Loading

இதயம் 20 : (உன்னைத்தேடியே)

ஆதினி இருக்கையில் அமர்ந்திருக்க, அவளுக்கு கீழே தரையில் அமர்ந்த ஹரி, அவளின் பாதத்தை தன் மடி ஏந்தி மெல்ல வருடினான்.

கணவனின் தீண்டலில் தேகம் சிலிர்க்க கிறங்கியவள், அவன்மீதான கோபம் நினைவிற்கு வர, காலினை இழுக்க முயற்சித்தாள்.

“ஹேய் என்ன பண்ணுற?”

“ப்ளீஸ்டி… நான் கொஞ்சம் பேசணும்.”

அவள் சம்மதம் வழங்கினாளோ இல்லையோ அவன் பேசிக்கொண்டே போனான்.

“உனக்கு தெரியுமா ஆது… நான் குட்டியா இருக்கும்போதே என்னுடைய அப்பா அம்மா போயிட்டாங்க. திரும்பி வர முடியாத தூரத்துக்கு போயிட்டாங்க. எங்களை(ஹரி, ஹரிணி) பார்த்துக்கிட்டது பாட்டி தாத்தா தான்.

தாத்தாவும் உடம்பு முடியாதவர். அவருக்கு வந்த அட்டாக் அவரை மொத்தமா வீழ்த்திருச்சு. அதுக்கு பிறகு பாட்டி தான் எல்லாம்.

ஆதிப்பா இங்கு குடி வரும்போது எனக்கும் ஹரிணிக்கும் ஒன்றை வயது தான். பாட்டிக்கு இங்கிருக்கும் நாகரிக சூழல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது. அந்நேரத்தில் எல்லாம் அவங்களுக்கு துணையா இருந்தது ஆதிப்பா மட்டும் தான்.

வயதானோர், விவரம் இல்லா சிறு பிள்ளைகளின் பொறுப்பு தங்கள் தலையில் விழுந்துவிடுமோன்னு உறவுகளெல்லாம் ஒதுங்கிக் கொண்டனர்.

எங்களை பள்ளியில் சேர்த்தது முதல் எனக்கொரு தந்தை ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கொண்டது ஆதிப்பா. தாய் தந்தை இல்லையென்றாலும் அவர்களின் ஏக்கம் வராது பார்த்துக்கொண்டது ஆதிப்பாவும், நிரலி ஆன்டியும் தான்.

பள்ளியில் பேரண்ட்ஸ் மீட்டிங் என்றால் கூட அவங்க தான் வருவாங்க. ஆதிப்பா எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல நல்ல குருவும் கூட.

இப்போ நான் இந்த நிலையில் உயர் பதவியில் வெல் செட்டில்டு சொல்லுகிற அளவுக்கு இருக்க காரணம் ஆதிப்பா. அவருக்கு எப்படி என்னால் துரோகம் செய்ய முடியும்?”

அதுவரை ஹரி சொல்லுவதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதினி ஹரி கூறிய இறுதி வார்த்தையில் விலுக்கென அவனை பார்த்தாள்.

‘அவனிடத்திலிருந்து பார்க்கும்போது அவன் சொல்லுவது சரிதானே!’

“எனக்கும் உன்மேல் காதல் வந்துச்சு.” ஹரி அவ்வாறு சொல்லியதும் நிஜமா எனும் கேள்வி சுமந்து பார்வையை வீசினாள்.

