இமை 40
முகத்தில் அடிபட்டு உடலும் உள்ளமும் சோர்ந்திருந்து மருத்துவமனையில் பயத்தில் அமர்ந்திருந்த எழிலிற்கு அடுத்து என்ன என்று யோசிக்கவே பயமாக இருந்தது.. தனக்கு நடக்கவிருந்த விபரீதத்தை நினைத்து உடல் நடுங்கியது.. அந்த கயவர்கள் தன்னை கீழே தள்ளியதும் அவர்களுக்கு பலியாகாமல் தான் சாக போகிறோம் என்ற நினைவே அவளுக்கு பெரும் ஆறுதலாக இருக்க கீழே விழுந்த அதிர்ச்சியில் மயங்கி இருந்தாள்..
மயக்கம் தெளிந்து கண்விழிக்க முயற்சி செய்தாள்.. முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் முகம் நன்றாக வீங்கி இருக்க, அவளால் கண்களை திறக்க முடியவில்லை.. தான் எங்கிருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.. மருந்து வாசத்திலும், அருகில் கேட்ட சலசலப்பில் தன் கரத்தில் ஏதோ ஊசி குத்தியது போல சுருக்கென வலி எடுக்க தான் ஒரு மருத்துவமனையில் இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்டாள்..
துணைக்கு யாரும் இல்லாமல் பற்றற்ற கொடியாக படுக்கையில் வாடி கிடந்த எழிலிற்கு தன்னை யார் இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பாங்க அஷ்வின் தான் என்னை சேர்த்திருப்பாங்க.. அவங்களை எங்கே காணோம்.. என்று சிந்தித்து கொண்டு இருந்தாள்.. சற்றுமுன் நடந்த கலவரத்திலும், கண்களை திறக்க முடியாமல் சுற்றுப்புறத்தை பார்க்க வழியில்லாமலும் மனம் பயத்தில் நடுங்க,
ஒரு கரம் ஆதரவாக அவள் கையை பிடிக்கவும், அஷ்வின் தான் வந்துவிட்டான் என்று நினைத்து முகம் மலர “அஷ்வின் வந்துட்டிங்களா..?! பிளீஸ் என்னை விட்டு போய்டாதிங்க..” என்று இத்தனை நேரம் தனியாக தவித்து இருந்த எழில் தனக்கு கிடைத்த கொழு கொம்பாக அந்த கரங்களை இறுக பற்றி கொண்டாள்..
அஷ்வின் என்ற பெயர் கேட்டதும் அந்த கரங்கள் ஒரு நொடி தயங்கி பின் அவள் தலையை வருடி கொடுத்துவிட அந்த மென்மையான வருடலில் மனம் அமைதியுற எழில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.. மீண்டும் அவள் விழித்த போது முகத்தில் இருந்த வீக்கம் சற்று குறைந்து தன் எதிரில் இருப்பவர்களை பார்த்து
“அம்மா..” என்று அழுதபடி அழைக்க “பாவி பொண்ணே நான் அத்தனை தடவை சொன்னேன் கேட்டியா நீ இப்போ இப்படி கிடக்கிறியே என்று சிவகாமி ஒருபாடு அழுது தீர்க்க, அம்மா அஷ்வின் எங்க?..” என்று கேட்க “மாப்பிள்ளை எங்க இங்க வந்தாரு?.. நாங்க வரும்போது நீ தான் துணைக்கு யாருமே இல்லாம தூங்கிகிட்டு இருந்த..” என்று கண்களை துடைத்துக் கொண்டு சொல்ல
“இல்லம்மா இவ்வளவு நேரம் இங்க தானே இருந்தாங்க.. அவங்க தான் என்னை ஹாஸ்பிடல் சேர்த்தாங்க.. என் கையை பிடிச்சிட்டு இங்க தான் உட்கார்ந்து இருந்தாங்க நான் தூங்கிட்டேன்.. இங்க பக்கத்தில் எங்கேயாவது போய்ருப்பாங்க.. “என்று சமாதானம் செய்து கொண்டு இருக்க அஷ்வின் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..
