159 views

ஆட்சியர் கனவு 9 💞

மயங்கி விழுந்த ஆதியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவரும் ஆதியின் உடல்நிலையில் கவனம் செலுத்த, சுப்ரியா தான் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் இருந்தாள்.

 

திவி இன்னும் சுவற்றையே வெறித்தபடி அமர்ந்திருக்க, அனைவரின் மனமும் கனத்துஅதான் இருந்தது. நேரம் கடக்க கடக்க அனைவரின் பதட்டமும் அதிகரிக்க ஆதியின் சிகிச்சை தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது.

 

மணி ஆறை நெருங்க அனைவருக்கும் தத்தமது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. பெண்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆண்கள் மூவரும் இருக்கும்படி முடிவு எடுத்தனர்.

 

விஷ்ணு “சபரி, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு நீ வாடா. அது வரை நானும் சாரும் இங்க இருக்கோம்”.

 

சபரி “சரி டா.! வாங்க எல்லாரும் போலாம்.”

 

அனைவரும் மறுக்க, திவியோ எதையும் உணராது இருந்த நிலையிலேயே இருந்தாள்.

 

அனைவரையும் ஒரு வழியாக சமாதானம் செய்து வைத்த விஷ்ணு மற்றும் சக்தி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

ரவீ “திவி இப்டி இருக்கப்போ நான் எப்டி போறது.? நான் இங்கே திவி கூட இருக்கேன்.”

 

விஷ்ணு “வீட்ல கேட்டா என்ன சொல்லுவ ரவீ ?”

 

ரவீ “திவி வீட்ல நீ இப்போ என்ன சொல்ல போறியோ அதே தான் நான் எங்க வீட்ல சொல்ல போறேன்!”

 

விஷ்ணு அப்போது தான் திவியின் வீட்டில் என்ன சொல்வது என்று யோசித்தவன் ஒரு முடிவோடு திவியின் அருகே சென்றான். விஷ்ணு “திவி… திவி…” அவளிடம் எந்த பதிலும் இல்லை.

 

விஷ்ணு பெருமூச்சொன்றை எடுத்து விட்டு, திவியின் அன்னைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, ரவீணாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இன்று அவளுடன் மருத்துவமனையில் திவி இருக்க அனுமதி கேட்க, அவளின் அம்மா பல குறுக்கு கேள்விகளுக்கு பின் ஒப்புதல் அளித்தார்.

 

இறுதியில் திவியிடம் பேச வேண்டும் என்றிட, விஷ்ணு விழித்து பின் “இல்ல மா, திவி இங்க இல்ல. தலவலிக்குதுன்னு கேன்டீன் போய் இருக்கா. வந்ததும் பேச சொல்றேன்.” என்று விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருந்தான்.

 

இதையே ரவீணாவின் பெற்றோர்களிடம் திவிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவளுக்குத் துணையாக ரவீ உடன் இருக்க வேண்டும் என்றும் சம்மதம் பெற்றான்.

 

பேசும் இவனையே விழி அகலாது ‘ஆ’ வென வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் அனைவரும். சபரி மற்ற மூவரையும் வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க சக்தியும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு துணையாக யாரும் அறியா வண்ணம் மூன்று காவலர்களை அனுப்பி வைத்தான்.

 

அனைவரும் இறுகிய மனதுடன் இருக்க, இதை எதையும் கண்டு கொள்ளாது காலம் தன் பணியை சிறப்பாக செய்தது.

 

அனைவரும் சிறிது நேரத்தில் கண்ணயற, திவியோ எதுவும் உணராது இருந்த நிலையிலேயே இருந்தாள்.

 

அதைக் கண்டு சக்தியின் மனம் ஏதோ போல் இருக்க, அவனும் தூக்கத்தை மறந்து உள்ளே இருக்கும் நண்பனுக்கும் வெளியே இருக்கும் தங்கைக்கும் காவாலாய் இருந்தான்.

 

இவர்களின் துயர் தாளாமல் நிலாமகள் மெல்லத் தன்னை விடுத்துக்கொள்ள, ஞாயிறு இவர்களுக்கு ஒரு தீர்வோடு தன் நாளை துவங்கினான்…

 

காலை 6.00 மணி ஆக அனைவரும் கண் விழித்தனர் திவியை தவிர… பின்னே தூங்கினால் தானே கண் விழிக்க…

 

முதலில் கண் விழித்த விஷ்ணு சக்தியிடம் கூறிக்கொண்டு அனைவருக்கும் குழம்பி வாங்க கேன்டீன் சென்றான்.

