இமை 14
கனவில் கேட்ட குரலும் அதன் தவிப்பை பற்றியும் தன் சிந்தனையில் உழன்றபடி விஜய் காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.. ஏனோ மனம் இன்று நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருந்தது.. யாரையோ தான் பாதியில் விட்டு வந்த அந்த உணர்வு மட்டும் குறையவே இல்லை.. ஏன் என்று காரணம் அறியவில்லை.. இப்படியே சிந்தித்து கொண்டு இருந்தால், தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று உணர்ந்தவன்,
முயன்று தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, சாலையில் கவனத்தை செலுத்திய விஜய் சாலையில் சிக்னல் விழவும், காரை நிறுத்தி விட்டு கிரீன் சிக்னல் விழுவதற்காக காத்திருந்த விஜய்யின் கவனம் தன் எதிரே சாலையை கடந்து சென்று பெண் மீது சென்றது.. “இது அந்த ராங்கிதான?.. என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு சாலையை கடந்த பெண்ணை நன்றாக உற்று பார்த்தான்..
சாலையின் மறுபுறம் இருந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எழில் அவன் கண்களில் விழுந்தாள்..
இவ அந்த ராங்கியே தான்!!.. தேடும்போது வரவே இல்லை.. இப்ப முன்னாடி வந்து நிக்கிறா.. இவளை இன்னைக்கு ரெண்டு திட்டு திட்டினால் தான் மனசு ஆறும் என்று கறுவிக்கொண்டு காரில் இருந்து இறங்க
“எதுக்குடாப்பா அந்த பொண்ண திட்டனும்?” அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப, “அன்னைக்கு நான் கூப்பிட கூப்பிட கண்டுக்காம அலட்சியமா போனாள்ல அதுக்கு தான்..” என்று விஜய் பதில் கூற “ நீ சொல்றது நம்பற மாதிரி இல்லை.. ஆனால் நம்பறேன்.. நான் உன் மனசாட்சி ஆச்சே உன்னை விட்டு நான் எங்கே போக முடியும்?.. நீ எப்படி உருட்டினாலும் கேட்டு தான் ஆகணும்.. என் தலையெழுத்து..” என்று புலம்பிய மனதை அடக்கி விட்டு, விஜய் காரில் இருந்து இறங்க முற்பட..
அதற்குள் கிரீன் சிக்னல் விழவும், விஜய் காரின் பின்னால் நின்றிருந்த மற்ற வாகனங்கள் ஹாரன் அடிக்கவும் விஜய் தன் காரை எடுத்துக்கொண்டு எழில் சென்ற கோவிலை நோக்கி காரை செலுத்தினான்.. காரை ஓரமாக நிறுத்தி விட்டு, கோவிலில் உள்ளே சென்றவன்,
“இங்க பாரேன் அந்த பொண்ணை!.. அவ முகத்தில் யாரோ ஆசிட் ஊத்தின மாதிரி எப்படி இருக்குன்னு..” என்று எழிலை தேடி கொண்டிருந்தவன் காதில், இரு பெண்கள் பேசி கொண்டு இருப்பது காதில் விழவும், “இவங்க யாரை பத்தி பேசறாங்க?.. என்று யோசித்தபடி விஜய் எழிலை தேடி சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு வர, “ஏய் அது ஆசிட் ஊத்தின மாதிரி இல்லை யாரோ அவ கன்னத்தில் கத்தியால் கிழிச்ச மாதிரி இருக்கு..
இவ யாரையாவது காதலிச்சு ஏமாத்தியிருந்திருப்பா அவன் இவ ஏமாத்தின துரோகம் தாங்காம அவளை கத்தியால குத்தி முயற்சி செஞ்சிருப்பான் இப்பதான் நடக்கிறது சகஜம் ஆச்சே” என்று எல்லாம் நேரில் நின்று பார்த்தது போல் அவர்கள் பேசி கொண்டு இருப்பதை கேட்ட விஜய் எரிச்சலாக அந்த பெண்களை பார்த்தான்..
