இமைகளின் இடையில் நீ
ஆதவன் ஆழியின் மடி சாய்ந்து ஓய்வெடுக்க செல்லும் அந்தி மாலை நேரம், இத்தனை நேரம் தன்னுடன் இருந்து விட்டு இப்போது கடல் அன்னையிடம் தஞ்சம் புகுந்த ஆதவனை தன் மேனியெங்கும் செம்மை பூசிக் கொண்டு கோபமாக முறைத்து பார்க்கிறதோ இந்த வானம்?..
ஆகவே நான் இப்ப சொல்ல வருவது என்னவென்றால் அது ஒரு அழகான மாலை வேளை, உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை பலதரப்பட்ட மக்களை சுமந்தபடி, எப்போதும் பரபரப்பாக கலகலப்பாக இருந்தது.. அங்காங்கே தங்களை மறந்து உலகம் மறந்து அமர்ந்திருக்கும் காதலர்கள், கையில் வாளியுடன் சுண்டல் விற்கும் சிறுவர்கள், என்று ஒரு பானையில் வேகும் கூட்டாஞ்சோறு போல் காட்சியளித்தது..
அந்த மக்கள் மத்தியில் அழகான யுவதி ஒருத்தி தன் மீன் விழிகளால், அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தை பார்ப்பதும், பின்பு சாலையை பார்ப்பதுமாக இருந்தாள்.. பிரபஞ்ச அழகி இல்லை என்றாலும் அவள் பேரழகியே.. வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து சலித்து போனவளின் கவனம் அலை ஓரத்தில் தங்கள் பெற்றோர் கண்காணிப்பில் உற்சாகமாக விளையாடி கொண்டு இருந்த சிறுவர்களின் மீது சென்றது,
அங்கு மணலில் இவர்கள் விளையாட்டை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த யுவதி, அவர்கள் அருகில் சென்று, “ஹேய் குட்டீஸ் நானும் விளையாட வர்றேன் என்னையும் சேர்த்துக்கோங்க பா..” தலைசரித்து மூக்கை சுருக்கி கெஞ்சுவது போல கேட்க சில நொடிகள் யோசித்த வாண்டுகள் பெரிய மனதுடன் தங்களுடன் அவளை விளையாட சம்மதிக்க, உற்சாகமாக சிறுவர்களின் விளையாட்டில் தானும் கலந்து கொண்டாள்..
தங்கள் குழந்தைகளிடம் ஒரு பெண் விளையாடி கொண்டிருப்பதை கண்டு அவளை சந்தேகமாக பார்த்த அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அவளை பற்றி விசாரிக்க, தன்னை பற்றி கூறியவள் சில நிமிடங்களிலேயே அவர்களிடம் நட்பு பாராட்டி, அவர்களையும் தங்கள் பிள்ளைகளுடன் விளையாட வைத்து விட்டாள்..
அந்த மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தான் அஷ்வின்.. இருபத்தி ஐந்து வயது இளைஞன்.. அந்த வயதிற்கேற்ப அழகுடன் துறுதுறுவென இருந்தான். வசதி படைத்த பெற்றோர்.. தன் தந்தை தொழிலை பார்க்காமல், தன் முயற்சியில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.. தான் ஒரு பெஸ்ட் பிசினஸ் மேன் என்று கர்வம் அவனிடம் எப்போதும் இருக்கும்..
தன் அலுவலகத்தில் அவசரமாக வேலை முடித்து விட்டு, கார் நிறுத்துமிடம் வந்த அஷ்வினை பார்த்த ஓட்டுநர் வேகமாக வந்து பின் கதவை திறந்து விட, “நோ நீட் ஐ வில் டேக் கேர்..” என்று அதிகாரமாக கூறியவன், தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, காரை கடற்கரை நோக்கி செலுத்தினான்..
காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு கடற்கரை நோக்கி வந்தவன் கண்கள் அங்கும் இங்கும் சுழன்று யாரையோ தேடிக்கொண்டு இருக்க, தான் தேடியது கிடைத்ததும் ஒரு நொடி முகம் மலர அடுத்த நொடி முகம் சுருங்கி அவ்விடம் நோக்கி விரைந்தான்..
அங்கு கடலில் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிகொண்டிருந்த அந்த யுவதியின் அருகில் நெருங்கியவன் கைபிடித்து தன்னிடம் இழுக்க, திடீரென்று தான் இழுக்கப்பட்டதும் நிலை தடுமாறி அவன் மீது விழ போனவள் தன்னை சுதாரித்துக் கொண்டு, தன்னை இழுத்தது யார் என்று கோபமாக திரும்பி பார்த்தவள், அது அஷ்வின் என்றதும் கோபம் மறந்து, முகம் மலர்ந்தவள்
“அஷ்ஷீ..!” என்று உற்சாகமாக அவனை அழைக்க, “முதல்ல தண்ணீரில இருந்து வெளியே வா.“ என்று அழைத்து செல்ல, “என்னாச்சு அஷ்ஷீ?.. அவள் புரியாமல் கேட்க “என்ன பேபி இது?.. நான் உன்னை பார்க்க என் வேலை எல்லாம் விட்டு வந்திருக்கேன்.. இதனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?.. அதை எல்லாம் தாண்டி எனக்கு நீ முக்கியம் என்று நினைச்சு உன்னை பார்க்க வந்திருக்கேன்..
