Loading

ஆட்சியர் கனவு – 8

 

தன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய காரணங்களை தன் நண்பன் சக்தியிடம் கேட்கையில் அது விபத்து அல்ல, தனக்கு வைக்கப்பட்ட சதி வேலை என்று அறிந்துக் கொண்டான் ஆதி.

தான் போட்ட திட்டத்தில் இருந்து ஆதி தப்பித்ததை எண்ணிக் கோபத்தின் உச்சியில் இருந்தான் கோகுல்.

கோகுல் “கொஞ்சம் கூட உனக்கு அறிவு இல்ல.? அவன் ஆபிஸ்லேயே இல்ல. அப்போ போய் அவன் கேபின்ல ஃபயர் ஆகுற மாதிரி பண்ணி வச்சி இருக்க?” என்று உச்சபட்ச ஆத்திரத்துடன் தன் முன் நின்று இருந்த தன் கையாளின் கழுத்தை பிடித்துக்கொண்டு இருந்தான் அவன்.

“சார், அவன் தினமும் 2.00 மணிக்கு எல்லாம் ஆபீஸ் வந்துடுவான் சார். அவனை தினமும் ஃபாலோவ் பண்ண சொன்னிங்க. இன்னைக்கு கூட அவன் ஒரு மணிக்கு எல்லாம் காலேஜ் விட்டு வெளில வந்துட்டான். அதனால தான் பயர் டைமிங்க சரியா 2.00 மணிக்கு வச்சேன். ஆனா அவன் வரல சார்.” என்று தன் தொண்டையை நீவிய படி கூறினான்.

கோகுல் “செய்ய வேண்டிய வேலைய ஒழுங்கா செய்யாம உப்பு சப்பு இல்லாத காரணத்த சொல்லிக்கிட்டு இருக்க.” என்று  அவனின் கன்னத்தில் மாறி மாறி அடித்துக்கொண்டு இருந்தான்.

வேகமாக உள் நுழைந்த ஹரி அவனின் கையில் மாட்டி கொண்டு இருந்த அந்த அடியாளை விடுவித்து அங்கிருந்து செல்லும்படி கண்ணை காட்டினான்.

கோகுல் “என்ன டா பண்ற? கொடுத்த வேலைய ஒழுங்கா செய்யாம அந்த நாய் காரணத்த சொல்லிக்கிட்டு இருக்கான். நீ அவனை போக சொல்ற? இந்நேரம் அங்க தீ புடிச்சு இருக்கணும் டா.! அதுல அந்த ஆதி கருகி போய் இருக்கணும். ஆனா, எனக்கு இங்க பத்திக்கிட்டு எரியுது” என்று தன் இயலாமையை வெளியிட்டான்.

ஹரி “எல்லாத்துக்கும் இப்டி அவசர படாதன்னு நான் பல தடவ சொல்லிட்டேன் டா! இப்போ தான் நீ கொஞ்சம் குணமாகி இருக்க, எனக்கு உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம்டா. எங்க போயிட போறான். அவனுக்கு எமன் எப்பவும் நீ தான் டா. உனக்கு துணையை நான் இருப்பேன்டா!” என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் ஹரி.

கோகுல் “சரி டா, இத விடு. உன் லவ் மேட்டர் என்ன ஆச்சு.? அந்த பொண்ணு ஓகே சொல்லிட்டாள? “

ஹரி வெற்று முறுவலை உதிர்த்தவன், “இல்ல டா, அவ கேரக்டரும் சரி இல்ல டா! என்ன பேச்சு பேசுற தெரியுமா? வந்தோமா.. படிச்சோமா… நாலு பேர் கூட சுத்துனோமானு இருக்கணும் லவ்னு சொல்லிலாம் வர கூடாதுனு சொல்ற டா.

என் பிரண்ட் அப்போவே சொன்னான். நான் நம்பாம தான் அவ கிட்ட இன்னைக்கு பேசுனேன். அவ வாயில இருந்தே இதை கேட்ட உடனே எனக்கு மனசு ரொம்ப உடஞ்சு போச்சு டா. அது மட்டும் இல்ல டா, இன்னைக்கு கூட ஒரு பையன் கூட தான் வந்தா. அவன் இவள விட்டு போனாலும் இவ விடாம இருக்கா டா. ச்சீ.. என்னா பொண்ணோ.? நல்ல வேலை நான் தப்பிச்சேன்.” என்று விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து கையில் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டான்.

