இமை 36
நேத்ராவை கடத்தியது விஜய்க்கு தெரிய வேண்டும் என்று நினைத்த அஷ்வின் அதை எப்படி அவனுக்கு தெரிய படுத்துவது?. அங்க ஹாஸ்பிடல்ல வேற ஒரு ஆளை வச்சு இவளை தூக்கிட்டு வந்தாச்சு.. எனக்கு அவன் நம்பர் கூட தெரியாதே.. இப்போ என்ன செய்றது?” என்று சத்தமாக யோசித்து கொண்டு இருக்க
“உனக்கு அந்த கஷ்டமே வேண்டாம் அஷ்வின் நீ என்னிடம் நேரடியாக சொல்லலாம் என்று படு நக்கலாக கூறியபடி மற்றொரு காரில் இருந்து இறங்கிய விஜய்யை அதிர்ந்த படி பார்த்து நின்ற அஷ்வின்.. இவன் எப்படி இங்க வந்தான்?.. அதுவும் இவ்வளவு சீக்கிரம்..?! என்று வியப்பும், திகைப்புமாக பார்த்து கொண்டு இருக்க,
“என்னடா இவன் எப்படி திடீரென்று முன்னாடி வந்து நிக்கிறான் என்று யோசிக்கிறியா..? எல்லாம் செஞ்ச நீ உன் மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டியே..” என்று நக்கலாக கேட்ட விஜய்யை அஷ்வின் புரியாமல் பார்க்க, “என் பேபியை கடத்தின நீ உன் மனைவியை ஹாஸ்பிடல்ல விட்டு வந்துட்டியே முட்டாள் அஷ்வின்..”
கடத்தினவன் உன் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருக்கணும்.. உன்னை யாருடா உன் மனைவிக்க்கிட்ட ஃபோன்ல வழிய சொன்னது..? உன் வழிசல் தான் என் பேபியை கண்டுபிடிக்க வழி காட்டுச்சு..” என்ற விஜய்யை அஷ்வின் திகைத்து பார்க்க
“என்ன பார்க்கிற?.. காலையில் நடந்த சம்பவத்தில் நீ தான் பேபியை கடத்திருப்பியோ என்று சந்தேகம் வந்துச்சு.. சந்தேகம் வந்தால் அதை உடனே கிளியர் செய்யணும் தான.. ஹாஸ்பிடல்ல சந்தேக பட்ற மாதிரி எதாவது குளூ கிடைக்குமா தேடினா அதான் நானே இருக்கேன்ல என்று சொல்ற மாதிரி உன் அன்பு மனைவி என் முன்னால் கடந்து போனாங்க.. விடுவேனா நான்.. மொபைல் சுட்டுட்டேன்
உன் மொபைல் நம்பரை எனக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் மூலமாக பர்சனலா சொல்லி ட்ராக் செஞ்சேன்..
அதோட உன் மனைவி உன்கிட்ட அப்போ அப்போ உன்கிட்ட எங்க இருக்கிங்க என்று அடிக்கடி பேசிட்டே இருந்தாங்களே.. அது வேறு யாரும் இல்லை இட்ஸ் மி..” என்றபடி அஷ்வின் மனைவியின் செல்போனை உயர்த்தி காட்டிய விஜய் “இதுல தான் ஜிபிஎஸ் வச்சு உன்னை பிடிச்சேன்.. போலீஸ் கண்டுபிடிச்சதுல உன்னோட லொகேஷன் மட்டும் தான் காட்டுச்சு ஆனா நீ கரெக்டா எங்க இருக்கன்னு காண்பிக்க தான் உன் மனைவி போனை சுட்டுட்டேன்..
