Loading

அத்தியாயம் 12

 

 

 

 

“ ஏக மொகுத் நே அம்மே ( அது ஒண்டும் இல்ல ம்மா) ” என்றவன் சற்று திணறி தான் போனான்.. தாயிடம் காதலை மறைக்கிறோமோ என்ற குற்ற உணர்வும் தலை தூக்கிட ‘ இப்ப சொல்ல மாட்டன் எப்பவாவது சொல்ல வருமே அப்ப சொல்லிக்கலாம்..’ மனதில் நினைத்து அவசரமாக அவன் ஷர்ட்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் கீழே அவளின் புகைப்படத்தை ஒழித்து வைத்தான்…

 

“ கைல வச்சி இருந்ததை காட்டலையேடா ” அவனுக்கு தேநீரை நீட்டியபடி சொல்ல.. கையில் வாங்கிக் கொண்டவன் “ அது பெருசா எதுவும் இல்ல ம்மா..ஆமா கீழ எஸ்ஐக்கு பிளேன் டீ குடுத்தீங்களா..? ” தேநீரை குடித்துக் கொண்டே அவன் கேட்க..

 

“ குடுத்துட்டன் சன்ஜீவ அது இருக்கட்டும் நேத்து தான் வீட்டுக்கே வந்த நீ இன்டைக்கே வேலைக்கு போயிட்ட..” அவர் கேட்க..

 

“ இன்டைக்கு டியூட்டில ஜாயின் பண்ணிட்டன் இனி தான் வேலைய ஆரம்பிக்கனும்..ம்மா ஜெனனிக்கு படிப்பு இன்னும் முடியலையா என்ன ? ” தேநீரை முழுவதுமாக குடித்து முடித்து கோப்பையை அவரிடம் நீட்ட..

 

“ இந்த வருஷம் அவளுக்கு கடைசி எக்ஸாமாம் அதுக்கு முதல் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் எண்டு முடிவு பண்ணி இருக்கா , அவளுக்கு பிடிச்ச புகுல் தோசி செய்ய சொல்லி வசந்தா காலைல சாமான் எல்லாம் வாங்கி கொடுத்தா..? கொஞ்ச நாளைக்கு இருந்துட்டு கொழும்புக்கு போய்டுவா போல..” என்று அவர் அவளை பற்றி சொல்லிக் கொண்டே போக..

 

‘ அப்ப மேடம் இன்னைக்கு வராங்க ஹம்ஹம்… பார்த்துடலாம்..’ அவன் மனதில் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசை கூடியது…

 

“ சரி ம்மா ஸ்டேஷனுக்கு போகணும் நேரம் ஆயிட்டு இரவு தான் வருவன்..” அவரிடம் சொல்லிவிட்டு எஸ்ஐ அழைத்து கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றிருந்தான்..

 

ஸ்டேஷன் வந்தவன் போலீஸ் ஸ்டேஷனை கதிகலங்க வைத்திருக்கும் இரு ஜோடியை பார்த்தான்.. திருமணம் செய்து கொண்டு இருப்பார்கள் போலும் அவர்களில் பெண் அணிந்திருந்த வெள்ளை ஒசரி சாரியும் ஆண் அணிந்திருந்த கோட் சூட் வைத்து கணித்து விட்டான் அவன்..

 

அவர்களை கடந்து அவன் செல்ல எத்தனிக்க “ சார் ” கத்திக் கொண்டு அவன் பின்னே சென்றவர்களை இன்ஸ்பெக்டர் “ இது போலீஸ் ஸ்டேஷன் இப்படியா நடந்துபீங்க அமைதியா இருங்க பாக்கலாம்..உங்க பிரச்சினை எதுவோ அதை போஸ் ஏஎஸ்பி கிட்ட சொல்லுங்க போங்க..” இன்ஸ்பெக்டர் அவர்களை உதவியாளர் ஏஎஸ்பியிடம் விரட்டி அனுப்பினார்..

 

அவன் உடையை மாற்றிவிட்டு கதிரையில் அமர்ந்து பென்டிங்கில் இருந்த கேஸ்களை பார்த்து கொண்டு இருக்கும் போது வெளியே கூச்சல் சத்ததில் அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ண “ சந்தூன் ” உரத்த குரலில் அவன் அழைக்க..

 

உள்ளே வந்தவன் “ சொல்லுங்க சார் ?”

