புது உடையை அணிந்து ஆராதனா சந்தோசமாக கிளம்பினாள். இன்று வேலையில் சேர வேண்டும். எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இதை வாங்கி இருக்கிறாள். அந்த சந்தோசம் மனதில் பொங்கி வழிந்தது.
யுவன் நேற்றே கூறியிருந்தான். காரில் வர வேண்டாம். ஸ்கூட்டியில் வந்தால் போதும் என்று. அவன் சொன்னதற்காகவே அதை மீற மனம் துடித்த போதும் முதல் நாளே அவனிடம் திட்டு வாங்கி வேலையை தொடங்க அவளுக்கு விருப்பம் இல்லை. அதனால் அவளது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டாள்.
யுவனும் மற்றவர்களும் கிளம்பி சென்று விட ஆராதனா யுவன் சொன்ன நேரத்திற்கு கிளம்பிச் சென்றாள். அந்த அலுவலகத்திற்கு ஆராதனா போனது இல்லை. ஒரே ஒரு முறை பள்ளியில் படிக்கும் போது யுவனை எதற்கோ கூப்பிட அர்ச்சனாவுடன் சென்றாள். அப்போதும் காரிலேயே அவள் அமர்ந்து கொள்ள அர்ச்சனா மட்டுமே உள்ளே சென்றார்.
யுவனுடன் பள்ளியில் படிக்கும் போது நடந்த சண்டை அவன் கல்லூரி சென்ற பின் தான் ஓய்ந்தது. ஆராதனா பள்ளியை முடித்ததும் யுவன் தன் படிப்பை முடித்து விட்டு மீணடும் நாடு திரும்பி விட்டான். அவனை பார்க்க பிடிக்காமல் தான் ஆராதனா சொந்த ஊரை விட்டு விட்டு சென்னையில் சென்று படித்தாள்.
இப்போது அவன் இருக்கும் இடத்திற்கே வேலைக்கு வந்து சேர்ந்து விட்டாள். அவளை நினைத்து அவளுக்கே பாவமாக இருந்தது. ஆனால் அதற்காக வேலையை விட அவளுக்கு மனம் இல்லை. வேலை செய்வதில் அவ்வளவு ஆர்வம் எல்லாம் அவளுக்கு எப்போதும் இருந்தது இல்லை. எதிர்காலத்தை பற்றி அவள் எப்போதுமே சிந்தித்தது இல்லை. நிகழ்காலத்தை நிம்மதியாக வாழ விரும்புபவள். அதனால் வேலை பார்ப்பது சம்பாதிப்பது எல்லாம் அவளது மூளையில் இருந்ததே இல்லை.
இன்று வேலை என்று கிளம்பி வந்து விட்டாள். எங்கும் தடுமாறாமல் நேராக அலுவலகம் வந்து இறங்கி விட்டாள். உள்ளே சென்று ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அலுவலகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளையும் அறியாமல் யுவனின் திறமை அவளை வியக்க வைத்தது.
‘பரவாயில்லயே..’ என்று மனதில் பாரட்டியபடி அங்கு விசாரித்து விட்டு உள்ளே சென்றாள். நிறைய பேர் அவளை கடந்து சென்று கொண்டிருந்தனர். யாரும் அதிகம் பேசவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தனர்.
ஆராதனா ஐந்தாவது தளத்திற்கு சென்றாள். அங்கு ஒருவரிடம் கேட்க “நீங்க மிஸ் ஆராதனா வா?” என்று கேட்டார் அவர்.
“ஆமாங்க”
“என் கூட வாங்க” என்று அழைத்து சென்றவர் ஒரு அறையை காட்டினார்.
“உள்ள உட்காருங்க. சார் ஒரு மீட்டிங்ல இருக்கார். வந்துடுவார்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.
‘இப்ப தான வந்தான்? அதுக்குள்ள மீட்டிங்கா?’ என்று நினைத்தவள் உள்ளே சென்று அமர்ந்தாள். அறை சற்று நன்றாகவே இருந்தது. நாற்காலியில் அமர்ந்து அந்த அறையை சுற்றி பார்த்துக் கொண்டிருக்க கதவை திறந்து கொண்டு யாரோ உள்ளே வந்தனர்.
