Loading

,எப்பொழுதும்   போல்

காலையில்   நாலு      மணிக்கு

எழுந்து   விட்டாள்  தாரிணி,

இன்னும்   விடியவில்லை,

சூரியனின்   கிரணங்கள்

ஆரஞ்சும்  ,சிவப்புமாக    பூமியை

நோக்கி    வந்து கொண்டு    இருக்கிறது,      இதமான    பங்களூர்   குளிர்   உடலை   தழுவி

சென்றது,    தாரிணி  வாசலை

பெருக்கி  கோலம்  போடுகிறாள்

பெரும்    அழகியான    தாரிணி

அந்த     விடிகாலை  சூரியனின்

ஆரஞ்சு ,   சிகப்பு   கிரணங்களில்

ஜொலிக்கிறாள், முன்  பக்கம்

விழுந்த   தலை  முடியை    பின்னால்   தள்ளி   விட்டு   நிமிறுகிறாள்,     எங்கோ   கேட்கும்

கோவில்   மணி   ஓசையில்

மயங்கி   நிற்கிறாள்,  ஒரு  நிமிடம்

தான்,  மாமியார்   எழுந்து

விடுவாள்   என்று  மனதில்

பயம்   தோன்றிளது

உடனே    உள்ளே   போய்

பரபரவென்று   பால் காய்ச்சி

,சுவாமிக்கு   நைவேத்யம்

பண்ணுகிறாள்,  அதற்குள்

மாமியாரின்   குரல்    கேட்கிறது,

“தாரிணி   காபி   ரெடியா”

ஓடிப்போய்   தாரிணி   ஒரு

டம்ளர்   ,நுரை  பொங்கும்   காபியை   கொடுக்கிறாள்,

அடுத்தது   எல்லோருக்கும்

இட்லி ,  இட்லி   பானையை

அடுப்பில்   ,வைத்து   விட்டு

கணவனை  எழுப்புகிறாள்

குளித்து   தலையில்   துண்டுடன்

தங்கசிலை   போல்   நிற்கும்

தாரிணியை   பார்க்க  கூட  இல்லை,  காபி   வாங்கி

குடித்து   விட்டு      காலேஜீக்கு

சீக்கிரம்   போகணும்,    வென்னீர்

எடுத்து    வை”

யாருக்குமே    நினைவில்லை

அன்று   அவர்கள்   திருமண

ஆண்டு   விழா  ,,திருமணம்

முடிந்து    இரண்டு   வருடம்

ஆகி   விட்டது,    கணவனுக்காவது

நினைவிருக்கும்   என்று   நினைத்தாள்,  முதலாவது

ஆண்டு   விழா   கணவர்   ஆபீஸ்.

வேலையாக   சிங்கப்பூர்   போய்

இருந்ததால்   கொண்டாட

முடியவில்லை,  கணவனோ

ஒன்றிலும்      பெரிய   ஆர்வம்

காட்டாத   மனுஷன்,,

“ஏன்னா   இன்னைக்கு

கொஞ்சம்   சீக்கிரம்  காலேஜ்லேந்து

வரேளா?   இன்றைக்கு   நம்முடைய

திருமண  நாள்”  சாயங்காலம்

கோவிலுக்கு   போய்   விட்டு

வரலாம்  ”  முடிந்தா   பார்க்கலாம்”

என்று   சொல்லி  விட்டு   போய்

விட்டான்,  ஏமாற்றத்தால்

அவள்   கண்ணீர்  ,வடித்தாள்

அவள்””,பழைய     நாட்களை;

நினைத்துப்   பார்த்தாள், ஏழு

மணிக்கு    முன்னால்   அவள்

எழுந்ததே   இல்லை, , அம்மா

கையால்   காபி  குடித்து  விட்டு

அண்ணன்   கூட    ஓடப்

போவாள்,,,வந்தவுடன்  குளித்து

விட்டு   ஏதோ   சாப்பிட்டு   விட்டு

காலேஜீக்கு    ஓடுவாள்,,

எல்லா   நவீன   வசதிகளுடன்

கொண்ட   பங்களா,    காலேஜிலீருந்து   வீட்டுக்கு   வந்தாலும்   பேசாம   படுத்துணடு

புஸ்தகம்   படித்துக்   கொண்டு

இருப்பாள், ,சமையல்   உள்.பக்கமே

போக   மாட்டாள்,  பட்டாம்பூச்சி

போல்   பறந்து   கோண்டே   இருப்பாள்   அவளை     கல்யாணம்

என்ற   தளைகளில்    சிக்க   வைத்து   விட்டார்கள்,   வெளி

பகட்டை   பார்த்து  மயங்கி

விட்டார்கள்”   பெற்றோர்   மாப்பி்ளை   வீட்டுக்கு   வந்த பொழுது   முதல்  ,ஹாலிலேயே