 

“வெளிய என்ன சத்தம் ஹாங்..?”

 

“கல்யாணம் பண்ணிட்டு வந்த ஜோடியோட குடும்பம் வந்து சத்தம் போட்டுட்டு இருக்காங்க சார் ” 

 

“அதுக்கு இப்படியா சத்தம் போட்டு கத்துறது..?”

 

“சத்தம் போட்டு கத்துறது பெட்டையோட அப்பா தான் சார்.. அவருக்கு அவமானமாம் குடும்ப கெளரவம் போயிட்டதா கத்துறார் அதுமட்டும் இல்ல ரோட்டுல பெட்டைய எங்கையாவது கண்டா வெட்டி போட்டுருவார் எண்டு உறுதியா சொல்றார் சார்..மக மேல அவ்ளோ ஆத்திரம் அவர் கண்ணுலயே தெரியுது..” சந்தூன் சொல்ல..

 

“ அவரோட மகளை வெட்டி போடுற அளவுக்கு சொல்றாரு எண்டா என்ன பிழை தான் பண்ணாங்களாம் அதை சொல்லுங்க..”

 

“ அதை ஏன் கேக்குறீங்க சார் அந்த பெட்ட சிங்களம் ஆ.. பொடியன் தமிழ் ரெண்டு பேரும் விரும்பி கல்யாணம் பண்ணி இருக்காங்க அதுவும் ரெண்டு வீட்டுக்கும் தெரியாம.. ஏஎஸ்பி சார் அவங்க வீட்டுக்கு கால் பண்ணி வர வச்சி சார் விசாரிசிட்டு இருக்கார்..”

 

“ ஓஹோ..இது தானா அவங்க விரும்பி தானே கல்யாணம் கட்டி இருக்காங்க..ஜோடிய அவங்க குடும்பம் ஏத்துக்காம சும்மா வெட்டுவேன் கொத்துவேன் கொல்லுவேன் எண்டு பாடிகிட்டு..” சன்ஜீவ எரிச்சலுடன் சொல்ல..

 

அவனையே பார்த்த சந்தூன் “ ஏன் சார் யாரையாவது நீங்க விரும்புறீங்களா என்ன ? ” அவனை குறு குறுவென பார்த்துக் கொண்டே கேட்டான்..

 

“ நானா சான்ஸ் ஏ..இல்ல சந்தூன் இப்ப தானே இருபத்திஏழு ஆகுது ஒரு முப்பது ஆகட்டும் கல்யாணம் கட்டிக்கலாம்..” கோப்புகளில் பார்வை பதித்து அவன் சொல்ல..

 

“ அப்படியா சார் ஆனா நான் நினைக்கிறேன்  நீங்க லவ் மேரேஜ் தான் பண்ணிபீங்க வேண்டும் எண்டா பாருங்க நான் சொன்னது நடக்கும்..” விரைப்பாக நின்று சந்தூன் அப்படி சொன்னதுமே அவனுக்கு புரையேறி இரும ஆரம்பித்தான்..

 

“ சார் சார் என்ன ஆச்சி ” அவசரமாக கிளாஸில் வைத்திருந்த நீரை அவனுக்கு குடிக்க நீட்ட, வாங்கி மட மடவென குடித்தவன் சற்று ஆசுவாசம் அடைந்தான்..

 

“ ஹ்ர்ம்..எஸ்ஐ நான் ஒண்டு சொல்றேன் நானும் இதே போல போலீஸ் ஸ்டேஷன்ல நிப்பேன் நீங்க தான் பிரச்சினை தீர்த்து வைக்கணும் ஓகே வா..” இதழுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்ல..

 

“ சார்…” மலங்க மலங்க விழிக்க..

 

“ அட பயப்புடாதீங்க எஸ்ஐ அந்த மாதிரிலாம் நடக்காது நீங்க போய் அவங்க பிரச்சினை என்ன எண்டு பாருங்க..” கோப்பில் கண்களை பதித்தான்.. இன்ஸ்பெக்டர் தோளை குலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்…

 

ஒரு கோப்பை கையில் எடுத்து பார்த்தவனுக்கு அந்த கேஸ்சை எடுத்து செய்ய முடிவு செய்தான்..அதற்கு காரணமானவனை பிடித்தால் போதைப்பொருள் விற்பனை செய்பவனை பிடிக்கலாம் அவனிடம் பல விஷயங்களை கறந்து கொள்ளலாம்…

 

நினைத்தவனால் வெளியே திடீர் என்று பெண்ணின் கூச்சல் சத்ததில் பச்சை  நரம்புகள் கரத்தில் தெறித்து விடும் அளவுக்கு கை முஷ்கி இறுக…சினத்தில் மேசையில் ஓங்கி அடித்தான்..

