Loading

இமை 19

 

எழிலையும், நேத்ராவையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த விஜய்க்கு எழிலை நினைத்து சற்று குழப்பமாக இருந்தது.. எப்பவும் இரும்பை முழுங்கின மாதிரி இறுக்கமாகவே இருக்காளே அவளுக்கு அப்படி என்னதான் ஆச்சு?.. கையில குழந்தை இருக்கு.. கணவன் கூட இருக்கிற மாதிரி தெரியல அந்த குழந்தைக்கு அப்பா என்ற அடையாளமே தெரியாமல் அப்பா என்றால் என்னன்னு கூட தெரியாம வளர்த்துட்டு இருக்கா.. அப்படி என்னதான் நடந்து இருக்கும் இந்த ராங்கி வாழ்கையில்?.. என்று பல சிந்தனையோடு உள்ளே வந்த விஜய் அஷ்வினோடு மோதி கொள்ள 

 

அஷ்வினை பார்த்த விஜய்க்கு இந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.? என்று யோசித்து கொண்டு இருந்த வேளையில், “யோவ் பார்த்து வர மாட்டியா நீ..” என்று கோபமாக பேசிய அஷ்வினுக்கும் விஜய்யை எங்கேயோ பார்த்தது போல் தோன்ற சில நொடிகள் சிந்தித்தவன், விஜய்யை தான் எங்கே பார்த்தோம் என்று ஞாபகம் வர, முகம் கோபத்தில் சிவக்க விஜய்யை பார்த்தவன் 

 

 

“என் வழியில் குறுக்க வர்றதே நீ உன் வேலையா வச்சிருக்கியா?.. என்று கோபமாக கேட்ட அஷ்வினை புரியாமல் பார்த்த விஜய், அவன் வேறு யாரையோ சொல்கிறான் என்று நினைத்து அஷ்வினை கடந்து செல்ல, “ஹலோ  மிஸ்டர் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. நீ பேசாமல் போனால் என்ன அர்த்தம்?..” என்று விஜய்யிடம் மல்லுக்கு நிற்க

 

 

“மிஸ்டர் பார்த்து பேசுங்க.. உங்களை தெரியாமல் இடிச்சிட்டேன்.. அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன்.. அதோட முடிஞ்சது.. இனி ரொம்ப பேசின என் காரை வச்சு உன்னை இடிச்சு தூக்கி போட்டு போய்ட்டே இருப்பேன்..” என்று விரல் நீட்டி மிரட்டிய விஜய்யை, அஸ்வின் அருகே நின்றிருந்த அவனின் மனைவி சிறிது பயத்துடன் பார்த்தவள், “ஏங்க எதுக்கு வம்பு வாங்க போகலாம் சண்டை வேணாம்..” என்று அஷ்வின் கரத்தை பிடித்து இழுக்க

 

 

“என்ன நீ அன்னைக்கும் இவன் பேசும் போது ஒருத்தி பயந்து என் கையை புடிச்சு இழுத்துட்டு போனா.. இன்னைக்கு நீ என் கை புடிச்சு இழுத்துட்டு போற.. இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?.. இல்லை என்னை என்ன பயந்தாங்கோலின்னு நினைச்சீங்களா ரெண்டு பேரும்?..” என்று  தன் மனைவியிடம் கோபமாக பேச, “என்னைக்கு யாருங்க உங்க கைய பிடிச்சு இழுத்தாங்க?.. மற்ற அனைத்தும் மறந்து மனைவியின் உரிமையில் அஷ்வினின் மனைவி கோபம் கொள்ள 

 

 

அவள் கோப பார்வையை பார்த்தும், “ரிச்சா டார்லிங் நான் ஏற்கனவே உன்கிட்ட ஒரு பொண்ண பத்தி சொல்லிருக்கேன் இல்ல.. அவளை நாலுபேர் சேர்ந்து கடத்தி.. அப்பறம் அவ முகம் கூட” என்று ஏதோ கூற வந்தவனை இடைமறித்து ம் ம் புரியுது..” என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு கூற, 

 

 

அன்னைக்கு அவளுக்கு இந்த மிஸ்டர் தான் சப்போர்ட் செஞ்சாரு பக்கத்துல இருக்கும்போது எதுக்கு பயப்படுற?.. என்று வீர வசனம் பேசி தன் மனைவியை சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில் விஜய் “இது என்ன புது ட்விஸ்ட்..  இவன் சொல்ற பெண் யாராக இருக்கும்?.. ஒரு வேளை என் கனவில் கேட்ட குரலுக்கு சொந்தக்கார பெண்ணாக இருக்குமோ.. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி கேட்ட இந்த ராங்கியோட குரலும் அதே மாதிரி தான் இருந்தது..” என்று நினைத்தபடி 

