Loading

    ஆனந்த பாகம் 3

 

நிர்மலா விடியும் வரையில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா, நீ  சீக்கிரமாக எழுந்து படித்ததால்  உனக்கு தூக்கம் கண்ணில் இருக்கிறது….. போய்….. கொஞ்ச நேரம் தூங்கும்மா….! 

               இன்று  பள்ளிக்கூடம்  உனக்கு விடுமுறை தானே. போய் ஓய்வு  எடு நிர்மலா என்று கூறினாள் மரகதம்…… அவளும் தூங்கச் சென்றாள். மரகதம் குணாவை எழுப்பி விடும்மா…..! என்றாள்… அவளும் எழுப்பினாள் .குணா எழுந்திருச்சு….. மறுபடியும் படுத்து விட்டான்…. நிர்மலாவிற்கும் தூக்கம் வந்தது….. அவள் தூங்கி விட்டாள்…. 

              மரகதம் வேலைகளைப் பார்த்துக்  கொண்டிருந்த போது, வேலாயுதம் வந்து நான் கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பணும் என்று கூறினார். அதற்கு மரகதம்     ஆமாம்…..வயலில் மழை பெய்து  தண்ணீர் பெருகி கிடப்பது போல் நீங்கள் ஏன் இப்படி அவசரப்படுறீங்க……!

             கொஞ்சம் பொறுமையாக இருங்கள்…. என்ன?…. அவசரம் உங்களுக்கு என்று கோபத்துடன் பேசினாள் 

   ஏன்?…. கோபப்படுற…. என்னாச்சு…. உனக்கு….. எனக்கு காலையில் இருந்து தலைவலியாக இருக்கிறது…….. 

             அதனால் தான் நான் இன்னிக்கு அசந்து தூங்கி விட்டேன்… சமையல் செய்யவும் தாமதமாகி விட்டது…. என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்…. 

     ஏங்க மணி 7.30ஆயிற்று.அவனை எழுப்பி விடுங்கள்…. அவன் பள்ளிக்கு போகலையா!…..  என்று சத்தம் போட்டு கொண்டிருந்தாள்…… 

         உடனே குணா வேகமாக எழுந்தான்….. எழுந்து மணியைப் பார்த்தான்…… மரகதம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்…. காலையில் எழுந்து படிக்கிறது இல்ல, தேர்வு வேற வருது அதுக்கு படிக்கனும் என்கிற நினைப்பு இல்ல அவனுக்கு….. இன்னிக்கு எழுப்பவே கூடாது….. தூங்கட்டும் ….என்று திட்டிக் கொண்டிருந்தாள் …..

       குணா பல் விலக்கி,  வேகமாக தலையில் தண்ணீர் ஊற்றி வெளியே வந்தான்….. அதை பார்த்த வேலாயுதம்…… அவரும் சத்தம் போட்டார்….. சரிங்கப்பா நான் நாளையில் இருந்து காலையில் படிக்கிறேன்…… என்று. கூறினான்….  நாளைக்கு காலையில் அக்கா கூட எழுந்து படிக்கிற,…   ம்ம்ம். சரிங்கப்பா…. இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.. 

            குணா அமைதியாக இருந்தான்….. 

சமையல் வேலைகளை முடித்தாள்….. வேகமாக இருவருக்கும் இட்லி வைத்தாள்….. 

குணாவும் சாப்பிட்டு முடித்தான்…… அதுக்குள்ளேயும் அவனுடைய நண்பர்கள் வந்தனர்…… இவனும் வேகமாக கிளம்பி விட்டான்……… சாப்பாடு கொண்டு போகாமல் சென்று விட்டான்….. 

               அதை பார்த்த மரகதம்…..என்னங்க குணா சாப்பாடு மறந்து விட்டு போய்ட்டான்…. 

நீங்கள் போகும் போது கொடுத்து விட்டு செல்லுங்கள்….. என்றாள்…… 

    சரி……. கொடும்மா….. என்று வாங்கி விட்டு அவரும் கிளம்பிவிட்டார்….   நிர்மலா எழுந்து முகத்தை கழுவி விட்டு அவளும்  மரகதமும்  சாப்பிடத் தொடங்கினாள்…. …… இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர்….. பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் இருவரும் எழுந்து போய் பார்த்தனர்….. 