 

சிறிது நேரத்தில் கண் விழித்த ரவீணா ஓய்வறைக்கு சென்று விட்டாள். சக்தியும் மேலிடத்தில் வந்த அழைப்பின் பொருட்டு அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான்.

 

அப்போது அங்கு வந்த செவிலியர் “ஆதித்யாவோட அட்டெண்டர் யாரு? டாக்டர் வர சொல்றாங்க.” என்று கூற, ஆதித்யா என்ற சொல்லை கேட்ட பின்புதான் தன் சுயத்திற்கு வந்தாள் திவி.

 

திவி சுற்றும் முற்றும் பார்த்தவள் உடன் யாரும் இல்லை என்பதை அறிந்தாள், செவிலியரிடம் “நான் தான் சிஸ்டர்!” என்று விட்டு மருத்துவரை பார்க்க சென்றாள்.

 

செல்லும் இவளையே குரோதத்துடன் ஒரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தது.

 

மருத்துவரிடம் செல்லும் திவியை பார்த்த சக்தி வேகமாக அவளுடன் வந்தான்.

 

இருவரும் உள்ளே நுழைந்தனர்.
சக்தி “ஆதிக்கு இப்போ எப்டி இருக்கு டாக்டர்? அவன் கண் முழிச்சுட்டானா.?” என்று கேட்க,

 

டாக்டர் “இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண் முழிச்சுடுவாங்க. நேத்து நீங்க கொஞ்சம் லேட் பண்ணி இருந்தாலும் ஆதிய காப்பாத்தியிருக்க முடியாது. கண்டிப்பா அவர் கோமாக்கு போய் இருப்பாரு!” என்றார்.

 

இதை கேட்டு இருவரும் அதிர்ந்தனர்.

 

திவி “எ..என்..என்ன? டா..டாக்..டாக்டர்.. சொல்…சொல்றீங்க..?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

 

சக்தி “அப்டி அவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்.? வெறும் புட் பாய்சன் தான.?” என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான்.

 

டாக்டர் “வெறும் புட் பாய்சன் இல்ல. அவர் சாப்பிடுற சாப்பாட்டுல ஒரு விதமான கெமிக்கல் கலந்து இருக்காங்க. அது சாப்டுறது மூலமா ரத்தம் வழியா மனிதனோட நரம்பு மண்டலத்தை பாதிச்சு மூளையை செயலிழக்க செஞ்சி கோமாக்கு கொண்டு போயிடும்.

 

கோமாக்கு போனாலும் ப்ரைன் டெட் ஆகவும் 90% வாய்ப்பு இருக்கு. பத்து நிமிஷம் லேட் ஆகி இருந்தாலும் ஆதிய காப்பத்துறது வாய்ப்பு இல்லாம போய் இருக்கும்.”

 

திவி “இதோட சிம்டம்ஸ் என்ன டாக்டர்.?”

 

டாக்டர் “இது மனித உடம்புக்குள்ள போனா முதல வயிறு தான் வலிக்கும். வயிறுல இருக்க என்சைம்ஸ் மூலமா அது ரத்ததுல கலந்து நரம்பு மண்டலத்தை தான் பாதிக்கும். அப்ரோம் மயக்கம் வரும். மயக்கம் வந்து ஒன் ஹவர்க்குள்ள பாதிக்கப்பட்டவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கலன்னா நான் சொன்ன மாதிரி தான் நடக்கும்.”

 

சக்தி அதிர்ந்து “என்… என்ன டாக்டர் சொல்றிங்க.? அப்போ இது தெரிஞ்சி தான் செஞ்சிருக்காங்களா.?”

 

டாக்டர் “ம்ம்.. ஆமா. யாரோ தெரிஞ்சு தான் இதை செஞ்சு இருக்காங்க. இவர் சாப்ட சாப்பாடு யார் செஞ்சா.?”

 

சக்தி திவியை பார்க்க, திவி “எங்க அம்மா தான் டாக்டர்.” என்று யோசனையுடன் கூறினாள்.

 

டாக்டர் “ஓகே.! இன்னும் கொஞ்ச நேரத்துல ஆதி கண் முழிச்ச உடனே நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். அப்போ போய் எல்லாரும் பாருங்க.” என்று விட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றார்.

