Loading

            ‘தன் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா’ என்ற யோசனையோடே சுற்றுப்புறத்தை கவனியாமல் சித்து படிகளில் ஏற அவன் மேடைக்கு சென்று வரட்டும் என அவர்களுக்கு வழிவிட்டு  சந்துருவும், மற்றவர்களும் கீழே வந்தனர். ராகினியோ சித்துவை கண்டதும் ஆச்சர்யத்தில் கண்கள் அகல அவனை பார்த்தாள்.

ராகினியின் கணவன் தீபக், சித்துவை தனது எம்.டி என அவளுக்கு அறிமுகம் செய்ய, அப்போதுதான் ராகினிக்கே தனது கணவன் வேலை செய்வது சித்துவின் அலுவலகத்தில் என தெரிய, “என்ன சொல்றீங்க? இவர் என்னோட பாஸ்.” என்றவள், “சித்தார்த் சார் நல்லா இருக்கிங்களா?” எனக் கேட்டாள்.

அவன் யோசிக்கவும் “என்ன சார். அதுக்குள்ள மறந்துட்டீங்க. நான் ராகினி. சென்னை பிரான்ச்ல உங்க டீம்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேனே.” எனவும் அவனுக்கும் நினைவு வந்தது. “ஆமா. ஓ சூப்பர். நல்லா இருக்கேன். வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்” என தங்களது பரிசை கொடுத்தான்.

அப்போதுதான் கவினை கண்டவள், “கவின் சார். நீங்க எப்படி இருக்கீங்க? நான் கூட நீங்க திடீர்னு வேலையை விடவும் எங்க போயிட்டீங்கன்னு யோசிச்சேன். ஆனா நீங்க சார் கூடதான் இருக்கீங்க போல.” என்றவள் மகிழை பார்க்க தீபக் அவளை ராகினிக்கு அறிமுகம் செய்தான். பிறகு அகல்யாவும் வாழ்த்துகளை கூறினாள்.

ஆனால் அப்போதும் மகிழின் விழிகள் கீழே இருந்த மகியின் பெற்றோரின் மீதுதான் இருந்தது. அதை கவனித்த சித்து, “மகிழ் உன்கிட்டதான் பேசறாங்க.” என அவளது கைகளை பற்ற, ஓரிரு வார்த்தைகள் பேசியவள் கவனம் மட்டும் மாறவில்லை. பிறகு நால்வரும் கீழே வர சந்துருவும் மற்றவர்களும் அவர்களிடம் வந்தனர்.

“அண்ணா. நீங்க எப்படி இங்க எப்படி இருக்கீங்க?” என சிந்து கேட்டதில். மகிக்கு அவன்தான் சித்து என்பது புரிய, ஆகாஷோ சித்துவை பார்த்திருந்தான். அப்போதுதான் அவனை கண்ட சித்து, “ஹேய். ஆகாஷ். நீ எப்படி இங்க?” என இயல்பாக கேட்க, அவனோ சித்துவையும், மகிழையும் பார்த்துவிட்டு, “சோ. அப்ப நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணிதான் எல்லாரையும் அவாய்ட் பண்ணியிருக்கீங்க?” என்றான்.

அவன் பேச்சில் தனது கவனத்தை மாற்றிய மகிழ், “என்னாச்சு ஆகாஷ். என்ன பிளான். நீ எப்படி இங்க இருக்க? நீ மட்டும் வந்தீயா, இல்ல மத்தவங்களும் வந்துருக்காங்களா?” எனக் கேட்க, சித்துவும் அதே கேள்வியை தாங்கி அவனை பார்த்தான். “நான் உங்க ஆபிஸ்ல தான் வேலை பார்க்கிறேன். உங்களை தேடி அங்க வந்தா நீங்க கூலா இங்க இருக்கீங்க.” என்றதில் மகியும், சந்துருவும் புரியாமல் பார்த்தனர்.

“எல்லாத்தையும் வெளில போய் பேசிக்கலாம். நீங்க முதல்ல சாப்பிட்டு வாங்க.” என்ற சந்துரு, மகியிடம், “நான் கார் அரென்ஜ் பண்றேன். நீயும் அப்பா அம்மாக்கூட கிளம்பு மகி. நானும், ஆகாஷூம் நாளைக்கு வந்திடுவோம்.” என்றதும் மகிழ் அதிர்ச்சியானாள். அவளை கண்ட சித்து, “அதெல்லாம் வேணாம். நீங்க வாங்க கிளம்பலாம்.” என்றவன் மகிழை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.

