Loading

அதிர்வு – 21

தன்னை தான் பார்க்கிறாள் என்று தெரிந்தும் தூயவன் கண்டுக்கொள்ளாமல் இருக்க பெருமூச்சோன்றினை வெளிவிட்டவள்,

“உனக்கு என்ன தான் பிரச்சனை.. எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு” என்று கேட்க அவனோ அவளை புரியாமல் பார்த்தான்.

“இல்ல புரியல.. நான் உன்கிட்ட இப்போ ஏதாவது வம்பு செஞ்சேனா.. இல்ல தான.. வம்பு பண்ணும் போது கூட சும்மா தான இருந்த.. இப்போ என்ன திடீர்னு” என்று கேட்க அவளும் இதே கேள்வியை யோசித்தாள்.

‘ஆமால.. நியாயப்படி அவன் என்னை சீண்டாம இருக்கான்னு நான் நிம்மதியா தான இருக்கணும்.. நேத்து வர எதும் கேட்காம.. அவன் பேச மாட்றான்னு தெரிஞ்சதும் ஏன் கேட்கணும்.. ஐயோ கடவுளே.. இவன் பேசினாலும் இம்சை.. பேசாட்டினாலும் இம்சையா இருக்கே’ என்று நொந்தவள்,

“இல்ல அன்னைக்கே கேட்க நெனச்சேன் தான்.. எல்லாரும் இருந்தாங்கன்னு கேட்கல” என்றாள். அவனோ,ஃ

‘நான் கூட எல்லாரும் சொன்னங்கன்னு இடையில உன்னை கொஞ்சம் நம்புனேன் டி.. ஒருவேளை நாம தான் தப்பா ஏதும் புரிஞ்சுகிட்டோமோன்னு.. ஆனா நேத்துல இருந்து உன்மேல இன்னும் தான் சந்தேகம் அதிகமாயிருக்கு.. இப்போ என்ன பிரச்னைன்னு சொன்னா நீ கண்டிப்பா சுதாரிச்சுறுவ.. யார் அந்த அஜய்.. உன் பிளான் என்னன்னு உன்னை நான் கையும் களவுமா பிடிக்கணும்..’ என்று மனதினுள் யோசிக்க அவளோ,

“ஹெலோ.. என்னாச்சு” என்று கேட்க அவனோ,

“இல்ல ஒன்னும் இல்ல.. எனக்கு ஆபீஸ் டென்ஷன்.. உன்கூட சண்டை போட எனக்கு மூட் இல்ல” என்றபடி அலைபேசியில் கவனமானவனுக்கு கடைசியாக இவளுடன்  பேருந்தில் பயணித்தது வேறு நியாபகத்திற்கு வந்து இன்னும் அவன் கோபத்திற்கு தூபம் போட்டது. அவளுக்கும் தான்.

‘அன்னைக்கு பஸ்ல இவன் கூட வரும் போது கொஞ்சம் கூட தோணல.. இவன் தான் என் புருஷனா வருவான்னு.. இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை ஆச்சர்யத்தை நமக்கு கொடுக்க காத்திருக்கோ.. இந்த சிங்கிள் ஜர்னிய கூட இவனுக்கு என்கூட லீட் பண்ண முடியல.. எங்க வாழ்க்கையை எப்படி லீட் பண்ண போறோமோ..’ என்று விதியை நினைத்து நொந்தவள் அதற்கு மேல் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன் இருக்கையில் காதம்பரியோ சமரிடம்,

“சாரி” என்க அவனோ,

“எதுக்குங்க” என்றான்.

“இல்ல அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வரட்டுமேன்னு தான் உங்களை யூஸ் பண்ணிக்கிட்டேன்.. சாரி அகைன்” என்று தயங்கி கூற அவள் கூற்றில் சிரித்தவன்,

“அது நீங்க வான்டெடா என்கூட வந்து உக்காரும் போதே தெரிஞ்சுக்கிட்டேன். அண்ட் ஆல்சோ இதுல உங்க ஃபிரண்ட் வாழ்க்கை மட்டும் அடங்கல.. என் வாழ்க்கையும்” என்று கூற வர அவளோ,

