Loading

அதிர்வு – 27

தூயவனும் ஆதினியும் ஒருவரையொருவர் நோக்கியபடி உள்ளே மெய்மறந்து நிற்க வெளியே மாதவனோ அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு மாதவி அழைக்க புன்னகையோடு எழுந்தவன் அலைபேசியை வெளியில் கொண்டு வந்து பேச ஆரம்பித்தான்.

“சொல்லு மாது”

“என்ன மாதவ்.. சென்னை ரீச் ஆயிட்டியா.. தூயவன் எப்படி இருக்கான்..”

“ஆமா மா.. நல்லா இருக்கான்.. பாட்டி தான் வச்சு செய்றாங்க ரெண்டு பேரையும்.. எனக்கு தெரிஞ்சு பாட்டி கிளம்புறதுக்குள்ள ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு இணக்கம் வந்துரும்னு நெனைக்குறேன்..” என்று நிஜமாகவே உடன் பிறந்தவனுக்காக மகிழ்ச்சியுற்றான்.

“செம செம.. நம்ம கல்யாணத்து அப்போ தான் அவங்களுக்கும் எல்லாரையும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணனும்னு மாமா சொன்னாங்க.. அதுக்குள்ள ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்..”

“ஆமா மாது.. சரி நீ என்ன மா பண்ற”

“ஒரு கேஸ் விஷயமா தான் கோர்ட்டுக்கு வந்தேன்.. உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு அதான் கால் பண்ணேன்.. அது மட்டுமில்ல இன்னொரு கேஸ் விஷயமா நானும் இன்னைக்கு சென்னைக்கு கிளம்புறேன்”

“ஹே நிஜமாவா.. எனக்கும் நேத்துல இருந்து உன்னை பார்க்காம தேடுச்சு.. தெரியுமா”

“ஆஹான் நம்பிட்டேன்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்” என்க அவனோ,

“சொல்லு மா.. என்னாச்சு.. எதுவும் பிரச்சனையா” என்க அவளோ,

“கிட்டத்தட்ட” என்றபடி மௌனித்தாள்.

“என்னன்னு சொல்லு டா”

“மாதவ்.. அம்மா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம லவ் மேட்டரை உங்க வீட்டுல சொல்ல சொல்லுறாங்க”

“என்ன மாது சொல்ற.. எதுக்கு இப்படி சொல்லுறாங்க”

“இல்ல.. அவங்க பயப்படுறாங்க.. ஆதினி நமக்கு பண்ண ஹெல்ப் நல்லதாவே இருந்தாலும் ஒருவகைல நாம உங்க வீட்ட ஏமாத்தி தான சம்மதம் வாங்கியிருக்கோம்.. நாளப்பின்ன உண்மை தெரிய வந்தா நான் தான் ஏமாத்தி உங்க வீட்டுக்கு மருமகளா வந்துருக்கேன்னு எதுவும் பேச்சு வந்துற கூடாதுன்னு பயப்படுறாங்க..”

“அதெல்லாம் அப்படி ஆகாது.. அம்மா தேவையில்லாம பயப்படுறாங்க மாது.. நீ தான் சொல்லி புரிய வைக்கணும்”

“நான் சொன்னேன் மாதவ்.. ஆனா அடுத்து அவங்க இன்னொரு விஷயமும் சொன்னாங்க.. அதனால என்னால சமாளிக்க முடியல”

“என்ன சொன்னாங்க”

“தப்பா எடுத்துக்காத டா..  நீ கொஞ்சம் தைரியமா உங்க அப்பா கிட்ட பேசணும்னு ஆசை படுறாங்க.. மத்த விஷயத்துல இல்லனாலும் நம்ம விஷயத்துல மட்டுமாச்சு தைரியமா உண்மைய நீ சொல்லணும்னு எதிர்பார்க்குறாங்க..” என்க மாதவனிடம் மௌனமே.

“மாதவ் சாரி.. நடந்த எல்லா விஷயமும் அவங்களுக்கு தெரியும்.. அன்னைக்கு ஆதினி மட்டும் சாமி வந்த மாதிரி நடிக்காம விட்டுருந்தா.. உங்க வீட்டுல அந்த பொண்ண தான உனக்கு பார்க்க முடிவு பண்ணிருப்பாங்க.. அப்பவும் நீ அமைதியா இருந்துருப்பியான்னு கேக்குறாங்க.. என்னால சமாளிக்க முடியல மாதவ்..”

