால் பேச்சு மட்டும் தேள் மாதிரி கொட்றது.. அடியே ராங்கி அந்த என் பொண்ணு என்று சொன்னது நேத்ரா பேபியை..” என்று விளக்கி சொல்ல
“என்ன அம்மு குட்டியை சொனாரா? அம்மு என் குழந்தை அவ எப்..படி…? என்று பேசிக்கொண்டு இருந்த எழில் விஜய்யின் அழுத்தமான பார்வையில் வாயை கப்பென்று மூடி கொண்டாள்..
“என்னடா இங்க என்ன நடக்குது யார் அந்த ஆள்.. அவர் எதுக்கு உங்க கிட்ட வம்புக்கு வராங்க?.” என்று விதுரன் கேட்க, விஜய் அஷ்வினை பற்றியும், எழில் தங்கை திவ்யாவை பற்றி கூற, திவ்யாவை நினைத்து அனைவருக்கும் வருத்தமாக இருந்தது..
“அந்த அஷ்வின் ஏன் நேத்ரா பேபியை தேடிட்டு இருக்கான் சிஸ்டர்?. விதுரன் கேட்க, “அடேய் நானே இப்போ தான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ராங்கி மனசை மாத்தி ரொமான்ஸ் செய்ய ஆரம்பிச்சேன்.. இப்ப போய் அந்த அஷ்வினை பத்தி கேட்டு ஏன் டா இம்சை பண்றிங்க..?” என்று விஜய் சலித்தபடி கேட்க,
“என்னடா இப்படி சொல்லிட்ட?.. நீ எங்கள் உயிர் நண்பன்..உனக்கு ஒரு துன்பம் வந்தால் நாங்க..” என்று உணர்ச்சி பொங்க கூற வந்த ஷக்தியிடம், “நீ ஆணியே பிடுங்க வேண்டாம் ராசா..” என்று கையெடுத்து கும்பிட, “சே.சே நல்லதுக்கு காலம் இல்லை என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..” அப்போதும் விடாமல் அலப்பறை செய்த ஷக்தியை எதுவும் செய்ய முடியாமல் விஜய் விதுரனை பரிதாபமாக பார்க்க
“எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசலாம்.. இது ஹாஸ்பிடல் வாங்க போகலாம்..” விதுரன் அனைவரையும் அழைக்க, “சரி நீங்க எலாலாரும் முன்னாடி போங்க நான் என் நண்பன் விஜி கூட வர்.ஆஆஆ.” விஜய்யை வம்பிழுத்து கொண்டு இருந்த ஷக்தியின் காதை பிடித்து திருகிய மலர்,
“வர வர உங்க சேட்டை அதிகமாகிருச்சு பாவம் என் அண்ணா ஒழுங்கா வாங்க..” என்று ஷக்தியை அதட்டி இழுத்து செல்ல, “நோ வன்முறை செல்லம் நீ வா என்று சொன்னா சமத்தாக வர போறேன்..” என்று ஷக்தி மனைவியிடம் பம்மி கொண்டு சொல்ல “ஃப்ளவர் அண்ணா உனக்கு கோவில் கட்றேன்டா..” என்று புன்னகையுடன் கூறிய விஜய்
இங்கு நடந்து கொண்டிருப்பதை ரசனை கலந்து சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த எழிலை ,”வா ராங்கி போகலாம்..” எழில் என்னவென்று சுதாரிக்கும் முன் அவள் கை பிடித்து இழுத்து சென்றவன், “அங்கிள, ஆண்ட்டியை பத்திரமாக கூட்டிட்டு போங்கடா..” என்று எழிலின் பெற்றோரையும் அவர்கள் பொறுப்பில் விட்டு சென்றான்…
“அடேங்கப்பா இப்போ தான் மச்சிக்கு தைரியம் வந்திருக்குடா..” என்று கேலி பேசிய ஷக்தி விதுரனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க, “நீங்க முன்னாடி போய் நம்ம கார்ல இருங்க நாங்க வந்திட்றோம்” என்ற இருவரையும் பார்த்து நீங்கள் எங்கே போறிங்க?..” இரு பெண்களும் கேட்க,
“ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரோம்..” இருவரும் ஒருசேர கூற அவர்களை நம்பாமல் பார்த்த மனைவிமார்களிடம், “என்ன நம்பலயா?..” என்று கேட்க “உங்களுக்கு சரியா பொய் கூட சொல்ல தெரியல..” இரு பெண்களும் நக்கல் பேசிவிட்டு செல்ல, “மனைவியிடம் சந்தேகம் வராமல் பொய் சொல்வது எப்படி?. என்று புக் எதாவது இருக்கா?.. இருந்தா எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கி படிக்கணும்…” என்று புலம்பியவாறே இருவரும் அஷ்வின் இருந்த அறையை நோக்கி சென்றனர்
இங்கு காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஜய் தன் காதலுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகி கை கூடியதில் அவன் மனம் மேகம் போல் லேசாக மிதந்து கொண்டு இருந்தது.. தன் அருகில் இருந்த எழில் கரத்தை பிடித்து நொடிக்கொரு முறை தன் உதடுகளை பதித்தபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்தவன் எழிலிடம் எந்த சலனமும் இல்லாதிருப்பதை கண்டு ஒரு பெருமூச்சுடன் காரை ஓரமாக நிறுத்தியவன்
“லிட்டில் கேர்ள் திவியை பத்தின உண்மை தெரிஞ்சதும் நீ எப்படி ஃபீல் செய்வ என்று தெரியும்.. அம்மா அப்பா முன்னாடி நீ உன் அழுகையை கட்டுப்படுத்திட்டு இருக்க என்று தான் உன்னை தனியா அழைச்சிட்டு வந்தேன்.. அழுதிடுமா..” மென்மையாக கூற
அதுவரை தன் அழுகை அடக்கி வைத்திருந்த எழில் விம்மி வெடித்து அழ சில நிமிடங்கள் அவளை அழ விட்ட விஜய் அவள் அழுகை இன்னும் அதிகமாகவும் தன்னோடு அணைத்துக் கொண்ட விஜய், “ஒண்ணும் இல்லைடா திவி அங்க சாமிக்கிட்ட பத்திரமா இருப்பா.. நீ சந்தோஷமாக இருக்கணும் நினச்சு தான் அவ தியாகம் செஞ்சா நீ இப்படி அழுதா அவ மனசும் கஷ்ட்ப்படும் லிட்டில்..” என்று சமாதானம் செய்ய, விஜய்யின் தோளில் சாய்ந்து கொண்ட எழில்
“நீங்க சொன்ன மாதிரி நான் என்ன பத்தி மட்டுமே யோசிச்சு வீட்டல என்ன நடக்கிறது என்று கவனிஅகாம விட்டுட்டேன்ல நான் மட்டும் கொஞ்சம் கவனிச்சிருந்தா திவி என்னை விட்டு போய்ருக்க மாட்டாள்ல.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்” என்று தன்னையே திட்டி கொண்டு இருக்க
“சில விசயங்கள் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது யார் தடுத்தாலும் நிக்காது லிட்டில் கேர்ள்.. திவியோட இறப்பும் அப்படி தான்..திவிம்மாவ அந்த சாமிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல அதான் அவர் எடுத்துக்கிட்டார்..” சமாதானம் செய்த விஜய்யை நிமிர்ந்து பார்த்த எழில்
“நீங்க என்ன சொன்னாலும் நான் சும்..ம்..” விஜய்யின் சமாதானத்தை ஏற்று கொள்ளாமல் மீண்டும் தன்னையே திட்டிக் கொண்ட எழிலின் இதழை தன் உதட்டோடு அழுத்தி இணைத்து கொண்டான்.. விஜய்யின் பிடியில் இருந்து திமிறி கொண்டிருந்த எழில் ஒரு கட்டத்தில் அவன் இதழணைப்பில் கட்டுண்டு அனைத்தும் மறந்து அவனுடன் ஒன்றினாள்..
இமை சிமிட்டும்