Loading

அத்தியாயம் 10

 

 

 

 

இரவு 12.00 கடந்து விடியற்காலை மூன்று மணி போல் ஜெனனியின் ஃபோன் அலறியது.. கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து வருகின்ற அழைப்பு..

 

அன்று இரவு சன்ஜீவுடன் பேசியதோடு சரி குறுஞ்செய்தியோ அழைப்போ அவனிடமும் சரி இவளிடமும் சரி இருவருக்குள்ளும் செல்லவில்லை..

 

அவர்கள் நாட்கள் அமைதியாக நகர்ந்து இருந்தது..ஜெனனி முற்றத்தில் நெல்லி இலைகள் கொட்டி இருப்பதால் கூட்டும் போது சன்ஜீவ இருந்த அறையை அண்ணாந்து பார்த்து பெரு மூச்சுடன் முற்றத்தை கூட்டுவாள்..அவன் இல்லை என்று தெரிந்தும் திறந்து இருந்த ஜன்னல் வழியாக அவளை பார்க்க மாட்டானா என்று அவள் மனதும் ஆசைகொள்ளும் அதன் பிறகு நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு அமைதியாகி விடுவாள்..

 

ஒரு நாள் அவள் முற்றத்தை கூடிக் கொண்டு இருக்கும் வேளையில்..சன்ஜீவ வீட்டின் முன் கார் ஹார்ன் அடித்தது..

 

வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார் ருவணி.. இடைப்பட்ட விடுமுறை நாளில் சஜித்துடன் வந்திருந்தான் சன்ஜீவ காரை விட்டு இறங்கியவன் அண்ணனை அனுப்பி வைத்துவிட்டு கேட்டை திறந்து உள்ளே நுழைய ருவணி கேட்டின் அருகில் வர சரியா இருக்க..

 

அவனை கண்டவர் சந்தோஷ மிகுதியில் “ மகே புத்தே! ( என் மகனே!) ” சன்ஜீவனை அவர் அணைத்துக் கொள்ள, அவனும் தாயை அணைத்துக் கொண்டான்..“ அம்மே ( ம்மா..) ” உதடுகள் புன்னகையில் விரிந்தது..

 

கூடிக் கொண்டு இருந்தவளுக்கு ருவணி அவனை அழைத்தது கேட்டுவிட இவளுக்கு அவனை பார்க்க வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்க..

 

விழிகள் கலங்கியது..விளக்குமாரை இறுக பற்றிக் கொண்டது அவளின் கைகள்..அவனை பார்க்க வேண்டும் என்கிற அவா உள்ளத்தில் எழவே,

 

விளக்கமாரை கீழே போட்டுவிட்டு கேட்டை திறந்து சன்ஜீவ வீட்டிற்கு ஓடி இருந்தாள்..

 

ருவணி மகனுடன் பேசிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவர்..நீண்ட தூர பயணம் செய்ததால் களைப்பாக இருப்பான் என்ற நோக்கத்தில் “ ஒயாகே காமரேட்ட யன்ட புத்தே மம ஒயாட்ட பொன்ட மொக்கக் ஹரி கேன்னம் ( உன்ட அறைக்கு போ மகன் நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாறன்..) ” என்று அவர் சொல்ல..“ ஹரி அம்மே ( சரி ம்மா) ” என்று விட்டு பையை எடுத்து கொண்டு அவன் அறைக்குச் சென்று இருந்தான்…

 

தற்போது ஃபோனில் இருந்து அழைப்பு வர..ஜெனனியின் செவிகளில் எட்டவே இல்லை அவள் சன்ஜீவனுடன் கனவுலகில் அல்லவா இருந்தாள்…

 

அவன் வீட்டுக்கு அவள் வந்ததும் யாரும் இல்லை என்று தெரிந்து படிகளில் அவள் கால்கள் ஓட்டமெடுத்தது அவனை காண..

