இமை 22
எழில் வீட்டிற்கு தன் நண்பர்களுடன் வந்த விஜய், நேத்ரா தன்னை தேடியதில் குற்ற உணர்வில் இருந்தவன், நேத்ராவை சமாதானம் செய்து கொண்டு இருந்த நேரத்தில், எழில் வீட்டிற்கு அவள் தலைமை ஆசிரியர் வந்து எழிலிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறவும், எழிலை விட விஜய் அதிர்ந்தான்.. என் ராங்கிக்கு இவங்க பொண்ணு பார்ப்பாங்களா?..”என்று கோபத்தில் கண்கள் சிவக்க
அந்த தலைமை ஆசிரியர் அழைத்து வந்த குடும்பத்தாரை ஆராய்ச்சியாக பார்த்தான்.. நடுத்தர வயதுடைய ஒரு ஆணும், நடுத்தர வயதை தாண்டிய பெண்ணும் வந்திருந்தனர்.. “என்ன மச்சி உனக்கு போட்டிக்கு ஆள் வந்துட்டாங்க போல..” என்று ஷக்தி கிண்டல் செய்ய, “மாப்பிளையோட அம்மாவும், அப்பாவும், தான் வந்திருப்பாங்க போல மாப்பிள்ளையை காணோமே” என விதுரன் வந்திருந்த அந்த இருவரையும் பார்த்துக் கொண்டு சொல்ல,
இருவரையும் முறைத்துப் பார்த்த விஜய், “என்னங்கடா கிண்டலா..? ரெண்டு பேரும் அமைதியா இருக்கலேன்னா உங்க தில்லாலங்கடி வேலை எல்லாத்தையும் என் பாசமலர்கள் கிட்ட சொல்லிருவேன்..” என்று எச்சரித்தவன் தலைமை ஆசிரியர் ஏதோ பேசவும் அவரிடம் கவனத்தை திருப்பினான்..
“என்ன எழில் இப்படி சொல்லாம திடீர்னு வந்து நிற்கிறேன் என்று பார்க்கிறாயா? உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சொல்லாம வந்தேன்.. ஹ..ஹ..” என்று ஏதோ பெரிய நகைச்சுவை கூறியது போல சிரித்த தலைமை ஆசிரியர் எப்படி என் சர்ப்ரைஸ்?.. இது உனக்கு ஆனந்த அதிர்ச்சியாக தான் இருக்கும் எனக்கு தெரியும்..” என்று எல்லாம் அறிந்தவர் போல் பேச,
“அது எப்படி உங்களுக்கு தெரியும்?..” ஷக்தி கேட்க அப்போது தான் அங்கிருந்த நால்வரையும் பார்த்த தலைமை ஆசிரியர் எழிலிடம் திரும்பி “இவங்க யாரு என்று சொல்லவே இல்ல நீ.?” குழப்பமாக கேட்க “அது இவங்க..” என்று எழிலை இடைமறித்து “நாங்க ரெண்டு பேரும் எழிலோட அண்ணண்… இவங்க எழில் அண்ணிங்க..” என்று விதுரன் தங்களை அறிமுகம் செய்ய, “அங்க ஓரமாக நிக்கிற தம்பி யார் என்று சொல்லவே இல்லை..” என்று விஜய்யை காண்பித்து கேட்க
“அவன் எங்க ஃப்ரெண்ட்..” ஷக்தி கூற, “எழில் உனக்கு அண்ணா எல்லாம் இருக்காங்களா?.” என்று தலைமை ஆசிரியர் வியப்பாக கேட்க, “ஏங்க அவங்க என்ன வானத்தில் இருந்து குதிச்சா வந்தாங்க..” என்று நக்கலாக கேட்ட ஷக்தி, “நீங்க வந்த வேலையை பாருங்க.. “ஏதோ ஆனந்த் அதிர்ச்சி ஆனார் என்று சொன்னிங்களே.. யார் அந்த ஆனந்த்?..” என்று ஷக்தி கேட்க