“உனக்கு காதல் வரதுக்கு முன்பே. உன்னை கல்லூரியில் பார்த்துக்க சொல்லி ஆதிப்பா சொன்னப்போ அதை ஏதோ அப்போ அவர் என்னை நம்பி கொடுத்த கடமைன்னு நினைச்சுதான் செய்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னை மீறிய உணர்வு. உன்கிட்ட யாராவது பேசினாலே கோபம் வர ஆரம்பிச்சுது. உன்னை ஒருத்தன் கிண்டல் பண்ணான்னு தெரிஞ்சப்போ ஐ லாஸ்ட் மைசெல்ஃப். அவனை புரட்டி எடுத்தப்போ தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. உன்னோட யாரும் நெருக்கமா இருக்கிறது சுத்தமா பிடிக்கல. ஏன் இப்படின்னு யோசிச்சப்போ தான் உன்மீது எனகிருப்பது வெறும் கடமை உணர்வல்ல, அது காதலுன்னு புரிந்தது. தெரிந்ததும் நான் நானாயில்லை. ஏதோ எனக்கே ரெக்க முளைத்த மாதிரி ஃபீல் ஆனேன். காதலை சொல்ல நினைக்கும்போது பாட்டி ஹரிணிக்கு திருமண ஏற்பாடு செய்தாங்க. சரி ஹரிணி திருமணம் முடிந்ததும் உன்னிடம் சொல்லலாம் நான் நினைத்திருக்க, அன்னைக்குத்தான் என் தலையில் இடி விழுந்தது. ஹரிணியை ஆதிப்பா தந்தை ஸ்தானத்தில் தாரைவார்த்து கொடுப்பார் நான் நினைக்கவேயில்லை. அந்த இடத்தில் நான் மொத்தமா உடைஞ்சுட்டேன். தந்தை இடத்திலிருந்து யாருமற்ற எங்களுக்கு அனைத்தும் செய்யும் அவரிடம் சென்று நான் உங்கள் மகளை விரும்புகிறேனென்று சொல்லும் துணிவு அப்போது எனக்கில்லை. அது அவருக்கு நான் செய்யும் துரோகமாகத்தான் எனக்குத் தெரிந்தது. என் காதலை எனக்குள்ளே மறைத்துக்கொண்டேன். இதில் நானே எதிர்பாராதது நீ என்னிடம் காதலை சொல்லியது. ஏற்றுக்கொள்ள சொல்லி என் மனம் முரண்டினாலும் ஆதிப்பாவை சற்றும் எதிர்க்க முடியாதென்று தோன்ற உன்னைவிட்டு விலகிச் சென்றேன். ஆனால் ஒரு நொடி கூட நான் நிம்மதியாயில்லை. தினமும் நீ அனுப்பும் மெசேஜிற்காக எத்தனை நாள் காத்திருந்திருக்கிறேன் தெரியுமா? என்னை நடமாட வைத்ததே உன் நினைவுகள் தான்.

இப்போ சொல்லு என்மேல் அவ்வளவு நம்பிக்கையும் பாசமும் வைத்திருக்கும் ஆதிப்பாவிற்கு துரோகம் செய்ய என்னால் எப்படி முடியும்?

அதனை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் நீ என்னிடம் கெஞ்சுவது எனக்கே பிடிக்கவில்லை. உன்னை வதைக்கிறேனே என்று என்மீதே அவ்வளவு கோபம். எதுவும் செய்ய முடியாத என்னோட இயலாமை. அதான் அன்று அப்படி பேசிட்டேன். ஆனால் நான் அறிந்து பேசவில்லை ஆதும்மா. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு.”

மூச்சுவிடாது நீண்டு பேசியவன் அவளின் மடியினிலேயே முகம் புதைத்து கதறிவிட்டான்.

இப்போது அவனின் நிலை தெள்ளென புரிய தன்னுடைய மடமையும் அவளுக்கு விளங்கிற்று. இப்போது அவன் சொல்லியது பெரியதாக தெரியவில்லை. அவனின் வேதனைக்கு முன்பு தன்னுடையது மிகச்சிறியது என்று உணர்ந்தவள் தன்னையே நிந்தித்தவளாக அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“சாரி… சாரி ஹரி. நான் உன்மேலிருந்த காதலை மட்டும் தான் பார்த்தேன். உன்பக்கமிருந்து யோசிக்காமல் இருந்துட்டேன். சாரி” என்று அவனின் முகம் நிமிர்த்தி சொல்ல…

அவனோ “ஐ லவ் யூடி” என்றான்.

கண்கள் பார்த்து அவன் சொல்ல அவள் முகம் செம்மை பூசியது.

“என்னது இது?”

“எது?”

“உன் முகத்தில்.”

ஹரி சீரியஸாகக் கூற… முகத்தில் தான் ஏதோ இருப்பதைப்போல் அவள் புறம் கைக்கொண்டு கன்னம், நெற்றி, கழுத்து என்று தேய்த்துவிட, அவனோ புன்னகையை இதழ்கடையில் ஒளித்தான்.