“என்ன.. உங்க வாழ்க்கையா” என்று புரியாமல் கேட்க,

‘அவசரப்பட்டு மனசுல இருக்குறத உலறாத டா’ என்று தனக்கு தானே கூறியவன்,

“சாரி.. என் ஃபிரண்ட் வாழ்க்கையும் அடங்கியிருக்குன்னு சொல்ல வந்தேன்.. டங் ஸ்லிப் ஆயிருச்சு” என்க அவளோ,

“புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ்” என்றதோடு திரும்பிக் கொண்டாள். திடிரென்று என்ன நினைத்தானோ,

“நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா” என்றிட அவளோ யோசித்தபடி,

“கேளுங்க” என்றாள்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று பட்டென கேட்டுவிட அவளோ அதிர்ந்தாள். அவள் நிலைப் புரிந்தவன்,

“இல்ல.. எனக்கு உங்களை பார்த்ததும் பிடிச்சுட்டு.. உங்களை பத்தி எதுமே எனக்கு தெரியாது தான்.. எல்லாம் தெரிஞ்ச அப்புறம் சரி வருமா என்ன ஏதுன்னு யோசிச்சு அப்புறம் லவ் சொல்ற டைப் நான் இல்லை.. சொல்லப் போனா இது லவ் தானா என்னன்னு கூட எனக்கு தெரியல தான்.. ஆனா உங்க கூட வாழ்ந்த நல்லா இருக்கும்னு அந்த செகண்ட் தோணுச்சு. உங்க முடிவை நான் உடனே சொல்லுங்கன்னு சொல்ல மாட்டேன்.. இதுக்கு மேல உங்க முடிவு என்னன்னு நீங்களா சொல்லாம நான் கேள்வியும் கேட்க மாட்டேன்.. உங்களுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும் போது சொல்லுங்க.. சாரி.. தோணுனா சொல்லுங்க.. அப்படியும் இல்லனா இதுல யோசிக்க எதுவும் இல்லைன்னு இப்போவே நோ சொன்னா கூட எனக்கு ஓகே தான்.. டார்ச்சர் எல்லாம் பண்ண மாட்டேன்..” என்று நின்று நிதானமாக அவள் கண்களைப் பார்த்து பேசியவன் பிறகு தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றபடி அலைப்பேசியில் கவனம் பதித்தான்.

காதம்பரி தான் இவ்வளவு நேரம் அவன் பேசியதெல்லாம் உண்மை தானா இல்லை நாம் தான் ஏதும் கனவு கண்டோமா என்றபடி புரியாமல் விழிக்க அவள் முகத்தைப் பார்த்து புரிந்துக் கொண்டவன்,

“நான் பேசினது எல்லாம் உண்மை தான்.. ரொம்ப போட்டு குழப்பிக்காதீங்க..” என்க அவளோ மென்னகை புரிந்தபடி திரும்பிக் கொண்டாள்.

திருமணம், காதல் என்றெல்லாம் அவள் இதுவரை யாரைப் பற்றியும் யோசித்ததில்லை. அவன் சட்டென அவன் விருப்பத்தை கூறவும் என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் தவித்தாலும் அவன் நேர்மையாக அவனுடைய உணர்வுகளை தன்னிடம் வெளிப்படுத்திய விதம் அவளுக்கு பிடித்ததென்னவோ உண்மை தான். தான் எதுவும் கூறாமலே சிலவற்றை புரிந்து கொள்கிறான். இவனுக்கு இப்போதைக்கு காரணங்கள் கூற அவசியம் இல்லை என்று தோன்றியதோ என்னவோ. சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.

சென்னை பயணத்தின் போது வாழ்க்கைப் பயணத்திற்காகவும் விண்ணப்பித்துவிட்டான் சமர்.. அவனுக்கு பயணச்சீட்டு கிடைக்க பெறுமா..? அல்ல நிராகரிக்கப்படுமா..? காதம்பரிக்கே வெளிச்சம்.

இவ்வாறாக இப்பயணம் இரண்டு ஜோடிகளின் எதிர்காலத்தை நோக்கிய  பயணமாக அமைதியாக அமைய காலை விடியல் அழகாய் சென்னையில் விடிந்தது.

கணபதியின் ஏற்பாட்டால் இரவோடு இரவாக ஆதினியின் அனைத்து பொருட்களும் தூயவனின் வீட்டில் இடமாற்றப்பட்டது. காதம்பரியோ,

“சரி நான் ரூமுக்கு போறேன் ஆது.. நீ அண்ணா வீட்டுக்கு போய்ட்டு ப்ரெஷ் ஆயிட்டு ஆஃபீஸ் வா.. பட் சீக்கிரம் வா.. மீட்டிங் இருக்கு இன்னைக்கு.” என்றிட அப்பொழுது தான் ஆதினிக்கும் தூயவனுக்கும் அது நினைவிற்கே வந்தது.

