Loading

சென்னையில் அலுவலகத்தில் மகி ஏதோ காகிதத்தாள்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு டீமாக சென்று கொண்டிருந்தாள். ஆகாஷ் அவளை கண்டு, “ஹேய். எங்க சுத்திட்டு இருக்க. வேலை எதுவும் இல்லையா?” எனக் கேட்டான். “இதுவும் வேலைதான்” என்றபடி அவனை கடந்து சென்றாள் மகி.

திடீரென நினைவு வந்தவளாக, “ஹேய். இந்தா நீயும் சைன் பண்ணு” என அந்த தாள்களை நீட்ட, “என்ன இது” என்றபடி ஆகாஷ் வாங்கி பார்க்க.. அந்த அலுவலகத்தின் வேலை பார்ப்பவர்களின் லிஸ்ட் அது. “எதுக்கு சைன். ஏதாவது வெரிபிகேஷனா?” என்றபடி அவனது பெயருக்கு நேராக கையொப்பம் இட்டான் ஆகாஷ்.

அதை வாங்கியவள், அவன் கையெழுத்து இட்ட இடத்திற்கு அருகில் இரண்டாயிரம் என எழுத, “என்ன பண்ற?” என்றான் ஆகாஷ். “சைன் மட்டும் போட்டா போதுமா? மொய் எழுதவே இல்ல. அதான் இரண்டாயிரம் ஓகே தானே.” என்றாள் மகி. “எது இரண்டாயிரமா. எதுக்கு மொய். உனக்கு கல்யாணமா. நீயே வசூல்ல இறங்கிட்டியா?” என்றான் ஆகாஷ்.

“ஹேய். எனக்குன்னா இவ்ளோதான் போட்டு இருப்பனா? ராகினிக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்குல்ல. இன்னும் ஒன் வீக்ல மேரேஜ். அதுக்குதான்.” என்றாள் மகி. “ஓ. அதுக்குள்ள மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்களா? ஏன் இவ்வளவு சீக்கிரம்? ரிசைன் குடுத்தாச்சா?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“எல்லாம் ஜாதகம் உபயம்தான். இந்த மன்த்க்குள்ள பண்ணனும்னு ஜோசியர் சொல்லிட்டாராம். அதான். லீவ் தான் போட்டுருக்கா. மேரேஜ் முடிஞ்சு. ஒன் ஆர் டூ மன்த்ஸ் வருவான்னு நினைக்கறேன்.” என்றாள் மகி. “ஆமா மேரேஜ்க்கு போகும்போதுதானே கிப்ட் வாங்கனும். நீ என்ன கலெக்ட் பண்ற?” என புரியாமல் கேட்டான் ஆகாஷ்.

“என்னோட பழைய ஆபிஸ்ல மேரேஜ்க்கு இப்படிதான் பண்ணுவோம். எல்லார்கிட்டயும் கலெக்ட் பண்ணா பெரிய அமௌண்டா வருமா. ஆபிஸ் ப்ரண்ட்ஸ்னு போட்டு நல்ல பரிசா வாங்கி குடுக்கலாம்ல.” என்றாள் மகி. “நல்ல ஐடியாதான். ஆனா இங்க அது மாதிரி பண்ணுவாங்களான்னு தெரியாம யாராவது ஏதாவது சொல்ல போறாங்க மகி” என்றான் ஆகாஷ் அக்கறையாக.

“நான் யாரையும் கட்டாயப்படுத்த போறதில்ல. இஷ்டம் இருக்கவங்க போடட்டும். தனியா பண்ணனும்னு நினைச்சாலோ இல்ல பண்ணவே வேணாம்னு நினைக்கறதும் அவங்க இஷ்டம்தானே” என்ற மகி, “இரு வரேன்” என்று சென்று விட ‘அவங்கவங்க இஷ்டம்னு சொல்லிட்டு என்கிட்ட இரண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டாளே’ என யோசனையில் ஆழ்ந்தான் ஆகாஷ்.

மகி தனது இடத்தில் இருக்க அப்போது அங்கு வந்தாள் ராகினி. “என்ன கல்யாண பொண்ணு இந்த பக்கம்.” என மகி கேட்க, “இல்ல எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சு.. இன்னும் சந்துரு சாரை பண்ணல. அன்னைக்கு அவர் லீவ் இல்ல. அதான் பத்திரிக்கை வைக்கலாம்னு வந்தேன்.” என்றாள் ராகினி.

