Loading

இமை 30

ஆதவன் தன் பணி முடிந்து ஓய்வெடுக்க செல்ல, தன் பணியைத் தொடங்க வானில் உலா வந்தாள் நிலவு பெண்.. இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்க வந்த எழிலிற்கு, நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவிங்க.” என்று மலரும், வெண்பாவும் பேசியதே எழில் மனதை வண்டாக குடைந்து கொண்டு இருந்தது..

“ஒரு நேரம் சாப்பாடு சமைச்சு போட்டதில் என் மனசு மாறிடுச்சு என்று இவங்க நினைச்சிட்டாங்களா?.. இது அந்த ஹோட்டல்காருக்கு நன்றி சொல்றதுக்காக தான் செஞ்சேன் என்று இவங்களுக்கு புரியல.. மூணு மாசம் இல்லை, மூணு வருஷம் ஆனாலும் என் மனசு மாறாது.. ஏமாற போறாங்க பாவம்..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அவர்களுக்காக அனுதாபம் கொண்டவள்,  

எல்லாரும் அருவருப்பாக பார்க்கும் என் முகத்தில் இருக்கிற வடு  இவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா..!? நான் மறுத்தும் இவ்வளவு பிடிவாதம் ஏன் இவங்களுக்கு.. என் மேல இரக்கமா??. இவங்க வீட்டில் என்னை எப்படி ஏத்துப்பாங்க.. அதை பத்தி கொஞ்சம் கூட பொருட்படுத்தாம இருக்காங்களே..” என்று தன் மறுத்ததை மறந்து இப்போது விஜய்யின் பெற்றோர் சம்மதம் பற்றி எழில் யோசித்து கொண்டு இருந்தாள்.. “ம்மாஆ..!!” நேத்ராவின் அழைப்பில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டு, “இதோ வர்றேன் அம்மு..” உறங்க சென்றாள்.

இங்கு மொட்டை மாடியில் காற்று சில்லென்று வீச, கட்டில் ஒன்றை போட்டு அதில் இரு கரங்களை தலைக்கு அடியில் வைத்து, கால்மேல் கால் போட்டு கொண்டு கால் ஆட்டியபடி படுத்திருந்த விஜய் முகம் மந்தகாசமாக மின்னி கொண்டு இருந்தது..

“ராங்கி எப்போ நீ சம்மதம் சொல்லுவ?.. இதோ இந்த கட்டில்ல இந்த பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் என் ஒரு பக்கத்தில் நீ மற்றோர் பக்கத்தில் நேத்ரா பேபியும் இருக்கணும் என்று என் மனம் ரொம்ப ஏக்கமாக இருக்கே.. ஏன் ராங்கி என்னை மறுக்கிற?.. உன்னை பத்தி பாதி தான் தெரியும்..  

நீ சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கலாம் என்று நினைச்சேன்.. ஆனால் உன்னை பத்தி முழுதாக தெரிந்த பின்னாடி தான் இன்னும் உன்னை நெருங்க முடியும் போல தோணுது..” என்று தனக்குள் சிந்தித்து கொண்டு இருந்த விஜய்யின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்த, அவனின் அன்னை சுமித்ரா தான் அழைத்திருந்தார்..

“ஹாலோ அங்க விஜய் சார் இருக்காங்களா?.. வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு நாள் ஆச்சு.. கேட்டா வேலை வேலை என்று சொல்லிட்டே இருக்கான்.. ஒருவேளை ஹோட்டலை தலைகீழாக மாத்தி வைக்க போறானோ என்று தெரியல அதான் உங்களுக்கு கால் செஞ்சேன்..” என்று அன்னையின் நக்கல் பேச்சில் தனக்குள் சிரித்த விஜய்

“மை ஸ்வீட் சுமி.. நான் இங்க உங்க வருங்கால மருமகளை பார்க்க வந்திருக்கேன்..  ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திருவேன்..‌” என்று தன் அன்னையை சமாதானம் செய்து கொண்டு இருந்தான் விஜய்.. “அடேய் கண்ணா.! சொல்லவே இல்ல..நீ எங்க மருமக வீட்டுக்கு போறேன்னு சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம் இல்ல..” என்று ஆதங்கபட