ஆராதனா அலட்சியமாக திரும்பி பார்த்தாள். உள்ளே வந்தவனை பார்த்து ஆச்சரியத்தில் எழுந்து விட்டாள். அவள் எதிர் பார்த்தது யுவனை. ஆனால் வந்தவன் வேறு ஒருவன்.
“என்ன மரியாதை எல்லாம் பலம்மா இருக்கே?” என்று அவன் கேட்க “டேய்… இம்ரான்.. நீ எப்படி இங்க?” என்று கேட்டு வைத்தாள்.
“முடிஞ்ச்சு… இப்ப தான் மரியாதை கிடச்சது னு சந்தோச பட்டேன். அதுக்குள்ள டேய் யா?”
“சாரி.. சாரி.. இங்க நீ கொஞ்சம் பெரிய ஆளோ?”
“அப்படியும் சொல்லிக்கலாம். உட்கார்..” என்று கூறி விட்டு அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே… நீ அப்பா கூட தான வேலை பார்த்த? இங்க எப்போ வந்த?”
“அத ஏன் கேட்குற? எனக்கு னு கடவுள் படைச்ச ஸ்பெஷல் ஃப்ரண்ட் இருக்கானே… ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி அடிக்காத குறையா இங்க இழுத்துட்டு வந்துட்டான்”
“போடா னு சொல்லிட்டு போயிட வேண்டியது தான?”
“நீ வேணா சொல்லுவ.. என்னால சொல்ல முடியாது”
“ஏன்?” என்று ஆராதனா ஒரு மாதிரி கேட்க “ஏன்னா.. அவன் என் நட்பு… அவனுக்கு உதவி னு வந்தா செய்யனும்” என்று கூறினான்.
“என்ன உதவி?”
“அதெல்லாம் இன்னொரு நாள் விளக்கமா சொல்லுறேன்… ஆமா நீ எப்படி இங்க? அவன கண்டாலே ஆகாது னு சொல்லிட்டு இங்க வேலை செய்ய வந்துருக்க?”
“அது ஒரு சவால்… அதெல்லாம் உடனே சொல்லி முடிக்குற கதை இல்ல”
“அதுவும் சரி தான். இங்க தான இருப்ப.. அப்புறமா கேட்டுக்குறேன்… சரி.. உனக்கு எது நல்லா வரும் னு கண்டு பிடிச்சு அந்த வேலைக்கு உன்ன அனுப்புறது தான் என்னோட வேலை. ஸ்டார்ட் பண்ணலாமா?”
ஆராதனா நேராக அமர இம்ரான் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான். அவளும் சளைக்காமல் பதில் கூறினாள். அவளது அறிவை அலசி ஆராய்ந்தவன் அவளை டிசைனிங் பிரிவில் சேர்க்கும் முடிவுக்கு வந்தான்.
“சோ… உனக்கு பொண்ணுங்க சைக்காலஜி நல்லா வருது.. அது டிசைனிங் ல நல்லா செட் ஆகும். அங்க போயிடுறியா?”
“நோ ப்ராப்ளம்”
“அங்க உனக்கு என்ன போஸ்டிங் தர்ரது னு உன் ட்ரைனிங் தான் டிசைட் பண்ணும்.. என் கூட வா” என்று அழைத்துச் சென்றான்.
நான்காவது தளத்தில் ஒருவரிடம் அழைத்துச் சென்று அறிமுக படுத்தினான்.
“ஒன் மன்த் ட்ரைனிங் ப்ரீயட்.. அது தான் உன் வேலைய டிசைட் பண்ணும். நீ யாரு னு இங்க இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. நீயும் காட்டிக்க வேணாம்” என்று கூறி அங்கு விட்டு விட்டு சென்று விட்டான்.
இம்ரான் யுவனின் பள்ளி தோழன். ஆராதனா யுவனுக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு அப்பாவி ஜீவன். இருவருக்கும் சாமதானம் செய்ய வந்து வாங்கிக் கட்டிக் கொள்வான். ஆனாலும் இருவரையும் அமைதி படுத்தவே பார்ப்பான்.