“தம்பி அது ஆனந்த அதிர்ச்சி.. ஏன்னா எழில் தான் துணைக்கு ஆள் இல்லாமல் தனிமையாய் இருக்காளே.. எவ்வளவு நாளைக்கு ஒரு வயசு பொண்ணு யாரும் இல்லாமல் இப்படி தனியாக இருக்கும் இருக்க முடியும்?..” என்று அக்கறையாக கேட்க
“அவங்க ஒரு வயசு பொண்ணு இல்லிங்க.. ஷி இஸ் யங் கேர்ள்.” என்று ஷக்தி முணுமுணுக்க மலர் யாருக்கும் தெரியாமல் அவன் தொடையில் கிள்ளிவிட்டு “பேசாம இருங்க.. அவங்க என்ன சொல்ல வர்றாங்க என்று கேட்போம்.” என்று ஷக்தியின் காதில் மெதுவாக கூறிய மலர் அங்கு நடப்பதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க தொடங்க,
“ஓய்!! உங்க அண்ணன் வாழ்க்கை இப்படி அந்தரத்துல நிக்குது நீ சுவாரசியமாக வேடிக்கை பாக்குற?.. உங்க அண்ணா வாழ்க்கை நெனச்சு உனக்கு கவலை இல்லையா?.. என ஷக்தி வியப்பாக கேட்க
“ம் கூம் இல்லையே..” என்று சாதரணமாக தோள் குலுக்கிய மலரை விசித்திரமாக பார்த்து சக்தி “ஏன் இல்லை?” என கேட்க “அண்ணா பத்தி எனக்கு தெரியும்.. அவங்க வாழ்க்கையை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று.. அதோட அண்ணி முகத்தை பார்த்தா அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன்.. அதோட நீங்க, விது அண்ணா எல்லாம் இருக்கும் போது அண்ணாவை அப்படியே விட்ருவிங்களா என்ன?….” என்று பேச்சை நிறுத்தி ஷக்தியை பார்த்து கண்சிமிட்ட,
“இவங்களை அண்ணி என்று முடிவே செஞ்சுட்டியா? என ஷக்தி வியப்பாக கேட்க, “எஸ்..” என்ற மலரை “தேறிட்டிங்க மேடம்!!” என்று மனைவியை மெச்சிய ஷக்தி தானும் வேடிக்கை பார்க்க தொடங்கினான்..
“என்ன வினு இது குழப்பமாக இருக்கு இவங்களை யாரு இப்ப இங்க வர சொன்னது?..” வெண்பா விதுரனிடம் புலம்பிக் கொண்டிருக்க, “எல்லாம் ஈஸியாக கிடச்சா எப்படி பேபி டால்?.. இதெல்லாம் இவனுக்கு ஒரு விசயமே இல்லை.. இதை ஈசியா சமாளித்து விடுவான்.. ஆனா இவன் அந்த பொண்ணு கூட தான் ரொம்ப போராட வேண்டி இருக்கும்..” என்று எழிலை பார்த்தபடி ஏதோ சிந்தனையில் கூற, அவன் குழப்பமாக பார்த்த வெண்பா,
“ஏன் அப்படி சொல்றிங்க?.. இவங்க ஏன் அண்ணாவை மறுக்க போறாங்க?..” என்று புரியாமல் கேட்க, “எனக்கு தோணுது அந்த மாதிரி எதுவும் இல்லாமல் இருந்தா சந்தோஷம் தான்..” என்ற விதுரனிடம் “நிச்சயமாக இவங்க விஜய் அண்ணாவை மறுக்க மாட்டாங்க..