ஹரியின் இதழ் நெளிவை கண்டவள் அவனின் விளையாட்டு புரிந்து சரமாரியாக தோள் மற்றும் மார்பென அடிகளை வைத்தாள்.

“ஹேய்… விடுடா” என்று கைகளை குறுக்கே வைத்து தடுத்தாலும் அவளின் அடிகளை சுகமாகவே ஏற்றான்.

ஹரியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. சிரிப்பு நீண்டு நிலைத்திருந்தது.

“எதுக்குடா என்னவோ இருக்கிங்கிற மாதிரி சொன்ன?”

“புதுசா வெட்கமெல்லாம் உன் முகத்தில் தெரிஞ்சிதா. அதுவும் கன்னமெல்லாம் சிவந்துச்சா அதான் ஷாக்காகிட்டேன்” என்று அவன் சிரியாது சொல்ல… மீண்டும் பாரபட்சமின்றி பல அடிகளை கணவனுக்கு வாரி வழங்கினாள் மனைவி.

இம்முறை அவளின் கைகளை உறுதியாக பிடித்தவன், “எவ்வளவு நேரம் அடிச்சிட்டு இருக்கப்போற” என்றவனின் பார்வை ரசனையாக அவளின் மீது படிந்திருக்க… பெண்ணவள் தடுமாறி போனாள்.

“எனக்கு தூக்கம் வருது” என்றவள் எழுந்து நிற்க,

“தூங்கு” என்றான்.

அவள் மெத்தையில் சென்று படுத்து நிமிடங்கள் கடந்திருக்க… அப்போதும் ஹரி அதேயிடத்தில் அமர்ந்திருந்தான்.

“தூங்கலையா?”

அவளின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

எழுந்து வந்தவள் அவனின் முகம் பார்த்து குனிந்து தன்னிரு காதிலும் கைவைத்து “சாரி” என்று முகம் சுருக்கி சொல்ல… “போடி” என்றவன் சென்று படுத்துக்கொண்டான்.

“பிடிவாதம்… எல்லாத்திலும்” என்று முனகியவள் அவனின் அருகில் சென்று படுத்து… அவன் மீது கை போட வேகமாக தட்டி விட்டான்.

அவனின் பாதத்தை அவளின் பெருவிரல் கொண்டு நீவ, பட்டென்று காலை தட்டி விட்டான்.

‘இது வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவள் கணவனின் முதுகோடு ஒன்ற, மனைவியின் உடல் மொத்தமாக அவனை உரசி அவனுள் தீப்பற்ற… அவள் புறமாக திரும்பி முறைத்தவன்,

“என்னதாண்டி வேணும்” என்று கேட்டான்.

“நீதான்.” அவள் சொல்லி முடிக்குமுன் அதரங்களை விழுங்கத் தொடங்கியிருந்தான்.

அவனிடம் முழுவதும் வன்மையே. இத்தனை வருட காதல் வேட்கையை தணிக்க மென்மையெல்லாம் சரிப்பட்டு வராதென்று எண்ணியவன் பூவுக்குள் பூகம்பத்தை அறிமுகப்படுத்தினான்.

பூவின் மொத்த பாகத்தையும் விரல் மற்றும் இதழ் கொண்டு வருடியவன், சூறாவலியாக சுழன்றடித்தான். அவனின் ஆளுங்கினத்தில் அவள் தான் திணறிப்போனாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கோடி. எத்தனை வருடக் காத்திருப்பு, தவிப்பு தெரியுமா?” என்று அவளின் முகம் பார்த்து அவன் சம்மதம் வேண்டி நிற்க… அவளோ தன் மொத்த நாணத்தையும் துறந்து அவனை ஆழிபேரலையாய் தன்னுள் சுருட்டிக்கொண்டாள்.

அங்கு யார் ஆரம்பித்தார்கள் யார் முடித்து வைத்தனர் என்று பிரித்தறியா நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காது காதல் பாடம் கற்றுக்கொடுத்து கற்றனர்.

