வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் …………
இவங்க பேசிட்டு இருக்கிறப்போ வெளிய சத்தம் கேக்குது ……..
இன்பா : என்ன சத்தம்
முகில் : போய் பாக்கலாம்
வெளிய வந்து பார்த்தாங்க ……….ஆனா அங்க யாருமே இல்லை ……..
அஞ்சலி : சத்தம் கேட்டுதுல
ரகு : ஆமா ஆனா யாரையும் காணோம்
அப்போ அங்க அந்த உருவம் வந்துடுச்சு …….
இன்பா : அம்மா ……….
முகில் : ஒன்னும் இல்லை
இனியன் : இன்பா பயப்படாத …………
உருவம் : பயப்படாதீங்க ………என்கூட வாங்க
அஞ்சலி : எங்க
உருவம் : வாங்க சொல்றேன்
அந்த உருவம் அவங்கள அந்த கருப்பு உருவம் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போச்சு …………
இன்பா : இங்க யாரு இருக்கா
உருவம் : சொல்றேன்
அப்போ அங்க கருப்பு உருவம் வந்துச்சு ……….
கருப்பு உருவம் : வாங்க பசங்களா
இன்பா : யார் நீங்க
கருப்பு உருவம் : உனக்கு தெரியாது மா என்னை என் பசங்களுக்கு தெரியும்
முகில் : யாரு உங்க பசங்க
கருப்பு உருவம் : நீங்க தான் கார்முகில்
முகில் : அப்போ நீங்க தான் ராஜகுருவா
கருப்பு உருவம் : ஆமாம்
இனியன் : நீங்களா அப்டின்னா அந்த ரணதீரன் சாபம் உங்களை பழுச்சுடுச்சா
கருப்பு உருவம் : ஆமாம் மகனே
ரகு : உங்களை இதுல இருந்து காப்பாத்த வேற வழி இல்லையா
கருப்பு உருவம் : இருக்கு
இனியன்: என்ன வழி
கருப்பு உருவம் : அந்த ரணதீரனை ருத்திரன் கொல்ல வேண்டும்
இனியன் : என்ன ………😳😳😳😳
கருப்பு உருவம் : ஆமாம்
இனியன் : எப்படி
கருப்பு உருவம் : இன்னேரம் அவன் இங்கே வந்துகொண்டு தான் இருப்பான்
இன்பா ; எப்படி சொல்றிங்க
கருப்பு உருவம் : ஆம் அவனுக்கு இங்கே நடப்பது நன்றாக தெரியும் அவனுக்கு அவனுடைய பூர்வஜென்மன் ஞாபகத்தில் உள்ளது அவன் சதி செய்து தான் தங்களை இங்கே அனுப்பி வைத்தது ……
அஞ்சலி : அப்போ அவர் தெரிஞ்சே தான் எங்களை இங்க அனுப்பி வெச்சாரா
கருப்பு உருவம் : ஆம்
இன்பா : அட கடவுளே
இனியன் ; அப்போ அந்த மொழியாள் எப்போ வருவாங்க
கருப்பு உருவம் ; அவள் இப்பொழுது இந்த காட்டுக்குள் தான் இருக்கிறாள்
இன்பா ; அதுக்குள்ள வந்துட்டாளா
கருப்பு உருவம் : ஆம்
சரியாய் இனியன்க்கு போன் பன்னாள் ………….
யாழினி : இனியன் எங்க இருக்க
இனியன் : ஏன்
யாழினி : நான் இங்க தான் இருக்கேன்
இனியன் : எங்க
யாழினி : நீங்க இருக்க காட்டுல
இனியன் : இங்க எப்படி வந்த
யாழினி ; உங்க சார் கிட்ட கேட்டேன் அவர் தான் சொன்னார்
இனியன் : உன்னை யாரு இங்க வர சொன்னது
யாழினி : நான் வருவேன் யாரை கேக்கணும்
யாழினி பேசிட்டே இவங்க டெண்ட்கிட வந்துட்டா ………….