 

அந்த சத்ததில் பதறி அடித்து கொண்டு ஓடி வந்த இன்ஸ்பெக்டர் அவனின் கோபத்தை கண்டு எச்சில் விழுங்க நின்றுவிட்டார்…

 

‘ இன்டைக்கு ஒரு குண்டு வெடிக்க போவது உறுதி..’ அவர் நினைக்க..

 

கதிரையை விட்டு எழுந்து விறு விறுவென வெளியே சென்றிருந்தான்..“ என்ன நடக்குது இங்க ஹான்..இது போலீஸ் ஸ்டேஷனா இல்ல மீன் மார்க்கெட்டா ” உரத்த குரலில் சன்ஜீவ கத்த..

 

அழுதுகொண்டு இருந்த பெண்ணை பார்த்ததும் புரிந்து போனது.. அவளின் கன்னத்தில் இருந்த ஐவிரல் தடம்..

 

அவன் தந்தை பக்கம் திரும்பியவன் பளார் என்று ஒரு அறை விட்டு இருந்தான்..

 

போலீஸ் அடி பலம் அவரை பொறி கலங்க வைத்திருக்க.. அச்சத்துடன் அவனை பார்த்தார் அவர்..

 

“ உனக்கு புத்தி கெட்டு போச்சா ஹான் அவங்க தான் விரும்பி கல்யாணம் கட்டிகிட்டாங்கள்ல அப்படியே உன் மக விருப்பதுக்கே விடாம இங்க வந்து ஆடு போல வெட்ட போறேன் எண்டு சொல்ற..அறிவில்ல அவங்க விரும்பிடாங்க அது போல சந்தோஷமா வாழட்டுமே எதுக்காக உன் மகளை கொல்லணும் நரகத்துல போய் நல்ல விதமா வாழ ஆசையோ அதுக்காகத்தான் மகளை கொல்ல விருப்பபடுற சரி என் கண்ணு முன்னாடி உன் மகளை கொன்னுடு பார்க்கலாம் அடுத்த நிமிஷம் நானே நரகத்தை காட்டுவேன்…” விழிகள் தீ புழம்பாக சிவக்க விரல் நீட்டி சீறியவனை அவருக்கே பயம் பிடித்துக் கொண்டது..அவன் சொன்னாலும் செய்திடுவான் என்று நினைத்த பெண்ணின் தகப்பன் தனக்கு பெண்ணே பிறக்கவில்லை என்று தலை மூழ்கி விட்டு அவரின் மனைவியை கையோடு அழைத்து ஸ்டேஷனை விட்டு வெளியேறி இருந்தார் அவர்…

 

“ அதான் அவர் போயிட்டார்ல நீங்க எல்லாரும் போங்க..” அவனுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு பையனின் வீட்டு ஆட்கள் பெண்ணை அழைத்து கொண்டு சென்று விட்டனர்..

 

“ எஎஸ்பி இந்த மாதிரி கேஸ் வந்தா பாரம் எடுக்காதீங்க சரியான எரிச்சலா இருக்கு…” சன்ஜீவ பின்னந்தலையை அழுத்தமாக கோதி சொல்ல..“ சார் எப்படி பார்த்தாலும் பாஞ்சி போர கேஸ் எல்லாம் கல்யாணம் கட்டிட்டு ஸ்ட்ரைட்டா போலீஸ் ஸ்டேஷன் வந்து நிக்றாங்க நாங்க என்ன தான் செய்யமுடியும் சார் சொல்லுங்க..” எஎஸ்பி சொல்ல..

 

“ இந்த மாதிரி கேஸ்கள் வந்தா நீங்களே பாருங்க ஆனா ஒண்டு என் ரூமுக்கு சத்தம் வர கூடாது அவ்ளோ தான் சொல்லிட்டன்..” அவருக்கு எச்சரித்து உள்ளே சென்றிட..

 

“ இவருக்கு ஏன் சந்தூன் இவ்ளோ கோபம்..” போகும் அவன் புற முதுகை வெறித்த பார்வையுடன் அவர் கேட்க..

