Loading

அத்தியாயம் 6

 

 

 

அவர்களுடன் பூமியும் சுழன்று காலை , இரவு , பகலாக மாறி மாறி வந்து நாட்களும் உருண்டோடியது.. அத்தோடு ஒரு மாதமும் முடிந்து இருக்க.. இருவரினதும் எந்த ஒரு மாற்றமும் இல்லை சன்ஜீவனுக்கு ஜெனனி வம்பிழுக்கவோ, பேசுவதற்கோ நேரம் இருக்கவில்லை..

 

அவனின் படிப்பு ஒரு புறம் என்றால் அகெடமி சென்று கொண்டு இருக்கும் போதே இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான்..

 

விடுமுறை எடுத்ததகாற்கான காரணமும் அவளுக்கு தெரியவில்லை.. வகுப்பு ஆசிரியருடன் சன்ஜீவ தனியாக சந்தித்து பேசுவதை கண்டு , அவனிடம் என்னவென்று கேட்க மனம் உந்தினாலும் அவளை அவனிடம் சென்று கேட்க விடாது தடுத்திருந்தது..

 

அன்று தான் ஜெனனி எழுதி முடித்து உயர்தர பரீட்சைக்கான தேர்வுகள் வெளியாகும் நாள் அது அகெடமிக்கு வந்து விட்டாள் தேர்வினை பார்க்காது அவ்வளவு பயமாக இருந்தது அவளுக்கு..

 

வகுப்பில் இருப்பவர்கள் நல்ல தேர்வினை எடுத்திருக்க, பல்கலைக்கழகம் போவதை பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள்..

 

இவளிடம் வந்து கேட்டபோது பார்க்கவில்லை என்று கூறிவிட்டாள்.. அன்று சன்ஜீவ வந்து இருக்கவில்லை..

 

வீட்டை விட்டு வெளியே அவள் வந்தபோது அவனின் அண்ணன் சஜித்தின் காரில் அவன் ஏறி செல்வதை கண்டுவிட்டாள்..

 

எங்கே செல்கிறான் என்று தெரியவில்லை..

 

அகாடெமிக்கு வந்த போதும் அன்று அவன் வகுப்பிற்கு வந்து இருக்கவில்லை மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான்…

 

அகாடெமி முடிந்து பஸ்ஸில் வந்து இறங்கி வீட்டிற்குள் வருவதற்குள் களைப்படைந்து விட்டாள்..உள்ளே வந்ததும் ஜெனனி “ ம்மா குளிச்சிட்டு வாறன் சாப்பாடு போட்டு வைங்க..” என்று மாற்று துணியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்…

 

வசந்தா மகளுக்கு சாப்பாடு எடுத்து வைத்திருக்க.. இன்னும் தன்னிடம் உயர்தர பரீட்டைக்கான தேர்வினை கூறாது போக்கு காட்டும் மகளை பிடித்துக் கொள்ள நினைத்து ஹாலில் கதிரையில் அமர்ந்திருந்தார்..

 

ஐந்து நாட்களும் அகாடமி செல்வதால் தலை குளிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.. காலையில் குளித்துவிட்டு சென்றாலும் வகுப்பில் போட்டு இருக்கும் ஏசியில் எங்கனம் ஈர கூந்தல் காய்வது..

 

அதனாலே குளித்துவிட்டு கை கழுவி சாப்பிடுவதற்கு குஷனில் அமர்ந்திருந்த போது “ ஜெனனி ஏல் எக்ஸாம் ரிசல்ட் வந்து எத்தனை நாளாச்சு ” அவர் கேட்க..உணவை பிசைந்து ஒரு வாய் வைத்தவுடன் வசந்தா இந்த கேள்வியை கேட்டு இருக்க..

 

“ ரிசல்ட் பார்க்கவே பயமா இருக்கு ம்மா..ஆனா இன்டைக்கு பார்த்துட்டு உங்கட்ட சொல்றன்..” என்றவள் உணவை சாப்பிட்டாள்…

 

“ நீ என்னதுக்கு பயப்படணும் அதெல்லாம் நல்ல ரிசல்ட் தான் வந்து இருக்கும்.. பின்னேரம் போல சன்ஜீவ வீட்டுக்கு வந்தான் உன்ட கிளாஸ் புத்தகத்த தரட்டுமாம்.. இன்டைக்கு லீவு எடுத்ததா சொன்னான்..எங்க போயிட்டு வந்த எண்டு சொல்லல்ல..கூப்பிட்டு பாரு வீட்டுல இருப்பான்.. நான் கொஞ்சம் சாஞ்சிட்டு வாறன்..” 

