அத்தியாயம் 16
அவளுக்கு நாவல பல்கலைக்கழகத்தில் விரிவுளையாளராக பணியாற்றுவதற்கு வேலை கிடைத்ததே சந்தோஷமாக இருந்தது அவளுக்கு… பல்கலைக்கழக பட்டம் கிடைப்பதற்கு நாட்கள் செல்வதால் தற்காலிகமான வேலை தான்..
அரசாங்க பரீட்சை எழுதிவிட்டால் அதுவே தொடர் வேலையாக அமைந்துவிடும்.. அவளுக்கு விரிவுரையாளர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைத்தால் போதும் என்கிற எண்ணமே அவளுக்குள் எழுந்தது…
வீட்டில் தாய் , தந்தையர்களுக்கு அவளுக்கு விரியாளராக பல்கலைகழகத்தில் பணியாற்ற போவதை நினைத்து அத்தனை மகிழ்வு..
அவளுக்கு அங்கு பணியாற்றுவதற்கு உதவி செய்தது என்னவோ அவளின் தமக்கை ஜெனுஷா தான்..
ஒருவாறாக முதல் நாள் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்றுவதற்காக அறையில் கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜெனனி..
மயில் நிற காட்டான் சேலையை அணிந்து, கூந்தலை பிண்ணல் இட்டு , நெற்றியில் வெள்ளை கல்லு வைத்த பொட்டை ஒட்டி இருந்தாள்.. முகத்திற்கு ஒப்பனை எதுவும் இல்லை.. புதிதாக புருவத்தை நேர்த்தியாக வெட்டப்பட்டு இருக்க.. கையில் கடிகாரம் அணிந்து இருந்தாள்.. முழுமையாக தயாராகி முடிந்ததும் கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்..
வசந்தா அவளுக்கு தேவையான காலை உணவை கட்டி ஒரு பையில் போட்டு கையில் கொடுத்தார்..“ தனியா ஸ்கூட்டில போக போற எண்டு சொல்ற.. இன்டைக்கு முதல் நாள் வேற அப்பாட்ட சொல்லி கொண்டு விட சொல்லவா ஜெனனி..” அவர் கேட்க..
” வேண்டாம் ம்மா நானே போய்க்குவேன் நீங்க அப்பாவ கரச்சல் குடுக்காதீங்க..” என்று சொன்னாள்..
“ சரி அப்ப கவனமா போயிட்டு ஜெனனி பின்னேரம்குள்ள வீட்டுக்கு வந்துடுவ தானே..” கூடத்தில் வந்து நின்றாள்..
“ பின்னேரதுக்குள்ள வீட்டுல நிற்பன் ம்மா..ப்பா எங்க..” பூஜை அறையை நோக்கி சென்று கடவுளை வணங்கிவிட்டு தாய் , தந்தையின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டாள் அவள்…
“ ஜெனனி மா நான் உன்ன கொண்டு போய் விடட்டுமா? ”
“ உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போய்க்குறேன் ப்பா..” என்றாள்..
இருவரிடமும் விடைபெற்று ஸ்கூட்டியில் சென்றிருந்தாள் ஜெனனி..
அவள் வீட்டில் இருந்து சரியாக ஒரு மணித்தியாலத்தில் யக்கலை எனும் ஊரை தாண்டியதும் எதிர்பாராத விதமாக போலீஸ் அவளை பிடித்திருந்தது…
ஸ்கூட்டியில் மிதமான வேகத்தில் வந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை எதுக்காக போலீஸிடம் பிடிபட்டோம் என்று உடனே அவளை ஸ்கூட்டியை விட்டு இறங்கச் சொல்லி பைக் லைசன்ஸ்சை காண்பிக்குமாறு கூறி இருந்தனர்..
அதனையும் கேட்டு பைக்கில் இருந்து எடுத்து அவர்களிடம் நீட்டியபோது ஒரு ஆண் கரம் அவள் கையில் இருந்து பறித்தெடுத்திருந்தது..
கையில் இருந்து பறித்ததை கண்டு சற்று திகைத்து போனவள் யாரென்று திரும்பிப் பார்த்த வேளையில் பெரிதாகவெல்லாம் அதிரவில்லை அவள்..
பெரிய பதவியில் இருப்பவன் எதற்காக டிராபிக் போலீஸ் வேலையை பார்க்க வேண்டும் என்கிற சந்தேகமே அவள் மனதினுள் எழுந்தது…
அவள் பார்வை அவன் மீது அத்தனை அழுத்தமாக இருந்தது..“ சந்தூன் ஒயா யன்ட மம பலா கன்னம் ( சந்தூன் நீங்க போங்க நான் பாத்துக்குறேன்) ” என்றான் இன்ஸ்பெக்டர் சந்தூனிடம்..
அவளின் அழுத்தமான பார்வை கூர்மையாக படிந்தது..
“ ஜெனனி மேடம் வேலைக்கு போகல்லாம் ஆரம்பிச்சிடீங்க போல ” அவளின் லைசன்ஸ் கார்ட் பார்த்தவாறு அவன் சொல்ல..“ என்னதுக்கு சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை..சிவனே எண்டு மிதமான வேகத்துல டிரைவ் பண்ணிட்டு இருந்த என்னை சம்மந்தமே இல்லாம பிடிச்சி வச்சி நேரத்தை வீணடிச்சி கதைச்சிட்டு இருக்கீங்க..” சீறினாள் அவள்..
“ மேடம்க்கு வீட்டுல வரன் பாக்குறதா கேள்விபட்டனே.. அதுவும் நீங்க சொல்லி தானாமே..” நிதானமாக அவளிடம் பேச்சு கொடுத்தான் அவன்..