 

 

“ஹே மிஸ்டர் இதுக்கு முன்ன நீ என்னை எங்கேயாவது பார்த்து இருக்கியா?.. என்ன?.” என்று விஜய் குழப்பமாக கேட்க, “ஓஹோ!! உனக்கு என்னை பார்த்த ஞாபகம் இல்லையோ?..” இதை நான் நம்பணுமா?..” என்று எகத்தாளமாக கேட்க, விஜய்யின் பொறுமை குறைந்தது.. “இவன் சரியான லூசா இருப்பான் போல.. நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டான் இவன் கிட்ட இப்படி கேட்டா எதுவும் சொல்ல மாட்டான்..‌ இவன் வழியில போய் தான் நம்ம உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து விஜய்,

 

 

“சரி மிஸ்டர் எனக்கு அன்னைக்கு நடந்தது நினைப்பு இருக்கு.. உன் மனைவிக்கு அன்னைக்கு நடந்த விசயத்தை உன்னோட வீர தீர பராக்கிரமத்தை பத்தி சொல்லேன்.. அன்னைக்கு அந்த பெண் உதட்டில் முத்தம் கொடுக்க போய் அந்த பொண்ணு உன்னை செருப்பால் அடிக்க வந்து.. அப்பறம்.. அங்க ஹோட்டல் களேபரம் நடந்து.. என்று நடக்காததை நடந்தது போல் கூறியவன் மேலும் ஏதோ கூற வந்த விஜய்யை அவசரமாக இடைமறித்து அஷ்வின்

 

 

“என்ன மிஸ்டர் உளர்ற நான் அவளுக்கு கிஸ் செஞ்சேனா?. இது சுத்த பொய்..”என்று மறுத்த அஷ்வினை உதடு வளைத்து நக்கலாக பார்த்தவன், எனக்கு தெரிஞ்சதை அன்னைக்கு அவங்க நடந்தது சொன்னேன்..” என்று அசராமல் பொய்யை அடித்துவிட்டவன் “நான் சொல்றது பொய்யாக இருந்தால் நீ உண்மையை சொல்லேன்.. எனக்கு என்ன வந்தது?.. ஒரு வேளை நீ சொல்ற பொய்யை உன் மனைவி நம்ப மாட்டாங்களோ..?” என்று கேலி பேசியவனை அஷ்வின் முறைத்துப் பார்க்க 

 

 

“என்ன மிஸ்டர் அமைதியாக இருக்க..? அப்போ நிஜமாகவே நான் சொன்ன மாதிரி நீ ஃப்ராடு என்று நல்லாவே தெரிஞ்சிருச்சு.. நீ சொல்ற பொய்யை  உன் மனைவி மட்டும் தான் கேட்பாங்க.. அவங்க கிட்ட சொல்லிட்டு போ” என்று தோள் குலுக்கி கூறி அஷ்வினை தூண்டிவிட்டு அலட்சியமாக சென்றவனை,  ஆத்திரமாக பார்த்த அஷ்வின், விஜய் சட்டை காலரை பிடிக்க வர, அதை அலட்சியமாக தட்டி விட்ட விஜய், பொய் சொல்றவங்களுக்கு இப்படி தான் கோபம் வருமாம்..” நிதானமாக கூறியவன் அஷ்வின் கோபத்திற்கு தூபம் போட 

 

 

“என்ன நான் சொல்றது பொய்யா?! அன்னைக்கு உன் ஹோட்டலுக்கு வந்த என்னை நீ இன்சல்ட் செஞ்சேல்ல..” அஷ்வின் கோபமாக கேட்க

 

“இல்லை..” என்று விஜய் மறுக்க 

 

“அன்னைக்கு அவளுக்கு பீரியட்ஸ் அவ ட்ரெஸ் கரையாகிருச்சு என்று நீ உன் கோட் கழட்டி அவளுக்கு கொடுக்கல..”