“ஆமா நேத்தும் அவர் வரல. இன்னைக்கு வருவார்னு நினைக்கறேன். பார்க்கலாம். நீ கேட்டுட்டு வந்துருக்கலாம்ல.” என்றாள் மகி. “ஒன்னும் பிராப்ளம் இல்ல. இங்க பக்கத்துல ஃப்ரண்ட்ஸை கூப்பிட வேண்டி இருந்தது. அதான் இருந்தா பார்க்கலாம்னு” எனக் கூறும்போதே அலுவலகத்திற்குள் வந்தான் சந்துரு.

மகி, “உன் நேரம்டி. வந்துட்டாரு பாரு.” என்க, “சரி வா. வைச்சுட்டு வரலாம்” என அழைத்தாள் ராகினி. அவளுடன் மகியும் செல்ல, “என்ன காலையிலே இந்த பக்கம். சொல்லுங்க.” என சந்துரு கேட்கவும் தனது திருமண அழைப்பிதழை நீட்டினாள் ராகினி.

“ஓ இன்விட்டேஷன் வந்தாச்சா. எப்ப மேரேஜ். மாப்பிள்ளை என்ன பண்றாரு?” எனக் கேட்டுக் கொண்டே அழைப்பிதழை பிரிக்க, “நெக்ஸ்ட் வீக் சார். அவர் பெங்களூர்ல வொர்க் பண்றாரு. இதே பீல்ட்தான். மேரேஜ் அங்க வைச்சிருக்காங்க. கண்டிப்பா வரனும். முடிஞ்சா சித்து சாரையும் வர சொல்லுங்க சார்.” என முடித்தாள் ராகினி.

சந்துரு, “கண்டிப்பா வந்தர்லாம்.” எனவும், விடைபெற்று வெளியில் வர ராகினி வீட்டுக்கு கிளம்பினாள். மகி ஏதோ யோசித்தவள் மறுபடி உள்ளே சென்று ஆகாஷிடம் நீட்டிய அதே பேப்பரை நீட்டினாள் சந்துருவிடம். “என்ன இது” என வாங்கி பார்த்தான் சந்துரு.

“அது ஒன்னுமில்ல சார். ராகினி மேரேஜ்க்கு எல்லார்கிட்டயும் பணம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்களும் போடுங்க.” என்றாள் மகி. “ஓ. இது என்ன புதுசா?” எனக் கேட்கவும் மகி விவரம் சொன்னாள். சந்துரு, “ஓ சரி. இந்த லிஸ்ட் எங்க இருந்து வாங்கின?” எனக் கேட்டான் அதை ஓரமாக வைத்துவிட்டு.

“வேற எங்க எச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல தான்.” என்றாள் மகி. “என்ன சொல்லி வாங்கின. அப்படியெல்லாம் கொடுக்க மாட்டாங்களே?” என சந்துரு யோசிக்க, “உங்க பேர் சொன்னா கூடவா. ஏதோ வெரிபிகேஷனுக்கு எம்ப்ளாயி லிஸ்ட் கேட்டாங்க. சந்துரு சார்ன்னு சொன்னேன்.” என்றாள் மகி சிரித்தபடி.

“அது சரி. இன்னும் என் பேர் எங்கெங்கலாம் யூஸ் ஆகுதோ தெரியல. எல்லார்கிட்டயும் காசா வாங்கறீயா?” என்றபடி லிஸ்டை திருப்பி பார்க்க, “இல்ல சார். எவ்வளவுன்னு மட்டும் போடுங்க. அக்கவுண்ட்ஸ்ல வாங்கிட்டா. அப்பறம் சம்பளத்துல பிடிச்சுப்பாங்க.” என்றாள் மகி இலகுவாக.

“வாட்” என எழுந்தவன், “உன்னை என்ன பண்றது” என அருகில் இருந்த ஸ்கேல் ஒன்றால் அவளை அடிக்க போக, “நான் என்ன தப்பு பண்ணேன்” என்றாள் மகி. “ஹேய் லூசு.. இப்படில்லாம் பண்றதுக்கு முன்னாடி நம்ப ஆபிஸ் ரூல்ஸ் எல்லாம் பார்க்க மாட்டியா? அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லனும்ல. என் பேரை சொன்னா பணமும் கொடுப்பாங்கன்னு நினைச்சியா?” என்றான் சந்துரு.

