Loading

இமை 32

 

 

வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ‌ எழிலிற்கு அவள் வகுப்பு முடிந்து, ஆசிரியர் ஓய்வறைக்கு செல்ல, சங்கவியும் தன் வகுப்பு முடிந்து அங்கு வந்தாள்.., அவளை பார்த்ததும், “கவி..!!” என்றழைத்தபடி எழில் அவள் அருகில் செல்ல, சங்கவி எழிலை கண்டு கொள்ளாமல் முகம் திருப்பி சென்றாள்..

 

 

 

“சங்கவி நில்லு..!!” ‌என்று அவளை நிறுத்திய எழில், அவள் அருகில் வந்து, “நானும் பார்த்துட்டே இருக்கேன் கூப்பிட கூப்பிட கண்டுக்காம போற.. அப்படி என்ன நான் செஞ்சேன்..? என் மேல கோபம் இருந்தால் திட்டி விடு.. இல்லை ரெண்டு அடியாவது போடு..அதை விட்டுவிட்டு யாரோ மாதிரி கடந்து போற?.” என்று எழில் ஆதங்கமாக கேட்க

 

 

 

“நீங்க யாரு?.. நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்?.. என்று கோபமாக கேட்ட சங்கவியை  எழில் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க, அந்த அமைதியே சங்கவிக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்த, “நீங்க எப்பவும் அமைதி தான..? நான் தான் ஓட்டை பானையில் நண்டு போன மாதிரி லொட லொட என்று பேசிட்டே இருக்கேன்.. சின்ன தும்மல் வந்தால் கூட உங்க கிட்ட சொல்றேன்..

 

 

 

ஆனா மேடம் நீங்க உங்களுக்கு கல்யாணம் ஆனதும் சொல்ல மாட்டிங்க.. உங்களுக்கு குழந்தை இருக்ஙிறதையும் சொல்ல மாட்டிங்க.. நான் தான் உங்களை என் பிரண்டா நெனச்சு எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா நீங்க இத்தனை நாளாக என்னை பிரண்டா நினைக்கவே இல்லேல்ல.. 

 

 

 

அதனால தான் எல்லாத்தையும் மறைச்சு உங்களுக்குள்ளே அழுத்தி அமைதியா இருந்துட்டீங்க.. ஃபைன் இப்படியே இருங்க இனி நானும் அப்படியே இருந்துக்கிறேன்..” என்று தன் தோழிக்கு தான் முக்கியமாக இல்லாமல் போனதில் கோபமாக கூறிவிட்டு செல்ல கோபமும் ஆதங்கமுமாக கூறிவிட்டு சென்ற சங்கவியை திகைப்பாக பார்த்த எழில்

 

 

 

“கவி நான் எல்லாமே சொல்றேன்.. ஆனால் ஈவ்னிங்…” என்று ஏதோ சொல்ல வந்த எழிலிடம் கை கூப்பி, “ ஒரு வாரம் முன்னாடியும் இதே தான் சொன்னிங்க அப்பறம் ஆளவே காணோம்.. உங்க குழந்தை ஸ்கூல் வரைக்கும் வந்த பிறகு தான் நீங்க எல்லாம் சொல்றேன் சொல்றிங்க.. அப்படி நடக்காமல் இருந்திருந்தால் இப்பவும் நீங்க அமைதியாக தானே இருந்திருப்பிங்க.. இல்லைங்க மேடம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்..” என்று 

 

 

 

“கவி.. நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்..” என்றுமில்லாத நாளாக இன்று எழில்  தணிந்து வர, “அடேங்கப்பா.!! நாம கோவப்பட்டா மேடம் இறங்கி வராங்களே.. இத்தனை நாள் இது நமக்கு தெரியாம போச்சே..‌” என்று  நினைத்த சங்கவி, “இத்தனை நாள் என்கிட்ட எதுவும் சொல்லாமல் மறைச்சு வச்சாள்ல அதுக்கு பனிஷ்மெண்ட் சாயந்திரம் வரைக்கும் இந்த கோபத்தையே நாம மெயிண்டெயின் செய்வோம்.. என்று விளையாட்டாக நினைத்து, 

 

 

 

“வேண்டாம் எழில் நீங்க எதுவும் என்னிடம் சொல்ல வேண்டாம்..” என்று தனக்குள் சிரித்தபடி எழிலை பார்க்காமல் அறையை விட்டு வெளியே படியில் இறங்கி செல்ல அவளை பின் தொடர்ந்து வந்த எழில் சங்கவியின் கரத்தை பிடிக்க வந்தாள்..  எழில் தன்னை பின் தொடர்வதை உணராத  சங்கவி அங்கிருந்து நகர, சங்கவியை பார்த்தபடி வந்த எழில் கீழே படியை கவனிக்காமல் புடவையில் கால் தடுக்கி  படியில் இருந்து கீழே உருண்டு  அங்கிருந்த கூர்மையான கல்லில் தலை மோதி விழுந்தாள்..