“எனக்கு புரியுது மாது.. நான் நம்ம விஷயத்தை சொல்லுறது கூட எனக்கு பிரச்சனை இல்லை.. ஆனா இப்போ சொன்னா.. ஆதினி நமக்காக நடிச்சுருக்கான்னு தெரிஞ்சுரும் தானே.  அது அவளுக்கு கெட்ட பெயர் தான.” என்க,

“ஆமால.. இதை நான் யோசிக்கவே இல்லையே.. ஆனா அம்மா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க.. நீ விஷயத்தை சொல்லலைனா அவங்க கண்டிப்பா சொல்லுவேன்னு சொல்லுறாங்க.. என்ன டா செய்றது”

“சரி மாது.. யோசிப்போம்.. நீ நாளைக்கு வா.. எல்லாரும் பேசி முடிவுக்கு வரலாம்” என்க அவளும் சரியென்றபடி அழைப்பைத் துண்டித்தாள்.

————————

அங்கு அறையில் மோன நிலையில் நின்றிருந்த இருவரில் முதலில் சுதாரித்த ஆதினியோ,

‘பயபுள்ள.. எப்படி பார்க்குறான் பாரு.. இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்ப்பானாம்.. ஆனா என்னை பிடிக்காதாம்’ என்று மனதில் நினைத்தபடி பார்க்க அவளின் மனமோ,

‘ஓ அப்போ நீயும் அவனை பிடிச்சு போய் தான இவ்ளோ நேரம் மெய்மறந்து பார்த்த’ என்று கேள்வி எழுப்ப அதனை தூர ஒதுக்கியவள்,

“ஹெலோ பாஸ்.. எவ்ளோ நேரம் இப்படி என்னை சைட் அடிக்க போறீங்க” என்று கேட்க அப்பொழுது தான் தன்னிலை அடைந்தவன்,

“சாரி.. அது.. ” என்று வார்த்தைகள் தடுமாற அவன் செய்கையில் ஆதினி சிரிக்க,

“ஹே.. ரொம்ப சிரிக்காத.. சைட் எல்லாம் அடிக்கல.. அதுவும் உன்னை போய்” என்று தூயவன் தோளை குலுக்க,

“அதுசரி.. பாட்டி கூப்பிட்டாங்க வந்து சேரு” என்றபடி முன்னே சென்றாள் உதட்டோரம் முளைத்த வெட்க சிரிப்பை மறைத்தபடி.

‘ச்ச.. என்ன டா தூயவா உனக்கு ஆச்சு.. இப்படியா செய்வ.. என்ன நெனப்புல இப்படி நீ செஞ்ச.. அவ செஞ்சது எல்லாம் மறந்து போச்சா’ என்று தன்னை தானே திட்ட பிறகு இது வெறும் பாலின ஈர்ப்பு என்று அவனே காரணம் தேடிக்கொண்டான். பாவம் அவனறியாமலேயே அவன் மனதில்  அவளுக்கு ஒரு இடம் உருவாகிக் கொண்டிருப்பது புரியாமல். 

——————–

அலுவலகத்தில் கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த மானஸ்விக்கு தூயவன் அழைத்தான். 

“ஹெலோ சார்” 

“வெல்கம் மானஸ்வி. என்னால இன்னும் ஒரு வாரத்துக்கு ஆபீஸ்க்கு வர முடியாத சிட்டுவேஷன்.. ஒரு சின்ன இஞ்சூரி..”

“என்னாச்சு சார்.. ஆர் யு ஆல்ரைட்”

“யா.. ஐம் ஓகே மானஸ்வி. நம்ம புது ப்ராடக்ட் லான்ச் விஷயமா எனக்கு அந்த இன்க்ரீடியென்ட் ஃபைல் தேவைப்படுது.. சமர் வேற ஏதோ வேலையா வெளிய போயிருக்கான்.. இப் யு டோன்ட் மைண்ட்.. கேன் யூ கம் டூ ப்ரிங் இட்?”

“என்ன சார்.. ரெக்வஸ்ட்டா கேக்குறீங்க.. நான் உங்க பிஏ.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான என்னை வேலைக்கு எடுத்துருக்கீங்க.. ஐ வில் கம் பார் ஷ்யூர் சார்.”

“தேங்க்யூ மானஸ்வி.. நான் உங்களுக்கு லொக்கேஷன் ஷேர் பண்றேன்” என்றபடி அழைப்பினை துண்டிக்க எதையோ சிந்தித்தபடி அலைப்பேசியை வெறித்தவள் பின்பு கோப்புகளை எடுத்து பைக்குள் வைத்தபடி தூயவன் வீட்டிற்க்கு செல்ல தயாரானாள். 

தூயவன் வீட்டினை அடைந்தவள் வெளியே நின்றபடி அழைப்பு மணியை அழுத்த ஆதினி தான் கதவினை திறந்தாள். புருவம் சுருக்கி மானஸ்வியை நோக்கியவளிடம்,

“ஹெலோ மேம்.. தூயவன் சார பார்க்கணும்.. ஐம் மானஸ்வி” என்று கரத்தை நீட்டினாள். ஏற்கனவே தூயவன் இவளை வேலைக்கு நியமித்திருக்கிறான் என்று தெரிந்ததால் மரியாதை நிமித்தமாக புன்னகைத்த ஆதினியும் கைக்குலுக்க எத்தனித்து கை நீட்ட வர அதற்குள் மெதுவாக நடந்தபடி தூயவன் வந்து சேர்ந்தான். 