அவர்கள் யாரையோ பார்த்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அவன் பார்வையும், அந்த பெண்கள் பார்வை போன திசை கண்டு அவனும் அங்கு பார்வையை திருப்ப, பார்த்தவனுக்கு அதுவரை எரிச்சலில் முகம் சுளித்தபடி இருந்தவன் இப்போது கோபத்தில் முகம் சிவந்தான்.. எழில் தான் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தாள்.. அவளை பார்த்து தான் இந்த பெண்கள் கேலி பேசி கொண்டு இருந்தனர்…
இங்கு ஒருவன் தங்களை பார்வையால் பஸ்பமாக்கி கொண்டு இருப்பதை உணராமல், “நீ சொன்ன பிறகு தான் நானே சரியாக பார்க்கிறேன் டி.. அவ முகத்தை கத்தியால் கிழிச்ச மாதிரி தான் இருக்கு.. நீ சொன்ன மாதிரி இவ யாரையாவது காதலிச்சு ஏமாத்தியிருந்திருப்பா போல.. ஆனாலும் இந்த முகத்தை வச்சிட்டு வெளியே வர்றதுக்கு இவளுக்கு ரொம்ப தைரியம் இருக்கணும் டி..” என்று இரு பெண்களும்
கண்கள் மூடி கடவுளை வேண்டி கொண்டிருந்த எழிலை ஏளனமாக பார்த்து கேலி செய்ய, அங்கு சிலரின் பார்வைகளும் எழிலை நொடிக்கும் அதிகமான நேரம் பார்த்து செல்வதை உணர்ந்திருந்த விஜய் தன் கோபத்தை கட்டுப்படுத்தி “ஆமாங்க நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை தான் இந்த முகத்தை வச்சிட்டு வெளியே வர்றதுக்கு அவங்களுக்கு ரொம்ப தைரியம் வேண்டும் தான்.. அவங்க உங்களை எல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க உங்களால் அவளுக்கு ஆபத்து எதுவும் வராது என்று நினைத்து தைரியமாக வெளியே வந்தது அவங்க தப்பு தான்..
நீங்க எல்லாம் மனுசங்க என்ற போர்வையில் மறைஞ்சிருக்கிற மிருகங்கள் என்று தெரியாமல் அவள் தைரியமாக வெளியே வந்தது அவங்க தப்பு தான்..” என்று படு நக்கலாக கூறியபடி அவர்கள் அருகில் வந்து நின்ற விஜய்யை இருவரும் திகைப்போடு பார்க்க
“நீங்கல்லாம் பொண்ணுங்க!.. சீ.!” என்று முகத்தை அருவருப்பாக வைத்தபடி கூறிய விஜய்யை இரு பெண்களும் கோபமாக முறைக்க, “ஹலோ மிஸ்டர் யார் நீங்க எதுக்கு எங்களை வம்பு பண்றிங்க?.. நாங்க ஒரு குரல் கொடுத்தா போதும் ஈவ்டீசிங்ல உங்களை உள்ள பிடிச்ச போட்ருவாங்க..” என்று மிரட்ட
“இந்தாங்க யாருக்கு போன் போடணும் சொல்லுங்கம்மா நானே அவங்களுக்கு கால் போட்டு தர்றேன்..” என்று உதடு வளைத்து கேலியாக பேசிய விஜய்யை இருவரும் அதிர்ந்து பார்க்க, “சரி விடுங்க நீங்க கால் செய்ய வேணாம்.. நானே கால் செய்றேன்..” என்று தன் செல்போனில் நம்பரை அழுத்த,
அவர்கள் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது “சார்.. சார் சாரி சார் இனி நாங்க யாரையும் இப்படி பேச மாட்டோம் சார்.. எங்களை மன்னிச்சிடுங்க சார்.. என்று அவர்கள் மன்னிப்பு கேட்க, “ம்கூம் உங்களை பார்த்தால் மனசார மன்னிப்பு கேட்கிற மாதிரி தெரியலையே..” என்று தாடையை தடவிக்கொண்டு யோசனையாக கூறிய விஜய்யிடம்,
