ஆனந்த பாகம்5
இப்போது நீ வீட்டுக்கு வரப்போகிறாயா?,இல்லையா, என்று கோபத்துடன் கேட்டாள் நிர்மலா…..
பின்பு குணா நான் வருகிறேன் என்று கூறினான்…. அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்…
குணா அவனுடைய அறைக்குச் சென்றான்.. அவனிடம் வந்து நிர்மலா உன்னிடம் கொஞ்ச நேரம் பேசனும் என்றாள்….
சொல்லுங்கள் அக்கா.,என்னடா உன் பிரச்சினை எதுக்காக வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொன்னாய்?….
அப்பா தான் என்னை வீட்டிற்கு வராதே!… என்று கூறினார்….
அப்பா தான சொன்னாங்க குணா,அதுவும் எதுக்காக நீ குடித்து விட்டு வந்ததால் அப்படி சொல்லியிருக்காங்க,… வீட்டுக்கு வரக் கூடாதுனா சொன்னால் அப்படியாவது அவன் குடிக்காமல்இருப்பானோ!… என்று மனதில் நினைத்து சொல்லி இருக்கிறார்… .. அதுவும் கஷ்டப்பட்டு மனசே இல்லாமல் தான் சொல்லியிருக்கிறார் .. .
எந்த ஒரு தந்தையும் தன் மகன் கெட்டு போகனும்னு நினைக்க மாட்டாங்க!…. நல்லா இருக்கனும்னு நினைச்சு உன்னை சத்தம்போட்டிருக்கிறார்.
அத புரிஞ்சிக்காம பேசுகிறாய்…. இந்த உலகத்தில் யாருமே பெற்ற அப்பாவை புரிந்து கொள்ள மாட்டிக்காங்க…. அதில் நீயும் ஒருத்தன்…..
நீ ஒரு பெண்ணை காதலிக்கிறாயா?…. என்கிட்ட உன்னோட நண்பர்கள் சொல்லிட்டாங்க….
அவங்க மேல நீ கோபப்படாதே!…. அவர்களும் உன் நல்லதுக்காக தான் சொல்லியிருக்காங்க….. நான் கட்டாயப் படுத்தி கேட்டதால் தான் சொன்னாங்க….
யாருடா அந்த பொண்ணு அவளுக்காக நீ ஏன்? உன்னுடைய வாழ்க்கையை இழக்கனும், சந்தோஷத்தை இழக்கனும் பெற்றவங்கள ஏன் கஷ்டப்படுத்தனும்….. பெற்றவர்களிடம் ஏன் கெட்ட பெயர் வாங்கனும்,….இதெல்லாம் ஒரு பெண்ணுக்காக பண்றியே அது தான் முட்டாள் தனம்… இதில் நீ ஒன்னும் மட்டும் தெரிஞ்சிக்கனும், அவ உன்னை பிடிக்கலைனு அவ செல்லவேவில்லை…. இந்த வயதில் வருவது காதலே இல்லை affection என்று தான் சொன்னால் ராகிணி…. அப்படித்தானே….
ஆமாம் அக்கா…. நீ சொல்றது corrrect…. தான்.. அப்போம் அவள்
என்னை காதலிக்கிறாளா?…
என்று கேட்டான் குணா…. இப்படி தான் யோசிக்க கூடாது….
ராகிணிக்கு உன் மேல் காதல் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் அது உன்னுடைய கையில் தான் இருக்கிறது…..
என்னக்கா!…. சொல்கிறாய்?…. எனக்கு புரிய வில்லை…..
இரு….. டா…. சொல்கிறேன்….. கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்…..
தம்பி அவளிடம் நீ காதலை சொல்ல வேண்டும் என்றால் நீ கெத்தாக அதாவது நல்ல ஒரு வேலையில்இருக்க வேண்டாமா,.. உன்னுடைய கடமையை நிறைவேற்றனும்…. அப்போ தான் கெத்தாக இருக்க முடியும்….
என்னோட கடமையா ?. அது என்னது….
