Loading

அத்தியாயம் 17

 

 

 

 

சன்ஜீவ சொன்னது போல் அடுத்த நாள் அவள் அனுப்பிய லோகேஷனை பார்த்து கொழும்பு பக்கமாக வேலைக்கு வந்தவன் அவளை சந்தித்து பேசி விடலாம் என்றே முடிவெடுத்து, நாவல ஓபன் யுனிவர்சிட்டிக்கு சற்று தள்ளி இருந்த காஃபி ஷாப்பில் அவள் வரும் வரைக்கும் காத்திருந்தான் அவன்…

 

யுனிவர்சிட்டி முடிந்ததும் கையொப்பம் இட்டு விட்டு அவசரமாக யுனிவர்சிட்டி வெளியே வந்து கைக் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்..மணி 4.00 ஆகி இருந்தது..

 

சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்றினை பிடித்து “ அய்யே ***காஃபி ஷாப் எகட்ட யன்ட ( அண்ணா *** காஃபி ஷாப்புக்கு போங்க) ” அவள் சொன்னதும் சரியென தலை அசைத்தவர் வாகனத்தை காஃபி ஷாப் நோக்கி விட்டார்..

 

15 நிமிடத்தில் காஃபி ஷாப் முன்பு ஆட்டோ நின்றதும் , ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்துவிட்டு விரைவாக காஃபி ஷாப்பிற்குள் நுழைந்திருந்தாள்..

 

உள்ளே வந்தவள் அவன் அமர்ந்திருந்த இருக்கை தேடினாள்..எங்காவது அவள் விழிகளில் தென்படுகிறானா என.. ஒரு வழியாக அவன் அமர்ந்து இருந்த இருக்கையை கண்டுவிட்டால் அவன் புற முதுகே தெரிந்தது..

 

வெண்ணிற ஷர்ட் அணிந்திருந்தான் அவன்..அவனை கண்டு இதழில் அரும்பிய புன்னகையுடன் அவன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்..

 

அவள் நீல நிற சில்க் புடவை ஒன்றினை அணிந்திருந்தாள்.. வீட்டிற்கு நேரத்துடன் செல்ல வேண்டும் என்பதும் அவ்வப்போது மூளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது..

 

” ஹாய் சன்ஜு ..நீங்க வந்து நிறைய நேரம் ஆகிட்டா? ” அவனிடம் கேட்டுக் கொண்டு அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…

 

“ ஓஹ்..வந்துட்டீயா ஜெனி..நான் 3.30 எல்லாம் வந்துட்டேன் நீ தான் லேட்டு..” என்றான்…

 

“ லெக்சர் முடியுற டைம் நாளு மணி ஆகுது..உங்கள வெயிட் பண்ண வச்சதுக்கு சொறி..” என்றாள் அவள்..

 

“ சொறி எல்லாம் எதுக்கு விடு.. நான் இந்த பக்கமா வேலையா வந்தனால தான் உன்ன மீட் பண்ணலாமா எண்டு கேட்ட நான்..ஏதோ ரெண்டு பேருக்கும் இடைல இடைவெளி ஆகுற மாதிரி இருக்கு..உன் கூட பேச நேரம் இல்ல வேலை எண்டு ஓடிட்டு இருக்கேன்.. ” அவனுடைய பக்கத்தை சொல்ல..

 

” ஓஹ்..நீங்க வேலைக்கு போங்க அது ஒரு காரணம் எண்டு சொல்றீங்க பார்த்தீங்களா? என்னமோ நானே விலத்திட்டு போற மாதிரி நீங்க சொல்றீங்க..ஹலோ இங்க கேளுங்க நீங்க தான் ஐஞ்சு வருஷம் எண்டு சொல்லி போன வருஷமே வந்து நிக்குறீங்க ஒரு வார்த்தை கதைக்க கூட நேரம் இல்லாதவர் கிட்ட நான் என்னதுக்கு கதைக்க..” என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள்…

 

“ அப்ப உன் மேல எனக்கு லவ் இல்லன்னு சொல்ல வர்றீயா அதுக்கு தான் உன் அம்மா கிட்ட வரன் பார்க்க சொன்னீயாக்கும்! ..” ஆதங்கமாக மேசையில் அவன் கை ஓங்கி தட்ட வரவும்..

 

பதை பதைப்புடன் உடனே அவன் கையை பற்றிக் கொண்டாள் ஜெனி..அவளின் கை விரல்களின் ஸ்பரிசத்தில் அவனின் கோபம் தணிந்தது..