“நீ என் பேபியை கடத்தின மாதிரி நானும் உன் மனைவியை கடத்தி வச்சு உன்னை மிரட்டிருக்கலாம்.. ஆனால் நான் கொஞ்சம் நல்லவன்.. அதான் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.. ஆனால் எப்பவும் இப்படி இருப்பேன் நினைக்காத அஷ்வின்.” என்று கடுங்குரலில் எச்சரித்த விஜய்யை அஷ்வின் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க
அவன் அதிர்ந்த நிலையை அழுத்தமாக பார்த்தபடியே அஷ்வின் காரின் அருகில் வந்த விஜய், காரில் பின்னிருக்கையில் மயங்கி இருந்த நேத்ராவை தூக்க வர, அதற்குள் தன்னை சுதாரித்த அஷ்வின், விஜய்யை தடுக்க,
அவன் முகத்தில் ஓங்கி குத்து விட்டான்.. விஜய் அடித்ததில் அஷ்வின் வலியில் கத்த, அவன் வாயைத் மூடிய விஜய், “ஷ்.. உன் சத்தத்தில் பேபி முழிச்சா அதுக்கும் நீ தான் சேர்த்து அடி வாங்குவ..”என்று எச்சரித்து விட்டு விஜய் காரை திறக்க போக
விஜய்யின் சட்டை காலரை பிடித்து இழுத்த அஷ்வின், விஜய்யை கீழே தள்ளி விட்டான்.. ம் கூம் தள்ளி விட முயன்றான்.. தன் கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றவன், தன்னை தாக்க வந்த அஷ்வின் கரத்தை லாவகமாக தடுத்து அவனை கிழே தள்ளியவன், அவனை கன்னம் கன்னமாக அறைந்து சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தியவன்,
இரு சொடக்கிட்டு அஷ்வினை தாண்டி அவன் பின்புறம் பார்க்க, அங்கு இன்னொரு காரில் இருந்து இரண்டு பவுன்சர்கள் வந்து அஷ்வினை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.. அவனை தங்கள் வந்த காரில் ஏற்றி அவன் கையில் இரும்பு விலங்கு கொண்டு இருக்கையோடு சேர்த்து கட்டி வைத்தனர்..
காரில் திமிறி கொண்டு இருந்த அஷ்வினை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அஷ்வின் காரில் இருந்து நேத்ராவை தூக்கியவன், மீண்டும் தன் ஆட்களை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து, அஷ்வின் காரின் அருகில் வந்தவர்கள் அஷ்வின் ஓட்டி வந்த காரை நெருப்பிற்கு இரையாக்கினர்..
தன் மாமனாரிடம் ஆசையாக வாங்கிய கார் தன் கண் முன்னே தீக்கு இரையாவதை கண்டு “அய்யோ என் கார்..!! அடே அது ஃபிப்டி லேக் டா ஒண்ணும் செய்யாதிங்கடா..” என்ற அஷ்வின் கதறலை கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையை செய்து முடித்துவிட்டு அடுத்து என்ன உத்தரவு என்று விஜய்யின் உத்தரவிற்காக காத்திருந்தனர்..
நேத்ராவை தன் காரில் படுக்க வைத்து விட்டு மீண்டும் அஷ்வினிடம் வந்த விஜய், இப்போ இந்த நிமிஷம் உன்னை இந்த கார் மாதிரியே உன்னை எரித்து கொண்ணு அடையாளம் தெரியாமல் செய்ய என்னால முடியும்.. ஆனால், நீ உடனே சாக கூடாது.. நீயாக உன் சாவை எதிர்பார்க்கிற மாதிரி செய்றேன்..” என்று கூறி திரும்பியவன்,
மீண்டும் அஷ்வின் முகத்தில் ஒரு குத்து விட்டு இது என் பேபியை கடத்தினதுக்காக..” என்று குத்திய விஜய், அவன் மூக்கில் ரத்தம் வருவதை திருப்தியாக பார்த்து விட்டு, நேத்ராவை முதலில் அவள் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்ற விசயமே முக்கியமாக தோன்ற “இவனை நிதானமாக தான் பார்க்கணும்.”
“இவனை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. நான் வந்து பார்க்கிறேன்..” என்று அவர்களுக்கு உத்தரவிட்டு, நேத்ராவோடு தன் காரில் சென்றான்.. இன்னும் நேத்ரா கண் விழிக்காததை கண்டு, காரில் இருந்த தண்ணீர் பாட்டிலில் சிறிது தண்ணீர் எடுத்து நேத்ராவின் முகத்தை துடைத்து விட்டான்.. நேத்ரா அப்போதும் கண் விழிக்காமல் இருக்கவும் மனதில் சிறு அச்சம் எழ, காரை ஒரமாக நிறுத்தியவன்,
“பேபி..!! கண்ணை திறந்து பாருடா..பேபி நான் வந்துட்டேன்.. உன் சாக்லேட் அங்கிள் வந்துட்டேன்.. இங்க பாருடா.. பேபி கண் முழிச்சிக்கோடா..” என்று லேசாக நேத்ராவின் கன்னம் தட்டி எழுப்பினான்.. “அங்கிள்.!!” என்று சோர்வாக கண் திறந்த நேத்ரா.. அங்கிள் வலிக்குது..” என்று முணங்கலாக கூற, “பேபி.. பேபி எங்கடா வலிக்குது?..” என்று பதட்டமாக கேட்க,
“கண்ணு வலிக்குது.. கண் திறக்க முடியல மூச்சு விட முடியலை பயமாக இருக்கு அங்கிள்..” என்று மயக்கத்தில் சுயநினைவு இல்லாமல் அழுத குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்டவன், “கொஞ்ச நேரம் பொறுத்துக்கோடா பேபி நாம ஹாஸ்பிடல் போய்டலாம்..” என்று ஒரு கையால் நேத்ராவை தன் நெஞ்சோடு அணைத்தபடி மற்றொரு கரத்தில் காரை செலுத்திய விஜய்யின் கண்கள் கலங்கியது..