 

“ தெரியலையே சார்..” இன்ஸ்பெக்டர் தலையை இருபுறமும் ஆட்டி சொன்னார்..

 

கதிரையில் வந்து அமர்ந்தவன் ஃபோனிற்கு தொடர்ந்து பல குறுஞ்செய்திகள் வந்து குவிந்தது..

 

யார் என்று ஃபோனை எடுத்து பார்த்தான் அவன் ஜெனி வரிசையாக அவனை திட்டி குறுஞ் செய்தியை அனுப்பி கொண்டு இருந்தாள்..

 

“ மூனு வருஷமா ஒரு கால் , மெசேஜ் கூட இல்ல நீங்க எல்லாம் எப்படி தான் லவ் பண்றேன்னு சொல்லிட்டு திரிவீங்களோ ச்சே..”

 

“ இதுக்கு லவ் பண்ணலாமே இருந்து இருக்கலாம்..இதுல திருட்டு லவ் வேற எப்பையாவது வீட்டுக்கு தெரிய தானே போகுது.. எனக்கு இப்பவே 26 ஆறு ஆகிட்டு இனி வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க.. எங்களுக்கு கல்யாணம் நடக்குமா இல்ல கருமாதி நடக்குமா எண்டு தெரியல ” அவள் பாட்டிற்கு புலம்பி கொண்டு இருக்க..

 

அடுத்ததாக “ யுனிவர்சிட்டில தமிழ் பொடியன் எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணான் தெரியுமா பச்.. நான் வேணாம் எண்டு சொல்ல நினைச்சேன் பிறகு அவனை பார்க்க நல்ல பொடியனா தெரிஞ்சதும் ப்ரொபோஸல அக்செப்ட் பண்ணிட்டன்..” வேக வேகமாக குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருந்தாள்..

 

வேனின் முன் சீட்டில் அமர்ந்து இருந்த ஜெனுஷா “ ஜெனனி யாருக்கு இந்த மாதிரி மெசேஜ் பண்ணிட்டு இருக்க..முகம் வேற கடுகு வெடிக்குறாப் போல இருக்கு..” எட்டிப் பார்த்து சொல்ல..

 

“ அவளோட லவ்வரா இருக்கும் ஜெனு” சிரிப்புடன் அவளின் கணவன் சொல்ல..

 

“ அத்தான் அப்படிலாம் எதுவும் இல்ல..நீ அத்தான் பேச்ச நம்பாத அக்கா..” குறுஞ்செய்தி அனுப்ப.. பக்கத்தில் இருந்த ஜெனுஷாவின் இரு மகள்களும் ஃபோனில் விளையாடி கொண்டு இருந்தார்கள்…

 

சன்ஜீவ அவளின் குறுஞ்செய்தியை பார்த்து உண்மையாக இருக்குமோ என்று எண்ணியவன் “ என்ன தைரியம் இருக்கணும் இவளை ” ஆத்திரத்துடன் அவள் எண்ணிற்கு அழைப்பு விடுக்க..

 

வேனில் அமர்ந்திருந்தவளுக்கு அவனின் திடீர் அழைப்பு பகிர் என்றாகி போனது.. அவசரமாக அழைப்பை துண்டித்து ஃபோனை சைலண்ட் மொட்டில் போட்டுவிட்டாள்..

 

பத்து அழைப்பு அழைத்திருந்தான் அவளுக்கு.. அவளால் அவனோடு பேசி இருக்க முடியும்.. ஆனால் அவளின் அத்தான் தினேஷ் கூறியது போல் உண்மை என்று நினைத்து விடுவார்களே அந்த பயத்தில் அழைப்பை ஏற்க மறுத்ததோடு அவனை உசுப்பேத்தி விட்ட குஷியில் ஃபோனில் பாடலை கேட்க ஆரம்பித்தாள்…

 

இவன் யாரோ இவன்

யாரோ வந்தது எதற்காக

சிாிக்கின்றான் ரசிக்கின்றான்

எனக்கே எனக்காக …..

 

மின்னலே படத்தில் வரும் பாடல்களை அவள் ரசித்து கேட்டுக் கொண்டு இருக்க..சன்ஜீவ அவளின் பெயரை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க அவன் உதட்டில் புன்னகை முகிழ்த்தது…

 

 

 

 

தொடரும்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்