“வந்து எங்களையும் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போடா..!”என்று ஆர்வமாக சொல்ல, ”ஹ்க்கும் என்னையவே உங்க மருமக வீட்டுக்குள்ள விட யோசிக்கிறா அப்புறம் உங்களை எப்படி நான் கூட்டிட்டு போறது..?  முதல்ல நான் அங்க சுமூகமாக போய் பழகிக்கிறேன் அப்புறமா உங்களை கூட்டிட்டு போறேன்..” என்று சமாதானம் செய்ய

“ஹ்க்கும் மருமகள் மட்டும்தான் சொல்ற அவளை எங்க கண்ணிலேயே காட்ட மாட்டேங்குறியே..” என்று ஆதங்கமாக சுமித்ரா விஜயிடம் கூற “ம்மா அந்த ராங்கி மட்டும் சம்மதம் சொல்லட்டும் அடுத்த நிமிசம் அவளை உங்க முன்னாடி நிப்பாடறேன்..” என்று விஜய் உறுதி அளிக்க, “அது என்னடா ராங்கி?.. என் மருமகளை ஒழுங்கா பேசு..” என்று சுமித்ரா அதட்ட, “சரி சரி உங்க மருமகளை நான் எதுவும் சொல்லலை..” என்று புன்னகையுடன் சமாதானம் செய்தவன் 

“அப்பறம் அப்பா என்ன செய்றாங்க..? என்று கேட்டு அவரிடமும் நலம் விசாரித்து விட்டு,  “நான் முக்கியமான விசயம் சொல்ல போறேன் மா..” என்று பீடிகை போட, “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு எங்களுக்கே தெரியாம கல்யாணம் ஏதும் பண்ணிக்கிட்டியா?..” என சுமித்ரா விளையாட்டாக கேட்க “சேச்ச அவ்ளோ தைரியமா இருக்கு எனக்கு?. என்ன விஜய்யும் கேலியாக பதில் சொல்ல, “என் மகனடா நீ..!” என்று கேலி செய்த அன்னையை, “ம்மா போதும் நான் ஸ்டாப்பா  போய்ட்டே இருக்கு..” என்றவன் 

“ஒரு முக்கியமான விஷயம்னு சொல்றேன் கொஞ்சமாவது சீரியஸ்ஸா கேட்கிறிங்களா?.. உங்க மகனோட காதல் போராட்டத்தில் உங்களுக்கும் கொஞ்சம் பங்ககு இருக்கணும் என்று என் அடி மனசு சொல்லிக்கிட்டே இருக்கு.. அதை பத்தி பேச வந்தா, நீங்க கேலி பண்ணிட்டு இருக்கீங்களே..” என்று போலியாக அலுத்து கொள்ள, “சரி சரிடா அழாத நீ  ஏதோ உதவி என்று கேட்கிற.. போனா போகுது செய்றேன்.. சொல்லுடா நான் என்ன செய்யணும்?.. என்று பெரிய மனதாக ஒத்துக்கொள்ள, 

“அது வந்து சுமி..” என்ற விஜய் ஒரு சில விஷயங்களை  கூறியவன், “ ஒரு மூணு மாசம் மட்டும் இது செய்ங்கம்மா.. நான் நாளைக்கு வந்து நேர்ல சொல்லலாம் நினச்சேன்..‌ ஆனா நீங்க இப்போ பேசவும் சொல்லிட்டேன்..” என்று விஜய்யிடம், “நீ என்னமோ தில்லுமுல்லு செய்ற என்று நினைக்கிறேன்டா.. ஆனால் அது நல்லதுக்காக தான் இருக்கும் என்று நம்பி நான் நீ சொன்னதை செய்றேன்..” என்று சொல்ல

“விஜி அம்மாக்கு ஒரு வேலை கொடுத்திட்ட.. எனக்கு எதுவும் தரலயே..” என்று மணிகண்டன் அப்பாவியாக கேட்க, “அப்பா நான் சொல்றத அம்மா சரியா செய்கிறார்களா என்பதை நீங்கள் கவனிக்கணும்..‌”என்று விளையாட்டாக கூறியவன், இப்போ இது அம்மா ரோல் அடுத்து போக போக அப்பா கதாபாத்திரம் தேவைப்பட்டால் உங்கள கூப்பிடுறேன்.. இப்போ தூங்க போறேன் குட்நைட்..” என்று கூறி இணைப்பை துண்டித்த விஜய்க்கு 

