Loading

இமை 16

 

அஷ்வினிடம் கோபமாக பேசி அவனுக்கு பதிலடி கொடுத்து விட்டு வந்தாலும், எழிலிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்து கொண்டு இருந்தது.. காலையில் இருந்த மனநிலை முற்றிலும் மாறி மீண்டும் மனதில் இறுக்கம் தோன்றியது.. இத்தனை நாள் இல்லாமல் இப்போ எதுக்கு வந்தான் இவன்?..’ மனதில் சலிப்பாக நினைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்திருந்த எழிலிற்கு,  

 

 

“அன்னைக்கு எனக்கு அடிபட்டு  ஹாஸ்பிடல்ல இருந்த போது இந்த அஷ்வின் தான் என்னை நல்லா பாத்துக்கிட்டாங்கன்னு நர்ஸும், டாக்டரும் சொன்னாங்க.. ஆனால் இவன் குணத்துக்கும், அந்த கனிவான பேச்சிற்கும், அக்கறையான கவனிப்பிற்கும் சுத்தமா சம்பந்தமே இல்லாம இருக்கே..! 

 

 

அதுவும் அந்த சில மணி நேரம் மட்டும் எனக்கு கிடைத்த அந்த பாதுகாப்பு உணர்வு, அதுக்கு முன்னும் கிடைக்கவே இல்லை அதுக்கு பிறகும் கிடைக்கவில்லையே..” என்று குழப்பமாக நினைத்த எழில் அஷ்வின் கூறிய ‘எனக்கு உரிமையான பொருள் உன் கிட்ட இருக்கு..’ என்ற வார்த்தை மனதை உலுக்க

 

 

“காலையில் தான் உங்களை பார்த்துட்டு வந்த பிறகு மனம் அமைதியாக இருக்கே என்று அதிசயமாக நினச்சேன்.. அதுக்குள்ள ஒரு சோதனையை அனுப்பிட்டிங்களே மிஸ்டர் ஆறுமுகம்!!..”  கண்கள் மூடி சில நொடிகள் கடவுள் முருகனிடம் அவரையே புகார் செய்தவள், “இத்தனை வருஷம் என்னை வழிநடத்தி காப்பாத்தின நீங்க இனியும் காப்பாத்துவிங்க என்று நம்பிக்கை எப்பவும் இருக்கும்..” என்று நம்பிக்கையோடு பாடம் எடுக்க வேறு வகுப்பிற்கு சென்றாள்… 

 

 

இங்கு ஹோட்டல் சமையலறையில் நின்று விஜய் சமையல் செய்து கொண்டு இருந்தான்.. அங்கு ஊழியர்கள் அவனை சிறு அச்சத்துடனும், பதட்டத்துடனும் பார்த்து கொண்டு இருந்தனர்..  “சார்.. சார் இனி இந்த மிஸ்டேக் நடக்காது சார்.. இனி கவனமாக சமைக்கிறோம்..” என்று சீஃப் குக் விஜய்யிடம் பணிவாக கேட்டு கொண்டிருக்க, அவன் அவர் பேச்சை காதில் வாங்காமல் தன் வேலையை செய்து கொண்டு இருந்தான்..

 

 

தான் மறந்து போன கடந்த காலத்தை அன்னையின் வாயிலாக கேட்ட விஜய்க்கு உள்ளே குழப்பமாக இருந்தாலும் தன் பெற்றோரிடம் தன் குழப்பத்தை காண்பிக்கும் இயல்பாக அவர்களிடம் பேசிவிட்டு தனக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்ததை நினைத்து வீட்டில் இருந்து சிறு குழப்பத்துடன் ஹோட்டல் வந்த விஜய்க்கு விதுரன் அழைத்திருந்தான்..