தனது அலுவலக ஊழியர் ஒருவரிடம் மற்றவர்கள் கிளம்ப ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னாலே வந்த சந்துருவிடம், “எங்க ரூம் போட்டு இருக்க? நீ முன்னாடி போ.” என அவனை அனுப்பிய சித்து, “என்னாச்சு வதனி? அவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டான். அவள் பதில் கூறும் முன்பே அவர்களோடு இணைந்த ஆகாஷ், “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல. ஏன் ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.

“ஹேய் பர்ப்பஸாலாம் யாரும் யாரையும் அவாய்ட் பண்ணல. நிலைமை அப்படி. என்னோட ஃபோன் தொலைஞ்சு போச்சு. எல்லாரோட நம்பரும் மிஸ் ஆகிடுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க மகிழை மீட் பண்ணேன். அவளுக்கும் கிட்டத்தட்ட இதே சுச்சுவேஷன்தான். ஆமா நீ எதுக்கு இவ்ளோ எமோஷனலா ரியாக்ட் பண்ற?” என்றான் சித்து.

“ஆமா என்னாச்சு ஆகாஷ் உனக்கு? நீ எதுக்கு எங்கள தேடனும்? அதுவும் அபியோட ஆபிஸ்ல எதுக்கு ஜாயின் பண்ணனும்” என மகிழும் கேட்டாள். “அது. அதுவந்து, திடீர்னு காண்டாக்ட் இல்லாம போனா தேட மாட்டாங்களா? அதான் திடீர்னு ரெண்டு பேரையும் ஒன்னா பார்க்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” என மழுப்பினான் ஆகாஷ்.

சரியாக அறையும் வந்திருக்க, மூவரும் உள்ளே நுழைய பின்னால் வந்த மகியின் தாய், தந்தையை மற்றொரு அறையில் இருக்குமாறு கூறினான் சந்துரு. எதனால் இதையெல்லாம் செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஏதோ ஒரு உந்துதலில் அவன் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும்.

அதன்பின் யாருமே வராமல் இருக்க “ஆமா. இந்த மகி எங்க போனா?” என யோசித்துக் கொண்டே வெளியில் வந்தான் சந்துரு. அங்கோ ஒரு மரத்தடியில் சிந்துவும், கவினும் நின்று பேசிக் கொண்டு இல்லை ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருக்க, சற்று தள்ளி இருந்த ஒரு ஐஸ்கிரீம் தள்ளுவண்டியின் அருகில் நின்றிருந்தனர் மகியும், அகல்யாவும்.

சிந்துவை கடந்து மகியிடம் சந்துரு செல்ல அவளோ அகல்யாவிடம், “நான் சொன்னேன்ல. எப்படியும் அங்க சாரை துரத்தி விட்டுடுவாங்க. அதனால இங்கதான் வருவாங்க. நாம தைரியமா சாப்பிடலாம்னு.” என்றவள், “சார் ஒரு நூறு ரூபா கொடுங்க.” என்றாள். “எதுக்கு” எனக் கேட்டான் சந்துரு.

“வேற எதுக்கு இரண்டே இரண்டு சாக்கோபார் தான் வாங்கினோம். நூறு ரூபாயாம். அதான் கொடுங்க.” என்றாள் மகி. “அதான் கையில காசு இல்லாம உன்னை யாரு வாங்க சொன்னா? அதுக்கு நான் வேற பணம் கொடுக்கனுமா?” என்றான் சந்துரு.

“நான் ஒன்னும் எனக்காக வாங்கல.  இதோ இவங்களுக்காக தான். உங்க பிரச்சனைல சித்து சார் சாப்பிடாம போய்ட்டாங்க. இவங்களும் அவங்களோடதான் வந்தாங்க. பாவம் பசிக்குதுனு சொன்னாங்க. அதான்.” என்றாள் மகி பாவமாக. உடனே அகல்யா, “விடு மகி. சார் கொடுக்கலன்னா கம்பெல் பண்ணாத. ஒரு நிமிஷம்” என்றவள் கவினை அழைத்தாள்.

“என்னம்மா நீ வேற.” என கவின் சலித்துக் கொண்டே திரும்ப, சிந்துவோ, “ம்ம். உன் கண்ணம்மா. கூப்பிடறா போ.” என முறைத்த சிந்து அவனையும் கூட்டிக் கொண்டு அங்கு வந்தாள். “இல்ல சார். ஐஸ்கிரீம்க்கு பணம்.” எனவும் சிந்து முறைத்ததை கண்ட சந்துரு தானே அந்த பணத்தை கொடுத்தான்.

