Loading

இமைகளின் இடையில் நீ..5

விஜய்யின் கேலி பேச்சை கேட்டு, நகை கடை உரிமையாளர் சத்தமாக சிரிக்க, கூடவே எழிலும் தன்னையறியாமல் சிரித்து விட்டிருந்தாள்.. ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்த விஜய், அங்கு எழில் நின்றிருப்பதை கண்டு அவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவனுக்கு, அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம்.. அது எங்கே என்று சட்டென்று நினைவுக்கு வராமல் போக தன் யோசனையை விடுத்து

“ஓ கே மிஸ்டர் தயாளன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாங்க கிள்மபறோம்..” அவரிடம் கை குலுக்கி விடைபெற்றவன், மீண்டும் ஒரு முறை எழிலை பார்த்தான்.. இப்போது அவள் அருகில் அஷ்வின் இருப்பதை பார்த்ததும், அவனுக்கு எழிலை எங்கே பார்த்தோம் என்று நியாபகம் வர “லிட்டில் கேர்ள்..” என்று தனக்குள் முணுமுணுத்தபடி, அவளை அறிமுகமற்ற பார்வை பார்த்தவன், யாரோ போல் அவளை கடந்து சென்றான்..

அஷ்வின் எழில் விருப்பத்தை கேட்காமல் அவனுக்கு பிடித்தது போல் அவளுக்கு வைர மோதிரம் ஒன்றை வாங்கியவன், அவளை அழைத்து கொண்டு நகை கடையை விட்டு வெளியே வர, அஷ்வினின் இந்த செயலில் மனம் சுணங்கிய எழில், சற்று முன் ஒருவன் தன் அன்னைக்காக ஒவ்வொரு நகையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தது நினைவிற்கு வர அம்மாவை இவ்வளவு நல்ல கவனிக்கிறாங்களே அவங்களுக்கு வரப்போற மனைவி நிஜமா ரொம்ப லக்கி தான்..” என்று மனதில் விஜய்யை பாராட்டி கொண்டாள்..

“பேபி நீ எப்போ கன்னியாகுமரி போற?..” அஷ்வின் கேட்க, தன் சிந்தனையில் இருந்து விடுபட்டு “இன்னும் ரெண்டு நாள்ல போகணும்…”  பதில் கூறிய எழிலிற்கு “சே யாரோ ஒரத்தரை ஏன் அஷ்ஷீ கூட ஒப்பிட்டு  பார்க்கிறேன்.. என்று தன்னையே திட்டி கொண்டிருக்க, ”எப்படி போவ?.. நான் வேனா உன்னை கூட்டிட்டு போகவா?..” என்று அஷ்வின் கேள்வியில் தன் சிந்தனை கலைந்தவள்  அவன் கேள்வியில் திக்கென்றது எழிலிற்கு.. “இல்லை வேண்டாம் அஷ்ஷீ இங்க நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ட்ரெயின்ல போக போறோம்..”என்று அவசரமாக மறுக்க

“ஓ.. ஃப்ரெண்ட்ஸ் கூட போக போறியா அப்போ சரி நான் உங்க எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல புக் செஞ்சு தர்றேன் அதுல போட்றிங்களா?..” என்று கேட்க, அய்யோ என்று ஆயாசமாக இருந்தது எழிலிற்கு.. திருமணத்திற்கு முன் இவனின் அன்பை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் சில நேரங்களில் தவிக்க வைத்து விடுவான்.. இப்போதும் அதே நிலை தான் எழிலிற்கு

“அஷ்ஷீ தப்பா எடுத்துக்காதிங்க நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட நார்மல் கோச்ல போறேன்.. அவங்க ஆல்ரெடி புக் பண்ணிட்டாங்க சோ ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதிங்க..” என்று தயங்கி கூற, “கொஞ்ச நேரம் முன்னாடி தான் உன் அம்மா கிட்ட பர்மிசன் கேட்ட அதுக்குள்ள எப்படி ட்ரெயின் புக் செஞ்சிங்க?..” என்று அஷ்வின் அவளை சந்தேகமாக பார்த்து கேட்க, பதில் சொல்ல முடியாமல் எழில் திருதிருவென விழித்தாள்..

