207 views

ஆட்சியர் கனவு 49💞

திவி ஆதியிடமும், இசை சக்தியிடமும் கூறியதும், மீனா மற்றவர்களிடமும் கூறியதை நாமும் சற்று செவிமடுத்து கேட்போம். அப்படி என்ன தான் நடந்தது.?

 ஆதி வீட்டில் இருந்து கனத்த மனதுடன் வெளியேறினாள் திவி, உடன் அன்வர், ரேஷ்மா மற்றும் ஹரியுடன்.

 மகிழுந்து பயணம் துவங்கியது. திவி ஜன்னலோரம் சாலையையே வெறித்துக் கொண்டு வர, ஹரி, “திவி, ஆதி உன்னை விட மாட்டான் மா. நீ பீல் பண்ணாத. நிச்சயம் ஆதி உன்னை தேடி வருவான்.” என்றிட, வெற்று சிரிப்பொன்றை உதிர்த்தவள் மௌனமாய் தலையசைத்தாள்.

 அந்த இறுக்கமான சூழ்நிலை பிறகு யாரும் ஏதும் பேசவில்லை.

அன்வர், “ரேஷ், நாம திவிய நாசிக் கூட்டிட்டுப் போய்டலாம்?”

ரேஷ்மா “ம்ம்… எனக்கும் அதான் சரின்னு தோணுது அன்வர். ஹரி, நீ இங்கேயே இருந்து என்ன நடக்குதுன்னு சொல்லு. நாங்க நாசிக் போறோம். திவி நீ என்ன சொல்ற?”

 தன் நிலையை எண்ணி மனதுக்குள் வெகுவாக நொந்து போனாள் திவி. என்னவென்று சொல்வது என்று அறியா பேதையாய் அவளின் சிரம் தானாய் ஆடியது. அவள் மனதுக்குள் பெரும் ஆழிப் பேரலையே சுழன்று கொண்டு இருந்தது. ‘ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே? ஏன் என்னை அவன் நம்பவில்லையா? அவள் சொல்வதை நம்பும் அளவிற்கு நான் அவனிற்கு நம்பிக்கை அளிக்கவில்லையா? இவ்வளவுதான் காதலா?’ என்ற பெரும் புயல் அவள் மனதில். இருந்தும் தன்னுள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு நாசிக் செல்ல ஒப்புக் கொண்டாள் திவி.

 ஹரியும் திவியின் மன மாற்றத்திற்காக சரியென்று ஒப்புக் கொண்டான். ஹரி கல்லூரி சென்று திவியின் நிலையை கூறி அவளை தேர்வு எழுத மட்டும் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான். முதலில் கல்லூரியில் மறுத்தாலும், பின் ஒருவாறு ஒப்புக் கொண்டனர்.

மறுநாளே மூவரும் நாசிக்கிற்கு பயணமாகினர். ஒன்றரை நாள் தொடர்வண்டி பயணம். ஏதும் பேசாமல் அமைதியின் பிடியில் தான் சென்றது. திவி தொடர்வண்டியின் கதவோரம் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தாள். இன்னும் மனதின் புயல் ஓய்ந்தபாடில்லை. வீசும் தென்றல் கூட தன்னவனை தான் நினைவூட்டியது.

“யது…”

“ம்ம்”

“எவ்ளோ நேரம் இந்த வானத்தையே பாத்துட்டு இருப்ப?”

“நீ காண்டாகி ரூம் போற வரை” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க,

“அடியேய், உன்னை கொல்லப் போறேன் பாரு! மனுஷன உசுப்பேத்திப் பாக்குறதே இந்த பொண்ணுங்களுக்கு வேலையா போச்சு” என்றான் சலிப்பாக.

“என்னாடா, ரொம்ப சலிச்சுக்குற?”

“ம்ம்… இப்படி எத்தனை நாள் என் பொண்டாட்டிய பக்கத்துலயே வெச்சிக்கிட்டு, பேச்சுலர்ரா இருக்க போறேன்ங்குற சலிப்பு தான் டி”

“ஹான். ஆசை தான்.” என்றாள் தன்னுள் எழுந்த வெட்கத்தை மறைத்தப்படி.

“யது… எனக்கு சீக்கிரம் குட்டி யது வேணும் டி” என்றான் அவளை பின்னிருந்து அணைத்தபடி.

“ஏய்… ஆதி, என்ன பன்ற? யாராவது வந்துடப் போறாங்க!”

“யார் வந்தா என்ன டி? என் பொண்டாட்டிய தான கட்டிப் புடிக்குறேன். எப்போ எனக்கு குட்டி யது வரும்?”

“ஏன் குட்டி யது தான் வேணுமா? எனக்கு குட்டி ஆதி தான் வேணும்!”