“நீ பொறுமையா பேசிட்டு வா சிந்து” என்ற சந்துரு மகியையும், அகல்யாவையும் அழைத்துக் கொண்டு செல்ல சிந்து, “ஆமா. உனக்கு எப்படி தெரியும் இவங்களை எல்லாம்?” எனக் கேட்டாள். “எனக்கெல்லாம் யாரையும் தெரியாது. எல்லாம் உங்க அண்ணன் பண்ண வேலை. அங்க போய் கேட்டுக்கோ.” என்றான் கவின்.

“அண்ணாக்கு எப்படி தெரியும்னு சொல்ற.” என அழுத்தமாக கேட்கவும், “உங்கண்ணன் மகிழை லவ் பண்றான். மகிழோட ஃப்ரண்டுதான் இந்த அகல்யா. ஆமா. நீ எதுக்கு இப்ப என்ன விசாரணை பண்ற.  நான்தான் உன்னை லவ் பண்ணலன்னு சொல்லிட்டேன்ல. அப்பறம் நான் யார்க்கிட்ட பேசுனா உனக்கென்ன?” என்றான் கவின்.

“நீதான் என்ன லவ் பண்ணலனு சொல்ற. ஆனா நான் உன்னைத்தான் லவ் பண்றேன். அதனால நான் கேட்பேன். ஓ அவங்கதான் என்னோட பெரிய அண்ணியா. ஆமா என்ன பண்றாங்க?” என விசாரணை செய்தாள் சிந்து. கவின், “டாக்டர். இப்ப நம்ப ஆபிஸ்ல தான் வொர்க் பண்றாங்க. சரி விடு அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கனும்.” என்றவன் நடக்க ஆரம்பித்தான்.

அப்போது குறுக்கே ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க, அதிலிருந்து சிரித்தபடி இறங்கினாள் ஸ்ரேயா. ‘அச்சோ. இவ வேற இப்ப சாமியாடுவாளே.’ என கவின் யோசிக்க, “மேரேஜ் முடிஞ்சதா கவின். சேரி கட்டிட்டு வரகொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எனக்கு இந்த சேரி எப்படி இருக்கு.” என்றாள் ஸ்ரேயா இயல்பாக.

“ம்ம் நல்லா இருக்கு. நாங்க மேரேஜ்க்கு போய்ட்டு வந்துட்டோம். நீ போய்ட்டு வா. நாம நாளைக்கு பார்க்கலாம்.” என கவின் வேகமாக கூற, “நான் மட்டும் எப்படி தனியா போறது. பேசாம நீயும் வா கவின்” என ஸ்ரேயா அழைக்க, “அதெல்லாம் கவலைப்படாதீங்க. உங்களை பத்திரமா கூட்டிட்டு போவார்” என சிந்து ஸ்ரேயாவிடம் கூறினாலும் பார்வை கவினிடம், ‘சென்றுதான் பாரேன்’ என்றது.

“ஆங். நீங்க. உங்களை எங்கையோ பார்த்திருக்கேனே. சட்டுன்னு நியாபகம் வரல.” என்றாள் ஸ்ரேயா சிந்துவிடம். சிந்து, “ஆபிஸ்லதான் பார்த்திருப்பீங்க. நான் சித்தார்த்தோட சிஸ்டர்” எனவும், “ஆமாமா. ஓ சாரி மேடம். நீங்க ஏதாவது ஆபிஸ் விசயமா பேசிட்டு இருந்தீங்களா? டிஸ்டர்ப் பண்ணீட்டேன் போல. நீங்க பாருங்க. நான் ஆபிஸ் ஃப்ரண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணீக்கறேன்.” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.

“ஓ நாங்கள்ளாம் உங்ககிட்ட ஆபிஸ் விசயம்தான் பேசனும். அவதான் பர்சனலா பேசுவேனு சொல்லிட்டு போறா அப்படிதானே மிஸ்டர். கவின்” என்க, “என்னக்குன்னு எல்லாம் கிளம்பி வராங்க பாரு. டேய் சித்து. உன் தங்கச்சிட்ட இருந்து என்ன காப்பாத்துடா.” என வாய்விட்டே கூறிய கவின் வேகமாக நடக்க அதைக் கண்ட சிந்துவின் இதழ்களில் மெல்லிய புன்னகை பூத்தது.