மென் முனகலும்… கொலுசின் சிணுங்களும் அறையை நிறைக்க… பெண்ணவளிடத்தில் காளையவன் மொத்தமாக கிறங்கி தன்னை துறந்திருந்தான். மலரவலும் தன்னுள் அவனை அடக்கி, அவனுள் அடங்கி அவனை முற்றும் முழுதாக சாய்த்திருந்தாள்.

“லவ் யூடி” என்றவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து அவளுக்கு மறுபுறம் சரிந்து தன்னுடைய நெஞ்சமெனும் மஞ்சத்தில் மனையாளை தாங்கி தனக்குள் இறுக்கி… தன் கைகளில் துவண்டு களைத்தவளின் கன்னம் வருடி உறங்க வைத்து தானும் உறங்கிப்போனான்.

அங்கே அழகிய காதல் வார்த்தைகளற்று அரங்கேறியிருந்தது.

****

“இன்னுமா நீ என்னை காதலிக்கிற?” எனக் கேட்ட யாதவின் வார்த்தையில் அதிர்ந்து சமைந்து நின்றாள் வருணவி.

கைகளின் நடுக்கம் அவள் பிடித்திருந்த தட்டின் ஆட்டத்தில் தெரிந்தது.

“இப்போ உனக்கு வசதிதான் இல்லையா?”

“மாமா?” அவன் கேட்பது அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

“இல்லை நான் காதலித்தவள் என்னைவிட்டு போய்விட்டாள். இப்போ இவனை பார்த்துக்கொண்டால் தன்பக்கம் ஈசியா சாய்ந்திடுவான்னு தானே இந்த அக்கறை கவனிப்பெல்லாம்.”

யாதவின் வார்த்தைகளில் பெண்ணவள் மரித்துப்போனாள்.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்.’

கணவனின் வாயினால் இதனை கேட்பதற்கு தன்னுயிர் பிரிந்திருக்கக்கூடாதா என்று எண்ணியவள் கண்களில் வழியும் கண்ணீரை அவனுக்கு காட்டாது அங்கிருந்து ஓடிவிட்டாள்.

“அம் வெரி சாரி வரு.” அவனின் மன்னிப்பு காற்றில் கரைந்தது.

“உன்னை பார்க்கும்போது நான் நானா இல்லைடி. எனக்குள்ள ஏதோ பெரிய யுத்தமே நடக்குது. அது என்னன்னு எனக்கே சரியா புரியல. நீ என் பக்கத்தில் இருந்தால் நான் என்னை மொத்தமா இழந்திடுவனோ தோணுது. எனக்குள் அவ்வளவு போராட்டம்.

உன்னை காதலை கூட சொல்லவிடாததால் தான் என் காதல் தோல்வியில் முடிந்ததோன்னு குற்றவுணர்வா இருக்கு.

அந்த நிகிலாவின் மீது வந்த காதல் உன்மீது வந்திருக்கக் கூடாதான்னு இந்த நாலு நாளா தோணுது. அந்த நிகிலா மீது சிறு ஈர்ப்புக்கூட இல்லைங்கிறது நீ அருகில் வந்தாலே தாறுமாறா துடிக்கும் என் இதயமே சொல்லுது.

ஆனால் எனக்குள் பெரும் கேள்வி ஒன்று.

ஏற்கனவே காதல் வந்த இதயத்தில் இன்னொரு காதல் வருமா?

இதுக்கு விடை நானறியும் வரை நீ என்னைவிட்டு தள்ளியே இரு” என்று அருகில் இல்லாதவளுக்கு விளக்கம் சொல்லியவன் கண்களை மூடி உறங்க முயற்சி செய்தான்.

*****

இந்நேரத்தில் கையில் பெட்டியுடன் தன் முன் நிற்கும் மருமகளை வேதனை சுமந்த முகத்துடன் பார்த்திருந்தார் ஆதி.

“போய் தான் ஆகணுமா?”

“என்ன மாமா நீங்க அவள் தான் இந்நேரத்தில் வந்து நிக்கிறான்னா நீங்களும் அவளிடம் பேசிட்டு இருக்கீங்க” என்று சத்தமிட்ட நிரலி வருவின் கையிலிருந்த பெட்டியை பிடுங்க முயற்சித்தார்.

“நீங்களும் லவ் பண்ணினவங்க தானே அத்தை?” வரு கேட்ட கேள்வியில் நிரலி அதிர்ந்து விட்டார்.