 

கூலர் அணிந்த கண்ணாடியை ஷர்ட் முன் கொழுவிக் கொண்டான் அவன்..

 

“ ஜெனி..” அவன் குரலில் அத்தனை காதலும் , உருகி போய் வெளி வந்தது..“ நிதானதுக்கு திரும்பி வாங்க சன்ஜு கோபம் வேண்டாமே நிறைய பேர் இருக்காங்க..” சுற்றி பார்வையிட்டு அவள் சொல்ல..

 

அவனின் தொண்டை குழி மேலிருந்து கீழ் இறங்கியது..

 

அவளிடம் காதலை உருகி நிற்பவன் இப்போதெல்லாம் கோபமும் பயமும் அவனை சூழ்ந்து கொள்கிறது விட்டுச் சென்று விடுவாளோ என்கிற அச்சமே அவனுள் புதிதாக போட்ட விதை  முளைத்திருந்தது.. அவனின் கை அவள் கையை பற்றி அழுத்ததை கூட்டியது..

 

“ ஏதாவது குடிக்க ஆர்டர் பண்ணலாமா சன்ஜு? லைட் ஆ..பசிக்குது ” என்று அவள் சொன்னதும் “ சொறி ஜெனி, நான் போய் சொல்லிட்டு வாறன் ” கையை விடுவித்து இருக்கையில் இருந்து எழுந்து சென்றான் ஆர்டர் செய்வதற்கு..

 

இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவன்..“ நீங்க ஆர்டர் செஞ்சதுக்கு எவ்ளோ போச்சி எண்டு சொல்லுங்க காசு தாறன்..” கைப்பையை திறந்து கொண்டு அவள் சொல்ல..“ உன் காதலனா வருங்கால கணவனா கதைக்க நினைக்கிறேன் ஜெனி நீ என்னடான்னா என்னை கோபபடுத்தி பார்க்கவே நினைக்கிற..” பெரு மூச்சு விட்டு தலையை கோதிக் கொண்டான்..

 

“ ஐஞ்சு வருஷம் நமக்குள்ள பெரிய கேப், அது என்னதுக்கு தெரியுமா? எக் காரணம் கொண்டும் ரெண்டு பேரோட படிப்பு வீணாகக் கூடாது என்ற காரணத்துக்கு தான், போலீஸ் டிரைனிங் காலேஜ் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கலாம் ஆனா உனக்கு சப்ரைஸ் ஆ.. இருக்கட்டும் எண்டு விட்டுட்டேன் அதுக்கு பிறகு ஆறு மாத டிரைனிங், போட்டி , படிப்பு எண்டு போச்சி மெடல் , பதவி , செர்டிபிக்கேட் இது மட்டுமா ? அக்கவுண்ட், இரண்டாம் மொழி தமிழ் அதுவும் உனக்காக உன்கூட கதைக்கிறதுக்காகவே கஷ்டப்பட்டு படிச்சேன் இப்ப இதோ உன் முன்னால தமிழ் பேசிட்டு இருக்கேன்..உன்ன மறக்கமுடியுமா ஜெனி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. இரவானதும் தூக்குறதுக்கு கட்டிலுக்கு போனாளே உன் ஞாபகம் தான் உன்னோட கதைச்ச வாய்ஸ் அன்ட் நாம எடுத்துகிட்ட போட்டோ அத பார்த்தே என்னையே தேத்துப்பேன் வேற வழி தெரியல உன்னோட கதைச்சா பிறகு நீ என்னை பத்தியே யோசிச்சிட்டு இருப்ப எண்டு தான் விலகி இருந்தேன் நான் நினைச்சு கூட பார்க்கல்ல இந்த டிஸ்டன்ஸ் என்மேல நீ கோபபடுற அளவுக்கு கொண்டு வரும் எண்டு..” நீளமாக அவளுக்கு புரியும்படி பேசி முடித்தான் சன்ஜீவ..

 

ஜெனனி சன்ஜீவனுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு இருந்தாள்..அப்படி இருக்கும் போது கண்ணாடி சுவர் வழியாக அவளின் அக்காவின் கணவன் தினேஷ் அவர்கள் இருக்கும் காஃபி ஷாப்பிற்கு நேரே வருவதைக் கண்டவளுக்கு ஒரு நிமிடம் ஸ்தமிக்க செய்திட…

 

அவசர அவசரமாக புடவை எடுத்து தலையில் முக்காடாக போட்டுக் கொண்டாள் அவள்..இதனை கவனித்த சன்ஜீவ் “ எதுக்கு இப்ப முக்காடு போட்டுக்குற” என்று புரியாமல் தான் கேட்டிருந்தான்..

