Loading

இமை 20

 

லேப்டாப்பில் தெரிந்த எழிலின் உருவத்தை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த விஜய்க்கு மறந்த நினைவுகள் திரும்பவில்லை என்றாலும், தனக்கு அம்னீஷியா என்று தெரிந்த நாளில் இருந்து அலைகடல் போல் ஆர்ப்பரித்து கொண்டிருந்த மனம் அமைதி அடைந்தது உண்மை.. என்று உணர்ந்தஅதே நேரம் இன்னொரு உண்மையும் அவன் முகத்தில் அறைந்தார் போல் உறைத்தது..

 

 

இந்த லிட்டில் கேர்ள் பார்த்ததும் வந்த இந்த இதே அமைதி, அந்த ராங்கியை பார்த்ததும் வந்ததே.. இது என்ன புது குழப்பம்?. என்று குழம்பியபடி அமர்ந்திருந்தவன், அந்த வீடியோவை தன் செல்போனில் சேகரித்து கொண்டு, லேப்டாப்பில் இருந்து தலையை நிமிர்ந்து பார்த்தவன், எதிரில் அமர்ந்து இருந்தவர்களை பார்த்து சேரை விட்டு எழுந்து நின்றான்.. 

 

 

“ஹேய் நீங்க எப்போ வந்திங்க?..” என்று திகைப்பும் வியப்பாக கேட்ட விஜய்யின் தோளில் “மாமா!!” என்று தாவிக்கொண்டு ஏறி அமர்ந்தாள் ஷக்தி-மலரின் செல்ல சிட்டு.. “செல்ல குட்டி மாமாவ பார்க்க வந்துட்டாங்களா?.” என்று கொஞ்சியபடி குழந்தையை வாரி அணைத்து கொண்ட விஜய் குழந்தையை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, ஷக்தியும் மலரையும் பார்க்க “நீ ‘லிட்டில் கேர்ள் உன்னை விட மாட்டேன்’ என்று சொல்லி லேப்டாப்பை பார்த்து ஜொள்ளு விட்டியே அப்போவே வந்துட்டோம்..” என்று கேலியாக கூறிய ஷக்தியை, விஜய் அசடு வழிய பார்த்து கொண்டு இருக்க,

 

 

அண்ணா நீங்க வெட்கப்பட்றிங்க..” என்று நம்ப முடியாமல் கேட்ட மலர் “நாங்க வந்தது கூட தெரியாமல் அங்க லேப்டாப்பை முழுங்கற மாதிரி பார்த்துட்டு இருந்திங்க?.. யார் அந்த லிட்டில் கேர்ள்?.. என்னோட வருங்கால அண்ணியா?..” என்று மலர் ஆர்வமாக  கேட்க, “அடேய் ஃப்ளவர் நானே இன்னும் எதுவும் கிளாரிஃபை செய்யல அதுக்குள்ள ஏன்டா..” என்றவன், “ஒரு ஃபோன் கூட செய்யாமல் சர்ப்ரைஸ் விசிட்டா..? சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.. அம்மாவும், அப்பாவும் உங்களை பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க..” என்று அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றான்‌..

 

 

மலரின் குழந்தையை தூக்கிய நேரத்தில், “அப்பான்னா என்ன?.. என்று கேட்ட நேத்ராவின் முகம் மனதில் வந்து போக, “சீக்கிரமே எல்லா குழப்பங்களுக்கும் விடை கண்டுபிடிக்கிறேன்.. அதன் பிறகு உன்னோட கேள்விக்கு பதில் சொல்றேன் பேபி.. என்று நேத்ராவின் கேள்விக்கு மனதில் பதில் கூறி கொண்டான்..

 

 

“ம்மா..!!” என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் வந்தவனை விநோதமாக பார்த்த சுமித்ரா, “அடேய் என்னடா கத்திட்டே வர்ற?.” என்று கேட்ட சுமித்ரா அவன் தோளில் சாய்ந்திருந்த குழந்தையை பார்த்ததும், “ஹேய் அம்மு குட்டி..!!” என்று ஆர்ப்பாட்டமாக அழைத்து குழந்தையை தன் கைகளில் வாங்கி கொண்டவர்,

 

 

விஜய் பின்னால் நின்றிருந்த ஷக்தியுடன் வந்திருந்த மலரை பார்த்து, “மலரு!!. உள்ளே வாடா.. மாப்பிள்ளை நீங்களும் வாங்க..” என்று இருவரையும் வரவேற்க, மனைவி சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், மலரும், ஷக்தியும் வந்திருப்பதை கண்டு கீழே வந்தவர் இருவரையும் மகிழ்ச்சியாக வரவேற்று பேசிக்கொண்டு இருந்தனர்..