 

 

“என்ன மச்சி அதிசயம் சார் பிஸி ஷெட்டியூல் நண்பனை எல்லாம் நியாபகம் வச்சு கூப்பிட்றிங்க.. “ என்று கேலியாக கேட்ட விஜய்க்கு விதுரன் எதற்காக தன்னை அழைத்திருக்கிறான் என்று நன்றாகவே உணர்ந்திருந்தான்.. காலையில் வீட்டில் நடந்த விசயத்தை தன் அன்னை விதுரனிடம் கூறி இருப்பார் என்று உணர்ந்திருக்க

 

 

அதை மெய்பிப்பது போல், “என்ன மச்சி உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி நீ புதையல் எடுத்த கதையெல்லாம் அம்மா உன்கிட்ட சொல்லிட்டாங்களாம்?!!..” விஜய் அழைப்பை எடுத்ததுமே விதுரன் கேலியாக கேட்க, “ஹலோ யார் நீங்க?.. மச்சின்னு கூப்பிட்றிங்க.. நம்பர் மாத்தி போட்டுட்டிங்க..” என்று கோபமாக சொல்ல

 

“மச்சி என்னை மறந்துட்டியா?!!.

தோழா என்ன மறந்துட்டியா?.!!

மச்சி என்ன மறந்துட்டியா?!! 

மாமு என்ன மறந்துட்டியா?!!”

 

மறுமுனையில் இருந்த விதுரன் பாட, 

 

“நான் யாரு எனக்கேதும்

தெரியலையே

என்னை கேட்டா

நான் சொல்ல வழியில்லையே..”

 

பதிலுக்கு விஜயும் பாட

 

மறுமுனையில் இருந்த விதுரன் சிரித்து விட்டான் “போதும்.. போதும் ரொம்ப லெங்க்தா போகுது..” என்று தடுத்தவன் சொல்லுடா அப்பறம்..” என்று விதுரன் இலகுவாக கேட்க, “எனக்கு ஆக்ஸிடென்ட் நடந்தது அப்ப உனக்கும் தெரியும் அப்படித்தானே?..” விஜய் விதுரனிடம் கேட்க அப்போஸ்யா..” என்று விதுரன் ஒத்துக்கொள்ள, 

 

 

“நீயும் ஏன் டா மறைச்ச?..* என்று விஜய் ஆதங்கமாக கேட்க, “ஏன்னா நீ தான் என்னை மறக்கலயே.. ஒரு வேளை அந்த ஆக்ஸிடென்ட்ல நீ என்னை மறந்திருந்தால் அப்போவே உன் தலையில் நாலு அடி அடிச்சு என்னை ஞாபகம் வர வச்சு இருப்பேன்.. ஆனா நீ தான் என்னை மறக்கவில்லை அதோட இந்த அம்னீஷியா யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே.. சோ இதெல்லாம் சேர்த்து தான்..” என்ற விதுரனிடம்

 

 

“புரியுது மச்சி..” என்று விஜய்யின் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்து, “என்னாச்சு மச்சி? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?.. அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து, அழுத்தமான‌ குரலில் கேட்ட விதுரனிடம், “என்னமோ தெரியலை மச்சி.. ஏதோ மனசு அலபாய்ஞ்சிட்டே இருக்கு..” என்று சிறு சலிப்பாக கூற

 

 

“என்னடா சொல்ற?.. சொல்ல வருவதை ஒழுங்கா சொல்லு..” என்று விதுரன் நண்பனை அதட்ட, விஜய் தன் கனவில் கேட்ட குரலையும் அதற்குள் ஒளிந்திருந்த தவிப்பையும் கூற, சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்திருந்த விதுரன் அது எப்படி மச்சி இத்தனை வருஷம் வராத கனவு இப்போ வந்து இருக்கு?.. என யோசனையாக கேட்க 

 

 

“எனக்கும் அதுதான் தெரியல டா..” என்று குழப்பமாக விஜய் கூற, “நிஜமாவே உனக்கு அந்த கனவு ஒரு தாக்கத்தை கொடுத்து இருக்கா?.. என மீண்டும் விதுரன் கேட்க “இப்பவும் எனக்கு அந்த குரல் என் காதில் கேட்டுகிட்டு இருக்க மாதிரி இருக்கு மச்சி.. இந்த நொடி அந்த குரலுக்கு சொந்தமானவங்களோட துன்பத்துக்கு காரணமானவங்களை அடிச்சு கொல்லணும் என்று ஆத்திரமாக வருது மச்சி.. அந்த குரல் என்னை தேட்ற மாதிரி தோணுது..” என்று நெற்றியை நீவியபடி விஜய் கோபமாக கூறி கொண்டு இருக்க

