இமை 26
தன் பள்ளிக்கு நேத்ராவை அழைத்து கொண்டு வந்த விஜய் மீது கோபம் கோபமாக வந்தது.. அஷ்வின் இங்கு தான் சுற்றி கொண்டு இருக்கிறான்.. அவன் கண்ணில் நேத்ரா பட்டால் என்ன ஆகும் என்ற பதட்டத்தில், அவனை திட்டி விட்டு நேத்ராவை தன்னுடனேயே அழைத்து சென்ற எழில் போகும் வழியெங்கும் விஜய்யை திட்டிக்கொண்டே வாகனத்தை செலுத்தி கொண்டு இருக்க,
எவ்வளவு தைரியம் அம்முவை ஸ்கூல் வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கிறாங்க.. கேட்டா ரூல்ஸ் பத்தி பேசறாங்க எல்லாம் என்னால தான்.. ரூல்ஸாம்.. ரூல்ஸ்!!. பெரிய ரூல்ஸ்!! நான் ஏன் இதுக்கெல்லாம் அனுமதிச்சேன்?..” என்று தன்னையே நொந்து கொண்டு இருந்த எழில் மனதில் விஜய்யும் அவன் நண்பர்களும் வந்து போன நாள் அவள் நினைவிற்கு வந்தது.. அன்று என்னை காதலிக்க வைப்பேன் என்று விஜய் சவால் விட்டு அதற்கு எழிலும் உன்னால் அது முடியாது என்று பதிலுக்கு சவால் விட
இவர்கள் பேசிக்கொண்டு இருக்க இருவருக்கும் இடையே வந்த ஷக்தியும் விதுரனும் “சரி சரி ரெண்டு பேரும் இப்படி சவால் மட்டுமே விட்டுட்டே இருந்தால் எப்படி?.. போட்டின்னு வந்திருச்சு அதுக்கு ஏதாவது ரூல்ஸ் வேண்டுமே..” என்று எடுத்துக் கொடுக்க “இது போட்டியில்ல இது சவால்..” என்று எழில் திருத்தி கூறி விட்டு, ரூல்ஸ் எதுவும் வேண்டாம்..” என்று மறுக்க
“அப்படியா சிஸ்டர் போட்டியும், சவாலும் ஒன்னு தான் என்று சொர்கத்துக்கு போன எங்க பாட்டி சொல்லிருக்காங்க.. அதனால் போட்டி என்றாலும் சவால் என்றாலும் ரூல்ஸ் வச்சே ஆகணும்..” என்று உறுதியாக கூறிய ஷக்தி, “அதோட இந்த விஜய் விண் பண்றதுக்கு எதாவது குறுக்கு வழியில போனா என்ன செய்விங்க?.. நான் உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்..” என்ற ஓரக்கண்ணால் விஜய் பார்த்தபடி கூறிய ஷக்தியை விஜய் முறைத்துப் பார்க்க, விதுரன் தனக்குள் சிரித்துக் கொண்டான்..
ஷக்தி கூறுவதை சில நொடிகள் யோசித்த எழிலிற்கு விஜய்யின் அடாவடி பேச்சு ஷக்தி சொல்வது சரி என தோன்றியது “சரி என்ன ரூல்ஸ்? என கேட்க, “நானே சொல்லவா?..” ஷக்தி கேட்க, “ம்.” என்று எழில் சம்மதித்தாள்..
“ரூல்ஸ் நம்பர் ஒன்.. இந்த விஜய் காலை பத்து மணியில் இருந்து இரவு ஏழு மணி வரை எப்போ வேண்டுமானாலும் இந்த வீட்டுக்கு வந்து போகலாம்..” என்று அறிவிக்க எழில் அவனை அதிர்ந்து பார்த்து “நோ இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..” என எழில் திட்டவட்டமாக மறுக்க
“ஏன் சம்மதிக்க மாட்ட ராங்கி?.. நான் அடிக்கடி இங்க வந்தா உன் மனசு மாறிடுமா?.. அப்படின்னா சொல்லு ராங்கி நான் இந்த ரூல்ஸே வேணாம்னு சொல்லிடுறேன்” என விஜய் எழிலை தூண்டிவிட அவனை தீயாக உறுத்து விழித்து
“என் மனசு பற்றி எனக்கு தெரியும்.. நீங்க இங்க வந்து, உங்க நேரம் தான் வீணாக போகும்.. நல்ல எண்ணத்தில் சொன்னேன்..” என்று அலட்சியமாக கூறிய எழில் இதுக்கு சம்மதிக்கிறேன்..” என்று வீம்பாக ஒத்துக்க கொள்ள “ரூல்ஸ் ரெண்டு பேருக்கும் சமம் தான் சிஸ்டர் அவன் இங்க வீட்டுக் வந்தால் பதிலுக்கு நீங்களும் விஜய் வீட்டுக்கு எப்போ வேண்டுமானாலும் போய்ட்டு வரலாம்..
