Loading

இமை 29

 

விஜய் அந்த சந்தீப்பை மிரட்டி அனுப்பினாலும், தான் வேலைக்கு சென்ற பிறகு மீண்டும் வந்து குழந்தையை தொல்லை செய்வானோ?. என்று யோசனை செய்து கொண்டு இருந்த எழிலிற்கு அவன் வீட்டை காலி செய்தது நிம்மதியாக இருந்தாலும், 

 

 

 

அடுத்து இங்கே யார் புதிதாக வர போகிறார்களோ..?! அவர்களால் குழந்தைக்கு ஆபத்து வருமோ?.” என்று எழில் மனம் நிலையில்லாமல் தவிக்க, வேணியிடம் இங்கு புதிதாக குடி வந்திருப்பவர்களை பற்றி யார் என்று நன்றாக விசாரிக்க வேண்டும், இல்லை என்றால் தான் வேறு சிறந்த பாதுகாப்பு உள்ள அப்பார்ட்மெண்ட் எதாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி நேத்ராவிற்கு உணவை ஊட்டி கொண்டு இருக்க  வெளியே சத்தம் கேட்டது..

 

 

“ஐ சாக்லேட் அங்கிள்!!..” என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டே எழில் தடுப்பதற்குள்  நேத்ரா வெளியே ஓடி வர, அவள் பின்னே வந்த எழில்,  விஜய்யை பார்த்ததும் “இந்த நேரத்தில் இவங்க எங்க?. என்று கேள்வியோடு அவனை பார்க்க “நான் தான் பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கேன் என்றபடி கையில் பால் டம்ளரோடு நின்றிருந்த விஜய்யை, நேத்ரா சந்தோஷமாக பார்க்க, எழில் ஆழ் மனதில் அவளே அறியாமல் நிம்மதி எழுந்தது.. 

 

 

 

“அங்கிள் நிஜமாவே நீங்க இங்க பக்கத்துல வந்துட்டீங்களா?!.. அப்ப எங்க அந்த ஸ்வேதா அங்கிள் இல்லையா..?” என்று நேத்ரா சந்தோஷமாக கேட்க, “ஆமா பேபி நான் தான் வந்து இருக்கேன்..” என்று விஜய் நேத்ராவிடம் கூற “அப்போ நான் தினமும் உங்களை பார்க்கலாமா?. என நேத்ரா கண்களில் ஆர்வம் மின்ன கேட்க “ஓ தினமும் பார்க்கலாம்..!! தினமும் நம்ம விளையாடலாம்!! என்று நேத்ராவின் மகிழ்ச்சியை ரசித்தவாறே பதில் கூறிய விஜய் தான் கொண்டு வந்த பாலை நேத்ராவிடம் கொடுத்தான்..

 

 

 

“சூடா இருக்கு அங்கிள்..! என்று நேத்ரா கூற, “அச்சோ பால் காய்ச்சினதும், முதல்ல இங்க தான் எடுத்துட்டு வந்தேனா.. அதான் சூடா இருக்கும் போல” என்று நேத்ராவிடம் கூறி விட்டு, “வேணி அக்கா இந்த பாலை ஆத்தி கொண்டு வாங்க..” என்றபடி அந்த பாலை வேணியிடம் கொடுத்தவன், “அப்பறம் வேணி அக்கா இன்னைக்கு மதியம் சாப்பாடு நம்ம வீட்ல தான்.. சோ மதியம் சாப்பாடு செய்யாதிங்க..” என்று சொல்ல

 

 

“யார் வீட்டு சாப்பாடும் எங்களுக்கு வேண்டாம்..” இத்தனை நேரம் அமைதியாக இருந்த எழில் மறுக்க, “அப்போ அங்கிள் நம்ம வீட்டுக்கு சாப்பிட வரட்டும் மா..” என்று நேத்ரா சட்டென்று கூற, எழிலிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க, விஜய் நமட்டு சிரிப்புடன் “சோ ஸ்வீட் பேபி..” என்று மனதில் கொஞ்சி கொண்டு எழிலை புருவம் உயர்த்தி கேலியாக பார்க்க