யாழினி : நான் நீங்க இருக்க டெண்ட்கிட்ட வந்துட்டேன் எங்க யாரையுமே காணோம்
இனியன் : வரோம் இரு
போன் வெச்சுட்டான் ………..
இனியன் ; அவ வந்துட்டா
இன்பா : அதுக்குள்ளவா
இனியன் : ஆமா
கருப்பு உருவம் ; சரி நீங்க போங்க இனி நடக்குறது விதியோட விளையாட்டு யாரும் மாற்ற இயலாது
முகில் : ம்ம்………..நாங்க கிளம்புறோம்
கருப்பு உருவம் அந்த இடத்தை விட்டு போய்டுச்சு ……………இவங்களும் டெண்ட்கிட்ட போய்ட்டாங்க …………….
யாழினி : எங்க போனீங்க
இனியன் : நாங்க எங்க போன உனக்கு என்ன எதுக்கு இப்போ இங்க வந்த
யாழினி : எனக்கு ஒரு முடிவு தெரியாம நான் இங்க இருந்து போகமாட்டேன்
இனியன் : உனக்கு என்ன இப்போ தெரியணும்
யாழினி : என்ன நீ லவ் பண்ணனும் அவ்ளோ தான்
இனியன் ; எனக்கு உன்னை பிடிக்கல லவ் பண்ண முடியாது
யாழினி : வேற யாரையாது லவ் பண்றயா
இனியன் ; அதுலாம் உனக்கு தேவைல்லாத விசியம்
யாழினி ; எனக்கு தெரியணும் சொல்லு
அப்போ இனியன் எதார்ச்சிய இன்பாவ பார்த்தான் ……….அத யாழினி கவனிச்சா ……….
யாழினி ; ஓ இவ தான அது
இனியன் : யாரு
யாழினி ; இவ தான
யாழினி இன்பாகிட்ட போன …….
யாழினி : ஹே என்ன டி வந்தா வந்த வேலை மட்டும் பார்க்க மாட்டியா அடுத்தவனை எப்படி வளைச்சு போடுறதுனு பாக்குவியா
இன்பா : தேவைல்லாம பேசாதீங்க
யாழினி ; அப்படி தான் டி பேசுவேன்
இனியன் : யாழினி நீ உன் லிமிட் கிராஸ் பண்ற
யாழினி ; அப்படி தான் பண்ணுவேன் இவ உன்னை ஏமாத்தி வளைச்சு ……….
அவளோட கன்னத்துல பொழுச்சுனு இன்பா அடி வெச்சுட்டா ……..
யாழினி : 😳😳😳😳
இன்பா : என்ன டி பார்வை அவர் தான் உன்னை பிடிக்கலைனு சொல்றலுள்ள உனக்குளம் புரியாதா ஆமா நாங்க லவ் பன்றோம் என்ன பண்ணுவ நீ உன்னால எதும் பண்ணமுடியாது ஒழுங்கா போய்ட்டு இங்க இருந்து இல்லனா நான் என்ன பண்ணுவனே தெரியாது எனக்கு ………..
யாழினி : என்ன அடுச்சுட்டில பாத்துக்கிறேன் உன்னைய
இன்பா : பாரு பாரு முதல கிளம்பு
யாழினி ; நான் போறேன்
இன்பா : கிளம்பு
யாழினி கோவமா அங்க இருந்து போய்ட்டா …………….
முகில் : என்ன இன்பா இப்படி பேசிட்ட
இன்பா : ஏன் அண்ணா ஏதாது தப்பா பேசிட்டானா
அஞ்சலி : இல்லை இன்பா அவ ஏதாது பண்ணிட்டானா அதான்
இனியன் : அதுலாம் ஒன்னும் பண்ண முடியாது பாத்துக்கலாம் விடுங்க
இன்பா : இந்த சார் எப்போ வருவார்னு தெரில
அஞ்சலி : பாத்துக்கலாம் விடு மா
ரகு : ஹே பசிக்குது பா
முகில் : சரி வாங்க போய் பழம் பறிச்சுட்டு வரலாம்
அஞ்சலி : நாங்களும் வரதா
முகில் : வேணாம் நீங்க இங்க இருங்க நாங்க போய்ட்டு வரோம்
இன்பா : ம்ம்ம் ……….