“அங்க போய் இவனை பத்தி அவன் அம்மா அப்பா கிட்ட எப்படி வேண்டுமானாலும் போட்டு கொடுக்கலாம்..” என்று ஷக்தி எழிலிற்கு யோசனை கூற, “எனக்கு எந்த பிராப்ளம் இல்லை..” என்று விஜய் தோள் குலுக்கி விட்டு “வாட் நெக்ஸ்ட்?..” என்று கேட்க
“நேத்ராவை அவங்க தொல்லை செய்ய கூடாது..” எழில் கூற, “நிச்சயமாக நான் நேத்ரா பேபியை தொல்லை செய்ய மாட்டேன்.. ஏன்னா நேத்ரா பேபி என்னை தொல்லையாக நினைக்க மாட்டா.. அதே சமயத்தில் நேத்ராவே என்னை தேடி வந்தா அதுக்கு பிறகு நீ என்னை தடுக்க கூடாது..” என்று விஜய்யும் சொல்ல “அவ உங்களை தேட மாட்டா..” என்று எழில் உறுதியாக மறுக்க.. அவளுக்கும் சேர்த்து நீ முடிவு செய்யாத.. சின்ன குழந்தை அவளை இயல்பாக விடு..” என்று கண்டிப்புடன் கூற எழில் விஜய்யை முறைக்க
“சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடாதிங்க.. மூணாவது ரூல்ஸ்.. இது உனக்குடா விஜய் மூணு மாசம் தாண்டியும் சிஸ்டருக்கு உன்மேல அன்பு வரலைன்னா அதுக்கப்புறம் நீங்க தொல்லை செய்யக்கூடாது..” என்று கண்டிப்பாக கூறி விட்டு எழிலிடம் திரும்பி “இந்த ரூல்ஸ் உங்களுக்கும் தான் சிஸ்டர்.. ஒரு வேளை மூணு மாசத்துக்குள்ள உங்களுக்கு விஜய் மேல் அன்பு வந்தால் சவால்ல தோற்று விடுவோம் என்று நினைத்து நீங்க அதை மறைக்க கூடாது..” என்று கூற
எழில் அதற்கு சம்மதிக்க “இவ்வளவு தான் ரூல்ஸ்..” இதுக்கு நீங்க ரெண்டு பேரும் சம்மதிக்கிறிங்களா..?” என கேட்க
விஜய் மீது இருந்த கோபத்தில், அவனால் தன் மனதை நெருங்க முடியாது என்ற உறுதியில், மூன்று மாதங்களுக்கு பிறகு அவனை மறுத்து விட வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் வேறு எதுவும் யோசிக்காமல், “நீங்க என்ன ரூல்ஸ் போட்டாலும் எனக்கு சம்மதம்.. யார் தினமும் வந்தாலும் போனாலும் என் மனம் மாறாது..” என்று அவர்களுக்கு சொல்வது போல தனக்கும் சொல்லி கொண்டாள்.. அதை இப்போது நிதானமாக யோசித்து பார்த்த எழிலிற்கு இப்போது நன்றாக புரிந்தது,
“இந்த ஹோட்டல்கார் என்னோட கோபத்தை தூண்டி விட்டு அவன் நினைத்ததை நடத்தி கொண்டதை இப்போது நன்றாக புரிந்து கொண்டாள்.. கோபம் வந்தால் நிதானம் இழந்து போகும் என்பது எவ்வளவு உண்மை..” என்று பெருமூச்சுடன் நினைத்தபடி நேத்ராவை குணிந்து பார்க்க அவள் முகத்தை உம் என்று வைத்தபடி அமர்ந்திருந்தாள்.. கொஞ்ச நாட்களாகவே வாடி இருந்த நேத்ராவின் முகம் அன்று முதல் முறையாக வெளியே அழைத்து சென்ற பிறகு தான் கொஞ்சம் மலர்ந்து இருந்தது
அதிலும் இந்த ஹோட்டல்கார் பார்த்த பிறகு நன்றாகவே சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.. பார்த்த ரெண்டு நாள்ல அவங்களோட எப்படி இவ்வளவு அட்டாச் ஆனா இந்த அம்மு?..” என்று வியப்பாக நினைத்தபடி வாகனத்தை செலுத்தினாள்
இங்கு பள்ளியில், எழில் தன்னை திட்டி சென்றதை, ஏதோ பெரிய விருது வாங்கியது போல் சிரித்தபடி நின்றிருந்த விஜய்யை சங்கவி வியப்பும் திகைப்புமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