உலகில் ஆராதனா சந்தித்த அதிக பொறுமைசாலி என்றால் அது இம்ரான் தான். எதற்குமே கோபப்படாத அவனது குணம் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். யுவனின் நண்பர்களை எப்போதும் ஆராதனா கண்டு கொள்ள மாட்டாள். இம்ரானை தவிர.
அவனை இங்கு பார்த்ததில் அவளுக்கு ஏக போக சந்தோசம். யுவனிடம் சண்டை போடுவோமோ என்று யோசித்துக் கொண்டே தான் வந்திருந்தாள். இம்ரான் இருந்தால் நிச்சயமாக சண்டையின் வாய்ப்பு குறைவு என்று தோன்ற நிம்மதியாக தன் வேலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.
அவள் வேலை முடிந்து கிளம்பிய பின்னும் யுவன் அவள் கண்ணில் படவில்லை. வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் கழித்து தான் அவன் வீட்டிற்கு வந்தான். ஆராதனா அலுவலக கதையை அர்ச்சனாவையும் பத்மினியையும் அமர வைத்து பேசிக் கொண்டு இருக்க யுவன் வேகமாக வந்தான்.
வந்த வேகத்தில் அறைக்குள் நுழைத்து சில கோப்புகளை எடுத்துக் கொண்டு கிளம்ப உணவு மேசையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்த ஆராதனா கண்ணில் பட்டாள்.
“ஹே.. ஆரா.. வொர்க் எப்படி இருந்துச்சு?” என்று கேட்க “நல்லா தான் இருந்துச்சு” என்றாள்.
“ஓகே.. எதுவும் பிரச்சனை னா இம்ரான் கிட்ட சொல்லு பார்த்துப்பான்”
“ஓகே” என்று ஆராதனா தோள் குலுக்க யுவன் திரும்பி நடந்தான்.
“ஹே.. ஒரு நிமிஷம் நில்லு..” என்று ஆராதனா நிறுத்த “என்ன?” என்று கேட்டான்.
“ரொம்ப அவசரமா போறியா?”
“ஆமா.. ஏன்?”
“சரி நைட் பேசிக்கிறேன். நிறைய கேள்வி கேட்கனும்”
“ம்ம்.. நைட் வந்து பேசுறேன். பை” என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டான்.
இரவு உணவு முடிந்து ஆராதனா வாசலில் நடந்து கொண்டிருக்க யுவனின் கார் சத்தம் கேட்டது. எட்டி பார்த்தவள் மீண்டும் நடையை தொடர்ந்தாள். யுவன் வீட்டுக்குள் சென்று சாப்பிட்டு விட்டு வந்து பார்க்க ஆராதனா ஊஞ்சலில் அமர்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தூங்கலையா நீ?” என்று கேட்டுக் கொண்டே வந்த யுவன் ஊஞ்சலின் மறு பக்கம் அமர்ந்து காலை உந்தி ஆட்டி விட்டான்.
“உன் கிட்ட நிறைய கேள்வி கேட்கனும் னு சொல்லி இருந்தனே”
“என்ன விசயம்?”
“இம்ரான் ஏன் இங்க வேலை பார்க்குறான்?”
“எனக்கு ஹெல்ப்க்கு தான்”
“அப்படி என்ன ஹெல்ப்?”
“அடிக்கடி ஒரு மாசம் ரெண்டு மாசம் னு வெளிய போக வேண்டி இருக்கு. அப்போ இங்க பார்த்துக்க ஆளு வேணும். அதுக்கு தான் அவன வர வச்சேன்”
“ஓஓஓ…”
“வேறென்ன?”
“அடிக்கடி வீட்டுக்கு வந்து ஃபைல எடுத்துட்டு ஓடுறியே… அத ஆபிஸ்ல வைக்க வேண்டியது தான?”
“அது முக்கியமான ஃபைல்ஸ்.. அங்க சும்மா வைக்க முடியாது. வீட்டுல சேஃப்பா வச்சு தேவை படும் போது நானே வந்து எடுத்துப்பேன்”
“இதுனால டைம் வீணாகாதா?”
“ஆகாது… எனக்கு அப்போ தான் ரிலாக்ஸ் டைம்… அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வர்ர வர மைண்ட்ட நல்லா ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். திரும்ப போகும் போது அடுத்து என்ன வேலை னு யோசிச்சுட்டே போவேன். அந்த ரிலாக்ஸ்க்கு அப்புறம் யோசிக்கும் போது மைண்ட் நல்லா வேலை செய்யும்.