பேசி  விட்டு   போய்  விட்டனர்

மாப்பிள்ளை   பெரிய

காலேஜ்   ப்ரொபசர்   என்றதால்

பெரிதாக  “விமர்ச்சையாக   நடந்தது,    இருவருமே   நல்ல

ஜோடி,,   ஆறு   அடி   உயரம், உயரத்திற்கேற்ற   நல்ல  பருமன்்

ஜீன்ஸ்  பேன்ட்,   நெட்டட்   ஷர்ட,

ரேபான்   கூலிங்   க்ளாஸ்

என்று   பெண்  பார்க்க   வரும்

பொழுது    அமர்க்களமாக   வந்தான்,    அவளிடம்     அதிகம்

பேசவில்லை,    பேராசிரியருக்கு

உரிய   கெத்து,   வீ்ட்டில்   மாமனார்

மாமியார்   ,ஒரு   நாத்தனார்,

மாப்பிள்ளை   வருண்,

கல்யாணமாகி    வந்ததில்

இருந்தே    வீட்டில்   தகராறு,

முதல் நாள்   ஏழு   மணிக்கு    எழுந்து    வந்தாள்   தாரிணி,

அப்பொழுது    அவள்   கேட்ட

வார்த்தைகள்   அவள்   உயிர்

உள்ள ,வரை மறக்க   முடியாது,

“பெரிய ,பட்டத்து   ராணி”

ஏழு   மணிக்கு   முன்னால்

எழுந்திருக்க    மாட்டாள், காபி

யார்   போடுவா?

கிச்சனுக்குள்    போன   தாரிணீ

தலை    சுற்றி   விழாத   குறை

வெளியில்     இவ்வளவு    நாகரீகமாக    இருந்தும்   வீட்டில்

இப்பொழுதும்     விறகு   அடுப்பு

தான்,  இவளோ   விறகு   அடுப்பை

பார்த்ததில்லை   ,வீட்டில்  காஸ்

அடுப்பு    தான்    நல்ல   வேளை

உதவிக்கு   ஒரு   சமையல்காரி

இருந்ததால்    அவளுடைய

உதவியால்   அடுப்பு  ஊத

எல்லாம்  கத்துக்   கொண்டாள்,

எத்தனையோ   நாட்கள்  ஈர

விறகோடு    போராடி   இருக்கிறாள்

முதல்  நாள்   கணவனிடம்;

இதை    பற்றி    சொன்ன   பொழுது

“அம்மா   பெரியவா   ,அவங்க

சொன்னபடி   கேளு,   “எனக்கு

காலேஜ்லேயே    ஆயிரம்   ப்ரச்னைகள்    இருக்கு,  நீ    வேற

புது   ப்ரச்னை  கொண்டு    வராதே

அப்பொழுதே     புரிந்து   விட்டது

கல்யாணத்துக்கு   முன்   அவள்.

கண்ட   கனவு    எல்லாம்   சிதைந்து

விட்டது,  கணவன்   தன்னை  அன்போடும்,

காதலோடும்     என்றும்

மகிழ்விப்பான்,, அதுக்கெல்லாம்

கொடுத்து   வைக்கணும்,

இப்போ  சும்மா  திட்டாம   இருந்தாலே    போதும் ,  ஒரு

இயந்தரத்தனமான   வாழ்க்கைக்கு

தன்னை   பழக்கி  கொண்டாள்,

பொங்கலுக்கு   சீர்  கொண்டு   வந்தார்   தந்தை,

அப்பொழுது   அவள்   சமையல்

உள்ளில்    ஈர   விறகோடு   போராடி;

விட்டு   முகத்தில்   இருந்த  கரியை

அலம்ப   வெளியில்  வந்தாள,

முகத்தில்  கரியும், கலைந்த

தலையும்,    சிவந்த   கண்களும்்

கசங்கிய   புடவையும்   பார்த்து

தந்தையின்  ,,வயிறு  கொதித்தது

எப்படி    மகாராணி   மாதிரி

ஆசையுடன்   வளர்த்த   பெண்

இன்று     வேலைக்காரி   மாதிரி

வேலை  செய்து     கொண்டு;;

இருக்கிறாள்,    பின்  பக்கத்தில்

கட்டிய  மாடுகளுக்காக   அவள்

புல்கட்டை    தூக்கி    கொண்டு

ஓடுவதை   பார்த்தவுடன்   அவருக்கு    நன்றாக   புரிந்து

விட்டது      இந்த   வீட்டில்   தன்

பெண்ணின்   கதி   என்ன   என்று?

உடனே   தன்   கூட   கிளம்பச்

சொன்னார்   தாரிணியை,

தாரிணி   தான்   சந்தோஷமாக

இருப்பதாகவும்   கவலைப்பட

வேண்டாம்   எல்லாம்   கால

போக்கில்   சரியாகும்,

தந்தை   மாமியாரிடம்   இரண்டு

வார்த்தை   பேசி   விட்டு  கிளம்பி

விட்டார்,    ஒரு   வாய்   காபி

கூட  குடிக்காமல்   போய்   விட்டார்,

எவ்வளவு   ஆசையுடன்   வந்தார்,

அந்த   முழு     தினமும்   தாரிணி

வீட்டில்   சாப்பிட்டு   அவள்  கூட.பேசி    சிரிக்க   வேண்டும்

என்று,  எல்லாமே   மண்ணாகி   விட்டது,  ”

,      பழைய “நினைவுகளில்

மூழ்கி    இருந்த   தாரிணி

ஹாலில்   இருக்கும்   குக்கூ   க்ளாக்     மணி   மூன்று   அடித்தவுடன்   திடுக்கிட்டு