 

மூச்சு வாங்க ஓடி வந்தவள் தாழ் இடாத அவன் அறையை திறந்து உள்ளே ஓடியவள் அவனை பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டு அழுதாள் அவனின் ஜெனி..

 

தடுமாறி மெத்தையில் விழுந்தவனுக்கு நெஞ்சில் பாரம் ஏறியதோடு அவன் செவியில் விம்மி விம்மி அழுதபடி இருந்தவளை பார்த்தவனுக்கு அவன் ஜெனி என்று புரிந்தது..

 

அவளை அவன் மேல் இருந்து பிரித்தெடுக்க முயற்சிக்க அதுவே முடியாமல் போக “ ஜெனி ” அவன் அழைத்ததும் அழுகை நிறுத்தி , விசும்பலாக மாறி இருந்தது..

 

மெதுவாக அவன் நெஞ்சில் இருந்து முகத்தை எடுத்து அவனை ஏறிட்டுப் பார்க்க..உள்ளம் அதிர விழிகளை விரித்து பார்த்தவுடன் அவன் மேல் இருந்து விலகி நின்று கொண்டாள் ஏனென்றால் அவனின் தோற்றம் மாறி இருந்தது..“ ஜெனி ” அவன் அழைப்பது அவளுக்கு வேறு எங்கிருந்தோ கேட்க..

 

தூக்கத்திலே ஃபோனின் அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தாள் ஜெனனி..“ ஜெனி..” அவன் சத்தமாக கத்தி அழைக்கவும் கனவில் இருந்து வெளியே வந்து கண்ணை திறந்தாள்..

 

காதின் மேல் ஃபோன் இருக்க , அந்த பக்கம் இருந்து சன்ஜீவனின் குரல்.. பட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு தான் புரிந்தது..

 

கனவு கண்டு இருப்பதை நெற்றியில் அடித்துக் கொண்டவளுக்கு சன்ஜீவ அணிந்திருந்த பழுப்பு நிற உடை அவளை சிந்திக்க வைத்திருந்தது..

 

“ ப்ரவுன் கலர் உடுப்பு அவன் ஏன் போட்டு இருந்தான்..” நெரித்த புருவத்துடன் கனவை பற்றியே நினைக்க..

 

“ ஜெனி லைன்ல தானே இருக்க கதைடி ” அவன் கத்த..“ ஹாங் ” விழித்தவள் ஃபோனை பார்த்தாள்.. சன்ஜீவ அழைப்பில் இருந்தான்..

 

இரண்டு மாதங்கள் கழித்து விடியும் நேர்த்தில் அவன் அழைத்ததை நினைத்து கோபபடுவதா? இல்லை சந்தோஷப்படுவதா என்கிற மனநிலை அவளுக்கு..

 

அவனிடம் சண்டை இட்டு என்ன நடக்கப் போகிறது.. இரண்டு மாதம் கழித்தாவது அழைத்திருக்கிறானே என்று அவன் மனதை நோககடிக்க அவள் விரும்பவில்லை.. ஃபோனில் காதில் வைத்தவள் “ சொல்லுங்க சன்ஜீவ ” என்றவளின் பேச்சு குரல் கேட்டதுமே அவன் நிதானத்திற்கு வந்தான்..

 

“ எவ்ளோ நேரமா கால் பண்ணேன்..உன்ன கத்தி கூப்ட்டேன் இதெல்லாம் உன் காதுல கேட்கல்லையா இல்ல வேணும்னே செய்றீயா ஜெனி..” சீறினான் அவன்..

 

உடனே அழைப்பை ஏற்காததில் வந்த கோபம்..“ கொஞ்சம் இருங்க இப்ப எதுக்கு பூனை மாதிரி சீறுறீங்க ஹான்..நல்ல கனவு கண்டு தூங்குறவளை எழுப்பிட்டு சீறுனா என்ன அர்த்தம்..” அவனுக்கு குறையாத சீற்றத்தில் அவள் கேட்டிட..

