இமை 42
அஷ்வின் மிரட்டலில் பரசுராமன் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த மறு நாளே திவ்யா அஷ்வினை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி சொல்லவும் அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.. அதிலும் எழிலுக்கு தான் காதில் கேட்டதை நம்ப முடியாமல்
“திவி நீ என்ன சொல்ற?. எனக்கு சரியாக கேட்கல..” என்று காற்றாகி போன குரலில் எழில் மெதுவாக கேட்க, “ஏன் உனக்கு முகத்தில் தான் காயம் காதில் அடி எதுவும் இல்லையே..” என்று நக்கல் குரலில் கேட்ட தன் தங்கையை எழில் பெரும் அதிர்வுடன் பார்த்து கொண்டு இருக்க
நேற்று இரவு வரை அந்த அஸ்வின் தன்னை தொட்டு பேசுவது பிடிக்கவில்லை என்று தங்களிடம் புகார் செய்த தங்கள் மகள், விடிந்ததும் அவனையே திருமணம் தனக்கு செய்து வைக்குமாறு கூறியது பரசுராமனுக்கும், சிவகாமிக்கும் சந்தேகத்தை கொடுக்க
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?.. உன் வயசென்ன அவன் வயசென்ன?.. படிக்கிற பிள்ளை இப்படி எல்லாம் பேச கூடாது..” என்று சிவகாமி திவ்யாவை அதட்ட, அன்னையின் அதட்டலில் எழில் அவரை குழப்பமாக பார்த்தாள்..
அவர் அக்காவுக்கு நிச்சயம் ஆன மாப்பிள்ளை.. நீ இப்படி பேச கூடாது என்று அதட்டாமல், இருவரின் வயது வித்தியாசத்தை பற்றி பேசுவதை கண்டு எழிலிற்கு திகைப்பாக இருந்தது..
“ஏன் என் வயசுக்கு என்ன?. படிக்கிற பிள்ளை கல்யாணம் செய்ய கூடாதா?. நான் கல்யாணம் ஆன பின்னாடியும் படிப்பேன்.. அது என் கவலை.. நீங்க எனக்கு அவரை கல்யாணம் செஞ்சு வைங்க..” என்று திவ்யா அஷ்வினை கல்யாணம் செயவதிலே குறியாக இருக்க..
“திவி நீ புரிஞ்சு தான் பேசுறியா?.. அஷ்ஷிக்கும், எனக்கும் நிச்சயம்..” என்று ஏதோ சொல்ல வந்த எழிலை இடைமறித்து திவ்யா “நிச்சயம் தானே ஆகிருக்கு.. கல்யாணம் ஆகலையே..” என்று எழிலை ஏளனமாக பார்த்து கேட்க, தங்கையின் இந்த புதிய பரிமாணத்தை அதிர்ந்து பார்த்து
“திவி உனக்கு என்னடா ஆச்சு?.. ஏன் இப்படி எல்லாம் பேசற?.” என்ற எழிலிடம், “ஏன் எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன்.. கல்யாணம் செஞ்சு வைங்க என்று சொன்னது குத்தமா?.. எல்லாரும் நான் ஏதே பெரிய பாவத்தை செஞ்ச மாதிரி இப்படி பார்க்கிறிங்க?..” என்று மூவரையும் பார்த்து எரிச்சலாக கேட்ட திவ்யா எழிலை பார்த்து
“நீ உன் முகத்தை கண்ணாடியில் நல்லா பாரு.. உன் முகத்துக்கும் அஷ்வின் மாமா அழகிற்கும் கொஞ்சமாவது பொருத்தம் இருக்கா?… அப்பறம் எந்த தைரியத்தில் நீ அவரை கல்யாணம் செய்ற கனவோடு இருக்க?. நீ தான் இதெல்லாம் யோசிச்சு அவரை விட்டு விலகி இருக்கணும்.. நான் சொல்ற மாதிரி வச்சுக்கிட்டியே.. எனக்காக அவரை எனக்கு விட்டு கொடுக்க மாட்டியா அக்கா.. பிளீஸ்க்கா கொஞ்சம் புரிஞ்சுக்க. நீ அவருக்கு வேண்டாம்..” என்று சொற்களில் முள் எடுத்து வீசி எழில் மனதை புண்ணாக்க, அதன் வலி தாளாமல் எழில் கண்களில் கண்ணீர்..!!