 

“  நாங்க இருக்குற காஃபி ஷாப் பக்கம் அத்தான் வறார்..” என்றாள் பயத்துடன் அந்த பக்கம் பார்த்து அவனிடம் சொல்ல..

 

“அத்தான் எண்டா யாரு ? ” என்று கேட்டான்.. அவனுக்கு தமிழ் ஆட்களின் உறவு முறை தெரியாதே அதனால் அவளிடம் கேட்டு இருக்க..“ அக்கா புருஷன்” அவளிடம் இருந்து அவசரமாக பதில் வந்தது..“ அக்கா புருஷன் எனக்கு நீ சொல்றது விளங்குதில்ல” அவளை எட்டி எட்டிப் பார்த்து சொல்ல..

 

“எட்டி பார்க்காதீங்க பிறகு நான் தான் அத்தான் கிட்ட மாட்டிப்பேன்..அத்தானுக்கு உண்மை தெரிஞ்சிதோ மொத்த குடும்பமும் என்ன தான் கும்மி அடிக்கும் ” என்றாள் பீதியுடன்..

 

“சத்தியமா நீ சொல்றது எனக்கு விளங்கவே இல்ல புருஷன் எண்டா யாரு ?  ” மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாக கேட்டான் அவன்..

 

அவளோ பற்களை கடித்து ” தமிழ் படிச்ச எண்டு பெருசா பீத்துனீங்க தானே என்னத்த படிச்சி கிழிச்சீங்க” முகத்தை திருப்பி கேட்க..

 

தூரத்தில் தினேஷ் இவர்கள் அமர்ந்த மேசையை கண்டு நீல நிற புடவை அணிந்து இருந்த ஜெனனியின் முகம் ஆடவனின் முதுகால் மறைந்து விட ” ஜெனனியா இருக்குமோ? ” என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்க்க முயல சன்ஜீவனின் முதுகு புறம் அவனை பார்க்க விடாது தடுத்து இருந்தது..

 

“ஏய் இப்ப என்னத்துக்கு கோபபடுற நான் ஒண்டும் கேட்கல மா..ஆனா புருஷன்க்கு மட்டும் மீனிங் சொல்லு..” இரு கைகளை நாடியில் குற்றி அவளைப் பார்த்து கேட்க..

 

தினேஷ் இவர்கள் இருக்கும் திசையை பார்ப்பதை கண்டவள் ” அய்யோ அத்தான் என்னை பாத்துட்டார் ” கலங்கிய போய் சொல்ல.. இவளுக்கு தெரியுமா இவளை சரியாக தினேஷ் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று..” அத்தான்  வீட்டுல போய் சொல்ல போறார் எல்லாம் உங்களால தான் சன்ஜீவ” என்க..” நான் என்ன செஞ்சேன் எட்டு என்ன திட்டுற புருஷனுக்கு மீனிங் சொல்லு ” அவன் அங்கேயே நிற்க..

 

ஜெனனி கடுப்பாகி விட்டாள்..” புருஷன் எண்டா ஹஸ்பன்ட் அர்த்தம் போதுமா இல்ல இன்னும் விளக்கி சொல்லனுமா ? ” முறைப்புடன் கேட்க..

 

” நோ..இதுவே போதும் டவுட் க்ளியர் ஆச்சு..ஆமா நீ அப்பத என்ன சொன்ன? ” சன்ஜீவ காஃபியை குடித்துக் கொண்டு கேட்க..” திரும்ப தமிழ் பேசுங்க நானே பிடிச்சி ஜெயில்ல போட்டுருவேன் பார்த்துகோங்க” என்றிட..

 

தினேஷ் வீட்டிற்கு சென்று அக்காவிடம் சொல்லி விடுவானோ பயத்தில் இருக்க..இவனோ அவளை கோபத்துக்கு ஆளாகிக் கொண்டு இருந்தான்…

 

“ ஏய் ஜெனி கூல் மா..பயப்புடாத உன்ன உங்க அத்தான் கண்டு இருக்க மாட்டார்…” கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து கொண்டு இருந்தவளை அவனுக்கே பாவமாக இருந்தது..