 

 

“இன்னைக்கு தான் நான் இவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் பாப்பா என் கண்ணுக்குள்ளே இருக்கா நம்ம போய் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாமான்னு கேட்டுட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க என்று சுமித்ரா சந்தோஷமாக கூற..” நானும் இவங்க கிட்ட சொல்லிட்டு இருந்தேன் மா..

 

 

இதோ அதோ போக்கு காமிச்சிட்டே இருந்தாங்க.. இன்னிக்கு நானே போய்க்கிறேன் கிளம்பின பிறகு தான் கூப்பிட்டு வந்தாங்க..” என்று  புகார் செய்து ஷக்தியை பார்த்து நாக்கை துருத்தி பழிப்பு காட்டிய மலரை “அடிப்பாவி..” என்று அதிர்ந்து பார்த்த ஷக்தி 

 

 

“இவ சொல்றத நம்பாதீங்க.. ஆண்ட்டி.. அங்க அவ அத்தை மாமா கிட்ட, செல்லம் கொஞ்சிட்டு என்னேயே மறந்திட்றா.. இவ என்னை கூப்பிட்டாளாமா.. சரியான ஃப்ராடு இவ..” என்று பதிலுக்கு ஷக்தி மலர் மீது புகார் சொல்ல, இல்லை விஜி அண்ணா  நான் சொல்றத நம்புவீங்களா?. இல்லை இவங்க சொல்றத நம்புவீங்களா?.  என்று மலர் விஜய்யிடம் பஞ்சாயத்து வைக்க மலரின் குறும்புத்தனமான பேச்சை கேட்டிருந்த விஜய் மற்றும் அவனின் பெற்றோருக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.. 

 

 

மலரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அவளின் உற்சாகமான பேச்சுமே அவளின் இல்வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்பதை நன்கு உணர முடிந்தது அவர்களுக்கு.. இவர்கள் இருவரையும் பார்க்க மனதிற்கு அத்தனை நிறைவாக இருந்தது விஜய்க்கு.. “நானும் இதே போல ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்வேன்..” என்று மனதில் சங்கல்பம் செய்ய போக

 

 

“ஓ ஒரு பெண்ணா?.. அப்போ நான்?..” என தன் இடுப்பில் கை வைத்து கொண்டு கோபமாக கேட்டபடி எழில் விஜய் மனதில் வந்து நிற்க “அவ இருந்தால் அப்போ நான்?. என்று அவனின் ராங்கியும் கோபமாக கேட்டபடி அவன் இரண்டு கண்களிலும் இரு பெண்கள் வந்து முறைத்து பார்க்க, “அடே விஜய் இதென்னடா உன் காதலுக்கு வந்த சோதனை.. 

 

 

அப்போ காத்துவாக்கில ரெண்டு காதல் மாதிரி உனக்கும் ரெண்டு காதலா?..” என்று மனசாட்சி கேள்வி எழுப்ப, ஹ்க்கும இங்க ஒண்ணுக்கே வழி இல்லை ரெண்டு கேட்குதோ உனக்கு இன்னொரு மனம் கேலி செய்ய, அடச்சே ரெண்டு பேரும் தூர போங்க..”என்று மனசாட்சியை துரத்தி விட்டு சுயம் அடைந்து நிமிர்ந்து பார்க்க.. அவன் எதிரே ஷக்தி கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்..

 

 

“ஷக்தி.. எங்கே யாரையும் காணோம்?..” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்ட விஜய்யை முறைத்து பார்த்த ஷக்தி, “அவங்க எல்லாரும் மேல ரூம் போய்ட்டாங்க சார்.. நான் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் சார்..” என்று கேலி பேசியவன், இங்க ஒரு ரிசார்ட் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்..” என்று ஷக்தி தொழில் விசயமாக பேச, விஜய்யும் அது சம்பந்தமாக பேசி கொண்டு இருந்தனர்..