 

 

 

“அம்மு அங்கிளுக்கு நான் செய்ற சாப்பாடு பிடிக்குமோ என்னவோ?.. அவங்க அவங்க வீட்டில் சாப்பிடட்டும்..” என்று ஏதோ காரணம் சொல்லி சமாளிக்க “சாப்பிட்டு பார்த்தா தானே தெரியும் பேபி.. சாப்பாடு நல்லா இருக்குமா?. இல்லையா என்று.. அம்மா சாப்பாடு தராமலேயே நல்லா இருக்காது என்று சொல்றாங்க.. ஒரு வேளை அம்மாவோட சாப்பாடு நிஜமாகவே நல்லா இருக்காதோ.. அதான் ஏதோ காரணம் சொல்லி சமாளிக்கிறாங்க போல..” என்று எப்போதும் போல எழில் வீம்பை தூண்டி விட

 

 

“ம் கூம் வாய் திறக்கவே கூடாது.. என்னை தூண்டி விட்டு, என்னை சம்மதம் சொல்ல வச்சிருவாங்க..” என்று அவளே உணராமல் விஜய்யை பற்றி அறிந்து கொள்ள தொடங்கி இருந்தாள் 

 

 

“நோ அங்கிள் அம்மா சூப்பரா சமைப்பாங்க..” என்ற நேத்ரா, “ம்மா நீங்க பெப்பர் சிக்கன் சூப்பரா செய்விங்கள்ல.. அப்பறம் மட்டன் கோலா உருண்டை சூப்பரா இருக்கும்ல.. அதெல்லாம் அங்கிளுக்கு செஞ்சு தாங்கம்மா.. அங்கிளுக்கு ரொம்ப பிடிக்கும்..” விவரம் அறியாத குழந்தை அவள் அறியாமல் விஜய்க்கு உதவி செய்ய, சிறு முறுவலுடன் நேத்ராவின் பேச்சை ரசித்திருந்த விஜய்,  “சரி என்று சொல்றாளா பாரு ராட்சசி!!” மனதில் அவளை திட்டி கொண்டு இருக்க 

 

 

 

“ம்மா நமக்கு அங்கிள் எவ்வளவு ஹெல்ப் செஞ்சிருக்காங்க.. நீங்க அங்கிளுக்கு தேங்க் பண்ணவே இல்லை தான..” என்று கேட்க எழிலிற்கு முகத்தில் அறைந்தார் போல் இருந்தது நேத்ராவின் பேச்சு..‌ சின்ன குழந்தைக்கு தெரிந்த பண்பு கூட தனக்கு தெரியவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டாள்.. ஆம் பார்த்த நாட்களில் இருந்து தங்களுக்கு உதவி செய்தவனிடம் முறையாக நன்றி கூறாமல் முகம் திருப்பி சென்றதை நினைத்து எழில் மனம் குன்றினாள்.. தன் தவற்றை சரிசெய்வதற்காக 

 

 

 

“சரி அம்மு அங்கிள் இன்னைக்கு இங்க சாப்பிடட்டும்..” என்று ஒத்து கொள்ள, “ஹேய் ஜாலி!! ஜாலி!!.” என்று குதித்த நேத்ரா விஜய்க்கு ஹைபை கொடுக்க.. பதிலுக்கு விஜய்யும் ஹைபை செய்தான்.. இப்போ மூணு பேரும் ஹைபை செய்யலாம்.. அம்மா நீங்களும்..” என்று நேத்ரா எழிலிடம் கை நீட்ட ஒரு பெருமூச்சுடன் எழில் தன் கையை கொடுக்க மூவரும் ஹைபை கொடுத்தனர்..