“உன் முழியே சரியில்லையே என்று சந்தேகமாக பார்க்க, “அது நீங்க சொன்னா அம்மா எப்படியும் பர்மிசன் கொடுத்திருவாங்க என்று எனக்கு தெரியும்.. அதான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட முன்னாடியே டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன்..” என்று அசடு வழிய கூறிய எழிலை அள்ளி முத்தமிட தோன்றியது அஷ்வினுக்கு..

“ரொம்ப அழகா இருக்க பேபி..” என்று ரசனையாக கூறியவன், அவளிடம் கன்னியாகுமரியில் அவள் தங்கும் இடம் பற்றி தெரிந்து கொண்டவன், எழில் அங்கு சென்ற மறு நாள் தானும் அங்கு சென்று அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தான்..

இருவரும் நகை கடையிலிருந்து வெளியே வந்து காரில் அமர, அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் நோட்டமிட்டு கொண்டிருந்தது.. அவர்களில் தலைவன் போல் இருந்த ஒருவனின் செல்போன் சத்தமிட அதை உயிர்ப்பித்து காதில் வைத்த நொடி “அடேய் என்னங்கடா பன்றிங்க?..”. என்று மறுமுனையில் கட்டையான ஆண் குரல் ஒன்று அவனை அதட்டி கேட்க,

“அய்யா நீங்க சொன்னவங்களை தான்  நாங்க ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்.” அவன் பதில் சொல்ல அவங்களை ஃபாலோ மட்டும் தான் செஞ்சிட்டு இருக்கிங்க.. ஆனால் காரியம் ஒண்ணும் ஆகல.. நான் சொல்லி ஒரு மாசம் ஆச்சு ஓரு பொண்ணை உங்களால் எதுவும் செய்ய முடியலேல்ல..? உங்களால் முடியலேன்னா சொல்லிடுங்க நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்..” என்று மறுமுனையில் இருந்தவர் தன் நம்பிக்கையின்மையை கூற

அவரின் பேச்சே இவர்களை தூண்டி விடுவது போல இருக்க, “ சார் அந்த பொண்ணு வெளியே போகும் போதெல்லாம் இந்த பையனும் அவ கூடவே இருக்கான்.. நாங்க என்ன செய்ய?.. இந்த பொண்ணை தூக்கும் போது அந்த பையனுக்கு ரெண்டு அடி விழும் பரவாயில்லையா?.. என்று கேட்க “இல்லை.. இல்லை.. அவனுக்கு எதுவும் ஆக கூடாது.. அவ எங்கேயோ வெளியூர் போறா உங்களுக்கு இது நல்ல சான்ஸ்..” என்று கூற

கண்டிப்பாக சார் இன்னும் ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க சார்.. நீங்க சொன்னதை நாங்க செஞ்சு முடிப்போம்.. அப்படி இல்லன்னா நீங்க கொடுத்த அட்வான்ஸ் ரெண்டு மடங்காக திருப்பி வாங்கிக்கோங்க..” என்று ரோசமாக கூறிவிட்டு இணைப்பை துண்டிக்க, மறுமுனையில் அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை உதித்தது..

இங்கு காரை ஓட்டி கொண்டிருந்த தன் மகனை பார்ப்பதும், பின் சாலையை பார்ப்பதுமாக இருந்தார் விஜய்யின் அன்னை சுமித்ரா.. “என்னம்மா என் முகத்தையே பார்த்துட்டு இருக்கிங்க?..” என்று விஜய் புருவம் உயர்த்தி கேட்க, “அது எப்படி டா எல்லாரும் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும்.. ஆனால் உனக்கு வித்தியாசமா தாடையில் குழி விழுது.. ஆனாலும் நீ அழகன் டா..” என்று அன்னைக்கே உரிய கர்வத்துடன் கூற.

