Loading

இமை 50

 

விஜய் வெளி வாசலை பார்த்து யாரையோ அழைக்கவும் எழிலும் ஆர்வமாக வெளியே பார்த்தவள்,  தயக்கத்தோடு உள்ளே வந்து கொண்டிருந்த தன் பெற்றோரை பார்த்தவள் முதலில் மகிழ்ந்து அவர்களை நெருங்கி அணைக்க போக, 

 

 

நொடியில் தன் கடந்த காலம் துன்பங்கள் உணர்ந்து அந்த துன்பத்திற்கு காரணம் இவர்கள் தானே என்று மனம் வெதும்பி அவர்களை வேதனையும் கோபத்தோடும் பார்த்தவள் அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்றாள்..

 

 

தன் பெற்றோரை இங்கு அழைத்து வந்த விஜய்யை முறைத்துப் பார்த்து இவங்களையே இங்க கூட்டிட்டு வந்தீங்க என கோபமாக கேட்க 

 

 

“ஏன் இவங்களை கூட்டிட்டு வரக்கூடாது..? என விஜய்யின் அழுத்தமான கேள்வியில், “இவங்க யார் என்று உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே.. அப்போ எனக்கு இவங்க மேல் இருக்கிற கோபமும் தெரியுமே.. எல்லாம் தெரிஞ்சும் இவங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கிங்க?”  என்று விரல் நீட்டி கோபமாக பேசிக்கொண்டு இருந்த தன் ராங்கியை அந்த நிலையிலும் ரசித்த விஜய்,

 

 

 

“அவங்க மேல உனக்கு என்ன கோபம்? உனக்கு பார்த்த அஸ்வினை உன் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் இவங்க தான் என்று உன் அம்மா அப்பா மேல் கோபமா?” என்று எழில் மனம் பற்றி அறிந்தே அவளை சீண்டும்படி விஜய் கேட்க, 

 

 

 

“சீ.. போயும் போயும் அவனை கல்யாணம் செய்ய முடியலை என்று இவர்கள் மேல கோவப்பட்டேனா?.. என்று முகத்தை சுளித்தபடி அருவருப்பாக கேட்ட எழில் என் விசயத்திலேயே அவனோட சுயரூபம் தெரிஞ்சும் அந்த அயோக்கியனை பணத்துக்காக ஆசைப்பட்டு என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவ இறப்பதற்கு காரணமானவங்க இவங்கதான்.. இவங்களை எப்படி நான் மன்னிப்பேன்?.. 

 

 

 

என் தங்கை எவ்வளவு துறுதுறுவென  இருப்பா தெரியுமா?.. அந்த ராட்சசனை கல்யாணம் செஞ்சு ஆளே மாறிட்டா..‌ என்று ஆவேசமாக பேசி கொண்டு இருந்த எழிலிடம் 

 

 

 

“திவ்யா உன் தங்கச்சி தானே உன்னால அவளை தடுக்க முடியலையா?.” விஜய் நிதானமாக கேட்க,

 

 

“திவ்யா தான் ரொம்ப பிடிவாதம் பிடிச்சாளே.. அவளை என்னால கட்டுப்படுத்த முடியல” என்று எழில் ஆதங்கமாக சொல்ல, “ரெண்டு பேரும் அவ்வளவு உயிரா பழகிருக்கிங்க உன் பேச்சையே திவ்யா கேட்கல.. அப்போ இவங்க பேச்சை மட்டும் திவ்யா கேட்பா என்று நீ எப்படி நினைக்கிற..?” விஜய் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

 

 

பதில் சொல்ல முடியாமல் எழில் அமைதியாக நின்றிருக்க, “நீ உன் தங்கச்சியையும் புரிஞ்சிக்கல.. உன்னை பெத்தவங்களையும் புரிஞ்சிக்கல.. சொல்ல எனக்கு கஷ்டமா இருந்தாலும் நான் இதை சொல்லியே ஆகணும்..” என்ற விஜய்யை எழில் புரியாமல் பார்த்து, “என்ன சொல்லணும்?” என்று கேட்க 

 

 

“நீ ஒரு படிச்ச முட்டாள்?! கொஞ்சம் சுயநலமும் இருக்கு..” அழுத்தம் திருத்தமாக கூறிய விஜய்யை எழில் அதிர்ந்து பார்க்க 

 

 

 

“என்ன பார்க்கிற அதான் உண்மை.. உனக்கு முகத்தில் அடிபட்டதில் இருந்து உன்னை பத்தியே கவலை பட்டு நீ உன் குடும்பத்தை கவனிக்க தவறிட்ட..” இது சுயநலம் இல்லையா?. அவ்வளவு நாள் மாமா என்று கூப்பிட்டு இருந்த உன் தங்கை திவ்யா, ஒரே நைட்ல எனக்கு அஷ்வின் தான் வேண்டும் என்று அடம்பிடிக்க என்ன காரணம் என்று யோசிக்க மறந்த நீ முட்டாள் இல்லயா..?”

