இமை 27
பள்ளியில் இருந்து வேணியை எழில் வீட்டிற்கு அழைத்து வந்த விஜய், “அவங்க தான் ஸ்வேதா அங்கிள் கிட்ட பயமில்லாமல் பேச முடியும்” என்று நேத்ராவின் அழுகை குரல் கேட்டு, வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்த விஜய் அதிர்ந்து அப்படியே நின்றவன்,
தன்னை சுதாரித்துக் கொண்டு வேணியிடம் திரும்பியவன், “நீங்க இப்போ வீட்டுக்கு கிளம்புங்க.. நாளைக்கு வாங்க..” என்று அனுப்ப, “சார் அது வந்து நான் எழில் மேடத்தை பார்த்து மன்னிப்பு கேட்…” என்ற வேணி விஜய்யின் அழுத்தமான பார்வையில், தன் பேச்சை நிறுத்தி விட்டு “நான் போய்ட்டு நாளைக்கு வரேன் சார்..” திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அங்கிருந்து செல்ல
நேத்ரா அடுத்தடுத்து பேசியதை கேட்ட விஜய்க்கு அந்த முகம் தெரியாத வக்கிரம் பிடித்த மிருகத்தை அணு அணுவாக கொன்று போட கைகள் பரபரத்தது.. பக்கத்து வீட்டை எட்டி பார்க்க, இவன் சட்டென்று ஒரு ஆடவன் முகம் திருப்புவதை கண்டு கொண்டவன் அந்த மிருகம் நீதானா?.. என்று அந்த ஆடவனை பார்த்தபடி, தன் அலைபேசியில் யாரையோ அழைத்தான்..
சில நொடிகள் மறுமுனையில் இருந்த நபரிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் வீட்டினுள் செல்ல அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்த நிலை கண்டு யாருக்கு யார் ஆறுதல் சொல்கிறார்கள் என்று அறிய முடியாதபடி எழில் தான் நேத்ராவை அணைத்து ஆறுதல் தேட நொடியும் தாமதிக்காமல் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.. இனி எந்த துன்பம் என்னை மீறி உங்களை அணுகாது.. என்று வாய்மொழியாக கூறாமல் அவன் அணைப்பில் கூற, பாவம் பெண்ணுக்கு அது புரியவில்லை..
அந்த வக்கிரம் பிடித்த மிருகத்தை பற்றி தன் அம்மாவிடம் கூறிவிட்டதால், அந்த மிருகத்தால் தன் அன்னைக்கு எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி எழிலை இறுக அணைத்து கொண்ட நேத்ரா தான் விஜய்யின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து, “அங்கிள்..!! அந்த ஸ்வேதா அங்கிள் கிட்ட பேசறிங்களா?..” அவங்க என்னை பே..”
“ஷ் பேபி..!! நான் பேசறேன்டா அந்த அங்கிள் கிட்ட நானே பேசறேன்..” என்று அந்த நானே என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறியவனிடம் “அங்கிள் அவர் அம்மாவை அம்மாவை..” என்று பயத்தில் பேச்சு வராமல் உதடு பிதுக்கி அழுத குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு
“இனி உன்னையும், அம்மாவையும் மட்டும் இல்லை பேபி, வேறு யாரையும் ஸ்வேதா அங்கிள் டிஸ்டர்ப் செய்யாமல் அங்கிள் பார்த்துப்பேன்..” என்று சமாதானம் செய்தவனை, நிமிர்ந்து பார்த்து, “நிஜமாகவே அங்கிள்?.. அவங்க இனி என்னை.. “நோ பேபி நோ.. அங்கிள் பார்த்துப்பேன்..” என்றவன் இருவருக்கும் நெற்றியில் முத்தம் கொடுத்து தன் அணைப்பை சற்று இறுக்க