அதுக்கு தான் முக்கியமான எல்லாத்தையும் வீட்டுல வச்சுடுறேன். அது மட்டும் இல்லாம வீட்டு சூழல் எல்லாம் ஒரு அமைதி கொடுக்கும். அது கண்டிப்பா தேவை. சாதாரண வேலை எல்லாம் ஆபிஸ்ல இருந்தே போயிக்குவேன்”
“நல்லா தான் டா உனக்கு அறிவு வேலை செய்யுது..”
“சரி வேற என்ன?”
“இந்த ட்ரைனிங் எல்லா புது ஆளுங்களுக்கும் நடக்குமா? இல்ல எனக்கு மட்டுமா?”
“எல்லாருக்கும்.. மத்தவங்களுக்கு டைம் நிறைய கிடைக்கும். உனக்கு ஒரு மாசம் தான்..”
“ஏன்?”
“ஒரே மாசத்துல எல்லாருக்குமே எந்த வேலைல போடனும் னு டிசைட் பண்ணிடுவாங்க. அடுத்து அவங்களுக்கு அந்த வேலைக்கான ட்ரைனிங் தான் நடக்கும்.”
“ஓஹோ…”
“மத்தவங்களுக்கு சொல்ல மாட்டாங்க.. எதுல எல்லாம் பெஸ்ட் னு டெஸ்ட் பண்ணிட்டே இருப்பாங்க. உனக்கு அந்த ஒரு மாசம் போதும் னு சொல்லிட்டேன்”
“சரி சரி.. என்ன அங்க இருக்க யாருக்குமே தெரியாதா?”
“என்னையும் இம்ரானையும் தவிர யாருக்குமே தெரியாது”
“இத வேற நான் மெயின்டைண் பண்ணனுமா?”
“ஒரு மாசம் பாரு. அப்புறம் எல்லாருக்கும் சொல்லிக்கலாம்”
“ஓகே.. நீ என் கண்ணுல படாத வர எதுவுமே நடக்காது.. இப்போ போய் தூங்குறேன்”
“குட் நைட்”
“ம்ம் குட் நைட்”
ஆராதனா உறங்க சென்று விட யுவனும் வந்து படுத்து உறங்கி விட்டான். அடுத்த ஒரு மாதமும் ஆராதனா வேலையை மட்டுமே கவனித்தாள். மற்ற அத்தனையும் தூக்கி போட்டு விட்டு வேலையை மட்டும் கவனிக்க மாதமும் நிறைவு பெற்றது.
முதல் மாத சம்பளம் என்று அவளுக்கு பணம் வந்ததை பார்த்ததும் அவளையும் அறியாமல் கண் கலங்கி போனது. அந்த நாளை ரொம்பவுமே சந்தோசமாக கொண்டாடினாள்.
அடுத்த நாள் அவளை அலுவலகத்தின் மேல் தளத்திற்கு இம்ரான் அழைத்துச் சென்றான். அங்கு இருந்த ஒரு அறையில் தான் யுவன் இருந்தான். இந்த ஒரு மாதத்தில் இந்த இடத்திற்கு ஆராதனா வந்ததே இல்லை.
அந்த அறையை சுற்றியும் பார்க்க “இவ ரிப்போர்ட் வந்துடுச்சா உனக்கு?” என்று இம்ரான் கேட்டான்.
“ம்ம்.. நேத்தே வந்துடுச்சு”
“அப்போ மத்த எல்லாம் நீ சொல்லிக்க. நான் கிளம்புறேன்”
“நில்லு… ஓடாத.. இதென்ன?”
யுவன் விரித்து காட்டிய பக்கத்தை பார்த்த இம்ரான் “இது என் கிட்ட வரலையே?” என்றான்.
“ரிப்போர்ட் பார்க்குறத விட வேற என்ன கிழிக்குற நீ?”
“ஏய் எனக்கு வரல.. வந்தா பார்த்து இருப்பேன்.. நான் போய் செக் பண்ணுறேன்”
“போ”
இம்ரான் வேகமாக சென்று விட “உட்கார்” என்றான் ஆராதனாவை. அவளும் ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.