ஆனால் பாவம் இவங்க.. அண்ணி இதுக்கு மறுத்து பேச போறாங்க வந்தவங்க வருத்தமாக திரும்ப போக போறாங்க.. அவங்களும் அண்ணிக்கு நல்லது நடக்கணும் என்று நினைச்சு தான் இங்க வந்திருக்காங்க..” என்று தலைமை ஆசிரியருக்காக அனுதாபம் கொண்ட வெண்பாவிடம்
“அப்படியா பேபி டால்?. இவங்க பாவமா?!.” என்று விதுரன் போலி வியப்பாக கேட்க
“ஆமா வினு..” என்று விதுரனுக்கு பதில் கூறிவிட்டு “இதுல மாப்பிள்ளையை காணோமே வினு..” என்று வெண்பா கேட்க,
“பேபி டால் ஒருத்தர் தானாக வலிய வந்து உனக்கு நான் நல்லது செய்கிறேன் என்று சொன்னால்.. அதை சொல்றவங்களுக்கு தான் அதிக ஆதாயம் கிடைக்கும்.. சோ எனக்கு தெரிஞ்சு இந்த இப்ப வந்திருக்கவங்களுக்கு தான் இந்த பொண்ணு கிட்ட இருந்து ஆதாயம் தேவைப்படும்.. அப்படி இல்லாமல் வலிய வந்து இந்த பொண்ணுக்கு உதவி செய்ய மாட்டாங்க.. எதுவாக இருந்தாலும் அவங்க இப்போ சொல்வாங்க பாரு பேபி..” என்று விதுரன் வெண்பாவிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே
தலைமை ஆசிரியர், “எழில்!! நீ அமைதியாக இருக்கிறதிலேயே தெரியுது.. நீ இதை எதிர்பார்க்கவில்லை என்று..” என்று கதை பேசி கொண்டு இருந்தவரை அனைவரும் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு அமைதியாக கேட்டு கொண்டு இருந்தனர்.. “இவங்க என்ன இவ்வளவு நீளமா பேசறாங்க வந்த விசயத்தை பேசாமல் கதாகலேட்சபம் நடத்திட்டு இருக்காங்க..” வெண்பாவும், மலரும் தங்களுக்குள் முணுமுணுத்தபடி இருக்க
“சரி நான் ஆரம்பித்த விசயத்தை முடிச்சிட்றேன்..” என்றவர் “இவங்க என் பெரியம்மா பசங்க.. அவங்க என் அக்கா வந்தனா.. இவன் என் தம்பி.. மார்கண்டேயன்.. அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஃபாரின்ல செட்டில் ஆகிட்டாங்க..
இப்போ பொண்ணு பார்க்கிறது இதோ அவனுக்கு, என்ற தலைமையாசிரியரை இடைமறித்து ஷக்தி “ஓ அவங்களோட பையனுக்கா பொண்ணு பார்க்க வந்திருக்கிங்க?. மாப்பிள்ளை பையன் என்ன வேலை பார்க்கிறார்?.. அவர் வரலயா? என்று அக்கறையாக விசாரிக்க, விஜய் சக்தியை தீயாக உருத்து விழித்தான்..
விஜய்யின் பார்வையை அலட்சியம் செய்த ஷக்தி நீங்க சொல்லுங்க மேடம் மாப்பிள்ளை என்ன வேலை பாக்குறாங்க ஏன் இவங்க கூட வரல.. என்னை விசாரிக்க “ஐயோ தம்பி மாப்பிள்ளையே இவர்தான்..” என்று தலைமை ஆசிரியர் அவசரமாக கூற, “என்ன மாப்பிள்ளையே இவர் தானா..?. என்று அதிர்ந்து கேட்க
“ஆமா என் தம்பி தான் மாப்பிள்ளை.. சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்கான்.. இவனுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகி அவன் ஒய்ஃப் கேன்சரால் பாதிக்கப்பட்டு இப்போ சமீபத்தில் தான் இறந்து போனா.. இவனுக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கா.. அவளை பார்த்துக்க ஒரு பொண்ணு வேணும்.. அதோட அவனுக்கு மனைவியாகவும் இருக்கணும்..
ரெண்டு பேரும் வந்து என்கிட்ட பொண்ணு எதாவது இருந்தால் பார்க்க சொல்லி கேட்டாங்க.. எனக்கு உன் முகம் தான் நினைவுக்கு வந்தது.. ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எனக்கும் சந்தோஷம் தான்.. நான் உன்னை பத்தி சொன்னேன்.. உன் ஃபோட்டோவம் காமிச்சேன்.. உன் ஃபேஸ் மட்டும் தான் என் தம்பிக்கு ஒரு மாதிரி இருந்துச்சு நான் தான் உன் குணத்தை பத்தி சொல்லி அவனை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வந்தேன்..
இவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி மாச சம்பளத்துக்கு வேலைக்கு போக வேணாம்.. வீட்ல ஹாயா உட்கார்ந்து சாப்பிடலாம்..” என்று எழிலுக்கு ஆசை காட்ட, அந்த மாப்பிள்ளை எழுந்து வந்து எழில் எதிரே வந்து நின்று, “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. சீக்கிரம் நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம் சிம்பிளா செஞ்சிப்போம்..