எழுந்தாள்,  மாமியாருக்கு  ,காப்பி

போடணும்   மாமனாருக்கு  ,டீ

போடணும்   “சே என்ன   அடிமைத்தனமான   வாழ்க்கை

எழுந்து   முகம்  கழுவி   காபி

போட்டு   மாமியாருக்கும்,டீ  போட்டு

மாமனாருக்கும்  கொடுத்தாள்,

சீக்கிரமே   தலை   வாரி  ,

கணவனுக்கு   பிடித்த   பச்சை   சாரியை   கட்டினாள்,   தங்களுடைய   படு்க்கை   அறையில    பூ    வைத்து   அலங்கரித்தாள்,  ஒரு  கேக்கும்

ஆர்டர்   பண்ணி     வாங்கி  இருந்தாள்  ,  மணி   ஓடி   கொண்டே

இருந்தது,  பெரியவர்கள்   இருவரும்   சாப்பிட்டு   விட்டு

படுத்து  விட்டனர்,      மணி   பன்னண்டு ,  வாசலில்  பெல்

அடித்தது,   இவள்   கோபத்துடன். போய்   கதவை   திறந்தாள்,,

அவள்     கணவன்   நன்றாக

குடித்து  ,விட்டு   நிற்க  ,முடியாமல்

தடுமாறி  ,நிற்கிறான்

அவள்   ஒரு   நிமிடம்

திகைத்து்ப   போய்   நிற்கிறாள்,

பிறகு  மெள்ள   உள்ளே    கூட்டிண்டு    போய்   கட்டிலில்

படுக்க    வைக்கிறாள்   கேக்

அப்படியே  டேபிளில்   காய்ந்து

கிடக்கிறது, எவ்வளவு   ஆசையுடன்

காத்துக்   கொண்டு   இருந்தாள்,

திருமண   நாளை     கொண்டாட.

எல்லாமே   மண்ணுக்கு  ,இரையாயிடுத்து,  அதுவும்

குடித்து   விட்டு   வந்து  இருக்கார்,

இவருக்கெல்லாம்   பெண்டாட்டி

எதற்கு?  கோபத்தில்   அழுது

கொண்டே   தூங்கி   விட்டாள்,

மறுநாள்  காலையில்

அவள்  ,   எழுந்திருக்கவில்லை,

வருண்     தலைவலியுடன்

எழுந்தான், குடித்த  ,மயக்கம்

போகவில்லை,  தாரிணி  ,காபி;  கொண்டு   வந்தால்    கொஞ்சம்  தலைவலி  குறையும்,

அவனுக்கு   நேற்றைக்கு ,திருமண   நாள்   என்று   நினைவு

இருந்தால்   தானே?    ப்ரமோஷன்.

வந்ததற்கா    நண்பன்   ஒருவன்

கொடுத்த   பார்ட்டியில்    குடித்து

விட்டான்,  அவன்  ,குடிக்கிற  ,டைப்

அல்ல,  ஆனால்   அன்று   நணபர்கள்   எல்லாம்   சேர்ந்து

அவனை  குடிக்க   வைத்து  விட்டார்கள்,  எப்படி  ,வீடு  வந்து

சேர்ந்தான்   என்று   அவனுக்கு

தெரியலை,  ,குடித்ததற்காக   தாரிணியிடம்   மன்னிப்பு

கேட்கலாம்   என்று   பார்த்தால்

அவளையே   காணோம்,

,கோபத்துடன்  வெளியே

வந்தான் ,    சோபாவில்  காய்ந்த

சருகாய்  ,கிடக்கும்   தாரிணியை

பார்த்து   திடுகிட்டான்,  அவளை

தொட்டு   எழுப்பும்    போது   தான்

தெரிந்தது   அவள்   உடம்பு

;ஜீரத்தால்   தகிக்கிறது,    ஜன்னி

வந்தது   போல்   உடம்பு

தூக்கி     தூக்கி   போடுகிறது.

வருண்   உடனே  டாக்டருக்குற்

போன்   பண்ணுகிறான்,

அம்மாவுக்கும்  விஷயம்   சொலகிறான்,  அம்மா  அலுத்து

கொள்கிறாள்,    “வந்த  மருமகளும்

வியாதியோடு   ,வரணுமா?

இந்த  இரண்டு   வருஷத்தில்

ஒரு   நாள் ,கூட   தலைவலி

என்று   படுத்ததில்லை,  ஓரு

நாள்  ,படுத்தற்காக   இத்தனை

திட்டு, இது   எல்லாம்   கேட்கும்

நிலையில்  இல்லை  தாரிணி,

டாக்டர்   வந்தார்,  ஊசி

போட்டார்   ஜீரம்  குறையவில்லை

என்றால்   மறுநாள்   ஆஸ்பிடலில்

அட்மிட்     பண்ணலாம்   என்றார்,

,”அது   வேறயா   என்று   அம்மா

முணு  முணுத்தாள்,  என்னால்

எல்லாம்    அவளை  பார்த்துக்.;

கொள்ளமுடியாது, “நீ  பார்த்துக் கோ”   என்று  சொல்லி  விட்டு

படுக்க  போய்  விட்டாள்” சே

என்ன அம்மா ?துளிக்  கூட

கருணையே   இல்லையா?

