Loading

மதிய உணவு இடைவேளையின் போது, கேண்டினில் சோர்வாக அமர்ந்திருந்தவளை பார்த்து யோசனையுடன் எதிரில் அமர்ந்தான் ஆகாஷ். “என்ன இன்னைக்கு ஸ்பெஷல் லன்ச்சுக்கு?” என வழக்கம்போல ஆகாஷ் கேட்க, மகியோ உணவு டப்பாவை எடுத்து கொடுத்து, “இன்னைக்கு லெமன் ரைஸ்” என்றாள்.

அதை ஆச்சர்யமாக பார்த்தான் ஆகாஷ். எப்போதும் அவன் கேண்டினில் தான் உணவருந்துவான். இருந்தாலும் மகியிடம் வந்து அவளுடைய உணவை கேட்டு வம்பிழுப்பான். ஆனால் அவளோ, “போ. இது எங்க அம்மா எனக்காக செஞ்சது. நீ போய் கேண்டின்ல சாப்பிடு.” என்பவள் சுவைக்காக கொஞ்சம் தருவாள்.

இன்றோ டப்பாவோடு தரவும்தான் இந்த ஆச்சர்யம் அவனுக்கு. “ஹேய். நீ நார்மலா தான் இருக்கியா. இந்த ஒரு வாரத்துல நீ ரொம்ப ஹேப்பியா இருக்கறதே இந்த டைம்ல தான். அதுவும் டப்பாவோட லன்ச்சை எனக்கு குடுக்கற.” என்றான்.

“என்ன நான் உனக்கு குடுக்காமலே சாப்பிடற மாதிரி சொல்ற. நான்தான் அம்மாகிட்ட உனக்கும் சேர்த்து இன்னொரு பாக்ஸ் வாங்கிட்டு வரேனு சொன்னேன். நீதான் அம்மாக்கு கஷ்டம். அப்படி இப்படினு வேண்டாம்னு சொன்ன ஆகாஷ்.” என்றாள் மகி.

“அதானே இன்னொன்னு வாங்கிட்டு வந்து தந்தாலும் தருவ. ஆனா உன்னதை தரமாட்ட. இன்னைக்கு என்ன திடீர் கரிசனம்னு கேட்டேன். என்னாச்சுடா ஏதாவது ப்ராப்ளமா?” என சற்று கனிவாகவே கேட்டான் ஆகாஷ்.

“நான் ஸ்கூல் படிக்கறப்ப இருந்து யார்க்கிட்டயும் திட்டே வாங்குனதுல்ல. எல்லாத்துலயும் ரொம்ப கரெக்டா இருப்பேன். ஆனா இன்னைக்கு பர்ஸ்ட் டைம் பயங்கரமாக திட்டு வாங்கிட்டேன். அதான் ஒரு மாதிரி இருக்கு. எல்லாம் அவனால தான். அவனை கண்டிப்பா பிடிக்கலன்னு தான் சொல்லப்போறேன்.” என்றாள் மகி.

“யார் உன்ன திட்டுனா? யாரை பிடிக்கல? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு?” என ஆகாஷ் கேட்கவும் சற்று முன் நடந்ததை கூறினாள் மகி. “ஓகே. உங்கப்பா கேட்க சொன்னாரு. நீ பர்மிஷன் கேட்டு திட்டு வாங்கின. அந்த இன்னொரு ஆள் யாரு. அவரை ஏன் திட்டற.” என்றான் ஆகாஷ்.

“வேற யாரை. என்னை பொண்ணு பார்க்க வரதா சொன்ன மாப்பிள்ளையை தான். அவன் பேசாம ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காதுல்ல.” என்றாள் மகி.

அவளது பேச்சு சிறுபிள்ளை தனமாக இருக்க அதில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் சிரித்தால் திட்டுவாள் என்பதால் அதை அடக்கியவன், “சரி விடு. நீ முதல்ல சாப்பிடு. நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.” என எழுந்து சென்று உணவுடன் வந்தான்.

பிறகு சாப்பிடும்போது, “நான் காலைல இருந்து வேற டிப்பார்ட்மெண்ட்ல இருந்தேன். யாரு அந்த லேடியாம்?” என விசாரித்தான் ஆகாஷ். “தெரியல. ஏதோ எம்.டிக்கு ஈக்குவல் ரைட்ஸ் இருக்குனு சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகல. ஒருவேளை அவங்க சிஸ்டரா இருக்குமா?” என யோசித்தாள் மகி.

