இமைகளின் இடையில் நீ..4
அம்மா..! அம்மா.. ப்ளீஸ் மா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறாங்க நானும் போறேன் மா.. ரெண்டே ரெண்டு நாள் மட்டும் தான்..”என்று எழில் தன் அன்னையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்..
“என்ன விளையாடுறியா மதி?!.. கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு நீ ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போறேன்னு சொல்ற அதுவும் வெளியூருக்கு போறேன் என்று சொல்ற இது சரிவராது மதி.. உனக்கு கல்யாணம் ஆன பிறகு நீ மாப்பிள்ளை கூட எங்கவேனா போ.. இப்போ நீ எங்கேயும் போக கூடாது..” என்று மறுத்து கொண்டிருக்க
“யார், எங்க போக கூடாது?..” என்று கேட்டபடி உள்ளே வந்து கொண்டிருந்தான் அஷ்வின்.. அவனை பார்த்ததும் எழில் முகம் மலர, “அஷ்ஷீ..” என்று உற்சாகமாக அழைக்க, அவள் முதுகில் ஒரு அடி வைத்த சிவகாமி, “மாப்பிள்ளையை பேர் சொல்லி கூப்பிட கூடாது என்று சொல்லி இருக்கேன்ல.. ஒழுங்கா மரியாதையாக கூப்பிடு..” என்று அதட்ட எழில் முகம் சுளித்தபடி நின்றிருக்க
“ம்கூம் என் கண் முன்னாடி என் பேபியை அடிக்கிறிங்க.. அவ என்னை தான பேர் சொல்லி கூப்பிட்டா.. கூப்பிடட்டுமே எனக்கும் அவ பேர் சொல்லி கூப்பிட்றது தான் பிடிச்சிருக்கு.. சோ பேபியை திட்டாதிங்க ஆண்ட்டி..” என்று தன் வருங்கால மனைவிக்காக அவள் அன்னையிடம் பரிந்து பேசியவன், எழிலிடம் திரும்பி, “பேபி எங்க போக ஆண்ட்டி கிட்ட பெர்மிசன் கேட்டிட்டு இருக்க?..” என்று கேட்க
“என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்திக்கு மேரேஜ் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறாங்க.. எனக்கும் ஆசையாக இருக்கு.. அப்பா கிட்ட கேட்டேன் போக சொல்லிட்டாங்க.. ஆனால் அம்மா தான் விட மாட்டிகிறாங்க..” என்று எழில் முகத்தை பரிதாபமாக வைத்தபடி கூற,
“ஏன் ஆண்ட்டி விட மாட்டிகிறிங்க ரெண்டு நாள் தானே பேபி போய்ட்டு வரட்டுமே..” அஷ்வின் எழிலுக்காக பரிந்து பேச, “இல்லை மாப்பிள்ளை உங்க கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு.. இப்ப போய் இவ வெளியூருக்கு போறேன்னு சொல்றா..
இங்க பக்கத்துல எங்கேயாவது நான் போயிட்டு வான்னு சொல்லுவேன் ஆனா இவ கன்னியாகுமரிக்கு போறேன்னு சொல்றா.. இந்த சமயத்தில் பொண்ணுங்க ரொம்ப தூரம் பயணம் செய்ய கூடாது மாப்பிள்ளை..” என்று சிவகாமி விளக்கி கூற
“நீங்க எந்த காலத்தில் இருக்கிங்க ஆண்ட்டி?.. இப்ப எல்லாம் மேரேஜ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பொண்ணுங்க வெளியூருக்கு வந்து எக்ஸாம் எழுதிட்டு போறாங்க பேபி பத்து நாளைக்கு முன்னாடி தானே ஊருக்கு போறேன்னு சொல்றா போகட்டும் காலம் மாறிடுச்சு ஆண்ட்டி.. பேபி போய்ட்டு வரட்டும்..” என்று உத்தரவாக கூற,