 

இவர்கள் இருவரும் அறையில் இருந்து வெளியில் வர விஷ்ணுவும் ரவீயும் யோசனையுடன் அருகில் வந்தனர்.

 

விஷ்ணு “என்ன சார் ஆச்சு.? டாக்டர் என்ன சொன்னங்க.?” என்று கேட்க,

 

சக்தி கூற வருவதற்குள், திவி “ஒன்னும் இல்லையாம்! இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுடுவானா. நார்மல் வார்டுக்கு மாத்துன உடனே போய் பாக்கலாம்ன்னு சொன்னங்க.”

 

விஷ்ணுவும் ரவீயும் ஆமோதிக்க, திவியே தொடர்ந்தாள் “நானும் அண்ணாவும் ஃபிரஷ் ஆகிட்டு வந்துடுறோம்” என்று சக்தியை அழைத்துகொண்டு வெளியேறினாள்.

 

சக்தி “ஏன் திவ்யா, நீ அவங்க கிட்ட உண்மைய சொல்லல.?” என்று கேள்வியுடன் கேட்டான்.

 

திவி “எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குண்ணா. அப்ரோம் நீங்க என்ன பத்தி தெரிஞ்சிக்கணும்ல? நீங்களும் குழப்பதுல இருக்கீங்க?” என்று கூற,

 

சக்தி சற்று அதிர்ந்து தான் போனான். “யது நீயா திவ்யா.?”

 

திவி “ம்ம்ம்.. அப்படியும் வச்சிக்கலாம். எல்லாம் உங்க கிட்ட தெளிவா சொல்றேன். அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்னனும் ?” என்றாள்.

 

சக்தி “என்ன நம்பலாம் மா. என்ன சத்தியம்ன்னு சொல்லு?”

 

திவி “இப்போ நான் சொல்ற எந்த விஷயத்தையும் நீங்க யார்கிட்டயும் சொல்ல கூடாது. முக்கியமா ஆதிகிட்ட.! அதுக்கு சில காரணங்கள் இருக்கு.” என்று உறுதியுடன் கூறினாள்.

 

சக்தியும் அதை ஆமோதித்தான். திவி அவனிடம் கூறிய செய்தியை கேட்டு உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தான் சக்தி. அவன் கண்கள் கலங்க “நீ…நீ.. சொல்றதுலாம் உண்மையா திவ்யா.?” என்று கேட்டான்.

 

திவி ஆம் என்று தலையசைத்து “பாத்துக்கலாம் ண்ணா. என்ன மீறி ஆதிக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன். அப்ரோம் முக்கியமான விஷயம் உங்க கைல இருக்க டெத் சர்டிபிகேட்ட அப்டியே யாருக்கும் தெரியாம கிழிச்சு போட்டுடுங்க. ஆதிக்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்கன்னு முழுசா நம்புறேன்.” என்று விட்டு கண்களில் ஒரு தீர்க்கத்துடனும் சொற்களில் அழுத்தத்துடனும் ஆதியை காண சென்றாள்.

 

‘இதற்கு முன் நாம் பார்த்த திவியா இவள்?’ என்று ஆச்சர்யப்பட்டுத்தான் போனான் சக்தி.

 

இருவரும் ஆதியைக் காண விரைந்தனர். அதற்குள் நண்பர்களும் வந்து விட, ஆதியை அனைவரும் நலம் விசாரித்து ஒரு குட்டி அலப்பறையை ஆரம்பித்து இருந்தனர்.

 

ரவீ “இப்போ எப்டி இருக்கு ஆதி.? ஒன்னும் இல்லையாம். ஜஸ்ட் புட் பாய்சன் தானா. இன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகிடலாம்ன்னு சொல்லி இருக்காங்க.”
ஆதி தலையசைக்க,

 

விஷ்ணு “ஒரு நிமிஷத்துல எல்லாரையும் பயமுறுதிட்டடா நல்லவனே.” என்றான். அதற்கும் ஆதி மெல்லிய முறுவலிட்டான்.

 

கனகா “இன்னைக்கு நாங்க மட்டும் தான் கிளாஸ்ல இருக்கணும் சோ சாட் ஆதி. நீங்க நாலு பேரும் வர மாட்டீங்க”

 

இதை எதையும் கண்டு கொள்ளாது சபரியும் கவியும் ஆதிக்கு வைக்கபட்டு இருந்த பழச்சாறை எவரும் அறியா வண்ணம் பருகிக்கொண்டு இருந்தனர்.