 

“ சரி விடு..நீ கால் அடன்ட் பண்ணாதனால அப்படி பேசிட்டேன்..பிறகு இங்க எனக்கு ஸ்டடிஸ் பிராக்டீஸ் எண்டு போயிட்டு இருக்குறதால உன்னட்ட கதைக்க முடியல சொறி ஜெனி..” 

 

“ பரவாயில்ல சொறிலாம் கேட்க தேவையில்ல சன்ஜு பிறகு எப்படி இருக்கீங்க..” அவள் கேட்க..

 

“ ஹம்.. பைன் ஜெனி..நீ எப்படி இருக்க.. யுனிவர்சிட்டி எப்ப போக போற ? ” 

 

“ நல்லா இருக்கேன்..ஓபன் யுனிவர்சிட்டில இருந்து இன்னும் ஆன்லைன் அப்ளிக்கேஷன் ஃபார்ம் வரல்ல..அது வரைக்கும் வெயிட் பண்ணாம எங்க ம்மா என்னை தூக்கி தையல் கிளாஸ்ல போட்டுட்டாங்க சோ அதுக்கு போயிட்டு இருக்கேன்..அட்லிஸ் நம்மளுக்கு பொறக்க போற பேபிஸ்க்கு நானே டிரஸ் தைச்சி போடுவேன்ல ” அவனிடம் சொன்னவளுக்கு கன்னம் இரண்டும் சிவப்பது போல் ஓர் உணர்வு அவளுக்கு..

 

“ நல்லது தானே நான் சம்பாதிக்குற காசு மிச்சம்..” வெட்கப்பட்டு அவன் சிரிக்க.. இருவரும் சிங்களத்தில் பேசிக் கொண்டு இருந்தார்கள்..

 

“ அது சரி காசு மிச்சமா அப்ப நானே உங்க சாலரிய காலி பண்ணிடுறேன்..அப்ப பார்த்துக்கலாம்..” அவனை மிரட்டுவது போல் தான் சொன்னாள்…

 

அவனோ ‘ பக் ’ என்று சிரித்து விட்டான்..“ முதல்ல லவ் பண்றதை கன்டினியூ பண்ணலாம் பிறகு கல்யாணம் பத்தி யோச்சி அதுக்கு பிறகு என் சாலரில கை வைக்கலாம்..” என்றான் அவன்..

 

கன்னத்தில் கை வைத்து நேரத்தைப் பார்க்க 3.30 ஆகி இருந்தது..“ சரி சரி..விடிய கால் பண்ண காரணம்..? ” அவள் கேட்க…

 

“ பிராக்டீஸ் ஜெனி அதுனால மார்னிங்கே எழுந்து கிரவுண்ட்க்கு வந்துட்டம் ” அவனின் நண்பர்கள் அழைக்க..ஐந்து நிமிடம் என்று சைகையால் காட்டிவிட்டு அவளிடம் பேச்சை தொடர்ந்தான்..

 

“ உன் கூட பேச அவ்ளோ டைம் கிடைக்கவே மாட்டிங்குது ப்ரண்ட்ஸ் கூப்பிடுறாங்க ஜெனி…” அவளிடம் பேச ஆசை தான் அதை விட அவனின் பயிற்சி முக்கியம் ஆயிற்றே..

 

“ சரி நீங்க பிராக்டீஸ்க்கு போங்க இன்னொரு நாள் கதைக்கலாம் ஃபீல் பண்ணாதீங்க சன்ஜு மிஸ் யூ சோ மச்..”

 

“ ஹம்..ஜெனி லவ் யூ சோ மச் ஜெனி…” என்று இருவரும் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்..

 

படிக்கட்டில் அமர்ந்து இருந்தவன் ஃபோனை பையில் போட்டு விட்டு எழுந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்று நண்பர்களுடன் ஐக்கியம் ஆகிவிட்டான்..

 

ஃபோனை அவள் மேசையில் வைத்ததன் பிறகு கூரையில் சட சடவேன சத்ததில் மழை துளிகள் பெரிதாக விழுந்தது..அன்று பிடித்த மழை தொடர்ந்து ஆறு நாட்களாக பெய்துக் கொண்டே இருக்க..