சில நிமிடங்கள் அவன் அணைப்பிலும், பேச்சிலும் தன்னை மறந்து கட்டுண்டு இருந்த எழில், அவன் நெற்றி முத்தத்தில் உடல் சிலிர்த்து, சில கணங்கள் அமைதியாக இருந்தவள், தான் இருக்கும் நிலை உணர்ந்து விதிர்த்து வேகமாக விஜய்யிடம் இருந்து விலகினாள்.. “என்ன ராங்கி எதுக்கு விலகுற?..” என்று கேட்காமல் அவள் விலகியதும்,
“நான் பேபியை தான ஹக் செஞ்சேன் நீ ஏன் இடையே வந்த ராங்கி?..” என்று எங்கே தான் அணைத்த தற்காக எழில் தன்னிடம் கோபமாக பேசிவிடுவாளோ என்று எண்ணியவன், அவள் எதுவும் கேட்கும் முன் தானே முந்தி கொண்டு எழிலை மாட்டி விட அவன் அபாண்டமான பேச்சில் அவனை திகைத்து பார்த்த எழில்
“என்ன நானா உங்களுக்கு இடையே வந்தேன்?.. நீங்க தான் எங்களுக்கு இடையே வந்திங்க..?” எழில் பதிலுக்கு கோபமாக சொல்ல, “ஹேய் ராங்கி இப்படி பட்ட பகல்ல பொய் சொன்னா பந்திக்கு பாயசம் கிடைக்காதாம்..” என்று குறும்பு புன்னகையுடன் சொல்ல
“பந்தினா என்ன அங்கிள்?..” தன் அழுகை மறந்து நேத்ரா விஜய்யிடம் சந்தேகம் கேட்க, இதைத்தானே அவனும் ஆசைப்பட்டான்.. குழந்தை தன் அழுகை மறந்து வேறு திசைக்கு திரும்ப வேண்டும் என்று, “அதுவா பேபி.. பந்தின்னா எதாவது ஃபங்சன்ல வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்றது பேபி..” என்று விளக்க
குழந்தைக்கு அவன் கூறுவது புரியாமல் முழிக்க, “இதோ பார் இது தான் பந்தி..” என்று தன் அலைபேசியில் விருந்து உபசரிப்பு சம்பந்தப்பட்ட வீடியோ போட்டு காட்ட, “குழந்தை ஆர்வமாக அதை பார்த்து கொண்டு இருக்க, ஒரு பெருமூச்சுடன் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த விஜய் “வீட்டுக்குள்ள பேபி முன்னாடி நீயும் அழுதா அவ பயந்து இன்னும் அழ மாட்டாளா..”இன்று கண்டிப்புடன் கூறிய விஜய்யை எழில் திகைத்து நிமிர்ந்து பார்த்தவள்,
“அவ என்ன சொன்னா என்று உங்களுக்கு தெரியுமா?.. யாரோ ஒரு குழந்தைக்கு இப்படி ஆனதை கேள்வி பட்டாலே என் உள்ளம் எல்லாம் துடிக்கும்.. ஆனா இப்போ என் குழந்தைக்கு..” என்று மேலும் கூற முடியாமல் குரல் உடைந்து அழுத எழிலை அணைத்து சமாதானம் செய்யத் துடித்த தன் கரங்களை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன்,
நேத்ரா இருவரையும் பாரக்க, விஜய் சட்டென்று எழில் முகத்தை தன் மார்பில் அழுந்த பதித்து கொண்டான்.. எழில் அவனிடமிருந்து திமிறி விலக “ஷ் பேபி இங்க தான் பாக்குறா.. நீ அழுவதை பார்த்தால் திரும்ப அவ மனசு பதட்டப்படுவா.. இப்பதான் அவளை நான் வேற சிந்தனைக்கு கொண்டு வந்து இருக்கேன்.. நீ அழுது அவளை மறுபடியும் அந்த சிந்தனைக்கு கொண்டு வந்துடாத என கண்டிப்பாக கூறியவன்,
முகத்தை துடைச்சுகிட்டு இயல்பாய் இரு..” என்று கட்டளையிட்டு எழில் முகத்தை தன் மார்பில் இருந்த விலக்க எழில் தன் கண்ணீரை அவன் சட்டையில் துடைத்து விட்டு அவனிடமிருந்து விலகி நின்று நேத்ராவை பார்த்து புன்னகை செய்தாள்.. பதிலுக்கு புன்னகை செய்த நேத்ராவும் நம்ம இது மாதிரி எப்பம்மா பங்க்ஷன் வைப்போம் நம்ம வீட்டுல இது மாதிரி எல்லாரும் எப்ப வந்து சாப்பிடுவாங்க என குழந்தை ஆர்வமாக கேட்க..