“சார்.. சார் இல்லை.. இல்ல சார் சத்தியமா இனி யாரைப் பத்தியும், அவங்களோட அழகு பத்தியும் நாங்க எதுவும் பேச மாட்டோம் சார்.. எங்களை நம்புங்க சார் உங்க கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்கிறேன் சார்..” என்று வெகுவாக அந்த பெண்கள் விஜய்யிடம் கெஞ்ச, “எங்கிட்ட மன்னிப்பு கேட்க வேணாம் நீங்க.. இவ்ளோ நேரம் யாரைப் பத்தி கேலி பேசிட்டு இருந்திங்களோ அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேளுங்க.. அவங்க உங்களை மன்னிச்சா நானும் மன்னிக்கிறேன்..” என்று அவர்களை எழிலிடம் அனுப்ப,
கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கருவறையில் அருகில் நின்று கடவுளை கண்மூடி வேண்டி கொண்டிருந்த எழில், கண்களை திறந்து கடவுளை பார்க்க, அழகன் முருகன் “யாமிருக்க பயமேன்!?.. நீ போ எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்..” என்று கொள்ளை கொள்ளும் புன்னகை முகத்துடன் அபயம் அளிப்பது போல் தோன்ற..
எழில் மனதில் தானாக நிம்மதி நிறைவு அடைந்தது.. இத்தனை நாள் நான் உங்களை வந்து பார்த்துட்டு தான் இருக்கேன் என்றைக்கும் இல்லாம இன்னைக்கு புன்னகை முகமாக தெரியறிங்களே என்ன விஷயம்?.. உங்களை பார்க்கவே மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கே..” என்று மானசீகமாக கடவுளிடம் கேட்டு கொண்டு இருக்க,
“எங்களை மன்னிச்சிடுங்கமா..” என்று கை கூப்பி தன்னிடம் மன்னிப்பு கேட்டு நின்றிருந்த இரு பெண்களையும் குழப்பமாக பார்த்த எழில், “யார் நீங்க? எங்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க?.” என கேட்க
“அது.. வந்து..” என்று இரு பெண்களும் தயங்கி நின்றனர்.. எழிலை பற்றி அவள் முகத்தை பற்றி எளிதாக புறம் கூற முடிந்தவர்களால், இப்பொழுது அவள் முன்பு தாங்கள் அவளை பற்றி பேசிய வார்த்தைகளை சொல்வதற்கு வாய் கூசியது.. இருவரும் அமைதியாக நிற்க, “நீங்க பேசுன வார்த்தையை அவங்க முன்னாடி சொல்றதுக்கு உங்களுக்கே இப்படி தயக்கமா இருக்கே..
நீங்க பேசுற பேச்சை எதிர்ல நின்று கேட்கிறவங்களுக்கு மனசு என்ன கஷ்டப்படும் என்று இப்பவாவது உங்களுக்கு புரியுதா?.. நீங்க பேசின வார்த்தையோட வீரியம் புரியுதா?..” என்று கேட்டபடி அவங்க வந்த விஜய்யை பார்த்து இரு பெண்களும் தலைகுனிய.. திடீரென்று இருவரும் தன் முன் மன்னிப்பு கேட்டது எதற்காக என்று புரியாமல் குழம்பி நின்றிருந்த எழில், அந்தப் பெண்களிடம் அவர்களின் தப்பைச் சுட்டிக்காட்டி பேசியபடி வந்த விஜய்யை பார்த்து “இவங்களா?!”. என்று திகைத்து நின்றாள்..
அவள் திகைப்பை கலைப்பது போல், “நாங்க உங்க முகத்தில் இருக்கிற தழும்ப பத்தி கேலி செஞ்சு பேசிட்டோம்.. நாங்க பேசினது தப்புதான் எங்களை மன்னிச்சிரும்மா..” என்று மன்னிப்பு கேட்க, எழில் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அமைதியாக நின்றவள், “என் முதுகின் பின்னால் புறம் பேசறவங்க பேச்சை நான் எப்போதும் பெரிசா எடுத்துக்க மாட்டேன்..