கோகுல் யோசனையுடன் “அந்த பொண்ணு போட்டோ இருக்கா டா?” என்று கேட்க,

ஹரி “எதுக்கு டா?”

கோகுல் “என் நண்பனை வேணாம் னு சொன்னவள நான் பாக்க வேண்டாமா?”

ஹரி “இல்ல டா.”

கோகுல் “ம்ம்ம் ஓகே டா.” என்று விட்டு இன்னொரு இருக்கையில் அமர்ந்து மற்றொரு கோப்பையை எடுத்துக்கொண்டான்.

இரவு 10.00 மணி..

நிறுவனத்தில் நடந்த சம்பவம், மீதியிருந்த வேலை என அனைத்தையும் முடித்து விட்டு தன் மகிழுந்தில் வீட்டை அடைந்தான் ஆதி. அலைபேசி உயிர்ப்பு இல்லாமல் இருக்க அதற்கு உயிர் அளித்து விட்டு குளியலறைக்குள் சென்றான்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தவன், அலைபேசியை உயிர்ப்பிக்க, திவியிடம் இருந்து 20 தவறிய அழைப்புகளும், விஷ்ணுவிடம் இருந்து 15 தவறிய அழைப்புகளும் மற்ற தோழமைகளிடம் இருந்து மொத்தமாக 30 தவறிய அழைப்புகளை கண்டவனின் கண்களில் ஆச்சர்யமும், அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒன்றாய் வெளி வந்தது.

முகத்தில் புன்னகையுடன் திவிக்கு முதலில் தொடர்பு கொள்ளலாம் என நினைத்தவன் நேரத்தை பார்க்க, மணி பதினொன்றை கடந்த நிலையில் எவ்வாறு அழைப்பது என்று அமைதியாகி விட்டான். பின் ஏதோ தோன்ற புலனத்திற்கு (வாட்ஸ் ஆப்) சென்றவன் அதில் 50 குறுஞ்செய்திகள் வந்திருப்பதை கண்டு மெல்லியப் புன்னகை பூத்தான்.

அனைவருக்கும் பதில் அளித்தவன் இறுதியில் திவிக்கு பதில் அளிக்க, சிறிது நொடியில் “இப்போ தான் வந்தியா ஆதி.?” என்ற செய்தி வந்து விழுந்தது.

ஆதி புன்னகைத்து கொண்டே படுக்கையில் விழுந்தவன் தன் கைபேசியில் பதிலளிக்க துவங்கினான். “ம்ம்.. ஆமா திவி. இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன். ஆமா நீ தூங்கலயா.? இந்நேரம் ஆன்லைன்ல என்ன பண்ற.?”

திவி “ம்ம் ஓகே! என்னது நீ ஆபீஸ் போறியா.? நீ இன்னும் காலேஜ்ஜே முடிக்கலையே.? அசைன்மெண்ட் எழுதிக்கிட்டு இருந்தேன். இப்போ தான் பினிஸ் பண்ணேன். இனிமே தான் தூங்கனும்!”

ஆதி அப்போது தான் தான் உளறியதை உணர்ந்தவன், “ம்ம் ஆமா திவி, பார்ட் டைம் ஜாப்க்கு போறேன்.” என்று சமாளிக்க,

திவி:”ஓ..ஓ.ஓ.. ஓகே! சாப்டியா.?”

ஆதி ‘இல்ல திவி. டைம் ஆச்சு. அவ்ளோதான் சாப்ட மாட்டேன்!”,

திவி “ஏய், இட்ஸ் நாட் குட் ஆதி. இது தான் லாஸ்ட். இனிமேலும் சாப்பிடாம இருக்காதா. ஓகே. இது பிரண்ட்டா என்னோட ஆடர், ஓகே.?”

ஆதி “ம்ம்ம் ஓகே திவி! தங்கள் ஆணைப்படி!”

திவி “எதுவும் பிரச்சனை இல்லை ல.? ஏன் அவசர அவசரமா போன.?”

ஆதி “அதுலாம் ஒன்னும் இல்ல மா! ஒரு பைல் என்கிட்ட குடுத்து இருந்தாங்க. அதை நான் வீட்ல வச்சிட்டேன். அதான் அவ்ளோ அவசரம்.” என்று வாய்க்கு வந்தத கூறினான்.

திவி “ஓகே.. ஓகே.. டைம் ஆச்சு வயித்துக்கு எதையாவது போட்டுட்டு தூங்கு, குட் நைட்😴😴”

ஆதி “ம்ம்ம்.ம் ஓகே திவி. குட் நைட்!”