 

“ சரி ம்மா ” அவர் அவளின் அறைக்கு சென்றார் சிறிது நேரம் உறங்கி எழுவதற்காக..

 

சாப்பிட்டு முடித்தவள் கை கழுவிவிட்டு ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு சாமி அறைக்கு சென்றாள்..

 

“ கடவுளே நீ தான் பா துணை! ” மனதார வேண்டுதல் வைத்து கூகுளில் சென்று அவளின் எண்ணை அடித்து ரிசல்ட் வருவதை பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டாள் அவ்வளவு பயமும் பதட்டமும் இருந்தது..

 

கண்ணை திறக்காமல் அரை கண்ணால் தேர்வை பார்க்க அவள் உதடு புன்னகையில் விரிந்தது..கண்களை முழுவதுமாக திறந்து பார்த்தவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி..

 

“ கடவுளே! உனக்கு கோடோடி நன்றிகள் ” நெற்றியில் திருநீற்றை பூசி , அறைக்குள் ஓடினாள்..

 

உறங்கிக் கொண்டிருந்த வசந்தாவை தட்டி எழுப்பி “ ம்மா என்ட ரிசல்ட் என்ன தெரியுமா B, B, C எடுத்து இருக்கேன்..பாஸ் ஆகிட்டன்ல ” விழிகளில் அப்படி ஒரு மகிழ்வு..

 

“ சந்தோஷம் டி அப்பா வந்தா சொல்லிடு சந்தோஷப்படுவார் ” என்றார் வசந்தா..

 

“ நான் போய் சன்ஜீவ பார்த்துட்டு வாறன்..” என்க..

 

“ சரி போ..” என்றவுடன் புத்தகத்தை எடுத்து கொண்டு சன்ஜீவ வீட்டிற்கு துள்ளல் நடையுடன் சென்றாள் ஜெனனி..

 

சன்ஜீவ வீட்டிற்குள் நுழைந்த போது ஏன் என்றே தெரியாமல் அவளின் துள்ளலும் காணாமல் போய்விட முகம் விழுந்தது..

 

ஏனென்றால் சன்ஜீவ அவனின் வயதை ஒத்த பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்தான் அதுவும் நெருக்கமாக.. ஆனால் அவளுள் எழுந்த மாற்றம் அவளால் உணர முடிந்த தருணம் அது..

 

அந்த பெண்ணின் பேரோ நிரோஷினி அவன் பாடசாலையில் படித்தவள், பல்கலைக்கழகம் பற்றி தெரிந்து கொள்ள சன்ஜீவ வீட்டிற்கு வந்திருந்தாள்..ருவணியும் அவளுக்கு தேநீரை கொடுத்துவிட்டு அங்கு இருந்த செடியில் அமர்ந்த போது தான்..

 

வீட்டிற்குள் வராமல் வாசலிலே நின்று கொண்டு இருக்கும் ஜெனனியை கண்டவர்..“ துவே அய் எழிய இன்னே அதுலட்ட என்ட..( மகள் ஏன் வெளிய நிக்கிற உள்ள வா..) ” அவர் அவளை கூப்பிடவும் தான் நிரோஷனியிடம் பேச்சை நிறுத்தி விட்டு ஜெனனியை பார்த்த சன்ஜீவனின் முகம் மகிழ்வில் விரிந்தது..“ ஜெனி என்ட ( ஜெனி வா ) ” என்று அழைத்தான்..

 

உள்ளே வந்தவள் “ சன்ஜீவ அய்யே ஒயா மகே பந்தி பொத இல்லுவா கியலா அம்மா கிவ்வா..( சன்ஜீவ அண்ணா நீங்க என்ட கிளாஸ் புத்தகத்த கேட்டிங்கலாம் எண்டு அம்மா சொன்னாங்க..) ” அவனிடம் புத்தகத்தை நீட்டி இருந்தாள்..

 

புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்டவன் “ ஒயாட்ட இகன கன்ன பொத ஓனேத?( உனக்கு படிக்க புத்தகம் வேணுமா ? ) ” என்று கேட்டிருந்தான்..

