அத்தியாயம் 9
அன்றொரு சன்ஜீவ அவளுடன் இரவு பேசியதோடு சரி அதன் பிறகு அவளுக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ அவன் அவளுக்கு அனுப்பி இருக்கவில்லை..
தினமும் காலையில், இரவில் ஃபோனை எடுத்து பார்ப்பதே ஜெனனியின் வேலையாக இருக்க..
அவளுக்கு பல்கலைக்கழகம் கிடைத்தது என்னவோ யாழ்ப்பாணத்தில் தான் அதனை பற்றி வீட்டில் அவள் சொல்லி இருக்க..
இராஜேந்திரன் “ ஜெனனி யாழ்ப்பாண யுனிவர்சிட்டிக்கு போக வேண்டாம் டா..” அவர் சொல்ல..
“ ஏன் ப்பா அங்க படிக்க தானே போக போறேன்..” சுவற்றில் சாய்ந்து நின்று அவள் சொல்ல..
“ உனக்கு அங்க போய் படிக்க ஆசையா எண்டா உன் கிளாஸ் ப்ரண்ட்ஸ் கிட்ட கேளு மா அவங்களுக்கு யாழ்ப்பாண யுனிவர்சிட்டி கெடச்சி இருந்தா உன்ன அனுப்புறம் ” என்றார் முடிவாக..
அவள் பெரு மூச்சு ஒன்றினை விட்டு “ எனக்கு மட்டும் தான் ப்பா யாழ்ப்பாண யுனிவர்சிட்டி கெடச்சி இருக்கு.. நான் அங்க போறனே! ” கெஞ்சல் பார்வையுடன் தந்தையிடம் கேட்டவளை..
அவருக்கும் பாவமாக இருந்தது.. மகளின் எதிர்காலம் அல்லவா தெரியாத ஊரில் அவளை படிக்க வைக்க அவருக்கு கிஞ்சிதும் உடன்பாடு இல்லை..
அவளை தனியாக படிக்க அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருவரும் அல்லல்படுவதா? இவளுடன் தோழிகள் இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு கூட இவளுக்கு கிடைத்த பல்கலைக்கழகம் கிடைக்கவில்லையே என்ன செய்வது என்று மனைவி முகம் பார்க்க..
வசந்தா “ ஜெனனி வேணும் எண்டா கொழும்புல இருக்குற ஓபன் யுனிவர்சிட்டி போறீயா? அப்படியே உங்க அக்கா கிட்டையும் கேட்டு பார்ப்பம் ” என்றார் அவர்…
“ இதுவும் நல்ல யோசனை தான் வசந்தா..” இராஜேந்திரனுக்கு அதுவே சரியாக படவே சொல்லி இருந்தார்..
“ ஆனாலும் ப்பா…”
“ ஜெனுஷா கிட்ட கேட்டு பார்த்ததுக்கு பிறகு முடிவு பண்ணலாம்ங்க..” வசந்தா சொல்ல..“ சரி..” என்றார் அவர், அவளும் அதனை ஆமோதிக்க அதன் பின் எதுவும் பேசவில்லை அவள்..
அவர்களால் அவளை விட்டு பிரிந்து இருக்க முடியாது என்பதை மட்டும் புரிந்து கொண்ட பெண்ணவள்.. சன்ஜீவ மீதான காதலை பற்றி இவர்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவளுக்கு காதலை பற்றி சொல்லவே அத்தனை பயமாக இருந்தது..
ஆனால் இப்போதைக்கு இவளின் திருமண பேச்சு எடுபடாது என்றதை அறிவாள்.. அவளுக்கு இருபத்தி நான்கு இல்லை இருபத்தி ஐந்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்கிற கணிப்பு இருந்தது.. சன்ஜீவ எக் காரணம் கொண்டும் காதலை கூட விட்டுக் கொடுக்க முடியாது , போராடியே ஆக வேண்டும் என்று நினைக்கும் போதே அவள் மேனி நடுங்கியது..
இரவு அன்று ஜெனுஷாவை அழைத்திருந்தார் வசந்தா.. அவர்களின் நலத்தை விசாரித்த பிறகு ஜெனனி பல்கலைக்கழகம் செல்வதை பற்றி பேச்சை எடுத்தார்..
“ ஜெனு நீ என்ன நினைக்கிற நம்ம ஜெனனிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பலாமா இல்ல ஓபன் யுனிவர்சிட்டிக்கு அனுப்பி வைப்பமா? ஆனா உங்க அப்பா கொஞ்சம் கூட விருப்பம் இல்ல அவளை தனியா யாழ்ப்பாணம் அனுப்புறதுக்கு ” என்றார் அவர்..