அதற்கு எழில் பதில் சொல்ல தெரியாமல் முழிக்க, “ஓ பங்க்ஷன் வச்சிடலாமே.. பேபி பர்த்டே எப்போ?.. நம்ம சூப்பரா பங்க்ஷன் வச்சி இது மாதிரி பந்தி வைத்து பேபிக்கு புடிச்ச டிஸ் வச்சு சூப்பரா நம்ம செலிப்ரேட் செய்வோம்..” என விஜய் உற்சாகமாக கூற, “ஹை ஜாலி சூப்பர் அங்கிள்.. இன்று குதூகலமாக கூறிய நேத்ரா எழிலிடம் திரும்பி எனக்கு எப்ப பர்த்டே வரும் மம்மி..?” என கேட்க
“ஆகஸ்ட் 15 என்று எழில் கூற, “வாவ் பேபி நீங்க சுதந்திர தினத்தில் பிறந்திங்களா..? அப்போ உங்க பிறந்தநாளை நம்ம நாடே கொண்டாடும் சூப்பர்டா.. நாம அன்னிக்கு கிராண்டா செலிப்ரேட் செய்யலாம்..” என்று உற்சாகமாக கூறிய விஜய், அந்த ஃபங்சன்ல யாரை கூப்பிடலாம்..? பேபிக்கு என்ன கலர் ட்ரெஸ் வேண்டும்..?? என்று அதை பற்றி பேசி குழந்தையின் மனநிலையை முற்றிலும் மாற்றிய பிறகே அங்கிருந்து வெளியேறினான்..
அவன் செல்லும் முன்பு எழிலிடம் திரும்பியவன் ஆபத்து வெளிய மட்டும் இல்ல வீட்டுக்குள்ளேயும் இருக்கும் இப்ப புரியுதா?.. இனியாவது பேபியை கொஞ்சம் சுதந்திரமாக இருக்க விடு..” என்றவன் “அந்த ஸ்வேதா அங்கிளை நான் பார்த்துக்கிறேன்.. இனி நீ பேபியை பார்த்துக்க.. கெட்டதிலேயும் ஒரு நல்லது பேபி மைண்ட் அதுல ரொம்ப டிப்ரஸ்ஸன் ஆகல நீ எப்பவும் இனி அதை பத்தி பேபி கிட்ட பேசாத.. கதவை நல்லா லாக் பண்ணிக்க இப்போ வெளியே வர வேண்டாம்.. என்று கட்டளையிட்டே சென்றான்..
நேத்ராவிடமும் “பேபி அங்கிள் நாளைக்கு வர்றேன் வரும் போது அங்கிள் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்..” என்று கூறிவிட்டே சென்றான்..
“எனக்கு ஆராடர் போட நீங்க யாரு என்று கேட்க தோன்றினாலும், நேத்ராவின் முகத்தில் இருந்த தெளிவும், சிரிப்பும் அதோடு அவன் பேச்சில் இருந்த நியாயத்திலும் அவனிடம் எதிர்வாதம் செய்யாமல் அமைதியாக நின்றாள்.. சற்று முன் இருந்த தவிப்பான மனநிலையையும், இப்போது இந்த நிமிடம் இருக்கும் அமைதியான மனநிலை யோசித்து பார்த்த எழில் எல்லாம் இந்த ஹோட்டல்கார் தான் என்னமோ மாயம் செஞ்சிட்டு போய்ட்டாங்க..” என்று ஒத்துக்கொள்ள மனம் இல்லாவிட்டாலும் உண்மை ஏற்று கொண்டாள்..
பக்கத்து வீட்டில், அய்யோ என் குழந்தையை யாரோ தூக்கிட்டு போறாங்கள.. அய்யோ என் புருஷனை யும் இழுத்திட்டு போறாங்களே யாராவது காப்பாத்துங்க..” என்று பெண்ணின் அலறல் குரல், எழில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய் செவியில் விழ மீசையை முறுக்கியபடி அந்த கதறல் கேட்டபடி வெளியே வந்த விஜய், “அந்த குழந்தையை விட்ருங்க.. அவனை மட்டும் தூக்கிட்டு வாங்க..” தன் காதில் மாட்டி இருந்த புளூடூத் வழியாக யாருக்கோ கட்டளையிட்டு தன் காரை கிளப்பினான்..