 

அவள் இருந்த ஊரில் சில இடங்களில் வெள்ளம் போட்டு இருந்தது.. அவளுக்கு வீட்டில் அடைந்திருக்கும் நிலைதான் அப்படியே மழையும் நின்றிட வெயில் அடிக்க ஆரம்பித்தது..

 

இவர்களின் காதல் ஃபோன் அழைப்பில் வளர்ந்து கொண்டு இருந்தாலும், அதிகமான பேச்சு இருவரிடமும் இருக்கவில்லை..

 

நாட்கள் மாதங்களாகி ஒரு வருடம் முடிந்திருக்க ஜெனனி வீட்டை விட்டு பல்கலைக்கழகம் செல்லும் நாளும் வந்தது…

 

“ ஜெனனி எல்லாம் எடுத்து வச்சுட்டீயா?” வசந்தா ஹாலில் இருந்து கத்தினார்..ஜெனுஷா மற்றும் தினேஷ் ஜெனனியை கையோடு அழைத்து செல்லலாம் ஆனால் அவர்களின் வேலை தடையாக இருப்பதால் வசந்தாவும் இராஜேந்திரனும் கொழும்புக்கு ஜெனனியை அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்..

 

“ ஆ..ம்மாஆ.. எல்லாம் எடுத்து வச்சுட்டேன் இருங்க வாறான்..” அவசரமாக அலுமாரி கண்ணாடி முன்பு நின்று கோகுல் சண்டோல் பவுடரை முகத்துக்கு பூசி, நெற்றியில் பொட்டை வைத்ததன் பிறகு ஒரு முறை கண்ணாடியில் தன்னை பார்த்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு ஓடினாள்…

 

“ தேவையானதை எல்லாம் எடுத்துட்ட தானே ஜெனனி.. எதையும் மறந்து அறைல வச்சு இருக்கீயா? ” அவர் கேட்க..

 

“ இல்ல ம்மா எல்லாமே எடுத்து வைச்சிட்டேன்..ஆட்டோ வந்தா கூப்டுங்க ம்மா ருவணி ஆன்டி கிட்ட சொல்லிட்டு வாறன்..” என்று சிட்டாக பறந்து இருந்தாள்..

 

“ ருவணி ஆன்டி..” சத்தமாக அவரை அழைத்து உள்ளே நுழைந்த வேளையில், அவர் ஃபோன் அழைப்பில் இருந்தார்..

 

“ சன்ஜீவ எப்ப வீட்டுக்கு வர போற? ” சிங்களத்தில் மகனுடன் பேசிக் கொண்டு இருந்தார் அவர்..“ லீவு தந்தா வாறன் ம்மா ஏன் எண்டா இங்க சில கோர்ஸ்க்கு அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கு..என்னோட வேலையும் எப்படி எண்டு சரியா தெரியாது.. குறைஞ்சது இரண்டு வருஷமாவது வெளியூர்ல தான் வேலை செய்ய வரும் ம்மா…பார்ப்பம் எங்க ஊர் பக்கம் எப்ப அனுப்புவாங்க எண்டு..” சன்ஜீவ காலையில் தாயுடன் பேசிக் கொண்டு இருக்க..

 

அதனை கண்டவள் ‘ எனக்கு மட்டும் பேய் உலாவுற நேரத்துலையும் கனவு கண்டுட்டு இருக்குற நேரத்துலையும் கால் பண்ணி எழுப்புறது தடிப்பய ’ மனதில் அவனை திட்ட , அவனோ ஃபோனில் அந்தப்பக்கம் இருமினான்..

 

“ என்ன பா.. இருமல் சளி பிடிச்சிட்டா..” அவனுடன் பேசிவிட்டு திரும்பி வேளையில் ஜெனனி நின்றாள்..அவரை பார்த்து புன்னகைத்தாள்..