தன் காதலை தன் பெற்றோரிடம் கூறிய தினம் நினைவிற்கு வந்தது.. தன் மனம் பற்றி அறிந்த மறு நாளே தன் பெற்றோரிடம் எழிலை காதலிப்பதை சொல்ல, “அப்பாடா?!! எங்களுக்கு ஒரு வேலை மிச்சம்..” நிம்மதி பெருமூச்சு விட்ட தன் பெற்றோரை திகைத்துப் பார்த்த விஜய், “நான் சொன்னதை வச்சு நீங்க ஷாக் ஆகுவிங்க என்று பார்த்தா என்ன இப்படி சொல்லிட்டிங்க..?” என்று திகைப்பு விலகாமல் கேட்க, “வேறு என்ன சொல்லணும்

“ஐயோ எங்க குடும்ப கௌரவத்தை இப்படி காத்துல பறக்க விட்டுட்டியே.. இதுக்கா உன்னை மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்தேன்..” என்று சுமிதரா மூக்கை உறிஞ்சி அழுது காண்பிக்க, விஜய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “சுமி நீங்க ஒரு தெய்வத்தாய்..” என்று கேலியாக பாராட்டியவன் முதுகில் வலிக்காமல் அடித்த சுமித்ராவின் தோள் சாய்ந்த விஜய்யை கனிவாக பார்த்த மணிகண்டன்,

“உன்மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு தம்பி.. சோ பொண்ணு யார் என்ன சொல்லு.. நானும், அம்மாவும் போய் அவுங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசி முடிக்கிறோம்..” என மணிகண்டன் சொல்ல “நானே இப்பதான் இது காதல் என்று உணர ஆரம்பிச்சிருக்கேன்.. முதல்ல உங்க கிட்ட தான் சொல்லிருக்கேன்.. என்னோட காதலை இன்னும் நான் அவ கிட்ட சொல்லலை..”

“நான் அவகிட்ட என் காதலை சொல்லி அவ அதுக்கு சம்மதிச்சு, அதுக்கப்புறம் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட நீங்க பேசுங்க..” விஜய் சொல்ல,  “பொண்ணு யாருடா அட்லீஸ்ட் அவ ஃபோட்டோ இருந்தா காட்டேன்..” என்று சுமித்ரா ஆர்வமாக கேட்க, 

“நோ சுமி.. அவளை நீங்க நேர்லயே பார்த்துக்கோங்க.. இன்னும் ஒரு மூணு மாசம் மட்டும் தான். ஒரு வகையில் உங்களுக்கு அவ  தெரிஞ்ச பொண்ணு தான்.. ஆனால் நான் இப்ப சொல்ல மாட்டேன்..  நூற்றில் ஒரு சதவீதமாக அவள் என்னை ஏத்துக்காம போனால், எப்போதாவது ஒரு வேளை அந்த பெண்ணை பார்க்க நேர்ந்து அவ மேல நீங்க கோவப்பட்டால், மை ஹார்ட் டேமேஜ் ஆகிடும்..” என்று பரிதாபமாக சொல்ல

“ஹ..ஹ.அடேய் கண்ணா உனக்கு இது செட் ஆகலடா.. உன் பிடிவாதத்தை பத்தி எங்களுக்கு தெரியும் டா.. சரி போ..!! அந்த பெண் சம்மதத்தோடு வந்து எங்க கிட்ட ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்குங்க..” என்று மகன் மேல் உள்ள நம்பிக்கையில் அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்..”   

“மை ஸ்வீட் மம்மி… டாடி லவ் யூ லாட்ஸ்..” மனதில் தன் பெற்றோரை கொஞ்சி கொண்டு,

கண்களை மூடி உறங்க முயற்சி செய்ய அவன் இமைகளை மூட விடாமல் இமைகளின் இடையில் எழில் அவனை முறைத்தபடி வந்து நின்றாள்.. லிட்டில் வந்துட்டியா..? முதல்ல அழுகாச்சியாக வந்து நின்ன இப்போ கோபமாக வந்தது நிக்கிற.. நல்ல முன்னேற்றம் தான்.. எப்போ டி என்னை நிம்மதியாக தூங்க விடுவ?..” இப்படி கண்ணுக்குள்ள வந்து இம்சை செய்ற..” என்று செல்லமாக வைது கொண்டிருந்தவனிடம்

மூணு மாசமா  வேண்டும் உங்களுக்கு?.. மூணு மாசம் இல்ல மூணு வருஷம் ஆனாலும் என் மனசை மாத்த முடியாது என கோபமாக கூறிய அடுத்த நொடி.. ஏன்னா நான் தான் என் மனசை எப்பவோ உங்க கிட்ட கொடுத்துட்டேனே.. முடிஞ்சா அதை கண்டுபிடித்து என் காதலை வெளியே கொண்டு வாங்க..” என்று சவால் விட, பட்டென்று கண்களை திறந்தான் விஜய்.. 