 

 

“மச்சி நான் எனக்கு நடந்த இன்சிடெண்ட் வச்சு சொல்றேன்.. உன்னோட ஆழ்மன எண்ணத்தில் யாரோ இருக்காங்க என்று நினைக்கிறேன்.. அவங்களை சமீபத்தில் எங்கேயாவது பார்த்திருப்ப.. அதோட தாக்கம் தான் இந்த கனவாக இருக்கும்..” என்ற விதுரனிடம், “அப்படி யாரும் இருக்கிற மாதிரி தோணல மச்சி..” விஜய்யிடம் இருந்து உடனே பதில் வர, “அடே மச்சி சட்டுனு சொல்லாதடா கொஞ்சம் யோசி..” என்ற விதுரனிடம், 

 

 

“ஏன் மச்சி ஒருவேளை அப்படி அவங்களை பார்த்தா நமக்கு அது அவங்க தான் எப்படி தெரியும்?.. அவங்கள பார்க்கும் போது என்ன மாதிரி மனசு உணர்த்தும் அதற்கான அறிகுறி என்ன?..” என்று ஏதோ பெரிய தேர்வு எழுதுவதற்கு சந்தேகம் கேட்பவன் போல மிகத் தீவிரமாக விஜய் கேட்க,

 

 

“மச்சி நீ ஆணியே..” என்று ஏதோ திட்டி கூற வந்த விதுரனை தடுத்து “போதும்.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு விடு நான் பாத்துக்குறேன்..” என்று விஜய் அவசரமாக தடுக்க, 

 

 

“நீ எல்லாம் லவ் மேரேஜ் பண்ணுகிறேன் என்று வீர வசனம் பேசிட்டு திரியுற.!!” என்ற கேலி செய்த விதுரன், “சில உணர்வுகள் சொன்னா புரியாது மச்சி அது நீயா உணர வேணும் மச்சி.. அதெல்லாம் ஒரு ஃபீல்.. உன் தங்கச்சியை முதல் முறையாக பார்க்கும் போது.. அப்படியே சும்மா ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி உள்ளுக்குள் அவ்வளவு குளு குளு ன்னு இருந்துச்சு..” என்று அந்த நாள் நினைவில் ரசனையோடு ரசித்து கூறிக் கொண்டிருக்க 

 

 

“எனக்கு தான் ஜிகர்தண்டாவே பிடிக்காதே மச்சி..” என்று விஜயின் குரல் அவசரமாக ஒலிக்க, “இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம், காதல் குஷ்டம் தான் டா..” என்று கடுப்பாக பேசிய   விதுரன், “மச்சி பி சீரியஸ் டா.. நடந்து போன கனவை பத்தி எதுவும் நினைக்காத.. இனி அந்த மாதிரி கனவு வந்தால் கொஞ்சம் அப்சர்வ் பண்ணு.. 

 

 

உன்னோட உள்ளுணர்வு உனக்கு வழிகாட்டும்.. அதை ஃபாலோ பண்ணுடா.. சில விசயங்கள் ரொம்ப யோசிக்காமல் அப்படியே இயல்பாக விடணும்..” என்ற விதுரனின் அறிவுரையில் மனம் தெளிந்த விஜய், “மச்சி நான் ஒண்ணு சொல்லவா?..” என்று நெகிழ்வான குரலில் விஜய்  கேட்க,

 

 

“ஐய்ய நட்புக்கு யாராவது நன்றி சொல்வாங்களா!?.. நான் உன் நட்புடன் நன்றி எல்லாம் எதுவும் வேண்டாம் மச்சி..”  என்று விதுரன் மறுக்க “இல்ல மச்சி நான் சொல்லியே தீருவேன் என்று விஜய் பிடிவாதமாக கூற “சொன்னா கேக்க மாட்டேங்குற.. சரி சொல்லு சொல்லு என்று விதுரனிடம், “எனக்கு அம்னீஷியா வந்து சில விசயங்கள் மறந்துடுச்சுன்னு சொல்லும் போது கொஞ்சம் குழப்பத்தோடு தான் இருந்தேன்..