நீ என்னை பத்தி நினைக்காமல் சின்ன பிள்ளை மாதிரி இவங்க கூட இப்படி தண்ணீரில் விளையாடிட்டு இருக்க..” என்று சலித்து கொள்ள, அவனை தலைசரித்து குறும்பாக பார்த்தவள், “நீங்க எப்ப இங்க வர்றேன் சொன்னிங்க?..” என்று கேட்க, “அது நாலு மணிக்கு..” என்று சாதரணமாக கூற, “இப்ப மணி என்ன?..” என்று கேட்க அப்போது தான் மணி பார்த்தவன் தான் வருவதாக கூறிய நேரம் தாண்டி ஒரு மணி நேரம் கடந்திருந்தது.. அவன் அசடு வழிய அவளை பார்க்க கேலியாக புருவம் உயர்த்தி அவள் என்ன என்று வினவ
“அது.. அது நான் வர கொஞ்சம் லேட் ஆகிருச்சு அதுக்காக என்னை பத்தி நினைக்காமல் யார் கூடவோ விளையாடிட்டு இருப்பியா?..” என்று சலுகையாக கேட்டவனிடம், “வேறு என்ன செய்யணும்?..” என்று அவள் கேட்க “நான் வர வரைக்கும் நீ என்னை பத்தி எதாவது நினைச்சிட்டே இருந்திருக்கணும்.. நான் உனக்கு முக்கியம் இல்லையா பேபி?.. உன் நினைவுகளிலும், நான் தான் இருக்கணும்.. உன் ஒவ்வொரு அசைவும் எனக்காக தான் இருக்கணும்.. உனக்கு எல்லாமுமாக நான் மட்டும் தான் இருக்க வேண்டும்.. என்று ஒரு பேராசையா இருக்கு பேபி..” என்று கண்களில் இனம் புரியாத உணர்வுடன் கூறிய அஷ்வினை பூரிப்புடன் பார்த்திருந்தாள் அவள்..
தன்னை இத்தனை நேசிக்கும் ஒருவன் கிடைக்க தான் எத்தனை பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்..” என்று தன்னையே பெருமையாக நினைத்து கொண்ட பாவை, “நீங்களும் என்னை இப்படி தான் நினைக்கிறிங்களா?.. கண்களில் ஆர்வம் மின்ன கேட்ட வஞ்சியவளிடம்,
“என் உயிரே நீ தான் பேப்.. உன்னையன்றி வேறு நினைப்பே இல்லை தெரியுமா?.. உன் அழகு என்னை ரொம்ப சோதிக்குது.. ரொம்ப கஷ்டப்பட்டு என் கவனத்தை வேலையில் வைக்கிறேன்..” என்று பரிதாபமாக கூறிய அஷ்வினை மகிழ்ச்சி பொங்க பார்த்தவள், மனம் நிறைந்து அவன் தோள் சாய போக
சட்டென்று அவளிடம் இருந்து விலகினான்.. அவள் கேள்வியாக பார்க்க, “நீ அழுக்கா இருக்க.. கொஞ்சம் தள்ளி உட்காரு..” என்று முகம் சுருக்கி கூறியவன் “ஓ.. நான் அழுக்கா இருக்கேனா?.. அப்போ நீங்களும் அழுக்கா மாறிடுங்க..” என்றவள் அவன் எதிர்பாராத நேரம் அவன் மீது மணல் அள்ளி போட்டு விட்டு அங்கிருந்து ஓட சட்டென்று அவன் கோபம் எல்லை மீற, “ஹேய்.. என்னை செஞ்சி வச்சிருக்க நீ?.. என்று கோபமாக கத்திக் கொண்டு அவளை துரத்த,
“அவன் பொய் கோபம் கொண்டு தான் தன்னை துரத்துகிறான் என்று நினைத்து இரு பெருவிரல்களை உயர்த்தி காட்டி, நாக்கை துருத்தி கேலி செய்தபடி அங்கிருந்து ஓட, “ப்ளடி இடியட்..!! இப்ப மட்டும் நீ என் கையில் கிடச்ச..” மனதில் திட்டிக் கொண்டே அவளை துரத்தியவன், ஒரு கட்டத்தில் அவளை பிடித்து விட, அவன் கைபிடியிலிருந்து துள்ளி கொண்டிருந்தாள்.. அவள் துள்ளிய அழகில் அஷ்வின் இதயமும் துள்ள, கோபம் இருந்த இடத்தில் இப்போது தாபம் வந்து ஒட்டிக் கொண்டது..