“ம்மாஆ.. சின்ன வயசுல எங்கேயோ வாரி விழுந்ததில தாடையில் அடிபட்டு இப்ப அது குழியாக வந்திருக்கு.. இது நல்லா இருக்கா உங்களுக்கு?..” என்றவன், “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லவாங்களே.. அது காக்கைக்கு மட்டும் இல்லை.. உங்கள மாதிரி அம்மாக்களுக்கும் பொருந்தும்..” என்று சிரித்தபடி கூறியவன், “நீங்க வேறு ஏதோ கேட்க வந்திங்க அதை கேளுங்க..” அன்னையை அறிந்தவனாக கூற

“ஆமாடா உங்களுக்கு எல்லாம் அம்மா ஒரு வார்த்தை பாராட்டி சொன்னா ஒத்துக்க மாட்டிங்க.. உங்களுக்கு என்று ஒருத்தி வந்து பேய் பிசாசு திட்டினா ஏதோ பெரிய விருது கொடுக்கிற மாதிரி சிரிப்பிங்க..” என்று கேலியாக கூறவும் அதில் வாய்விட்டு சிரித்த விஜய், “ஆமா அப்பா இப்ப உங்ககிட்ட எப்படி இருக்காரோ அப்படி தான் நானும் என் வொய்ஃ கிட்ட இருப்பேன்..” என்று கண்சிமிட்டி கூற

“அடே விஜி நீ வொய்ஃப் சொன்ன பிறகு தான் நியாபகம் வருது கொஞ்ச நேரம் முன்னாடி நகை கடையில் பார்த்தோமே.‌ ஒரு பொண்ணு உன்னை பார்த்து கூட அழகா சிரிச்சாளே..” என்ற சுமித்ராவை இடைமறித்து, “என்னை பார்த்து மட்டும் இல்லை நம்மளை பார்த்து சிரிச்சா..” என்று திருத்திய விஜயின் தோளில் வலிக்காமல் ஒரு அடி போட்டுவிட்டு “ சரி நம்மள பார்த்து சிரிச்சா அந்த பொண்ணு அவ ரொம்ப அழகா இருந்தாள்ல!!..” என்று வியந்து கூற,

“ஆமா அழகா இருந்தா..  ஆனால் அந்த பொண்ணு கூட ஒரு ஆள் இருந்தாரே அவரை நீங்க பார்க்கலயா?..” என்று குறும்பாக கேட்க.. “இந்த பொண்ணும் போச்சா..?

என்று போலியாக பரிதாபம் கொள்ள, “எனக்காக பிறந்த பெண் எப்படி இருந்தாலும் என்கிட்ட வந்திடுவா மம்மி.. சோ யூ டோண்ட் வொர்ரி மை டியர் மம்மி..” என்று அவரை தோளோடு அணைத்து கூற,

“அப்போ உனக்கு இந்த ஜென்மத்தில் அரசமரம் தான் டா மகனே..” என்று அவனை வம்பு செய்தவரை, “மம்மி..!!” என்று விஜய் கோபமாக முறைக்க, “சும்மா லுலுலாய்க்கு டா..” என்று சுமித்ரா வெற்றிகரமாக பின்வாங்க, அது அந்த பயம் இருக்கணும்..” என்றவாறு காரை ஓட்டி கொண்டிருந்த விஜய்