என்று விட்டு இருவரும் தன் உறக்கத்தை மேற்கொண்டனர்.

நிலவு மகள் சூரியனின் செம்மை தாங்காது தன் பணியை முடித்துக்கொள்ள, வானமகள் மீது தன் செம்மையை பரவ விட்டு மெல்ல மேல் எழுந்து தன் பணியை தொடங்கினான் கதிரவன்.

திவி “அம்மா, இன்னைக்கு நான் வரத்துக்கு கொஞ்சம் லேட் ஆகும் மா! லைப்ரரி போய்ட்டு தான் வருவேன்!”

அம்மா “ம்ம் சரி மா, பஸ்க்கு காசு எடுத்திகிட்டல.?”

திவி “ம்ம் எடுத்தாச்சு ரோஸ்! நான் போய்ட்டு வரேன்” என்று தன் தாயின் கன்னத்தில் இதழ்களை பதித்துவிட்டு சென்றாள்.

ஆதியும் விஷ்ணுவும் ஒன்றாய் உள்ளே நுழைய, திவியும் ரவீயும் வெளியில் வர சரியாக இருந்தது. திவியின் முகம் ஒரு வித பதட்டத்துடன் இருக்க, ரவீ “ரெண்டு பேரும் தடிமாடுங்க மாதிரி வழிய மறச்சுகிட்டா நாங்க எப்டி வெளில போறது. நகுந்து தொலைங்க!” என்று இருவரையும் தாண்டி வெளியில் சென்றனர்.

திவி குழப்பத்துடனும் பதட்டத்துடனும் இருப்பதை கவனித்த ஆதி என்ன என்று கேட்பதற்குள் இருவரும் சென்று இருந்தனர்.

வெளியில் சென்ற இருவரும் வகுப்பிற்குள் வந்து அமைதியாக அமர, ஆதி அவர்களை தான் கவனித்துக்கொண்டு இருந்தான்.

விஷ்ணு “டேய்..டேய்.. என்ன டா.? ரொம்ப நேரமா அங்கேயே பாத்துகிட்டு இருக்க.? ஏன்டா  என் தங்கச்சியை சைட் அடிக்குறியா.?” என்று கேள்வியுடன் பார்க்க,

ஆதி “டேய், என்ன டா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க? அப்டிலாம் இல்ல, நீ திவிய கவனிச்சியா.? ஒரு மாதிரி இருக்கா?” என்று கேட்க,

விஷ்ணு அப்போது தான் அவன் கவனித்தான். “ம்ம்ம் ஆமா டா. வாடா போய் கேட்கலாம்.!”

ஆதி “டேய் என்னடா கேட்கலாம்னு சொல்ற.? அவங்களுக்குள்ள ப்ரைவசி இருக்கும்ல சொல்றதா இருந்தா அவளே சொல்ல மாட்டாளா.?” என்று கேட்க,

விஷ்ணு அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு “நேத்து நடந்தத அவளே வந்து சொன்னாலா.?” என்று கேட்க,

ஆதி அமைதி காக்க, விஷ்ணு “வாடா, அவளா சொல்லுவான்னு  பாத்தா எப்படியும் இந்த ஜென்மத்துல சொல்ல மாட்டா.” என்று ஆதியை இழுத்துக்கொண்டு திவி ரவீ அமர்ந்திருக்கும் இடம் நோக்கி சென்றனர்.

விஷ்ணு திவியை இடித்துக்கொண்டு அமர, அவள் அமைதியாக நகர்ந்து அமர்ந்து கொண்டாள். விஷ்ணு அதோடு தன் சேட்டையை ஒரு புறம் நகர்த்திக்கொண்டு, “என்னா ஆச்சு திவி.? என் ஒரு மாதிரி இருக்க.?”

அவள் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்து பெஞ்சீல் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

விஷ்ணு “எருமை.? என்ன ஆச்சு.? திவி ஏன் இப்டி இருக்கா.? நீ ஏதாவது அவள பண்ணியா.?” என்று ரவீயிடம் வினவ,

ரவீ “ஆமா லூசு, நான் தான் இவள ஏதாவது பண்ண போறேன். அப்டியே தங்கச்சி மேல ரொம்ப பாசம். போ டா டேய்!”

பொறுமை இழந்த ஆதி “ப்ச்ச், யாராவது சொல்லுங்க? திவி என்னா ஆச்சு.? ஏன் அவ அப்டி இருக்கா ரவீணா.?”

