Loading

இமை 21

 

காலை வேளை பரபரப்பில் எழில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. கைகள் அனிச்சையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் மனமெங்கும் நேற்று நேத்ரா தன்னிடம் கேட்ட கேள்வியை ஓடிக் கொண்டிருந்தது.. பார்த்த சில மணி நேரத்தில் குழந்தையின் மனதில் ஆழம் பதிந்து போன விஜய்யை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

 

 

குழந்தை கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தன்னிடம் பதில் இல்லாததை உணர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.. “குழந்தையை மட்டும் சமாதானம் செஞ்சிட்டு போய்ருக்க வேண்டியது தானே.. அவரை யார் குழந்தை கிட்ட அக்கறையாக பேச சொன்னது..?  இப்போ யார்  அவஸ்தை பட்றது?.. என்று விஜய்யை மனதில் வறுத்து எடுத்த எழிலிற்கு அவனை பார்க்கும் நேரம் எல்லாம் அவனிடம் கோபமாக பேசியதை நினைத்து சிறிது குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது..

 

 

தன் யோசனையில் சிந்தித்து கொண்டிருந்த எழில் செல்போன் சத்தம் கொடுத்தது, எழில் யார் அழைப்பது என்று எண்களை பார்க்க எழில் வேலை பார்க்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர் தான் அழைத்திருந்தார்..

 

 

“இவங்க எதுக்கு இப்போ கூப்பிட்றாங்க?.” என்று யோசித்தபடியே அழைப்பை ஏற்று “குட்மார்னிங் மேடம்.. என்ன மேடம் கால் செஞ்சு இருக்கிங்க? எதாவது அர்ஜெண்ட் வொர்க்கா?..” என்று கேட்க, 

 

“குட்மார்னிங் எழில்” என்று பதிலுக்கு வணக்கம் கூறிய தலைமை ஆசிரியர், நான் உன்னை கூப்பிட்டது வேலை சம்பந்தமாக இல்லை ஒரு சந்தோஷமான விஷயம் பற்றி பேச தான் என மறுமுனையில் பேசிக்கொண்டு இருந்த  தலைமை ஆசிரியரின் குரல் உற்சாகமாக ஒலிக்க, 

 

அவரின் உற்சாகத்திற்கு காரணம் புரியாமல் குழம்பிய எழில் சந்தோஷமான விஷயமா என்ன மேடம் என குழப்பமான குரலில் கேட்க அது நான் வந்து சொல்றேன் இன்னைக்கு நீ வேலைக்கு வர வேண்டாம் நானே உனக்கு பர்மிஷன் தர்றேன்.. நீ கொஞ்சம் கிளம்பி ரெடியாகி இரு எழில்..” என்று உத்தரவாக கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்..

 

 

“என்ன அவங்களே போன் போட்டு வரேன் சொல்றாங்க நான் கேட்டாலும் லீவ் தர அவ்வளவு யோசிக்கிறவங்க இப்போ அவங்களாகவே லீவ் தராங்க.. என்னவாக இருக்கும்?..” என்று சிந்தித்து கொண்டு இருக்க, வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டு தன் உணர்வு வந்தவள், நேரம் பார்க்க வேணி அக்கா வந்திருப்பாங்க..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கதவை திறந்தாள்..

 

 

வெளியே நின்றிருந்த வேணி எழில் இன்னும் கிளம்பாமல் அப்படியே இருப்பதை கவனித்து, “என்னமா இன்னும் ஸ்கூல் போகலயா என கேட்டு கொண்டே உள்ளே வர, “இன்னைக்கு இன்னைக்கு லீவ் போட்டு இருக்கேன் அக்கா.. நான் பார்த்துக்கிறேன்.. இன்னைக்கு நீங்க லீவு எடுத்துக்கோங்க”  என்ற எழிலிடம், “என்னாச்சு மா உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று வினவ

 

 

“இல்லை அக்கா எனக்கு கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு அதான்.. சாரி வேணிக்கா உங்களை அலைய வச்சிட்டேன்.. திடீர்னு தான் அந்த வேலை நியாபகம் வந்திச்சு..”என்ற எழிலிடம் “அது பரவாயில்லை மா அப்போ நான் கிளம்பறேன்.. எதாவது உதவி வேண்டுமானால் போன் செய்ங்க நான் வந்திட்றேன்..” என்று கூறிச் சென்றார்

 

 

உறக்கத்தில் இருந்து விழித்த நேத்ரா எழிலை பார்த்ததும் குதூகலம் ஆனாள்.. “அம்மா நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலயா..” என்று உற்சாகமாக கேட்டபடி எழில் கழுத்தை கட்டிக் கொள்ள பதிலுக்கு தானும் குழந்தையை அணைத்துக் கொண்ட எழில், “இன்னைக்கு நான் எங்கேயும் போகல.. பாப்பா கூட தான் இருக்க போறேன்..” என்று நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டபடி கூற..