 

ஆதியோ ஒரு புறம் திவி தான் யது என்று அறிந்து மகிழ்ச்சியில் இருக்க, மறுபுறம் அவளையும் தன் நண்பனையும் காணாது வாயிலேயே நோக்கி கொண்டு இருந்தான்.

 

ஆதி “என்ன சொன்ன? நாலு பேரா.?”

 

கவி “ம்ம்ம்ம்.. ஆமா..! நீ, திவி, ரவீ, விஷ்ணு” என்று உண்டு கொண்டே கூற,

 

சபரி “ஒன்னு தின்னு, இல்ல பேசு. ரெண்டு வேலையும் ஒரே நேரத்துல செய்யாதன்னு பல தடவ சொல்லி இருக்கேன்”

 

கனகா தலையில் அடித்துக்கொண்டு “ம்ம்ம் நீ, திவ்யா, ரவீணா, விஷ்ணு” என்றிட,

 

ஆதி “திவி எங்க.?” என்று ஆர்வமாய் கேட்டான்.

 

அப்போது தான் அவள் இல்லாததை அனைவரும் உணர்ந்தனர். ரவீ “அவளும் உங்க பிரண்டும் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்னு போனாங்க. இன்னும் வரல. நான் வேணா போய் பாத்துட்டு வரேன்” என்று வாசலை நோக்கி செல்ல, திவியும் சக்தியும் உள்ளே நுழைந்தனர்.

 

சக்தி “ஆதி! மச்சான், இப்போ ஓகே தான டா.?” என்று கேட்க, ஆதி அதை கவனியாது திவியின் கண்களை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

 

சக்திக்கு அந்நேரம் ஒரு அழைப்பு வர வெளியில் சென்றான். அவனையே ஒரு ஜோடி கண்கள் ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தது.

 

ஆதி “அழுதியா யது.?” என்று கேட்க,

 

கவி “வெய்ட் வெய்ட் வெய்ட்.! யதுன்னு நீ எப்டி அவள கூப்டுர.? அவ பேர் திவ்யதர்ஷினி எப்டி பாத்தாலும் யது செட் ஆகலயே.?” என்று அதி முக்கியமான கேள்வியை கேட்டாள்.

 

ஆதி அவளை முறைத்து விட்டு “ப்ப்ச். அப்ரோம் உன் லூசு தனமான கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன். நீ கொஞ்சம் அமைதியா இரு! என்று விட்டு திவியின் புறம் திரும்பி கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல?” என்றிட

 

ரவீ ஒரு பெருமூச்சு விட்டு “அவ நைட் முழுக்க தூங்கவே இல்ல. ரொம்ப நேரம் அழுதா!” என்றாள்.

 

ஆதி “நான் உன்கிட்ட தனியா பேசணும்” என்று எங்கோ பார்த்த படி கூறினான்.

 

அனைவரும் வெளியேற, திவி அவனருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். இவர்கள் உள்ளே பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்க,

 

கவி “என்னடா நடக்குது இங்க.? ரெண்டு பேருக்கும் சம்திங் ராங்!”

 

கனகா “இவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே அறிமுகம் இருந்து இருக்கும்னு தோணுது?”

 

சபரி “அப்படினா ரெண்டும் உள்ள ரொமான்ஸ் பண்ணுதுங்களா.?”

 

ரவீ “அட ச்சீ, சும்மா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. அப்டி முன்னாடியே தெரிஞ்சு இருந்தா திவி கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருப்பா.”

 

விஷ்ணு அதை ஆமோதித்து, “எதுவா இருந்தாலும் திவிக்கிட்ட கேட்கலாம். அவ வெளில வரட்டும்.”

 

கவி “எப்போ வேணா கேளுங்க. ஆனா சுப்ரியாக்கு தெரியாம கேளுங்க.”

 

கனகா “ம்ம், ஆமா. அப்ரோம் வேற வினையே வேணாம். ஆல்ரெடி அவ திவிய எதுல மாட்டி விடலாம்ன்னு இருக்கா. இது தெரிஞ்சா அவ்ளோதான்.”

 

சபரி “திவ்யாக்கு எப்டி அசிஸ்ட்டன்ட் கமிஷ்னர தெரியும்.? அதுவும் இல்லாம அவர் ஆதியோட பிரண்ட்டாமா..”