ரவீ திவியை பார்க்க, திவி “அதுலாம் ஒன்னும் இல்ல, ஸ்டோமக் பெயின் தான்.” என்று மறுபடியும் படுத்துக் கொள்ள,

அதை உணர்ந்த விஷ்ணு “ரொம்ப பெய்ன்னா இருக்கா திவி.?” என்று கமறிய குரலில் கேட்க, அவள் படுத்த படியே ஆம் என்று தலையசைத்தாள்.

உடனே ஆதியை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றவன் எலுமிச்சை சாறுடன் வர, திவியும் ரவீயும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து பகிர்ந்து குடித்தனர்.

வகுப்பும் முடிந்து விட விஷ்ணு திவியிடம் “வீட்டுக்கு கரெக்ட்டா போட்டுவியா.? போய்ட்டு சாப்பிட்டு தூங்கு! நாளைக்கு காலேஜ்க்கு வரலனாலும் பரவால்ல. வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு”என்று கட்டளைகள் இட்டுக்கொண்டு இருந்தான். அதை திவி கேட்டுக்கொண்டு நின்று இருந்தாள்.

ரவீ “போதும் போதும்டா. ரொம்ப ஓவர் ப்லோ அகிட்டு இருக்கு. ” என்று கூற

விஷ்ணு “அய்ய, அதுலாம் ஒன்னும் இல்ல. நீயும் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு” என்றான்.

ஆதி தான் நடப்பது எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டு இருந்தான். இதை பற்றி யாரிடம் கேட்பது என அறியாமல் அமைதியாக விட்டுவிட்டான்.

ஒரு பக்கம் கல்லூரி, மற்றொரு பக்கம் தன் அலுவலகம், என தன் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டு இருந்தான் ஆடவன். இதில் தன் அலுவலக விஷயம் மற்றவர்களுக்கு முக்கியமாக நண்பர்களுக்கு தெரிந்து விடாமல் போராடியும் கொண்டு இருந்தான். ஆனால் திவியோ நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்கு வேலை செய்கிறாய்?, என்ன வேலை செய்கிறாய்? என்று கேட்டு அவனை இம்சித்துக்கொண்டு இருந்தாள்.

அப்டி இப்டி என்று கல்லூரி நாட்கள் ஒரு மாதத்தை கடந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் நண்பர்கள் பட்டாளம் நெருக்கம் அடைய, தோழமைகளை பிரிக்கும் முயற்சியில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள் சுப்ரியா.

அதன் முதல் படியாக திவியின் உணவில் ஒவ்வாத பொருளை கலந்து விட்டு இருந்தாள்.  ஆசிரியர் அழைத்தக் காரணத்தினால் அவள் உணவை உண்ணாமல் இருக்க, அவளது உணவை நண்பர்கள் பட்டாளம் பங்கு போட ஆரம்பித்தனர்.

சபரி “திவி இன்னும் வரல, இனிமேலும் வர மாதிரி தெரியல, சோ அவ சாப்பாட நாமளே சாப்பிடலாம்”

ஆதி “டேய், அப்ரோம் அவ என்னடா பண்ணுவா.?”

சபரி “டேய் ஆதி, நான் உங்கிட்ட பல முறை சொல்லி இருக்கேன். நமக்கு எப்பவும் சோறு தான் முக்கியம். அதை பத்தி அக்கறை இல்லாதவங்களுக்காக அதை வேஸ்ட் பண்றது ரொம்ப தப்பு டா.”

கவி “ம்ம்ம் ஆமா, அப்ரோம் அன்னலட்சமி நம்ம கண்ணை குத்திடுவங்கா.” என்று சிரிக்காமல் சொன்னால். 

ஆதி “அட லூசுங்களா, அப்போ எனக்கும் குடுங்க.” என்று கேட்டான்.

கனகா “இப்போ தான் நீ எங்களை மாதிரி யோசிக்கிற. இப்படியே இரு.. பொழச்சுகுவ” என்றாள்.

இந்த நிகழ்வை முகத்தில் கலவரத்துடன் பார்த்துகொண்டு இருந்தாள் சுப்ரியா. விரைந்து வந்த திவி இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டு தலையில் அடித்து கொண்டாள். தன் பையில் வைத்து இருந்த மற்றொரு பாக்ஸை எடுத்து ஆதியிடம் கொடுத்தாள்.

ஆதி கேள்வியாய் பார்க்க, திவி “எப்டியும் இதுங்க தராதுங்க. உனக்கும் சேத்து தான் எடுத்துட்டு வந்தேன். இந்தா!” என்று அவனிடம் நீட்டினாள். புன்னகையோடு பார்த்து வாங்கி கொண்டான்.