“ நானாச்சும் பரவாயில்ல ம்மா என்கூட ப்ரண்ட்ஸ் இருந்தாங்க பேராதனை யுனிவர்சிட்டில படிச்சேன்..நான் நெனச்சேன் ஜெனனிக்கு பேராதானை தான் கிடைக்கும் எண்டு நீங்க சொல்றத பார்த்தா அவளுக்கு யாழ்ப்பாணம் தான் கிடைச்சு இருக்கு.. அவ்வளவு தூரம் அப்பா அனுப்பவே யோசிக்கிறார் எண்டா நாங்க எப்படி ம்மா.. நான் நாவல பக்கம் தானே இருக்கேன் ஜெனனியையும் ஓபன் யுனிவர்சிட்டில சேர்த்துட்டா இவராவது அவளை கூட்டிட்டு வர போக மாட்டாரா என்ன ? ம்மா சும்மா எதுக்கு அங்க வந்து போய் கிட்டு நீங்க அப்பா கிட்ட பேசி முடிவு எடுங்க ஜெனனிய இங்க ஓபன் யுனிவர்சிட்டிலயே படிக்க வைக்கலாம்..” அவளின் முடிவை சொன்னதன் பிறகே..அவருக்கும் ஜெனனியை கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு படிக்க அனுப்பி வைக்க கணவனிடம் பேச எண்ணினார்…
ஜெனனி சன்ஜீவ ஆன்லைன் வருகிறானா? என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்..அவன் ஆன்லைன் வருவதற்கான சிறிய குறுஞ்செய்தி ஆவது அவளுக்கு வரவில்லை..
அங்கு சன்ஜீவனுக்கு படிப்பு ஒரு புறம் பயிற்சி என்று இருக்க ருவணியோட மட்டும் பேசிவிட்டு களைப்பில் உறங்கிவிடுவான்..
ஜெனனியுடன் பேசலாம் என்று நினைக்கும் நேரத்தில் விழிகளை சுழட்டி தூக்கத்தில் ஆழ்த்துகிறது.. இதில் எங்கனம் அவளுடன் பேசுவது..
இப்படியே ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இராஜேந்திரன், வசந்தா இருவரும் எடுத்த முடிவை மகளிடம் ஒப்புவித்து இருக்க.. அவளுக்கோ ஏதாவது பல்கலைக்கழகம் கிடைத்தால் போதும் என்கிற நிலை தான்..
அதே சமயம் சன்ஜீவனுக்கு தினமும் காலை வணக்கம், இரவு வணக்கமும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூங்குபவளுக்கு அவனிடம் இருந்து குறுஞ் செய்தி ஒன்றேனும் வராதா என்று எதிர்பார்ப்பும் பொய் பித்து போக..
அதுவே , அவன் மீதான சினத்தை ஏற்படுத்தி இருக்க..அதே சினத்துடன் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு வேண்டும் என்றே மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைத்தாள்..
அதன் விளைவு 12.00 பேய் உலாவும் நேரத்தில் சன்ஜீவ அவளுக்கு ஃபோனில் அழைத்தது தான்..
தூக்கத்தில் ரிங் டொன் கேட்டவள் கையால் துளாவி அழைப்பை ஏற்று காதில் வைத்ததன் பிறகு,
“ ஹலோ ” என்க…
“ சொறி ஜெனி…” ஃபோனிலே தொடர் இச்சுக்கள் வந்து சேர அடிபிடித்து எழுத்து அமர்ந்தாள்..
அவளுக்கு அழைத்தது சன்ஜீவ தான் என்று தெரிந்தது.. கட்டிலில் இருந்து வழுக்கி கொண்டு கீழே வந்து அமர்ந்தவள் “ இப்ப எத்தனை மணி தெரியுமா ? உங்களுக்கு இந்த நேரத்துலயா கால் பண்ண நெனைப்பு வருது ? அன்னிக்கு கால் பண்ணது தான் பிறகு எடுக்கவே இல்ல சரி எண்டு மெசேஜ் அனுப்புனா அதுக்கு கூடவா ரிப்ளை செய்ய நேரம் இல்ல சன்ஜு? ” அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க…
“ ஏய் ஜெனி நான் கதைக்கிறதை கேளு உன் கூட பேச நெனைப்பேன் பட் டயர்ட்ல தூங்கிருவேன்..இன்னிக்கி ஏனோ இந்த டைம்ல முழிப்பு வந்துட்டு சோ உன் கிட்ட கதைக்கலாம் எண்டு எடுத்தேன்.. கொஞ்சம் என்னை பத்தியும் யோசிக்கலாமே ஜெனி..” என்று அவன் சொன்னதும் அமைதியாகி விட்டாள்..
“ ஹொஸ்டல் சாப்பாடுலாம் அங்க எப்படி இருக்கு ? ”
“ சாப்றது கஷ்டம் தான் ஆனா ஓரளவு பரவாயில்ல எண்டு தான் சொல்லணும்..” சிங்களத்தில் அவன் சொல்ல…
“ ம்ம்.. நீங்க என் கூட பேசுறீங்களே உங்க ப்ரண்ட்ஸ் எதுவும் கேட்க மாட்டாங்களா? ” என்று அவள் கேட்க..
“ நான் பாத்ரூம் ல இருக்கேன்..”