ஆனால் ஒரு கண்டிசன் என் பொண்ணு எப்பவும் அழாமல் நல்லபடியாக நீ பார்த்துக்கணும்.. அப்பறம் என்னையும்..” என்று வழிசலாக பேசிய மார்கண்டேயனை நால்வரும் மாப்பிள்ளையை அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க, மார்க்கண்டேயன் பேச்சில் பொறுமை கைவிட்ட எழில் கோபத்தில் பேச வாய் திறக்கும் நேரம்
“யார் மனைவிக்கு யார் மாப்பிள்ளை பார்க்கிறது? ஷீ இஸ் மை வொய்ஃப்..” என்று எழில் தோள் மேல் கை போட்டு விஜய் அங்கிருந்தவர்களிடம் அறிவிக்க அவன் பேச்சில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க, எதுவும் நடவாது போல் தன்னை முறைத்துப் பார்த்து கொண்டு இருந்த எழிலை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க..
அவனை கோபமாக பார்த்த எழில் “என்ன பண்றிங்க?.. முதல்ல என் தோள்ல இருந்து கையை எடுங்க..” என்று கோபமாக பற்களை கடித்து கூற, “ஹேய் ராங்கி நான் உனக்கு ஹெல்ப் தான் பண்றேன் இப்ப நீ கல்யாணம் ஆகலைன்னு சொன்னா.. இதோ இந்த மார்க் தான் உனக்கு மாப்பிள்ளை ஆகிடுவார்..
நீ மறுத்தா உனக்கு வேலை போகும்.. ஒரு அஞ்சு நிமிஷம் நீ அமைதியாக இருந்தா இவங்களை நான் இங்கே இருந்து அனுப்பிடுவேன்.. அப்பறம் நம்ம விசயத்தை பத்தி பேசுவோம்..” என்று அவள் கன்னம் பற்றி லேசாக ஆட்டியபடி கூறிய விஜய்
இருவரையும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயனிடம் திரும்பி, “ஹலோ அங்கிள்?!! காலேஜ் போற உங்க பொண்ணை பாத்துக்க வேற கேர்டேக்கர் பாத்துக்கங்க.. அப்பறம் நீங்க மேரேஜ் செஞ்சுக்க ஒரு ஆண்ட்டிய தான் பார்க்கணுமே தவிர, என் பியூட்டியை பார்க்க கூடாது..” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், தலைமை ஆசிரியரிடம் திரும்பி
“அதெப்படி இந்த வயசான அங்கிள் கல்யாணம் பண்ணனும்னு சொன்னதும் என்னோட லிட்டில் கேர்ள் முகம் தான் நினைவுக்கு வந்துச்சோ.. அவன் என்ன உங்க கிட்ட வந்து சொன்னாளா நான் தனிமையாய் இருக்கேன் எனக்கு கஷ்டமா இருக்கு எனக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு..
நீங்க ஸ்கூல் தலைமையாசிரியர் தானே.. அந்த வேலை மட்டும் பாருங்க.. மேட்ரிமோனி ஏதாவது ஆரம்பிக்கிறதா இருந்தா உங்க பிசினஸ் வளர நான் உதவி செய்றேன்.. இப்போ நீங்க கிளம்பலாம்..” என்று விஜய் கை கூப்பி வாசலை நோக்கி கை காட்ட.
எங்களை கூப்பிட்டு வச்சு அவமானம் படுத்துறியா எழில்.. உன் ரெஸ்யூம்ல நீ சிங்கிள் தான் போட்டு இருந்துச்சு.. நீ இப்படி பொய் சொல்லி ஏமாத்தினதுக்கே உன்னை நான் வேலை விட்டு அனுப்பறேன்..” தலைமை ஆசிரியர் கோபமாக கூறி விட்டு வாசல் நோக்கி செல்ல
“ஒரு நிமிஷம் நில்லுங்க மேடம்..” என்று அவரை நிறுத்திய எழில், “இவங்க சொல்றது எல்லாம் பொய்.. நிஜமாகவே எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை.. சோ உங்களால் என்னை வேலையை விட்டு தூக்க முடியாது.. உங்க பெர்சனல் வெஞ்சன்ஸை வேலையில் காட்டாதிங்க.. அப்பறம் நான் உங்களை என் வீட்டுக் கூப்பிடவே இல்லை..