“ இந்த கதையெல்லாம் இப்படி ரோட்ல தான் கதைக்கணுமோ? இன்னும் ஒண்டு சார் ஏன்ட தனிப்பட்ட விஷயத்துல தலையிடுறீங்களே நீங்க யாரு சார்..” கையை கட்டிக் கொண்டு வேண்டும் என்றே அவனிடம் கேட்டாள்..
அவனோ அவள் அருகில் நின்று கொண்டு இருக்க அவன் பற்கள் அரைப்படும் சத்தம் அவள் காதிலும் கேட்டது..
அவனின் கோபம் அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.. அவளிடம் ஒரு காலத்தில் ஆங்கில பாடநெறிக்கு சென்ற வேலையில் அவள் கோபமாக எதை சொன்னாலும் சாரி கேட்டு விடுவான் இல்லையெனில் அவளிடம் கெஞ்சி பேசுவான்…
அதுவும் இல்லையென்றால் மென்மையாகவே பேசுவான் இது தான் அவனின் குணம் என்று நினைத்து இருக்க.. இவனின் புது பரிமாணமத்தில் சற்று அவளை வித்தியாசமாக உணர செய்தது..
“ ஓஹோ! அப்ப நான் யாரோ தானே? அந்த அளவுக்கு நான் வேற்று ஆளா போயிட்டேனா இல்ல சலிச்சுடேனா? ” என்று அவன் கேட்டான்..
என்ன பேச்சு பேசுகிறான் இவன்..கோபம் வந்தாலும் அதனை பேசும் வார்தையில் விஷயத்தை தடவி பேசுவதா? எப்போது இப்படி மாறி போனான் .. எல்லாம் இவனின் பதவியின் காரணமாக இருக்குமோ? என்ற எண்ணம் அவள் மனதில் பல கேள்விகளாக எழ..
விழிகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள் இல்லையெனில் அவனிடம் கோபத்தில் சீறி விடமோ என்றே பயந்தாள் அவள்..
கைக்கடிகாரத்தை பார்த்தாள் பல்கலைகழகத்திற்கு செல்ல வேண்டும்.. இவனுடன் வாக்குவாதத்தில் நின்றாள் முதல் நாளிலே பல்கலைகழகத்துக்கு பொறுப்பாக இருக்கும் அதிபர் அவளை திட்டி தீர்ந்தாலும் நிச்சயம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள்..
ஒரு செக்கனில் அவன் கையில் இருந்த லைசன்ஸ்சை தன் கைக்கு எடுத்திருந்தாள்..“ ஏய்!!” அவன் குரல் உயரவும், அவனை அசாராது நோக்கியவள் “ எப்பவும் ஒரே மாதிரி இருங்க அதுதான் உங்களுக்கு நல்லது சன்ஜீவ சார் , நீங்க நீங்களாவே இருந்தா மத்தவங்க சூழ்நிலையும் விளங்கும்படியா இருக்கும்..” என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் ஏறி புறப்பட்டு இருந்தாள்..
அவனைத் தாண்டி சென்ற ஸ்கூட்டியை பார்த்தவனின் சிரிப்பு மின்னி மறைந்தது..
அவள் அவளாக தான் இருக்கிறாள் அவன்தான் அவனாக இல்லை என்பதையும் கூறிவிட்டு அல்லவா சென்றிருந்தாள் அதுமட்டுமா அவள் பக்க சூழ்நிலையை விளங்கி கொள்ளும் படி எடுத்துரைத்து விட்டு சென்றவளை நினைத்தே அவனின் மின்னல் சிரிப்பு..
ஜெனனிக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக மாணவர்களுக்கு கற்பிக்கவே அவளது அன்றைய நாள் நல்லதாக நடந்து கொண்டு இருக்கும் பட்சத்தில், அவளின் ஃபோனிற்கு ‘ டிங் ’ (vibrate) அதிர்வு சத்தத்துடன் அவளின் ஃபோனின் திரை மின்னிக் கொண்டு இருந்தது..
அதனை பார்க்காது மாணவர்களுக்கு கற்பிப்பித்து கொண்டு இருக்க..இங்கே ஒருவன் அவளின் பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டு கதிரையில் அமர்ந்து வாறு, காலை ஆட்டிக் கொண்டு ஃபோனையே பார்த்துக் கொண்டு இருந்தான்..“ மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணாம என்ன செய்றா இவ? ” ப்ளூ டிக்குடன் அவனுக்கான பதிலும் வந்து சேர்ந்தது..
அவனிடம் வந்த குறுஞ்செய்தி என்னவென்றால் “ உன் வேலை முடிஞ்சதும் மெசேஜ்ல சொல்லு உன்ன மீட் பண்ணி நான் கதைக்கணும் அதுக்கு காஃபி ஷாப் சரிதானே ? ” அவன் கேட்டு இருக்க..
அதற்கான பதில் அவளிடம் இருந்து வந்தது என்னவோ “ நாளைக்கு மீட் பண்ணலாம், நாவல யுனிவர்சிட்டிக்கு கொஞ்சம் தள்ளி இருக்குற காஃபி ஷாப்ல வைச்சி கதைப்பம் இன்னைக்கு வீட்டுக்கு போய் சேரவே நேரம் சரியா இருக்கு பாய் ” என்று கூறி அவனுக்கு அனுப்பி இருந்தாள்..
அவனும் “ லோகேஷன் அனுப்பிவிடு” என்று சொல்லிவிட்டு அவனின் வேலை பார்க்க சென்றான்…
அவன் சொன்னது போல் லோகேஷனை அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி இருந்தாள் ஜெனனி..
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1