                 அவங்க வீட்டில் சண்டை அதற்கு தான் இப்படி ஒரு சத்தம்.   …எல்லோரும் கூடினர்… சரி நீ உள்ள வாம்மா….. நம்ம போய்  சாப்பிடுவோம் என்றாள். இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்.  பின்பு நிர்மலா படிக்கச் சென்றாள்….

         மாலையில் சீக்கிரமாக வந்தான் குணா. மரகதம் மதியம் சாப்பிட்டியா?…. என்று கேட்டாள். ம்ம்ம்… சாப்பிட்டேன்….. அப்பா கொடுத்துட்டு போனாங்க… 

      சரி போய் முகத்தை கழுவி விட்டு வா…. அம்மா டீ போட்டு தருகிறேன்…..இருவரும் டீ  குடித்து  விட்டு  நிர்மலாவும், குணாவும் படிக்கத்  தொடங்கினர்….. 

        படிப்பில் சில சந்தேகங்களை நிர்மலாவிடம் கேட்டான்….. நிர்மலாவும் அவன் சந்தேகத்தை தெளிவு படுத்தினாள்….. 

        பொழுது அடைந்தது….. வேலாயுதம் வீட்டிற்குள் நுழைந்தான் …நுழைந்த போது இருவரும் படிப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டான்….. வேலாயுதம் மனதிற்குள் நினைத்தது… ( நம்ம தான் படிக்கல பிள்ளைங்க இருவரும் நல்லா படிக்கணும் என்று கடவுளை வேண்டினார்)….. 

            சில நாட்கள் கழிந்தது…. பள்ளியில் சிறு 

குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது….. பிளஸ் 2  தேர்வு நடந்தது…. நிர்மலாவும் காலையில் எழுந்து படிக்கத் தொடங்கினாள்…. விடிய விடிய கண்விழித்து படித்தாள். எப்படியாவது நல்ல மார்க் எடுக்கனும் என்று நம்பிக்கையோடு, மிகவும் கடுமையாக படித்தாள்…. ஒவ்வொரு  தேர்வையும் நல்ல படியாக எழுதி முடித்தாள்…. 

தேர்வு முடிந்தது…. அவன் தம்பி குணாவிற்கு ஆரம்பம் ஆனது…. அவனுக்கு சில விஷயங்களையும் தேர்வு எழுதும் முறையை

பற்றி குணாவிடம் கூறினாள்….. 

            குணாவும் அவள் அக்கா செல்வதைக் கேட்டுக் கொண்டு அவனும் நன்றாக படித்தான்….. தேர்வையும் நன்றாக எழுதினான்..   நிர்மலா தன் தம்பிக்கு சில  அறிவுரைகளையும் தேர்வு எழுதுவதற்கு டிப்ஸ் கொடுத்தாள்…. 

      பின்பு தேர்வு நல்ல படியாக முடிந்தது….. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது…… பள்ளியின் விடுமுறை நாள்கள் மிகவும் அருமையாக சென்றது… 

          மூன்று மாதம் கழித்து பிளஷ் 2 தேர்வு

முடிவுகள் வெளிவந்தது…. அதில் நிர்மலா முதல் இடம் பெற்றாள்…. அவள் கிராமத்திலே நிர்மலா  தான் முதல்  இடம் பிடித்துள்ளார். எல்லோரும் அவளை பாராட்டினார்கள்….. 

             அவள் முதல் இடம் பெற்றதும்…… அனைவரும் அவளை பாராட்டியதைப் பார்த்த  வேலாயுதம்.,ஆனந்த கண்ணீருடன், மல்க ,மல்க,

                 “ஆனந்த. யாழை மீட்டுகிறாள், 

      அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்,

       அன்பெனும் குடையை நீட்டுகிறாய், 

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்……!’

               இந்த பாடல் அவர் மனதிற்குள் ஓடியது…வீட்டிற்கு சென்றதும், தன் அம்மாவிடமும்,  அப்பாவிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்….. 