வந்ததும் எழில் முகத்தை பார்த்து முகம் சுளித்தபடி ஏதோ கூற வர, “ரொம்ப நன்றி மாப்பிள்ளை.. என் பொண்ணுக்கு எந்த அசம்பாவிதம் நடக்காமல் காப்பாத்திட்டிங்க..” என்று நன்றி கூற”இது என்ன புது கதை..? என்று அஷ்வின் மனதில் குழப்பமாக நினைத்தவன், சிவகாமி நன்றி சொல்லவும,
“எதுக்கு நன்றி சொல்றிங்க?” என்று கேட்க, அவன் அப்படி கேட்டதும் “புரியுது மாப்பிள்ளை உங்க வருங்கால மனைவியை நீங்க காப்பாத்தினதுக்கு நீங்க எதுக்கு நன்றி சொல்றிங்கனு தான கேட்கிறிங்க?..” என்று சிவகாமி நெகிழ்ந்து அப்போது தான் விசயம் விளங்கியது அவனுக்கு.. எழிலை தான் தான் காப்பாற்றி இருப்பதாக நினைத்து கொண்டு தனக்கு இந்த நன்றி என்பதை புரிந்து கொண்டவன்
“இருக்கட்டும் இது என்னோட கடமை..” என்று பெருந்தன்மையாக கூறியவன், “டாக்டர் பார்த்திங்களா?.. என்ன சொன்னாங்க..” என்று கேட்க, “என்ன மாப்ள உங்க கிட்ட டாக்டர் எதுவும் சொல்லலயா..? சிவகாமி அஸ்வினிடம் கேட்க
“இல்லை நான் எழிலை விட்டு எங்கேயும் போகல.. இவ பக்கத்தில் தான் இருந்தேன்.. ஒரு பிசினஸ் கால் வந்துச்சு அதான் போய் பேசிட்டு வந்தேன்.. வந்து பார்க்கும்போது நீங்க இங்க இருக்கீங்க.” என்றவன் மறந்தும் எழில் பக்கம் பார்க்கவே இல்லை.. தங்கள் மகள் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி பூரித்துப் போயிருந்தனர் எழிலின் பெற்றோர்
“பிசினஸ் கால் பேச மகளை விட்டு இவ்வளவு நேரம் தனியாக போனவங்க.. எழிலோட உடல் நிலை பற்றி அறிந்து கொள்ள அந்த டாக்டரை போய் பாக்கலையா?.. என்று கேட்க தோன்றவில்லை அவர்களுக்கு
“நான் போய் பார்த்துட்டு வர்றேன்..” எழிலின் தந்தை மருத்துவர் அறை நோக்கி செல்ல “நானும் வர்றேன்..” என்று அஷ்வினும் அவருடன் இணைந்து கொண்டான்.. ஆனால் மருத்துவரே அவர்களை நோக்கி வரவும், மீண்டும் எழில் இருந்த அறைக்கு வந்தனர்.. அங்கிருந்தவர்களை மருத்துவர் நீங்க யார் என்று கேள்வியாக பார்க்க,
“மேடம் இவ எங்க பொண்ணு..” என்று எழிலை காண்பித்து கூற, “ஒ இந்த பெண்ணோட பேரண்ட்ஸா?..” என்றவர் எழிலை பரிசோதிக்க, “சார் என் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லையே.. முகம் இப்படி வீங்கி இருக்கே.. “ என்று பெற்றோருக்கே உரிய தவிப்புடன் எழில் தந்தை கேட்க,
இல்லை எதுவும் உள்காயம் எதுவும் இல்லை எல்லாம் வெள காயம் தான் காயம் ஆற கொஞ்ச நாள் ஆகும்.. அப்பறம் முகத்தில் இருக்கிற காயம் தான் கொஞ்சம் ஆழமாக இருக்கு அது ஆற கொஞ்ச நாள் ஆகும்.. இன்னும் ரெண்டு நாள் இங்க எங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.. ரெண்டு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் செஞ்சிடலாம்..” என்று சொல்ல, அதற்குள் அஸ்வினுக்கு போன் வர அதை உயிர்பித்தபடு வெளியே வந்தான்
வெளியே சென்ற அஸ்வினை ஒரு பார்வை பார்த்துவிட்டு “அஷ்வின் என்பவர் உங்க மாப்பிளையா?! என்று அந்த மருத்துவர் கேட்க
இவர்கள் ஆம் என்று சொல்லிவிட்டு “என்னாச்சு டாக்டர்?..” அவர் என்ன செஞ்சாரு சிறு பதட்டத்துடன் கேட்க, “சே சே நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்ல.. உங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க உங்க பொண்ணு வலியில் துடிக்கிறதை பார்த்து அவங்க முகத்தில் காயத்தை பார்த்ததும் அவர் ரொம்ப பிடிச்சு போய்ட்டார்.. எங்களை எல்லாம் உண்டு இல்லைன்னு ஒரு வழி பண்ணிட்டாங்க..