அப்போது அங்கு வந்த அவளது தோழி ராகினி காதில் இது விழுந்துவிட அவர்களோடு வந்து அமர்ந்தவள், “அவங்க திட்னதுக்கு சாப்பிட மாட்டனு யோசிச்சேன். ஆனா நீ வெளுத்து கட்ற. சரி அதை விடு. இப்ப சொன்னதை வேற யார்க்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத.” என்றாள்.

“நான் என்ன சொன்னேன். நீ எதை சொல்ற?” என புரியாமல் கேட்டாள் மகி. “அதான் சிஸ்டர்னு சொன்னியே அதைதான். இது மட்டும் அந்தம்மா காதுல விழுந்தது அது மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.” என எதையோ யோசித்தவள் சிரித்தபடி, “அவங்க சித்தார்த் சார் கட்டிக்க போற பொண்ணு. பார்த்து பேசு. இல்லனா நீ வேற வேலை தேடனும்.” என்ற எச்சரிக்கையோடே எழுந்து சென்றாள்.

இதைக்கேட்ட ஆகாஷ், ‘அப்ப சித்து சார் சொன்னது இந்த பொண்ணுதானா? அப்பறம் ஏன் அவர் ஊர்ல இல்லை. ஒருவேளை அவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமா.’ என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

“என்ன ஆகாஷ் யோசனை. சாப்பிடு. ஆமா எனக்கு ஒரு டவுட். நான் சித் சாரை பார்த்ததில்ல. ஆனா சந்துரு சாரே இவ்ளோ ஹேண்ஸமா இருக்காருனு. கிட்டத்தட்ட அதே ஜாடைல தான் அவரும் இருப்பாருனு நினைக்கறேன். இவங்க எப்படி அவருக்கு மேட்ச் ஆவாங்க. அதோட இவங்க கொஞ்சம்.” என்றாள் மகி தணிந்த குரலில்.

அதைக்கேட்ட ஆகாஷ், “என்ன மகி. எப்ப இருந்து இப்படி அழகெல்லாம் கம்பேர் பண்ண ஆம்பிச்ச. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். வந்த வேலையை மட்டும் பாரு.” என்றவன் கோபமாக எழுந்து சென்றான்.

அப்போதுதான் மகிக்கும் அவளது தவறு புரிந்தது. ‘ஏனோ தனக்கு முதல் பார்வையில் அவர்களை பிடிக்கவில்லை என்பதற்காக, தான் இப்படி பேசுவது சரியாகாது’ என உணர்ந்தவள் ஆகாஷிடம் மன்னிப்பு கேட்க சென்றாள்.

அவனோ, “நான் உன் ஃப்ரண்ட் மகி.  உன்னோட சரியான விசயத்தை பாராட்டற மாதிரி தப்பையும் சொல்லனும். அப்படி நினைச்சுதான் சொன்னேன். நீ தப்பா எடுத்துக்காத சரியா.” என்றவன் அவனது கேபினுக்கு செல்ல அதே நேரம் தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் அவள்.

அவளை பார்த்து அதிர்ந்தவனுக்கு, மகி சொன்னது தவறாக தெரியவில்லை. அழகை பற்றியல்ல, சித்துவின் குணத்திற்கும், இவளது குணத்திற்கும் நிச்சயம் பொருந்தாது. என தோன்றியது. மகிக்கு வேண்டுமானால் சித் யாரென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் சித்து பற்றி ஓரளவாவது ஆகாஷ் அறிவானே!

            நர்சிங் ரூமில் அந்த மருத்துவரை பார்த்து அதிர்ந்த சித்தார்த்தின் இதழ்கள் “வதனி” என்றே முணுமுணுக்க வெளியே வந்த அவளிடம், “ஹாய் மகிழ். எப்படி இருக்க? நீ எப்படி இங்க? என்னை தெரியுதா?” என ஆச்சர்யமாக கேட்டான்.

கவினுக்கு அவளை யாரென்று தெரியாததால் இருவரையும் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான். அவளும் நிமிடத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்டு, “அபி நீங்க எப்படி இங்க. நான் நல்லா இருக்கேன். நீங்க?” எனக் கேட்டாள்.