                                                             பின்பு  ஒரு வாரம் கழித்து மார்க்.   ஷீட் வாங்க அப்பாவை ….அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போனாள்……               அங்கே  அனைத்து  ஆசிரியர்களும்,      ………………                                                                          …………     தலைமையாசிரியர்களும்,……        அவளை பாராட்டினார்கள்….. இவள் முதல் இடம் பிடித்தது…… இந்த பள்ளிக்கு பெருமையாக இருக்கிறது…….. நீ கல்லூரி படிப்பதற்கான எல்லா வகை செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்…… அதனால்….. நீங்கள்  கவலைப்பட  வேண்டாம் வேலாயுதம்……. உங்க மகளை படிக்க மட்டும் வையுங்கள்….. நிர்மலா கல்லூரியில் போய் இதை விட நன்றாக படிக்கனும்…… படித்து பட்டம் வாங்கனும்…. என்னோட வாழ்த்துக்கள்…. 

       ரொம்ப நன்றி சார்…… 

இருவரும் வீட்டிற்குச்  சென்றனர்….. மரகதத்திடம் பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி விரிவாக கூறினார்….. இதை கேட்டு மரகதமும், வேலாயுதமும் சந்தோஷப்பட்டனர்…… 

      நிர்மலா அடுத்து எப்போது கல்லூரியில் சேர போகிறாய்….. அதுவா நம்ம முதலில் எந்த கல்லூரி என்று முடிவு செய்யனும்….. இல்லைனா!…. என்னுடையபடிப்பிற்கான அனைத்துவகை செலவுகளையும் எந்த கல்லூரி ஏற்கிறதோ!….. அங்க என்னை வரச் சொல்வார்கள்….. 

          நான்  வெளியூரில் போய் படிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் என்னை பிரிந்து நீங்கள் இருப்பீங்களா!..  ..நீ  நல்லா படிக்கணும்னா  நாங்க உன்னை பிரிந்து தான் இருக்கனும்…… சரி அத அப்புறம் பார்ப்போம்.  . என்றார் வேலாயுதம்….. அதற்கு மரகதம் பாத்தியா….. நிர்மலா இதை பத்தி பேசவேண்டாம்னு சொல்றாங்க அப்பா……  உன்னை எப்படி வெளியூரில் படிக்க அனுப்ப போறாருனு தெரியல…… சொல்லிக் கொண்டே சென்றாள்…. மரகதம்…… வேலாயுதம் சற்று யோசித்தார்…. அவள் எங்கே போய் படித்தாலும் நல்லா படிக்கனும்……. …. அது போதும்….. அவளை விட்டு கொஞ்ச நாள் தானே பிரிந்திருக்கப் போகிறோம்….. என்று அவர் சிந்தனையில் 

     ஓடிக்  கொண்டிருந்தது….. 

      பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் என்றாவது ஒரு நாள்  அவளை கல்யாணம் செய்து விட்டு புகுந்த வீட்டிற்கு அனுப்பி தான் ஆகனும்…. அவளை பிரிந்திருக்க இப்பவே பழகிக் கொள்வோம்……. என்று மனதில் நினைத்துக்  கொண்டார் ….. 

                சில  நாட்கள் கழித்து….  நிர்மலாவிற்கு கடிதம் வந்தது….. அதை படித்த நிர்மலா அம்மா, அப்பாவை அழைத்து  எனக்கு மீனாட்சி கல்லூரியில் சீட்டு கிடைத்துள்ளது….. அப்படியா…! ரொம்ப சந்தோஷம்…. எப்போது வர சொல்லியிருக்காங்கம்மா….  என்று கேட்டார் வேலாயுதம்….. 

            அப்பா அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச்  சொல்லியிருக்காங்க!…. என்னோட மார்க் ஷீட், எல்லா  சான்றிதழ்களும் ,போட்டோ,கொண்டு போகனும்…… சரிம்மா….மறக்காம எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொள்.    

        அங்க போய்தங்கி படிக்கிற மாதிரியா…..  ஆமாம்,…… மா…. ஆனால் இப்போது இல்லை… அது இன்னும் ஒரு வாரம் கழித்து வரச் சொல்வார்கள்……

            இப்போம்  எதுக்கு வரச் சொன்னார்கள்….. அதுவா.  என்  பெயரை  சேர்த்து…. எனக்கு ஒரு room கொடுத்து விடுவார்கள்  …….அந்த  roomல நான் மட்டும் இல்ல  நிறைய பிள்ளைகள் இருப்பார்கள்….. 

