Loading

“ஹெலோ யாரு?”

 

“……………….”

 

“ஹெலோ….யாருனு சொல்லுங்க”

 

தீப்தி,”ஹெ..ஹெலோ சித்..சித்தப்பா”என்று தன் குரலை சிறு குழந்தை போல் மாற்றி பேச மற்ற குரங்குகள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இவனோ குரல் கேட்ட மறுநிமிடம் ஃபோனை நெஞ்சில் வைத்து ‘எது?? சித்தப்பாவா?’ என்று அதிர்ந்தான்.

 

பின் ஒரு சிறு குழந்தை(ஒரு குரங்கு) தெரியாமல் அழைத்தது என்று மீண்டும் ஃபோனை காதில் வைத்து” ஹெலோ குட்டி, நீங்க மாறி எடுத்துட்டீங்க போல. உங்க சித்தப்பா நான் இல்லடா” என்று தன்மையாக சொன்னான்.

 

யாழினி இருந்த கோலத்திலும் அவனது குரலை கேட்டு இரசித்தாள். அதிலும் அவனது தன்மையான பேச்சில் மொத்தமாக கரைந்தாள். அதனால் இம்முறை முரண்டு பிடிக்காமல் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.

 

ஆனால் தீப்தி சாதாரண ஆள் இல்லையே… (இப்போ தீப்தி தலை மேல இரண்டு சிவப்பு கொம்பு)

 

“இ..இல்ல.. உங்க பேரு எழில் தானே?”

 

இந்த பக்கம் எழிலுக்கோ குழப்பம். ஆனாலும் பேசும் மாடிலேஷனை மாத்தவில்லை.

“ஆமா… “

 

“நீங்க ஸ்ஸுகூல் கெட்டு தானே?”

 

“ஸ்கூல் கெட்டா?”

 

“ஆமா…எங்க ஸ்கூல்ல லாம் அக்கா மார் இருப்பாங்க”

 

“ஓ…ஸ்கூல் ஹெட்டா…ஆமான்டா இருந்தேன்.”

 

“ஆ…அப்போ உங்கள தான் எங்க சித்தி லவ் பண்றாங்க” என்று சொல்ல எழில் அதிர்ந்து போனை எடுத்து புரியாது பார்த்தான். அவன் அருகில் இருந்த அபிமன்யு ஃபோனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.

 

எழில் அவனைப் பார்த்து முறைக்க அவனோ பேசு பேசு என்று சைகையால் காட்டினான்.

 

“எ..என்ன சொ..சொன்னிங்க..பாப்பா? எ..எனக்கொன்னும் புரியல”

 

“நீங்க நல்லா பேசுவிங்க னு சித்தி சொன்னாங்க. நீங்க என்னடான்னா இப்பிடி திக்குறீங்க?”என அவள் சொல்லும் போது இவர்களின் இன்னொரு வானரம் சற்று தூரத்தில் இருந்து;

 

‘உன்பேரைச் சொல்லும் போதே

உள்நெஞ்சில் கொண்டாட்டம்’ என்று கொடூரமான குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.

 

“கேட்டிச்சா? இப்பிடி தான் தினமும் உங்கள நினைச்சு பாடுவாங்க.”

 

எது???என்று எழில் இன்னும் அதிர்ந்து பார்க்க அபியோ வாயை மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

 

இங்கே யாழினியோ அவர்களை கண்களாலேயே எரித்து விடும் அளவிற்கு முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் லேசான பொறாமைத்தீயும் எட்டிப்பார்த்தது. தன் நண்பி அவனிடம் பேச, இன்னொருவள் அவனுக்காக பாடவும் இவளோ இங்கு பொறுமை காக்க முடியாமல் இருந்தாள் அதுவும் எழில் தீப்தியை “குட்டி” என்றது இவளுக்குள் ஏதோ செய்தது. இது வெறும் விளையாட்டென்றாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள். அது ஏனென்றும் அவளுக்கு புரியவில்லை.

 

” நீ இல்லை என்றால் என்னாவேன்? ஓ….” என்று அவள் தொடர

 

அபியோ சிரிப்பை அடக்க முடியாமல் “மச்சான் என்னாகும்னு சொல்லு. தங்கச்சி பாவம்ல” என்று சொல்ல

 

எழில் அவனிடம் பாய்ந்து ஃபோனை எடுக்க முற்படும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

 

அபி மீண்டும் ஃபோனை பிடுங்கி அழைப்பு தொடுக்கும் போது கஸ்டமர் கெயார் அக்கா”தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது” என்றாள்.