“அடியே யாரை பார்த்து என்ன சொல்ற?. உனக்கு அவ்வளவு வாய் கூடி போச்சா?.. அறைஞ்சேன்னா பல் எல்லாம் கழண்டிடும்..” என்று சிவகாமி திவ்யாவை அடிக்க கை ஓங்கி கொண்டு வர, திவ்யாவை மறைத்தபடி அவள் முன்னால் வந்து நின்ற எழில்
“திவி நீ பேசறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இந்த காயம் நான் வேனுமின்னே வாங்கலயே.. யாரோ செஞ்ச தப்புக்காக நான் இந்த வலியை அனுபவிக்கிறேன்.. எல்லாம் தெரிஞ்ச நீ இப்படி பேசறது எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு.. மனதில் இருந்த வேதனை அவள் குரலில் பிரதிபலிக்க, திவ்யா எழிலிற்கு தன் முகத்தை காட்டாமல் திரும்பி நின்று கொண்டு,
“நான் சொல்றது உனக்கு கஷ்டமா இருந்தாலும் ஆனா இது தான் உண்மை அக்கா..!! மாமாவை எனக்கு விட்டு கொடுத்திடு..!!” என்று கட்டளையாக சொன்ன திவ்யாவின் குரலில் நடுக்கம் இருந்ததோ.., எழில் அதை உணரவில்லை.. எழிலுக்கு அஸ்வினை தன் தங்கைக்கு விட்டுக் கொடுப்பது ஒன்றும் பெரிதான விஷயம் அல்ல.. ஆனால் தன் அழகை வைத்து தன் தங்கையே தன்னை ஏளனமாக பேசுவது எழில் மனதை மிகவும் வருத்தியது.. அதிலும் அவள் வயது.. திருமணம் செய்யும் வயதா அவளுக்கு?.
நேற்று வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்த தங்கை இன்று ஏன் இப்படி பேசுகிறாள்? என்பதை எழில் யோசிக்க மறந்தாள்.. ஏற்கனவே தன் முகத்தில் இருக்கும் காயத்தாலும் நேற்று கோவிலில் நடந்த நிகழ்வாலும் தன் மீது தாழ்வு மனப்பான்மையில் இருந்த எழில், தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க தவறினாள்..
நீ சொல்றது எதுவும் நடக்காது.. உனக்கு கல்யாணம் பண்ற வயசு இல்லை அதுவும் அந்த அஸ்வினை உனக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டோம்.. இன்னும் ஒரு வாரம் தான். அப்பறம் நம்ம இந்த ஊரை விட்டு போக போறோம்.. நம்ம குடும்பத்துக்கு அஷ்வின் வேண்டாம்.. நாளைக்கு உன் ஸ்கூலுக்கு போறோம் டிசி வாங்கிட்டு வரோம்..” என்று பரசுராமன் திவ்யாவிடம் உறுதியாக சொல்ல,
தன் தந்தையை முறைத்து பார்த்த திவ்யா “நான் இவ்வளவு தூரம் சொல்றேன் நீங்க யாருமே என் பேச்சை கேட்க மாட்டிங்கள்ல..” என்று ஆவேசமாக கேட்டபடி அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கையை கிழிக்க போக அதற்குள் அவளை தடுத்து பிடித்த எழில் தங்கையின் இந்த ஆவேசத்தில் கலங்கி போனாள்..
இப்போ என்ன உனக்கு அஷ்வினை கல்யாணம் செய்யணும் அவ்வளவு தான நீயே அவரை கல்யாணம் செஞ்சிக்கோ.. ஆனால் உன் படிப்பு முடியட்டும்..” என்று தன்னை சமாதானம் செய்த தமக்கையை முறைத்து பார்த்த திவ்யா “ஏன் அதுக்குள்ளே என் மனச மாத்தி நீயே மாமாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தாயா..? அது எப்பவும் நடக்காது..’ என்று திவ்யா எள்ளலாக கேட்க மனம் விட்டு போனது எழிலிற்கு..