 

 

 

ஒரு விசயத்தை தவறான கோணத்தில் பார்த்து, அதையே சரி என்று நம்பி இத்தனை வருஷம் நீயும் கஷ்டப்பட்டு இவங்களை விலக்கி வச்சி கஷ்டப்படுத்துனியே.. உன் தங்கை திவ்யாவோட அந்த நிலமைக்கு காரணம் யார் தெரியுமா?!” என்று ஒரு நொடி பேச்சை நிறுத்த 

 

 

 

“தம்பி வேண்டாம் தம்பி என் பொண்ணு எங்க மேல கோபமா இருந்தா கூட பரவாயில்ல.. அவளுக்கு எந்த உதவியும் தெரிய வேண்டாம்..” என அவசரமாக விஜய்யிடம் கூறிய சிவகாமியை எழில் குழப்பமாக பார்த்தாள்..

 

 

 

விஜய் கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டும் அவள் முகத்தில் அறைவது போல் உணர்ந்தாள்.. இவங்க சொன்னது மாதிரி நான் ஏன் யோசிக்க மறந்தேன்.. திவ்யா திடீரென்று அஷ்வினை கல்யாணம் செய்ய கேட்டு பிடிவாதம் செய்ய எதாவது காரணம் இருக்கா..” என்று எழில் சிந்தித்து கொண்டு இருக்க சிவகாமியின் மறுப்பு எழில் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

 

 

 

“யாராவது என்கிட்ட எதையாவது மறைக்கிறிங்களா..?” எழில் மூவரையும் பார்த்து சந்தேகமாக கேட்க, “பணத்துக்காக ஆசைப்பட்டு உன் தங்கையை அஸ்வினுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க என்று நீயாக கற்பனை செஞ்சு இத்தனை வருஷம் இவங்க மேல் கோபமா இருந்தியே.. திவ்யா அஷ்வினை கல்யாணம் செஞ்சிக்க முக்கிய காரணம் நீ தான் நீ மட்டும் தான்..”என்று விஜய் அழுத்தமாக கூற, 

 

 

“என்னாலயா?!”

 

விஜய் கூறிய குற்றச்சாட்டில் எழில் ஸ்தம்பித்து சிலையாக நின்றாள்.. 

 

“ஆமா அந்த அஷ்வினால உனக்கு எந்த கஷ்டமும் வந்திட கூடாது என்று உனக்கு வர இருந்த துன்பத்தை உனக்கு பதிலா திவ்யா வாங்கிக்கிட்டா..” என்று சொல்ல 

 

 

 

“அய்யோ என்ன சொல்றிங்க கொஞ்சம் தெளிவாக தான் சொல்லுங்களேன்.. நீங்க சொல்ற குற்றச்சாட்டால எனக்கு எவ்வளவு வலிக்கும் என்று உங்களுக்கு தெரியும் தானே.. அப்பறமும் இதை சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது.. திவிக்கு என்ன நடந்துச்சு‌..? என்று அழுதபடி கேட்க 

 

 

 

ஒரு பெரு மூச்சுடன் விஜய் நடந்த அனைத்தையும் கூற, விஜய் கூறியதை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றாள்.. மகளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டு மனம் பொறுக்காமல் “மதி உன் மேல எந்த தப்பும் இல்லைம்மா.. நாங்க தான் தப்பு.. எங்க மேல தான் தப்பு.. இத்தனை வருஷம் தனியாக இருந்த நாங்க இனியும் தனியாக இருந்துக்கிறோம்.. நாங்க கிளம்பறோம்..” என்று எழில் கண்ணீரை துடைத்து விட்டு வெளியே செல்ல ஒரு எட்டு எடுத்து வைத்த சிவகாமி கரத்தை பிடித்து தடுத்த எழில் 

 

 

 

“ஒரு பிரச்சினை வந்தால் என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உங்களுக்கு நான் யாரோவா போய்ட்டேன்ல? சின்ன பொண்ணு திவி அவளுக்கு என்ன தெரியும் நினைச்சு அவ பேச்சை கேட்டு நீங்க அவ்வளவு பெரிய முடிவு எடுத்திங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நானும் அந்த அஷ்வினும் தனிப்பட்ட முறையில் எந்த ஃபோட்டோவும் எடுக்கல.. இது தெரியாமல் நீங்..