சங்கவிக்கு இங்கு நடந்தை நம்ப முடியவில்லை.. எழிலிற்கு குழந்தை இருக்கிறதா?..” என்று அதிர்ச்சியாக எண்ணியவள், எழிலின் இந்த கோபமும் வியப்பாக இருந்தது.. எத்தனை கோபம் வந்தாலும் அதை அழுத்தமான பார்வையிலும், பேச்சிலும் கடந்து விடும் எழில் இன்று தன் இயல்பை மீறி இந்த புதிய ஆடவனிடம் கோபம் கொண்டதை வியப்பாக பார்த்திருந்தவள்.. அவள் போடா என்று கூறி சென்றதும் கோபம் கொள்ளாமல் சிரித்து கொண்டு நின்றிருந்த விஜய்யை சந்தேகமாக பார்த்த சங்கவி
“எழில் எங்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாளே..! ஒருவேளை இவரை பத்தி தான் சொல்ல நினைச்சிருப்பாளோ..” என்று யோசித்து கொண்டு இருக்க, “இருக்கலாம்..” என்று விஜய்யின் குரல் அருகில் கேட்க, சங்கவி திடுக்கிட்டு “நான் நினைச்சது இவங்களுக்கு எப்படி தெரியும்?..” என்று கேள்வியாக அவனை பார்க்க, “நீங்க மைண்ட் வாய்ஸ் நினச்சு சத்தமாக பேசிட்டிங்க..?’ என்று சங்கவியின் கேள்வி உணர்ந்து கேலியாக சொல்ல
“இங்க என்ன நடக்குது?.. நீங்க யாரு?.. எழில் ஏன் உங்களை பார்த்து கோபப்படறா..? அந்த குழந்தை யாரோடது?.” என்று கேள்விகளை அடுக்க, “இதெல்லாம் ஏன் சிஸ்டர் என்கிட்ட கேட்கிறிங்க?.. உங்க ஃப்ரெண்ட் கிட்ட கேளுங்க..” என்ற விஜய்”உங்களோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன்.. நான் உங்க ஃப்ரெண்ட் எழில் வருங்கால கணவன்..!!” என்று அறிவிக்க
அதிர்ச்சியில் சங்கவி வாயில் வைத்து நிற்க, அவள் நின்ற தோரணை விஜய்க்கு சிரிப்பை வரவழைக்க, முகத்தை மறுபக்கம் திருப்பி கொண்டான்.. “சார்..!!” என்ற வேணியின் பதட்டமான குரலில் அப்போது தான் அவர் அங்கு இருப்பது உணர்ந்து திரும்பி பார்க்க அவர் பதட்டத்துடன் கைகளை பிசைந்தபடி நிற்பதை பார்த்து “என்ன உங்களை விட்டு போய்ட்டாளா..?.” என்று சிரித்தபடி கேட்ட விஜய்யை “எல்லாம் உங்களால் தான்..” என்று அவனை மனதுக்குள் திட்டிய வேணி
“சார் உங்க பேச்சை கேட்டு தான் நான் இங்கே வந்தேன்.. இப்போ நான் எப்படி அங்க வீட்டுக்கு போறது?.. எழில் மேடம் என் மேல கோபமாக இருப்பாங்க.. என்று தவிப்புடன் கூற நான் தான் பார்த்துக்கிறேன் சொன்னேன்ல வாங்க போகலாம் என வேணியை அழைத்துக் கொண்டு செல்ல
“இந்த எழில் எதுவுமே என்கிட்ட சொல்லாம மறைச்சு வச்சுட்டாளே என தன் தோழி மீது ஆதங்கமாகவுகம், கோபமாகவும் நினைத்தபடி சங்கவி நடப்பதை ஒன்றும் புரியாமல் குழப்பமாக பார்த்துக் கொண்டு நின்றிருக்க
சங்கவியிடம் திரும்பிய விஜய் “நீங்க எங்க போகணும்னு சொன்னீங்கன்னா உங்களையும் அங்கு நான் இறக்கி விட்டுருவேன்” என்று சங்கவியை அழைக்க, உங்க உதவிக்கு மிக்க நன்றி இத்தனை நாள் எப்படி போனேனோ அப்படியே போய்க்கிறேன்..” என்று எழில் மீது உள்ள கோபத்தை விஜயிடம் காட்டிய சங்கவி விறுவிறுவென பள்ளி வாகனத்தை நோக்கி நடக்க,
“அந்த ராங்கியை போலவே அவளோட ஃப்ரெண்டும் அப்படித்தான் இருக்காங்க..” என்று நினைத்தபடி வேணியை அழைத்துக் கொண்டு எழில் வீட்டிற்கு சென்றான்..