“நீ நினைத்தாலும், நான் உனக்கு அவரை விட்டு கொடுத்தாலும் அஷ்வின் அப்படி நினைக்க மாட்டாங்க திவி.. அவங்க என் மேல உயிரையே வச்சிருக்காங்க.. அவங்க சம்மதிச்சா நீ தாராளமா அவரை கட்டிக்கோ..” என்று சொல்ல அஷ்வினை பற்றி மனதில் ஏளனமாக நினைத்த திவ்யா
“அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு..” என்ற திவ்யாவை என்ன சொல்லி தடுப்பது என்று தெரியாமல் மூவரும் திகைத்து நின்றனர்.. அஷ்வின் நிச்சயமாக இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்று அவன் மேல் உள்ள நம்பிக்கையில், “அம்மா அஷ்ஷிவை வர சொல்லுங்க.. அவரே இவ கிட்ட பேசட்டும்..” என்ற எழில் தன் அறைக்குள் செல்ல
அவள் சென்றுதும் மற்றொரு அறைக்குள் சென்ற திவ்யா அதுவரை தான் அடக்கி கொண்டு இருந்த அழுகையை பெரும் கேவலுடன் வெளிப்படுத்த சில நொடிகள் அது கதறலாக மாறியது.. திவ்யாவை பின் தொடர்ந்து வந்த அவள் பெற்றோரும் திவ்யாவின் இந்த கதறல் அவர்களை திகைக்க வைத்தது.. அவள் அழுகை சத்தம் எழிலிற்கு கேட்காதவாறு சிவகாமி வேகமாக கதவை சாத்திவிட்டு திவ்யாவின் அருகில் வந்து அவள் தலை கோத
“அம்மாஆஆ..” அந்த அஷ்வின் அக்காக்கு வேண்டாம் மா அவன் தப்பு.. அவன் அக்கா போட்டோவை தப்பா எடுத்து வச்சு.. என்னை அவனை கல்யாணம் செய்ய சொல்லி மிரட்றான்.. அப்பறம் என் ஸ்கூல்ல வந்தும் இந்த போட்டோவை எல்லா இடங்களிலும் ஓட்டுவேன் சொல்லி மிரட்றாங்க..” என்று அழுதபடி சொல்ல பெற்றவர்களுக்கு நெஞ்சம் பதறியது..
“எங்க கிட்ட கேட்டு கடைசியில் உன்கிட்ட வந்துட்டானா?. என்று சிவகாமி சத்தமாக முணுமுணுக்க திவ்யா அவர்களை அதிர்ந்து பார்த்து என்னம்மா சொல்றீங்க?. உங்ககிட்ட அந்த அஷ்வின் கேட்டானா என கேட்க “ஆமா நீங்க கோவிலுக்கு போயிட்டு வந்தீங்க இல்ல அப்ப அவன் தான் இங்கு வந்தான். என்று அஸ்வின் தங்களிடம் பேசியதை கூறிய சிவகாமி “அப்பா, நம்ம இந்த ஊரை விட்டு போயிடலாம் சொல்றாங்க.. உனக்கு இந்த துன்பம் வேண்டாம்டா.. ஒரு வாரம் கூட வேணாம் நாம நாளைக்கே இந்த ஊரை விட்டு போய்டலாம்.. என்று சிவகாமி திவ்யாவை அணைத்து ஆறுதல் சொல்ல
“இல்லம்மா நம்ம எங்க போனாலும் அந்த அஸ்வின் நம்மள விட மாட்டான்.. அக்காவோட போட்டோவை நெட்ல எல்லாம் போட்ருவான் அது ரொம்ப அசிங்கமாயிடும்.. அக்கா பாவம் இப்பதான் அவ பெரிய ஆபத்திலிருந்து வெளியே வந்து இருக்கா இனிமேலும் அவ கஷ்டப்பட வேணாம்.. எல்லா கஷ்டமும் என்னோட போகட்டும்..” என்று திவ்யா அழுகையோடு சொல்ல
“அப்போ இதை மதிக்கிட்ட சொல்லிடுவோம்.. அவ உன்னை தப்பாக நினைக்கிறாளேடா என்ற சிவகாமியிடம் அவசரமாக மறுத்த திவ்யா, “வேண்டாம்மா.. அக்கா பாவம் என்னோட கோபத்தை அலட்சியத்தை அவ தாங்கிப்பா ஆனா அஷ்வினோட இந்த மிரட்டல் பத்தி தெரிஞ்சா அக்கா பயப்படுவா.. எதுவா இருந்தாலும் என்னோட போகட்டும்.. என்று அழுதபடி சொன்ன தன் இளைய மகளை அந்த அஷ்வினிடம் இருந்து காப்பாற்றும் வழி தெரியாமல் திணறி கொண்டிருந்தனர்..
