இமை 39
அஷ்வின் தன்னை நோக்கி வருவதை பதட்டமாக பார்த்த எழில் அருகில் நின்றிருந்த ஆடவனின் முதுகில் பின் மறைந்து நின்று கொண்டு, அவனை அசையாதிருக்கும்படி சொல்ல, அந்த ஆடவன் திரும்பி எழிலை பார்த்து சிரிக்கவும் எழில் அவனை திகைத்து பார்த்தபடி நின்றாள்..
“ராங்கி..!! இது என்ன கண்ணாமூச்சி ஆட்டமா..? யார் கூட விளையாட்ற.?” என்று புருவம் உயர்த்தி கேலியாக கேட்ட விஜய்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எழில் திகைத்து பார்க்க.. அவள் அப்படி மலங்க மலங்க விழித்து கொண்டு இருப்பதை பார்க்க பார்க்க அள்ளி அணைத்து கொஞ்ச தோன்றியது அவனுக்கு.. தோன்றுவதை உடனே செய்யா விட்டால் அது பெரும் குற்றமல்லவா.!?.
அந்த குற்றத்தை செய்ய மனம் இல்லாதவனாக, விஜய் கால் தடுக்கி எழில் மீது விழுவது போல் அவள் மேல் சாய்ந்தவன், அவள் சுதாரித்து விலகும் முன் எழில் நெற்றியில் தன் உதட்டை அழுத்தமாக பதித்து விட்டே விலகினான்.. அவன் செயலில் சில நொடிகள் சிலையாக உறைந்து நின்ற எழில், அருகில் கேட்ட சலசலப்பில் உணர்வுக்கு வந்தவள் அவனை தீயாக உறுத்து விழிக்க, “டோண்ட் மிஸ்டேக் மீ யாரோ என்னை இடிச்சிட்டு போய்ட்டாங்க..” என்று தன் செயலுக்கு விளக்கம் அளித்த விஜய் பொய் சொல்கிறான் என்று அப்பட்டமாக தெரிந்தது எழிலுக்கு.. ஆனால் அதை சொல்ல பிடிக்காமல் அவனை கடந்து செல்ல போன எழிலுக்கு அஷ்வின் தன்னை தேடி வந்தது ஞாபகம் வர சிறு பதட்டத்துடன் விஜய்யை தாண்டி எட்டிப் பார்த்தாள்..
அங்கு அஷ்வின் இல்லாமல் போகவே இங்க தானே வந்தான்.. அதுவும் என்னை பார்தத மாதிரி தான வந்தான்.. அதுக்குள்ள மறைஞ்சு போய்ட்டான்..” என்று சற்று குழப்பமாக நினைத்த படி அவனை சுற்றும் முற்றும் தேட, “அவன் எங்கேயும் தென்படவில்லை.. அவன் எப்படி கிடைப்பான்? அவன் தான் விஜய்யின் கண்ணசைவில் எப்போதோ அங்கிருந்து சென்றுவிட்டிருந்தானே
அஷ்வினை இங்கு அனுப்பி வைத்ததும் விஜய் தான், மறுத்த அஷ்வினை உன் ஆசை மனைவி உனக்கு உயிரோடு வேணுமின்னா நான் சொன்னதை நீ செஞ்சு தான் ஆகணும் தம்பி என்று மிரட்டி பணிய வைத்திருந்தான்.. அஷ்வினை எழில் மட்டும் பார்க்கும்படி செய்தவன், அஷ்வின் எழிலை பார்க்க விடவில்லை.. தன்னை எதற்காக இங்கு வரவழைத்தான், எதற்காக திரும்பி போக சொல்கிறான் என்று தெரியாமல் குழப்பியபடி சென்ற அஷ்வினை ஒரு ஏளன சிரிப்போடு பார்த்த விஜய்.. உனக்கு இன்னும் நேரம் வரல அஷ்வின் அதுவரை நீ சுதந்திரமாக இரு..”