 

“ நோட்ஸ் எழுதிட்டு நாளைக்கு கிளாஸ்ல தாங்க..” அவனிடம் பேச வந்தவளுக்கு அதுவே நிரோஷனி வந்தது தடையாகிப் போனது..“ மம யன்னம் ஆன்டி ( நான் போறன் ஆன்டி ) ” அவள் சொல்ல..” சுட்டக் இந்தலா யன்ட புளுவன் நே ஜெனனி..( கொஞ்சம் இருந்துட்டு போலாமே ஜெனனி..) ” என்றவரிடம் “ நே ஆன்டி கெதர வேட தியனவா..( இல்ல ஆன்டி வீட்டுல வேலை இருக்கு..) ” சமாளிப்பாக சொல்ல..“ ஹரி துவே ( சரி மகள்) ” அவரிடம் விடைபெற்று சென்றாள்..

 

சன்ஜீவ புறம் திரும்பியும் அவள் ‘ போய்ட்டு வருகிறேன் ’ என்ற வார்த்தை சொல்லாது சென்றவளை அவனுக்கு உள்ளம் நெருடலாக இருந்தது.. அதுவும் ‘ சன்ஜீவ அய்யே! ( சன்ஜீவ அண்ணா!) ’ என்ற அழைப்புமே..

 

நிரோஷினியும் அவனிடம் பேசிவிட்டு விடைபெற்று சென்றிருந்தாள்..

 

இராஜேந்திரன் வேலை விட்டு இரவு வந்ததும் கேசரியை கொடுத்து “ ப்பா நான் பாஸ் ஆகிட்டேன் தெரியுமா ? ” துள்ளிக் கொண்டு சொல்ல..“ சந்தோஷம் மா..” என்றவர்..“ இன்டைக்கு உனக்கு பிடிச்சத கேளு ஜெனனி வாங்கி தாறன் ” என்க..“ மெங்கோ ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க அது போதும் ” என்றாள்..அவள் கேட்டது போல் அன்று இரவே ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்திருந்தார்..

 

வசந்தா அவரின் மூத்த மகளிடம் மகிழ்வை தெரிவித்து இருக்க..அதன் பிறகு தன் சொந்தங்களுக்கு சொல்லி இருந்தார்..

 

அதே சமயம் நாளை அவளுடன் பேசலாம் என்று எண்ணிய சன்ஜீவனுக்கு அடுத்த நாள் வகுப்பில் அவளின் அந்நிய தன்மையே அவனை வரவேற்றது..

 

ஏன் என்ற காரணமும் அவனால் கண்பிடிக்க முடியாமல் போனது.. அவனிடம் பேசுவதையும் குறைத்து , பார்ப்பதையும் தவிர்த்து இருந்தாள்..

 

இப்படியே நாட்கள் நகர..சிறிது நாட்ளாகவே நிரோஷினியும் சன்ஜீவ வீட்டிற்கு வந்து செல்வதை கண்டவளுக்கு தொண்டை அடைத்தது..

 

இரவு உறங்கும் வேளையில் அவள் தலையணையே அவளுக்கு ஆறுதலாகி போனது..ஏன் அழுகிறோம் எதுக்கு அழுகிறோம் என்று ஆராய நினைத்தவளுக்கு அகாடமி பரீட்சை அவளை உள்ளே இழுத்துக் கொண்டது…

 

அதன் பின் நிரோஷனி சன்ஜீவ வீட்டிற்கு வருவதும் இல்லை.. பல்கலைக்கழக பற்றி தெரிந்து கொள்ள வந்தவள் அவ்வளவு தான் அவளின் வேலை முடிந்தது..

 

பரீட்சை நாள் பரீட்சையும் எழுதி முடிந்து , இடையில் பாடமும் நடந்தது..மாலை வேளையில் அகாடமி முடிந்து அவள் முன்னால் நடந்து செல்ல , இவன் அவள் பின்னே நடந்தான்..

 

இன்று அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்..“ ஜெனி ” அவன் அழைக்க..காதில் வாங்கி கொள்ளாமல் நடந்தாள்..நான்கே எட்டில் அவளை நெருங்கி “ ஜெனி ஓஹம இன்ட ஒயத் எக்க கதா கரன்ட ஒனே..( ஜெனி அப்படியே நில்லு உன்கூட கதைக்கணும்..) ” என்று சொன்னதுமே நடையின் வேகத்தை குறைத்திருந்தாள்..

 

“ ஒயா அய் மாத்தெக்க கதா கரன்ன நேத்தே ?, அஹகட்ட யன்ன வகே பேனவா..( நீ ஏன் என்கூட கதைக்க மாடேங்குற? தள்ளி போற மாதிரி இருக்கு..) ” குரலை செருமிக் கொண்டு சொன்னான்..எக் காரணம் கொண்டு அவனின் கவலையில் ஒலிக்கும் குரல் கேட்டு விட கூடாது என்று பிரயனபடுத்தினான்..