 

“என்ன மச்சான் சொல்லவே இல்ல”

 

“நீ வேற யேண்டா கடுப்பாக்குற?” என்று சொன்னவன் முகத்திலும் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

 

எழில் எதனையும் இயல்பாக எடுக்கும் பழக்கமுடையவன். அழைத்தவர்கள் தன்னை ஓட்டு ஓட்டென்று ஓட்டினாலும் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அதனை நினைத்து இரசித்தான்.

 

இங்கே தீப்தி சற்று வேகமாக மூச்செடுத்துக்கொண்டிருந்தாள்.

பின் யாழினியிடம் திரும்பி” என்னடி உன் ஆளு ஃபோன ஸ்பீக்கர் ல போடுறான் விட்ட மைக் செட் கட்டி ஊருக்கே காட்டுவான் போலயே”

 

யாழினி அதற்கு பதிலாக அவளை ஒரு உதை உதைத்து தன் கட்டுகளை அவிழ்த்தாள். “கொஞ்சமாவது அறிவிருக்காடி?”

 

“நீ தானேடி பிரான்க் கோல் பண்ணுவோம்னு சொன்ன?”

 

“அ..அதுக்கு எழில் நம்பர் தான் கிடைச்சுதா?”

 

“சரி சரி கோச்சுக்காத பங்கு…உன் ஃபோன் கான்டெக்ஸ் ல அதுதான் ஃபேவரிட்ஸ் ல இருந்துச்சு….

ஆமா….எழில் நம்பரை எப்பிடி எடுத்த?”

 

 

யாழினி உடனே பதட்டமாகி,” எ..எனக்கு நேரமாச்சு நான் வீட்டுக்கு போகனும்” என்று தன் பையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிச்சென்றாள்.

 

எழில் அந்த நிமிடமே அதை இலகுவாக மறந்தாலும் அவள் அதை மறக்க பெரும்பாடுபட்டாள்.

 

யாழினி வீட்டிற்கு வந்த பின்னும் பதற்றம் குறையவில்லை. அத்தையிடம் ஒரு சலாம் போட்டுவிட்டு தன் அறைக்குச் சென்று புஜ்ஜியிடம் நடந்த எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். அவள் டயரியில் எழுதும் போது எழிலின் நம்பரை அவனது பேஸ்புக் ஐடியிலிருந்து சுட்ட நினைவுகளை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். வெகுநாட்களுக்கு பிறகு அவன் குரலைக் கேட்ட சந்தோஷம் இருந்தாலும் அதையும் தாண்டி எதோ ஒன்று தன்னை வாட்டுவதை உணர்ந்திருந்தாள். ஆனால் அதைப் புரிந்து கொள்ள தான் அவளால் முடியவில்லை.

 

“யாழு!!! வந்து சாப்பிடுமா.”என்று அவள் அத்தை அழைக்க;

 

“இதோ வரேன் அத்தை ” என்று உடையை மாற்றி விட்டு சாப்பாட்டு மேசைக்கு சென்றாள்.

 

அத்தை அவளுக்கு உணவைப் பரிமாறி அவள் தலையை பரிவாக வருடிக் கொண்டே” நல்லா படிக்கிறியா மா? ஒரு பொண்ணுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் கண்ணு. பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போ. ஃபன் பண்ணு. எல்லாம் பண்ணு. அதோட படிப்பையும் கவனிக்கனும் டா. உங்க அம்மாவோட ஆசை எல்லாம் நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகனும் னு தான். நீ படிச்சு பெரிய ஆளா வந்தா தான் உன் சின்ன மச்சான் கு எல்லாம் கைட் பண்ண முடியும்”என்று அவர் சொல்லி முடிக்க

அவளை குற்றவுணர்வு ஒன்று தாக்கியது.

 

“கண்டிப்பா நான் நல்லா படிச்சு பெரிய ஆளா வருவேன் அத்தை”

 

“சந்தோஷம் டா. இப்போ நல்ல சாப்பிடு” என

 

அவளும் அமைதியாக சாப்பிட்டாள்.

 

அத்தை கொடுத்த பாலை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

அறையின் ஜன்னலை திறந்து படர்ந்து விரிந்த வானில் அழகாய் ஜொலிக்கும் வெள்ளி நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மனதிலோ பல எண்ணங்கள்….பல கேள்விகள்….