‘இவளை வேற என்கூட கூட்டிட்டு போகணுமா’ என்றபடி தூயவன் சளிப்பாக ஆதினியைப் பார்க்க அவளோ,

‘இனிமே இவன் வீட்டுலயா நாம இருக்கணும்..’ என்றபடி பார்த்தாள். சமரோ,

“என்ன காதம்பரி.. அவன் வீடுன்னு மட்டும் சொல்றீங்க.. இனிமே அது ஆதுவோட வீடும் தான் கூட” என்க,

“நீங்க சொல்றதும் சரி தான்.. சரி ஓகே நான் கிளம்புறேன்.. பாய் ஆது.. பாய் அண்ணா..” என்றவள் சமரிடம்,

“பாய்” என்றாள் தயக்கமாக. சமரோ,

“நீங்க ஆட்டோல தான போகணும்.. நான் வேணா டிராப் பண்ணவா” என்று கேட்க அவளோ,

“இல்ல தட்ஸ் ஓகே.. என் ஸ்கூட்டி பார்கிங்க்ல தான் இருக்கு.. நான் போய்ப்பேன்” என்றவள் விடைபெற்றாள். அவளையே பார்த்து நின்ற சமரைக் கண்ட தூயவனோ,

“டேய் ரொம்ப வழியாத..” என்று ஆதினிக்கு கேட்காதபடி கூற அவனிடம் இளித்து வைத்த சமர் அவனுடைய அறைக்கு சென்றுவிட தூயவனும் ஆதினியும் மகிழுந்து ஒன்றினைப் பதிவு செய்து வீடு வந்து சேர்ந்தனர். வீட்டினுள் நுழைந்தவளோ,

‘பரவாயில்லை.. நல்லா தான் இருக்கு’ என்று நினைத்தபடி வந்தாள். தூயவனோ,

“உன் திங்ஸ் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு.. இனிமே நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ” என்றுவிட்டு அவன் அறைக்கு செல்ல அவளும் அவளறைக்கு சென்றுவிட்டாள். சென்று குளித்து முடித்து வந்தவள் வெளியே வந்து ஹாலை பார்க்க வாய் பிளந்து நின்றாள்.

வந்த போது தூசியாக இருந்த வீடு இப்பொழுது பளபளவென மின்னியது. ஹாலை பார்த்துவிட்டு அவளின் அறையை அவளாலேயே பார்க்க முடியவில்லை.

அப்பொழுது தான் சமயலறையில் இருந்து வெளியே வந்தவன் அவள் நிற்பதைக் கண்டு,

“என்னாச்சு.. எதுவும் வேணுமா..” என்று கேட்க அவளோ,

“ஆள் வந்த அப்போ சொல்லிருக்கலாம்ல.. உன் ரூமையும் ஹாலையும் மட்டும் க்ளீன் பண்ண சொல்லிருக்க..” என்று கேட்க அவனோ புரியாமல் முழித்தான்.

“எந்த ஆளு.. புரியல” என்க அவளோ,

“வீடு க்ளீன் பண்ண யாரோ வந்துருக்காங்க தானே” என்று கேட்க அதில் அவளை முறைத்தவன்,

“ஹெலோ.. இங்க எந்த ஆளும் வரல.. என் ரூமையும் ஹாலையும் க்ளீன் பண்ணது நான் தான்..” என்க அவளோ,

“எதேய் நீயா..” என்றாள் அதிர்ச்சியாக.

“இங்க பாரு.. எனக்கு என்னை சுத்தி இருக்க இடம் க்ளீனா இருக்கணும்.. நீயும் இனிமே ஃபாலோ பண்ணிக்கோ” என்றவன் அறைக்குள் செல்ல போக திரும்ப அவளிடம் வந்தவன்,

“உனக்கும் சேர்த்து தான் சமச்சுருக்கேன். பிடிச்சா சாப்பிடு.. வேற சமைக்க போறன்னா சமைச்சுட்டு கிச்சன க்ளீன் பண்ணிரு… ஆமா சமைக்க தெரியும் தான..” என்று கேட்க அவளோ,