 

“ நீங்க சொல்லுற போல எதுவும் இல்லையே நான் எப்பவும் நார்மலா தான் இருக்கேன் சன்ஜீவ அய்..” ‘ அய்யா ’ என்று வார்த்தையை கூறும் முன்பு அவள் கரத்தை அழுத்த பிடித்து இருந்தான்..

 

அவன் அழுத்தியதில் கை வலித்தது.. இதற்கு மேல் முடியாது என்று நினைத்தாலோ “ கைய விடுங்க நோவுது ” வலி நிறைந்த குரலை கேட்டதும் “ சொறி ஜெனனி ” அவள் முழு பெயரை சொல்லிவிட்டு பின் வாங்கினான்…

 

அவன் கையை விட்டதும் முன்னால் நடக்க..அவன் பின்னால் மெதுவாக வருவதை அவனின் காலடி சத்தத்திலே தெரிந்து கொண்டவளால் என்ன உணர்வை கொடுக்கிறது என்று அவளால் சிறிதும் கூட புரிந்து கொள்ளும் பக்குவமும், காதல் பற்றிய அறிவும் அவளுக்கு இல்லை..

 

அவன் பேசாததும், கை வலிக்கிறது என்று கூறியதில் விலகியதிலும் அவள் மனதை தாக்கத்தான் செய்தது.. பிளேட் எடுத்து இதயத்தில் கீறு ஒன்றை போட்டது போல மனது வலித்தது..

 

கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கொட்டிட..அவளே விரல்கள் கண்ணுக்கு கீழே வருடி பார்த்தவளுக்கு ஏன் அழுகிறோம் என்று புரியாமல் போகவில்லை ,சிறிதாக புரிய ஆரம்பித்தது..

 

‘ எனக்கு ஏன் இப்படி ஒரு நினைப்பு வருது..என் எண்ணம் போற போக்கு சரி இல்ல..இத மறக்கணும்..’ மனதில் தோன்றிய எண்ண அலைகளை நினைத்து பயந்தாள் பெண்ணவள்..

 

அவள் நடையை நிறுத்தி பின்னால் திரும்பி நேரே சன்ஜீவ முன்பு நின்று “ நான் இப்ப சொல்லுறத நினைச்சி பிழையா எடுத்துக்காதீங்க..என்னட்ட நீங்க பேசாதீங்க சன்ஜீவ சொறி.. ” என்று விறுவிறுவென நடையை கட்டினாள்…

 

அவள் சொல்லிவிட்டு சென்றது அவனுக்கு புரியவும் இல்லை.. அவனும் குழப்பத்தில் நடந்தான்..

 

இரண்டாவது மாத கடைசியில் அவர்கள் அகாடமி முடிவுறும் கடைசி நாளாக இருந்தது.. இருவரும் அன்றோடு பேசுவதை நிறுத்தி இருந்தனர்..

 

ஆனால் அவள் உள்ளம் அவளை நேசிக்காமலும் இல்லை.. பரீட்சையும் முடிந்ததோடு சான்றிதழை எடுப்பதற்காக அவளின் தந்தை இராஜேந்திரனுடன் வந்து அவளுக்கு உரிய சான்றிதழை எடுத்துவிட்டு சென்றிருந்தாள்…

 

ஜெனனி சன்ஜீவனை காணவே அறிதாகிப் போனது…

 

அவளின் பாடசாலை முஸ்லிம் தோழி ஒருவளின் திருமணம் அதற்கு செல்வதற்கு ஆயத்தமாகி கொண்டு இருந்தாள்..

 

இளம் சிவப்பு நிற புடவை, பார்டர் கோல்ட் நிறம்..வசந்தாவின் உதவியுடன் புடவையை கட்டி முடித்திருந்தாள்..

 

அவர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருப்பதால் மல்லிகை பூ எடுக்க முடியவில்லை.. கழுத்தில் அரசு இலை வடிவ பென்டன் வைத்து தங்க செயின் , காதில் குடை ஜிமிக்கி , முகத்தில் ஒப்பனை இல்லை.. விழிகளுக்கு மை தீட்டி, இதழுக்கு லேசாக உதட்டுச்சாயமும் , இடது கையில் கோல்ட் நிற கைக் கடிகாரமும், வலது கையில் வளையல், இடை வரை இருக்கும் கூந்தலை விரித்து க்ளிப்பில் அடக்கி, மிதமான ஒப்பனையில் அழகாக இருந்தாள்..