 

“நான் ஏன் தீப்தி எழில் கிட்ட பேசும் போது பொறாமை படனும்?”

 

“நான் ஏன் அவர் ஃபோன் நம்பரை எடுத்து வச்சுக்கனும்?”

 

“யாராவது ஒராள் ஓட ஆக்டிவிடீஸ் பாக்கும் போது எனக்கு ஏன் எழிலோட ஞாபகம் வரனும்?”

 

“அப்போ நான் அவரை லவ் பண்றனா?”

என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க;

 

அவள் மனசாட்சி, ” இதுக்கு எதிர்காலம் இருக்கா?”என்று திருப்பிக் கேட்டது.

 

“இல்லை” என்றாள் அதற்கு பதிலாக

 

“அப்போ நீ அவரையே இப்பிடி நினைச்சிட்டு இருக்க போறியா?”

 

“இ..இல்ல நான் அவரை மறக்க ட்ரை பண்றேன்.”

 

“உன்னால முடியுமா”

 

“தெரியல….ஆனா முயற்சி பண்றேன். நான் அம்மாவோட கனவை நிறைவேத்தனும். அம்மா இல்லாம வளர்ந்து தான் இப்பிடி வீணா போனானு யாரும் பேச கூடாது. அத்தையையும் அப்பாவையும் கஷ்டப்படுத்தக் கூடாது” என்றவளது குரல் கம்மியிருந்தது. அதுயும் தாண்டி இது வெறும் ஈர்ப்பு தான் என்பதில் அவள் தீர்க்கமாக இருந்தாள். கண்களின் இரு சொட்டு கண்ணீர் வழிந்தது.

 

பின் ஒரு முடிவோடு புஜ்ஜியை கையில் எடுத்தாள்.

 

“புஜ்ஜி, எனக்கு என் அம்மா பக்கத்தில இருந்தா எனக்கு இப்போ ஆறுதலா இருந்துருப்பாங்கல்ல. என்னோட லைஃப் ல எடுக்குற பெரிய முடிவுக்கும் பக்க பலமா இருந்துருப்பாங்க. இந்த குழப்பமான சூழ்நிலை மாறியிருக்கும். என்னால எழிலையும் என்னோட இந்த உணர்வுகளையும் மறக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா இதை தொடருரதும் அதை விட கஷ்டம். ஏன்னா இதுக்கு எதிர்காலம் கிடையாது. அவர நான் திரும்ப பாப்பேனானு கூட தெரியாது. அப்பிடியே பாத்தாலும் அவருக்கும் என்னை பிடிக்கனுமே.

எனக்கு வந்திருக்க இந்த ஈர்ப்பு எனக்கு அழகான நினைவுகளை குடுத்துருக்கு. இது ஈர்ப்பை தாண்டி வேறதுவும் இல்லை . அதுவரைக்கும் எனக்கு போதும்.

 

என்னோட கனவை நான் நனவாக்கனும்னா இதை நான் மறக்க முயற்சி பண்ணனும்.

 

என்று கடைசியாக அவள் எழுதும் போது, அவள் கண்ணீர் தடங்களும் அந்த கடதாசியில் வழிமொழிந்தது.

 

இப்பிடியே மேலும் நான்கு வருடங்கள் கடந்திருந்தன. அவ்வப்போது எழிலின் நினைவுகள் துளிர்த்தாலும் அந்த நினைவுகளை வளரவிடாது தடுக்க முற்பட்டு அதில் வெற்றியும் கண்டாள்.

 

அவளது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவள் கனவை நனவாக்க முதல் படியை கடக்க உதவியது. ஆம், அவள் உயர் தரத்தில் நல்ல மதிப்பெண்களோடு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருந்தாள்.

 

அத்தோடு அவளது ஆறு வருட கதை அந்த டயரியோடு முடிவடைந்தது. எழில், யாழினி இருவரினதும் காதல் கைகூடிய போது. இந்த டயரி அவளது பொக்கிஷமாகியது. அவள் காதல் உணர்வு துளிர்த்து எழ அந்த டயரி தான் உதவியது. அப்போது தான் “யாழினி லவ்ஸ் எழில்” என்று முதல் பக்கத்தில் எழுதி அழகு பார்த்தாள்.

 

டயரியை மூடி வைத்தவன் மனது பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இருந்தது. இரண்டாஈவது முறையாகவும் அவளிடம் வீழ்ந்தான்.