“முக்கியமாக எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவங்க என்னை பற்றி பேசினால்..” என்று ஒரு நொடி பேச்சை நிறுத்தி அவர்களை அழுத்தமாக பார்த்த எழில், “ரோட்டில் இருக்கிற அசிங்கத்தை தாண்டி போற மாதிரி அவங்களை கடந்து போய்டுவேன்..” என்று சாட்டையடியாக சுள்ளென்று பதில் கூற, எழில் பேச்சில் அந்த பெண்களின் முகம் கன்றி கருத்தது.. அவர்கள் தலைகுனிந்து அங்கிருந்து நகர,
“எக்ஸ்கியூஸ்மி ஒன் மினிட்..” செல்லும் அவர்களை நிறுத்திய எழில், “மன நிம்மதி வேண்டி தானே இந்த கோவிலுக்கு வந்திங்க அந்த மன நிம்மதி கிடச்சுதா?.” என கேட்க அவர்கள் குணிந்த தலை நிமரவே இல்லை.. போங்க எதுக்காக வந்திங்களோ அந்த வேலையை பார்த்திட்டு போங்க…
அப்பறம் சின்ன ரெக்வெஸ்ட் நீங்க பேசினதால எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆனால் என்னை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க.. இனி பார்த்து இருங்க..” என்று எச்சரித்து அவர்களை அனுப்ப, விஜய் எழிலை மெச்சுதலாக பார்த்து கொண்டு இருந்தான்.. அவர்கள் சென்றதும் எழில் அவனை அன்று போல் இன்றும் அவனை கடந்து செல்ல
“இந்த ராங்கிக்கு திமிரை பாரேன்.. இப்பவும் அலட்சியமாக கடந்து போறா..” என்று மனதில் கறுவிக்கொண்டு, “ஏ ராங்கி!..” என்று அழைக்க அவள் அவனை திரும்பி பார்த்து அன்று போல் இன்றும் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, அந்த பாவனையில் தன்னை மறந்து விஜய் சில நொடிகள் அமைதியாக நின்று விட்டான்.. அந்த இடைவெளியை பயன்படுத்தி எழில் அங்கிருந்து மீண்டும் மறைந்து விட்டாள்..
கோவில் மணி சத்தத்தில் தன் நிலை உணர்ந்தவன் எழிலை தேடி ஏமாந்தான்.. “ராங்கி மறுபடியும் காணாமல் போய்ட்டா.. சின்ன புருவத்தை மட்டும் தான் சுளிச்சா அதுக்கே நான் எல்லாத்தையும் மறந்து பிரீஸ் ஆகிட்டேனே.. இவளை பார்த்தா மட்டும் நான் நானாகவே இருக்க மாட்டிகிறேனே.. அடே விஜயேந்திரா.!! நல்லா தானடா இருந்த.. உனக்கு என்னடா ஆச்சு?.. என்று புலம்பி கொண்டு இருந்த விஜய்க்கு, இந்த ராங்கியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. என்று தனக்குள் கேள்வி எழுப்ப
“அன்னிக்கு அந்த காலேஜ்ல பார்த்ததால் இப்படி தோணுது போல..” பதிலும் கூறி கொண்டு வெளியே வர, அடே விஜயேந்திரா?. இங்க வந்துட்டு என்னை கண்டுக்காம போறியா..” என்று மனதில் யாரோ குரல் எழுப்பியது போல் தோன்றியது.. அதே நேரம் மீண்டும் கோவில் மணி சத்தம் கேட்க.. அந்த சத்தத்தில் கோவிலை திரும்பி பார்த்த விஜய் மனம் சிலிர்க்க, மீண்டும் கோவில் உள்ளே வந்தவன் கண்கள் மூடி அந்த சேனாதிபதியை மனதார வேண்டி கொண்டு வெளியே வந்தான்..
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடா படுத்துறியே
பாயா சுருட்டுறியே..