அட அறிவு கொழுந்தே!.. அப்பா,அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீ படித்து முன்னேறனும்…. அது தான் உன்னோட முதல் கடமை………இதை முதலில் செய்…. அப்புறம் அடுத்து பார்ப்போம்…..
நீ முதலில் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்கனும்…
நானே உன்னோட ராகிணியிடம் பேசுகிறேன்…. சரியா .. ம்ம்ம்…. என்று கூறினான்….
நிர்மலாவிற்குக் கல்லூரியில் இருந்து போன் வந்தது…. அதனால் அவளும் வேலாயுதமும் கல்லூரிக்குச் சென்றார்கள்…. …
அங்கே அவள் உள்ளே நுழைந்ததும் பாராட்டி வரவேற்றனர்… அவள் தான் கல்லூரியில் முதல் இடத்தில் இருக்கிறாள்…
நிர்மலா உனக்கு நல்ல வேலை கிடைக்கும்… உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று professor,mamஎல்லோரும் பாராட்டினார்கள்…. கல்லூரி தலைவர் தலைமையிலும், பல்கலைக்கழகம் நிர்வாகிகள் எல்லோரும் வந்திருந்தார்கள்…
நிர்மலாவுக்கு பட்டம் கொடுத்தார்கள்…. அவள் பட்டம் வாங்குவதைப் பார்த்த வேலாயுதம் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்…. மேடையில் நிர்மலாவின் அப்பாவை பேசஅழைத்தார்கள்….
அவரும் மேடைக்கு வந்து பேசத் தொடங்கினார்…
எல்லோருக்கும் மேடையில் பேசுகிற வாய்ப்பு கிடைக்காது…. ஆனால் எனக்கு கிடைத்துள்ளது… அதற்கு காரணம் என் மகள் …எனக்கு இரு பிள்ளைகள்…
முதலில் நிர்மலா, இரண்டாவது பையன் குணா…. நானும் என்னுடைய மனைவியும் பள்ளிக்கூடம் பக்கமே போனது கிடையாது.. ஏனென்றால் அந்த காலத்தில் யாரும் அவ்வளவா படித்தது இல்லை…. அதனால்
எங்க பிள்ளைகளையும் நாங்க கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்….எங்களாலும் அவர்களை படிக்க வைக்க வசதி இல்லை….எங்களால் முடிந்தவரை வேலை பார்த்து, கொஞ்சம் காசு சேர்த்து வச்சோம்… ஆனால் நிர்மலா கஷ்டப்பட்டு படித்தாள்…நிர்மலா இந்த அளவுக்கு முன்னேறுவதற்கு காரணம் விடாமுயற்சியோடு படித்ததால் தான் இந்த இடத்தில் ,இந்த மேடையில் நான் நிற்கிறேன்…. அவளை பெற்றதற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்…. பெருமைப்படுகிறேன்….. அதுமட்டுமல்ல இந்த கல்லூரிக்கும் நன்றி கூறுகிறேன்…..
என் மகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் படிக்க வைக்க செலவுகளை இந்த கல்லூரி ஏற்றுக் கொண்டது…. மேடையில் பேச அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகிகளுக்கு மிக மிக நன்றி……. என்று பேசி விட்டு கீழே இறங்கினார். ….
பின்பு நிர்மலாவை பேச அழைத்தனர்… அவளும் மேடையில் போய் பேச தொடங்கினாள்….
எங்க அப்பா சொன்னார்கள், இந்த பட்டம்
வாங்குவதற்கு நான் விடாமுயற்சியோடு படித்ததால் தான்காரணம் என்று அப்படி இல்லை எங்க அப்பாவும், அம்மாவும் தான் காரணம்…. எப்படியென்றால் தன்னுடைய பிள்ளைகளை சிறு வயதில் இருந்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தனும் ஒவ்வொரு நாளும் படிப்பை பற்றி எங்க அப்பா தினமும் பேசும்….எல்லா குழந்தைகளுக்கும் சாப்பாடு ஊட்டி வளர்ப்பார்கள்…. ஆனால் எங்க அப்பா அம்மா, தைரியமும், தன்னம்பிக்கை சேர்த்து ஊட்டி வளர்த்தார்கள்….. அவர்களுக்கு மகளாக பிறந்ததே நான் செய்த பாக்கியம்… என்று கூறி விட்டு விடைபெறுகிறேன்…. நன்றி…..