 

நிமிர்ந்து யாழினியின் கண்களை பார்த்தான்.

 

அவள் கண்கள் நிறைவான ஒரு உணர்வை பிரதிபலித்தது.

 

அவளால் அன்று புரிந்து கொள்ள முடியாத உணர்வை இன்று அவன் புரிந்து கொண்டான். அவள் மனதில் , தான் ஒரு அழியாத இடத்தில் இருக்கின்றான் என்ற உணர்வே சுகமாக இனித்தது. வேகமாக அவள் அருகில் நெருங்கி அவளை இறுக அணைத்திருந்தான். சில நிமிட மெளனம் மட்டுமே அவர்களது பாஷையாகியது.

 

ஆனால் அவர்களது மெளனத்தை கலைக்கவே ஒரு குரல் ஒலித்தது.

 

“டேய் எவ்ளோ நேரம் டா ரொமான்ஸ் பண்ணுவிங்க? என்னை கொஞ்சம் தூக்கி விடுங்கடா” என்ற அபியின் புலம்பலில் எழில் யாழினியை விட்டு விலகி ஜன்னல் அருகே ஓட யாழினியும் பின் தொடர்ந்தாள்.

 

அங்கே அபியோ ஜன்னலின் அருகே இருந்த பைப்பில் வௌவால் போல் தொங்கிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்து யாழினியும் எழிலும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

“டேய்!! மாப்பிள்ளையாச்சே னு பாக்குறேன். இல்லாட்டி கெட்ட வார்த்தையாலேயே திட்டிருப்பேன். மரியாதை யா தூக்கி விடு.”

 

எழில் அவனை தூக்கி விட முயற்சிக்கும் போது யாழினியின் அத்தை” யாழு மா கதவை திறடா. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.” என்று சொல்ல யாழினியின் இதயமோ ஹை ஸ்பீடில் துடித்தது. எழில் நிலைமையை தீவிரமாக விடாது அபியை கீழிறங்க சொல்லி விட்டு அவனும் பைப்பில் ஸ்பைடர்மேனாக தொத்திக்கொண்டான். அபியும் எழிலை திட்டியவாறு கீழிறங்க எழிலோ பைப்பை பற்றியபடியே யாழினியை ஏக்கமாகப் பார்த்தான். யாழினியோ,” பிளீஸ் போங்க எழில்” என்று கெஞ்ச அவன் சரி என்று தலையாட்டிவிட்டு கீழிறங்க ஒரு காலை சற்று கீழே வைத்தான்.

 

அடுத்த காலை கீழே வைக்க முன் மீண்டும் யாழினியை பார்த்தான். அபி ஒரு கட்டத்தில் கடுப்பாகி” டேய் உங்க ரொமான்ஸ் போதும்டா சாமி. இல்லாட்டி உனக்கு கல்யாணம் இல்ல கருமாதி தான் நடக்கும் ” என

 

யாழினி ” அண்ணா!!!” என்று முறைத்தாள்.

 

அபி,” சரிமா சாரி. உன் புருஷன கொஞ்சம் இறங்க சொல்லறியா? கொக்கிகுமார்ட அடியெல்லாம் வாங்க முடியாது மா”

 

எழில்,”சரி…போய்ட்டு வரேன் பத்திரம்”என்று எம்பி அவள் நெற்றியில் முத்தமிட்டு இறங்கவும் யாழினியின் அத்தை கதவை மீண்டும் தட்டவும் சரியாக இருந்தது.

 

யாழினி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.

 

“யேம்மா இவ்ளோ நேரம்?”

 

“கொஞ்சம் தூங்கிட்டேன் அத்தை”

 

“சரி…உன் பிரெண்ட்ஸ் எங்க?”என்றவர் கேட்டு முடிக்க முன் “நாங்க இங்க இருக்கோம்” என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

 

அவருக்கு இருக்கும் வேலையில் மேலும் கேள்வி கேட்டு குடையாமல் “சரி சாப்பாடு இருக்கு. சாப்பிட்டு தூங்குங்க” என்று சென்று விட்டார்.

 

அவர் சென்றவுடன் தீப்தி யாழினியின் தோளைப் பற்றி,” என்ன பங்கு….எழிலோட ரொமான்ஸா??”

 

யாழினி,” சீ போடி” என்று அழகாக வெட்கப்பட்டாள்.

 

 

தொடரும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்