“நான் நினைச்சா மட்டும் தான் எந்த பொண்ணும் என் வாழ்க்கையில வர முடியும்.. இந்த பொண்ணு எனக்கு பிடிச்சிருந்தால் அவளோட பெர்மிசன் கூட கேட்க மாட்டேன்.. தூக்கிட்டு வந்திருவேன்..” என்று தீவிரமாக பேச, சுமித்ரா சத்தமாக சிரித்துவிட்டார்.. அவன் அன்னையை முறைத்து பார்க்க, “நீ அதுக்கெல்லாம் சரிபட மாட்டடா மகனே..” என்று நக்கல் செய்ய, “எனக்கு வில்லங்கத்தை பக்கத்திலேயே வச்சிருக்கேன்..வேற என்ன சொல்ல..” ஒரு நல்ல டயலாக் பேச விட்றிங்களா?.. நீங்க என்று புலம்பிக் கொண்டே காரை செலுத்த,

“நிஜமாவே அந்த பொண்ணு அழகா இருந்தால்லடா?..” என சுமித்ரா கேட்க, “ம்ம்.” என்று ஒத்துக் கொண்டவன், எழில் பேச்சை விடுத்து வேறு பேச்சை மாற்ற, அவரும் அவள் பேச்சை விடுத்து வேறு பேச அன்னையும், மகனும் கலகலப்பாக பேசியபடி இல்லம் நோக்கி சென்றனர்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில், “மதி ட்ரெஸ் எல்லாம் சரியா எடுத்து வச்சுட்டியா?.. ரெண்டு நாளைக்கு மேல அங்க தங்க கூடாது.. கல்யாணத்துக்கு போனோமா.. வந்தோமா என்று இருக்கணும்..? எங்கேயும் ஊர் சுத்த கூடாது.. இன்னும் பத்து நாள்ல உனக்கு கல்யாணம் தப்பா எதுவும் நடந்திட கூடாது.. உனக்கு கல்யாணம் ஆகும் வரை நான் தான் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன்..” என்று புலம்பிக் கொண்டே சிவகாமி எழிலிற்கு தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தார்..

அன்னை சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டே தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “பேபி ரெடியா?” என கேட்டபடி உள்ளே வந்து கொண்டிருந்தான் அஷ்வின், அவனை பார்த்ததும், சிவகாமி முகம் எல்லாம் மலர்ந்து அவனை வரவேற்றவர், “இதோ ரெடியாகிட்டா மாப்பிள்ளை..” என்று பணிவாக கூற, “அய்யோ இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க..? மனதில் ஆயாசமாக நினைத்தைவள்,

 

“நான் கிளம்பிட்டேன் அஷ்ஷி..” லக்கேஜ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்..” அவனுக்கு பதில் கூற, அவள் உடைமைகளை காரில் வைத்தவன், எழில் ரெயில்வே ஸ்டேஷன் அழைத்து சென்றான்.. அங்கு தோழிகளை கண்டதும், புள்ளி மானாக துள்ளி ஓட, “பேபி ஸ்டாப்..” என்று எழில் கை பிடித்து தடுத்து தன்னோடு இருக்க வைத்தவன், “நான் இருக்கும் போது உன் கவனம் என்கிட்ட இருக்கணும் சொல்லியிருக்கேன்ல..” என்று அதட்டியவன், தன் கைபிடியில் வைத்தபடி அவர்கள் இருந்த இடம் வந்தவன்,

“ஹாய்..!! என் பேபியை நான் உங்கள நம்பி அனுப்பறேன் அவளை பத்திரமாக பார்த்துக்கோங்க..” என்றபடி அவள் எழிலை தோளோடு அணைத்து விடுவித்தவன், “ என்ஜாய் யுவர் ஜர்னி பேபி..” நான் உங்களை “சந்தோஷம் மிக, அதிக உற்சாகமாக, தன் தோழிகளுடன் பயணத்தை தொடர்ந்தாள்‌..

இந்த பயணம் எழிலின் வாழ்க்கை பயணத்தையே தலைகீழாக மாற்ற போவதை உணராமல் சந்தோஷமாக தன் தோழிகளுடன் பயணத்தை தொடங்கினாள்..

இமை சிமிட்டும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்