“அங்கிள் என்னை விட்டு போகாதிங்க.. மறுபடியும் யாராவது தூக்கிட்டு போய்ருவாங்க..” என்று பயத்தில் நடுங்கி கொண்டு கூற,
“இல்லடா பேபி நான் எங்கேயும் போகல.. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்..” என்று நேத்ராவின் உச்சியில் தன் தாடையை பதித்தபடி கூறிய விஜய் அருகில் எதாவது மருத்துவமனை தெரிகிறதா என்று தேடி பார்த்தபடி காரை செலுத்தி கொண்டு இருந்தவன் கண்களில் இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனை கண்ணில் பட அதை நோக்கி காரை வேகமாக செலுத்தினான்..
அங்கு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர், “இது என்ன சின்ன குழந்தைக்கு போய் இவ்வளவு ஹெவியான மயக்க மருந்து கொடுத்து இருக்காங்க.. என்று கோபமாக கூறிய மருத்துவரை நெருங்கி “இப்போ பாப்பா எப்படி இருக்கா எதுவும் ஆபத்து இல்லேல்ல..” என்று தவிப்பாக கேட்க
“நல்ல வேளை சரியான நேரத்திற்கு நீங்க கூட்டிடு வந்துட்டிங்க.. சோ நோ பிராப்ளம்.. ஒரு டூ ஹவர்ஸ் மட்டும் குழந்தை எங்களோட அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.. அப்புறமா நீங்க கூட்டிட்டு போங்க” என்று மருத்துவர் கூறவும், விஜய் காத்திருக்க தொடங்கினான்..
இங்கு மருத்துவமனையில் அனைவரும் நேத்ராவின் வருகையை எதிர்பார்த்து தவிப்புடன் காத்திருந்தனர்.. “கவி இன்னும் அவங்கள காணோம்..” என்று எழில் தவிப்பாக வாசலை எட்டிப் பார்க்க.. “என் பையன் சொன்னது செய்வான் மா நீ பயப்படாதே குழந்தைக்கு எதுவும் ஆகாது..” என்று சுமித்ரா எழிலுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது
எழிலின் அலைபேசி சத்தம் கொடுக்க அதை எடுத்துப் பார்த்த எழில் விஜய் அழைத்திருப்பதை கண்டு முகம் மலர்ந்து, “அவங்க தான் கூப்பிட்றாங்க..” என்ற எழிலுக்கு அழைப்பை ஏற்று பேச பயமாக இருந்தது.., “நீங்க யாராவது பேசுங்க எனக்கு பயமாக இருக்கு..” என்று போனை சுமித்ராவிடம் கொடுத்த எழில் இதயம் பலமாக துடித்தது..
எழிலிடம் ஃபோனை வாங்கி பேசிக்கொண்டு இருந்த சுமித்ராவையே பார்த்து கொண்டு இருந்தாள்.. நீ பயப்படற மாதிரி எதுவும் இல்லை எழில் தவிப்பை உணர்ந்து போனை ஸ்பீக்கரில் போட, “
“பேபியை பார்த்துட்டேன்.. அவளுக்கு ஒண்ணும் இல்லை.. என்கிட்ட தான் இருக்கா.. இன்னும் அரைமணி நேரத்தில் நாங்க வந்திடுவேன்..” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டிக்க போனவன் “லிட்டில் கேர்ள் இப்போ மாத்திரை போட்ற நேரம்.. அவளுக்கு எதாவது சாப்பிட கொடுத்திட்டு மாத்திரை கொடுங்க..” என்று இணைப்பைப் துண்டிக்க,
விஜய்யின் இந்த அன்பு எழிலுக்கு மூச்சடைக்க வைத்தது.. அத்தனை கலவரத்திலும் தன்னை பற்றி தன் நலம் பற்றியும் சிந்தித்து கூறியது, அவள் பாலை நிலத்தில் பனித்துளி விழுந்தது போல் மனம் குளிர்ந்தாலும், பல ஏமாற்ங்களை கடந்து வந்த எழிலிற்கு இது நிரந்தரம் இல்லை என்று மந்திரம் போல் ஜபித்து தனக்குள் உருவேற்றி கொண்டாள்..