“இந்த காலத்தில் தனக்கு வர போற பொண்ணுக்காக இப்படி துடிக்கிறவங்க எல்லாம் ரொம்ப ரேர்.. அதான் சொன்னேன் உங்க பொண்ணு ரொம்ப லக்கி..” என்று சிறு புன்னகையுடன் கூற, பெற்றவர்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்..?! மருத்துவர் கூறுவதை கேட்டு அவர்கள் மனம் நிறைந்திருந்தது..
“எங்க மாப்பிள்ளை எப்பவுமே அப்படித்தான் டாக்டர்.. என் மகளை என்னையவே ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்..” என்று சிவகாமி பூரிப்புடன் சொல்ல, அவரின் தோளை தட்டி சென்றார் மருத்துவர் இவர்கள் பேசுவதை கேட்டிருந்த எழில் தான் அஷ்வினை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருந்தினாள்..
அஷ்வின் உள்ளே வர, எழில் தந்தை அஷ்வின் கை பிடித்து தன் கண்களில் ஒற்றி கொண்டு, “நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க மாப்பிள்ளை..” என்று உணர்ச்சிவசப்பட்டு கூற, அவர் தன் கை பிடித்ததில் முகம் சுளித்த அஷ்வின் அவரிடம் இருந்து தன் கையை நாசுக்காக விடுவித்து கொண்டவன், டாக்டர் வரும் போது நான் வெளியே இருந்தேன்.. எழில் பத்தி என்ன சொன்னாங்க தெரியல. நான் போய் கேட்டு வர்றேன்..” என்று கூறி மருத்துவரை பார்க்க சென்றான்..
அங்கு அறையில் மருத்துவ சம்பந்தமாக ஏதோ படித்து கொண்டு இருந்த மருத்துவர் “எக்ஸ்கியூஸ் மீ டாக்டர்..! மே ஐ கமின்?..” என்ற கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவர் அங்கு அஷ்வினை பார்த்ததும் யார் என்று தெரியவில்லை.. ஆனாலும் அவர் உள்ளே வருமாறு அழைக்க,
“டாக்டர் நான் எழிலோட ரிலேட்டிவ்.. எழில் ஹெல்த் பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்கேன்.. என்று சொல்ல
“என்ன தெரியணும்?.. அதான் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட எல்லாம் தெளிவாக சொல்லிட்டேனே வேற என்ன டௌட்?..! என்று அவர் தான் அணிந்இருந்த கண்ணாடியை கழற்றியபடி கேட்க,
“அது.. வந்து மேடம் எழில் வெர்ஜினா..? அவளை கடத்திட்டு போனவங்க எப்படி அவளை எதுவும் செய்யாமல் விட்டாங்க.. எனக்கு அதுல நம்பிக்கை இல்லை.. அதான் உங்க கிட்ட கேட்டு கன்பார்ம் செய்யலாம்னு கேட்டேன்..” என்றவனை சற்று கோபமாக பார்த்த மருத்துவர்
“ஹலோ யார் நீங்க?..” என்கிட்ட இப்படி கேட்கறிங்க பேஷண்ட் பத்தி வெளி ஆட்கள் கிட்ட நாங்க சொல்றது இல்லை.. எல்லாம் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லியாச்சு எதுவாக இருந்தாலும் நீங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க..” என்று மருத்துவர் கோபமாக பேசி அஷ்வினை வெளியே அனுப்ப,
“டாக்டர் நான் யாரோ இல்லை அந்த பெண்ணோட வருங்கால கணவன்.. என் பேர் அஷ்வின்..” என்று அஷ்வின் சொல்ல, மருத்துவர் திகைத்தார்.. என்ன நீங்க தான் அஷ்வினா?! என்று நம்ப முடியாமல் வியப்பாக கேட்க,
“ஆமா நான் தான்.” என்று அஷ்வின் ஆமோதிக்க, “அப்போ எழிலை இங்க கொண்டு வந்து சேர்த்து, அவங்க கூட இருந்தது யார்?..” என்று குழப்பமாக மருத்துவர் தனக்கு தானே சுத்தமாக கேட்டு கொள்ள, “அதெல்லாம் எனக்கு தெரியாது சார்?.. இப்போ எனக்கு தேவையானது எழில் முகத்தில் இருக்க அந்த காயம் ஆறுமா?. ஆறாதா? இப்ப அவ வெர்ஜினா இல்லயா?..” என்று கேட்க
“மருத்துலர் யாரையோ தான் தவறாக நினைத்து விட்டது நன்றாக புரிந்தது.. ஒரு பெண் நல் வாழ்க்கை மனதில் நிறுத்திக் கொண்டு, ஒரு பெரு மூச்சுடன் “அவ வெர்ஜின் தான்..அவங்களை யாரும் எதுவும் செய்யல மே பி அவங்க தப்பிக்க முயற்சி செய்யும் போது கூட கிழே விழுந்திருக்கலாம்..”என்று சொல்ல அவருக்கு நன்றி கூறி விட்டு வெளியே வந்த அஸ்வினுக்கு முகத்தில் தையல் போட்டு முகம் வீங்கி பார்க்க சற்று விகாரமாக இருந்த எழிலை பார்க்கவே அருவருப்பாக இருந்தது..