 

“ ஜெனனி..” என்றுவிட்டு அவன் “ சளிலாம் இல்லமா திடீர் எண்டு இருமல்..அத விடுங்க ஜெனனி பேர சொன்னீங்களே வீட்டுக்கு வந்து இருக்காளா? ” ஆர்வமும் எதிர்பார்புடன் கேட்க..

 

அவன் பேசுவது ஃபோனில் அவளுக்கு கேட்க தான் செய்தது..‘ க்கும்..என்ன நடிப்பு அதுவும் அம்மா கிட்டயே ’ என்று நினைத்தாள்..

 

“ ஆமா பா.. வீட்டுக்கு வந்து இருக்கா ஏன்னா கொழும்பு யுனிவர்சிட்டில படிக்கணும் தானே அதுனால அவங்க வீட்டுல இன்டைக்கே ஜெனனி அக்கா வீட்டுல விட போறாங்க அதுக்காக தான் சொல்லிட்டு போக வந்தீயா ஜெனனி? ” என்று அவர் கேட்க..

 

ஆமாம் என தலையசைத்தவளிடம் “ சரி நல்லா படி ஜெனனி அது தான் எங்களுக்கு முக்கியம்..” அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர் காலில் விழுந்து விட்டாள்..சிரித்தபடியே ருவணி அவளை மனதார ஆசிர்வாதம் செய்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்து இருந்தார்..

 

அதன் பிறகு “ சன்ஜீவ கூட கதைக்கிறீயா ஜெனனி..” 

 

“ இல்ல ஆன்டி எனக்கு நேரமாச்சு ஆட்டோ வரும் ..அப்ப நான் போயிட்டு வாறன்..” அவரிடம் கூறிவிட்டு விடைபெற்று வெளியே செல்லும்போது ஆட்டோ அவர்கள் கேட் முன்னே வந்து நின்றது..

 

‘ கதைச்சிட்டு போய் இருக்கலாமே..ஜெனி தான் மனசுக்குள்ள திட்டி இருப்பா..’ அவனால் பொருமிக்க கொள்ளத் தான் முடிந்தது..

 

“ ஹரி அம்மே மம தியன்னம் பிராக்டிஸ் தியனவா ( சரி ம்மா நான் வைக்கிறேன் பிராக்டிஸ் இருக்கு) ” அவரிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் சன்ஜீவ…

 

கையில் பாக்ஸிங் கிளவுஸ் அணிந்து தலை இருபக்கமும் சரித்து ஒற்றை கையால் சொடக்கு எடுத்து , நேரே பன்ச்சிங் பேக்ஸ் தொங்க வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றான் அவன்..

 

அவனின் நண்பன் அஜந்த “ அம்மா கிட்ட கதைச்சி முடிச்சிட்டீயா சன்ஜீவ? ” அவன் பன்ச்சிங் பேக்கில் பன்ச் அடித்தவாறு அவனுடன் பேச..“ கதைச்சிட்டேன் டா..” பலமாக பன்ச் பேக்கில் அடித்தான் அவன்..“ இன்னும் ஒரு மாசத்துல எங்களுக்கு போட்டி இருக்கு சோ நல்லா பிராக்டிஸ் பண்ணுவம் வின் பண்ணனும்ல..” அஜந்த அவனுடன் பேசிக் கொண்டே இருவரும் வெறித்தனமாக பன்ச் பேக்கில் அடித்தனர்..

 

சன்ஜீவனிற்கு இருபத்திமூன்று வயதாகிறது..ஆளின் தோற்றம் அதே போல் என்றாலும் இன்னும் வளர்ந்து இருந்தான்..கை தசைகள் பன்ச் பேக்கில் அடிக்கும் போது புடைத்து கொண்டு நின்றது.. அவனின் கேசம் வியர்வையில் நலைந்து இருக்க..பற்களை கடித்து பன்ச் பேக்கிற்கு ஓங்கி அடித்தான்.. இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் போட்டிக்காக…

 

 

 

தொடரும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்