 

கவி “என்னாது அவர் போலீஸ்சா.? ஆனா ஆளு பாக்க நல்லா தான்பா இருக்காரு!”

 

கனகா “இந்த ரணக்களத்துலயும் உனக்கு குதூகலம் கேக்குதா?”

 

கவி ‘ஈ.ஈ.ஈ.ஈ…’ என்று அசடு வழிய, ரவீணா அசிஸ்டண்ட் கமிஷனர் என்று கேட்ட உடனே அவ்விடம் விட்டு நகர்ந்து இருந்தாள். அதை விஷ்ணுவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

 

சபரி “பசிக்குது வாங்க அப்டியே கேன்டீன் பக்கம் போலாம். அவங்க உள்ள பேசிட்டு வரட்டும்”.

 

கவி “இது ஒரு நல்ல யோசனை!” என்று விட்டு அனைவரும் கேன்டீன் சென்றனர்.

 

ஆதி “என்ன உனக்கு நியாபகம் இருக்கா, யது.?”

 

திவி “ம்ம்ம்” என்று தலையசைத்தாள்.

 

ஆதி “ஏதாவது பேசு யது? உன்ன பாக்காம ஆறு வருஷம் எப்டி கஷ்டப்பட்டேன் தெரியுமா.?” என்று கமறிய குரலில் கேட்க,

 

திவி “அதான் இப்போ உன்கூட தான இருக்கேன் ஆதி. எதையும் நினச்சு ஸ்ட்ரெஸ் ஆகாத.” என்று கூறினாள்.

 

ஆதி “என்ன மறந்து இருப்பன்னு நினைச்சேன் யது. எப்டி என்ன நீ நியாபகம் வச்சி இருக்க.?”

 

திவி தன் கையை அவனிடம் நீட்டி, “இது தான் ஆதி நான் உன்னை மறக்கல” என்று ஒரு மோதிரத்தை காட்டினாள்.

 

ஆதி மகிழ்ச்சி பொங்க, “இது…இது…எப்டி.?” என்று வார்த்தைகள் தடுமாற,

 

திவி “அன்னைக்கு ஸ்கூல்ல உன்ன ஆம்புலன்ஸ்ல ஏத்துறதுக்கு முன்னாடி உன் நியாபகமா உன் கைல இருந்து எடுத்தேன்”

 

ஆதி “அன்னைக்கு தான் யது உன்ன முதல பாத்தது. அப்ரோம் இன்னைக்கு தான் என் யதுவா பாக்குறேன். நான் தான் ஆதின்னு உனக்கு முன்னாடியே தெரியும்ல.?”

 

திவி “ம்ம்.. தெரியும்!”

 

ஆதி “அப்போ ஏன் யது நீ முன்னையே சொல்லல.?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.

 

திவி “என்ன நீ மறந்து இருந்தா ஆதி.? அது மட்டும் இல்ல, உன்ன பாத்த உடனே உன்ன நான் கண்டு புடிச்சிட்டேன். ஆனா நீ என்ன கண்டு பிடிக்கலயே?”என்றாள் மெல்லிய குரலில்.

 

ஆதி “உன் முகம்தான் யது நான் மறந்தேன். ஆனா உன்னோட கண்கள். அன்னைக்கு நீ சொன்ன வார்த்தை. அது மட்டும் இன்னும் என் காதுல கேட்டுகிட்டு இருக்கு யது. அந்த வார்த்தைகள் தான் ஆறு வருசமா என்னோட வாழ்க்கைய மாத்துச்சு தெரியுமா?”

 

திவி “அந்த வார்த்தைகளுக்கு அவ்ளோ பவர் இருக்கா என்ன.?” என்று கேலிக்கலந்த கேள்வியாய் கேட்க,

 

ஆதி “அது உனக்கு வெறும் வார்த்தைகள் தான் யது. அதை உணர்ந்த எனக்கு … எனர்ஜி பூஸ்டர்!” என்றான் புன்னகையுடன்.

 

திவி “ஹாஹான்….! ” என்று அவனருகில் சென்று அமர்ந்தவள், அவனின் தலையை கோதி விட்டு “கண்ணை மூடி தூங்கு தியா. நான் பக்கத்துல தான் இருக்கேன்” என்று கூறினாள்.

 

ஆதியும் இத்தனை நாள் தான் தொலைத்தத் தூக்கத்தை அரவணைத்து துயில் கொண்டான்.