அதற்குள் வேறு ஒருவர் மருத்துவ உதவிக்காக வர, “இப் யூ டோன்ட் மைண்ட். நாம அப்பறமா பேசலாமா?” என மகிழ் கேட்க, “ஓகே” என்றவன், கவினிடம், “ஸ்ரேயாவை பார்த்து கூட்டிட்டு வா. எனக்கு ஒரு கான்கால் இருக்கு.” என்றுவிட்டு சென்றான்.

சற்று நேரத்தில் ஸ்ரேயா கண்விழித்து விட, அவளிடம் சென்ற கவின், “இது என்ன புது பழக்கம் விரதம் இருக்கறது?” எனக் கேட்டான். அதற்கு அவள், “இல்ல எப்பவும் அம்மா இருப்பாங்க. கேட்டா நினைச்சது நடக்கும்னு சொல்வாங்க. சரி நானும் டிரை பண்ணலாம்னு. ஆனா பாரேன் ஒரு நாள்லயே நீ பேசிட்ட. அப்ப பவர் இருக்குதானே.” என்றாள் அவள்.

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.  உன்கிட்ட நான் எப்ப பேச மாட்டேனு சொன்னேன். நீதான் நான் சொல்றதையே புரிஞ்சுக்க மாட்ற. சரி இனிமே பேசறேன். ஆனா இன்னொரு முறை நீ இது மாதிரி ஏதாவது பண்ண, அதுதான் நான் உன்கிட்ட பேசற கடைசி நாள் புரியுதா.” என கவின் கோபமாக கேட்க இவள் மௌனமாக தலையாட்டினாள்.

பிறகு இருவரும் அலுவலகத்திற்குள் வந்தனர். சித்தார்த்தோ கேபினில் ஏதோ ஒரு நினைவில் அமர்ந்திருந்தான். அவனை எட்டிப்பார்த்த கவின், “என்னாச்சு மச்சி. ஏதோ கால் இருக்குனு சொன்ன. எனி ப்ராப்ளம்?” எனக் கேட்டான்.

“ஒன்னுமில்லடா. ஏதோ யோசனை அவ்ளோதான். கால் இப்பதான் முடிஞ்சது.” என்றான் சித்து. “ஓ சரி மச்சி. அவங்க யாரு?” எனக் கேட்க, “எவங்க?” என திருப்பிக் கேட்டான் சித்து.

கவின், “அதான் நர்ஸ் ரூம்ல பார்த்தோமே.” என்க, “அவங்க என்னோட ப்ரண்ட்.”  என சித்தின் வாய் மொழிந்தாலும் கண்களின் இருந்த பரவசம் வேறு சொன்னது. “சரிடா. அப்பறம் பேசலாம்.” என கவினிடம் கூறியவன் இண்டர்காம்மில் அழைப்பு விடுத்தான்.

எதிர்முனையில் மகிழ் ஃபோனை எடுக்க, “மகிழ். நான் அபி பேசறேன். இங்க  ஃப்ரீயா பேச முடியாது. ஈவ்னிங் போறப்ப என்கூட வர முடியுமா?” எனக் கேட்டான். அவளும் மறுப்பு சொல்லாமல் சரியென்று விட இவன் முகமும் மலர்ந்தது.

அன்றைய நாளை கடத்திவன் மாலையில் கவினிடம் வந்து பைக் சாவியை எடுத்துக் கொண்டவன்.. ஸ்ரேயாவை அழைத்து, “ஸ்ரேயா. இன்னைக்கு கவின் உன்கூட வரானாம். நீ டிராப் பண்ணிடறியா?” எனக் கேட்க அவளோ மகிழ்வுடன் சம்மதம்  சொன்னாள்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த கவின், “டேய். அப்படி என்னடா வேலை உனக்கு. இந்த பிசாசோட என்னை கோர்த்து விட்டுட்டு போற. நீ சொல்லிருந்தா நானே கால்டாக்ஸி புக் பண்ணி போயிருப்பேன்ல.” என புலம்பினான்.

சித்து அதையெல்லாம் கண்டு கொண்டால்தானே, சாவியை தூக்கி பிடித்தபடி புன்னகை முகத்தோடு  வெளியே வந்தவன் பார்க்கிங்கில் சென்று வண்டியை எடுத்துக் கொண்டு கேட்டில் நிறுத்தி மகிழுக்காக காத்திருந்தான்.