 

 

இரவு உணவு முடிந்த பிறகு, மலரின் குழந்தையை தூக்கிக் கொண்டு மொட்டை மாடி வந்தவன், குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுக்க, மாமன் தோளில் சுகமாக துயில் கொண்டது சின்ன சிட்டு, “என்ன விஜய் பாப்பா தூங்கிட்டாளா?.” என கேட்டபடி வந்த ஷக்தியிடம், “ம் தூங்கிட்டா..ஆமா நீ உன் பெரிய பேபியை தூங்க வச்சிட்டியா?..” விஜய் குறும்பு குரலில் கேட்க, வலது புருவத்தை விரலால் நீவி விட்டபடி, லேசாக சிரித்தவன்,

 

 

“சரி நீ சொல் உன் காதல் கதையை..” என்று ஷக்தி புருவம் உயர்த்தி கேட்க, “என்ன என்னோட காதல் கதையா?.. இது என்ன புது கதை..” என்று விஜய் திருதிருவென முழித்தபடி சமாளிக்க, “மச்சி நீ இந்த விசயத்தில் இப்போதான் நியூ அட்மிஷன் போட போற.. ஆனால் நாங்க எல்லாம் டிக்கிரி முடிச்சு, டாக்ட்ரேட் பட்டமும் வாங்கியாச்சு.. சோ எனக்கு உன் முகம் பார்த்து நல்லாவே தெரியுது.. சொல்லு விஜய் யார் அந்த பொண்ணு?.”என்று மீண்டும் கேட்க

 

 

“ஃப்ளவர் கிட்ட சொன்ன மாதிரி தான் எனக்கே இன்னும் கிளாரிஃபை இல்லை ஷக்தி.. அதான் என்னால இன்னும் உறுதியாக சொல்ல முடியல..” என்று கூறிய விஜய் தோளை தட்டி கொடுத்த ஷக்தி,  “இந்த குழப்பம் தான் காதலுக்கான முதல்படி.. நீ ரொம்ப குழப்பிக்காத கண்டிப்பாக இயல்பாக இரு உனக்கே தெளிவு கிடைக்கும்..” என்ற ஷக்தி

 

 

“சரி யார் அந்த பொண்ணு?.. அவங்க போட்டோ எதுவும் இருக்கா..? என கேட்க, ஃபோட்டோ இல்லை ஆனால் வீடியோ இருக்கு..” என்ற விஜய் தன் மொபைல் சேமித்து வைத்திருந்த வீடியோவில் இருந்த எழிலை காண்பித்தவன், சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கூற, “ஓ இந்த பொண்ணா அழகா இருக்காங்க.. சரி இதுல என்ன உனக்கு குழப்பம்?..” ஷக்தி புரியாமல் கேட்க,

 

 

“எனக்கு இன்னோரு பொண்ணு மேலயும் இதே உணர்வு வருது..” என்று குரல் உள்ளே போன குரலில் கூறியவனை அதிர்ந்து பார்த்து ஷக்தி “எதே இன்னொரு பொண்ணு மேலேயும் காதலா?.. என்று வியப்பும் அதிர்ச்சியுமாக கேட்ட ஷக்தியிடம் தலையசைத்து ஆம் என்று சொல்ல, “அடேய் நீ எங்களை எல்லாம் மிஞ்சிருவ போல இருக்கே..” என்று கேலி செய்த ஷக்தி, அந்த இன்னொரு பொண்ணு யாருப்பா..?”  என்று கேட்க 

 

 

“அவ சரியான ராங்கி.. ரொம்ப திமிர் பிடிச்சவ.. கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்ல மாட்டா..”  என்று முகம் மின்ன கூறிய விஜய்யை ஷக்தி புன்னகையுடன் பார்த்து இருந்தான்.. “எனக்கு ரெண்டு பேர் மேலயும் ஒரே மாதிரியான உணர்வு தோன்றுதே அப்போ நான் தப்பானவனா ஷக்தி?..” என்று தன்னை பற்றி ஷக்தியிடம் கேட்க, விஜய்யின் குழப்பதை நன்கு புரிந்து கொண்ட ஷக்தி, 

 

 

“இப்ப உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம்.. உன்னோட முதல் காதல்” என்ற சக்தியை விஜய் முறைத்துப் பார்க்க சரி சரி முளைக்காத இந்த ராங்கியை பாக்குறதுக்கு முன்னாடி யாரை பார்த்த அந்த லிட்டில் கேர்ளை தானே சோ பஸ்ட் அந்த லிட்டில் கேர்ள் விஷயத்தை முதல்ல பாரு அதுக்கப்புறம் இந்த ராங்கியை பார்ப்போம்.. ஏன்னா ராங்கி இப்ப ப்ரெசண்ட்ல இருக்கவங்க..‌ஆனால் இந்த லிட்டில் கேர்ள் உன்னோட பாஸ்ட் ல இருந்தவங்க.. அவங்களோட நிலை என்ன என்று முதல்ல அது பாரு..” 