“இல்லை மாப்பிள்ளை அது வந்து..” என்று சிவகாமி அப்போதும் தயங்க, “மாப்பிள்ளை தான் அவ்வளவு சொல்றங்கள்ல மதி போய்ட்டு வரட்டும் சிவகாமி..” என்று அப்போது தான் வெளியே சென்று வந்த பரசுராமனும் மதிக்கு பரிந்து பேசியவர், அஷ்வினை முறைப்படி வரவேற்று அமர சொல்லியவர்,
“மாப்பிள்ளை வந்திருக்காங்க சொல்லவே இல்லை சிவகாமி.. நான் போய் மட்டன் எடுத்துட்டு வர்றேன்…” என்றபடி வெளியே செல்ல போக, “இல்லை அங்க்கிள் எனக்கு வேண்டாம்.. நான் பேபியை வெளியே கூட்டி போக தான் வந்தேன்..பேபிக்கு ஒரு வைர மோதிரம் எடுக்கணும் என்று எனக்கு ஆசை.. அதான் அவளை கூட்டிட்டு போய் அவளுக்கு விருப்பமானது எடுக்கட்டும்.. நாங்க போய்ட்டு வர்றோம்..” என்று அனுமதி கேட்காமல் தகவல் மட்டும் கூறிவிட்டு அஷ்வின் எழிலை அழைக்க
தங்களிடம் அனுமதி கேட்காமல், தன் பொண்ணை அழைத்துச் செல்கிறாரே என்று மனத்தாங்கலுடன் நினைத்த சிவகாமி, அஸ்வின் எழிலிற்க்கு வைர மோதிரம் எடுக்க வேண்டும் என்றதில் அந்த மனத்தாங்கல் காற்றிலிட்ட கற்பூரமாய் கரைந்து போக, “தாராளமாக கூட்டி போங்க மாப்பிள்ளை..” என்று சம்மதம் கூற,
எழில் தன் அன்னையின் செயல் பிடிக்காமல் அவரை முறைத்துப் பார்க்க, “என்ன மதி மாப்பிள்ளை வெளியே கூப்பிடறாங்க நீ மசமசன்னு நின்னுட்டு இருக்க போ சீக்கிரம் வேறு நல்ல டிரஸ் எடுத்து மாட்டிகிட்டு போ என அவசரப்படுத்த..”
“ம்மாஆ..” எழில் அன்னையை எரிச்சலாக பார்த்தவள், அஸ்வின் இடம் திரும்பி எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் அஷ்ஷீ எனக்கு அம்மாகிட்ட நான் கன்னியாகுமரி போறதுக்கு மட்டும் பர்மிஷன் வாங்கி தாங்க ப்ளீஸ்..” என தலைசரித்து கெஞ்சலாக கேட்ட அழகில் சொக்கி போன அஸ்வின் மந்திரத்திற்கு கட்டுண்ட நாகம் போல் அவளை பார்த்தபடி தலை அசைத்தவன்,
“ஆன்ட்டி!! பேபி அவ பிரண்ட்ஸ் மேரேஜ்க்கு போயிட்டு வரட்டும்.. நீங்க எதுவும் சொல்லாதீங்க..” என்று உத்தரவிட, “சரி மாப்ள நான் எதுவும் சொல்லல.. அவ போய்ட்டு வரட்டும் நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் ஏன் மறுக்க போறேன்?.. நீங்க இப்ப அவளை கடைக்கு கூட்டிட்டு போறேன் சொன்னிங்களே கூட்டிட்டு போங்க..” என்று எங்கே அஷ்வின் தன் மகள் பேச்சை கேட்டு, அவளை கடைக்கு அழைத்துச் செல்ல மறுத்து விடுவானோ என நினைத்து சிவகாமி அவசரபடுத்த,
“பேபி கிளம்பி வா போகலாம்..” அஷ்வின் அழைக்க, “அஷ்ஷீ ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க எனக்கு அவ்வளவு காஸ்ட்லியான நகை எதுவும் வேண்டாம்.. நம்ம கல்யாணத்துக்கு பிறகு வாங்கி கொடுங்க அப்போ நான் மறுக்காமல் வாங்கிக்கிறேன்..” என்று சிறு புன்னகையுடன் மறுக்க,
“என்னடி லூசு மாதிரி பேசற மாப்பிள்ளை உன் மேல இருக்கிற அன்பில் உனக்கு வாங்கி தர்றேன் சொல்றாங்க நீ வேண்டாம் சொல்ற.. அவர் மனசு கஷ்டப்படாது?.. போ போய் ஒழுங்கா கிளம்பி வா..” என்று அதட்டி கையோடு எழிலை அழைத்துச் சென்று அவளை கிளம்ப வைத்து அஷ்வினுடன் அனுப்பிய பிறகே சிவகாமி அமைதியானார்..