 

 

 

எழில் வேணியை கடைக்கு அனுப்ப, “இல்லை வேண்டாம் நானும், பேபியும் வாங்கிட்டு வர்றோம் என்ன வேண்டும் என்று லிஸ்ட் எழுதி கொடு ராங்கி..” என்று உரிமையாக கூறிய விஜய்யை எழில் திகைத்துப் பார்த்தாள்.. அவனுக்கு வேலை செய்யவே நிறைய ஆட்கள் இருக்க இவன் தங்களுக்கு கடைக்கு செல்வது மனம் ஒப்பவில்லை.. அவள் தான் அவனின் உயரம் பற்றி நன்கு அறிவாளே.. 

 

 

 

அவன் கடைக்கு செல்வதா?.. என்று நினைத்தவள், குழந்தை முன் அதை சொல்ல முடியாமல், “இல்லை வேணி அக்கா கிட்ட..” என்ற மறுத்த எழிலை இடைமறித்து “நானும், அங்கிளும் கடைக்கு போயிட்டு வர்றோம்மா நான் கடைக்கு போனதே இல்லை.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..” என்று நேத்ரா ஏக்கமாக கூற, அதற்கு மேல் எழிலுக்கும் மறுக்க முடியவில்லை..

 

 

 

“நான் லிஸ்ட் எழுதி தர்றேன்” என்றபடி வீட்டிற்குள் செல்ல, எழில் சொல்வதையே பார்த்தபடி நின்றிருந்த விஜய் அவள் உள்ளே சென்று மறைந்ததும், “பேபி..!! மை பேபி..!! அங்கிளுக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்க தெரியுமா?.. என்று சந்தோஷமாக கூறியவன் “லவ் யூ பட்டு குட்டி..” என்று கொஞ்சியபடி நேத்ராவை தூக்கி சுற்ற, 

 

 

 

விஜய்யின் பேச்சு புரியவில்லை என்றாலும் அவன் தன்னை தூக்கி சுற்றியதில்  நேத்ரா உற்சாகமாக சிரிக்க, நேத்ராவின் சிரிப்பு சத்தம் உள்ளே இருந்த எழிலுக்கும் கேட்க, வெளியே வந்து எட்டிப் பார்த்தவள், சூரியகாந்தி பூ போல் மலர்ந்து சிரித்து கொண்டிருந்த நேத்ராவை பார்த்து அவள் முகமும் தானாக மலர்ந்தது.. சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு லிஸ்ட்டை எழுதி வந்த விஜய்யிடம் கொடுத்தவள் விஜய் அதை வாசித்துக் கொண்டிருக்க 

 

 

 

“உங்க கூட வருவாங்களே உங்க பிரெண்ட்ஸ் அவங்களையும் கூட கூப்பிடுங்க..” என்று பார்வை எங்கோ திருப்பிக் கொண்டு கூறிய எழிலை வியப்பாக பார்த்த விஜய் பரவாயில்லையே மேடம் மெல்ல மெல்ல மாறிட்டு வராங்க போல என தனக்குள் சொல்லியபடி “இல்லை அவங்க வர மாட்டாங்க..  அவங்க ரொம்ப பிஸி..” என்று நால்வரையும் கழட்டி விட முயல,

 

 

 

“நாங்க எப்போ அப்படி சொன்னோம்.. எவ்வளவு பிஸினாலும் நீ கூப்பிட்டு நாங்கள் வராமல் இருப்போமா?..” என்று கேட்டபடி பக்கத்து வீட்டில் இருந்து நால்வரும் வர, போச்சுடா..” என்று புலம்பியவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து கொள்ள, ஓ நாங்க வந்தது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா?..” என்று வெண்பாவும், மலரும் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து பார்த்தபடி கேட்க

 

 

 

“ஹி..ஹி இல்லையே சிஸ்டரஸ்… நீங்க இல்லாமல் நான் எப்படி தனியாக சாப்பிடுவேன்.. நானே உங்களை கூப்பிடணும் நினச்சிட்டு இருந்தேன்..” என்று சமாளிக்க, ஹான் அது அந்த பயம் இருக்கணும்..” என்று மிரட்ட, மனைவி பதவியை விட சிஸ்டரஸ் பதவி ரொம்ப பவர்ஃபுல் மச்சி இது தெரியாமல் வாய விடலாமா?.. என்று ஷக்தி கேலி செய்ய 

 

 

நால்வரும் ஒருவருக்கொருவர் கேலி பேசிக் கொள்ள, எழிலிற்கு இவர்களை பார்க்க வியப்பாக இருந்தது.. அதிலும் சக்தியும், விதுரனும் மனைவியின் பேச்சை ரசித்துப் பார்த்தபடி அவர்களுக்கு பரிந்து பேசி சிரித்துக் கொண்டிருப்பது பார்க்க எழிலுக்கு வியப்பு அதிகமானது..