“நீங்க   தூங்குங்க” நான்  அவளை

பார்த்துக்   கொள்கிறேன்

என்றான்,,   சுபாவத்தில்  வருண்

நல்லவன்   தான்”  “உணர்ச்சிகளை

வெளிப்படையாக   பேச  தெரியாதவன்,  தாரிணி  மேல்

அன்பு   இல்லாமல்   இல்லை,

அதை  மற்றவர்  ,போல்   வெளிப்

படையாக    பேசத்  தெரியவில்லை

காதல்  “வாரத்தைகள்  பேச

அவனுக்கு   வரவில்லை

நாள்  பூரா   அவள்

பக்கத்திலேயே  ,இருந்தான்,

மருந்து  சமயத்தில்  கொடுத்தான்

இரவு   பூராவும்   அவள்  ,அருகில்

இருந்து   அவள்  முழிக்கும்  பொழுது  ,,சிறிதளவு   கஞ்சி

.கொடுத்தான்” ,முகத்தை   தண்ணீர்   விட்டு   துடைத்து

விட்டான்,  மறு நாளும்    ஜீரம்

குறையாததால்   ,அவளை

ஆஸ்பிடலில்   அட்மிட்   பண்ணி..

விட்டான்” ,காலேஜீக்கு   கூட

போகாமல்   அவள்  கூடவே

ஆஸ்பிடலில்   இருந்தான்,

எல்லா   டெஸ்டும்   எடுத்த  பிறகு

தெரிந்தது    அவளுக்கு   வந்து

இருப்பது  ,டைபாய்டு   ஜீரம்

வருண்   காலேஜீக்கு   லீவு

போட்டு    ஆஸ்பிடலே   கதி

என்று  கிடந்தான்,  இரவு   அங்கு

இருக்க   அனுமதி   இல்லாததால்

வீட்டிற்கு   வந்து   தூங்கி   விட்டுஜி

காபியுடன்   ஓடுவான், கூட

இருந்து   அவளுக்கு   தலை;

வாரி  விடுவதில்   இருந்து   பழம்

ஊட்டி   விடுவது   வரை   எல்லாம்

செய்தான்,  ஒரே    ஒரு  நாள்

அவன்   அம்மா   வந்து  பார்த்தாள்

ஜீரம்   விட்டு   விட்டு   வருவதால்

மேலும்  சில  டெஸ்டுகள்   செய்தார்கள்,  மருந்து  மாற்றி

கொடுத்தார்கள்,  25  நாட்கள்;ஆகி.

விட்டது,   வருண்   ஆஸ்பிடல்

வருவதை   நிறுத்த   வில்லை,

இதற்குள்   தாரிணி    ஆஸ்பிடலில்

இருப்பதை   கேள்விபட்ட   பெற்றோர்    அவளை   பார்க்க

ஆஸ்பிடலுக்கு   வந்தனர்,  இளைத்து    போயிருந்த   தாரிணியை    பார்த்து   அழுதனர்

ஆஸ்பிடலில்   இருந்து   டிஸ்சாரஜ்;

ஆகும்   பொழுது   தாங்கள்     தங்கள்   வீட்டிற்கு   கூட்டிண்டு

போய்    இரண்டு     மூணு  மாதம்

வைத்து   இருந்து   உடம்பு

தேறினதுக்கப்புறம்   அனுப்புவதாக

சொன்னார்கள்,  வருணுக்கு;

இஷ்டம்   இல்லை,  இருந்தும்.

பெற்றோர்  ,கேட்கும்   பொழுது

முடியாது    என்று   எப்படி

சொல்வது?   ;இந்த   25   நாட்களுக்குள்   தான்   அவன்

தாரிணியை    எவ்வளவு   நேசிக்கிறான்    என்று   தெரிந்தது,

அவள்   இல்லாமல்   ஒரு,  நாள்

கூட   இருக்க   முடியாது   என்று

தோன்றியது,   தன்  வாழ்க்கையை

அவள்   எப்படி   மாற்றி   விட்டாள்

என்று   நினைத்தாலே    ஆச்சர்யமாக   இருந்தது,

காலேஜீக்கு  ,ஒரு  ,நாள்   கூட

லீவு  போடாதவன்   இன்று    ஒரு;;

மாதம்  ,லீவு    போட்டு    அவளுக்காக  ஆஸ்பிடலே

கதியென்று  ,கிடக்கிறான்,

கோவிலுக்கு    போகாதவன்

இன்று   அவள்   சரியாக   வேண்டும்    என்று   தினமும்.கோவில்   போகிறான்

,இன்று   டிஸ்சார்ஜ் ஜனனிக்கு.

அவளை    அழைத்துப்   போக

தாரிணியின்    பெற்றோர்   வந்து

விடுவார்களே”  ?வருணுக்கு

அவளை   அனுப்ப   துளிக்கூட

இஷ்டம்    இல்லை,   இனியும்

லீவு     போட  முடியாது,  தாரிணி

ரொம்ப   தளர்ந்து    விட்டாள்,

அவளுக்கு   இப்பொழுது   ரெஸ்ட்

தேவை,   நல்ல  கவனிப்பும்.