“ஏன் சிவகாமி நம்ம பொண்ணு தான் போக மாட்டேன்னு சொல்ற இல்ல.. அப்புறம் ஏன் நீ மாப்பிள்ளை கூட அனுப்பி வைக்கிற?.. பரமசிவன் மனைவி செயலில் தன் பிடித்தமின்மையை கூற, “அவர் எங்க கூப்பிட்டாலும் இவ போக மாட்டிகிறா.. மத்த நேரம் வெளியே சுத்த கூப்பிட்டாரு அவ போக மாட்டேன் சொன்னா நான் எதுவும் சொல்லலயே..
இப்ப நகை வாங்கி தர்றேன் சொல்றாரு அவளுக்கு பிடிக்கலைன்னா வாங்கி என்கிட்ட கொடுக்க வேண்டியது தான.. நான் என்ன இவள மட்டுமா பெத்து வச்சிருக்கேன் இவளுக்கு அடுத்து ஒண்ணு இருக்கே அவளை கரை சேர்க்கணும்ல..” என்ற தன் மனைவியை கோபமாக பார்த்து, “அப்போ நான் எதுக்கு இருக்கேன்?.. என்று கோபமாக கேட்க
“ஹ்க்கும் நீங்க வாங்கிட்டு ஒரே சம்பளத்துல வீட்டுக்கு லோன் கட்டவும் பிள்ளைங்க படிப்பு செலவுக்குமே சரியா போகுது.. இதுல அவங்களுக்கு எங்க நகையை சேர்த்து வைக்க.. ஏதோ வயித்த கட்டி வாய கட்டி ஒரு நாற்பது பவுன் சேர்த்து வச்சிருக்கேன்.. இவளுக்கு எல்லாத்தையும் கொடுத்தா சின்னவளுகு என்னத்த போட?..
யார் செஞ்ச புண்ணியமோ இப்ப வந்த மாப்பிள்ளை மதிக்கு எதுவும் நகை போட வேண்டாம் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு.. அதிர்ஷ்டம் ஒரு தடவை தாங்க கதவு தட்டும் வரும்போது கெட்டியா பிடிச்சுக்கணும்..” என்று அறிவுரை கூறிய மனைவியை பாயாசமாக பார்த்த பரமசிவன் என்னவோ பண்ணு..” என்று சலிப்பாக கூறிவிட்டு சென்றார்..
“பேபி இது பாரு உன் அழகான விரலுக்கு இந்த மோதிரம் ரொம்ப அழகா இருக்கும்..” என்று நகை கடைக்கு எழிலை அழைத்து வந்திருந்த அஷ்வின் எழில் கையைப் பற்றி வருடி கொடுத்தபடி ரசனையுடன் கூற, அத்தனை பேர் முன்னிலையிலும் தன் கையைப் பிடித்து அவ்வாறு கூறியது எழிலுக்கு சங்கடத்தை கொடுக்க
அவனிடமிருந்து தன் கையை உருவ முயற்சி செய்து கொண்டிருந்தாள் அதற்குள் அஷ்வின் செல்ஃபோன் சத்தம் கொடுக்க அதை உயிர்ப்பித்து காதில் வைத்தபடி எழிலிடம் “டூ மினிட்ஸ் பேபி..” என்றபடி அங்கிருந்து செல்ல சிறு நிம்மதியுடன் வேகமாக தலையசைக்க அவள் கவனத்தை ஈர்த்தது ஒரு குரல்..
“உன்னைய நகை கடைக்கு கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு டா.. பேசாம எப்பவும் போல உன் அப்பாவ கூட்டிட்டு வந்து இருக்கலாம்.. அவர் கூட பரவாயில்லை நான் சொல்றதை கேட்டு அமைதியாக இருப்பாங்க..” என்று ஒரு பெண்மண்யின் குரல் சலிப்பாக ஒலிக்க எழில் அந்த குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள்.. நடுத்தர வயதை சற்று தாண்டிய ஒரு பெண்மணி அவரின் அருகில் ஒரு வாலிபனும் அமர்ந்திருந்தனர்..