 

 

 

இது போல் எல்லாம் அஷ்வின் தன்னை   வேறு ஒரு ஆணிடம் பேச அனுமதித்தது இல்லை என்பதை சிறு விரக்தி புன்னகையுடன் நினைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.. அப்போது அது அதீத அன்பாக தெரிந்த விசயம், இப்போது நினைத்து பார்க்கும் போது தன் மீது நம்பிக்கை இல்லாமல் தடுத்தது தெரிந்தது.., “மேடம் நீங்க சொல்லுங்க நாங்க சொன்னது சரிதானே?..” என்று மலர் சிந்தனையில் இருந்த எழிலிடம் ஏதோ கேட்க, தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட எழில், “என்ன சொன்னிங்க?..” என்று புரியாமல் கேட்க, 

 

 

“இது எங்க மேடம் வீடு.. நாங்க எப்போ வேண்டுமானாலும் வருவோம், போவோம் என்று சொன்னோம்.. அப்படி சொல்லலாம் தானே மேடம்..” வெண்பா சொல்ல, “நோ இது என் வீடு.. நான் தான் யார் வரணும் போகணும் என்று சொல்லுவேன் உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை..” என்று திட்டவட்டமாக மறுக்க நினைத்து எழிலிற்கு 

 

 

 

ஏனோ அவர்களிடம் அதை கூற மனம் வரவில்லை.. இவர்கள் தன்னை அன்பு என்னும் கயிறு கொண்டு கட்டி வைக்க நினைப்பது நன்றாக புரிந்து கொண்டு, பெண்களிடம் முகம் திருப்ப முடியாமல் “நான் மேடம் இல்லை எழில் மதி.. பேர் சொல்லியே கூப்பிடுங்க..” என்று அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஒன்றை கூறியவள்

 

 

 

“நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம் போகலாம்..” என்று அனுமதி கொடுக்க, விஜய் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.. “சரி நானும் பேபியும் கடைக்கு போய்ட்டு வர்றோம்..” என்று விஜய் நேத்ராவை அழைத்து செல்ல, அப்போ நாங்க என்ன செய்றது?.. நாங்களும் வர்றோம் என்று ஷக்தியும்,  விதுரனும் விஜய் கூட செல்ல,

 

 

 

“இந்தாங்க பணம்..” என்று எழில் விஜய்யிடம் கொடுக்க, விஜய் ஒரு நொடி எழில் முகத்தை ஆழ்ந்து பார்க்க அவள் முகத்தில் இருந்த பிடிவாதத்தில், பணத்தை வாங்கி கொண்ட விஜய், “இது எல்லாத்துக்கும் பதில் கொடுப்பேன் ராங்கி..” மனதில் சொல்லி கொண்டு வெளியே செல்ல 

 

 

 

“வாங்க மேடம் நம்ம போய் சமையலுக்கான வேலை பார்ப்போம்..” என்று மலரும் வெண்பாவும் வீட்டில் உள்ளே செல்ல, “நீங்க கெஸ்ட் நான் தான் உங்களை கவனிக்கணும்..” என்று எழில் அவர்களை தள்ளி நிறுத்த தோன்றாமல் தானும் உள்ளே சென்றாள்.. கடைக்கு சென்ற ஆண்கள் திரும்பி வந்ததும், சமையல் அறை கலை கட்டியது.. 