“எனக்கு இங்கு மூச்சு முட்டுற போலிருக்கு அத்தை. மாமாவோட அந்நியப் பார்வை கொல்லாமல் கொல்லுது” என்றவள் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து சற்று நேரத்திற்கு முன் யாதவ் கூறிய வார்த்தைகளை நினைத்து அழுகையில் வெடித்தாள்.

“உயிருக்கு உயிரா என்னை காதலித்துவிட்டு என்னிடமே இன்னொருத்தியை காதலித்தேன்னு சொல்லுறாங்க மாமா” என்றவளிடம் அழுகை கூடியது.

அருகிலமர்ந்து வருவின் முதுகை வருடிய நிரலி… “ஊரில் கொண்டு விடுங்க. அங்காவது அவள் நிம்மதியா இருக்கட்டும்” என்றவரின் குரலும் அழுகையில் தோய்ந்து ஒலித்தது.

ஆதிக்கு மனமே விட்டுப்போனது.

‘தன் பிள்ளைகளுக்கா இந்த நிலை’ என்று வருந்தியவர், விஷாலை வரவழைத்து… வருவை ஊரில் விட்டுவரச் சொன்னார்.

மூவரின் முகமுமே ஏதோ ஒன்று நடந்திருப்பதைக் கூற மேற்கொண்டு எதுவும் பேசாது சரியென்ற விஷால் காரில் வருவை கூட்டிக்கொண்டு தங்களது கிராமத்தை நோக்கி புறப்பட்டிருந்தான்.

காலை இண்டர்காமில் தன்னுடைய அன்னையை அழைத்த யாதவ் “காஃபி” என்று சொல்ல… மகன் மீதிருந்த கோபத்தில் நிரலி அதனை பொருட்படுத்தவே இல்லை.

நேற்றுவரை அவனை எதற்கும் வரு காத்திருக்க வைத்திருக்கவில்லை.

ஆனால் இன்று?

‘வருவை அவ்வாறு பேசியிருக்கக்கூடாதோ!’ நினைக்கத் தோன்றாமலில்லை.

அவன் கண் விழிக்கும் முன் அவனின் தேவை வேண்டி வரு நின்றிருப்பாள்.

‘வேண்டுமென்று அவளை விலக்கி வைக்கத்தானே சொன்னாய். அனுபவி.’ நேரம் காலம் பாராது மனது கொட்டியது.

நேரம் சென்றதே தவிர யாரும் அவனின் அறைபக்கம் வரவேயில்லை. மகனின் தற்போதைய நிலை தெரிந்தும் அவன் மீதெழும் கோபத்தை தாய் தந்தை இருவராலும் புறம் தள்ள முடியவில்லை.

ஆதிக்கே வருவின் அழுது கதறிய தோற்றம் மனதை பிசைந்தது. அது யாதவின் மீது கோபத்தை விளைவித்திருக்க,

‘வரு வேண்டாமென்றானில்லையா… அவனின் தேவைகளை அவனே பார்த்துக்கொள்ளட்டும்’ என்று இருந்துவிட்டார்.

பொறுத்து பார்த்த யாதவ்… தானே மெல்ல எழுந்து மிகுந்த சிரமத்துடன் நடந்து கீழே வந்தான்.

மகனின் நிலை பரிதாபத்தை உண்டாக்கினாலும் ஆதி வரவேற்பறை இருக்கையிலிருந்து அசையவில்லை. மகனை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

உணவு மேசை இருக்கையில் அமர்ந்தவன் “மாம்” என்று சத்தமாக அழைக்க வள்ளியக்கா தேநீர் கொண்டு வந்து அவன் முன் வைத்தார்.

“மாம் இல்லையா ஆண்ட்டி?”

“இருக்காங்க கண்ணு.”

“காஃபி வேண்டாம் ஆண்ட்டி. பசிக்குது. டிஃபன் இருக்கா?” யாதவ் கேட்டு முடிக்குமுன் நிரலி கையில் உணவுடன் அவன் முன் வந்திருந்தார்.

கண்களில் வழியும் கண்ணீரை சேலை தலைப்பால் ஒற்றியபடி யாதவிற்கு உணவு ஊட்டினார்.