 

திவி ‘போதும் டா ஆதி. ஆறு வருசமா நீ எவ்ளோ கஷ்டப்பட்டுட்ட? இனிமேலும் உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். என்ன மீறி தான் உனக்கு எதுனாலும் ஆகும்டா. அவனாலா என் பிரண்ட்ட இழந்தேன். என்னோட சுயத்தை இழந்தேன். எங்க உன்னை இழந்துடுவேனோன்னு தான் இவ்ளோ வருஷம் தள்ளியே இருந்தேன். இனிமேலும் நான் தள்ளி இருக்க மாட்டேன் டா தியா. என்ன மீறி அவன் உன்ன என்ன பண்ணபோறான்னு பாக்கலாம்.’ என்று மானசீகமாக அவனின் உணர்வுகளோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

 

சக்தி மற்ற அனைவரிடமும் தனக்கு முக்கிய வேலை இருப்பதாகவும் இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுதாகவும் கூறிக்கொண்டு சென்றுவிட்டான்.

 

விஷ்ணு “ரவீ …!”

 

ரவீ வரவழைத்த புன்னகையுடன் “சொல்லு டா!”

 

விஷ்ணு “உனக்கு என்ன ஆச்சு.? ஏன் இங்க வந்து தனியா உட்காந்துட்டு இருக்க? வீட்டுக்கு போலாம்ல?”

 

ரவீ “தனிமை தான் விஷ்ணு எந்த பிரச்சனையும் யாருக்கும் தராது..” என்றாள் வெற்று புன்னகையுடன்.

 

விஷ்ணு “ஏ.. இப்போ ஏன் நீ இப்டிலாம் பேசிக்கிட்டு இருக்க?”

 

ரவீ “ப்ப்ச்…ஒன்னும் இல்ல.. சும்மா தோணுச்சு அவ்ளோதான். ஓகே நான் வீட்டுக்கு போறேன்..!”

 

விஷ்ணு “ம்ம்ம்.. போய்ட்டு எனக்கு கால் பன்னு”

 

ரவீ “ம்ம்ம்..” என்று விட்டு திவியை காண சென்றாள். “திவி நான் கிளம்புறேன். ஆதிய டிஸ்சார்ஜ் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு”

 

திவி “ம்ம்ம்.. சரி ரவீ.  ஏன் ஒரு மாதிரி இருக்க?”

 

ரவீ “ஒன்னும் இல்ல திவி, தலை வலிக்குது.”

 

திவி “பாத்து பத்திரமா போ.. போய்ட்டு எனக்கு கால் பண்ணு”

 

ரவீ வீட்டிற்குக் கிளம்ப, மற்ற அனைவரும் கல்லூரிக்கு கிளம்பினர். விஷ்ணுவும் திவியும் ஆதியின் அறையில் இருக்க, சக்தி அவனை டிஸ்சார்ஜ் செய்யும் வேலையில் இருந்தான்.

 

திவி “அண்ணா, இப்போ ஆதிய எங்க கூட்டிட்டு போவீங்க.? இப்போ இருக்க சுவிச்சுவேஷன்ல இவன பாத்துக்க கண்டிப்பா ஒருத்தர் கூட இருக்கணும்ண்ணா.”

 

சக்தி “ம்ம்ம் ஆமா திவ்யா. அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். எங்க அம்மா கூட இருந்து எல்லாம் பாத்துக்குவாங்க. நீ கவலைபடாத!”

 

திவி “அம்மா இப்போ எப்டி இருக்காங்க ண்ணா?”

 

“நான் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்மா!” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சக்தியின் அம்மா செல்வி.

 

அவர் முகத்தில் தெரிந்த தெளிவு திவியின் மனதை சாந்தப்படுத்த, புன்னகையோடு வரவேற்றாள்..

 

திவி “எப்டி இருக்கீங்க மா.?”

 

செல்வி “நல்லா இருக்கேன்னு இப்போ தான சொன்னேன், கேட்கலயா நீ.?” என்று செல்லமாய் கடிந்து கொள்ள,

 

திவி:” ம்ம்ம்.ம் சரி மா.!”

 

செல்வி “நீ கவலை படாத திவ்யா..! ஆதிய நான் நல்லா பாத்துக்குறேன்.. சரியா.? நீ தைரியமா இரு” திவி அவரை யோசனையுடன் பார்க்க, சக்தி எல்லாம் என்கிட்ட சொல்லிட்டான் மா.”