“தெரியாதுன்னு சொன்னா சொல்லி கொடுக்க போறியாக்கும்” என்று வாய்க்குள்ளே கூறினாலும் அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“உனக்கு சொல்லி கொடுக்குற அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்ல.. உனக்கும் சேர்த்து சமைக்குறதுல எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல.. வேணும்னா சொல்லு டெய்லி சமைச்சு வைக்குறேன்” என்க அவளோ,

‘இவன் நிஜமாவே நல்லவன் தானா.. இல்ல நடிக்குறானா’ என்று சந்தேகமாக பார்க்க அதனை யூகித்தவன்,

“நீ ஃபிராடா இருந்தாலும்.. இப்போ என்னை நம்பி வந்துருக்க ஃபிராடு.. சோ உனக்கு தேவையானதை செஞ்சி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு.. அதனால தான் இந்த கன்செர்ன் எல்லாம்” என்க அவளோ,

“ரொம்ப தான் அக்கறை.. எனக்கு சமைக்க தெரியும்.. நான் பார்த்துக்குறேன்..” என்க அவன் செல்ல போக,

“ஒரு நிமிஷம்” என்றாள். அவனும் என்னவென கேள்வியைக் கண்களில் தேக்கியபடி பார்க்க,

“வீட்டுக்கு ரென்ட் அண்ட் மைண்டனன்ஸ் எவ்ளோ” என்று கேட்க அவனோ அவளை மேலும் கீழும் பார்த்தபடி,

“இது என் சொந்த வீடு.. மைண்டனன்ஸ்க்குன்னு யாரையும் இதுவரை நான் வச்சது இல்ல” என்றான். அவளோ பெரிதாக அழட்டிக்கொள்ளமல்,

“சரி உன் நம்பர் சொல்லு” என்க எதற்கென்றான் தூயவன்.

“அய்ய.. உனக்கு லவ் மெஸ்ஸேஜ் அனுப்ப ஒன்னும் நம்பர் கேட்கலை.. ஸீன் போடாம சொல்லு” என்றிட அவனும் கூறினான்.  அவனின் எண்ணை பதிவு செய்ய போனவள் பெயர் பதியும் இடத்தில் “உர்ராங்குட்டான்” என்று பதிவு செய்ய போக அவன் தன் அலைபேசியை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று கவனித்தவள் அவனிடம் இருந்து மறைத்து பெயரினை பதிவு செய்தாள்.

‘அப்படி என்ன நேம் வச்சுறுப்பா’ என்று அவன் யோசிக்க அவனின் வங்கி கணக்கில் பதினைந்தாயிரம் ரூபாய் வரவு வந்திருப்பதாக அலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வர அவனோ புருவம் சுருக்கி பார்த்தான். அவளோ,

“நான் தான் அனுப்புனேன்.. நான் தங்க போற ரூமுக்கு வாடகை பத்தாயிரம் ரூபா.. மைண்டனன்ஸ் அண்ட் கிச்சன் திங்ஸ்க்கு அஞ்சாயிரம்.. இதே மாதிரி மன்த்லி உனக்கு நான் க்ரெடிட் பண்ணி விட்ருவேன்” என்க அவனோ,

“இதெல்லாம் இப்போ யார் உன்கிட்ட கேட்டாங்க” என்று சளிப்பாக கேட்க அவளோ,

“ஹெலோ வேற வழி இல்லாம தான் உன் தயவுல நான் இருக்க வேண்டியிருக்கு.. சோ எனக்கான ஷேர் நான் கொடுத்துருவேன்.. ஒண்ணுமே செய்யாமையே என்னை ஃபிராடுங்குற இதுல உன் வீட்டுல உக்காந்து ஓசி சோறு சாப்பிட சொல்றியா.. எனக்கும் செல்ப்ஃ ரெஸ்பெக்ட் இருக்கு” என்றவள் சமயலறைக்கு சென்றாள்.

