அத்தியாயம் 11
மைதானத்தில் எல்லோரும் குழுமி நின்றனர்..பலத்த கைத்தட்டலும் விசில்களும் என மைதானமே ஆர்ப்பாட்டமாக இருந்தது…
இவர்களின் பல்கலைகழகத்திற்கும் இன்னொரு பல்கலைகழகத்திற்கும் நடக்கவிருக்கும் குத்து சண்டை போட்டி , போட்டியாளர்கள் யாரெனில் சன்ஜீவ மற்றும் சசங்க ஆமாம் சசங்க சன்ஜீவனின் வீட்டின் அடுத்த தெருவில் வசிப்பவன் அவன் மீது அவ்வளோ வன்மத்தை வைத்திருப்பனும் அவனே…
சன்ஜீவனை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது அவன் எதை செய்தாலும் அவனின் தந்தையிடம் குற்றம் சொல்லி மாட்டுவதே இவனின் வேலையாக தான் இருக்கும்..
தற்போது இருவருக்குமான போட்டி நடக்க சிறிது நேரத்தில் ஆரம்பிக்க போவதாக ஒலிபெருக்கியில் அறிவித்தனர்…
இருவரும் அவர்கள் விளையாடும் வலையத்திற்குள் வந்து நின்று கொண்டனர்…சசங்க விழிகளில் சன்ஜீவனை அடித்து வீழ்த்தும் வெறி அவன் கண்களில் தெரிந்தது..
சன்ஜீவனோ அவனை அலட்சியமாக நோக்கியவன் அவனின் முறுக்கேறிய தசை கோளங்களை அசைத்தவாறு விளையாடும் அவனின் இடத்திற்கு வந்து நிற்க..
மணி அடித்ததும் போட்டி ஆரம்பிக்கப்பட்டது… இருவரும் ஒருவரை ஒருவர் கைகளை குத்துவது போல் அடித்து மோதிக் கொண்டனர்..
எதிர் எதிரே இருக்கும் இருவரும் மோதிக் கொள்ள..“ சன்ஜீவ ” என்ற குரல்களும் “ சசங்க ” என்ற குரல்களும் அவர்கள் விளையாட உற்சாகமலித்து கொண்டு இருந்தனர் அவர்களின் நண்பர்கள்…
இருவரும் பலமாக மோதிக்கோள்ள கடைசியில் சன்ஜீவன் அடித்த வேகத்தில் பொத்தென்று கீழே விழுந்தான் சசங்க..அடி பலமாக பட்டதோடு ஒரு பக்க கன்னமும் அவனுக்கு வீங்கி போனது…
போட்டி முடிவின் படி சன்ஜீவ வெற்றி பெற்றுள்ளான் என்று ஒலிபெருக்கியில் அறிவித்ததும் எல்லோரும் “ ஹோ..ஜயவேவா சன்ஜீவ ” அவன் நண்பர்கள் கூட்டத்தினர் கத்திக் கொண்டு இருக்க..தங்க பதக்கமும், பெரிய கப் ஒன்றினையும் பரிசாக பல்கலைகழகத்தின் அதிகாரி ஒருவர் கொடுத்து வாழ்த்தையும் தெரிவித்தார்..
தன் வெற்றியை பகிர்ந்து கொள்ள நினைத்தான் தன் காதலியிடம்..உடனே நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்ததும் உடனே “ வாழ்த்துக்கள் சன்ஜு ” பதில் வந்ததும் மகிழ்தான் அவன்..
அதன் பின்னர் சன்ஜீவ வென்றதுக்காக சிறு பார்ட்டியும் வைத்திட அன்றைய முழு நாளும் அவன் சந்தோஷமாக இருந்தான்..
ஜெனனி, சன்ஜீவ இருவருக்கும் பேசவோ குறுஞ்செய்தி அனுப்பவோ நேரம் கிடைக்காமல் போகவே முழு நேர படிப்பினிலே மூழ்கிப் போயினர்…
கண்களை மூடித் திறக்கையில் வருடங்களும் கழிந்து போகவே!
மூன்று வருடம் கழித்து…
போலீஸ் ஸ்டேஷன் எப்போதும் போல் அமைதியாக இருக்கும் ஆனால் இன்றோ பரபரப்பாகவே இருந்தது…அங்கு பணிபுரியும் மற்றைய அதிகாரிகள் கிசு கிசுப்பாக அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டு இருந்தார்கள்…
“ எங்க ஸ்டேஷனுக்கு புது எஸ்பி வர இருக்குராறாமே அதான் இந்த பரபரப்பு..” ஒருவர் கூற..