அறையிலோ ஆகாஷிற்கு அந்த நேரம் பார்த்து ஏதோ ஃபோன் வர எடுத்து பார்த்தவன் விழித்தான். சித்து, “யாரு ஃபோன் பண்றா? பேசு.” எனவும், ஆகாஷ், “அது அர்ஜண்ட்லாம் இல்ல. அப்பறம் பேசறேன்.” என்க, சட்டென்று அதை வாங்கிய சித்து திரையில் கார்முகிலன் என்ற பெயர் ஒளிர அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“ஆகாஷ். நான் சென்னை வர ஒரு வேலையா வந்தேன். நீ இங்கதானே இருக்க. சித்தார்த்தை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா? ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற. ஏதாவது மீட்டிங்ல இருக்கியா” என மறுமுனையில் கேட்க, சித்து, “ம்ம்” என்றான். “ஓகே. நீ ப்ரீயா ஆகிட்டு பேசு. நான் டிரைனிங் விசயமா வந்திருக்கேன். ஒன் வீக் இங்கதான் இருப்பேன்.” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“பேசுனது நம்ப முகிலனா?” என சித்து கேட்கவும் ஆகாஷ் தலையாட்ட விட்டான் ஒரு அறை அவனுக்கு. “அபி என்ன பண்றீங்க? சும்மா கையெல்லாம் நீட்டாதீங்க.” என்ற மகிழ், “என்ன ஆகாஷ் நடக்குது. எதுக்காக அபியை தேடனும். அப்படியே ஃப்ரண்ஷிப் விட்டுப்போனாலும் என்ன தப்பு. அபிக்கும் நமக்கும் ஒன் வீக் கூட பழக்கம் இல்ல. அப்படி இருக்கும்போது எதுக்காக நீயும், முகிலனும் இவ்ளோ சீரியசா ஆக்கறீங்க.” என்றாள் மகிழ் வருத்தத்துடன்.

“ஓ. அப்ப ஒன் வீக் மட்டும் பழகிட்டு நீங்க மட்டும் எப்படி லைப் பார்ட்னரா சூஸ் பண்ணீங்க?” எனக் கேட்டான் ஆகாஷ். “உனக்கெப்படி தெரியும்.” என சித்து கேட்க, “இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரியும்.” என்றான் ஆகாஷ். காரணம் வேறு யாருமில்லை நம்ப அகல்யாவேதான். மண்டபத்தில் சித்து, மகிழின் கையை பற்றிக் கொண்டு வெளியேற அகல்யா புலம்பியது அவன் காதுகளில் விழுந்தது.

“இப்பதானே இவங்க ரெண்டு பேரும் கமிட் ஆகிட்டாங்க. ஒரு பெரிய ட்ரீட்டா வாங்கிடலாம்னு சந்தோஷப்பட்டேன். அதுக்குள்ள உள்ள சோத்துக்கும் ஆப்பு வச்சிட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு கிளம்புதுங்களே” என்றாள். தனக்கு அப்போதுதான் புரிந்தது என்று ஆகாஷ் கூறவும், “இவ வாய் இருக்கே.” என பல்லை கடித்தாள் மகிழ்.

“நான் வெறும் ஜஸ்ட் பாசிங் கிளவுட்ஸா நினைக்கல உங்களை. நீங்க அப்படி நினைச்சிருந்தா நான் பண்ணது தப்புதான். சித்தார்த்தை மறுபடி பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா இந்த ஐடியா கொடுத்தது. சித்தார்த்தை கண்டுபிடிக்கச் சொன்னது எல்லாமே கார்முகிலன் தான். அது ஏன்னு எனக்கு தெரியாது” என வருத்தத்துடன் கூறியவனை அணைத்துக் கொண்டான் சித்து.

சித்து ஆகாஷிடம் “சரி, நாம இதை பத்தி அப்பறம் பேசலாம்.” என்றவன், “நீ ஏன் ஒரு மாதிரி இருக்க. அவங்களை பார்த்து நீ ஏன் அவ்ளோ டென்ஷன் ஆன. உனக்கு தெரிஞ்சவங்களா. உன் ரிலேடிவ்ஸா?” என்றான் மகிழிடம். அவளோ பதில் பேசாமல் நிற்க, “சொல்லு. ஒருவேளை அந்த சந்தேஷ்க்கும், இவங்களுக்கும் சம்பந்தம் இருக்கா?” எனக் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தவள், “இல்ல அபி. ஆனா எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நான் இல்லாம போய்ட்டாங்கன்னு நம்பிட்டு இருக்கிற என்னோட பெத்தவங்கதான் அவங்க.” என்ற மகிழின் கூற்று சித்துவுக்கும், ஆகாஷூக்கும் மட்டுமல்லாது அறை வாசலில் நின்றிருந்த மற்ற அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்