இங்கு தன் வீட்டில் எழில் நேத்ராவை கோபமாக பார்த்த படி நின்றிருந்தாள்.. இத்தனை வருடம் உயிருக்கும் மேலாக பாசம் காட்டி வளர்த்த தன் குழந்து நேற்று வந்த விஜய்யிடம் நன்றாக ஒட்டி கொண்டது சிறிது ஏமாற்றமாக உணர்ந்தாள்..
“ஏன் அம்மு குட்டி அம்மாக்கிட்ட சொல்லாமல் வெளியே வந்தது தப்பு இல்லையா? அதுவும் ரெண்டே தடவை பார்த்த ஒருத்தர் அவர் யார் என்றே உனக்கு தெரியாது அவங்க கூட எப்படி வந்த நீ? .. என்று கேட்க, நேத்ரா முகம் சுருங்கி நிற்க
“உன்கிட்ட தான் அம்மு கேட்கிறேன்..? பதில் சொல்லுடா..” என்று எழில் மீண்டும் அழுத்தி கேட்க, “இந்த அங்கிள் கிட்ட எனக்கு பயம் வரலயே.. அவங்க பக்கத்து வீட்ல இருக்க ஸ்வேதா அங்கிள் மாதிரி பேட் அங்கிள் இல்லைம்மா..” என்று அழுதபடி கூற எழிலிற்கு திக் என்றது தான் ஒன்று கேட்க இவ வேற சொல்றாளே..” என்று அதிர்ந்து பார்த்த எழில்
“அம்மு என்னடா சொல்ற.. ஸ்வேதா அப்.. க்கும் இப்போ எதுக்கு அந்த அங்கிள் அவங்களை பத்தி பேசற? என்று புரியாமல் கேட்க “அவங்க பேட்.. அதான் அந்த சாக்லேட் அங்கிளை வச்சு எனக்கும் ஒரு அங்கிள் இருக்காங்க.. அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க்.. சொல்லணும்.. நான் ஊஞ்சல்ல இருந்து கீழே விழும் போது ஆக்ஷன் காமென் மாதிரி பறந்து வந்து என்னை பிடிச்சாங்க..
“அவங்க தான் ஸ்வேதா அங்கிள் கிட்ட பயமில்லாமல் பேச முடியும்” என்று நேத்ரா மெதுவாக சொல்ல, ஓரு வேளை ஸ்வேதா அவள் தந்தையுடன் பைக்கில் செல்வதை பார்த்து நேத்ராவிற்கு அந்த ஏக்கம் வந்துவிட்டதோ என்ற தவிப்பில்
“ஸ்வேதா அந்த அங்கிள் கூட பைக்ல போறது பார்த்து உனக்கு ஆசையா இருக்காடா அம்மு அதான் இந்த அங்கிள் கூட பைக்ல வந்தியா..” என்று கேட்க “இல்லை என்று மறுப்பாக தலையசைத்த நேத்ரா “என் பக்கத்தில் ஸ்வேதா அங்கிளை வர வேண்டாம் சொல்ல வைக்க தான் சாக்லேட் அங்கிள்கிட்ட பேசறேன்..” என்று சிறு பயத்துடன் கூறிய நேத்ராவை திகைப்புமாக பார்த்த எழிலிற்கு இது வேறு ஏதோ பெரிய பிரச்சினை என்று தோன்ற
“கடவுளே நான் நினைக்கிற மாதிரி பெரிதாக எதுவும் இருக்க கூடாது.” என்ற வேண்டுதலுடன், “அம்மு அந்த சாக்லேட் அங்கிள் கிட்ட ஸ்வேதா அங்கிள் பத்தி என்ன சொல்லுவ?..” என்று கேட்க “ஸ்வேதா அங்கிள் என்னை பேட் டச் செய்றாங்க.. அது தப்பு என்று சொல்ல சொல்லுவேன்..” என்று குழந்தை அழுகையோடு சொல்ல.. குழந்தை சொன்னதை கேட்ட எழிலிற்கு நெஞ்சுக்கூடு காலியான உணர்வு..