‘இப்படி எல்லாம் செஞ்சா மட்டும் உன்னை நம்பிருவேனா.. போடி போ’ என்றபடி அவனறைக்குள் புகுந்துக் கொண்டான். அதன் பிறகு அவரவர் தனி தனியே கிளம்பி அலுவலகம் செல்ல வெளியே வர ஏற்கனவே அலுவலகத்திற்கு நேரமாகிறதே என்று அவசரத்தில் இருந்தவள் மகிழுந்து பதிவு செய்ய போராடிக் கொண்டிருக்க அதனைக் கண்டவன்,

“போற வழியில இறக்கி விடுறேன்.. வரியா” என்றிட அவளோ,

“தேவையில்லை.. நான் பார்த்துக்குறேன்” என்றாள் அவனை பார்க்காமல். அவனோ,

‘திமிரு உடம்பு முழுக்க.. அயோ பாவமேன்னு ஹெல்ப் பண்ண நெனச்சேன்ல தேவை தான் எனக்கு’ என்று நினைத்தபடி வண்டியை துடைத்துக் கொண்டு உள்ளே ஏறப்போக ஆதினிக்கும் வாகனம் எதுவும் கிடைக்காததால் அவனிடம் வேறு வழியின்றி வந்து நின்றவள்,

“எனக்கு கேப்(cab) கிடைக்கல.. டிராப் பண்றியா.. அர்ஜெண்ட்டா போகணும்” என்றாள் எங்கோ பார்த்தபடி. அவனோ,

“உன் குரல்ல பணிவு தெரியலையே” என்றிட பெருமூச்சோன்றினை வெளிவிட்டவள்,

“நீ கேட்கும் போது வேணாம்னு சொன்னேன்னு பழிவாங்காத.. ஹெல்ப்பா கேக்குறேன்.. பேங்க்ல முக்கியமான மீட்டிங் இருக்கு.. ப்ளீஸ் டிராப் பண்றியா” என்று இம்முறை சரணடைந்து விட்டாள். வேறு எதுவும் அவனும் கேட்கவில்லை.

“சரி ஏறு” என்றிட அவளோ பின்னே ஏறப்போக,

“உனக்கென்ன நான் ட்ரைவரா.. ஒழுங்கா முன்னாடி வந்து ஏறு” என்க “இம்சைடா” என்றபடி முன்னே வந்து அமர்ந்தாள்.

“கிச்சன் லாஸ்ட்டா நீ தான யூஸ் பண்ண.. கேஸ் எல்லாம் ப்ராப்பரா ஆஃப் பண்ணிட்டியா” என்று கேட்க அவளோ,

“அதெல்லாம் பண்ணிட்டேன்.. நீ வண்டிய எடு டைம் ஆச்சு” என்றாள் அசாதாரணமாக. வண்டியை இயக்க போனவன் என்ன நினைத்தானோ திடிரென்று இறங்கி வீட்டிற்குள் சென்றான் அவள் அழைப்பதைக் கூட காதில் வாங்காமல்.

“டேமிட்.. நான் அவசரம்னு சொல்லியும் வேணும்னே என்னை பழிவாங்குற தானே.. அதுவும் அவ்ளோ ரெக்வஸ்ட்டா நான் கேட்டும் திமிரெடுத்து பண்ற.. கவனிச்சுக்குறேன்” என்றபடி மீண்டும் மகிழுந்துக்காக பதிவு செய்ய முயற்சித்தாள். நல்லவேளையாக பதிவாகிவிட வண்டி வந்து நிற்கவும் தூயவன் மீண்டும் இறங்கி வரவும் சரியாக இருந்தது. அதுவும் சிரித்தபடி இறங்கி வந்தான்.

“நான் அவ்ளோ சொல்லியும் என்னை பழிவாங்க நீ இப்படி பண்றல.. உன்னை மனுஷனா மதிச்சு உதவி கேட்டேன்ல என்னை சொல்லணும்.. உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று கத்தியபடி மகிழுந்தில் ஏறி சென்றுவிட்டாள். அவனோ எதையோ சிந்தித்தவன்,

“போடி.. நீ செஞ்சத விடவா நான் பெருசா பண்ணிட்டேன்..” என்று தோளைக் குலுக்கியவன் அவனுடைய மகிழுந்தில் பறந்தான். அலுவலகம் வந்தவன் அவனுடைய இருக்கையில் அமர்ந்து கோப்புகளை ஆராய தொடங்க அப்பொழுது அவனுடைய அலுவலக வரவேற்பாளராக பணிபுரியும் பெண்ணோ,

“சார்.. உங்களை பார்க்க ஒருத்தவங்க வந்துருக்காங்க” என்க, ‘யாரா இருக்கும் என்று புருவம் சுருக்கியவன்,

“யார் அவங்க..” என்று கேட்டான்.

தொடரும் அதிர்வுகள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்