 

 

 

“அவங்களுக்கும் அது தெரியும்..” என்று அவளை இடைமறித்து கூறிய விஜய்யை திரும்பி பார்த்த எழில் ”அப்பறம் எப்படி அந்த கல்யாணதுக்கு ஒத்துகாகிட்டாங்க?.” ஆதங்கமாக கேட்க, “அவன் அந்த போட்டோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் போட்ருவேன் சொல்லி இவங்க பலவீனத்தை வச்சு மிரட்டிருக்கான் நீ ஏற்கனவே மன கஷ்டத்தில் இருக்க உனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க கூடாது என்று நினச்சு,  அந்த அயோக்கிய ராஸ்கல் அஷ்வின் மிரட்டலுக்கு பயந்து திவ்யா பேச்சை கேட்டுட்டாங்க..” என்று விஜய் விளக்கமாக சொல்ல 

 

 

 

நடந்ததை எல்லாம் ஜீரணிக்க முடியாமலும், அந்த அஷ்வினை எதுவும் செய்ய முடியாமலும் எழில் மனம் கொந்தளிக்க நின்றிருந்தாள்.. இத்தனை வருடங்கள் தன் பெற்றோரை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து மனம் வெதும்பி நின்றாள்.. அவர்கள் முகத்தை பார்க்க கூட தனக்கு தகுதி இல்லாதது போல உணர்ந்து மனம் குன்றினாள்

 

 

 

“அம்மா.. அப்பா.. நான்.. நீங்க அது வந்து..” என்று எழில் அவர்களிடம் பேச திணற, “இவங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்பு தப்பாக பேசும்போது வராத தயக்கம், இப்போ இவங்க தப்பானவர்கள் இல்லை என்று சரியாக புரிந்து கொண்டதும் பேசுவதற்கு தயக்கமாக இருக்கா ராங்கி..?” என்ற விஜய்யின் கேள்வியில் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்த எழிலிடம் 

 

 

 

“எப்பவும் கோபத்தில் நிதானத்தை இழக்க கூடாது ராங்கி..” என்று அறிவுரை கூறி கொண்டிருக்க அவன் பேச்சை கண்டு கொள்ளாத எழில் ஓடி சென்று தன் பெற்றோரின் காலில் விழ போக, அவளை தடுத்த இருவரும் தங்கள் மகளை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்த

 

 

 

“என்கிட்ட எதுவுமே சொல்ல தோணலைல அந்த வாண்டு திவ்யா பேச்சை கேட்டு என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டிங்கள்ல..” என்று எழில் தன் பெற்றோரை அணைத்து கொண்டு அழ, “நீயாவது நிம்மதியாக இருக்கணும் என்று நினச்சு தான் மதி உன்கிட்ட எதுவும் சொல்லல..” என்று சிவகாமி கூற

 

 

 

“எல்லாம் நடந்து முடிந்த விசயங்கள் இனி அதை பற்றி பேசி மேலும் மேலும் காயப்படுத்திக்க வேண்டாம்.. இதோட அதை எல்லாம் கடந்து வந்திடுங்க..” என்ற விஜய்யிடம், “எங்க பொண்ணு எங்களுக்கு திரும்ப கிடச்சிட்டா இதுக்கெல்லாம் நீங்க தான் தம்பி காரணம்.. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது..” என்று உணர்ச்சி பெருக்குடன் நன்றி கூற 

 

 

 

“நன்றி சொல்லி என்னை அன்னியமாக்கிடாதீங்க அத்தை..” உறவு முறையை சொல்லி உரிமை கொண்டாடிய விஜய்யை சிவகாமி சந்தோஷமாக பார்த்தார்.. பரசுராமனுக்கு விஜய் பேசுவதை புரியாமல் பார்க்க, “என்ன மாமா நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியலையா?.! என்று மாமா என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொல்ல இப்போது புரிந்தது அவருக்கு விஜய் தங்களுக்கு மருமகனாக வருவது அவர்களுக்கு பேரானந்தம்..”

 

 

 

இதென்ன புதுசா அத்தை மாமா உறவு கொண்டாட்றிங்க?! இவங்க என் அப்பா, அம்மா, எனக்கு தான் சொந்தம்..” என்று எழில் உரிமை கொண்டாட, “ஆமா இவங்க உன் அப்பா அம்மா தான் யார் இல்லை என்று சொன்னது?. அவங்க உனக்கு அம்மா அப்பா தான்.. உன்னை கல்யாணம் செஞ்சிக்க போற எனக்கு இவங்க அத்தை மாமா தான் என்ன உறவு முறை சரிதான?..” என்று எழிலிடம் வம்பு செய்ய 

 

 

 