 

விஜய்க்கு அஸ்வின் கூறுவது அனைத்தும் புதிதாக இருந்தாலும், அவன் அந்த நிகழ்வை பற்றி சொல்ல சொல்ல, இது எங்கேயோ நடந்தது போல் தோன்றியது அவனுக்கு.. ஆனாலும், அஷ்வினிடம் இருந்து மேலும் உண்மைய வாங்க, “நீ சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை மிஸ்டர்… இப்பவும் நீ பொய் தான் சொல்ற..” என்று மேலும் அவன் கோபத்திற்கு தூபம் போட

 

 

“நான் பொய் சொல்றேன்னா நீ தான் அவ்வளவு பெரிய ஹோட்டல் வச்சிருக்கியே அந்த ஹோட்டலில் சிசிடிவி கேமரா இல்லாமலா இருக்கும்?.. நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்த தேதியில் இந்த டைம்ல உன் சிசிடிவில போட்டு  பார் அப்போ தெரியும்.. யார் பொய் சொல்றாங்க என்று..” அஷ்வின் கூற அந்த சிசிடிவி பதிவை இப்போதே சென்ற பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் உடல் பரபரத்தது விஜய்க்கு.

 

 

இத்தனை நாள் தன் குழப்பத்திற்கு அந்த வீடியோவில் எதாவது தீர்வு கிடைக்கும் என்று மனதின் ஓரம் ஒலித்து கொண்டு இருக்க, அஷ்வின் அருகில் வந்த விஜய் “சின்ன குழப்பத்தில் மண்டை குழம்பி இருந்தேன் மிஸ்டர் அந்த குழப்பம் உன்னால கொஞ்சம் தீர்ந்திருக்கு.. அந்த வீடியோ பார்த்த பிறகு என் குழப்பம் முழுசா தீருமா என்று பார்ப்போம்” அவன் கன்னத்தில் லேசாக தட்டி செல்ல, இவன் என்ன சொல்றான்..” என்னால இவன் குழப்பம் தீர்ந்ததா?.. என்று குழப்பத்தோடு விஜயை பார்த்த அஸ்வின் விஜய்யின் சிரித்த முகம் ஆத்திரம் கொடுக்க 

 

 

“ஹலோ மிஸ்டர் அன்றைக்கு நீ யாரோ ஒருத்திக்கு பரிந்து பேசினேல்ல அவ இன்னைக்கு எப்படி இருக்கா என்று உனக்கு தெரிய வேணாமா?..” என்று ஏளனமாக கேட்க, நடந்து கொண்டிருந்த விஜய் நின்று அஷ்வினை திரும்பி பார்த்தான்..

 

 

“அவ இப்ப யாரும் இல்லாம அனாதையாக நிற்கிறா தெரியுமா?.. அவளை நாலு பேர் சேர்ந்து கடத்தி அவளை என்ன செஞ்சாங்களோ.. அன்னைக்கு அவ மேல அவ்வளவு கரிசனம் காட்டின நீ இப்போ அவளை பார்த்தாலே நாலு அடி தள்ளி நிப்ப..” என்று எகத்தாளமாக கூற, உள்ளம் பதறியது விஜய்க்கு.. 

 

“அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?..” என்று விஜய் தன் பதட்டத்தை மறைத்து வெகு இயல்பாக கேட்க, “சொல்ல மாட்டேனே.. நீயாக பார்த்து தெரிஞ்சிக்க…”என்றவன்,  

 

“அவளுக்கும், எனக்கும் ஒரு கணக்கு இருக்கு.. அது தீர்த்த பிறகு அவ திமிரை அடக்கி வைக்கிறேன்..” என்று மனதில் கறுவிக்கொண்டு, “இனி ஒரு தடவை உன்னை நான் பார்க்க கூடாது மிஸ்டர்.. திரும்பவும் உன்னை பார்த்தேன்னா உன் சேதாரத்திற்கு நான் பொறுப்பு இல்லை..” என்று விஜய்யை எச்சரித்து செல்ல, அவன் மிரட்டுவதை பார்த்த விஜய் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டவன்.. தன் சிரிப்பை மறைக்க மறு பக்கம் திரும்பிக் கொள்ள

 

“ஏங்க போதும் வாங்க.. அவர் நீங்க மிரட்டினதுல பயந்து முகத்தை திருப்பிட்டாங்க போதும் வாங்க போகலாம்..” என்று அஷ்வின் மனைவி அவனை அழைத்து சென்றாள்..

 

நேத்ராவை முன்னாடி அமர வைத்து கொண்டு தன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த எழிலிற்கு தான் விஜய்யிடம் நடந்து கொண்டது அதிகப்படியோ என்று தோன்றியது உதவி செய்தவனை அலட்சியப்படுத்தியது மனதிற்கு ஒருத்தனாக இருந்தாலும் ஏனோ அவன் அருகாமை தன் இயல்பை தொலைப்பது போல் தோன்ற அவனிடம் சற்று விலகியே இருப்பதற்கு தான் கோபமாக பேசிவிட்டு வந்திருந்தாள்..