 

 

ஹாய் ஜாலி ஜாலி இன்னைக்கு.. அப்ப நம்ம இப்பவே வெளியே போகலாமா என்று ஆர்வமாக கேட்ட நேத்ராவிடம், “ம்ம் போகலாம்.. அம்மு குட்டி எழுந்திருச்சு பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு சாப்பிட்டு ரெடி ஆகணும்.. என்று இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட கூச்சத்தில் நெளிந்த நேத்ரா மத்தாப்புவாக சிரிக்க, குளிக்க போகலாமா? என்று குழந்தையை தூக்கிக் கொண்டு குளியலறைக்கு சென்ற எழில்  அவளை குளிக்க வைத்து, வேறு உடை மாற்றி விட்டு உணவை ஊட்டிக் கொண்டிருந்த எழிலிற்கு மீண்டும் 

 

தலைமை ஆசிரியர் பேசியது நினைவிற்கு வர அப்படி என்னதான் இருக்கும்.. எதற்காக இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க.. இன்றைய சிந்தித்துக் கொண்டு இருந்தாலும் ஏன் தலைமை ஆசிரியர்  கூறிய “கிளம்பி ரெடியா இரு என்ற வார்த்தை மனதில் உறுத்தல் எடுக்க, வேண்டுமென்றே  கிளம்பாமல் வீட்டில் இருப்பது போல் இயல்பாக இருந்தாள்..

 

 

“அம்மா நான்  ஆ காமிச்சிட்டே இருக்கேன்.. நீங்க ஊட்ட மாட்டிகிறிங்க” என்று நேத்ரா சிணுங்க, “அச்சோ சாரி அம்மு குட்டி நான் ஏதோ நினைப்பில மறந்துட்டேன்.. சாரிடா” என்று குழந்தையிடம் வெகுவாக மன்னிப்பு கேட்டு கொண்டு உணவை ஊட்டிய எழில், சே கண்டதை நினைச்சு குழம்பி அம்முவை கவனிக்காமல் விட்டேனே என்று தன்னையே நொந்து கொண்டு, 

 

 

“எதுவாக இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தெளிவாக முடிவு எடுத்து தன் கவனத்தை குழந்தை மீது செலுத்தினாள்.. நேத்ராவிற்கு உணவை ஊட்டி விட்டு தானும் உண்டு விட்டு சிறிது நேரம் குழந்தையுடன் விளையாடி கொண்டு இருக்க, மீண்டும்  வீட்டு அழைப்பு மணி கேட்க வந்துட்டாங்க போல இருக்கு..” என்று இதயம் படபடக்க கதவை திறந்தாள்

 

 

வாசலில்  நின்றிருந்தவர்களை பார்த்து திகைத்து நின்ற எழில், வந்தவர்களை வா என்று அழைக்க கூட தோன்றாமல் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. “என்ன ராகி வீட்டுக்கு வந்தாங்களா வாங்கன்னு கூட கூப்பிட மாட்டியா இதுதான் நம்ம பண்பாடா..? என்று வாசலை மறித்து நின்றிருந்த எழிலை சற்று நகட்டி விட்டு தன் வீடு போல் இயல்பாக உள்ளே வந்து கொண்டிருந்தான் விஜயேந்திரன்.. 

 

 

அவனுடன் சேர்ந்து ஷக்தியும், மலரும், விதுரனும், வெண்பாவும் வந்திருந்தனர்.. அங்கு அந்த நேரத்தில் தன் வீட்டில் விஜய்யை எதிர்பார்க்காத எழில்  திகைத்து சிலையாக நின்றிருந்தாள்..

 

சற்று நேரம் முன்பு விஜய் வீட்டில்..