“வாங்க மானஸ்வி..” என்றபடி அவளை அழைத்தவன் ஆதினியிடம்,

“வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சு தான் பேசுவியா” என்றான். அது தன் தவறு தான் என்று உணர்ந்தாலும் அவள் முன்னே தூயவன் தன்னை கடிந்து கொண்டது ஆதினிக்கு அசௌகரியமாக இருந்தது. 

“சாரி மானஸ்வி.. ஏதோ ஒரு நியாபகத்துல உள்ள கூப்பிட மறந்துட்டேன்.. ப்ளீஸ் வெல்கம்” என்ற ஆதினி தூயவனை முறைத்துவிட்டு அவளுக்கு குடிக்க ஏதேனும் கொடுக்க எண்ணி சமயலறைக்குள் சென்றாள். வீட்டினை அளவெடுத்த மானஸ்வியின் கண்கள் கடைசியாக மீனாட்சியம்மாள் மற்றும் மாதவனிடம் வந்து நிலைத்து நின்றது. சினேகமாக புன்னகைத்த இருவரும் பின் அவர்கள் வேலையை கவனிக்கட்டும் என்றெண்ணி மற்றொரு அறைக்குள் புகுந்துக் கொண்டனர். செல்லும் அவர்களையே சன்னமாக பார்த்தவள் பின் பார்வையை அகற்றினாள்.

‘கொய்யால.. ஏதோ வேணும்னு அவளை வெளிய நிக்க வச்ச மாதிரி கேக்குறான். அவ்ளோ அறிவு இருக்கறவன் வருவாங்கன்னு தெரிஞ்சு வாசல்லயே வந்து நிக்க வேண்டி தான..’ என்றபடி மனதினுள் முணுமுணுத்த ஆதினி பழச்சாற்றினை கொடுக்க சென்றாள். 

“எடுத்துக்கோங்க” என்றபடி கொடுக்க சிறு சிரிப்போடு வாங்கிக் கொண்டவள் மடிக்கணினியை திறந்து வேலையை கவனிக்கலானாள். ஆதினியும் அவர்கள் வேலையை கவனிக்கட்டும் என்று எண்ணி அவளறைக்குள் புகுந்துக் கொண்டாள். ஹாலில் அமர்ந்து தூயவன் கூற கூற மடிக்கணினியில் தட்டச்சு செய்தவள் அவன் கூறிய அனைத்தையும் செவ்வனே செய்து முடித்தாள். 

“குட்.. வந்த முதல் நாளே நல்ல பிக்கப் பண்ணிட்டீங்க” என்று தூயவன் அவளை பாராட்ட அப்பொழுது தண்ணீர் குடிக்க எண்ணி வெளியில் வந்த ஆதினியின் செவியில் விழுந்தது தூயவனின் கூற்று. 

‘எதேய் பிக்கப்பா.. என்ன டா நடக்குது இங்க..’ என்றபடி பார்க்க தூயவனின் கவனம் முழுக்க கோப்பில் தான் இருந்தது. அவளது மனசாட்சியோ,

‘என்ன பொசெசிவ்வா இருக்கா’ என்று கேட்க,

‘பொசெசிவா.. அதுவும் இவனை நெனச்சா.. ச்ச ச்ச இவன் எவ கூட பேசுனா எனக்கென்ன..’ என்று முறுக்கிக் கொண்டவள் பின் எதையோ சிந்தித்தபடி வந்து அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் அமர்ந்தாள். தூயவன் கண்டுகொள்ளாமல் இருக்க மானஸ்வி மட்டும் ஒருமுறை ஆதினியை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் கவனமானாள். சிறிது நேரத்தில் மானஸ்வி வந்த வேலை முடிந்துவிட செல்ல எத்தனித்து எழும்ப ஆதினியோ,

“லன்ச் டைம் ஆயிடுச்சு.. இருந்து சாப்பிட்டு போலாமே” என்றிட அவளோ,

“அதெல்லாம் வேணாம் இருக்கட்டும்.. நான் ஜஸ்ட் சாரோட பிஏ.. அந்த லிமிட்லயே இருந்துக்குறேன்.. தேங்க்யூ” என்க அவளது கூற்றில் ஆதினி புரியாமல் முழிக்க தூயவனோ சிந்தனையோடு பார்த்தான். 