சுற்றும் முற்றும் பார்த்த அஷ்வின் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாதது கண்டு, அவள் அங்கங்களை ஆவலாக, ஆசையாக ரசித்தவன், அவளை இறுக அணைக்க, அத்தனை நேரம் குழந்தையாக அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தவள், அவன் அணைக்கவும் அவள் மேனி நடுங்கி அனிச்சையாக விலக,
அவள் மறுப்பை உணர்ந்து “ஹே பேபி.. என்னடா இன்னும் ரெண்டு மாசத்தில் நமக்கு கல்யாணம் ஆக போகுதே.. அப்பறம் என்ன தயக்கம்?.. ஒரே ஒரு முத்தம் மட்டும் வேறு எதுவும் வேணாம் ப்ளீஸ் பேபி..” என்று கேட்டபடி அவள் கழுத்தில் முகம் புதைக்க வந்தவன் முடியை பிடித்து தன்னிடம் இருந்து விலக்கியவள், “இன்னும் ரெண்டு மாசம் தான இருக்கு அப்பறம் என்ன அவசரம்?.. என்று அவனிடம் இருந்து அவள் விலக போராட, “ஏன் பேபி என் மேல நம்பிக்கை இல்லையா?..” சிறிது கோபமாக அஷ்வின் கேட்க,
“இது நம்பிக்கை சார்ந்தது இல்லை அஷ்ஷீ மனசு சம்பந்தப்பட்டது..” என்றவள் மறுப்பை அலட்சியம் செய்தவன், “ப்ளீஸ் பேப் ஐ காணட் கன்ட்ரோல் மை செல்ஃப்..” என்றவனை திகைப்பாக பார்த்தவள், ஒரு கட்டத்தில் வலுவிழந்து அவன் கைகளில் சரிய, வெற்றி களிப்பில் அஷ்வின் அவள் இதழ் நோக்கி குனிய அந்த நொடியில் எங்கிருந்தோ ஒரு பந்து வந்து அஷ்வின் முகத்தில் வந்து பலமாக விழுந்தது.., “ஆ..ஆ..” வலியில் துடித்தபடி தான் பிடித்திருந்த பிடியை அவன் விட, அவள் அஷ்வினை விட்டு சில அடி தூரத்தில் விலகி நின்று கொண்டவள்,
சில நொடிகள் தன்னை சுதாரித்துக் கொண்டு, அஷ்வின் முகத்தை மூடியிருப்பதை பார்த்து பதட்டமாக அவன் அருகில் வந்தவள், அவன் முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி பார்த்தவள், அவன் மூக்கில் இருந்து வழியும் குருதியை பார்த்து அதிர்ந்தாள்..
“அச்சோ.. ரத்தம்..” என்று பதறியடித்து தன் ஷால் கொண்டு அவன் ரத்தத்தை துடைத்தபடி, “யார் பந்துல அடிச்சாங்க?.. என்று சத்தமாக முணுமுணுத்தபடி சுற்றி பார்க்க, “சாரி மா.. என் பொண்ணும், நானும் விளையாடிட்டு இருந்தோம் அதுல தெரியாமல் பட்டிருச்சு ரொம்ப அடியா?.” என்று குரலில் கேலியும் முகத்தில் போலி பரிதாபத்துடன், கேட்டபடி வந்த புதியவன் அவள் கண்களில் தெரிந்த நிம்மதியை சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டு நிற்க
“பரவாயில்லை சார் தெரியாமல் தான பட்டுச்சு இட்ஸ் ஓகே..” அவள் புதியவனை சமாதானம் செய்ய, “என்ன பரவாயில்லை.. உனக்கா அடிபட்டுச்சு.. எனக்கு தானே அடிபட்டுச்சு.. அதுவும் அந்த ஆள் என்கிட்ட மன்னிப்பு கேட்காம உன்கிட்ட கேட்கிறான்.. என்று அவளிடம் எரிந்து விழுந்தவன், “யோவ் பார்த்து விளையாட மாட்டியா?.. இப்படி தான் ஆள் இருப்பது தெரியாம விளையாடுவியா?.. என்று கோபமாக கேட்ட அஷ்வினை
“சண்டை போடாதிங்க அஷ்ஷீ.. சார் தெரியாமல் பட்டிருச்சு மன்னிப்பு கேட்கறாங்கள்ல நம்ம இங்க இருந்து போயிடலாம்.. வீட்டுக்கு போகலாம் வாங்க..” என்று அஷ்வின் கைபிடித்து இழுக்க, “சே உன் கூட கொஞ்ச நேரம் ஆசையாக பேசிட்டு இருக்கலாம் என்று நினச்சு என் வேலை எல்லாம் விட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்.. ஆசையாக வந்ததுக்கு இந்த அடி தான் மிச்சம்.. சின்ன முத்தம் கூட கொடுக்கல..” என்று தன் ஆசை நிறைவேறாத கோபத்திலும், எரிச்சலாக முணுமுணுக்க, யாரோ ஒரு ஆடவன் முன் அஷ்வின் இப்படி பேசியது அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது..