   அப்புறம் கல்லூரியைச் சுற்றி பார்த்து வரலாம்  ….ம்ம்ம்.  சரிம்மா…. 

        ஒரு வாரம் கழித்து,…. 

வேலாயுதமும், நிர்மலாவும்  கல்லூரிக்குச் சென்றனர்…. அங்கே பார்த்தால் கூட்டம் அதிகமாக இருந்தது….. 

  …… எல்லோரும்  admission form  வாங்கி அதை fill  பண்ணினார்கள்…… இவளுக்கும் ஒரு  form  கொடுத்தார்கள்….. இவளும்  form  (அதாவது  படிவம்)   வாங்கி  அந்த படிவத்தை நிரப்பினார்….. 

        பின்பு வரிசையில் நின்று நிரப்பிய படிவத்துடன் உள்ளே சென்றனர்…… கல்லூரி தலைவர் எல்லோரிடமும் அன்பாக பேசி இந்த கல்லூரியில் சேர்த்தார்….. நிர்மலாவை பார்த்ததும்….. நீ  தான் பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தவள்…. உனக்கு  இங்கே 

       எந்த  கட்டணமும்  கிடையாது, உங்கள்பெண்ணிடம் எந்த தொகையும் வாங்கமாட்டோம்…. உங்க பொண்ணு இங்க நல்லா படிக்கலாம்….. உங்களுக்கு  admission  போட்டாச்சு….!  ஏதாவது சில சந்தேகங்கள் இருந்தால் வெளியே போய் கேளுங்கள்…. 

          இவர்களும் வெளியே வந்து கல்லூரி அலுவலரைப் பார்த்து சில சந்தேகங்களைக் கேட்டு கொண்டாள்….. அவரும் இவளுக்கு  பதில்  கூறினாள்…. பின்பு கல்லூரியைச் சுற்றி பார்த்து  விட்டு இருவரும் கிளம்பினார்கள்….. பஸ்சில் போகும் போது…. வேலாயுதம் நிர்மலாவைப்  பார்த்து…. சில  கேள்விகள்  கேட்டார்….. ஏம்மா….  .உனக்கு படிக்கும் போது சில புத்தகங்கள் தேவைப்படுமே   அதற்கு காசு தேவைப்படும்ல  ஆமாம்ப்பா….. எனக்கு  புத்தகம் வாங்கறது, அப்புறம்  எனக்கு தேவையென்றால் வாங்குவதற்கு என் கையில் காசு இருக்கனும்….. அதுக்கு என்னப்பா  செய்ய போறீங்கள்…  ..நீ அத பற்றி கவலைப்படாத நான் பார்த்துக்கிறேன்… அவங்க எப்போது கல்லூரிக்கு வரச் சொன்னாங்க……  அது தெரியலப்பா…  அவங்க தான் சொல்லுவாங்க,!… ஏதாவது கடிதம் போடுவாங்க,  இல்லைனா call பன்னுவாங்க,…. அதுக்குள்ளேயும் நான் காசு ரெடி பண்ணிருவேன்…… சரியாம்மா…..  சரிங்கப்பா…… பஸ்சில் அவர்கள் ஊரை நெருங்கிக்  கொண்டிருந்தார்கள்…. 

         வேலாயுதம் வீட்டிற்குச்  சென்று யாரிடம் காசு வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்…. அவனுக்கு தெரிந்த ஒரே ஆள் கோபு  மட்டும்  தான்…. அவன் வீட்டிற்குச் சென்று கேட்டான்….. அவனும் குழந்தையின் படிப்புக்குத்தானே  இந்தா  வைத்துக் கொள் என்று 10.000 கொடுத்தார்…. அதை வாங்கிக் கொண்டு  வீட்டிற்குச் சென்றார்….. 

      அடுத்த பாகத்தில் பார்ப்போம்…..

 

ஆனந்த லீலை தொடரும்.  

                

       

     

         

                    

                

         

           

                

….  

       

        

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்