நீங்களா வந்திங்க வீட்டுக்கு வர்றேன் சொல்றவங்களை வர வேண்டாம் என்று சொல்ற அளவுக்கு நான் பண்பாட்டை மறக்கலை.. அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்தாலும் அவங்களை போங்க என்று சொல்றதுக்கும் பண்பாடு தடுக்குது..” என்று விஜய் அன் கோ வை உறுத்து விழித்தபடி கூற
அவள் பேச்சை காதில் வாங்காமல் நால்வரும் வேறு திசையில் பார்த்து கொண்டு இருக்க, விஜய்யோ யாரையோ சொல்வது போல் அவள் பேசுவதை கண்டு கொள்ளாமல் நேத்ராவிடம் ஏதோ பேசி கொண்டு இருந்தான்..
“நீ சொல்றது உண்மையா எழில் அப்போ நிஜமாகவே உனக்கு கல்யாணம் ஆகலயா?..” தலைமை ஆசிரியர் நம்பாமல் கேட்க, “ஆமா மேடம் எனக்கு கல்யாணம் ஆகல..” என்று அழுத்தமாக கூறிய எழில் அந்த தலைமை ஆசிரியர் முகம் மின்ன ஏதோ கூற வர,
“என் மேரேஜ் விசயம் அது என் பெர்சனல் இனி நீங்க அதை பற்றி பேச கூடாது.. நீங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர், நான் அந்த ஸ்கூல் வேலை பார்க்கிற டீச்சர் இது மட்டும் நமக்குள்ளே இருந்தால் போதும்.. இப்போ நீங்க கிளம்பலாம்..” என்று அழுத்தமாக கூறி அவர்களை அனுப்பி வைத்த எழில், மற்ற நால்வரையும் திரும்பி பார்த்தாள்,
தலைமை ஆசிரியரிடம் அழுத்தம் திருத்தமாக தெளிகபேசிய எழிலை வியப்பாக பார்த்து கொண்டிருந்த நால்வரும் எழில் பார்வை தங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்து
“ஆத்தி காத்து நம்ம பக்கம் திரும்புதே..” என்று நால்வரும் முணுமுணுக்க, “நீங்க எல்லாரும் யார் எதுக்காக இங்க வந்து இருக்கிங்க..?” என கேட்க, அவர்கள் பதில் கூறும் முன் விஜய் முந்தி கொண்டு “நாங்க நேத்ராவை பார்க்க வந்தோம்.. பார்த்துட்டோம் இப்போ கிளம்பறோம்..” என்று கிளம்ப போக, “ஒரு நிமிஷம் நில்லுங்க!..” என்று அவர்களை நிறுத்தி
எதுக்காக ஹெட் மாஸ்டர் கிட்ட என்னை உங்க மனைவி என்று சொன்னீங்க..? எனக்கு பதில் தெரிஞ்சாகணும் என கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு அழுத்தமாக கேட்ட எழிலை புருவம் உயர்த்தி பார்த்த விஜய்
அது நான் உன்னை விரும்புகிறேன்.. நேத்ரா பேபி வேறு உன்னை அம்மா கூப்பிட்றாளா அதான் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இல்லையான்னு தெரிஞ்சுக்க தான் அப்படி சொன்னேன்.. நான் நினைச்ச மாதிரி நீயும் உங்க ஹெட்மாஸ்டர் கல்யாணம் ஆகவில்லை என்று உண்மையை சொல்லிட்ட..” இன்று விஜயை இடைமறித்து எஸ்கியூஸ் மீ நான் கல்யாணம் ஆகலைன்னு தான் சொன்னேன்
“ஆனால் நேத்ரா என் குழந்தை இல்லை என்று சொல்லவே இல்லையே!!”என்று உதடு வளைத்து கேலியாக சொல்ல. “கல்யாணம் ஆகாமல் குழந்தை எப்படி?..” என்று விஜய் அதிர்ந்து கேட்க
“கல்யாணம் ஆகுறதுக்கும், குழந்தை பிறக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?.. நான் ஒரு பொண்ணு.. அதுவும் குழந்தை பெற்றுக் கொள்ள முழு தகுதி உடைய பொண்ணு இது போதாதா? ” என்று குரல் ஏகத்துக்கும் கிண்டல் இருக்க.. இப்போது அனைவரும் எழிலை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்தனர்..
இமை சிமிட்டும்**