 

 

 

விழுந்த வேகத்தில் தலை நன்றாகவே மோதி ரத்தம் வர, அதிர்ச்சியில் மயங்கி இருந்தாள்.. சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சங்கவி, எழில் அடிபட்டு மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்து நின்றவள் அடுத்த நொடி உதவிக்கு ஆட்களை அழைத்தாள்.. அதற்குள் சத்தம் கேட்டு வந்த விஜய் மயங்கி இருந்த எழிலை கண்டு சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றான்..

 

 

 

கூட்டத்தில் எழுந்த சலசலப்பில் அடுத்த நொடி, தன்னை சுதாரித்துக் கொண்டு “லிட்டில் கேர்ள்..” என்று பதட்டமாக அழைத்தபடி அவளை கையில் ஏந்தி கொண்டு காரை நோக்கி வேகமாக சென்ற விஜய்யிடம், “விஜி அவ அதிர்ச்சியில் மயங்கி இருப்பா முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு பார்ப்போம்.. எழிலிற்கு மயக்கம் தெளியும்..” மகனின் பதட்டத்தை வியப்பாக பார்த்து கொண்டிருந்த சுமித்ரா அவனின் பதட்டத்தை குறைப்பதற்காக இதை சொல்ல

 

 

 

“ம்மா இங்க பாருங்க எவ்வளவு ரத்தம்?.. அதிர்ச்சியில் மயங்கி இருந்தா இந்நேரம் நான் தொட்டதுக்கு என்கிட்ட மயக்கம் தெளிந்து இருப்பா.. இது அடிபட்டதனால வந்த மயக்கம்மா..” என அன்னைக்கு விளக்கியவாறு “இங்க யாருக்காவது கார் ஓட்ட தெரியுமா?..” என கேட்க “எனக்கு தெரியும் சார்…”என்று காவலாளி முன் வந்து நிற்க 

 

 

 

தன் சாவியை அந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் காரை எடுங்க இங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் போங்க..” என்று கட்டளை பிறப்பித்தவன் எழிலை பின் இருக்கையில் படுக்க வைத்து தானும் காரில் ஏறி கொண்டு  எழில் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவன், ரத்தம் வரும் இடத்தில் தன் கைக்குட்டையை வைத்து அழுத்தியபடி சீக்கிரம் போங்க..” என்று உத்தரவிட 

 

 

 

“சார் பிளீஸ் நானும் வர்றேன்..” என்று சங்கவி முன்னிருக்கையில் ஏறி கொள்ள கார் அருகில் இருந்த மருத்துவமனையை 

நோக்கி வேகமாக சென்றது.. வெளியே சென்ற காரையே பார்த்து கொண்டு இருந்த சுமித்ராவிற்கு தங்கள் வருங்கால மருமகள் யார் என்று தெளிவாக தெரிந்து விட்டது.. 

 

 

எழிலின் முகத்தில் இருந்த வடு, அவருக்கு மனதில் உறுத்த.. அடுத்த நொடி “அழகு என்பது மனதில் தான் இருக்கு அது முகத்தில் இல்லை என்று உன் மகனுக்கு சொல்லி கொடுத்து வளர்த்த நீயா அந்த பொண்ணு முகத்தை பார்த்து தயங்கிற..? என்று தன்னையே நிந்தித்து கொண்டு, தெளிவான மனதுடன், தன் கணவருக்கு அழைத்து, 

 

 

“நான் நம்ம மருமகளை கண்டுபிடிச்சிட்டேன்..” என்று அறிவிக்க மறுமுனையில் இருந்த மணிகண்டன், “வாவ் சுமி..!! அதுக்குள்ள மருமகளை கண்டுபிடிச்சிட்டியா..?! என்று வியப்பாக கேட்ட மணிகண்டன்,  “நீ ரொம்ப புத்திசாலி தான்..!! என்று பாராட்டி விட்டு “ஆமா எப்படி கண்டுபிடிச்ச?..”என்று மணிகண்டன் ஆர்வமாக கேட்க, எல்லாம் உங்க பையன் தான் அவனே அறியாமல் நம்ம மருமகளை அடையாளம் காட்டி கொடுத்தான்..” என்ற சுமித்ராவிடம் 