 

 

விஜய் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு காரில் ஏறி அமர்ந்த நொடி 

 

ஒத்தகட ஒத்தகட மச்சான்…

இவன் ஒத்த கண்ண 

ஒருத்தி மேல வச்சான்…

பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா…

இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்… 

 

                                           (பாண்டிய நாடு)

 

என்ற பாடல் காருக்குள் கேட்க விஜய் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன் திகைத்தான்.. ஏனெனில் அவன் அருகில் ஷக்தி ஹாய் மச்சி என்றபடி கை காட்டி அமர்ந்திருந்தான்.. அவன் மட்டும் இல்லாமல் பின்னிருக்கையில் விதுரனும் அமர்ந்திருந்தான்.. அவனுடன் வெண்பாவும், மலரும் அமர்ந்திருக்க, விஜய் நால்வரையும் திகைத்து பார்த்தவன், “நீங்க எல்லாம் எங்க வர்றிங்க?.. நான் என்ன டூருக்கா போறேன்..? நானே என் காதல் இருக்கா இல்லையா என்று தெரிஞ்சிக்க போறேன் ஒழுங்கா எல்லாரும் இறங்குங்க..” என்று அதட்ட,

 

 

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. எங்க காதலுக்கு நீ எவ்வளவு உதவி பண்ணி இருக்க.. அப்ப உன் காதலுக்கு நாங்க உதவி பண்ண வேண்டாமா?. என்று விதுரன் கேட்க “ஆமா உதவி பண்ண வேண்டாமா?.. என்று சக்தியும் ஒத்து ஊத, அண்ணா அண்ணியை பார்க்க நாங்களும் வருவோம் என வெண்பாவும், மலரும் சட்டமாக காரில் அமர்ந்து கொள்ள விஜய் தலையில் கைய வைத்தபடி அமர்ந்து கொண்டான்..

 

 

“என்னடா இதுக்கே இப்படி தலையில கையை வச்சுட்டு உட்கார்ந்துட்ட..? நீ பார்க்க இன்னும் எவ்வளவு இருக்கு காரை எடுடா..” என்று சக்தி துரிதப்படுத்த, “அடேய்ங்களா!! போன கதையில தான் நீங்க ரெண்டு பேரும் ஹீரோவா இருந்தீங்க.. என்னை ரெண்டாவது ஹீரோவா போட்டாங்க.. இதுல நான் தான்டா ஹீரோ.. நான் சோலோவா பெர்பாமன்ஸ் பண்ணிக்கிறேன்.. உங்களை பார்த்ததும் கமெண்ட்ல வேற உங்களை தான் மிஸ் யூ சொல்லிட்டு இருக்காங்க.. இன்னும் நீங்க என் கூட வந்திங்கன்னா நான் ஹீரோ என்கிறது மறந்துடுவாங்க..* என்று விஜய் அழாத குறையாக சொல்ல,

 

 

“நீயும் நல்லா பெர்பாமன்ஸ் பண்ணு மச்சி உன்னையும் தேடுவாங்க..” விதுரன் கூற, சரி இப்படியே பேசிட்டு இருந்தா அண்ணியை எப்போ பார்க்கிறது.. சீக்கிரம் கிளம்புங்க” என்று மலர் துரிதபடுத்த, “வேற ஆப்ஷனே இல்லையா?..” விஜய் பரிதாபமாக கேட்க இல்லவே இல்லை..!! என்ற நால்வரும் கோரசாக பதில் கூற, விஜய் வெளியே போலியாக அலுத்து கொண்டாலும்,  சிறு புன்னகையுடன் தன் காரை செலுத்தினான்..

 

 

கார் கன்னியாகுமரிக்கு போகும் திசையில் செல்லாமல் வேறு திசையில் செல்ல, “விஜய் கன்னியாகுமரி ரைட் சைடு போகணும்.. நீ லெஃப்ட் சைட் போற எங்கடா போற?.. விஜய் அருகில் அமர்ந்திருந்த ஷக்தி குழப்பமாக கேட்க, “எனக்கு இப்போ லிட்டில் கேர்ளை பார்க்கிறதை விட ராங்கியை பார்க்கணும் தோணுது அதான்..” என்று மர்மமான புன்னகையுடன் கூற,

 

 

“என்னடா நேத்து வரைக்கும் லிட்டில் கேர்ள்.!! லிட்டில் கேர்ள்.. என்று புலம்பிட்டு இருந்த இப்போ ராங்கின்னு சொல்ற.. அப்போ தெளிவா முடிவு எடுத்துட்டியா?..” என்று விதுரன் கேட்க, “அய்யோ இப்ப எங்க அண்ணி யாரு?.. லிட்டில் கேர்ளா இல்லை ராங்கியா?.. வெண்பா கேட்க, “எனக்கு தெரிஞ்சு அண்ணாக்கு இந்த ராங்கி அவங்க தான் பிடிச்சிருக்கு நினைக்கிறேன்..” என்று மலர் கூற, எதற்கும் பதில் கூறாமல் விஜய் புன்னகை மாறாமல்  காரை செலுத்தி கொண்டிருந்தான்..