“இல்ல பழைய ஆபிஸ்ல இப்படிதான் பண்ணுவோம். அதான்.” என மகி இழுக்க, அவளது தோள்களை பற்றி அவளை அமர வைத்தவன், “நீ ஏற்கனவே வொர்க் பண்ணது எம்.என்.சி கம்பெனி மகி. அங்க ரொட்டேஷனுக்கு பணம் இருக்கற மாதிரி நம்ப ஆபிஸ்ல இருக்காது. புதுசா ஒரு விஷயம் பண்ணா எல்லா டிப்பார்மெண்ட்லயும் பேசிதான் பண்ணனும். புரியுதா?” என்றான் பொறுமையாக.

அவள் யோசிக்க, கைகளை எடுக்காமலே அவளது பாவனைகளை ரசித்து கொண்டிருந்தான் சந்துரு. “நல்லவேளை நான் உங்ககிட்டயும், ஆகாஷ்கிட்டயும் தான் சொன்னேன். சாரி. இப்ப என்ன பண்றது. ஓகே நான் தனியாவே கிஃப்ட் வாங்கிக்கறேன்.” என்றாள் மகி.

“ம்ம்.” எனும்போது தான் அவனது கரங்கள் தனது தோளிலே தங்கி விட்டதை அறிந்தவள் எழ முயல அவனும் கைகளை எடுத்தான். அவள் முகம் சுருங்கி இருப்பதை கண்டவன் ஏதோ யோசனை செய்தபடி, “சரி பார்த்துக்கலாம். போய் வேலையை பாரு.” என அவளை அனுப்பியவன் அடுத்து செய்ய வேண்டியதை யோசித்துக் கொண்டான்.

              பெங்களூரில், சித்து சமையலறை வாசலில் நின்று கைகளை கட்டிக் கொண்டு மகிழையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அதைக் கண்டும் எதுவும் பேசாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். சற்று நேரம் பொறுத்தவன் அவளிடம் சென்று கையில் வைத்திருந்த பாத்திரத்தை பிடுங்கினான்.

அவளை அழைத்து வந்து சோபாவில் அமரச் செய்தவன், “அதான் சாரி சொல்றேன்ல. நான் இப்ப சொல்லனும்னு நினைக்கல. உன்னை பார்த்ததும் என்ன மீறி உளரிட்டேன். இப்ப எதுக்கு நீ கோபமா இருக்கன்னு சொல்லு.” என்றான் சித்து. “எப்ப இருந்து நீங்க என்ன லவ் பண்றீங்க?” எனக் கேட்டாள் மகிழ்.

“அது வந்து. அதெல்லாம் தெரியல. எப்ப பண்ணா என்ன. ஆனா லவ் பண்றேன்.” என்றான் சித்து. “ஓ சரி. இப்ப நான் என்ன பண்ணனும்” எனக் கேட்டாள் மகிழ். சித்து, “ஓகே சொல்லு. நாம லவ் பண்ணலாம்.” என்றதும் அவள் முறைக்க, “சரி வேணாம். ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு சொல்லு. இது ஓகேவா.” எனக் கேட்டதும் அவளுக்கு புன்னகை உதித்தது.

அதை மறைத்தவள், “எப்படியும் இவ ஓகே சொல்லிடுவா. இவளுக்கு வேற யார் இருக்கான்னு நினைச்சுட்டீங்க அப்படிதானே” என்றாள் மகிழ். “இப்படில்லாம் பேசுனா எனக்கு கோபம் வரும். அப்பறம் உன் இஷ்டம்னு சொல்லிடுவேனு நினைக்கற அப்படிதானே. உனக்கு யாரும் இல்லனு இதை சொல்லல வதனி. எனக்கு எல்லாமா நீ இருக்கனும்னு இதை சொன்னேன்.” என்றான் சித்து.

அவனே அவளது கரங்களை எடுத்து தனது கரங்களுக்குள் அடக்கியவன், “நான் உன்னை இங்க பார்ப்பேனு கண்டிப்பா நினைக்கல. ஆனா பார்த்த அப்பறம்தான் எவ்வளவோ ஊர் இருக்கும்போது நான் ஏன் இங்க வரனும். உன்னை மீட் பண்ணதானு நினைச்சுக்கிட்டேன்.