 

முன்னாடி அமர்ந்திருந்த நேத்ரா தன் அன்னையை பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாக இருந்தாள்.. தன் சிந்தனையில் இருந்து வெளிவந்த எழில் நேத்ரா தன்னை பார்த்து கொண்டு இருப்பதை உணர்ந்து “என்ன அம்மு அம்மாவையே  பார்த்திட்டு இருக்க?. அம்மாகிட்ட எதாவது கேட்கணுமா?..” என்று கேட்க, 

 

 

“அம்மா அந்த அங்கிள் யாரும்மா?.. அவங்க எவ்வளவு ஹைட்டா இருந்தாங்க.. ஷின்சான்ல வர்ற “ஆக்ஷன் காம்மன்” மாதிரி இருந்தாங்க..” என்று உற்சாகமாக கூறிய குழந்தை, “ம்மா அங்க இருந்த எல்லாருக்கும் அம்மா இருந்தாங்க.. அப்பறம் அம்மா கூட அங்கிள் இருந்தாங்க.. ஆனால் என் கூட நீங்க மட்டும் தான் இருந்திங்க..” என்று கேட்க

 

 

சில நொடிகள் குழந்தையிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த எழில், “அவங்க எல்லாம் நிறைய சாப்பிடுவாங்க அவங்களுக்கு அம்மாவால சாப்பாடு கொடுக்க முடியாது அம்மு அதான் நான் அவங்களை நம்ம கூட வச்சுக்கல..” என்று சமாளிக்க “ஓ அப்போ சரி மா..” என்ற கேட்டு கொண்ட நேத்ரா பின்னாளில் இதை வைத்தே எழிலை மடக்கி விஜய்க்காக பரிந்து பேச போவது தெரிந்திருந்தால் இதை வேறு விதமாக சமாளித்திருப்பாளோ?.. என்னவோ?..

 

 

இங்கு அஷ்வின் அந்த மால்லை விட்டு வெளியே சென்றதும், விஜய்யும் அங்கிருந்து வெளியேறி செல்வதை பார்த்த, அவனின் கிளையண்ட், “சார்.. சார் என அழைத்தபடி அவன் பின்னே ஓடி வர, “ சாரி மதிவாணன் நான் ரொம்ப முக்கியமான ஒரு வேலையாக போறேன்.. நீங்க நாளைக்கு காலையில என் ஹோட்டல் வந்திடுங்க..” என்று கூறியவாறு தன் காரை நோக்கி சென்றவனை புரியாமல் பார்த்து கொண்டு நின்றார் அவர்..

 

 

தன் ஹோட்டலுக்கு வந்த விஜய், தன் லேப்டாப்பில் சிசிடிவி பதிவை ஆன் செய்து அஷ்வின் சொன்ன தேதியில் ஓட விட்டு பார்த்தான்.. அஷ்வின் கூறியது அனைத்தும் அதில் காண்பித்து கொண்டு இருந்தது..

 

 

எழிலை அன்று பார்க்கும் போது வராத ஒரு உணர்வு இன்று பார்க்கும்போது தோன்றியது அவனுக்கு.. அந்த உணர்வுக்கு வார்த்தையில் வடிவம் கொடுத்தால் அதோடு முடிந்துவிடும் என்று நினைத்து அந்த உணர்வுக்கு பெயரிடாமல் அப்படியே விட்டவன், “லிட்டில் கேர்ள்.!!” என்று முணுமுணுத்த படி “அன்னைக்கு உன்னை எப்படி நான் விட்டேன்?!…” என்று மனதில் வியப்பாக நினைத்தபடி லேப்டாப்பில் தெரிந்த எழில் உருவத்தை வருடி கொடுத்தவன்,

 

 

“இப்போ நீ எங்கே இருக்க?.. அந்த லூசு பையன் உனக்கு ஏதோ ஆகிருச்சு என்று சொன்னான்.. உனக்கு என்ன ஆச்சு லிட்டில் கேர்ள்..? உனக்கு என்ன நடந்திருந்தாலும் இனி உன்னை நான் விட மாட்டேன்..

 

பூத்து குலுங்கும் இந்த பொட்டு

வச்ச வெண்ணிலவ  பொத்தி

பொத்தி பார்த்திடுவேன்.

காத்து கமகமக்கும் கட்டழகு

பெட்டகத்தை கண்ணில்

வச்சு காத்திடுவேன்..

 

இமை சிமிட்டும்***

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்