மயக்கம் நன்றாக தெளிந்தது நேத்ராவிற்கு.. அருகில் தன் சாக்லேட் அங்கிள் இருப்பதை பார்த்ததும் குதூகலத்துடன் அவனிடம் தாவிய நேத்ரா, “அங்கிள்.. நான் உங்க கிட்ட தான் இருக்கேனா..? சங்கவி ஆண்ட்டியை கீழ தள்ளிட்டாங்க.. நான் அங்கிள் சொல்லி உங்களை கூப்பிட்டேனா
அப்போ யாரோ என் முகத்தில் துணி வச்சு அழுத்தினாங்க.. எனக்கு மூச்சு விட முடியல அப்பறம் நான் தூங்கிட்டேன்.. இப்போ முழிச்சு பார்க்கும் போது நீங்க இருக்கிங்க..” என்று நீளமாக கண்களில் கலவரத்துடன் கதை பேசிய நேத்ராவை தூக்கி கொண்ட விஜய்,
“ஒண்ணும் இல்லை டா பேபி.. அங்கிள் கிட்ட அந்த அங்கிள் விளையாடினாங்க.. அவங்களுக்கு உன்னை பிடிச்சிருக்காம்.. உன்னை அவங்க கேட்டாங்களா.. என் பேபி.. என்னோட நேத்ரா பேபி அவங்களுக்கு வேணுமாம்.. நான் தர மாட்டேன் சொன்னேனா அதான் உன்னை சும்மா விளையாட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. விளையாட்டில் நான் தான் ஜெயிச்சேன்..” என்று கண்சிமிட்டி கூற
“எஸ் எப்பவும் சாக்லேட் அங்கிள் தான் விண் பண்ணனும்.. அந்த அங்கிள் கிட்ட சொல்லுங்க நான் அவங்க கூட போக மாட்டேன்.. அம்மா கூட தான் இருப்பேன்னு சொல்லுங்க..” என்று சொல்ல, “அப்போ சாக்லேட் அங்கிள் கூட இருக்க மாட்டியா பேபி..?” என்று ஏக்கமாக கேட்க, சில நொடிகள் யோசித்த நேத்ரா “அங்கிள் நீங்களும் எங்க கூட வந்திட்றிங்களா?. நீங்க அம்மா நான் எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்..” என்று கண்களில் ஆர்வத்தோடு கேட்க,
“நிஜமாவா பேபி?!.. நான் உங்க கூட வந்திடவா.! நான் உங்க கூட வந்தா உனக்கு ஓகே வா?..! என்று எதிர்பார்ப்போடு விஜய் கேட்க, “நிஜம் தான் சொல்றேன் அங்கிள்? நீங்க எங்க கூட இருந்தால் எனக்கு பயமே இல்லை.. யாரும் பேட் டச் செய்ய மாட்டாங்க.. யாரும் தூக்கிட்டு போனால் சீக்கிரமே என்னை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துருவிங்க..” என்று நேத்ரா உற்சாகமாக கூற..
“பேபி கேட்டு நான் மறுப்பேனா?.. கண்டிப்பாக நாம எல்லாரும் ஒண்ணா இருப்போம்..” என்று விஜய் உறுதி கூற, நேத்ராவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.. ஐ நாம எல்லாரும் ஒண்ணா இருக்க போறோம்..” என்று விஜய்க்கு ஹைபை கொடுக்க பதிலுக்கு தானும் ஹைபை கொடுத்த விஜய் “அப்பறம் பேபி இப்போ நாம எல்லாரும் சேர்ந்து இருக்கிறதை பத்தி பேசினது அம்மாக்கிட்ட சொல்ல கூடாது..” என்று கூற
“ஏன் அங்கிள்?..” நேத்ரா குழப்பமாக கேட்க “ஒரு நாள் அம்மா நமக்கு இதை சர்ப்ரைஸா சொல்லுவாங்க.. நமக்கு இந்த விசயம் முன்னாடி தெரியும் என்று அம்மாக்கு தெரிஞ்சா நம்ம கிட்ட இதை சொல்லவே மாட்டாங்க.. சோ அம்மா நம்ம கிட்ட நம்ம சொல்ற வரைக்கும் இது தெரியாத மாதிரி சீக்ரெட்டா வச்சிப்போம்..