“உனக்கு பர்மனெண்ட் வேலை வந்தாச்சு. எது தெரியுமா?”
“கெஸ் இருக்கு.. பட் தெளிவா தெரியல”
“கெஸ் என்ன னு சொல்லு?”
“டிசைனிங் னு இம்ரான் சொல்லிட்டான். அதுல டிசைனிங் அனலைஸ் னு நினைக்குறேன். அது இல்லனா செலக்ஷன் டீம்”
“நல்லாவே கெஸ் பண்ணி இருக்க.. எஸ்.. டிஷைனிங் பைனலிஸ் பண்ணுற டீம்”
“ஓ.. ஓகே”
“அங்க ஆறு பேர் இருப்பாங்க. எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸான ஆளுங்க. நீ புது ஆளு.. சோ பார்த்து”
“நோ ப்ராப்ளம்”
“உன்ன யாரு னு எல்லாருக்கும் சொல்ல போறேன்”
“ஏன்?”
“இதுக்கு மேல உன் திறமைய நீ ப்ருஃப் பண்ண எதுவுமே இல்ல. சோ சொல்லிடலாம்”
“ஓகே”
யாரையோ அழைத்தவன் ஆராதனாவை அழைத்து செல்ல கூறினான்.
“லன்ச்க்கு மேல ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. அரேன்ஜ் பண்ணிடு.. யாரெல்லாம் வரனும் னு இம்ரான் கிட்ட கேட்டுக்கோ” என்று யுவன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆராதனா அறையை விட்டு வெளியே வந்து விட்டாள்.
அவளது குழுவில் அவளை சற்று மேம்போக்காக நடத்தினர். அப்போது தான் எதற்காக யுவன் தன்னை பற்றி கூற முடிவெடுத்தான் என்று அவளுக்கு புரிந்தது. அவன் அத்தனையும் யோசித்து செய்வதை நினைத்து அவளுக்குள் பிரம்மிப்பு வந்தது.
‘சும்மா வா அவனுக்கு ஆதரவா இத்தனை பேர் இறங்குறாங்க ‘ என்று நினைத்துக் கொண்டாள்.
மதிய உணவு முடிந்த ஒரு மணி நேரத்தில் முக்கியமானவர்கள் முன்பு ஆராதனா யார் என்று அறிவித்து விட்டான் யுவன்.
“ஆராதனா வேற யாரும் இவ்ல. நம்ம ரகுநாதன் சாரோட ஒரே பொண்ணு. ” என்று கூறி விட பலர் அதிர்ச்சியாக பார்த்தனர்.
அதில் சற்று முன் அவளை மதிக்காமல் இருந்த சிலரும் அடக்கம்.
“முதல்லயே சொல்லாததுக்கு காரணம் தெரிஞ்சு இருக்கும். நான் இங்க வந்தப்போவே யாரு னு சொல்லாம தான் வந்தேன். அப்படி தான் ஆராதனாவும்.”
ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு கதை சொன்ன போதும் எல்லோரும் கை தட்டி வரவேற்றனர்.
சில நிமிட பேச்சுக்கு பின் அந்த கூட்டம் கலைந்து விட ஆராதனாவை மட்டும் யுவன் அனுப்பவில்லை.
“எல்லாமே விளங்கிடுச்சா?” என்று யுவன் கேட்க ஆராதனா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
“சரி இனி மாசத்துல ஒரு நாள் தான் மீட் பண்ணுவோம் ஆபிஸ் ல. ஆல் தி பெஸ்ட்”
“தாங்க்ஸ்… பட் அந்த ஒரு நாள் எது?”
“உன் டீம்க்கு போ . சொல்லுவாங்க”
“ஓகே”
“எதுவும் டவுட் னா வீட்டுக்கு வந்து கேளு”
“நோ தாங்க்ஸ்”
“சரி போ .. உன் நஷ்டம்”
ஆராதனா அங்கிருந்து வெளியே வர பலர் அவளை மரியாதையாக பார்த்தனர். அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு கொடுத்த வேலையை பார்த்தாள்.
தொடரும்.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Thank you sis 😍