 

திவி சக்தியை பார்க்க, சக்தி “அம்மா கிட்ட எதுவும் நான் மறைக்க மாட்டேன்மா சாரி!” என்று தன் இரு கைகளையும் காதில் வைத்து கூறினான்.

 

விஷ்ணு நடப்பது எதையும் புரியாமல் பார்க்க, திவி இதை கவனித்து விட்டு செல்வியிடம் “அம்மா இவன் என் கூட பொறக்காத அண்ணா, விஷ்ணு!” என்று அறிமுகம் செய்து வைத்தாள். விஷ்ணு விடம் திரும்பி “டேய் அண்ணா, இவங்க சக்தி அண்ணாவோட அம்மா. அன்னைக்கு ஒருத்தங்கள நான் காப்பத்துனேன்னு சொன்னேன்ல, நீ கூட அடிச்சியே அவங்க இவங்க தான். அன்னைக்கு சக்தி அண்ணா கூட தான் பேசிக்கிட்டு இருந்தேன்.” என்று தன் கன்னத்தை நீவியபடி கூறினாள்.

 

விஷ்ணு பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு “சாரி திவி” என்றான்.

 

சக்தி “எதுக்கு அடிச்ச, விஷ்ணு.?”

 

விஷ்ணு பயத்துடன் “அ..அது சார்!”

 

திவி சிரித்துவிட்டு “டேய் அண்ணா ரொம்ப பயப்படாத. அவர் சும்மா தான் கேட்டாரு.” என்க,

 

விஷ்ணு சக்தியை பாவமாய் பார்த்தான். சக்தி “திவி உனக்கு தங்கச்சி. நான் உனக்கு சார்ரா.? ஒழுங்கா அண்ணான்னு சொல்லு இல்ல ஆதிய கூப்டுர மாதிரி வா போன்னு சொல்லு. பட் பப்ளிக்ல வேணாம். ஓகே?” என்றான்.

 

விஷ்ணு புன்னகையுடன் தலையசைக்க, சக்தி “இன்னும் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே?” என்றான்.

 

விஷ்ணு  திவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “திவியை அன்னைக்கு ஒருத்தன் பாலோவ் பண்ணிட்டு இருந்தான். நீங்களும் அவள பாலோவ் பண்ணதா அவ சொன்னாலா, அதான் அவ மேலேயே அவளுக்கு கவனம் இல்லன்னு அடிச்சேன்.” என்று தலை குனிந்தான்.

 

சக்தி யோசனையுடன் “அவன பாத்தியா.?”

 

விஷ்ணு “ம்ம்ம்.. பாத்தேன்!” என்றதும்

 

சக்தி “சரி பயப்படாத பாத்துக்கலாம்.!” என்றான்.

 

ஆதியை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு ஐவரும் ஆதியின் வீட்டிற்கு சென்றனர். வீட்டைக் கண்ட உடன் திவியும் விஷ்ணுவும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

விஷ்ணு “என்ன டா, இதுவா உன் வீடு.? நீ என்ன டிசைன் டா? எதுவுமே என்கிட்ட சொல்லவே இல்லை!”

 

திவி “ஆமா ஆமா! நீ வேற டா அண்ணா.. சார் எவ்ளோ பெரிய ஆளு? நம்ம கிட்டலாம் இதை பத்தி சொல்லுவாரா.?” என்று ஆதியை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

 

சக்தி, ஆதியின் காதில் “ஆதி நீ இன்னைக்கு செத்த டா மவனே. ஆல்ரெடி அவளால தான் உனக்கு புட் பாய்சன் ஆச்சுன்னு பீல்ல இருந்தா. இப்போ உன்மேல இருக்க சிம்பத்தி போய் செம கோவத்துல இருக்கா. இன்னும் நீ மறச்ச விஷயம்லாம் தெரிஞ்சா மறுபடியும் உன்ன ஹாஸ்பிடல்ல சேக்கணும் போலயே?” என்று முகத்தை யோசனை செய்யும் பாவனையில் வைத்தான்.

 

ஆதியோ திவியையும் விஷ்ணுவையும் பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.

 

வீட்டிற்குள் சென்ற அனைவரும் ஆதியின் அறைக்குள் செல்ல, திவியும் செல்வி அம்மாவும் சமையல் அறைக்குள் சென்றனர்.

 

படுக்கையில் ஆதியை படுக்க வைத்து விட்டு சக்தியும் விஷ்ணுவும் ஒரு புறம் அமர்ந்தனர்.