தொலைக்காட்சியிலும், செய்தி தாள்களிலும் பார்த்து படித்த செய்தி இன்று தன் வீட்டில் தன் குழந்தைக்கு நடந்திருப்பதை நம்ப முடியாத அதிர்ச்சியில் சிலையாக நின்று இருந்தாள்..
“அந்த அங்கிள் பேட்மா வேணி ஆண்ட்டி கடைக்கு போனால், ஸ்வேதா இங்க கூட்டிட்டு வந்து அவளை பொம்மை கூட விளையாட விட்டு என்னை விளையாட விட மாட்டாங்க.. என்னை இங்க.. இங்க.. தொட்றாங்க மா.. எனக்கு பயமா இருக்கும்..”என்று அழுதபடி கூறிய குழந்தையை தாவி அணைத்து கொண்ட எழில்
“ஏன்டா அம்மு என்கிட்ட சொல்லல..? என்று அழுகையினூடே கேட்க “உன்கிட்ட சொன்னா உன்னையும் இப்படி பேட் டச் செய்வாங்களாம்.. எனக்கே இது பயமா இருக்கு.. உன்னை இப்படி தொட்டா உனக்கும் பயமா தான இருக்கும்.. அப்பறம் உன்னை நைஃப் வச்சு வயித்துல குத்திடுவாங்களாம்.. அதான் உன்கிட்ட சொல்லல.
ஆனால் சாக்லேட் அங்கிளை ஸ்வேதா அங்கிளால பேட் டச் செய்ய முடியாதுல்ல.. அவங்களை நைஃப்ல குத்த வந்தாலும் ஆக்ஷன் காமென் மாதிரி தப்பிச்சிடுவாங்க அதான் சாக்லேட் அங்கிள்கிட்ட பேசினேன்..” என்று உதடு பிதுக்கி அழுது கொண்டே கூறிய நேத்ராவை இறுக அணைத்துக் கொண்ட எழில்
“ஒண்ணும் இல்லைடா அம்மு.. அம்மா இருக்கேன்.. அம்மா பார்த்துக்கிறேன்டா..” என்று குழந்தையை சமாதானம் செய்த எழிலிற்கு மனம் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது.. முட்டி போட்டு கொண்டு நேத்ராவை அணைத்தபடி அமர்ந்திருந்த எழில் குழந்தை முதுகை தடவிக் கொடுக்க, மற்றோர் வலிய கரம் இருவரையும் சேர்த்து அணைக்க அதில் இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க
“நான் தான்டா பேபி..” என்று விஜய்யின் குரலில் எழிலிடம் இருந்து அவனிடம் தாவிய குழந்தை “அங்கிள்.. ஸ்வேதா அங்கிள் கிட்ட..” என்று ஏதோ சொல்ல வந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ”இனி அந்த தெரு நாய்.. உன் பக்கம் திரும்பாம அங்கிள் பார்த்துப்பேன்..”
“என்னை நம்புடா பேபி..” என்று சமாதானம் செய்து நேத்ராவை தன் தோளில் முகம் புதைத்து கொள்ள வைத்த விஜய் கண்கள் இரண்டும் மிளகாய் பழம் போல் சிவந்து இருக்க அவன் கண்களின் சிவப்பை பார்த்த எழில், அதிர்ந்து அவனை பார்த்து கொண்டு இருக்க, சட்டென்று தன் கண்களில் கனிவை கொண்டு வந்தவன், “லிட்டில் கேர்ள்..” எல்லாம் நான் பார்த்துப்பேன்.. நீ அமைதியாக இரு..” என்று சமாதானம் செய்ய
அவன் கண்களையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த எழில் தலை அவள் அறியாமல் சம்மதமாக தலையசைக்க தன் ராங்கியின் நெற்றியில் அழுந்த முத்த
மிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான்..
இமை சிமிட்டும்