“என்ன உளறல் நான் எப்போ உங்களை கல்யாணம் செஞ்சிக்கிறேன் என்று சொன்னேன்?. எழில் புருவம் உயர்த்தி கேட்க, “லிட்டில் கேர்ள் மனுசங்க மேல நம்பிக்கை இல்லை என்று சொல்லி நீ என்னை மறுத்த காரணம்  செல்லாது..  சோ என்னை மறுக்க உனக்கு வேற காரணம் இல்லை.. அப்பறம் அதைவிட முக்கியமான விஷயம் கொஞ்ச நேரம் முன்னாடி தான் நீ என்னை கல்யாணம் செய்ய சம்மதிச்ச..” என்ற விஜய்யை முறைத்து பார்த்த எழில் 

 

 

 

“உங்களை கல்யாணம் செய்ய சம்மதம் என்று என் வாயால நான் சொன்னேனா?” என்று சந்தேகமாக கேட்க “ஆமா நீ உன் வாயால் தான் சொன்ன..” என்று விஜய் எழிலின் பெற்றோர் அறியாமல் தன் உதட்டை நாவால் வருடி காட்ட, அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்த எழில் குப்பென்று முகம் சிவந்தாள்.. 

 

 

 

தன்னவளின் முகச்சிவப்பை ரசனையோடு பார்த்த விஜய்யின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள் எழில்.. “மாப்பிள்ளை வந்ததும் கேட்கணும் நினைச்சேன் இது என்ன உங்க முகம் முழுவதும் தக்காளி சாஸ் பூசியிருக்கிங்க?.. எதாவது ஃபேஷியல் செஞ்சு இருக்கிங்களா?. ஆனால் ஹாஸ்பிடல்ல வச்சு எதுக்கு ஃபேஷியல் செஞ்சிருக்கிங்க?” சிவகாமி விஜய்யை பார்த்த நொடியில் தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை இத்தனை நேரம் கேட்காமல் இப்போது கேட்க 

 

 

 

“அது ஒண்ணும் இல்லை அத்தை ஒரு ஈகோ பிடிச்ச பெண்ணை, என்னை பிடிக்க வைக்கிறதுக்காக சின்ன ட்ராமா போட்டேன்.. ஆனால் பாருங்க அம்மா நீங்க என்னை பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டிங்க உங்க பொண்ணு..” விஜய் எழிலை கேலியாக பார்த்தவன், அத்தை கூட பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டாங்க.. ஆனால் நீ?! என்று தோள் குலுக்கியவன் 

 

 

“நீ இவ்வளவு தத்தியா இருப்ப என்று நான் நினைச்சே பார்க்கல ராங்கி..” என்று வம்பு செய்ய, “யார் நானா தத்தி?! இந்த தத்தி உங்களை என்ன செய்றேன்னு பாருங்க..” என்று மிரட்டியபடி விஜய்யை துரத்த, 

 

 

அவளிடம் சிக்காமல் விஜய் வெளியே ஒடியவன், “மச்சி  நாங்க வந்துட்டோம்..” என்று உற்சாகமாக கூறியபடி உள்ளே வந்த ஷக்தியை கவனிக்காமல் அவனை இடித்து கொண்டு ஓட, தடுமாறி கீழே விழ இருந்த ஷக்தியை விதுரன் பிடித்து கொண்டான்..

 

 

“சிஸ்டர் நம்மள பார்த்ததும் சந்தோசப்படுவாங்க பாரேன்..” என்றபடி விஜய்யை துரத்தி வந்த எழிலை வழிமறித்த ஷக்தியிடம், “ஒடி வரேன் ஓரமாக நிக்க மாட்டிங்களா?” என்றபடி எழிலும் ஷக்தியை கடந்து செல்ல, “என்னங்கடா நடக்குது இங்க?. என்று நடப்பதை வியப்பாக பார்த்த ஷக்தியிடம்,

 

 

 

“அவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்க காதலர்கள் சேர்ந்த ஃப்ரெண்ட்ஸை கழட்டி விட்றது வழக்கம் தான..‌அதான் இவங்களும் செஞ்சிட்டு போறாங்க..‌” விதுரன் கூற “ஓ காட்!! அத்தனையும் நடிப்பா கோபால்.” என்று ஷக்தி அதிர்ந்தது போல் நடிக்க, விதுரன் வராத கண்ணீரை துடைத்தபடி ஆம் என்று தலையசைக்க இருவரின் அலப்பறைகளை அவர்களின் மனைவிமார்கள் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்து கொண்டு இருந்தனர்..

 

 

இங்கு விஜய்யை துரத்தி வந்த எழில் யார் மீதோ மோதி கீழே விழ போனவள் கடைசி நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு “சாரி தெரியாமல் மோதிட்டேன்..” என்று மன்னிப்பு கேட்டபடி நிமிர்ந்து பார்த்தவள் தன்னை குரோதமாக முறைத்து பார்த்து கொண்டு இருந்த மனிதரை பார்த்

து அதிர்ந்து நின்றாள்..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்