ஒரு நிம்மதி பெருமூச்சுடன், நான் தான் யாரையோ பார்த்து அஷ்வின்னு நினைச்சிட்டேனோ அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்று சொல்வாங்க.. அதான் எனக்கு யாரை பார்த்தாலும் அஷ்வின் மாதிரி தெரியுது போல..” என்று நினைத்தபடி
விஜய்யிடம் இருந்து நகர்ந்த எழிலிற்கு நெற்றியில் ஏதோ குறுகுறுப்பாக இருக்க நெற்றியை தடவி பார்த்தாள்.. அங்கு எதுவும் தென்படாமல் போக ஏதோ பிரமை என நினைத்து தலையை லேசாக ஆட்டியபடி அங்கிருந்து செல்ல
“ராங்கி ஒரு நிமிஷம் நில்லு..” என்று விஜய் எழிலை நிறுத்த எழில் நின்று அவனை திரும்பி பார்த்தாள்.. “உனக்கு தான் என் மேல் விருப்பம் இல்லை அதான் நீ என்னை விட்டு விலகி விலகி போற.. ஆனா உன்னை சேர்ந்த எல்லாருக்கும்.. என்னை பிடிச்சிருக்கு.. அதான் என்னை விட்டு விலக மாட்டிங்குது.. என் கூடவே ஒட்டிக்குது..” என்று புதிர் போட்ட விஜய்யை, புரியாமல் பார்த்த எழில்
“இப்போ என்ன சொல்ல வர்றிங்க. எனக்கு லஞ்ச் பிரேக் முடிய போகுது..” கால்கள் மாற்றி நின்றபடி அவசரமாக கூறி கொண்டு இருந்த எழில் நெற்றியில் விஜய் தன் பெருவிரலை அழுத்தமாக பதிக்க, அதில் கோபமாக அவனை முறைத்து பார்த்து “என்ன நினைச்சிட்டு இருக்கிங்க..?” என்று எழில் நெற்றிக் கண்ணை திறந்து படபடவென பொரிய, “உன்னை பத்தி நான் நிறைய நினைக்கிறேன் அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது..” என்று கண் சிமிட்டி குறும்பாக கேலி பேசிய விஜய்யை எழில் பல்லை கடித்தபடி அவனை பார்க்க
“கண்ணு இருக்குங்கிறதுக்காக அடிக்கடி முறைக்காத ராங்கி.. அப்புறம் அந்த கண்ணுக்குள்ளே நான் போயிருவேன்..” அதற்கும் கேலி பேசிய விஜய் சரி சரி ரொம்ப முறைக்காத.. என்னோட உதடு உன் நெத்தில பட்டதுனால, உன் நெத்தியில இருந்த பொட்டு ஏன் உதடுல பட்டுருச்சு.. என் உதட்டில் ஒட்டின பொட்டை உன் நெத்தியில ஒட்றதுக்கு தான் என் விரல் உன் நெத்தியில பட்டுச்சு.. அதான் நான் இப்போ..” என்று எதுகை மோனையாக பேசிக்கொண்டு இருந்த விஜய்யை இயலாமையுடன் பார்த்து
“ஏன் இப்படி பண்றிங்க?.. அதான் இனி என்னை பார்க்க மாட்டேன்.. பேச மாட்டேன் என்று சொன்னிங்கள்ல இப்ப என்னவாம்.. இந்த ஒரு வாரம் எப்படி இருந்திங்களோ இனியும் அப்படியே இருங்களேன்..” என்று ஆதங்கமாக சொல்ல, “நல்லா யோசிச்சு பாரு ராங்கி நான் சொன்ன சொல் மாறவே இல்லை நீயாக என்னை தேடி வரைக்கும் நான் உன்ன பார்க்க மாட்டேன் என்று சொன்னேன்..