போஷாக்குள்ள   ஆகார மும்

தேவை,  அதற்கு    பெற்றோர்

வீடு  தான்   சரி,  இங்கே   வருணின்

அம்மாவால்   ஒன்றும்   முடியாது”

தாரிணியை   பார்க்கிறான்,

அவன்   கண்களில்   தெரிந்த

காதலும்,   பரிவும்   அவளுக்கு

புதுமையாக   இருந்தது,,

சந்தோஷமாகவும்   இருந்தது,

ஒரு   புது   அனுபவம்,    ரெக்கை

கட்டிண்டு    பறப்பது   போல்

அவளுக்கு    தோன்றியது, தான்

எதையோ   இழக்கப்   போகிறோம்

என்று   அவளுக்கு  பட்டது,,

தாரிணியின்   மாமியாரும்   வந்து

இருந்தாள்்   அவளை  பார்க்க,

அதே   சமயம்   தாரிணியின்..

பெற்றோர்,  வந்தனர்,  தாரிணி;

பெற்றோருடன்    போவது

அறிந்து   மிகுந்த   கோபம்   கொண்டாள்   மாமியார்”  வேலை

செய்ய   ஒரு   ஆள்  குறையுமே

என்று,  இருவருக்கும்    பெரிய

வாக்குவாதம்,   தாரிணியின்.

பெற்றோர்   கடுமையான   வார்த்தைகளால்   மாமியாரிடம்

பேசிக்   கொண்டு   இருந்தனர்,

கல்யாணம்   பண்ணி   மருமகளாக

இருக்கத்தான்   நாங்க   அனுப்பினோமே   ,தவிர  உங்க

வீட்டுக்கு    வேலைக்காரியாக.

இல்லை,  மாமியாரும்    பேச

வார்த்தைகள்   தடித்தது

பிறகு   தாரிணியை   அவள்

பெற்றோர்  கூட்டிக்    கொண்டு

போய்   விட்டனர்  தாரிணிக்கு

கணவனை்  கூட   போக  தான்

இஷ்டம்,  ஆனால்  உடல்  நிலை

சரி   இல்லாததால்    பெற்றோர்

கூட  சென்றாள்,  போகும்  பொழுது.

வருண்  கண்களில்    கண்ணீருடன்

அவளை    பார்த்தான்,  ஐயோ

பெரிய   தப்பு   செய்கிறோம்”

இப்பொழுது   தான்  இவர்  மனம்

மாறி    என்  கிட்டே      வரப்

பார்க்கிறார்,  இந்த   சமயம்

நான்   தூர   விலகி   போகிறேனே?

கடவுளே   இது   என்ன   சோதனை?

தாரிணியும்   அவனை   பார்த்து

கண்ணீருடன்   தலை   அசைத்து

விட்டு   செல்கிறாள், தாரிணிக்கு

என்னவோ   மனதில்   “எண்ணை

சட்டிக்கு   பயந்து  அடுப்பில்

குதித்தது    “போல்  தோன்றியது,

தாரிணி   வீட்டுக்கு   வந்து

விட்டாள்,   மனசும்   உடம்பும்

தளர்ந்து   போய்  விட்டது,   பெற்றோர்   அரவணைப்பில்

அவள்   மெல்ல  மெல்ல   தேற

ஆரம்பித்தாள்,   உடல்  தேறியது

தவிர   மனம்  வருணை   எண்ணி

வாடியது  தினமும்   வருண்  வருவான்   என்று   எதிர்பார்த்து

ஏமாந்தாள்,  அவளுக்கு   தெரியுமா

அவள்   தந்தை   செய்த   வேலை?

அவருக்கு   அவளை   வருண்

வீட்டில்    வேலைக்காரியாக

அனுப்ப   இஷ்டம்   இல்லை,

அதனால்   எப்பொழுதும்   வருண்

அவளை   பார்க்க  வந்தாலும்

தாரிணியை   பார்க்க   விடாமல்

அனுப்பி   விடுவார்,  வாராவாரம்

வந்து   வருண்   காத்து  நிற்பான்,

ஆனால்   கேட்டுக்கு   உள்ளே

கூட    விடமாட்டான்   ஸென்டிரி,

போனில்   பேசவும்  விட  மாட்டார்கள்,   தாரிணிக்கு   வருண்

ஏன்   தன்னை     பார்க்க   வரவில்லை? என்ற   வருத்தம்,

அவளுக்கு    தெரியுமா   அவள்

அப்பா    டபுள்   கேம்    ஆடறதை

பற்றி,  தாரிணி   வருண்   தன்னை

மறந்து   விட்டான்   என்று  நினைத்தாள்,  யாரிடம்   சொல்வது.

அவள்   வருத்தத்தை,  அண்ணாவிற்கும்   கல்யாணம்.

ஆகி    விட்டது, ஒரு   வேலையும்

செய்யத்  தெரியாத     பணக்கார

மருமகள்,    தாரிணியின்   அம்மா;

தான்   சமையல்   ,மன்னி

மாடியிலிருந்து    இறங்கி   வரும்

பொழுது   எட்டு   மணி   ஆகி

விடும்,   அம்மாவிற்கு   முடியாத

பொழுது      மன்னியை   உதவி

பண்ண   சொன்னால்   நான்

வேணும்னா   பணம்   தருகிறேன்

வீட்டு   வேலைக்கும்,சமையல்

செய்வதற்கும்    ஆள்   வைத்து

விடுங்கள்”  ,அண்ணா  கிட்டே.