பாதி உணவிலேயே யாதவ் போதுமென்க மறுத்து முழு உணவையும் உண்ண வைத்தார்.

“என் மேல் கோபமா மாம்?”

“அதெல்லாம் இல்லை யாது. கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்” என்றவர் நகர்ந்திட ஆதி யாதவின் அருகில் வந்தமர்ந்தார்.

மகனையே சிறிது நேரம் பார்த்தவர்,

“உனக்கு யார்மேல் கோபம் யாது?” எனக் கேட்டிருந்தார்.

யாது மௌனமாக தலை கவிழ,

“வரு ரொம்ப நல்ல பொண்ணுப்பா! அவள் கிடைக்க நாம கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்க, அதுவரை மட்டுப்பட்டிருந்த யாதவின் கோபம் மீண்டும் துளிர்த்தெழுந்தது.

“வரு… வரு… வரு… உங்களுக்கு அவள்தான் முக்கியமில்லையா? அவள் என்னருகில் வந்தாலே எனக்குள் நடக்கும் மாற்றம்… எழும் போராட்டம் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?

அப்பப்போ அவளுடன் நானிருப்பதைப்போல் தோன்றும் பிம்பங்கள் என்னை மொத்தமா ஆட்டி வைப்பது உங்களுக்கு புரியுமா?

நான் காதலித்த நிகிலா கூட என் நினைவில் வருவதில்லை. ஆனால் உங்க வரு வந்து மொத்தமா படுத்தி எடுக்கிறாள்.

நிகிலாவுடன் நானிருக்க வேண்டிய காட்சிகள் யாவும் வருவுடன் இருப்பதைப்போல் தோன்றி மறைந்தால் நானும் என்ன செய்வேன்.

ஒருவளை காதலித்து இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்தும் அளவிற்கு என் காதலில் நான் தோற்றுப்போனவனா?

நிகிலா மீது எனக்கு காதலில்லை. அவள் வேண்டாமென்று போனது நினைவில் இருந்தும், அதற்காக நான் கலங்கிடாத போதே அது புரிந்துவிட்டது. ஆனால் வரு மீது எழும் உணர்வுக்கு என்ன பெயர்? தெரியவில்லையே!

நான் மறந்த காலம் நினைவில்லாது பைத்தியம் பிடிக்குது டாட். இதில் வருவின் ஏக்கமான பார்வை என்னை வெட்டி வீழ்த்துகிறது.

அந்த கோபத்தில் அவளை நேற்று ஏதோ சொல்லிட்டேன். அதற்காக நீங்க ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப ஓவர் டாட்.

அப்படியென்ன அவள் என்னைவிட உங்களுக்கு ஸ்பெஷல்?” என்று கேட்டவனின் உள்ளத்து குமுறல்கள் எல்லாம் தந்தையாக ஆதிக்கு வலியை கொடுத்தது.

வருவுடனான வாழ்வின் நினைவுகள் அவனுக்கு இல்லையென்றாலும், அவனின் உணர்வுகளில் அவளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறதே என்று சிறு நிம்மதி கொண்டார்.

‘இனியும் உண்மையை மறைப்பதால் தன்னுடைய பிள்ளைக்குத்தான் வேதனை’ என்று நினைத்தவர் ‘நடப்பது நடக்கட்டும்’ என இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு…

“வரு இந்த வீட்டுக்கு ரொம்ப ஸ்பெஷல் தான் யாது. அதைவிட உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என்றவர்,

“அதற்கு காரணம்” என சிறு இடைவெளி விட்டு… “அவள் என் மகனின் சரிபாதியாயிற்றே… அப்போ ஸ்பெஷலாகத்தானே இருப்பாள்” என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஆதி சொல்லியதில் யாதவ் தான் சிலையென இறுகி அதிர்ந்து நின்றான்.

*தவிக்கின்றேன்…
நித்தமும் உன் நினைவால்.

வதைகிறேன்…
நீயன்றி வாழ்வதால்.

புதைகிறேன்…
உனைத்தேடி நாட்கள் நீள்வதால்.

நொறுங்குகிறேன்…
சிறுக சிறுக சாவதால்.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
35
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்