 

 

 

ஞாயிற்றுக்கிழமை ஆனால் சமைப்பதாக கூறி தன் தங்கையுடன் சேர்ந்து, சமையலறையை களேபரம் செய்து தன் அன்னையிடம் வாங்கிய வசவுகள்  மனதில் வலம் வர கலங்கிய கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு வேலையை தொடர்ந்தாள்.., 

 

 

வெங்காயத்தை வெட்டும் போது கண்கலங்க கூடாதென்று

வெங்காயமே வேண்டாம் கண்ணே

நான் அதை உரித்திடுவேன்..!!” 

 

 

என்று பாடிக்கொண்டே எழில் வைத்திருந்த வெங்காயத்தை தான் வாங்கி சில நிமிடங்களில் உரித்து அதை நறுக்கி எழிலிடம் கொடுத்தான்..  நிஜமாகவே ராங்கி நீ வெங்காயம் வெட்டும் போது கூட கண்கலங்கி னா என்னால தாங்க முடியாது.. சோ நோ கிரை கண்ணை துடை..” என்று கூறி விட்டு செல்ல, என் கண்ணீரை பார்க்க முடியலையா?இந்த ஹோட்டல்காருக்கு..” என்று நெகிழ்ந்த மனதை இறுக்கி பிடித்தவள் மீண்டும் தன்னை இறுக்கி கொண்டாள்..

 

 

 

நேத்ரா கேட்டது போல் சமையல் செய்து முடித்துவிட்டு அனைவரையும் உண்ண அழைக்க, அவர்கள் எழிலையும் உண்ண அழைத்தனர்.. “இப்படி உன் முகத்தை பார்த்த பிறகு எப்படி சாப்பிட்றது..? முதல்லே இங்க இருந்து போ..” எப்போதோ எரிந்து விழுந்த அஷ்வின் கடுமையான குரல் காதில் கேட்டது.. 

 

 

 

“மாப்பிள்ளைக்கு தான் நீ இங்க நிக்கிறது பிடிக்கலேல எழில் அப்பறமா ஏன் இங்கே நிக்கிற?.. உன் ரூமுக்கு போ.. அவர் போன பிறகு நீ வா..” அன்னை சிவகாமியின் நெருப்பை அள்ளி கொட்டிய வார்த்தை இப்போதும் அவளை எரிய செய்வதாய்.. எழில் முகம் கன்றி கருத்தது..

 

 

சிறிது நேரம் முன்பு இயல்பாக இருந்த எழில் திடீரென முகம் மாறுவதை உணர்ந்து,  பழைய விசயங்கள் ஏதோ நினைக்கிறா போல’ என்று யூகித்த விஜய் அவளை மாற்றும் பொருட்டு நெற்றியில் மென்மையாக ஊதி விட்டவன் அவள் பார்க்கும் முன் அங்கிருந்து சென்றுவிட்டான் 

 

 

 

திடீரென்று நெற்றி ஓரத்தில் ஏதோ குறுகுறுக்க சட்டென்று பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்து திரும்பி பார்க்க விஜய் அங்கிருந்து நகர்ந்து செல்வதை பார்த்தவள், “இந்த ஹோட்டல்கார் என்ன செஞ்சாங்க..? தனக்குள் சந்தேகமாக கேட்டபடி குறுகுறுத்த இடத்தை தொட்டு பார்த்தாள்…

 

 

“அம்மா வாங்க சாப்பிட..” என்று நேத்ரா எழிலின் கரம் பிடித்து அழைத்து விஜய் அருகில் அமர வைத்து விட்டு தான் விஜய்யின் மறுபக்கம் அமர்ந்து கொண்டாள்.. தனக்கு விவரம் அறிந்த நாட்களில் இருந்து இந்த மதிய உணவு நேரம் தான் மனம் நிறைந்து சந்தோஷமாக இருந்த நேரமாக எழில் உணர்ந்தாள்… 

 

 

 

இவங்களால மட்டும் எப்படி இப்படி மனம் நிறைந்து சிரிக்க முடியுது?.. இவங்களுக்கு கவலை ஏதும் இருக்காதா?!.” என்று தன்னை மீறி வியப்பாக நினைத்த எழில், சே ஏன் என் புத்தி இப்படி போகுது?..” என்று தன்னையே நிந்தித்து கொண்டு, “கடவுளே இவங்களுக்கு எந்த துன்பமும் வந்திட கூடாது அப்படி அவங்களுக்கு துன்பம் வந்தாலும் அது எனக்கே வரட்டும்.. இவங்களோட இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்..” என்று மனதார வேண்டி கொண்டாள்.