சொன்னால்  ”  அவள்  பணக்காரி,

அவள்  சொன்னா  கேட்க

மாட்டாள், அவள்  போக்கிலேயே.

விட்டு   விடுங்கள் அவனும்

அவள்   கூட  ,சேர்ந்த  பின்.பேச்சு

எங்கே?   தாரிணி   சும்மா  தானே;;

இருக்கிறாள் ,,அவளை   செய்யச்

சொல்லுங்கள்”

இப்பொழுது  ,தான்  ஒரு

உண்மை   புரிந்தது,   கணவரின்

அன்பை   இழந்த   பெண்களுக்கு

அம்மா   வீட்டில்   என்ன   மரியாதை

என்று?    வாழாவெட்டி.   என்ற  பட்டம்  வேற”  நானா   இங்கே.

வரேன்னு    அழுதேன், ?

என்னை   அனுப்ப   தயங்கிய

கணவரிடமும்,   மாமியாரிடமும்

சண்டை   போட்டு   கூட்டிண்டு    வந்து.,  இப்போ   இப்படி   பேசுகிறார்கள?   அண்ணாவா.

“இப்படி   பேசுகிறான்?  சின்ன

வயதில்   இருந்து   தோளில்

தூக்கிக்    கொண்டு    போய்

ஸீகூலில்   “விட்டு   வருவான்

ஒரு  ,நிமிடம்   கூட  பிரிய  மாட்டான்

வருண்  “வீட்டில்   அவளை

எல்லா   வேலையும்   செய்ய

சொல்வதை    அவன்   வன்மையாக

கண்டித்தான்,  இன்று   அதே

அண்ணா   அவளை   வீட்டு

வேலை  ,செய்யச்  ,சொல்கிறான்,                காலையில்   தாரிணி   தூங்கி

கொண்டு   இருக்கிறாள்,  அம்மாவுடைய   குரல்   ஏதோ

கனவில்   கேட்பது   போல்

கேட்கிறது,   “தாரிணி   எழுந்திரு

கொஞ்சம்   வாசல்   தெளித்து

கோலம்   போடு”  எனக்கு   நட்க்க

முடியவில்லை,   தாரிணியாலும்

முன்   போல்   வேலை   செய்ய

முடிவில்லை,    பக்கெட்   தண்ணீரை    தூக்க   முடியவில்லை,     குனிந்து   கோலம்   போட    முடியவில்லை

மன்னி   மேலிருந்து   பார்த்து

சிரித்துக்   கொண்டே      உள்ளே

போனது  அவமானமாக   இருந்தது

தாரிணிக்கு    ,இன்னும்   பூரணமாக   குணமாகவில்லை,

உடல்   வலியோட   மனசு

வலி  ,தான்  ,அதிகமாக   இருந்தது.

சமையலுக்கு   அம்மா  கூட  உதவி

செய்தாள்,  காய்கறி   நறுக்குவதில்

இருந்து   மாடியில்   துணி  காய

போடுவது   வரை  ,எல்லா;

வேலைகளையும்   செய்தாள், ,

கணவரின்   அன்பும், அரவணைப்பும்   ,இல்லை   எனில்

ஒரு      பெண்ணுடைய   வாழ்க்கை

நரகம்்   தான்,  தந்தையும்,தாயும்

அவள்  ,வாழ்க்கையை   பற்றி

பேசுவதில்லை,    அவர்களுக்கு

அவள்   வாழ்க்கை   முடிந்து

போன  கதை,   இனி அவள்

வாழ்க்கையை   தீர்மானிக்க

வேண்டியது   அவள்  தான்,

ஒரு     தோழி   மூலம்

அவளுக்கு   வருணை   பற்றி

தகவல்   கிடைத்தது,  அவன்

பழைய   வேலையை    விட்டு

விட்டு   ,புது   வேலைக்கு

போகிறான்,  அது   கொஞ்சம்

தூரத்தில்   இருப்பதால்

கம்பெனி    பக்கத்தில்   ஒரு

வீடு    வாடகைக்கு   எடுத்துக்

கொண்டு   ,இருக்கிறான்,

தாரிணியை   பிரிந்ததிலிருந்து.

அவன்   பித்து   பிடித்தாற்   போல்

ஆகி  ,விட்டான்,,முதலில்   கொஞ்ச

நாள்   குடி   பழக்கம்   இருந்தது,,

பிறகு   விட்டு   விட்டான், தாரிணி

பார்க்க  பல தடவை   முயற்சி..;

செய்தான்,   ஆனால்   வீட்டுக்குள்

விட்டால்  தானே, கோர்ட்

மூலமாக  முயற்சி  செய்ய  இஷ்டம்.

இல்லை,   தாரிணி   கட்டாயம்

தன்னிடம்   வந்து   சேர்வாள்

என்ற   நம்பிக்கை    வருணுக்கு

இருந்தது,   தாரிணி    வேலைக்கு

.போக   தீர்மானித்தாள்,

பக்கத்தில்   ,உள்ள   பள்ளியில்.