இவங்க பழம் பறிக்க போய்ட்டாங்க ………..இவங்க இங்க உக்காந்துட்டு இருந்தாங்க ………….
அஞ்சலி : எனக்கு என்னமோ அந்த யாழினிய சாதாரணமா நினைக்க கூடாதுனு தோணுது
இன்பா : அவ்ளோலாம் அவளுக்கு சின் இல்லை நீ அதை நினைக்காத
அஞ்சலி : ம்ம்ம் ……….
அப்போ வெளிய சத்தம் கேட்டுச்சு ………….
அஞ்சலி : என்ன சத்தம்
ரெண்டு பேரும் வெளிய வந்து பார்த்தாங்க …………..அவங்க தலைல யாரோ கட்டை வெச்சு அடுச்சங்க……………கொஞ்ச நேரத்துல இவங்க மூணு பேரும் வந்துட்டாங்க ………..
முகில் : இன்பா , அஞ்சலி வாங்க சாப்பிடலாம்
திரும்பி பதில் இல்லை …….
இனியன் : என்ன பன்றாங்க
டெண்ட்க்குல போய் பார்த்தாங்க …………..அவங்கள காணோம்
இனியன் : முகில்,ரகு அவங்கள காணோம்
ரகு : இங்க தான் இருப்பாங்க நல்லா பார்க்கலாம்
இனியன் : ம்ம்ம் ………
மூணு பேரும் பக்கத்துல தேடுனாங்க ஆனா கிடைக்கல ………..
முகில் : எங்கேயுமே காணோம் எங்க போயிருப்பாங்க
ரகு : தெரிலயே
இனியன் : அரண்மனைக்கு போய் பார்க்கலாமா
முகில் : வாங்க போலாம்
மூணு பேரும் அரண்மனைக்கு போனாங்க ………….உள்ள போய் தேடுனாங்க ………
முகில் : அஞ்சலி
இனியன் : இன்பா
ரகு : அஞ்சலி ,இன்பா எங்க இருக்கீங்க
அப்போ அங்க ஒரு அறைல இருந்து சத்தம் வந்துச்சு ………மெதுவா உள்ள போனாங்க …………
முகில் : அஞ்சலி
அங்க அஞ்சலி அப்பரும் இன்பாவ கட்டி வெச்சிருந்தாங்க ……….முகில் இரண்டு பெத்துக்கும் கை கட்டை அவுத்து விட்டான் ……………
அஞ்சலி : முகில்
முகில் : என்ன ஆச்சு இங்க எப்படி வந்தேங்க
அஞ்சலி ; அந்த யாழினி பண்ண வேலை தான்
முகில் ; அவளா
அஞ்சலி : ஆமா
ரகுவும் , இனியேனும் வந்துட்டாங்க ……………
இனியன் : இன்பாகு என்ன ஆச்சு
அஞ்சலி : அவ அடுச்ச அடில மயங்கிட்டா
இனியன் : இன்பா ………..இன்பா ……..
இன்பா : ஹான் ………
மெதுவா கண்ணு திறந்து பார்த்தா …………..
இனியன் : இன்பா இங்க பாரு
இன்பா : ஆஅ வலிக்குது
இனியன் : ஒன்னும் இல்லை மா
அவ தலையை தேச்சுவிட்டான் ………….
ரகு : மொதல்ல இங்க இருந்து போலாம்
அப்படிலாம் இங்க இருந்து போகமுடியாது …………..ஒரு சத்தம் கேட்டுச்சு …………..யாருனு இவங்க எல்லாரும் திரும்பி பார்த்தாங்க ………………செம ஷாக் ……………..அப்படி யாரா இருக்கும் …………பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ……………
மீண்டும் வருவாள் ………………