“ நேத்து தான் தலைமை இடத்துல பதவி ஏற்று இன்டைக்கு டியூட்டில வந்து சேர போறாராம்..”
“ எஸ்பி நீங்க பார்த்ததில்லையா சார் சாதுவா இருப்பாரு , கண்டிப்பானவர் எல்லாம் கிடையாதாமே ரொம்ப நல்லவர் எண்டு சொல்றாங்க ”
“ அத விடுங்க சார் உங்களுக்கு தெரியுமா அவர் இந்த பதிவு கிடைக்க காரணமே அவரோட உழைப்பால தான்..ஏன் எண்டா இதுக்கு முதல் அவர் வேலை செய்ஞ்சதே அவர் பிறந்த ஊர்லையாம்..அதாவது இப்போலாம் தூள் , கன்ஜா தானே எங்க நாட்டுல அதிகமா இருக்கு, அவனுங்கள்ல எத்தனையோ பேரை பிடிச்சி என்கோய்ரி பண்ணி 54 அடிச்சதா சொல்றாங்க ஆனா அவங்க எல்லாம் உயிரோட இல்லையாம் சூட் பண்ணிட்டதா கேள்விபட்டேன்…பிறகு குற்றவாளிங்களோட குடும்பம் எவ்ளோ அவருக்கு லஞ்சமா கொடுத்தும் அவர் அதை கைல எடுக்கவே இல்ல.. கவர்மெண்ட் ரூல்ஸ் சரியா பின்பற்றுறது அவரா தான் இருக்கும்..” எஸ்பியின் பெருமைகளை பற்றி அவர் கூறி கொண்டு இருக்கும் போது ஸ்டேஷன் வளாகத்தில் போலீஸ் ஜீப் வந்து நின்றதும் அவர்களின் பேச்சு நின்று அமைதியாகி விட்டனர்…
ஜீப்பில் இருந்த முதலில் அவன் காலின் ஷூ தான் தென்பட்டது..கருப்பு நிற பளபளவென மின்னிக் கொண்டு இருக்க தன் தொழிலின் மீது எவ்வளவு பக்தி இருக்கின்றது என்று தெரிந்தது..
ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கியவன், இலங்கையின் போலீஸ் அதிகாரிக்கு உரிய கம்பீரமும் கர்வமும் அவனின் உடையினால் ஏனையோரை மதிக்ககூடிய அளவிற்கு அவனின் தோற்றம் முழுவதுமாக மாறி இருந்தது..
பழுப்பு நிற காக்கி சீருடை அணிந்தவன் இமைகளை மேல் உயர்த்தி பார்த்தவனுக்கு மூன்று வருட உழைப்பிற்கு தகுந்த பதவி அதில் தான் நடந்து கொண்டு விதம் , குற்றவாளிகளை கைது செய்த முதல் மனக்கணக்கில் தோன்றிட…
ஏதோ பெரிதாக சாதித்தது போல் அவன் உணர அதற்கான கர்வ புன்னகையும் அவன் உதட்டில் கீற்றாக மலர்ந்ததும், அவனின் முகம் இறுக்கத்தை சூழ்ந்து கொண்டது…
ஸ்டேஷன் உள்ளே சென்றவனுக்கு அவனுக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் வாழ்த்துக்கள் கூறியதும் சிறு தலை அசைப்பினிலே பெற்றுக் கொண்டவன் அவனின் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்ததும் தலையில் அணிந்திருந்த தொப்பியை கழட்டி ஓரமாக வைத்தவன்..
மனதார வேண்டி இன்றைய நாளிலே பணிய ஆரம்பித்திட நினைத்தான் அவன்…“ எஸ்ஐ ” இன்ஸ்பெக்டரை அவன் உள்ளிருந்து அழைக்க..
வெளியே இருந்தவன விரைவாக ஓடி சென்றான்..“ யெஸ் சார்..” அவன் முன்பு சலியூட் அடித்து நின்றான் இன்ஸ்பெக்டர்.. அவன் வயதானவர் எல்லாம் இல்லை இளம் வயதுதான் அவனை விட சிறியவனாக இருக்க , இருபத்திஆறு வயதாக கூட இருக்கலாம்…
“ பென்டிங் வொர்க்ஸ் இருந்தா அதோட ஃபைல்ஸ் எல்லாம் கொண்டு வந்து என் டேபிள்ல வச்சிடுங்க டிஐஜி போய் பார்த்துட்டு வாறன்..” சிங்களத்தில் அவரிடம் கூறிவிட்டு கதிரையை விட்டு எழுந்தவன் தொப்பியை தலையில் அணிந்து கொண்டு அவரை சந்திக்க சென்றான்..
அவன் அமர்ந்திருந்த மேசையில் செவ்வக வடிவ பலகையில் சன்ஜீவ குமாராசிங்க திசாநாயக்க கருப்பு நிற எழுத்துக்களால் அவனின் பெயர் பொறிக்கப்பட்ட இருந்தது ஆறு மாத பயிற்சியில் அவனின் ஊரிலே அவனுக்கு போஸ்டிங் கிடைத்து இருக்க , மூன்று வருட காலம் அங்கு பணியாற்றிவிட்டு அவனின் ஜெனனியின் ஊரிற்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து இதோ அவனின் முதல் பணியையும் ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டான்..
நேரே டிஐஜியை பார்த்தவன் அவருக்கு சலியுட் அடித்து நிற்க..“ சிட் சன்ஜீவ ” கதிரையில் அமர்ந்து கொண்டான்…
“ வந்த முதல்னால்லயே உங்க ஆஃபிஸ்ல வேலையை ஆரம்பிக்க முடிவு பண்ணிடீங்க போல..” புன்னகையுடன் அவர் கேட்க..
“ பின்ன என்ன சார் , ஊர்ல இருக்குற குப்பைகளை அள்ள வேண்டாமா..? ஆனா இதுக்கு முதல் இருந்த ஆஃபிஸ் சார்ஸ் என்ன பண்ணாங்களோ எனக்கு தெரியாது பட் நான் இங்க எங்க ஊர்ல இருந்து மாற்றல் ஆகி வந்து இருக்கேன்..வேலையில எந்த தவறோ திருட்டு தனம் இருக்க கூடாது… தொழில்ல நேர்மையா எங்களுக்கு கிடைச்சு இருக்குற பதவிக்கு உண்மையா இருக்கணுமே சார்..” அவனின் நேர்மையான பேச்சு அந்த காவல் துறை அதிகாரிக்கும் அவனை பிடித்துவிட்டது..
“ உங்க வேலையை நல்ல முறைல செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மிஸ்டர் சன்ஜீவ சோ இப்போதைக்கு போதைப்பொருள் தான் எங்க மாவட்டத்துல முதல் பிரச்சினை.. அதிகமான ஆட்கள் போதைப்பொருள் பாவிக்கிறதா இருக்கட்டும் டிரக்ஸ் விக்கிறவங்களா இருக்கட்டும் இவங்களை தான் முதல்ல பிடிக்கணும்..பல பேர் குடும்பமே இந்த டிரக்ஸ் யூஸ் ஆல தான் பாதிக்க பட்டு இருக்காறாங்க..” அவர் பேச்சினை மேலும் தொடர்ந்தார்..
“ இதுக்கு முதல் இருந்த அதிகாரிகள் அவங்களை பிடிச்சாலும் காசு கொடுத்த உடனே விட்டுருவாங்க இப்படி தான் நடந்துட்டு இருக்கு.. கவர்மெண்ட் ஆர்டரா சொல்லி இருக்காங்க எல்லாரையும் பிடிக்க சொல்லி..நீங்க இந்த வேலையை சரியா செய்வீங்க எண்டு இதுக்கு முதல் வேலை செஞ்ச ஸ்டேஷன்ல இருக்குற பெரிய அதிகாரி உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காங்க உங்கள பத்தி சொல்லும் போது எனக்கு பிரமிப்பு இருக்கு மிஸ்டர் சன்ஜீவ..” என்றவர் எழுந்து அவனுக்கு கை குலுக்கி விட்டு சலியூட் அடிக்க.. “ கண்டிப்பா சார் ” சலியூட் அடித்து அவரிடம் விடைபெற்று அவன் அறைக்கு சென்றான்…
“ எஸ்ஜ ” மீண்டும் அவனை அழைக்க..ஓடி வந்து அவன் முன்பு நின்று “ எங்க ஊரை பார்த்துட்டு வரலாம் சோ உங்க டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க..” என்று அவன் சொல்ல..
“ ஓகே சார்..” அவன் சென்றதும் அவனுக்கு என்று இருந்த அறையில் காக்கி சட்டையை கழட்டி வைத்துவிட்டு வெள்ளை நிற ஷர்ட் ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டவன் முகம் பார்க்கும் கண்ணாடியில் தலையை சீவி கொண்டான்..
வெளியே வந்து அவனுக்கு என்று கவர்மெண்ட் கொடுத்த இருசக்கர வாகனத்தில் ஏறி உயர்பித்ததும் “ ஏறுங்க எஸ்ஐ ” அவரும் ஏறியதன் பிறகு ஸ்டேஷனில் இருந்து பைக் கிளம்பி பிரதான சாலையில் புறப்பட்டது…
ஜெனனியின் வீட்டில் வசந்தாவின் ஃபோனிற்கு அழைப்பு வந்தது…ஜெனனி தான் அழைத்திருந்தாள்…
“ ஜெனனி..”