“வரேன் சார்.. வரேன் மேடம்” என்றபடி விடைபெற்று அவள் சென்றுவிட ஆதினியும் அறைக்குள் சென்றுவிட்டாள். தூயவனோ அலைபேசியில் எதையோ தேடலானான். சிறிது நேர தேடலுக்கு பிறகு ஒரு காணொளியை கேட்க தொடங்க அதில்,

“எந்த ஒரு நபர் கிட்டயும் நாம நம்ம லிமிட் எதுன்னு தெரிஞ்சு அதுக்குள்ள நடந்துக்கிட்டாளே இங்க முக்காவாசி பிரச்சனைகளை தடுக்கலாம்” என்ற மித்ராவின் குரல் ஒலித்தது. ஏனோ மானஸ்வியின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு மித்ராவை நினைவுப்படுத்தியது. பிறகு புதிதாக காணொளி ஏதேனும் வந்திருக்கிறதா என்று தூயவன் ஆராய ஏதும் வரவில்லை. 

‘என்ன இன்னும் மித்ரா எந்த வீடியோவும் போடல’ என்று சிந்திக்க அப்பொழுது தான் அவனுக்கு நினைவு வந்தது தொழிலதிபர் சதாசிவத்தைப் பற்றிய அவளது காணொளி வெளிவந்து வெறும் பத்து நாட்கள் தான் ஆகிறது என்று. மாதவன் மாதவி காதலை பற்றி ஆதினியிடம் கூற அன்று உணவகத்திற்கு சென்ற அந்நாளில் தான் சதாசிவத்தினை பற்றின காணொளி வந்தது. இந்த பத்து நாட்களில் ஏதேதோ நடந்துவிட்டதன் காரணமாக அவனுக்கு அதிக நாட்களாய் தோன்றியது. நடந்த அனைத்தையும் ஒருமுறை சிந்தித்தவனுக்கு என்ன அமைப்பில் தன் வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

ஆனால் மித்ராவை பற்றிய அவன் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டதை மட்டும் அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. மாற்றம் என்றால் அவள் மீதான பிடித்தம் குறையவில்லை. ஆனால் அவளை அதிகம் தேடுவதில்லை. அவள் அருகில் இருப்பது போன்றோ அல்லது அவளை வெகு விரைவில் சந்திக்க போகிறோம் என்பது போன்றோ அவனால் உணர முடிந்தது. 

‘இனிமே நீ மித்ராவை சந்திச்சா மட்டும் என்ன ஆக போகுது.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அதை நியாபகம் வச்சுக்கோ’ என்று ஒரு மனம் உண்மை உரைக்க அவனோ,

‘என்ன பேசுற நீ.. எனக்கு இப்போ கல்யாணம் ஆகாம நான் மித்ராவை சந்திச்சா மட்டும் நான் அவகிட்ட என் காதலை சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கவா போறேன்.. நெவெர்.. எனக்கு அவ மேல இருக்குற உணர்வு காதல் தான்னு தெளிவா சொல்ல முடியல.. அவ குரல் தான் இந்த ஈர்ப்புக்கு காரணமான்னு கேட்டாலும் எனக்கிட்ட பதில் இல்ல.. அவளோட எண்ணங்கள்.. அது தான் காரணமா இருக்கும்னு நான் நம்புறேன்.. அதாவது எதிர்காலத்துல எனக்கு பெண் குழந்தை பொறந்தா அவளை மித்ரா மாதிரி வளர்க்கணும்.. அவ்ளோ தான்’ என்று சிந்தை போன போக்கில் நினைத்தவனுக்கு அப்பொழுது தான் ஒன்று தோன்றியது.

‘குழந்தையா.. நாம எப்போ இப்படியெல்லாம் நினைக்க ஆரம்பிச்சோம்.. இந்த ஃபிராட இன்னும் என் பொண்டாட்டியா கூட நான் மனசுல நெனைக்கலையே.. இதுல குழந்தைக்கு எங்க போக.. முதல்ல இவ செஞ்ச விஷயத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவ்வளவு நாள் அவளை தவறு செய்தவளாக எண்ணியவன் இப்பொழுது அவள் அவ்வாறு அன்று அஜயிடம் அனுப்பிய குறுஞ்செய்திக்கு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு அவன் மனதில் மாற்றம் ஏற்பட்டதை அவனே அறியவில்லை. 

தொடரும் அதிர்வுகள்.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மானஸ்வி தான் மித்ரா னு ரொம்ப ஃபீல் ஆகுது 🫣‌‌… அவ அடுத்து போடுற நல்லவனா நம்ம பையன் இருப்பானோ…. ஆல்சோ நல்லவன் னு பச்சை குத்தி வீடியோ போட்டாலும் அவ செய்றது சரி கிடையாதே… நம்பிக்கை துரோகமா தானே இருக்க முடியும் 🥴…

      இந்த உண்மைய எப்ப தான் மா ஜொல்லுவ

      1. Author

        பார்க்கலாம் டா.. யாரு மித்ரான்னு😍😍 நன்றி டா