“முதல குட்டி யது, அப்ரோம் குட்டி ஆதி சரியா?” என்றவன் அவள் கழுத்தில் தன் இதழைப் பதிக்க, நாணத்தில் திக்குமுக்காடினாள் பெண்ணவள். 

“ஹாஹான். சரிதான். ஏய், என்ன டா மாமா பண்ற?”

“பார்ரா, எவ்ளோ நாள் ஆச்சு நீ இப்டி சொல்லி. என் பொண்டாட்டிக்கு அப்பப்போ தான் ரொமான்ஸ்லாம் வரும் போல.” என்றவனின் கைகள் அவள் தேகத்தில் அத்துமீறியது.

 அவனோடு சேர்ந்து இயற்கையும் சதி செய்ய, மெல்ல இருவர் மீதும் விழுந்த தூறல் மழையாகியது. அவளை தன் கைகளால் அள்ளியவன் நேரே சென்றது தன் அறைக்கு தான்.

அவள் மேனியில் பூத்த துளிகளை ரசித்தவன், தன் மனையாளின் சம்மதம் தேடினான் அவள் கண்களில்.

நாணம் பூத்திட தன் கண் சிமிட்டி அவளின் சம்மதத்தை தெரிவித்தவள், தன் ஆதியுடன் ஒன்றிப் போனாள், ஆதியின் யதுவாக.

தன் எண்ணவலைகளிலிருந்து மீண்டவள், தன் வயிற்றில் கைகளைப் பதித்தாள். ‘எத்தனை எத்தனை கனவுகளோடு வந்தாள், அவனின் உயிரணுவை தன் உதரத்தில் சுமப்பதை கூறிட. அத்தனையும் ஒரு நொடியில் சுக்குநூறாக மாறியது. தன்னை பெற்றவர்களும் இல்லை. வளர்த்தவர்களும் இல்லை. அதை விட தன் உயிரானவனும் உடன் இல்லை’ இத்தனை வலிகளும் ஒன்றாய் தாக்கிட, ரேஷ்மாவின் சொற்களில் தன்னிலை பெற்றாள். “இன்னும் டென் மினிட்ஸ்ல இறங்க போறோம் திவி. நீ உள்ள வா!” என்று அழைத்து சென்றாள்.

இதோடு நாசிக் வந்து மூன்று தினங்கள் ஆகிறது. திவி மனதில் வெறுமையும் வலியும் மட்டுமே மிச்சம்.

ரேஷ்மா திவிக்கான உணவோடு வந்தாள், “இந்தா, காலைல இருந்து சாப்டல நீ. இப்படி இருக்காத திவி. அழுதுடு. அப்போ தான் மனசுல இருக்க பாரம் கொஞ்சமாவது குறையும்.”

திவி அவளை வெற்றுப் பார்வை பார்க்க, அந்த பார்வையின் அர்த்தம் பாவை அவளுக்கு எதையும் உணர்த்தவில்லை.

“அழுதா எல்லாம் சரியாகிடுமா ரேஷ்மா? என் ஆதி என்னை புரிஞ்சிப்பானா? இல்லை, நடந்ததுலாம் இல்லன்னு ஆகிடுமா? எதுவுமே மாறப் போறது இல்லை ரேஷ். அப்படி மாறுற சூழ்நிலை வரட்டும் அப்போ கூட நான் அழுவேனா தெரியல. மே பீ என் ஆதியப் பாத்தா அழுக வருமோ என்னமோ?” என்றாள் விரக்தியாக.

“சரி சாப்டு.” திவி மறுக்க, “உனக்காக இல்லன்னாலும் உன் வயித்துல வளருற உயிருக்காவது சாப்டு” என்றாள்.

எதுவும் பேசாமல் உணவை உண்டு முடித்தவள், அன்று ஒரு தீர்க்க முடிவோடு உறங்கினாள், இல்லை உறங்க முயற்சி செய்தாள்.

மறுநாள் பொழுது புலர, குளித்து தயராகியவள், ரேஷ்மா அன்வரிடம் சென்றாள். “நான் ஐ.ஏ.எஸ் க்கு படிக்க விரும்புறேன். உங்களால எனக்கு உதவி செய்ய முடியுமா?”

அன்வரும் ரேஷ்மாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அவளை ஏறிட்டனர். “தட்ஸ் மை கேர்ள். உனக்கு வேண்டிய எல்லா ஹெல்ப்பும் நாங்க செய்றோம். நீ படிக்க ஸ்டார்ட் பண்ணு” என்றாள் ரேஷ்மா.