 

இருவரின் காதலும் என்றொரு நாள் அவர்கள் வீட்டிற்கு தெரியத் தான் போகிறது.. பிரச்சினையும் கூடவே வரும் இவற்றையெல்லாம் தாண்டி அவளை கை பிடிப்பதே கடலை தாண்டி கால் பதிப்பது போலத்தான்…அதனை இருவரும் தாண்டி கரை சேர்ந்து கொள்வார்களா என்று பார்க்கலாம்?

 

“ என.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சன்ஜு வீட்டுல நாங்க லவ் பண்றது தெரிஞ்சா அவ்ளோ தான் நினைக்கிறேன்..என்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்கார் அப்பா அவருக்கு துரோகம் செய்றேனோ எண்டு என்ட மனம் உறுத்திட்டே இருக்கு இப்ப எனக்கு 26 வயசாக போகுது இன்னும் மூனு மாசத்துக்கு பிறகு வரன் பாக்க தொடங்கிட்டாங்க என்னால வேண்டாம் எண்டு சொல்லவும் முடியாது..அப்படி சொன்னாலும் ஏன் எண்ட காரணம் கேட்டா ? நான் என்ன சொல்லுவேன் அதுனால தான் வரன் தானே பாக்குறாங்க எண்டு விட்டுட்டேன் சன்ஜு இதுக்கு மேல நான் என்ன செய்றது எண்டு எனக்கு ஒண்டும் விளங்குதில்ல ரொம்ப பயமா இருக்கு சன்ஜு ” அவள் முகத்தில் பயமும், கண்களில் அதற்கான கவலையும் அவனுக்கு தெரிந்தது அதை விட அவள் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் பாசம் , அவன் அறிவானே அதிர்ந்து பேசாத தந்தை காதல் விடயத்தில் எந்த முகத்தை காட்வார் என்கிற அச்சமும் அவள் மனதில் தற்போது ஓடிக் கொண்டிருந்தது..

 

விழிகளில் இருந்து விழ காத்திருக்கும் கண்ணீர் துளிகள், உதட்டை பற்களை இடையே கடித்து வெளி வர இருக்கும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்..

 

அவனுக்கு அவள் கவலையின் ஆழம் புரிகிறது..காதல் மீது நம்பிக்கையும் அதை விட தன்னை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை அவன் மீது உள்ளது இருப்பினும் பிரிவு நேர்ந்து விடுமோ என்று தினம் தினம் இரவு உறங்கும் வேளையில் மனதிற்குள் புழுங்கி கொண்டு இருக்கிறாள் அவள்..

 

தன் அச்சத்தை , கவலையை கூறி தோள் சாய்ந்திட அவன் ஒருவன் தானே இருக்கிறான்..தலை குனிந்து இருந்தவள் அவனைப் பார்த்து “ உங்க கிட்ட மட்டும் தான் என் மனசுல என்ன இருக்கு என்றதை வெளிப்படையா சொல்ல முடியும் சன்ஜு ஆனா இப்ப ” ஆரம்பத்தில் சீராக பேசிக் கொண்டு இருந்தவளின் குரல் , நடுக்கோத்தோடு வெளிப்படுத்தியது..

 

அவளை மார்போடு அணைத்து தலை கோதி ஆறுதல் படுத்த வேண்டும் என்ற கைகள் இருக்கும் இடம் அவனை தடுத்திருந்தது..

 

இவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தவன் “ உன்ட ஸ்கூட்டி எங்க ஜெனி ”

 

கண்ணீரை சேலையால் துடைத்து கொண்டு “ சர்விஸ்க்கு போட சொல்லி அப்பாட்ட குடுத்துட்டேன் சன்ஜு ” என்றாள்.. இன்னும் குரலின் தடுமாற்றம் குறையவில்லை..

 

“ பஸ்ல தான் வந்தீயா? ” அவன் கேட்க..“ ம்ம்..” என்றாள்..“ சரி எழும்பு உன்ன நானே வீட்டுல கொண்டு போய் விடுறேன் ” என்றான் அவன்..

 

“ யாராவது பார்த்துட்டா, பயமா இருக்கு சன்ஜு ” விட்டால் காஃபி ஷாப்லயே வைத்து அழுதுவிடுவது போல் அவளின் குரலின் வெளிப்பாடு..

 

“ ப்ச்.. நான் இருக்கேன் பயப்புடாம வா ? ”

 

“ம்ம்ம்” சற்று அதட்டலாக சொல்லியே அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான் அவன்…

 

 

 

 

தொடரும்..

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்