என்னை புரிஞ்சுக்க டிரை பண்ணு மகிழ். கண்டிப்பா நான் உன்ன கார்னர் பண்ணல. நான் உன்னை லவ் பண்றேன். உனக்கு பிடிக்கும்போது நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவரை நான் வெயிட் பண்றேன். இல்ல பிடிக்கவே இல்லனாலும் நாம இப்ப மாதிரியே ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்” என்றான் சித்து.

மகிழ், “நான் இதெல்லாம் யோசிச்சதே இல்ல அபி. நீங்க எல்லாமே ஈசியா முடிவு பண்றீங்க. ஆனா என்னால அது முடியல. எல்லாத்துக்கும் மேல உங்க வீட்ல இதை எப்படி எடுத்துப்பாங்க. என்ன இருந்தாலும் நான் ஒரு அனா.” எனும்போது அவளது இதழ்களை தனது கரம் கொண்டு மூடியவன்,

“உனக்கு என்னை பிடிக்குதா இல்லையானு யோசிச்சா மட்டும் போதும். இதுமாதிரி ஏதாவது பேசிட்டு இருந்தா அப்பறம் நிஜமாவே எனக்கு கோபம் வரும். அப்பறம் உன்னையெல்லாம் கேட்டுட்டு இருக்க மாட்டேன். நானே கூட்டிட்டு போய் தாலி கட்டிடுவேன். புரியுதா.” என்றான் சித்து.

“சபாஷ். இது தெரியாம எல்லாரும் ஏதேதோ நினைச்சு இல்ல கவலைப்படறாங்க. ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு, அங்கு இருந்து ஓடி வந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அடி போடும் பிரபல இளம் தொழிலதிபர் மிஸ்டர். சித்தார்த் அபிமன்யூ. அப்படின்னு ஹெட் லைன்ஸ் போட்டா செமையா இருக்கும்ல.” என்ற குரல் கேட்டது இருவருக்கும்.

சட்டென திரும்பி பார்த்தால் அங்கு நிரஞ்சனி நின்று கொண்டிருந்தாள். அவனை தேடி கண்டுபிடித்து வந்தவளுக்கு அவனது கடைசி வார்த்தை மட்டும் காதில் விழ திறந்திருந்த கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டு ஏளனமாக பேசினாலும் கண்கள் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.

“ஏய் இங்க என்ன பண்ற? உன்னை யாரு இங்க வர சொன்னா?” என சித்து கோபமாக கேட்கும் போதே வந்து சோபாவில் அமர அதே நேரம் கவினும் வீட்டிற்கு வந்தான். அவனை கண்டதும், “ஓ நீ கொடுத்த இடமா இது” என நக்கலாக கேட்டவள், “ஏன் நான் வந்ததுல உங்க ரொமான்ஸ் பாதியில நின்றுச்சா?” என்றாள் சித்துவிடம்.

மகிழுக்கோ அவள் பேசுவது பாதி புரியவே இல்லை. இருந்தும் அவள் தவறாக பேசுவது புரிய, “நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கிங்க. அபி அப்படில்லாம் இல்ல.” என ஏதோ கூற வர.. அவளை கரம் கொண்டு நிறுத்தியவள், “ஓ செல்லப்பேர்லாம் வைச்சு கூப்பிடற அளவு உனக்கு ஒரு காதலி இருக்கான்னு சொல்லவே இல்ல.” என்றாள் சித்துவிடம் நிரஞ்சனி.

“ஆமா. இவனுக்கு என்கூட நிச்சயம் ஆகி இருக்கறது உனக்கு தெரியாதா? இல்ல தெரிஞ்சுதான் இவன் கூட இருக்கியா?” என மகிழிடம் கேட்க, அவளோ திகைத்து போனாள். கேட்டதோடு மட்டுமில்லாமல் அவளிடம் புகைப்படத்தையும் காட்ட அதில் அவளோடு அருகில் நின்றது நிச்சயமாக சித்துதான்.

அதை கண்டதும் அவனை முறைத்த மகிழ் வேகமாக உள்ளே செல்ல அதைக் கண்டு நிரஞ்சனி இதழ்களில் குறுநகை தோன்றியது. சித்தோ, “நான் உன்கிட்ட பேசனும் மகிழ். ப்ளீஸ் நில்லு.” என்றபடியே அவள் பின்னே சென்றான். கவின் நிரஞ்சனியை முறைத்தபடி நின்றிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்