நல்லபடியாக பட்டம் பெறும் விழா நிறைவடைந்தது…. நிர்மலா தன் தோழிகளிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்….
ஊருக்குச் சென்றதும் மரகதம் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தாள்….
உடனே நிர்மலா ஏன்ம்மா!… இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்…. எல்லாத்தையும் நான் போனில் பார்த்து விட்டேன்…..
அது எப்படி!? அம்மா…. குணாவின் நண்பன் அங்கே தான் admission போட்டுருக்கான்…. பட்டம் பெறும் விழாவில் அவன் நண்பனும் இருந்தான்…. நீயும் உங்க அப்பாவும் எப்படி பேசுறீங்க!. .அதை பார்த்து எனக்கே உங்க மேல பொறாமையாக இருக்கிறது….நானும் அந்த விழாவிற்கு
வந்திருக்கனும்….. என்னால் தான் வர முடியாமல் போயிட்டே..! சரி விழா நல்ல படியாக முடிந்தது….. அது போதும்மா..!
அம்மா, தம்பி நான் படித்த கல்லூரியில் admission போட்டு இருக்கிறான்… என்னிடம் சொல்லவே இல்லை….
குணா, இங்கே வாடா….
என்ன? அக்கா சொல்லு…. ஏன்டா என்னிடம் சொல்ல வில்லை…. எங்க Collegeல admission போட்டேனு….. இல்ல அக்கா… நானும் யோசிக்க வில்லை… என் நண்பன் அங்க தான் படிக்க போகிறான்… அதான் நானும்..சேர்ந்து விட்டேன்…
சரி குணா, என்ன group எடுத்திருக்கிறாய்…. . அக்கா நான் bsc.computer science …சரிடா தம்பி நல்லா படிக்கணும்…
குணாவும் கல்லூரிக்குச் சென்றான்….
மூன்று வருடம் கழிந்தது…. இடைப்பட்ட காலத்தில் நிர்மலாவிற்கு நிச்சயமானது….எப்படியென்றால் மரகதம் அண்ணன் மகன் சரவணன். சரவணன் diploma முடித்திருக்கிறான்… நல்ல வேலையில் இருக்கிறான்…. அவனுக்கு தான் நிச்சயிக்கப்பட்டது. நிர்மலாவிற்கும், சரவணனுக்கும் simple ஆக தான் நிச்சயதார்த்தம் வீட்டிற்குள் நடந்தது… அந்த நேரத்தில் குணாவிற்கு semester exam நடந்து கொண்டிருந்தது…. அதனால் அவன் வர வில்லை….. நிர்மலா கல்யாணத்தையும் simple ஆக வைக்கனும்னு நினைத்தாள்….ஆனால் வேலாயுதமும், மரகதமும் எங்களுக்கு ஒரே பொண்ணு நிர்மலா அவளுடைய கல்யாணத்தை எல்லாருக்கும்,நமக்கு தெரிந்த சொந்த பந்தங்களுக்குச் சொல்லி நம்ம வசதிக்கேற்ற மாதிரி வைப்போம் என்று முடிவு செய்தனர்…. அதற்கு மரகதம் அண்ணன் குடும்பத்தினரும் ஒத்துக் கொண்டார்கள்… ஒரு மாதம் கழித்து நிர்மலாவிற்கு கல்யாணம் என்று உறுதி செய்து கூறினார்கள்… அதற்கான கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது….
அந்த ஊரில் பள்ளியில் இருக்கும் தலைமையாசிரியர் நிர்மலாவைக் கூப்பிட்டு வரும் படி watchman ஐ அனுப்பி வைத்தார்… அந்த watchman வந்து கூறினான்… உடனே அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்..