ஒரு நாள் அம்மா உன்கிட்ட வந்து நம்ம எல்லாரும் சேர்ந்து இருக்கலாம் சொல்லுவாங்கள்ல அப்போ அம்மாவை நம்ம சர்ப்ரைஸ் செய்வோம்..” என்று குழந்தையிடம் ஒப்பந்தம் போட நேத்ராவிற்கு ஒரே குஷியானது.. தன் அன்னையை சர்ப்ரைஸ் செய்ய போவதில்.. விஜய்யின் கை பிடித்து அவன் தோள் சாய்ந்த நேத்ரா
“அங்கிள் பசிக்குது..” என்று முகம் சுருக்கி கூற சொல்ல, குழந்தைக்கு உணவு வாங்கி கொடுத்த பிறகே மருத்துவமனை வந்தான்..
எந்த பாதிப்பும் இல்லாமல் தன் முன்னே புன்னகைத்தபடி நின்றிருந்த நேத்ராவை பார்த்த எழிலுக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.. நேத்ராவை தாவி அணைத்து கொண்ட எழில் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு இத்தனை நேரம் தான் அடக்கி வைத்திருந்த தவிப்பை வெளிகாட்ட, நேத்ராவிற்கு மூச்சு முட்டியது..
“ஹேய் ராங்கி ஒரே நாள்ல உன் பாசத்தை காட்டினா குழந்தை எப்படி தாங்குவா?. அவளை விடு பயப்பட்றா பாரு..” என்று விஜய் சிறு அதட்டலாக கூறவும் தான் நிதானம் அடைந்த எழில் தான் பிடித்திருந்த பிடியை தளர்த்தினாள்.. எழில் அருகில் வந்து நேத்ராவை அவளிடம் இருந்து விலக்குவது போல் வந்த விஜய்,
“இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பேபி மேல காட்டின பாசத்தை என்மேல் காட்டி இருந்தால் நான் தாங்கி இருப்பேன்.. பாவம் பேபி சின்ன குழந்தை தான அதான் பயந்துட்டா…” என்று எழில் காதில் குறும்பாக கூற, எழில் அவனை முறைத்து பார்த்தாள்..
“ஹேய் எழில் உன் கன்னம் என்ன இப்படி சிவக்குது..?” சங்கவி குழப்பமாக கேட்க, “அது..அது காய்ச்சல் வர மாதிரி இருக்கு அதனால் இப்படி இருக்கும்..” என்று திக்கி திணறி சமாளித்த எழிலை ஒற்றை கண் சிமிட்டி விஜய் தன் மீசையை நீவி விட்டபடி தன் சிரிப்பை மறைத்தான்..
எழிலின் விழிகள் ஆடவனை முறைத்துப் பார்க்க, அவள் கன்னங்களோ சிவந்து அவளை காட்டி கொடுத்து பெண்ணவளுக்கு எதிரியானது.. இருவரின் ஊடலை பார்த்து கொண்டு இருந்த சுமித்ராவும், மணிகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்து நிறைவாக புன்னகை செய்ய,
அந்த புன்னகையின் ஆயுட்காலத்தை குறைப்பது போல, அம்முவை அந்த அஷ்வின் பார்த்துட்டான்.. இனி அவன் சும்மா இருக்க மாட்டான்.. அம்முவை எப்படியாவது என்கிட்ட இருந்து வாங்க முயற்சி செய்வான்…”
“சோ.?. பேசிக்கொண்டிருந்த எழிலை இடைமறித்து விஜய்யின் குரல் அழுத்தமாக ஒலிக்க
“அதனால் நானும், என் குழந்தையும் இந்த ஊரை விட்டு போறோம்.. என்று எழில் அனைவரின் தலையில் பெரிய கல்லாக போட, சில நொடிகள் அந்த அறையில் மௌனம் மட்டுமே நிலவியது..
“சரி பார்த்து போ.. ராங்கி.. எதாவது உதவி வேணுமின்னா என்னை கேளு..” என்று பதிலுக்கு விஜய்யும் கூற, எழில் அவனை வெற்று பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்..
இமை சிமிட்டும்