சாட்டை படம்
சாலையோரம் இருந்த நடமாடும் உணவு கடையிலிருந்து பாடல் கேட்க விஜய்யின் இதழ்களில் அவன் அறியாமல் புன்னகை பூத்தது.. அவன் கைகள் தானாக அவன் தலைகோத
“ஹலோ மிஸ்டர் விஜய்!!” என்ற குரலில் விஜய் திரும்பி பார்த்தான்.. அங்கு அவன் ஃபேமிலி டாக்டர் சுரேஷ் தன் குடும்பத்தோடு கோவிலுக்கு வந்திருந்தார்.. “ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..? “வழக்கமா டாக்டர் தான் பேஷண்ட்டை பார்த்து எப்படி இருக்க என்று கேப்பாங்க இப்ப நீ கேட்கிற..” என்று கேலி செய்ய,
அதில் சிறு புன்னகையுடன் வெளிநாட்டில இருந்து எப்போ வந்திங்க?.. நம்ம வீட்டுக்கு வரவே இல்லை” என்று விஜய் விசாரிக்க
இங்க வந்து ஒரு வாரம் தான் ஆச்சு இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள் அதுதான் ஃபேமிலியோட கோவிலுக்கு வந்து இருக்கேன்.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பார்க்கலாம் நினச்சேன்” என்று கூற, “ஹாப்பி அனிவர்சரி அங்கிள்!! மெனி மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே”என்று வாழ்த்த, நன்றி கூறிவிட்டு அவனின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டவர்
ஆமா நீ எப்படி இருக்க?.. உனக்கு உடம்பு எப்படி இருக்கு?.. இப்போ தலைவலி ஏதாவது வருதா?..” என்று விசாரிக்க
“எனக்கு என்ன அங்கிள் நான் நல்லா தானே இருக்கேன்..” என்று குழப்பமாக பதில் சொல்ல, “
“ஓ..ஆமா ..ஆமா உனக்கு என்ன நீ நல்லா தானே இருக்க நான் தான் ஏதோ ஒரு ஞாபகத்தில் கேட்டுட்டேன்..” என்றவரின் பேச்சில் இருந்த தடுமாற்றத்தை நன்றாக உணர்ந்த விஜய்
“அங்கிள் எனக்கு என்ன ஆச்சு?.. ஏன் தலைவலி வருதா என்று கேட்டிங்க?..” என்றவனின் குரலில் “ நீங்க எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கண்டிப்பு இருக்க
“அது ஒண்ணும் இல்லை விஜய்.. உனக்கு சின்ன விபத்து நடந்தது அதுல உனக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்தது.. முக்கியமான விசயம் எதுவும் நீ மறக்கலை அந்த விபத்து நடப்பதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட சில மாதங்களுக்கு முன்பு நடந்த விசயங்கள் மட்டும் மறந்திருந்த மற்றபடி நீ நார்மல் தான்..
அதனாலதான் இதை யாரும் சொல்லாம விட்டுட்டோம்.. இது நீ நினைக்கிற அளவுக்கு பெரிய விசயம் இல்லை விஜி.. சோ நோ வொர்ரி எனக்கு பூஜைக்கு நேரமாச்சு நான் நாளைக்கு வீட்டுல வந்த பேசறேன்..” என்று அவன் தலையில் பெரிய குண்டை தூக்கிப் போட்டு செல்ல
“எனக்கு ஆக்ஸிடென்ட் நடந்ததா?.. எப்போ நடந்துச்சு எனக்கு எதுவுமே தெரியலையே ஞாபகம் வரலயே என குழம்பியபடி காரி ஏறி அமர்ந்த விஜய் லேசாக தலை வலிப்பது போல் இருக்க தன் தலையை பிடித்துக் கொண்டு அந்த ஸ்டீரிங்கில் கண்மூடி அப்படியே
தலைசாய்ந்து கொண்டான்..
இமை சிமிட்டும்…
போன பதிவிற்கு கருத்துக்கள் ஸ்டிக்கர் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி 😍❤️