 

 

அன்னைக்கு இப்போ இருக்கிற மனநிலை இருந்திருந்தால் நிச்சயம் லிட்டில் கேர்ளை விட்டிருக்க மாட்டேன்.. அவளும் கன்னியாகுமரி போய்ருக்க மாட்டா அவளுக்கும் அந்த விபத்து நடந்திருக்காது.. எல்லாம் இந்த அரைவேக்காடு இவனால் வந்தது” என்று தன் போக்கில் அஷ்வினை காண்பித்து கூறிய விஜய்யை திகைப்பாக பார்த்த ஷக்தி 

 

 

“விஜய் அந்த பெண்ணுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சா எப்போ?.. அப்போ அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? என்று ஷக்தி வியப்பாக கேட்க, இல்..லை தெரி..யாது என்று மறுப்பாக கூறிக்கொண்டு இருந்த விஜய்க்கு மின்னலாய் சில நிகழ்வுகள் மனதில் வந்து போக,  

 

 

“ஷக்தி எனக்கு கொஞ்சம் தலை சுத்தலா இருக்கு பாப்பாவ கொஞ்சம் பிடி..” என்று குழந்தையை ஷக்தியிடம் குழந்தையை கொடுத்த விஜய் நெற்றியை பிடித்தபடி அங்கிருந்த ஊஞ்சலில் சோர்வாக அமர்ந்து கொண்டான்.. 

 

 

“விஜய் என்ன ஆச்சு தலை ஏதும் வலிக்குதா?.. டாக்டரை கூப்பிடவா?. என பதட்டமாக சக்தி கேட்க அதெல்லாம் எதுவும் வேணாம் ஷக்தி எனக்கு ஏதோ சில நினைவுகள் வந்து போகுது.. இந்த லிட்டில் கேர்ள் ஆபத்துல இருந்தா.. அவளை யாரோ கடத்தி.. கண்களை மூடிக் கொண்டு அன்று நடந்ததை இப்போது கூறி கொண்டு இருந்த விஜய் 

 

 

சட்டென்று கண்விழித்து “ஆமா ஷக்தி லிட்டில் கேர்ளை கடத்தி அவளை ஓட்ற கார்ல இருந்து தள்ளி விட்டு, அவளுக்கு காய்த்தை கொடுத்தவங்களை நானே என் கையால் தண்டனை கொடுத்து..” என்று கோர்வையாக பேச முடியாமல் விட்டுவிட்டு கூறிய விஜய்யிடம், “நீ ரொம்ப பதட்டமாக இருக்க விஜய்.. இந்தா இந்த தண்ணீர் குடி..” என்று ஷக்தி தண்ணீர் பாட்டில் கொடுக்க அதை வாங்கி பருகிய விஜய், சற்று நிதானம் அடைந்தான்..

 

 

“ஷக்தி எனக்கு ஞாபகம் வந்திருச்சுடா..” என்று சந்தோஷமாக கூறிய விஜய்க்கு இத்தனை நாட்கள் இருட்டில் மூச்சு முட்டி கிடந்தவன் வெளிச்சமும், காற்றும் கிடைத்தது போல் முகம் பிரகாசமாக தன்னிடம் கூறிய விஜய்யை பார்த்த ஷக்திக்கும் மகிழ்ச்சியே!!. லிட்டில் கேர்ள் எங்க பார்த்தேன்னு நல்லாவே ஞாபகம் வந்திருச்சுடா என்று சந்தோஷமாக கூற

 

 

“அப்பாடா இப்போ தான் ரொம்ப சந்தோஷம் இருக்கு..” என்றபடி விஜய்யை அணைத்து விடுவித்த ஷக்தி “இப்போ சொல்லு. உன் லிட்டில் கேர்ள் அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்று ஷக்தி விசாரிக்க 

 