அனைவரும் உணவை முடித்து கொண்டு கிளம்ப தயாராகினர். திடீரென்று ஆதிக்கு ஒரு மாதிரியாக இருக்க, வயிற்றை பிடித்துக்கொண்டு நடந்தான். அதை கண்ட விஷ்ணு “என்னடா ஆச்சு.? ஏன் வயித்தை புடிச்சிகிட்டே நடக்குற.?”

ஆதி “வயிறு வலிக்குது டா. திடீரென்று ஏதோ யோசனை வர, டேய் மச்சான்.! எனக்கும் ஒரு லெமன் ஜூஸ் வாங்கி தாடா.?” என்று கேட்டான்.

விஷ்ணு கேள்வியுடன் “எதுக்கு டா.?”

ஆதி “அன்னைக்கு திவி கேக்காமலேயே வாங்கி குடுத்தல.? இன்னைக்கு எனக்கு வாங்கி தாடா.?” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறியவனை என்ன சொல்வது என்று தெரியாமல் விஷ்ணு சிரித்துவிட்டான்.

ஆதி “எருமை ஏன் டா, சிரிக்குற.?”

விஷ்ணு “நீயும் அவளும் ஒண்ணா டா.? அவளுக்கு வேற பிரச்சனை அதுனால ஜுஸ் வாங்கி குடுத்தேன். நீ கண்டதை தின்னுட்டு என்கிட்ட ஜூஸ் கேக்குற பக்கி”

ஆதி “என்ன பிரச்னை.?”

விஷ்ணு “டேய் அன்னைக்கு அவளுக்கு பீரியட்ஸ் டா, சோ வாங்கி குடுத்தேன் டா.” என்க.

ஆதி புரியாமல் பார்க்க, விஷ்ணு “பீரியட்ஸ் டைம்ல அவளுக்கு ரொம்ப வயிறு வலிக்கும். அவளுக்கு மட்டும் இல்ல நெறய பேருக்கு அப்படித்தான். அன்னைக்கு அவ மூஞ்சியை பாத்தே எனக்கு ஒரு டவுப்ட். அவ சொன்ன உடனே காண்பர்ம். அது மட்டும் இல்ல, நானும் பயலாஜி ஸ்டுடெண்ட் தான்டா!”

ஆதிக்கு அப்போது தான் பெண்ணின் உணர்வுகள் புரிய, அன்று அவள் தன்னிடம் நடந்து கொண்டதற்கு இன்று அர்த்தம் புரிந்துவிட்டது.

இதனை கேட்டுக்கொண்டு இருந்த திவி ரவீயுடன் அங்கு செல்ல, அவர்கள் பின்னோடே சுப்ரியாவும் வந்தாள்.

ரவீ “என்ன இங்க மாநாடு.? என்ன ஆதி.? உனக்கு என்ன ஆச்சு.? ஏன் வயித்தை புடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருக்க.?” என்று கேள்வியாய் வினவ,

சுப்ரியா அப்போது தான் டிபன் பாக்ஸ் மாறியதை புரிந்து கொண்டாள். ஏனோ தான் செய்த தவறை எண்ணியவள் திவி தப்பி விட்டாளே என்று தன்னையே நொந்து கொண்டாள்.

ஆதி “என்னனு தெறியல ரவீணா, வயிறு வலிக்குது.” என்க,

திவி “அச்சச்சோ… சாப்பாடு ஒத்துகல போல, சாரி ஆதி! என்னால தான். உனக்கு என்ன தேவைன்னு  கேட்டு கொண்டு வந்து இருக்கணும்”என்று கூற,

சுப்ரியா இது தான் சாக்கு என்று ஆதியின் அருகில் சென்றவள் அவனின் தோல் மீது கை வைத்து “வாஷ் ரூம் போய்ட்டு வா ஆதி. உனக்கு டேப்லெட் தரேன்.” என்றிட,

திவி “உன்கிட்ட டேப்லெட் இருக்கா ப்ரியா.? சீக்கிரம் குடு டி. பாவம் என்னால தான்.” என்று தன்னையே நொந்து கொண்டாள்.

அனைவரும் உணவு தான் சேராமல் போனது என்று நினைத்துவிட்டு ஆதியும் விஷ்ணுவும் ஓய்வறை சென்று விட்டு வந்தனர். வந்தவர்களிடம் மாத்திரையை கொடுத்தாள் சுப்ரியா.