அவளுக்கு    வேலை     கிடைத்தது,

சிறு   குழந்தைகள்   கூட  வாழ்க்கை   சந்தோஷமாக.

ஓடி     கொண்டு    இருந்தது,

குழந்தைகள்   அவளை  ,மிகவும்

விரும்பினார்கள்    தாரிணி

தனக்கும்    சொந்தமாக   ஒரு

குழந்தை    வேண்டும்    என்று;

ஆசைப்பட்டாள், கடவுள்   விருப்பம்

இருந்தால்   நடக்கும்

,வருணுக்கு   ஆபீஸில்

நல்ல   வேலை  அம்மாவுக்கும்

உடம்பு   சரியில்லாததால்   அங்கு

போய்  ,அம்மா  கூட   இருந்தான், அன்று   ஆபீஸில்   ஆடிடிங்   நடந்து.

கொண்டு   இருந்தது,  நிறைய.

பைல்ஸ்    பார்க்க   வேண்டி;

இருந்ததால்    நாலு   நாளாக;

இழுத்து   அடித்தது,   வருண்  காஷியர்,  எல்லா  காஷையும்

ரசீதோடு    டாலி     செய்து   முடிக்க

நிறைய     டைம்   ஆனது,  வருண்

வேலைக்கு   சேர்ந்து   நாள்

அதிகம்   ஆகவில்லை, , பழைய

குளறுபடிகளை    சரி   செய்யவே

இவனுக்கு    நேரம்   சரியாக

இருந்தது,  ஸ்டாக்   செக்கிங்

நடந்த     போது   நிறைய  ஸ்டாக்

மிஸ்ஸிங்,   இதுக்கு   முன்னாடி

இருந்தவர்   பண்ணின    கோல்மால்,     அவரை   வரச் சொல்லி    முன்பே   லெட்டர்

அனுப்பியாச்சு,     ஊரிலே     இல்லை   “என்று   எப்பவும்   பதில்,

பார்க்கலாம்   அடுத்த   தடவை.

வரலை    என்றால் போலீஸ்

.வரும்   என்று   சொல்லணும்

பயந்து    வரதுக்கு   சான்ஸ்

உண்டு,, வேஸ்டேஜ்   ஆன

பொருள்களை  ,டிஸ்பொஸ்

பண்ணாமல்   ,வாடகை   கோடவுனில்  ,போட்டு  வைத்து

இருக்கிறார்கள்  ”  எத்தனை

நஷ்டம்,

ஆபீஸ்  ,காண்டீனில்   சாப்பிட்டு    விட்டு   வெளியே;

வரும்   பொழுது  மணி  பன்னண்டு

மனகுழப்பத்தோடு     கார்  ,ஓட்டி

கொண்டு   இருந்தான்,,திடீரென்று

எதிரில்   வந்த    கார்   வருண்;

காரின்   மேல்   மோதியது,

மோதின    வேகத்தில்   காரில்

இருந்த  வருணுக்கு    தலையில்

நல்ல   அடி, காலிலும்   அடி,

அவனை     அப்படியே   தூக்கி

ஆஸ்பிடலுக்கு    கொண்டு

போனார்கள்   கூடி   இருந்தவரகள்

I.C.U   வில்   அட்மிட்   ஆகி

எவர்ஜென்ஸி   ஆபரேஷனும்.

செய்தார்கள்,  ஒரு  கால்   சிதைந்து

விட்டதால்   முட்டிக்கு  ,கீழே

ஆபரேஷன்    பண்ணி   எடுத்து

விட்டார்கள்” தலையிலும்   அடி.

வயதான   தந்தை   தாய்

இருவராலும்   இதை பார்த்து

தாங்க   முடியவில்லை,  ,நாங்க

என்ன   பாவம்   பண்ணினோம்

பகவானே  ?   எங்களுக்கு   ஏன்

இந்த  சோதனை?    கடவுள்

சிரிக்கிறார்,  “அன்றைக்கு   ஜீரமாக

இருந்த   மருமகளை     பாத்துக்க

முடியாது    “என்று   போனேள்

இப்பொழுது     உங்க   பையனே

படுககையில்   கிடக்கிறான், ”

இவனையாவது   பாத்துப்பேளா?

“முற்பகல்   செய்யின்   பிற்பகல்

விளையும்  என்பார்கள்,  “அது

இது   தானோ?   கண்ணீருடன்

பெற்றோர்   அமர்ந்து   இருந்தனர்

டாக்டர்   ரூம்   வாசலில்

காத்து   இருந்த  தாரிணியும்

அவள்   அம்மாவும்   டாக்டர்

ரூமிலிருந்து    வெளி    வந்த  வருணின்   பெற்றோரை    பார்த்து;

திடுகிட்டனர்,  தாரிணி     ,டாக்டரிடம்    “இப்போ     இரண்டு

பேர்  ,போனாளே    அவர்களில்

யாருக்கு   சுகமில்லை,,?