 

 

“சரி நம்ம மருமகளை பார்க்க ஸ்கூலுக்கு வர்றேன்..” என்று இணைப்பை துண்டிக்க போக 

 

 

“ஒரு நிமிஷம் இருங்க.. இப்ப மருமக இங்க ஸ்கூல்ல இல்லை..” என்று கூறி இங்கு பள்ளியில் எழிலுக்கு அடிபட்டதை கூறிவிட்டு, “விஜி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கான்.. அவனுக்கு போன் செஞ்சு எந்த ஹாஸ்பிடல் இருக்கான்னு கேட்கணும்..  நம்ம மருமகளை முதன் முதலாக பார்க்க போகும் போது இப்படியா பார்க்கணும்..” என்று மணிகண்டன் மனம் வருந்த,

 

 

 

“இதெல்லாம் திருஷ்டிங்க எனக்கு தெரிஞ்சு இதோட எல்லாம் சரியாகிவிடும் எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்று உறுதியாக சுமித்ரா கூற, “அப்படி நடந்தால் அதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு..” என்ற மணிகண்டன், விஜய்க்கு போன் செஞ்சு எந்த ஹாஸ்பிடல் கேட்கிறேன் சுமி..” என்று சொல்ல, “ஹாஃபனவர் ஆகட்டும்..‌கூப்பிட்றேன்..” என்று இணைப்பைப் துண்டித்த சுமிதரா “கடவுளே எழிலுக்கு பெரிதாக எதுவும் இருக்க கூடாது..” என்ற வேண்டுதலுடன் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்..

 

 

 

இங்கு காரில்  எழிலை தன் மடியில் தாங்கி இருந்த விஜய் “உனக்கு ஒண்ணும் இல்லை லிட்டில் கேர்ள்.. இதோ ஹாஸ்பிடல் வந்துட்டோம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ லிட்டில் கேர்ள்..” மயக்கத்தில் இருந்த எழிலிடம் பேசிக்கொண்டே வந்த விஜய்யை முன்னிருக்கையில் இருந்த எழில் வியப்பாக திரும்பி பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த வேதனையின் சாயல் கண்டு திகைத்தாள்..

 

 

 

“சார்.. அவளுக்கு ஒண்ணும் இல்லை.. நீங்க தைரியமா இருங்க. என்று சமாதானம் செய்தவளை நிமிர்ந்து பார்த்த விஜய், “இதுக்கு முன்னாடியும் இவளுக்கு இப்படி தான் ஒரு விபத்து அப்போ நான் அவ பக்கத்துல இல்லை.. என்னால அவளை காப்பாத்த முடியல.. ஆனா இப்போ அவ பக்கத்துல தான் நான் இருந்தேன் இப்பவும் என்னால அவளை காப்பாத்த முடியல.. இதோ அடிபட்டு மயங்கி கிடக்கிறா..” என வருத்தமாக சொல்ல 

 

 

 

விஜய் பேசுவதை கேட்டிருந்த சங்கவி “எல்லாம் என்னால தான் சார்.. என்னோட விளையாட்டான கோபத்தால தான் எழிலுக்கு இப்படி அடிப்பட வைத்திருச்சு..” என்று தானும் வருத்தமாக கூறி கொண்டு இருக்கும் போதே மருத்துவமனை வந்துவிட, 

 

 

 

“சார் ஹாஸ்பிடல் வந்துட்டோம். நான் ஸ்ட்ரக்சர் எடுத்துட்டு வர சொல்றேன்..” இன்று சங்கவி பின்னிருக்கையில் திரும்பி பார்க்க அங்கு இருக்கை வெறுமையாக இருக்க சங்கவி திகைத்து காரில் இருந்து இறங்க விஜய்யை தேடா, விஜய் எழில் தூக்கிக்கொண்டு எப்போதோ மருத்துவமனை உள்ளே சென்று இருந்தான்.. விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையும், அவனுக்கு, எழில் மீதான காதலை பறைசாற்ற சங்கவிக்கு பெரும் சந்தோஷமாகவும் நிம்மதியாக இருந்தது..