,
தன் இடத்திற்கு வந்து சேரும் முன் அந்த மிருகத்தை உள்ளாடையுடன் ஒரு தூணில் கட்டி வைத்திருந்தனர்.. உள்ளே வந்த விஜய் அவன் கட்டை கழட்டி விடுங்க..” என்று கட்டளையிட அவன் கட்டுகளை அவிழ்த்த அடுத்த நொடி அவன் முகத்தில் ஓங்கி குத்திய விஜய், “சின்ன குழந்தைகளை கூட விட மாட்டிங்களா டா?.. என்று கோபமாக கேட்டு ஆத்திரம் தீர அவன் முகத்தில் குத்து விட்டு கொண்டே இருந்தான்.. ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் அந்த மிருகம் மயங்கி சரிய
“ம்கூம் இவன் மயங்க கூடாது தெளிய வைங்க..” என்று கட்டளையிட அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்ததும், “உன் பேர் சொல்லுடா..” என்று கர்ஜனை குரலில் கேட்க, “சார் சந்தீப் சார்.. சார் இனி இப்படி செய்ய மாட்டேன் சார்.. ப்ளீஸ் என்னை விட்ருங்க..” கொஞ்சியவன் மூக்கில் குத்து விட்டவன்,
“உனக்கு ஒரு லைவ் ஷோ காட்டவா??” என்று ஏளனமாக கேட்ட விஜய், தன் ஆட்களிடம் கண்ணை காட்ட, ஒருவன் முன்னே வந்து அங்கிருந்த தொலைக்காட்சியை இயக்க, சந்தீப்பின் வீடு.. ஸ்வேதா அங்கு விளையாடி கொண்டு இருக்க, குழந்தை அருகே ஒரு ஆடவன் நின்றிருந்தான்.. சந்தீப் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க
“நீ என் பேபி கிட்ட எப்படி இருந்தியோ அதே மாதிரி இப்போ..” என்று பேச்சை நிறுத்தி புளூடூத் வழியாக நீ ஆரம்பி..” என்று கட்டளையிட அவன் ஸ்வேதாவை நெருங்க, பார்த்து கொண்டு இருந்த சந்தீப் உயிர் துடிக்க சார் சார் வேண்டாம் சார்.. நான் இனி உயிரே போனாலும் தப்பு செய்ய மாட்டேன்.. என் பொண்ணை விட்ருங்க..” என்று விஜய் கால் பிடித்து கெஞ்சி கதற
“நோ.. உன் குழந்தைன்னா உயிர் துடிக்குதோ.. என் பேபியும் இப்படி தான் பயந்தா நீ கேட்டியா.. சின்ன பிஞ்சு குழந்தை.. அவளை போய்..” என்று வெறுப்பாக கூறியவன், “என்னடா வேடிக்கை பார்க்கிற போ அந்த குழந்தை கிட்ட..” என்று கட்டளையிட.. அய்யோ.. வேண்டாம் சார்.. நான் செஞ்ச தப்புக்கு எனக்கு தண்டனை கொடுங்க சார் என் பொண்ணை விட்ருங்க..” என்று மன்றாட..
“இந்தா இந்த பத்திரத்தில் கையெழுத்து போடு என்று வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய விஜய், “நீ அந்த குழந்தை கிட்ட போய் நான் சொன்னதை செய்..” என்று புளுடூத் வழியாக கட்டளையிட”நான் தான் கையெழுத்து போட்டுட்டேனே என் பொண்ணை விடருங்களேன்.. என்று அவன் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே அங்கு தொலைக்காட்சியில் ஸ்வேதாவிடம் நெருங்கிய ஆடவன், குழந்தை கையில் சாக்லேட்டும், பெரிய டெடி பியர் பொம்மையும் கொடுத்து செல்ல
இப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது அந்த சந்தீப்பிற்கு, அவனை ஏளனமாக பார்த்த விஜய் “என்னை என்ன உன்னை போல ஈனப்பிறவி என்று நினைச்சியா..? நீ மனசால செத்து பிழச்சேல்ல இனி உனக்கு உடம்பால வலி தரணும்ல.” என்ற விஜய்யின் குரலே சந்தீப்பிற்கு கிலி கொடுக்க
“இவன் கை கால்கள்ல ஒரு இடம் பாக்கி இல்லாமல் குண்டூசியில குத்தி வைங்க அதுவும் நககண்ல சின்ன இடம் கூட இருக்க கூடாது நல்ல அழுத்தி குத்தணும்..” என்று கட்டளை இட்டு வெளியே செல்ல சந்தீப்பின் அலறல் அந்த இடத்தை அதிர விட்டது..
மறுநாள் நேத்ராவிடம் சொன்னது போல சர்ப்ரைஸ்ஸாக செய்த விசயம் நேத்ராவை மகிழ்ச்சியில் துள்ள வைக்க, அதற்கு மாறாக எழில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்..
இமை சிமிட்டும்