 

 

ஆனால், நீ வந்து என்கிட்ட பேசின பிறகு..” என்று விஜய் ஒரு நொடி பேச்சை நிறுத்த “ம்.. பேசின பிறகு என்று விதுரன் ஆர்வமாக கேட்க, “உன்கிட்ட பேசின பிறகு இரு கோடுகள் தத்துவம் நியாபகம் வந்திருச்சு மச்சி…” என்று குறும்பு குரலில் கூற, “ஓ.. சாருக்கு இருந்த குழப்பம், நான் பேசின பிறகு இன்னும் அதிகமாகிருச்சோ..” என்று நக்கல் குரலில் விதுரன் கேட்க,

 

 

“ஹ..ஹ.. மச்சி.. என்னோட குழப்பத்துக்கு தீர்வு கிடைச்சதோ இல்லையோ ஆனா மனசு ரொம்ப தெளிவாக இருக்குடா.. அதுக்கு காரணம் நீ தான்.. அதுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. வெண்பா எப்படி இருக்கா?.. பாப்பா எப்படி இருக்கா..?” என்று அவர்களை பற்றி விசாரிக்க, 

 

 

“என்னோட பேபி டால்.. குட்டி டால் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க மச்சி..” என்று அதுவரை நண்பனுடன் இலகுவாக அரட்டை அடித்து கொண்டிருந்த விதுரன் குரல் கனிவு, காதல் கலந்து ஒலிக்க, “எப்பவும் நீ இதே ஹேப்பியோட இருக்கணும் மச்சி..” என்று உணர்ந்து கூறிய விஜய் 

 

 

“எனக்கு வேலை இருக்கு மச்சி.. கிட்சன் போய் செக் பண்ணணும்..” என்று இருக்கையில் இருந்து எழுந்தவன், விதுரனிடம் பேசி கொண்டே கிட்சன் நோக்கி சென்றான்.. “என்ன சமைக்கிறிங்க?.. என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர, “இன்னைக்கான மெனு சார்..” என்று சீஃப் குக் பதில் கூற, அது எனக்கு தெரியும் டிஷ்ல  உப்பு போட்டிங்களா?.. என்று கேட்க, “போட்டோம் சார்..” என்று கூற

 

 

“நீங்க சாப்பாட்டுக்கு உப்பு போடலேன்னு நான் சொல்றேன்..” என்று அழுத்தமாக கூறிய விஜய்யிடம் ‘குற்றம் சொல்வது ஈசி அதை செஞ்சு பார்க்கிறவங்களுக்கு தான் தெரியும் கஷ்டம்..  என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி “சார் குக்கிங்ல எனக்கு முப்பது வருஷ அனுபவம் இருக்கு தூக்கத்தில் சமைக்க சொன்னா கூட கண்ணை மூடிக்கொண்டு சமைப்பேன்.. ஆனால் உங்களுக்கு இதெல்லாம் தெரியாது சார்.. இதை சொல்றதுக்கு நீங்க என்னை வேலையை விட்டு எடுத்தாலும் பரவாயில்லை சார்.. என் வேலையை குற்றம் சொன்னால் என்னால தாங்க முடியாது சார்..” என்று தன் திறமை பற்றி கர்வமாக கூறியவரை சிறு புன்னகையுடன் பார்த்தவன், எதுவும் பேசாமல் 

 

 