மறுநாள் எழில் வீட்டிற்கு வந்த அஷ்வினை பெரும் நம்பிக்கையோடு பார்த்திருந்த எழில் எனக்கு திவ்யாவை பிடிச்சிருக்கு..” என்ற அஸ்வினின் வார்த்தை எழில் நம்பிக்கையில் கூடை நெருப்பை அள்ளி கொட்ட அவனை உணர்வில்லாமல் பார்த்து கொண்டு இருக்க “உங்களுக்கு அதான் விருப்பம் என்றால் நாங்க வேற என்ன செய்றது?.. எங்களுக்கு இதுல சம்மதம்..” என்று அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் கூறிய தன் பொற்றோரை ஸ்தம்பித்து பார்த்திருந்தாள்..
“இவ்வளவு தூரம் ஏன் விட்டிங்க போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கலயா நீங்க..?” விஜய் கோபமாக கேட்க
“எங்க தம்பி நாங்க அப்படி போனால் என் பொண்ணு தான் அவனை வலிய கூபாபிட்டா சொல்லி மிரட்டினானே.. கல்யாண நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் நரகம் தம்பி அதுவும் என் சின்ன பொண்ணு தவிக்கிறது எங்களால் பார்க்கவே முடியல ஒரு கட்டத்தில் பேசாமல் விஷம் வாங்கி குடிச்சு நாங்க செத்து போகலாம் என்று முடிவு எடுத்தோம் ஆனால் கடைசி நேரத்தில் அதையும் கண்டுபிடிச்சு அந்த ராட்சசன் தடுத்துட்டான்..
எங்க ஒரு பொண்ணை காப்பாத்த இன்னொரு பொண்ணை பலி கொடுத்துட்டோம் தம்பி.. எங்களால் எதுவும் செய்ய முடியாத எல்லா பக்கமும் தடுப்பு போட்ட மாதிரி அடச்சு வச்சிட்டான் தம்பி மதிக்கு அந்த அஷ்வின் பெரிய பணக்காரன் என்பதால தான் அவன் மதியை மறுத்ததும் அதை பெரிசு பண்ணாமல் சின்ன பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்துட்டோம் நினைச்சிட்டா.. எங்களை பணத்தாசை பிடிச்சவங்க என்று தப்பா நினைச்சு எங்களை விட்டு ஒதுங்கினா..
திவ்யாவை கூட்டிட்டு அவன் எங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவன் மதி முகத்தை பார்த்து அருவருப்பாக முகம் திருப்பினான்.. அது பொறுக்க முடியாமல் ஒரு நாள் நானே என் பொண்ணை இவங்க வரும் போது அவங்க கண் முன்னாடி வர கூடாது என்று திட்டி அனுப்பிட்டேன்.. அதுக்கு பிறகு மதி எங்க கிட்ட பேசறது சுத்தமா நிறுத்திட்டா.. அவளாகவே ஒரு வேலை தேடிக்கிட்டு தனியா ஹாஸ்டல்ல தங்கிட்டா..
திவ்யா சொன்ன மாதிரி அவ கோபத்தை கூட எங்களால் தாங்கிக்க முடியும் ஆனால் அவ வேதனை பட்றது எங்களால் தாங்க முடியாது.. அதான் அவ எங்களை தப்பா நினைச்சாலும் பரவாயில்லைன்னு அப்படியே விட்டுட்டோம்..” என்ற அந்த முதியோர்களை பார்க்க பாவமாக இருந்தது விஜய்க்கு..
“ திவ்யா எப்படி இறந்தா..? விஜய் கேட்க,
“ அந்த ராட்சசன் எங்க பொண்ணை கொணணுட்டான் தம்பி.. அவன் தப்பு எதுவும் செய்யாமல் கௌரவமாக எங்க பொண்ணை கல்யாணம் செய்ய தானே கேட்டான் என்று சின்ன ஆறுதலோட இருந்தோம்.. ஆனால் அதுலயும் மண்ணை அள்ளி போட்டுட்டான்.. சின்ன பொண்ணு கூட பார்காகாமல் தினமும் அவளை அவளை..” என்று மேல சொல்ல முடியாமல் சிவகாமி விம்மி அழ, விஜய்யின் கண்களிலும் கண்ணீர்..