 

 

 

மத்திய உணவு முடித்து அனைவரும் கிளம்ப, “நிஜமாகவே சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு சிஸ்டர்.. ரெசிபி சொல்லுங்க.. நான் என் ஹோட்டல் செஃப் கிட்ட சொல்லி இதே மாதிரி செய்ய சொல்லணும்..” என்று ஷக்தி பாராட்ட, “சாப்பாடு வேர லெவல் சிஸ்டர்..” என்று விதுரனும் பாராட்டி விட்டு, நேத்ராவிற்கும் விளையாட்டு பொருட்களை பரிசாக கொடுத்து விட்டு 

 

 

 

“அப்போ நாங்க ஊருக்கு கிளம்பறோம்..” என்று ஷக்தியும் விதுரனும் கூற, விஜய் அவர்களை திகைத்து பார்த்து, “என்னடா திடீர்னு சொல்றிங்க?..” என்று கேட்க,  “அடே  நாங்க இங்க வந்து பத்து நாட்கள் தாண்டிருச்சு.. அங்க ஹோட்டல்ல சில ஆல்ட்ரேசன் சொல்லி இருந்தேன் அதை போய் பார்க்கணும்..‌” என்று ஷக்தியும்

 

 

 

“எனக்கு ஒரு புது ப்ராஜெக்ட் இருக்க மச்சி அதையும் பார்க்கணும் என்று விதுரனும் சொல்ல இது விஜய்க்கு முன்பே தெரிந்த விசயம் என்பதால் விஜய் அவர்களை தடுக்கவில்லை.. 

 

 

 

சக்தியும், விதுரனும் எழிலிடம் விடை பெற்று வெளியே நிற்க,  வெண்பாவும் மலரும் எழிலிடம் வந்தவர்கள் “எங்கள பேர் சொல்லி கூப்பிட சொல்லியும் நாங்க உங்களை மேடம் தான் கூப்பிடுறோம் ஏன் தெரியுமா?. நாங்க உங்களை அண்ணி என்று கூப்பிட தான் ஆசைப்படுகிறோம் மூணு மாசத்துல கண்டிப்பா உங்க மனசு மாறும்..  என்று நாங்க இப்ப உறுதியா நம்பறோம்.. 

 

 

 

“எங்க நம்பிக்கைக்கு காரணம் எங்க அண்ணா இல்லை.. நீங்க தான்.. அது ஏன் என்று உங்க கல்யாணம் அன்னிக்கு சொல்றோம்..” என்று கண்சிமிட்டி கூறி விட்டு ”இப்போ நாங்க கிளம்பறோம்.. என்று விடைபெற்று செல்ல,

 

 

“என் மேல என்ன நம்பிக்கை இவங்களுக்கு?..” என்று குழப்பத்தோடு சென்று கொண்டிருந்தவர்களை பார்த்து கொண்டு இருந்தவள் அருகில் வந்த விஜய், 

 

 

“இனி நீ தைரியமாக வேலைக்கு போகலாம் ராங்கி..! பேபியை இனி யாரும் தப்பா நெருங்க முடியாது..” என்று அழுத்தமாக கூறியவனை எழில் திகைத்து பார்த்து கொண்டு இருக்க

 

 

“ஐ லவ் யூ மை லிட்டில் கேர்ள்..!!” என்று கண்சிமிட்டி கூறி விட்டு தன் இல்லம் சென்றவனை விழி அகலா

மல் பார்த்து கொண்டு இருந்தாள்..

 

 

இமை சிமிட்டும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்