விண்ணில் தெரிந்த வெண்ணிலவில் பெண்ணவளின் முகம் தெரிய.. கண் இமைக்காமல் பார்த்தபடி படுத்து கிடந்தான்.. அந்த காதல் போராளி

ஒரு வாரம், தான் எடுத்த விடுப்பு முடிந்து எழில் பள்ளிக்கு சென்றாள்.. இந்த ஒரு வாரமும், விஜய் நேத்ராவிடம் நன்றாக ஒட்டி கொண்டான்.. நேத்ரா பாதி நேரம் விஜய் வீட்டில் தான் இருந்தாள்.. அங்கு ஆர்வமாக செல்லும் குழந்தையை தடுக்க முடியாமல், அவ்வப்போது எழில் விஜய்யை திட்டி கொண்டே இருப்பாள்.. ஆனால் அதை காதில் வாங்கினால் அவன் விஜய் அல்லவே..  

அவன் எப்போதும் போல அவளை வம்பிழுத்து கொண்டு தான் இருந்தான்.. அவள் பேச்சை அலட்சியம் செய்து நேத்ராவை தன்னுடன் அழைத்து கொள்வான்.. 

பள்ளிக்கு வந்த எழில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வர, அவளின் எதிரே வந்து கொண்டிருந்த சங்கவியை பார்த்ததும் முகம் மலர, “ஹேய் கவி..!!” என்று அழைத்தபடி சங்கவியை நெருங்க, சங்கவியோ,  எழில் அழைத்ததை கண்டு கொள்ளாமல் அவளிடமிருந்து விலகி செல்ல, அவளின் விலகலில் சங்கவியை அதிர்ந்து பார்த்த எழில், அவளுக்கு தன் மீது கோபம் என்பதை சற்று தாமதமாக தான் உணர்ந்தாள்..

அச்சோ கவி கோபமாக இருக்காளே அவ கோபத்தை எப்படி சமாளிக்கிறது?. அவளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சற்று திணறி போனாள்..

எழில் மேடம் நம்ம ஸ்கூலுக்கு புது ஹெச் எம் வந்துட்டாங்க.. அவங்க உங்களை கூப்பிட்டாங்க..” என்று பியூன் வந்து சொல்ல, “என்ன புது ஹெச் எம் வந்துட்டாங்களா.. எப்போ?? என்னைக்கு?? என்று சிறு பதட்டத்துடன் கேட்டவாறு தலைமை ஆசிரியர் அறை நோக்கி செல்ல

அவங்க வந்து மூணு நாள் ஆச்சு மேடம்.. டீச்சர்ஸ் எல்லாரும் அறிமுகம் ஆகிட்டாங்க நீங்க தான் லீவ்ல இருந்திங்கள்ல அதான் உங்களுக்கு தெரியல..” என்று எழிலுக்கு பதில் கூறிவிட்டு பியூன் நகர, தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே நின்ற எழில் கதவை தட்டி விட்டு அவரின் அனுமதிக்காக காத்திருக்க..

“எஸ் கம்மின்..” என்று பெண்மணியின் குரல் உள்ளே அழைக்க சிறு புன்னகையுடன் அறைக்குள் வந்த எழில் அங்கு தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்திருந்த சுமித்ராவை பார்த்து, “இவங்க ஹோட்டல்கார் அம்மால்ல..” என்று வியப்பாக நினைத்த எழில், 

“ஹோட்டல்கார் எல்லாம் உங்க வேலையா?..” என்று மனதில் அவனிடம் கோபமாக கேட்டபடி, சுமித்ராவின் முன்னால் வந்து நின்ற எழிலை அவள் முகத்தில் இருந்த வடுவை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த சுமித்ராவின் முக மாற்றத்தை ஒரு கணம் அழுத்தமாக பார்த்த எழில் தன் உணர்வுகளை மறைத்து இறுக்கமாக அவரை பார்த்தபடி

நின்றிருந்தாள்..

இமை சிமிட்டும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்