 

ஆதி “டேய் மச்சான்ஸ்! நீங்க தான்டா உங்க தங்கச்சிகிட்ட பேசி சமாதானம் பண்னனும்! “

 

விஷ்ணு “ஆதி, அப்போ நீ திவிய..?”

 

அவன் கேள்வியை உணர்ந்து கொண்ட ஆதி “அவ திவின்னு தெரியரத்துக்கு முன்னாடி என்னோட யதுவா அவள காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் டா!”

 

சக்தி “நீ முதல எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லு. ஒட்டு மொத்தமா நாங்க சமாதானம் சொல்றோம்.”

 

விஷ்ணு “இன்னும் என்ன என்னடா மறச்சு வச்சி இருக்க.? அயோ எனக்கு தலை எல்லாம் சுத்துதே..!”

 

சக்தி “என்ன டா? உனக்கும் புட் பாய்சன் ஆயிடுச்சா.?”

 

அப்போது திவியும் செல்வியும் அனைவருக்கும் உணவோடு வர, திவி “என்னாது மறுபடியும் புட் பாய்சனா.? யாருக்கு.?”

 

சக்தி “ஹான், வேற யாருக்கு உன் அண்ணாக்கு தான்.!”

 

திவி “என்ன ஆச்சு டா?”

 

விஷ்ணு ஆதியை பார்த்துக்கொண்டே, “அதுலாம் ஒன்னும் இல்ல திவி. ஆதிக்கு தான் உன்கிட்ட ஏதோ சொல்லனுமா, இல்லடா?” என்று கண் சிமிட்டி கேட்க,

 

ஆதியோ திவியை பாவமாகப் பார்த்து கொண்டு இருந்தான். திவியோ அவனைக் கண்டு கொள்ளாது மற்ற மூவரிடம் பேசி கொண்டு இருந்தாள். மறந்தும் கூட ஆதியின் புறம் திவி திரும்பவில்லை.

 

சக்தியும் செல்வி அம்மாவும் ஆதியுடனே தங்க, விஷ்ணுவும் திவியும் அவர் அவர் வீட்டிற்கு கிளம்ப ஆயுத்தமாகினர்.

 

திவி இருவரிடமும் கூறி விட்டு செல்ல, ஆதியின் புறம் திரும்பி “கிளம்புறேன்” என்று மட்டும் கூறி விட்டு சென்று விட்டாள்.

 

சக்தி நமட்டு சிரிப்புடன் “பாத்து போய்ட்டு வா திவி. போய்ட்டு கால் பண்ணு.” என்றான்.

 

விஷ்ணுவும் திவியும் அவர் அவர் வீட்டிற்கு சென்றனர்.

 

தன் வீட்டிற்கு வந்த திவியை அவரின் தாய் வழக்கறிஞர் போல் பல கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டு இருந்தார்.

 

பொறுமை இழந்த திவி தன் தாயிடம் அனைத்தையும் கூறி விட்டு பொறுமைக் காக்கும் படி கேட்டுக்கொண்டாள்.

 

ரோஜா “எதுவா இருந்தாலும் ஜாக்கிரதை திவ்யா. விளையாட்டா இருக்காத.” என்று தன் மகளின் தலையை கோதிவிட்டார்.திவி புன்னகையுடன் “என் லட்சியதுகாக எதை வேணாலும் விட்டுக்கொடுப்பேன் மா. ஆனா எதுக்காகவும் என் லட்சியத்தை விட்டு கொடுக்க மாட்டேன். அதே சமயம் ஆதிக்கும் அவனோட குடும்பத்தை திருப்பி தருவேன் மா.” என்று உறுதியுடன் கூறிய தன் மகளை பெருமையுடனும் சிறிது பயத்துடனும் பார்த்து விட்டு உறங்க சென்றார்.

 

இங்கு ஆதியோ திவியிடம் எவ்வாறு பேசுவது என்று எண்ணிக்கொண்டு அப்படியே உறங்கி போனான்.

 

திவியும் ஆதியின் சிந்தனையிலும் அடுத்து தான் செய்ய வேண்டிய செயல்களையும் மனதில் ஒரு வியூகம் அமைத்துக் கொண்டிருந்தாள். அவளையும் நித்ராதேவி அரவணைத்துக் கொண்டாள்.

கனவு தொடரும்…

படித்து விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்க நட்பூக்களே🌺🌺🌺…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *