இறுதி பாகம் 7
என்னைக்கா!…. இப்படி சொல்கிறாய்?….
ஆமாம் ,குணா அவளை பற்றி நானே விசாரித்தேன்….
ராகிணி உன்னை வேண்டாம் சொன்னது ரொம்ப நல்லது தான்….. நீ கவலைப்படாதே?…. உனக்கு அவளை விட ஒரு நல்ல பெண் கிடைப்பாள்… உன்னை நல்லா புரிந்து கொள்ளக் கூடிய பெண்…
இல்லைக்கா?.. எனக்கு அப்படி ஒரு பெண் கிடைப்பாளா, என்பது சந்தேகம் தான்…
இல்லை… டா,,, உன்னை புரிஞ்சிக்கிட்ட பெண், தான்…. உனக்கு ஷீலா நினைவில் இருக்கிறதா?…. ம்ம்ம்…. நல்லா ஞாபகம் இருக்கு, அவள் நல்லா படிப்பாள்… பசங்க யாருக்கிட்டேயும் பேச மாட்டாள்…. ரொம்ப அமைதியான பொண்ணுக்கா?…. ஏன்? அவளை பத்திகேட்கிறாய்?… என்று கேட்டான் குணா… அதுவா அந்த ஷீலாவை எனக்கு நல்லா தெரியும்…
ஓ ,அப்படியா …..
என்னடா, அப்படியா என்று கேட்கிறாய்?
அந்த ஷீலாவைப் பற்றி ஒரு விஷயம் கேள்விபட்டேன்…. அந்த ஷீலா ஒரு பையனை காதலிச்சிருக்கு,
அந்த பொண்ண பார்த்தால் அப்படி தெரியலையே!..
டேய்!… அப்படி சொல்லாத அந்த ஷீலாவே என்கிட்ட சொன்னாள்… அந்த பையன் பெயரைக் கேட்டதும் எனக்கே அதிர்ச்சி ஆயிற்று….
அப்படியா,…. யாருக்கா அந்த அதிர்ஷடசாலி….
வேற யாரு நீதான்…. டா அந்த ஷீலா உன்னை தான் காதலித்தாள்…
என்ன? சொல்கிறாய்?…. அக்கா….. எப்போது…
நீ பள்ளியில் படிக்கும் போது ஷீலா உன்னை காதலித்தால், அவள் காதலை உன்னிடம் சொல்ல வரும் போது நீ ராகிணிக்கிட்ட சொல்லிக் கொண்டு இருந்தாய் உன்காதலை அவளிடம், ஆனால் நீ ராகிணியை விரும்பியது தெரிந்ததும் அவள் உன்னிடம் சொல்ல வில்லை… நான் ராகிணியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஷீலாவே என்னிடம் வந்து பேசினாள்….
அவள் எல்லாத்தையும் என்னிடம் சொன்னாள்… அப்போது நான் அவளிடம் உன்னைப் பற்றி சொன்னேன்…. நீ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாய் ….உன்னைப் பற்றி எல்லாத்தையும் அவள் விசாரித்தாள்…
இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தோம்… நான் ஷீலாவிடம் பேசியதில் அவளுடைய வார்த்தைகள் எல்லாமே உண்மையாக இருந்தது…. குணா என்கிற பேச்சை எடுத்தாலே அவள் கண்ணில் ஒரு ஆர்வம் தேடல் இருந்தது…. நானே அவளிடம் கேட்டேன்… என் தம்பி குணாவைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?… என்று கேட்டேன்… அதற்கு அவளின் பதில் உங்க தம்பிக்கு சம்மதம் என்றால் எனக்கும் சரிஎன்று கூறி விட்டு உற்சாகத்தில் வேகமாக ஓடினாள்….
தம்பி ,உனக்கு சம்மதமா?.. சொல்லு என்று கேட்டாள்… உனக்கு அவளை பிடிக்குமா?… எனக்கே தெரியாமல் அவள் என்னை உண்மையாக காதலித்து இருக்கிறாள்…. அதனால் தான் அவளின் காதல் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறது…. நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்…..
அக்கா, நான் எடுத்த முடிவு தான் தப்பாகி விட்டது…. நீங்கள் எடுக்கிற முடிவு கண்டிப்பாக சரியாக தான் இருக்கும் ….
நீயே, சொல்லிரு…. எனக்கு சம்மதம்…. என்றான் குணா….
உடனே நிர்மலா அவளுக்கு அம்மா, அப்பா யாருமே கிடையாது, தம்பி…. நம்ம தான் எல்லாமே பார்த்துக்கனும்…..
ம்ம்ம்…. சரி… அக்கா… அப்பாகிட்ட நீயே பேசு, ஆனால் கல்யாணம் என் கல்யாணத்தோட வைக்கனும்…. சரியா.. டா என்று கேட்டாள்.
உனக்கு என்ன தோணுதோ.,அதை செய் என்று கூறினான்….
நிர்மலா அப்பாவைப் பார்த்து பேசினாள்… அவங்க அம்மா, அப்பா எல்லோரும் சம்மதித்தனர்…..
அந்த ஷீலாவைப் பார்க்க ஆசைப்பட்டார்கள்…. உடனே நிர்மலா ஷீலாவிற்கு போன் செய்து நீ கிளம்பி கோவிலுக்கு வா, என்று கூறினாள்….
சரி, நிர்மலா நான் வருகிறேன்….
எல்லோரும் கோவிலுக்குக் கிளம்பிச் சென்றார்கள்…. குணாவையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள்…
அங்கே ஷீலா கோவிலில் காத்திருந்தாள்.
அவளை பார்க்க குடும்பமே வந்தது அவளுக்கு சந்தோஷம் தான்….
மரகதமும், வேலாயுதமும் ஷீலாவை ஆசிர்வாதம் பண்ணினர்…
அவளும் நிர்மலா அம்மா, அப்பாவோட பேசினார்கள்…. பிறகு ஷீலா, உங்க தம்பியும் வந்திருந்தாள் நல்லா இருந்திருக்கும்….
என்னோட தம்பியும் வந்திருக்கான்….
அப்படியா?…. எங்கே?… மதினி… என்று கேட்டாள்…. ஷீலா
பின்னாலேயே வந்தான்… அதுக்குள்ளேயும் எங்கே போனான் என்று தெரியவில்லையே!…
நீங்கள் எல்லோரும் கோவிலுக்குள்ள போய் சுற்றி வாருங்கள், நான் அவனை போய் கூட்டிட்டு வருகிறேன்….
பின்னர் வெளியே
போய் பார்த்தாள்… குணா வெளியில் நின்று கொண்டிருந்தான்…
டேய்.,ஏன்டா வெளியில் நிற்கிறாய்….
அக்கா, மாமா வருகிறேன் என்று சொன்னார்கள்…. அவர்களுக்காக தான் வெளியில் நிற்கிறேன்…
அவங்க வந்தா போன் பண்ணுவாங்க,… நீ உள்ளே வா, ஷீலா உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்….
வா, என்று கூப்பிட்டாள்…. அதற்குள்ளும் சரவணன் வந்து விட்டான். உடனே குணா அக்கா, மாமா வந்துட்டாங்க,அவரையும் கூட்டிட்டு போகலாம்….
ஆமாம், ஏனா உங்க மாமாவுக்கு கோவிலுக்குள்ள வர தெரியாதே!…. நீயே கையைப் பிடித்து அழைத்து வா, என்று கேலி செய்தாள்…..சரவணன்நிர்மலாவை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறான் என்று அறிமுகப்படுத்தி வைத்தார் வேலாயுதம்…..
மரகதம் அண்ணன் மகன் தான் சரவணன் என்றார்…. இப்படியே பேசிக் கொண்டே இருந்தா கோவில் நடையை சாத்தி விடுவாங்க, வாங்க சாமி கும்பிடலாம்…. என்றாள் நிர்மலா…
எல்லோரும் சேர்ந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர்….
அப்போது,கண்களை மூடி சாமி கும்பிட்டு இருந்த ஷீலாவைப் பார்த்தான்…
அவன் மனதிற்குள் நினைத்தான், இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், அவள் காதோரம் வருடி கிடக்கும் முடி, அவள் அதை எடுத்து விடும் அழகோ, அழகு தான்….