அவர்கள்   பையன்    வருண்

ஒரு   விபத்தில்    மாட்டிக்  கொண்டு

விட்டான்,,அதோ   அந்த   ரூமில்

தான்   படுத்து   இருக்கார்,

தாரிணி   எழுந்தாள்,  அவள்

அம்மா    அவள்   கையை   பிடித்து

தடுத்தாள்,  தாரிணி  கையை   தட்டி;

விட்டு     வருணின்    ரூமுக்கு

ஓடினாள்,  கண்ணீருடன்

இருவர்   கண்களும்    சந்தித்தன்,

பிரிந்தவர்   கூடினால்   பேச்சுக்கு

இடமில்லை,  மெள்ள   அவள்

கையை   பிடித்தான்    அவன்,

விலகியிருந்த   போர்வையை

சரி   செய்யும்   பொழுது

பார்த்தாள்    ஒரு   கால்   இல்லை

என்று,   அடி   வயிற்றிலிருந்

குமறி    வந்தது   அழுகை,,”என்னை

ஏன்   பார்க்க  வரலை”?என்று

அழுதாள்   தாரிணி,  “நான்

நிறைய   தடவை   வந்தேன்

உங்க   அப்பா  தான்   உள்ளே

விடலை,  மனசுக்குள்    ஏற்பட்ட

சந்தேகம்   இப்பொழுது  நிரூபணம்

ஆகி  விட்டது,     தந்தை   தாயும்

தான்   தன்   வாழ்க்கையோடு

விளையாடி    இருக்கிறார்கள்”

அதற்குள்   தாரிணியின்  அம்மாவும்,   அண்ணாவும்   உள்ளே

வந்தார்கள்,  “தாரிணி      கிளம்பு”

இந்த     நொண்டி   கூ   ட   என்ன

பேச்சு    என்றான்   அண்ணா”

கொடுத்தாள்    ஒரு    அறை

கன்னத்தில்,  “நீ    யாரை   பற்றி

பேசுகிறாய்?   அவர்   என்

கணவர்,   காலிருத்தாலும்,

இல்லா விட்டாலும்   அவர்   என்

கணவர்” தான்”    உங்க   பேச்சை

இத்தனை     நாடகள்   கேட்டதனால்

என்  கணவருடன்,    சேர்ந்து

வாழும்   வாழ்க்கையை   இழந்தேன்

உங்களை   ப்போல்   உள்ள

பெற்றோர்களால்   தான்  நிறைய

பெண்கள்   வாழாவெட்டிகளாக

இருக்கிறாரகள்,,

”  அம்மாவிற்கு    உடம்பு;

சுகமில்லையே?” அம்மாவை.யாரு;

பாத்துப்பா?  “என்று   அண்ணா

கேட்டான்,  “மன்னி   சும்மா  தானே

இருக்கா  “அவளை   பார்த்துக்   கொள்ள     சொல்லு  ,  “என்னுடைய   இடம்   இங்கே

என்   கணவருடன்,

என்  கணவர்   உடம்பு

சரியானவுடன்   வீட்டில்   இருந்தே

பிஸினஸ்   தொடங்கி   செய்வோம்

படித்து      இருந்தும்   இத்தனை

நாள்   முட்டாளாக   இருந்து

விட்டேன்,  இனி   என்  கணவருடன்

தான்   வாழ்க்கை, அப்பாவிடம்

சொல்லி      விடுங்கள்,  இனி

என்    வாழ்க்கையில்   குறுக்கிட

வேண்டாம்    என்று,

இரண்டு    வருடம்   கழிந்தது,

அவள்  கணவனுக்கு    செயற்கை

கால்   பொருந்தி    நன்றாக

நடக்க   வைத்து    விட்டாள்,

வீட்டிலேயே      பிஸினஸ்

தொடங்கி     இப்பொழுது   நிறைய

பணம்   உண்டாக்குகிறாள்,

கணவரின்   பெற்றோரையும்

பார்த்துக்   கொள்கிறாள்,  சந்தோஷமான   வாழ்க்கை

வாழ்கிறாள்” அவள்   மட்டும்

அந்த   சமயத்தில்   கணவருடன்

சேர்ந்து   வாழும்   தீர்மானம்

எடுக்காமல்   இருந்திருந்தால்

இன்றும்    வாழாவெட்டியாய்

பெற்றோரின்    வீட்டில்   வேலைக்காரியாய்   இருந்து

இருப்பாள்” கடவுளுக்கு   தான்

நன்றி   சொல்லணும்,

தாய்  தந்தையரே   தங்கள்

வரட்டு   பிடிவாதத்தால்   தங்கள்

பெண்ணின்  வாழ்க்கையை

பாழாக்குகிறார்கள்,  பெண்கள்

புத்திசாலித்தனத்துடன்   தங்கள்

வாழ்க்கையை   காப்பாற்றி

கொள்ள   வேண்டும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அருமையான மனதை நெகிழ வைக்கும் பதிவு தாரணியே போன்ற பெண்கள் இன்றும் இருப்பதால்தான் மனிதம் என்றும் வாழ்கிறது வாழ்த்துக்கள்

  2. முதல்ல தாரிணியோட நிலையை பார்த்து வருந்திய அவளோட அப்பா வருண் விஷயத்துல பண்ணது பெரிய சதி..அண்ணா,அண்ணி,பெத்தவங்க எல்லாரும் அவளை அடிமையா நடத்துனது தப்பு..வருணோட காதலும் அவன் தாரிணியை கவனிச்சதும் இறுதியில் அவங்க சேர்ந்ததும் அருமை சிஸ்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