 

 

“ஆமா இவங்க வீடு உனக்கு எப்படி தெரியும்?..” ஷக்தி கேட்க, ஒரு ஹீரோவா இருந்திட்டு இப்படி கேட்கலாமா?.. மச்சி” என்று பதிலுக்கு விஜய் கேட்க, “தப்புதான் மச்சி.. நமக்கு ஒண்ணு வேணும் தோணுச்சினா அதை எப்படி வேணாலும் வாங்கிருவோம் என்று தெரியாதா?.. நைட்டே அட்ரஸ் வாங்கிட்டேன்.. இப்போ அங்க தான் போறோம்..” என்ற விஜய் எழில் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு, “இப்போ அந்த ராங்கி இருக்காளா இல்லை வேலைக்கு போய்ருக்காளா தெரியலை.. ஆனால் நேத்ரா பேபி இருப்பா..அவளை பார்த்துக்கிற கேர் டேக்கர் இருப்பாங்க” என்று கூறி கொண்டே காலிங் பெல்லை அழுத்தி காத்திருக்க, அவன் மனதின் நாயகியே வந்து கதவை திறக்கவும், இனிமையாக அதிர்ந்தான்..

 

 

“என்ன இன்னைக்கு இந்த ராங்கி வேலைக்கு போகலயா.. உடம்பு எதுவும் சரியில்லையா..” என்று தனக்குள் கேட்டபடி எழிலை ஒரு நிமிடம் ஆராய்ந்தவன், அவள் நலமாக இருப்பதை உணர்ந்த பிறகு அவளை சீண்டுவது போல் பேசி வீட்டிற்குள் நுழைய, விஜய்யை பார்த்ததும் நேத்ராவிற்கு உற்சாகம் பொங்க, “அங்கிள்!! என்று கூவி அழைத்து “என்னை பார்க்க தான் வந்திங்களா? நான் நேத்து அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. உங்கள பார்க்க போகலாம்னு ஆனா இப்போ நீங்களே என்னை பார்க்க வந்துட்டிங்களா..” என்று கையை பற்றி கொண்டு உற்சாகமாக கேட்க,

 

தன்னை பார்த்ததும் குழந்தை முகத்தில் பிரகாசத்தை பார்த்து “பேபி நீ என்னை அவ்வளவு தேடினியா?.. ஆனால் நான் உன்னை பத்தி அவ்வளவா நினைக்கவே இல்லை.. என்னை மன்னிச்சிடு பேபி..” மனதோடு நேத்ராவிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சில நொடிகள் குற்ற உணர்வில் தலை குணிந்தவன் தன்னை சமாளித்து கொண்டு “நேத்ரா பேபி நான் உன்னை பாக்க தான் வந்தேன்.. இவங்க எல்லாம் அங்கிளோட ஃப்ரெண்ட்ஸ்..” என்று அங்கிருந்த நால்வரையும் அறிமுகம் செய்து வைத்தான்..

 

நால்வருமே எழில் முகத்தை அதிர்ந்து பார்த்தவர்கள் நொடிக்கும் குறைவான நேரத்தில் அதை மறைத்து தங்களை இயலபாக்கி கொண்டனர்.. எழில் முகத்தை பார்த்த வெண்பாவும், மலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீண்டும் எழிலிடம் “மேம் நாங்க உங்களை ஏற்கனவே பார்த்து இருக்கோம்.. காலேஜ்ல எக்ஸாம் எழுத…” என்று இருவரையும் இடைமறித்து, 

 

“ம் தெரியும் ஞாபகம் இருக்கு..” என்ற எழில் அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நிற்க

 

மீண்டும் வீட்டில் அழைப்பு மணி சத்தம் கேட்க எழில் பொய் கதவை திறக்க அங்கு அவள் வேலை செய்யும் பள்ளியில் தலைமை ஆசிரியர் வந்திருக்க அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர்..

 

எழில் உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்.. நீயும் எவ்வளவு நாள் தனியா இருப்ப உனக்கு ஒரு துணை வேணுமில்ல அதான்..” என்ற தலைமை ஆசிரியரிடம்

 

“யார் மனைவிக்கு யார் மாப்பிள்ளை பார்க்கிறது ஷீ இஸ் மை வொய்ஃப்..” என்று எழில் தோள் மேல் கை போட்டு விஜய் அறிவிக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க, எதுவும் நடவாது போல் தன்னை முறைத்துப் பார்த்து கொண்டு இருந்த எழிலை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.. எழிலின் ஹோட்டல்கார்..

 

இமை சிமிட்டும்.

.

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்