“ ச்சீ ..ச்சீ அங்க வச்சி கதைச்சிட்டு இருக்கீங்க ஊவேக்..” வாந்தி வருவது போல் செய்து காட்ட..
“ ஏய்..பைத்தியமா உனக்கு நான் சொல்ல வர்றத முழுசா கேட்காம இடைல கதைக்காத.. பாத்ரூம் வெளிய நின்னு கதைச்சிட்டு இருக்கேன் ” என்றிட தலையில் அடித்துக் கொண்டாள் அவள்...
“ சொறி சன்ஜீவ..”
“ ம்ம்..ரூம் பக்கம் போயிட்டு இருக்கேன்..சரி நீ யுனிவர்சிட்டி எப்ப போக போற ? ”
“ சரி அதுவா… யாழ்ப்பாண யுனிவர்சிட்டி தான் அம்மா ,அப்பா, அக்கா மூனு பேரும் முடிவு எடுத்து கொழும்பு நாவல ஓபன் யுனிவர்சிட்டிக்கு போக சொல்லிட்டாங்க..”
“ அதுக்கென்ன அவங்களுக்கு உன் விட்டு பிரிய விருப்பம் இல்ல போல அதுதான்..நீ என்ன சொன்ன ஓகே சொல்லிட்டீயா? ”
“ ஓகே சொல்லிட்டன் அநேகமா அக்கா வீட்டுல இருந்து தான் யுனிவர்சிட்டி போக வரும் நெனைக்கிறேன்..”
“ இதுக்கே சோகமா சொல்ற , ”
“ யாழ்ப்பாணம் போக ஆசையா இருந்துச்சு ”
“ விடு பார்த்துக்கலாம்.. நான் ஒண்டு கேட்கணும் உனக்கு போலீஸ் ஆ..பிடிக்குமா ? ”
“ ஏன் பிடிக்காம ஸ்டோரி ஹீரோ போல மாஸ் ஆ..மீசை வச்சி, தாடி டிரீம் செஞ்சி, கண்ணுல கூலர் கண்ணாடி மாட்டி அப்படியே பிளாக் கலர் பைக்ல வந்தா ப்பா!! எப்படி இருக்கும் தெரியுமா ? ” கனவில் மிதந்து போலீஸ் ஒருவனை வர்ணித்து சொல்ல..
இவனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது..“ போதும் வர்ணிச்சது இதெல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன் ஜெனி..” அவனின் குரல் கடுமையாக மாறி இருக்க..
“ இதுக்கே பொஸஸிவ்வா சரியா போச்சி.. நான் வர்ணிச்சி சொல்லல்ல போதுமா ? உறுப்படியான போலீஸ் ஆ..இருந்தாலே போதும்..பர்ஸ்ட் நம்ம இருக்குற ஏரியாவுல கன்ஜா பிஸ்னஸ் பண்றவனுங்களை அள்ளிட்டு போனாலும் போதும்குற நிலை தான்..அப்படி ஒரு போலீஸ் வந்து தான் மத்த வேலை..” ஆழ்ந்த பெருமூச்சுடன் சொல்ல..
“ நீ என்ன மட்டும் சைட் அடிக்கணும்..நீ நெனைக்கிற போல ஒரு போலீஸ் வருவான் வெயிட் என்ட் சீ..” கண்களில் கனவுகள் மின்ன அவன் சொல்ல..
அவன் விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்தவள் “ ஹா..ஹா..ஏன் சன்ஜீவ நீங்க போலீஸ் ஆகி வர போறீங்களா என்ன ? ஜோக் ஆ..கதைக்காதீங்க பா..” நேரத்தை பார்த்தாள்..மணி 12.30 இருந்தது..
“ மார்னிங் எழும்பணுமே போய் தூங்குங்க..” கொட்டாவி விட்டபடி சொன்னாள்..
“ நான் சொல்றது ஜோக் ஆ..நெனைக்கிறல்ல இட்ஸ் ஓகே..” முகம் சுருங்கிப் போனது..
“ அய்யோ ! பிழையா எதாவது சொல்லிட்டேனா? ”
“ ஒண்டும் இல்ல நீ தூங்கு , குட் நைட் இது தான் நாங்க பேசுறது கடைசியா கூட இருக்கலாம் ஜெனி..” ‘ ஏன் இப்படி சொல்கிறான் ’ புரியாத விழிக்க..
அவன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.. அவன் மனதை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லையே, பல்கலைக்கழகம் சென்றவனால் எப்படி போலீஸ் ஆக முடியும்..அதற்கு என்று தனியே பல்கலைக்கழகம் இருக்கிறதே!
அவனின் அழைப்பு துண்டிக்கப்பட்டதில் குழம்பினாள் ஜெனனி.. அதற்கு அடுத்த நிமிடமே அவனுக்கு அழைப்பு விடுத்த போது அழைப்பு ஏற்கவில்லை..“ தூங்கி இருப்பார் போல ” அவளுக்கு ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்..
அதுவே அவர்களுக்கு தொடர்கதையாகி போனதை எதை காரணம் காட்டி சொல்வது ??
தொடரும்…