அவள் வெளியே வந்ததும், இவனை பார்த்து புன்னகைத்தவள், வண்டியில் ஏறிக் கொள்ள.. சிரிப்போடு வண்டியை கிளப்பினான். அது பெங்களூர் நகரம் என்பதால் யாருக்கும் அது தவறாக தெரியவில்லை. எல்லாரும் அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தனர்.

ஆனால் சற்று தொலைவில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த கவினுக்கோ அது ஆச்சர்யமாக இருந்தது. சித்தை பற்றி முழுமையாக அறிந்தவனாயிற்றே. பொதுவாக பெண்களிடம் ஒதுக்கம் காட்டுபவன் அல்லதான். ஆனால் அதே சமயம் பெரிதாக உறவாடவும் மாட்டான்.

ஏன் கவின் கூட ஸ்ரேயாவோடு இணைந்து பலமுறை இருசக்கர வாகனத்தில் வந்துள்ளான். ஆனால் சித் அதை கவனமாக தவிர்த்து விடுவான். அப்படி இருப்பவன் புன்னகை முகத்தோடு ஒரு பெண்ணுடன் செல்கிறான் என்றால் அதுதான் அவனுக்கு யோசனையாக இருந்தது.

ஸ்ரேயாவோ, “கிளம்பலாமா கவின்?” எனக் கேட்க, அதே யோசனையுடன் வண்டியில் ஏறினான். நேராக ஸ்ரேயா வீட்டிற்கு செல்ல கவினும் அதை கவனிக்கவில்லை. “இறங்கு” எனும்போதே அவளது வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்தவன் “என்னை ரூம்ல தானே டிராப் பண்ண சொன்னேன்.” என முறைத்தான்.

“ரொம்ப பண்ணாத. அம்மா உன்னை பார்த்து நாளாச்சுனு சொல்லிட்டு இருந்தாங்க. அதான் வா.” என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவளது அன்னை அவனை வரவேற்று, தண்ணீர் குடுத்தவர், “எங்கப்பா. ரொம்ப நாளா ஆளையே காணோம்.” என விசாரித்தார்.

ஸ்ரேயாவின் அம்மா தமிழ்நாடுதான். அப்பா கன்னடம். தூரத்து சொந்தமாக இருந்தாலும் அந்த காலத்திலே காதல் திருமணம் புரிந்தவர்கள். அதனால் அவர் நன்றாக தமிழ் பேசுவார். அதற்கு கவின், “கொஞ்சம் வேலைமா.” என்றான்.

அதன்பிறகு பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின்பு ஸ்ரேயா உள்ளே சென்று விட, “இவளுக்கு நிறைய வரன் வருது. இவதான் வேணாம்னு நிற்கறா. கேட்டா தெரியாத ஆளை எப்படி கல்யாணம் பண்ணிக்கறதுனு கேட்கிறா. சரி யாரையாவது லவ் பண்ணா கூட்டிட்டு வா. பேசறேனும் சொல்லிட்டேன். அதுவும் இல்லங்கறா. உனக்கு ஏதாவது தெரியுமாப்பா?” எனக் கேட்டார்.

அப்போதுதான் கவினுக்கு ஒன்று புரிந்தது. ‘திருமணம் மீது இருக்கும் பயத்தினால் தான் தன்னிடம் அது போல பேசியிருக்கிறாள்.’ என. பிறகு அவரிடம், “அதெல்லாம் ஒன்னுமில்லமா. அவளுக்கு கல்யாணத்தை பத்தின பயம் அவ்ளோதான். நான் பேசறேன் சரியா.” என கூறியவன்.. சற்று நேரம் அங்கு இருந்து விட்டு கிளம்பி விட்டான்.

சித்தார்த்தோ மகிழை கூட்டிக் கொண்டு ஒரு பார்க்கிற்கு சென்றான். “சொல்லு மகிழ். நீ எப்ப தேனில இருந்து பெங்களூர் வந்த? அங்க பார்த்துட்டு இருந்த வேலை என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?” என கேள்விக் கணைகளை தொடுக்க அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ச்சியாகி அவளை பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்