அந்த பெண்மணியின் குரல் மட்டும் சலிப்பாக கேட்டது.. ஆனால் அவரின் முகம் அதற்கு நேர்மாறாக பெருமிதத்தில் மின்னி கொண்டிருக்க, எழில் அவரை சுவாரஸ்யமாக பார்த்திருந்தாள்..
“சொல்லுவிங்கம்மா சொல்லுவிங்க ஒழுங்கா நல்ல பிள்ளையாக வேலை பார்த்திட்டு இருந்தவனை ‘எனக்கு நெஞ்சுவலி இந்த நகை கடை வாசலில் மயங்கி கிடக்கிறேன்… என்று நீங்க சொல்லும் போதே நான் சுதாரித்து கொண்டு இருக்கணும்..
அம்மா பாசத்தில் அல்லாம் மறந்து அப்படியே ஓடி வந்தேன் பாருங்க.. நீங்க இன்னும் சொல்லுவிங்க இதுக்கு மேலேயும் சொல்லுவிங்க..” என்று பதிலுக்கு, அந்த பெண்மணியின் அருகில் இருந்த வாலிபனும் குறைபட்டுக் கொள்ள
“உன்னை யாருடா பதறியடித்து வர சொன்னது?.. நான் சொன்ன விசயம் பொய் என்று சின்ன குழந்தை கூட கண்டுபிடிச்சிருக்கும்.. நீ ஏமாந்துட்டு என்னை குற்றம் சொல்றியா..” என்று இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வார்த்தையாடி கொண்டிருந்தனர்.
அன்னைக்கு சரியாக வாயாடினாலும் பொறுமையாக அவருக்கு ஒவ்வொரு நகையையும் வைத்து பார்த்து கொண்டிருந்த ஆடவனை மெச்சுதலாக பார்த்து “பரவாயில்லை அம்மா மேல ரொம்ப பாசம் தான்..”எழில் வியப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்..
அவன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க அவன் முகம் தெரியவில்லை.. ஆனால் இந்த குரல் எங்கேயோ கேட்டிருந்த ஞாபகம்.. அது எங்கே என்று நினைவில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ்மீ இதுக்கு பில் போட்ருங்க..” என்றபடி திரும்பிய ஆடவனை திகைத்து பார்த்திருந்தாள்.. அன்று ஹோட்டலில் பார்த்த அதே வாலிபன்.. இன்று தன் அன்னையுடன் வந்திருந்தான்..
“இவங்க அந்த ஹோட்டல் மேனேஜர்ல.. அன்னிக்கு அங்க அவ்வளவு கண்டிப்பாக இருந்தாங்க இங்க அவங்க அம்மா கிட்ட எவ்வளவு ஜாலியாக பேசறாங்க..” என்று வியப்பாக பார்த்து கொண்டு இருக்க
“ஹலோ மிஸ்டர் விஜய் வாட் எ மிராக்கிள்!!.. சார் நகை கடைக்கு வந்திருக்கிங்க?..” என்று கேலி செய்தபடி ஒருவர் வந்து அந்த வாலிபனிடம் கை குலுக்கி அணைத்து வரவேற்க, அவரின் தோரணயே சொன்னது அவர் தான் இந்த நகை கடை ஓனர் என்று..
“அடேங்கப்பா இந்த மேனேஜருக்கு நகை கடை ஓனர் இவ்வளவு மரியாதை தர்றாங்க..” என்று எழில் ஆச்சரியமாக நினைத்து கொண்டு இருக்க
“மழைக்கு இங்க ஒதுங்கினேன் அதுக்குள்ள யாரோ என் கை பிடிச்ச உள்ள இழுத்திட்டாங்க.. யார் என்று பார்த்தால் நான் குடியிருந்த கோயில்..” என்று சிரிக்காமல் கூற, அவனின் அன்னை முறைத்துப் பார்க்க
அவன் கூறிய பாவனையில் அந்த நகை கடை உரிமையாளர் சத்தமாக சிரிக்க, அவருடன் சேர்ந்து அத்தனை நேரம் அவர்கள் உரையாடலை கேட்டிருந்த எழிலும் சத்தமாக சிரித்து விட்டாள்..
பட்டாசு சத்தம் இடையே வெள்ளி சதங்கையாக கேட்ட சிரிப்பொலி வந்த திசையை திரும்பி பார்த்தான் அவன்.. அவன் விஜயேந்திரன்!!..
இமை சிமிட்டல் தொடரும்..