 

 

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எழிலை மருத்துவர் பரிசோதித்து கொண்டிருக்க “சார்  அடிபட்டு ரொம்ப நேரம் ஆச்சு.. இன்னும் மயக்கம் தெளியாம இருக்கா.. இங்க பாருங்க இரத்தம் எவ்வளவு வந்திருக்குன்னு..  அது என்ன என்று சீக்கிரம் பாருங்க.. என்ன நீங்க இவ்வளவு மெதுவா பாத்துட்டு இருக்கீங்க..”  என்று சத்தம் போட..

 

 

 

“சார் கொஞ்சம் பொறுங்க சார் இவங்களுக்கு என்ன கை கால்ல சிராய்ப்பா ஏற்படாடிருக்கு மேலோட்டமாக பார்த்து டிஞ்சர் மட்டும் போட்டு அனுப்பி விட.., இவங்களுக்கு தலையில் அடிபட்டுருக்கு.. ஸ்கேன் செய்து பார்க்கணும்.. நீங்க கொஞ்சம் வெளியே நில்லுங்க..” என்று மருத்துவர் எழிலிற்கு அடிபட்ட இடத்தை ஆராய்ந்த படி சொல்ல, 

 

 

 

அவர் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த விஜய் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அமைதியாக வெளியே வந்து நின்றாலும் அவனுக்கு நிலைகொள்ள வில்லை.. அவன் தவிப்பை பார்த்த சங்கவி

 

 

 

“சார்..” என்று விஜய்யை சமாதானம் செய்வதற்கு ஏதோ பேச வர, “பிளீஸ் எதுவும் பேசாதிங்க.. நான் உங்க மேல கோபத்தில் இருக்கேன்..” என்று அவள் பேச்சை இடைநிறுத்த அவள் அமைதியாக நின்றாள்..

 

 

 

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், “அவங்களுக்கு  பெரிய அடி எதுவும் இல்லை.. அதே சமயம் சின்ன அடியும் இல்லை காயத்தில் ரெண்டு தையல் போட்டிருக்கோம்..  பயம் எதுவும் இல்லை ஆனால் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டா பெட்டர்.. சோ ஸ்கேன் செஞ்சிருக்கோம் ரிப்போர்ட் வர ஒன் ஹவர் ஆகும் வெய்ட் செய்ங்க..” என்று கூறிவிட்டு  செல்ல

 

 

 

“இந்த டாக்டர் ரொம்ப தலைக்கனம் பிடிச்சவரா இருக்கார்.. ஆனால் நேர்மையாக இருக்கார் அதான் போனால் போகட்டும் விட்றேன்..” என்று மனதில் கருவியபடி நின்றிருக்க

 

 

“சார் அவங்க மயக்கம் தெளிஞ்சிட்டாங்க நீங்க போய் பார்க்கலாம்..” என்று செவிலி வந்து சொல்ல, விஜய் அவசரமாக உள்ளே சென்றவன், அறைக்கு வெளியே தவிப்புடன் நின்றிருந்த சங்கவியை பார்த்து நீங்களும் வாங்க சிஸ்டர்..” என்று அழைக்க.. சங்கவி உள்ளே வர, எழில் பார்வை விஜய் மீது தான் நிலைத்து இருந்தது..

 

 

“லிட்டில் கேர்ள்.. உனக்கு ஒண்ணும் இல்லை.. ரொம்ப வலிக்குதா?.. எல்லாம் சரியாகிடும்.. காயம் ஒரு வாரத்தில் சரியாகும் டாக்டர் சொன்னாங்க.. ரொம்ப வலிச்சா என்கிட்ட சொல்லிடு லிட்டில் கேர்ள் நாம வேற பெரிய ஹாஸ்பிடல் போகலாம்..” என்று குரலில் தவிப்புடன் கூறி கொண்டு இருந்த விஜயை இமைக்காமல் பார்த்த எழில்,

 

 

“இந்த தவிப்பான குரலை சில வருடங்களுக்கு முன்னாடி நான் கேட்டிருக்கேன்.. நான் கன்னியாகுமரி ஹாஸ்பிடல் இருந்த போது நீங்க தானே என் பக்கத்தில் இருந்திங்க?.. என்று அழுத்தமாக கேட்க, விஜய் திடுக்கிட்டு தன் ராங்கியை பார்த்தபடி நின்றி

ருந்தான்..

 

 

இமை சிமிட்டும்

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்