தலைமையாசிரியர் நிர்மலாவை உள்ளே வாம்மா என்று கூறினார்…
என்ன? “சார் என்னை எதற்காக வரச் சொன்னீங்க!…. எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?…. ‘
“சொல்லுங்கள் சார் கட்டாயம் இதை செய்கிறேன்…. ‘
நான் ஒரு முக்கியமான meeting நடக்குது…. அதுக்காக நான் டெல்லிக்கு போகனும்…
நீ ஒரு வாரம் மட்டும் இந்த பள்ளியைப் பார்த்துக் கொள்ள முடியுமா?….
என்ன, சார் நீங்கள் இந்த பள்ளியை நான் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்….. எனக்கு எந்த தகுதியும் இல்லையே?…. என்னை விட பெரியவர்கள் இருக்கிறார்கள்…. அவர்களிடம் சொல்லாமல் என்னிடம் ஏன்?.. சார் சொல்றீங்க!….
நீங்க இந்த பொறுப்பை என்னை நம்பி ஒப்படைத்து விட்டு போவீங்க!… ஆனால் இந்த பள்ளியில் வேலை பார்க்கிறவர்கள் நம்மிடம் சொல்லவில்லையே, நம்ம மேல அவ்வளவு தான் நம்பிக்கை வச்சிருக்காங்களா!,… என்று மனக் கசப்பு வரும்…. அதனால் தான் சொல்கிறேன்….
இந்த பள்ளியில் உன்னை விட மூத்தோர்கள் கிடையாது…
உனக்கு சரிசமமாக தான் இருக்கிறார்கள்….
உன்னிடம் இந்த பொறுப்பை கொடுத்து விட்டுச் சென்றால் இந்த பள்ளியை நீ நன்றாக பார்த்துக் கொள்வாய்…. அதற்காக தான் சொல்கிறேன்….
எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்….. சார்… நான் இருந்தால் ஒரு மாதம் கூட நிரந்தரமாக இருக்க முடியாதே!…. சார்..
அதைப் பற்றி நீ கவலைப்படாதே!…. அதுக்குள்ளேயும் நான் சீக்கிரமாக meeting முடித்து விட்டு வந்துருவேன்….
நீ அதுவரைக்கும் எனக்கு assistant ஆக உன்னை வேலையில் சேர்க்கிறேன்… வீட்டிற்குச் சென்று அம்மா, அப்பாவிடம் கூறினாள்…..
மரகதமும், வேலாயுதமும் நம்ம ஊரிலேயே வேலை கிடைப்பது எவ்வளவு ஒரு அதிர்ஷ்டம்…. சரிம்மா!… நீ சார் வருகிற வரைக்கும் வேலை பாரு… அதற்கு பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்வோம்…. என்ன மரகதம் உனக்கு சம்மதம் தானே,… உங்களை மீறி நான் என்ன செய்திருக்கிறேன்.. உங்களுக்கு சம்மதம் நான் அது எனக்கும் சம்மதம்… எங்க அண்ணன், மதினியிடம் நான் சொல்லிக்கிறேன்…ஏனென்றால் நம்ம தான் பத்திரிக்கை அடிக்கலயே, பத்திரிக்கை அடித்தால் தான் பயப்படனும்… நீ உன்னோட வருங்கால கணவரிடம் நீ சொல்லு…. சரிம்மா நான் சொல்லிக்கிறேன்….நிர்மலா சரவணிடம் சொல்கிறாள். அவனும்
சம்மதிக்கிறான்… இவளும் சந்தோஷமாக
வேலைக்குச் செல்கிறாள்…
நிர்மலா அவள் படித்த ஊரிலேயே வேலை கிடைத்துவிட்டது…. துணை தலைமையாசிரியர் பதவியில் இருக்கிறாள்….. பள்ளியில் புது புது நடவடிக்கைகள் எடுத்தாள்…. சில condition போட்டாள்….. நிர்மலா எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் சரியாக செயல்பட்டது…..
அப்பள்ளியில் புது கல்வி முறைகளை மாணவ மாணவியர்களுக்கு கற்றுக் கொடுத்தாள்…. … அதனால் அந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமானது…
குணா கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு வருகிறான்….
ஆனந்த லீலை தொடரும்.