குணா பார்ப்பதைப் பார்த்து விட்டாள் ஷீலா, அது தெரியாதது போல் இருந்தாள்…
பின்பு எல்லோரும் போய் உட்கார்ந்தனர்….
நிர்மலாவும், சரவணனும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்…..
ஷீலாவும், குணாவும், பேச ஆரம்பித்தனர்…
ஒருவரைப் பற்றி ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்….
ஷீலாவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டான் குணா..
பின்பு வீட்டிற்குப் போய் கொண்டிருந்தனர்…. ஷீலா hostalக்கு போயிட்டாளா!…. என்று போன் செய்து கேட்டான்…..
அவளும் நான் வந்து விட்டேன் என்று கூறினாள்…. வீட்டிற்கு நாங்களும் போய் கொண்டே இருக்கிறோம் என்றான் குணா…. மறுநாள் ஆனது…
குணாவிற்கும் வேலைக் கிடைத்தது…. அவனும் போக ஆரம்பித்தான்…. மாதம் 25.000சம்பளம்…வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷப்பட்டனர்….
இப்படியே வாரங்கள் சென்றது…. கல்யாணப் பத்திரிகைகள் அடிக்கப்பட்டது… ஷீலாவிற்கு யாரும் இல்லாததால் அவள் நிர்மலா அத்தை வீட்டில் இருந்தாள்…. இருவரின் கல்யாண ஏற்பாடுகள் நன்றாகப் போய் கொண்டிருந்தது…
குணா, ஷீலாவைப் பற்றி நன்றாக புரிந்துக் கொண்டான்….
நிர்மலா கடைசியாக பள்ளிக்குப் போய் சார்கிட்ட invitation கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறினாள். அவங்க அம்மாவும் பார்த்துபோய்ட்டு நேரத்தோடு வீட்டிற்கு வா, என்று கூறினாள் மரகதம்…
பள்ளியில் தலைமையாசிரியர் வந்து விட்டார்….
அவர் டெல்லியில் இருந்து நிர்மலாவிற்கு ஒரு சின்ன பரிசு நெக்லஸ் வாங்கி வந்தார்…
அந்த பரிசை அவளுக்கு கல்யாணப்பரிசாக கொடுத்தார்….
நிர்மலாவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள்….
நீ பள்ளிக்கூடத்தை மிகவும் அருமையாக பார்த்திருக்கிறாய்,என்னோட பாராட்டுக்கள்….
ரொம்ப நன்றி சார்….
பின்பு என்னோட கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பாக வரவேண்டும் என்று தலைமையாசிரியரிடம் கூறினாள் நிர்மலா….
அவரும் கண்டிப்பாக நான் வருவேன்…
என்றார்…
வீட்டிற்குப் போய் கொண்டிருந்தாள்…
அவளை யாரோ பின் தொடர்வது போல் இருந்தது..
நிர்மலா திரும்பி பார்த்ததும் அவர் திரும்பிக் கொண்டார்….
நிர்மலாவிற்கு சில சந்தேகங்கள் வந்தது….
நில்லுங்க! நீங்கள் யாரு ? எதுக்காக என் பின்னால் வர்றீங்க என்று கேட்டாள்…
அந்த பெரியவரைப் பார்க்கும் போது ரொம்ப வயதானவர்கள் மாதிரி இருந்தது….
ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்… நிர்மலாவை முறைத்துப் பார்த்தார்….
அவள் பக்கத்தில் நெருங்கினார்….அவளிடம் இருக்கும் நகையை திருட வந்த ஒரு பைத்தியம் மாதிரி இருந்தது…
எப்படியோ!… அந்த பைத்தியத்திடம் தப்பித்து வேகமாக ஓடி வந்து விட்டாள்…
உடனே, வேலாயுதம் ஏம்மா, வேகமாக ஓடி வருகிறாய் என்று கேட்டார்….
அப்பா, பின்னால் ஒரு வயதான ஆள், பைத்தியம் மாதிரி இருக்கிறது….
அவர் என் பக்கத்தில் கையில் உள்ள நகையை பிடுங்க வந்தார்…. அதான் இப்படி ஓடி வந்தேன்….
சரிம்மா!…. பதற்றப்படாதே?..
நீ வீட்டுக்குப் போ, கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ளது, போ, நல்லா ஓய்வு எடும்மா!… .என்று கூறினார்….
அவளும் போனாள்…
பின்பு ஒரு வயதானவர் ஓடி வந்தார்…
அவரைப் பார்த்த வேலாயுதம் அதிர்ச்சி ஆனார்…
டேய், செல்லப்பா, நீயா…டா
ஆமாம்… டா… நான் தான் ,…ஏன்டா… இப்படி இருக்கிறாய்…. என்று கேட்டார் வேலாயுதம்…
நான் பண்ண தப்பினால் என் மனைவி, என்னை விட்டு போய் விட்டாள்….
நான் பணம், பணம் என்று பைத்தியமாகஇருந்தேன்….
.
ஆனால், என்னை பைத்தியமாக்கி விட்டு என் பணத்தை எடுத்துக் கொண்டார்கள்…. என்னோட அத்தை பசங்க…. இப்போது ஒரு வாய் கஞ்சி கூட என்னால் நிம்மதியாக குடிக்க முடிய வில்லை…..
நீ, அப்போது சொன்னாய்?.. உன் குழந்தையை விட உனக்கு பணம் தான் முக்கியம் என்று போகிறாய்….
பணம் எப்போதும் கூடவே வராது ….
அதை ஒரு நாள் புரிந்து கொள்வாய் என்று கூறினாய்….
இப்போது புரிந்து கொண்டேன்…. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்….அந்த தப்ப நான் உணருகிறேன்..
அந்த கடவுள் என்னை மன்னிப்பாங்களா ?வேலாயுதம் சொல்லு….
செல்லப்பா, கண்டிப்பாக கடவுள் உன்னை மன்னிப்பார்கள்….. எனக்கு 10வருடமாக குழந்தையே இல்லாத எனக்கு நீ உன் குழந்தையைக் கொடுத்தாய்…. உனக்கு குழந்தை இருந்தால் பணம் செலவாகிவிடும் என்று நினைத்து கொடுத்தாய்…
இந்த உண்மையை உன் மனைவிக்குக் கூட தெரியாது….
ஆனால் நீ பணத்தின் மேல் பைத்தியமாக இருந்தாய்… அதனால் தான் நான் என்ன சொன்னாலும் நீ அதை காதில் வாங்க வில்லை….. அதனால் தான் குழந்தையை வாங்கிவிட்டு நான் இந்த ஊருக்கு வந்தேன்… நீ உன் குழந்தையை என்னிடம்கொடுத்தாய் .அவள் வந்த நேரம் என்னுடைய மனைவிக்கு குழந்தை உருவானது…
இப்படி இந்த இருபிள்ளைகளை நல்லா படிக்க வைத்தேன்… அப்படியே காலங்கள் ஓடியது…
இப்போது,உன் குழந்தை நிர்மலாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது….
அவளுக்கு எதுவுமே தெரியாது.
..நீ அவளிடம் சொல்லி விடாதே!…. அவள் உன்னை தப்பாக நினைத்து விடுவாள்.
இல்லை வேலாயுதம், நான் என் மகளை கடைசியாக பார்ப்பதற்கு தான் வந்தேன்.
அவளை என்னிடம் கொடுத்து விடு என்று கேட்டு வரவில்லை.
அவளை நான் பார்த்து விட்டேன்… அது போதும் எப்போதும் அவள் உன்னுடைய குழந்தை…. நான் போகிறேன்….
செல்லப்பா, அவள் கல்யாணத்தைப் பார்த்து விட்டு செல்….
இல்லை, நண்பா,… அவளை பார்த்தால் நான்உண்மையை சொல்லிருவனோ! என்ற ஒரு பயம் எனக்குள் இருக்கிறது..
.அதனால் தான் நான் வேண்டாம் என்று கூறுகிறேன்.
நீயே!… நல்ல படியாக நடத்து…. என் ஆசிர்வாதம் அவளுக்கு எப்போதும் இருக்கும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்…
*************இருவரின்
கல்யாணமும் சிறப்பாக முடிந்தது…. வேலாயுதம்,மரகதம் ஆசைகள் நிறைவேறியது….
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹முற்றும்.
.
…
.