“ ம்மா எப்படி இருக்கீங்க..”
“ சுகமா இருக்கன் ஜெனனி உன்ட யுனிவர்சிட்டி படிப்பு முடிஞ்சிதா? ” அவர் கேட்க…
“ இந்த வருஷம் இடைல முடிஞ்சிரும் ம்மா இன்டைக்கு பின்னேரம் எல்லாரும் வீட்டுக்கு வருவம் ம்மா..ஏன்னா யுனிவர்சிட்டில லாஸ்ட் செமஸ்டர் வருதுல அதுக்கு முதல்ல லீவு தந்துட்டாங்க கொஞ்ச நாள் தான்.. அத்தான் கிட்ட சொன்னேன் அங்க கொண்டு வந்து விடுறதா சொல்லி இருக்கார்..” என்றாள்…
“ சரி ஜெனனி இங்க வந்தா இரவைக்கு தானே போவாங்க..”
“ ஆமா ம்மா..இரவு சாப்பாடு செய்ய போறீங்களா? ”
“ இடியாப்பம் செய்யலாம் எண்டு இருக்கன் இரவு சாப்பாடு கொடுத்து அனுப்பிடலாம்..”
“ சரி ம்மா அப்பாட்ட சொல்லுங்க நான் அப்ப வைக்கிறேன்..”
“ சரி ஜெனனி ” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது..
ஊரை கண்காணிப்பதற்காக எஸ்ஐ உடன் வந்தான் சன்ஜீவ அவன் இருக்கும் ஏரியாவில் பைக்கில் செல்லும் போதே அவன் அணிந்து இருந்த கருப்பு கூலர்ஸ் வழியாக அவன் பார்வை கழுகு போல் பார்வையிட எதையும் காட்டிக்கொள்ளவில்லை…
ஒரு சில பேரை மனதில் படம் பிடித்து கொண்டவன் அவர்களை பிடிக்க தக்க சமயத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தான்… அதன் படி அவனின் பைக் அவன் வீட்டின் முன்பு வந்து நின்றதும் இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்…
“ எஸ்ஐ நீங்க உக்கார்ந்து இருங்க நான் ரூம்க்கு போயிட்டு வாறன் ” அவன் சிறு தலை அசைவை கொடுத்தும் ஹாலை தாண்டி சென்று படியில் கால் வைக்கும் முன் “ அம்மே கஹட்ட தேகக் ( ம்மா பிளேன் டீ ரெண்டு) ” சொல்லிவிட்டு மாடிப்படியில் ஏறி அவன் அறைக்கு வந்து இருந்தான்…
கட்டில் மேல் வைத்த டிராவல் பையை காணாமல் போக அலுமாரியை திறந்தவன் முன்பு நெஞ்சில் மோதி கீழே கவிழ்ந்து விழுந்தது புகைப்படம் ஒன்று.. என்னவென்று குனிந்து எடுத்து நிமிர்ந்து, அதனை திருப்பி பார்த்தவனுக்கு அது ஜெனனியின் சாமத்திய புகைப்படம் அதுவும் அவன் திருடி எடுத்தது அல்லவா..
மெருன் சிவப்பு, மஞ்சள் கலந்த பட்டு புடவை அணிந்து , ஆபரணங்களை அணிந்து திருமண கோலத்தில் இருக்கும் மணப்பெண் போல் அவள் நின்றிருந்தாள்…
அவளின் புகைப்படத்தை பார்த்தவனுக்கு நான்கு வருடம் அவளை பார்க்காதையும் நினைவையும் கொடுக்க..அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் அலைக்கழிக்க செய்திட..
ஆழ்ந்த பெரு மூச்சினை வெளிவிட்டான் அவன்.. அவளிடம் பேசாமல் விலகி இருக்க காரணம் அவளின் படிப்பு தன்னால் கெட்டுவிட கூடாது என்றதற்காக மட்டுமே..
“ ஜெனி…” அவள் பெயரை அவன் உச்சரிக்க..
“ கைல வச்சி இருக்குற போட்டோவுல யாரு சன்ஜீவ ” என்று ருவணி கேட்க..திகைத்து போய் நின்றான் அவனின் தாய் அறைக்கு வருவார் என்று அவனே எதிர் பார்க்கவில்லை…
இருவரும் ஒருவரை ஒருவர் கூடி விரைவில் சந்திப்பார்கள்…
தொடரும்…