இவ அழகுக்காக தான் இவளை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன்.. அந்த அழகே இப்ப இல்லை.. இந்த மூஞ்சியை எப்படி கல்யாணம் செய்றது?.. என்று அவன் யோசித்தபடி நின்று இருக்க
“மாமா..! அக்கா எப்படி இருக்கா.?” சிறு பெண்ணின் அழுகை குரல் அஷ்வின் அருகில் கேட்க திரும்பி பார்த்தான்.. வயதான யாரோ ஒருவருடன் எழில் தங்கை தான் நின்றிருந்தாள்.. தலை எல்லாம் கலைந்து அழுது வடிந்த முகத்துடன் தமக்கைக்கு சற்றும் குறையாத அழகுடன் நின்றிருந்த சிறு பெண்ணை பார்த்ததும், அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்ற, சிறு புன்னகையுடன் அவள் தோள் மீது கை போட்டபடி
“உங்க அக்காவுக்கு ஒண்ணும் இல்லை டா.. முகத்தில் மட்டும் சின்ன அடி.. சீக்கிரம் சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்லியிருக்காங்க.. நீ அழாத..” என்று அவள் தோள் மீது இருந்த அஷ்வின் கரம் சற்று அழுத்தமாக வருட, அதை உணரும் நிலையில் அவள் இல்லை..
“ஆமா இவ்வளவு நேரம் எங்கே இருந்த உன்னை காணோம்.? என்று அஷ்வின் விசாரிக்க, “நான் திருவிழாக்கு ஊருக்கு போயிருந்தேன்.. அம்மா தான் அக்காக்கு இப்படி ஆனதை சொன்னாங்க நான் சித்தப்பா கிட்ட அழுது அடம் பிடிச்ச இங்க வந்தேன்.. “ என்று தேம்பிக்கொண்டே கூற, “அச்சோ என் செல்லம் அழாதிங்க.. நீங்க அழுதா எனக்கு கஷ்டமா இருக்கே.. அக்காக்கு ஒண்ணும் இல்லை சரியா?..” என்று தன் முகத்தை சிறு பெண்ணின் வெகு அருகே வைத்தபடி சொல்ல..
அப்போது தான் தான் நிற்கும் நிலை உணர்ந்து சட்டென்று அஷ்வினிடம் இருந்து விலகி நின்றவள் தன் முகத்தை துடைத்து கொண்டு அக்கா எந்த ரூம்ல இருக்கா மாமா..” என்று விசாரிக்க”இங்க வா நான் அங்க தான் போறேன்..” என்று மீண்டும் அவள் தோள் மீது கரம் போட வர இப்போது இன்னும் சுதாரித்து தான் உடன் வந்த சித்தப்பாவுடன் நின்று கொண்டாள்..
“ஓ எச்சரிக்கையா?..” இனி எப்பவும் நீ என்னை விட்டு விலகாத மாதிரி செய்றேன்.. அழகு போன உங்க அக்கா எனக்கு இனி வேண்டாம்.. நீ தான் எனக்கு வேண்டும்.. அதை எப்படி அடைய முடியுமோ இனி அப்படி அடைஞ்சிக்கிறேன்..” என்று சிறு பெண்ணை வக்கிரமாக பார்த்து கொண்டு இருந்தான் அஷ்வின்..
உள் அறையில் இருமல் சத்தம் கேட்க, எழில் கடந்த காலத்தை சொல்லி கொண்டு இருந்த சிவகாமி “இதோ வர்றேன் தம்பி..” என்றபடி உள்ளே செல்ல
நின்ற இடத்தில் இருந்தே வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருந்த விஜய், அங்கு சுவற்றில் மாட்டி இருந்த எழினின் தங்கை புகைப்படத்தில் போட்டிருந்த மாலையை பார்த்தவன் அதிர்ந்து நின்றான்..
இமை சிமிட்டும்
..