 

“ ம்மா ரெடி ஆகிட்டு கூப்பிடுங்க..வெளிய செல்ஃபி எடுத்துட்டு இருப்பேன் ..” என்றாள் கையில் ஃபோனுடன்..“ சரி சொல்றன்..” என்றார் வசந்தா..

 

வெளியே தோட்டத்தில் நின்று அவளை வைத்து ஒவ்வொரு கோணத்தில் செல்ஃபி எடுத்துக் கொள்ள..“ மே! ஜெனனி நேத கொய் தரம் லஸ்சனட இன்னவத..( இது ஜெனனி தானே எவ்வளவு வடிவா இருக்கா ) ” என்று ருவணி மேல் மாடியில் சன்ஜீவனின் அறையில் இவளை கண்டு சொன்னதும் , கையை கீழ இறக்கிவிட்டு அண்ணாந்து அவரைப் பார்த்து புன்னகைத்தாள்..

 

“ மெஹே என்ட ஜெனனி..( இங்க வா ஜெனனி) ” என்று அவர் அழைக்கவும், முடியாது என்று சொல்ல முடியாதவளால் கேட்டை திறந்து சன்ஜீவ வீட்டிற்கு சென்றாள்…

 

புடவை கொசுவத்தை கையால் பிடித்து படிகளில் ஏறி சன்ஜீவனின் அறையை வந்தடைந்து விட்டாள்..

 

சன்ஜீவன் டிராவலிங் பையை எடுத்து உடைகளை அடுக்கி வைத்து பையின் சிப்பை மூடிவிட்டு நிமிரும் போது ஜெனனியை அவன் அறையில் அதுவும் புடவையில் கண்டதும் திகைத்து போய் நின்றுவிட்டான்..

 

“ ஒயாகே யாழுவாகே கசாதேடத யன்ட யன்னே நேத ஜெனனி..(  உன்ட ப்ரணட் ஓட கல்யாண வீட்டுக்கா போக போற ஜெனனி..) ” அவர் கேட்கவே..“ ஒவ் ஆன்டி ( ஆமா ஆன்டி) ” வாய் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவளின் பார்வை சன்ஜீவனின் திகைத்த முகத்திலும், கட்டில் மேல் இருக்கும் டிராவலிங் பை மீதே இருந்தது…

 

அவர்களின் வீட்டு கேட் தட்டும் சத்தம் கேட்டதும், “ கவுருத தன்னே நே மம கிஹில்லா பலங் என்னங் துவே..அனித் எக ஒயா அத ஹரிம லஸ்சனய் அம்மாட்ட கியண்ட கண்ணூரு சுத்தி தாண்ட கியல..( யாரோ தெரியாது நான் போய் பாத்துட்டு வாறன் மகள்..அடுத்தது நீ இன்டைக்கு வடிவா இருக்க..அம்மாட்ட சொல்லி கண்ணூரு சுத்தி போடுங்க..) ” அவளின் தலையில் கை வைத்து இடையில் தமிழ் வார்த்தை சேர்த்து சொல்லிவிட்டு சிரித்தபடி சென்றார்..

 

அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே திரும்பிட..அவள் அருகில் நெருக்கமாக நின்றிருந்த சன்ஜீவனை கண்டதும் ஒரு கணம் இதயம் ‘ திக் ’ என்று இருந்தது..

 

இரண்டு அடி காலை பின்னோக்கி நகர்த்தி இருந்தாள்..“ கிட்ட வந்து பயமுறுத்துறீங்க ” உதடு குவித்து மூச்சை இழுத்துவிட்டு அவள்சொல்ல..

 

“ வடிவா இருக்க..” அவன் தாய் சொன்னது போல் அவன் சொன்னான்..“ தமிழ்ல வடிவா கதைக்கிறீங்க சன்ஜீவ தேங்க்ஸ் ” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல ஒரு அடி எடுத்து வைத்த போது..

 

அவள் இடையில் அவன் கரம் நுழைந்து , இடையோடு இழுத்து கதவில் அவளை சாய்த்திருந்தான்..

 

அவனிடம் இந்த செயலை எதிர்பார்க்காத ஒன்று மை இட்ட விழிகள் குடை போல் விரிந்து அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது..“ அய்யோ என்ன செய்றீங்க சன்ஜீவ, என்ன பழக்கம்..ம்ம் ” அடுத்த வார்த்தைகள் அனைத்தும் அவனின் இதழுக்குள் பொதிந்து போனது..