“அஷ்ஷீ வாங்க போகலாம்..” என்று அஷ்வினை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவள் சற்று தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்க்க அந்த ஆடவன் மலர்ந்த முகத்துடன் தன் பெருவிரல் உயர்த்தி காட்ட, சட்டென்று திரும்பி கொண்டாள்..
அவர்கள் இருவரும் செல்வதையே பார்த்து கொண்டிருந்த ஆடவனின் தோளை வளைகரம் ஒன்று தட்ட, யாரென்று அவன் திரும்பி பார்க்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துப் பார்த்து கொண்டிருந்தாள் மஞ்சரி,
“பேபி…” என்றபடி முகம் மலர அழைத்த விபாகரனை “வினு.. நீங்க சேட்டை செஞ்சிட்டு நம்ம பொண்ணு மேல பழியை போட்றிங்களா?..” என்று அதட்டலாக கேட்க, “ஹி..ஹி நான் தான் செஞ்சேன் என்று சொன்னால் அந்த ஆள் என்னை மொத்திடுவான் பேபி.. உன் வினு உடம்பு பிஞ்சு உடம்பு தாங்காதும்மா..” என்று பயந்து கூறிய விபாவை உதடு வளைத்து பார்த்தவள்,
“யாருக்கு பிஞ்சு உடம்பு உங்களுக்கா?..” என்று கிண்டல் செய்தவள், “நீங்க வேண்டுமென்றே தான் அந்த பையனை அடிச்சிங்க எனக்கு தெரியும்..” அவனை அறிந்தவளாக கூற, மென் புன்னகையுடன் அதை ஆமோதித்தவன், முகம் இறுக, “அந்த பொண்ணுக்கு விருப்பமே இல்லை.. அப்புறமும் தொல்லை செய்றான் ராஸ்கல்..” பல்லை கடித்து கோபமாக கூற
“தப்பு தான்.. ஆனால் அவங்க கல்யாணம் செய்ய போறாங்க போல அந்த உரிமையில் இப்படி நடந்திருப்பான்.. அவனை பார்த்தா கெட்ட பையனாக தெரியல.. விடுங்க வினு..” என்று கணவனை சமாதானம் செய்ய,
“அப்படி இல்லை பேபி விருப்பம் இல்லை என்றால் விலைமாதுவை கூட தொட கூடாது.. ஆனால் இவன் கல்யாணம் செய்து கொள்ள போற பெண்ணை தொல்லை செய்றான்.. அதான் எனக்கு கோபம்.. போட்டேன் ஒரு அடி..” என்றவன்,
“எனக்கென்னமோ இவங்க கல்யாணம் நடக்காது என்று தான் தோணுது..” என்று ஏதோ யோசனையாக கூற, “அச்சோ அபசகுணமா பேசாதிங்க வினு.. இந்த ஒரு விசயத்தை வச்ச நம்ம அந்த பையனை தப்பாக கணிக்க கூடாது வினு.. அந்த பொண்ணுக்கு அந்த பையன் மேல விருப்பம் தான்.. அதனால் தான் அவன் கூட வெளியே வந்திருக்கா.. அவங்க கல்யாணம் நல்லபடியாக நடக்கட்டும் வினு..” என்று கூற,
“நான் எங்கே அபசகுணமா சொல்றேன்.. என்னை ஒருத்தவங்க சொல்ல வைக்கிறாங்க.. நான் என்ன செய்ய..” என்று தோள் குலுக்கி கூறிய விபாவை புரியாமல் பார்த்து, “யார் சொல்ல சொன்னாங்க.. என்று மஞ்சரி கேட்க
“உன்னை, என்னை நம்ம எல்லாரையும் உருவாக்கின அவங்க தான்..” என்று புதிர் போட்டவனை மஞ்சரி முறைத்துப் பார்க்க..
“ஹ..ஹ. சும்மா லுலுலாய்க்கு பேபி.. அடுத்தவங்க கதை நமக்கு எதுக்கு?..” என்றபடி மஞ்சரியின் தோள் மீது கை போட்டபடி அவளை அழைத்து சென்றவன்..
அஷ்வின் பின் அமைதியாக சென்று கொண்டிருந்த பெண்ணை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சென்றான்
தொடரும்..
- Select