அங்கிருந்த சின்ன ஸ்பூனில் உணவை எடுத்து தன் வாயில் வைக்க போனவன், அதை சீஃப் குக்கிடம் கொடுத்து சாப்பிடுங்க…”என்று கூற “சார்..”என்று அவர் தயங்க, சும்மா சாப்பிடுங்க என்று மீண்டும் கூற, அவர் அந்த உணவை வாங்கி சாப்பிட, உண்டவரின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.. அவர் முகத்தை பார்த்தபடி நின்றிருந்த விஜய், எப்படி இருக்கு எல்லாம் சரியாக இருக்கா?.. என்று கேட்க

 

 

“அது.. வந்து என்று அவர் தயங்க, “மனுசங்க தவறுவது இயல்பு தான்.. எனக்கு உங்க அளவுக்கு அனுபவம் இல்லை மாஸ்டர்.. அதனால் தான் உங்களை குக் ஆக போட்டிருக்கேன்.. அதுக்காக எனக்கு எதுவும் தெரியாது என்று நீங்க சொல்றது தப்பு மாஸ்டர்..” என்று கூற 

 

சாரி சார் இன்னைக்கு எப்படி மறந்தேன் என்று தெரியல..” என்று மன்னிப்பு கேட்க, “நீங்க  இன்னும் மனசார உங்க தப்பை உணரல மாஸ்டர்.. நான் அங்க ஏசி  ரூம்ல உட்கார்ந்து கொண்டு உங்களை ஈசியா குற்றம் சொல்றேன் என்று நீங்க நினைக்கிறீங்கல்ல.” என்ற விஜய்

 

 

“இன்னைக்கு நான் சமைக்கிறேன்.. யாரும் எந்த உதவியும் செய்யாமல் நான் மட்டுமே செய்றேன்..” என்றவன் இதுவரை சமைத்த உணவுகளை ஆதரவற்ற ஆசிரமங்களுக்கு கொடுத்து விட்டு தான் சமைக்க தொடங்கினான்.. சீஃப் குக் பதட்டமாக அவனை தடுக்க அதை காதில் வாங்காமல் தன் வேலையை செய்து கொண்டு இருந்தான்.. அவன் சமையல் செய்யும் தோரணையும், நளினமும் அங்கிருந்த பணியாளர்களை வியப்படைய செய்ய, “சார் ரொம்ப கியூட்டா அழகா இருக்காருல்ல.. அங்கிருந்த பெண்கள் ரசனையுடன் கூறி விட்டு 

 

“நம்ம பாஸ் கூட தினமும் சமைக்கிற பாக்கியம் கிடைச்சா எப்படி இருக்கும்.. கலகலப்பாக இருக்கும்ல..” அங்கிருந்த பெண்கள் ஆர்வமும் ஏக்கமுமாக கூற, “அவ்வளவு தான செஞ்சிட்டா போச்சு..” என்ற விஜய்யின் இலகுவான குரலில் அந்த பெண்கள் திடுக்கிட்டு பார்க்க, “ஹேய் ரிலாக்ஸ்..” என்று அவர்களை சிறு புன்னகையுடன் அமைதிபடுத்தியவன் மனமும் அமைதியானது.. 

 

 

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த எழில் மனதில் அவ்வப்போது அஷ்வின் வந்து அச்சுறுத்தி சென்றான்.. தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்த எழில் கவனத்தை தன் பக்கம் திருப்பியது ஒரு மழலையின் சிணுங்கல் சத்தம்..  அந்த சத்தத்தில் அதுவரை எழில் முகத்தில் இருந்த குழப்பம் தவிப்பும் விலகி முகம் மலர,  திரும்பி பார்த்தாள்.. 

 

 

அவள் வெறுமையான வாழ்க்கையில் வண்ணம் பூச வந்த வானவில்.. சபிக்கப்பட்ட வாழ்க்கையில் வரம் தர வந்த தேவதை “அம்மு குட்டி எழுந்தவுடன் டிக்கா..? என்று கொஞ்சியபடி மூன்று வயதில் படுக்கையில் அழகாக உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் மென்முத்தமிட்டு கொஞ்சி கொண்டு இருந்தாள் விஜயேந்தி

ரனின் ராங்கி..

 

இமை சிமிட்டும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்