ஓரளவு ஆசுவசமாய் உணர்ந்தவன், வீட்டிற்கு கிளம்பும் பொருட்டு தன் இரு சக்கர வாகனத்திடம் வந்தவன் மயங்கி விழுந்தான்.

அதனை கண்ட அவனின் தோழமைகள் பதறி அங்கு வந்தனர். திவி ஆதியை தன் மடியில் கிடத்தி “ஆதி என்ன ஆச்சு ? ஆதி ஆதி கண்ணை தொறந்து பாரு ஆதி” என்று அவனது கன்னங்களை தட்டினாள்.

சுப்ரியா பதட்டத்துடன் “அய்யோ தூக்குங்க, ஹாஸ்பிடல் போலாம்.” என்று கூற,

விஷ்ணு நீரை அவன் முகத்தில் தெளிக்க, அவன் லேசாய் கண் விழித்தான்.

திவி: கண்களில் நீரோடு “ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல. எல்லாம் சரி ஆகிடும். ஹாஸ்பிடல் போனா சரி ஆகிடும் ஆதி” என கூற,

அப்போது தான் திவியின் கண்களை ஆழ பார்த்தவன், அவள் கூறிய வார்தைகளோடு அவளின் ஸ்பரிசத்தையும் உணர்ந்தவன் “யது…” என்று கூறிக்கொண்டே மீண்டும் மயக்க நிலைக்கு சென்றான்.

திவியின் கண்கள் சிவந்து கண்களில் இருந்து நீர் நிற்காமல் வெளியில் வர “தியா….!” என்று கத்திக்கொண்டு அவனை அணைத்துக்கொண்டாள்.

ஆதியிடம் யதுவை பற்றின தகவல்களை கூற வந்த ஷக்தி இதனை கண்டு அதிர்ந்து விட்டான்.

“தன் அன்னையை காப்பாற்றிய பெண் தான் யது வா.? தன் விசாரனை தவறா.?” என்று தன் கையில் வைத்து இருந்த யதுவின் இறப்பு சான்றிதழை புரியாமல் வெறித்துக் கொண்டு இருந்தவனை திவியின் “அண்ணா” என்ற அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

திவி கண்களில் நீரோடு “அண்ணா, தியா உங்க பிரண்ட் தான? அவன எந்திரிக்க சொல்லுங்கண்ணா. ப்ளீஸ்ண்ணா. எனக்கு என் தியா வேணும்ண்ணா.” என்று கூறியவளை என்ன கூறி சமாதானம் செய்வது என்று அனைவரும் திகைத்து தான் போயினர்.

ஆதியின் யது என்ற அழைப்பும், திவியின் தியா என்ற அழைப்பும் அனைவரையும் குழப்பமடைய செய்ய, முதலில் தன்னை மீட்டு கொண்ட ரவீணா குழப்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு “எல்லாரும் என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க.? ஹாஸ்பிடல் போலாம்!” என்று அனைவரையும் சுயத்துக்கு கொண்டு வந்தாள்.

சக்தியின் வண்டியில் திவியும் ஆதியையும் அனுப்பிவிட்டு விஷ்ணு சபரி ஆதியின் இரு சக்கரவாகனத்தில் பின் தொடர, சுப்ரியா, ரவீணா, கனகா, கவிதா ஆட்டோவில் சென்றனர்.

சக்தி வேகமாய் மருத்துவமனைக்கு விரைந்து சென்றான். அங்கு சென்று ஆதியை சேர்த்தனர். ஒருவர் பின் ஒருவராக வர, திவி அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியில் சுவற்றை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள். அவளின் கண்களில் இருந்து நீர் நிற்காமல் ஓடி கொண்டு இருந்தது.

அவளின் நிலையில் வேறு எதை பற்றியும் யாருக்கும் கேட்க தோணாது, அனைவரும் ஆதியின் உடல்நிலையில் கவனம் செலுத்தினர்.

ஐ.சி.யூ வில் அனுமதிக்கபட்டான் ஆதி. வெளியில் வந்த மருத்துவரிடம் ஆதியை பற்றி கேட்ட சக்தி, அவர் கூறியதை கேட்டு அதிரிச்சியின் உச்சத்தில் இருந்தான். மற்றவர்களுக்கும் இதே நிலைமை என்றாகிவிட, சுப்ரியா பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள். இதை எதையும் உணராது திவி இருந்தாள்.

கனவு தொடரும்🌺🌺🌺🌺

தங்களின் கருத்துக்களை கூறவும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்