இன்னிக்கு நீயாக தான் வந்த.. என் முதுகு பின்னால் மறைஞ்சு நின்ன.. என்கிட்ட பேசின..” என்ற விஜய்யிடம், ”உங்க கிட்ட பேசறதே வேஸ்ட்..” என்று முணுமுணுத்தபடி பள்ளியை நோக்கி சென்ற எழிலிற்கு இந்த ஒரு வாரமாக மனதை சூழ்ந்திருந்த வெறுமை காணமல் போனது.. அவள் விரல்கள் அவளறியாமல் நெற்றி பொட்டை வருடி கொடுத்தது.. அவள் செய்யகையை ரசனையான புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த விஜய்யின் பின்னே கைகளை கட்டி கொண்டு நின்றிருந்த சுமித்ரா..
விஜய் அருகில் வந்து “அங்கே அப்படி என்ன தெரிகிறது?.” என்று நாடக பாணியில் கேட்க, “அதுவா என் உயிர் தனியே என்னை விட்டு போகுது.. என் உலகம் என்னை விட்டு தனியாக போகுது.. அதை பார்த்து கொண்டு இருக்கிறேன்..” என்று ஏதோ நினைவில் கூறியபடி திரும்பியவன் தன் பின்னால் நின்றிருந்த அன்னையை பார்த்ததும் நாக்கை துருத்தி அசடு [IT_EPOLL id=”1″][/IT_EPOLL]வழிந்தவன்
“மீ எஸ்கேப்..” என்று அங்கிருந்து ஓடிய தன் மகனை வாஞ்சையுடன் பார்த்த சுமித்ராவிற்கு எழில் கடந்த காலம் மன வருத்தத்தை கொடுத்தது.. இதை எல்லாம் விஜய் எப்படி சரி செய்ய போகிறான் எப்படி எழில் மனதை மாற்ற போகிறான் என்று பார்க்க ஆர்வமும் இருந்தது… கடவுளே எங்க ரெண்டு குழந்தைகளும் வாழ்க்கை நல்லபடியாக அமையணும்.. சீக்கிரம் என் மருமகள் மனசு மாறணும்..” என்று வேண்டுதல் வைத்தபடி பள்ளிக்கு சென்றார்..
விஜய்யின் கார், ஊரை விட்டு தள்ளி சற்று ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டின் முன் வந்து நின்றது.. காரில் இருந்து இறங்கிய விஜய் அந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான்..
சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்த சிவகாமி வெளியே சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தவர், பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தபடி நின்ற இடத்தில் இருந்தே வீட்டை சுற்றி பார்த்தபடி இருக்க, ‘யார் தம்பி நீங்க?..” என்று கேட்டபடி சிவகாமி அவன் அருகில் வர, “என் பெயர் விஜயேந்திரன்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள
“என்ன விசயமாக வந்திருக்கிங்க..?” என்று கேட்க, வந்தவங்களுக்கு குடிக்க எதுவும் தர மாட்டிங்களா?..” என்று கேட்டபடி அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.. அனுமதி கேட்காமல் உள்ள வந்தது மட்டும் இல்லாமல் சேரில் சட்டமாக அமர்ந்து கொண்ட அந்த புதியவனை குழப்பமாக பார்த்திருந்த சிவகாமி..
“தம்பி என்ன விசயமாக வந்திருக்கிங்க..?” என்று மீண்டும் கேட்க, “நான் எதுக்காக வந்து இருக்கேன்னு தெரியாம எனக்கு குடிக்க எதுவும் தர மாட்டிங்க அப்படித்தானே..?” என்ற விஜய் சிவகாமி அமைதியாக நின்று இருக்க, நான் லிட்டில் கேர்ள்..” என்று ஆரம்பித்தவன் சிவகாமி அவன் பேசுவது புரியாமல் பார்க்கவும்
“நான் உங்க பொண்ணு மதி விசயமாக சில விசயங்கள் கேட்க வந்திருக்கேன்..” என்று சொல்ல, அதுவரை இயல்பாக இருந்த சிவகாமி எழில் பெயர் சொன்னதும் சற்று தளர்ந்தார்.. “தம்பி என் பொண்ணுக்கு என்னப்பா?.. அவளுக்கு என்ன ஆச்சு?. அவ நல்லா தானே இருக்கா..? அவளுக்கு ஒண்ணும் இல்லையே..” என்று படபடப்பாக வினவ
“உங்களோடு அன்பையும், அக்கறையும் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்ற விஜய்யின் முகத்தில் மருந்துக்கும் முகத்தில் சிரிப்பு இல்லாததை உணர்ந்து தன் கண்களை துடைத்துக் கொண்ட சிவகாமி.. நீங்க அமைதியா பேசுவதை வச்சு என் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு மனசு நிம்மதியா இருக்கு.. எனக்கு அது போதும்..
“நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.. நீங்க என் பொண்ணை பத்தி என்ன கேட்கணும் கேளுங்க.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் என் பொண்ண பத்தி தெரிஞ்சுக்கணும் நினைக்கிற நீங்க யாரு?..” என்று சந்தேகமாக கேட்க, “என் மதிக்கு நான் பதியாக போறவன்..” என்று அழுத்தமாக சொல்ல, சிவகாமிக்கு அவன் கூறுவது புரியாமல் விழித்தார்
அடே உன் ரைமிங்ல நாலு கட்டெறும்பை விட..!! நீ சொன்னது அவருக்கு புரியல ஒழுங்கா சொல்லு..” என்று விஜய்யின் மனம் அவனை எச்சரிக்க.. “நான் உங்க மகள் எழிலுக்கு கணவனாக போறேன்.. அவளுக்கு ஏதோ மனசில குறை இருக்கு அது என்ன கண்டுபிடிச்சு அதை சரி செஞ்ச பிறகு தான் மதியை கல்யாணம் செய்யணும் முடிவு பண்ணி இருக்கேன்..
“என்க்கு மதிக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லை..அதை கேட்டு மேலும் அவ மனச ஙக்ஷகாயப்பட கூடாது பாருங்க அதான் உங்க கிட்ட வந்திருக்கேன்.. அன்னிக்கு கன்னியாகுமரி மருத்துவமனையில் என்ன நடந்துச்சு..” என்று கேட்க
“அதுக்கு முன்னாடி நடந்த விசயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?..” சிவகாமி கேட்க
“ம் தெரியும்..” என்று விஜய் ஒரு வார்த்தையில் முடித்து கொள்ள
“எப்படி தெரியும் மதி சொன்னாளா?..” அவர் கேட்க
“அன்னிக்கு மதியை அந்த கடத்தல்காரனுங்க கிட்ட இருந்து காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்து நீங்க வரும் வரை மதி கூட இருந்தது நான் தான்.. நீங்க வந்த பிறகு நீங்க அவளை பத்திரமாக பார்த்துக்குவிங்க என்று நம்பி நான் போனேன்.. ஆனால் அஞ்சு வருஷம் கழிச்சு நான் பார்த்த போது மனுஷங்க மேலயும், வாழ்க்கை மேலயும், நம்பிக்கை இல்லாமல், தன் சிரிப்பு தொலைச்சு இறுக்கமாக இருக்கிற மதியைத்தான் பார்த்தேன்..
அதான் கேட்கிறேன் அங்கு அன்னிக்கு ஹாஸ்பிடல் என்ன நடந்துச்சு..? இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள மதி லைஃப்ல என்ன நடந்தது.. எனக்கு தெரிஞ்சாகணும்..” என்று அழுத்தமாக சொல்ல சொல்றேன் தம்பி.. என் பொண்ணு தான் நாங்க சொல்ல வர்றதை கேட்காமல் எங்களை வெறுத்து ஒதுக்கிட்டா.. நீங்களாவது கேளுங்க.. என்று தன் கண்ணீரை துடைத்தபடி எழில் கடந்த காலத்தை பற்றி சொல்ல தொடங்கினார்..
இமை சிமிட்டும்..