 

நீண்டதொரு இதழ் முத்தம் அவனின் தவிப்பும், அவளின் விலகலும், தன்னை உதாசீனம் செய்தற்கும், மீண்டும் எப்போது சந்திக்க போகின்றமோ என்ற பிரிவுக்குமான அழகிய நினைவு பெட்டகமாகவும் அவனின் காதலை உணர்த்தி கொண்டு இருந்தான் இதழ் முத்தத்தின் வழியாக…

 

அவனின் இதழ் முத்தத்தில் பெண்ணவளுக்கு பயம் பிடித்து கொண்டது.. அவர்கள் வீட்டில் ருவணி பார்த்துவிட்டால் அவ்வளவு தான் பிரச்சினை ஆகிடும் என்று உள்ளுணர்வு கூற..அவளுக்கும் அவனின் இதழ் முத்தம் தேவைப்பட்டதோ?

 

அவள் இதழில் இருந்து தன் இதழை பிரிந்து , அவள் முகத்தை உற்று நோக்கப் பார்த்தான்..அவனை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை அவள்..

 

“ ஜெனனி ” தாய் அழைக்கும் சத்தம் கேட்டதும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.. விழிகளில் இருந்து வழிய துடிக்கும் கண்ணீர் உருண்டையை அவன் பெரு விரல் துடைத்துவிட்டது..

 

அவனின் காதலை அன்றே சொல்ல நினைத்தானோ அவன் மனதில் இருப்பதை அவள் விழிகளை பார்த்து “ மகே ஹிதே ஒயா விதரமய் இன்னே ஜெனி..கவதாவத் காடவத் ஒயாவ அத்ஹரின்னம நே அதஹரில ஒயாவ தால யன்னேவத் நே ( என் மனசுல நீ மட்டும் தான் இருப்ப ஜெனி.. ஒரு போதும் யாருக்காகவும் உன்ன விட்டு விலகவும் மாட்டேன்..உன்ன விட்டுப் போகவும் மாட்டேன்..) ” என்று அவளிடம் சொல்லி முடித்தான் சன்ஜீவ..

 

அவன் கூறியதை கேட்டு அவள் தான் ஆடிப் போய்விட்டாள்..மூன்று வார்த்தை காதலை சொல்ல தேவையில்லையே அவன் நீளமாக சொன்னது அவள் மீதான காதலை உணர்த்தி இருந்தது..அதுவோ உள்ளத்தில் சென்று சிலிரிப்பை உண்டாக்கி உள்ளங்கையை மின்சாரம் தாக்கியது போல் உணர்வு கொடுத்ததை அவள் உணர்ந்தாள்…

 

அவளுக்கு வார்த்தை வராமல் பஞ்சமாகிப் போனது  “ மே லஸ்ஸனம கெல்ல மடம கியலா கோட் தமய் லியலா அத்தே..தென் மம ஒயாவ தாலா ஹுங்கக் துர  யன்ட வெனவா.. ஆயேத் அபி மீட் வென்ட நம் அவுருது பஹக் வெய் ஏ வெனகம் ஒயா மாவ பலாகென இன்னவத ஜெனி ? ஏக விதரக் ஒயா கியல கியொத் அதி..( இந்த வடிவான பெட்ட எனக்கு எண்டு கோட் தான் எழுதி இருப்பாரு போல..இப்ப நான் உன்ன விட்டு ரொம்ப தூரமா போக வேண்டி இருக்கு..திரும்ப நாங்க மீட் பண்றது எண்டா ஐஞ்சி வருஷம் ஆகும்..அது வரைக்கும் நீ எனக்காக காத்துட்டு இருப்பீயா ஜெனி ? அத மட்டும் நீ சொல்லிட்டு போனா போதும்..) ” அவளிடம் சொல்லி முடித்து இருக்க..

 

“ ம்ம்..” சரியென அவள் தலை தானாக அசைந்ததும்..அவன் ஃபோனில் அவளை புகைப்படம் எடுத்து கொண்டதும் ,பற்கள் தெரிய சிரித்தவன் , எக்கி அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்து விலகவும் , “ ஜெனனி எங்க போன ” வசந்தா கத்தி அழைப்பது அவள் செவிகளில் கேட்கவும்..“ போ ” என்றான்..

 

அவனை கலங்கி போன மை விழிகளால் ஆழமாக நோக்கி விட்டு விரைவாக படியிறங்கி ஓடிவிட்டாள்..

 

 

 

 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்