தனக்கு மறந்து போன பழைய நிகழ்வுகள் மீண்டும் நினைவிற்கு வந்ததில் சந்தோஷமாக இருந்த விஜய், ஷக்தி எழிலை பற்றி கேட்டதும் முகம் இறுக இந்த அஷ்வின் மட்டும் அன்றைக்கு அவ கூட போகாம இருந்திருந்தால், என் லிட்டில் கேர்ள் இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கி இருந்திருக்க மாட்டா.., என்று கோபமாக கூற

 

“ரொம்ப குழப்பமாக இருக்குடா.. அந்த அஷ்வின் தானே லிட்டில் கேர்ள் மேரேஜ் செய்ய போறான்னு சொன்ன.. அப்பறம் எப்படி அவனால் இவளுக்கு ஆபத்து வந்துச்சு என்று சொல்ற..” ஷக்தி சந்தேகத்தை கேட்க, 

 

“எனக்கும் இதுல நிறைய சந்தேகங்கள் இருக்க ஷக்தி.. நான் லிட்டில் கேர்ள் ஹாஸ்பிடல் சேர்த்த பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.. அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. ஹாஸ்பிடல்ல என்ன நடந்தது என்று விசாரிக்கணும்.. இதுக்காகவே நான் கன்னியாகுமரி போய் தான் ஆகணும்..” என்று கூறிய விஜய்க்கு “அவளை நீ பார்த்தா இரண்டடி தள்ளி நிப்ப..”என்று அஷ்வின் கூறிய வார்த்தைகள் மனதில் ஓடி கொண்டிருந்தது.. 

 

 

இங்கு எழில் வீட்டில், படுக்கையில் நேத்ராவை தட்டி கொடுத்து அவளை உறங்க வைக்கும் முயற்சியில் இருந்த எழிலிடம், “அம்மா நாளைக்கும் நாம வெளியே போகலாமா..” என்று நேத்ரா ஆர்வமாக கேட்க, எழிலுக்கு அஸ்வினை நினைத்த சிறிது உறுத்தல் இருந்தாலும், குழந்தையின் ஆசைக்கு தடை போட விரும்பாமல், “போகலாமே!! எங்க போகலாம்?” என கேட்க 

 

 

“நம்ம இன்னைக்கு போனோமே அங்கேயே போகலாமா?.. என நேத்ரா உற்சாகமாக கேட்க, “ஏன்டா அங்க போகணும் கேட்கிற?” கேட்ட எழி‌லிடம் “அங்க தானே அந்த அங்கிள் இருப்பாங்க..” என்று குழந்தை கண்கள் மின்ன கூற “யார் அந்த அங்கிள்?. என்று புரியாமல் கேட்ட எழிலிடம் 

 

“அந்த அங்கிள் எனக்கு சாக்லேட் கொடுத்தாங்களே.. நான் அழும் போது கூட என்னை தூக்கி வச்சிக்கிட்டாங்களே அந்த அங்கிள் தான்..” என்று கூற எழில் குழந்தையை திகைத்துப் பார்த்தாள் 

 

 

“அம்மா அந்த அங்கிள் மறுபடியும் வருவாங்களா.. எனக்கு சாக்லேட் தருவாங்களா.. என்னை உயரமா தூக்குவாங்களா?.. எனக்கு அந்த அங்கிளை பார்க்கணும் போல இருக்கும்மா..” தன் ஏக்கங்களை குழந்தை கூறி கொண்டு இருக்க, எழில் பதில் சொல்ல முடியாமல் விழித்து கொண்டு அமர்ந்திருந்தாள்..

 

மறுநாள் விஜய் சொன்னது போலவே கன்னியாகுமரி கிளம்ப, “ம் ரைட் ரைட் போகலாம்..” காரின் பின் இருக்கையில் கோரசாக இரு குரல்கள் கேட்க விஜய் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, “ஹாய்..” என்று கை காட்டியபடி ஷக்தியும், விதுரனும் அமர்ந்திருந்தனர்..

 

“நீங்களா?!” என்று விஜய் அதிர்ந்து கேட்க.. “ நாங்களே தான் எங்க காதலுக்கு நீ உதவி செஞ்ச.. உன் காதலுக்கு நாங்க உதவி செய்ய போறோம்..” என்று மீண்டும் இருவரும் கோரசாக சொல்ல, விஜய் தலையில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டான்..

 

 

இமை சிமிட்டும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்