எங்களால் எதுவுமே செய்ய முடியல தம்பி அவ பட்ற துன்பத்தை வேதனையோடு பார்க்க மட்டும் தான் முடிஞ்சது.. சின்ன பிள்ளை அவ அவளுக்கு ஒரு குழந்தை உருவாச்சு.. பிரசவ வலியில் அதிக ரத்த போக்கு வந்து குழந்தை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது தம்பி.. அதையும் அவ அக்கா கிட்ட கொடுத்துட்டு அஷ்வின் கிட்ட குழந்தையை கொடுத்திடாத என்று சத்தியம் வாங்கிட்டு எங்க சின்ன பொண்ணு அவ பட்ட துன்பத்தில் இருந்து விடுதலை வாங்கிட்டு போய்ட்டா..
அஷ்வின் வரதுக்குள்ள மதியும் அங்க இருந்து கிளம்பிட்டா.. ஹாஸ்பிடல் வந்த அஷ்வினும் குழந்தையை பத்தி கவலை படாமல் கடமைக்கு வந்த பார்த்திட்டு சரியான சத்து கெட்டவள கல்யாணம் செஞ்சிருக்கேனே.. புலம்பிட்டு போனான்..
எதுக்காக அவனுக்கு எங்க மேல இவ்வளவு வன்மம்?.. என்று தெரியல தம்பி.. எங்க குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிட்டான்..
“எங்களுக்கு பாவம் செஞ்ச அவன் இன்னும் நல்லா இருக்கான்.. ஆனால் நாங்க ஒரு பொண்ணை இழந்துட்டு இன்னொரு பொண்ணோட வெறுப்பை ஏத்துக்கிட்டு இருக்கோம்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம் என்று தெரியல..” என்று அழுத அந்த முதியவர்களை பெரு மூச்சுடன் பார்த்த விஜய்
அப்போ நேத்ரா திவ்யா குழந்தையா?.. விஜய் கேட்க
“ஆமா தம்பி நேத்ரா திவ்யா குழந்தை தான்..” என்று சொல்ல
புகைப்படத்தில் அமைதியான புன்னகையுடன் இருந்த திவ்யாவை பார்த்திருந்த விஜய்க்கு மனம் கனத்தது.. “உன் அக்கா வாழ, நீ உன் வாழ்க்கையை பலி கொடுத்தியா திவிமா..? உன் அக்கான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?.. இங்க நடந்தது எதுவும் தெரியாமல் மனுசங்க மேல நம்பிக்கை இல்லை என்று சொல்லிட்டு திரியறா உன் அக்கா..
இதுக்கெல்லாம் காரணமான அந்த அஷ்வினை நிச்சயம் நான் சும்மா விட மாட்டேன் டா உன் அக்காவுக்காக இல்லேன்னாலும் உனக்காக நிச்சயம் அவனை பழி வாங்குவேன்..” என்று சூளுரைத்த விஜய்
“திவிமா நீயே எங்களுக்கு மறுபடியும் மகளாக வந்து பிறக்கணும்.. நீ எப்படி வாழணும் ஆசைப்பட்டியோ அதெல்லாம் ஒரு அப்பாவாக நான் உனக்கு நிறைவேற்றி தருவேன் டா.. அதுக்கு சீக்கிரம் உன் அக்கா மனசு மாறணும்.. இனி மாறுவா..!! நான் மாற வைப்பேன்..” என்று உறுதியாக தனக்குள் கூறிய விஜய்,
திவ்யாவின் புகைப்படத்தில் முன் லேசாக எரிந்து கொண்டிருந்த தீபத்தை தூண்டி விட்டு புகைப்படத்திற்கு வெளிச்சத்தை கொடுத்தவன்.. “சீக்கிரமே உங்க பொண்ணு உங்களை தேடி வருவா..” என்று எழில் பெற்றோருக்கு நம்பிக்கை அளித்[IT_EPOLL id=”1″][து விட்டு அங்கிருந்து சென்றான்..
இமை சிமிட்டும்..