அங்கிருந்தபடியே தன் படிப்பை தொடர்ந்தாள் திவி. நாட்கள் அதன் போக்கில் நகர, அவளின் அண்டத்தில் அவனின் உயிரணுவும் வளர்ந்தது. தற்போது நான்கு மாத கருவை சுமந்தபடி இருந்தாள் அவள். தீவிரமாக நாசிக் மாவட்ட செய்திகளை பார்த்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை, வாயிலில் ஒலித்த அழைப்புமணி சத்தம் அதன் பக்கம் ஈர்த்தது.

அங்கு நின்றிருந்தவனை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

அங்கே இன்னிசைமதி நின்று கொண்டு இருந்தான். சத்தம் கேட்டு ரேஷ்மாவும் தன் அறையிலிருந்து வெளியே வர, அவளும் அவனை கண்டாள். “வாவ். வாட் அ சர்ப்ரைஸ். மதிண்ணா எப்படி இருக்கீங்க? ஏன் வெளிலயே நிக்குறீங்க. வாங்க உள்ள வாங்கண்ணா.” என்று வரவேற்க, கண்களில் கண்ணீருமாய், உதட்டில் சிரிப்புமாய் உள்ளே வந்தான்.

“திவி, இவங்க எனக்கு அண்ணா மாதிரி. இன்னிசைமதி இவங்க பேர். அண்ணா இவ என் பெஸ்ட் பிரண்டு. திவ்யதர்ஷினி.”

இசை “என்னை நியாபகம் இருக்கா திவி?”

திவி மலர்ந்த புன்னகையோடு, “இசை, நீ.. நீங்க எப்டி இங்க?”

ரேஷ்மா “ஏய், உனக்கு மதிண்ணாவ தெரியுமா?”

திவி தலையசைத்து, “ஆதி கம்பெனில தான் வொர்க் பண்ணாங்க. எங்க உங்க ஆள கண்டுபிடிச்சாச்சா?” என்று வினவ, அதுவரை இருந்த புன்னகை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

அப்போது அன்வர் “ரேஷ்… ரேஷ்…” என்று குரல் கொடுத்தப்படியே உள்ளே வந்தான்.

ரேஷ், “சொல்லு அன்வர்… ஏன் இவ்ளோ அவசரம்?”

அன்வர், “நான் சொல்ற விசயத்தை கேட்டா, நீ ஷாக் ஆகிடுவ. அப்பா பிசினஸ்ஸ பாத்துக்க அக்கா வர ஒத்துக்கிட்டாங்க.” என்று அவளை அணைத்துக் கொண்டு சுற்றினான். ரேஷ்மாவும் சந்தோசமடைந்தாள்.

ஆனால், திவியும் இசையும் தான் புரியமால் நின்று கொண்டு இருந்தனர். ரேஷ்மா அவர்களை பார்த்த பிறகே தன்னிலை வந்தவள், “அன்வர், விடு… திவிக்குப் பாரு ஒன்னும் புரியல. இங்க பாரு மதிண்ணா கூட வந்து இருக்காங்க” என்றாள்.

அன்வர் அசடு வழிந்தபடி, “சாரி ப்ரோ…” என்றான். இசையும் சிரித்துக் கொண்டே “பரவாயில்ல.. என்ன இவ்ளோ சந்தோஷம்?”

அன்வர் “அக்கா வராங்க ப்ரோ. அதான்”

திவி “அக்காவா? யாரு அன்வர்?”

ரேஷ், “அவன் அப்போவோட பர்ஸ்ட் வைப் பொண்ணு திவி. பேர் மீனா. அவங்க அப்பாக்கு மீனா அக்கான்னா உயிர். மீனா அக்காக்கு 1 வயசு இருக்கப்போவே அவங்க அம்மா தவறிட்டாங்க. அன்வர் அம்மாவ தான் அப்ரோம் கல்யாணம் செய்துகிட்டாங்க. மீனா அக்கா, அப்பா பண்ற பிசினஸ் பிடிக்காம சொல்லாம கொல்லாம எங்கயோ போய்ட்டாங்க. அப்ரோம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் நாசிக்லயே பாத்தோம். இப்போ அக்கா அப்பா கூட தான் இருக்காங்க.” என்றாள்.

திவி அமைதியாய் இருக்க, இசை யோசனையில் ஆழ்ந்தான். “ரேஷ்மா, அவங்க முழு பேர் என்ன?”

அன்வர் “கவிமீனா ப்ரோ” என்றான்.

அதில் அதிர்ந்தது இசை மட்டுமல்ல, திவியும் தான். திவியும் இசையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அப்போது மீண்டும் அழைப்பு மணி சப்தத்தில் திரும்பியவர்கள் கண்டது என்னவோ மேடிட்ட வயிற்றோடு நின்று கொண்டு இருந்த மீனாவைத் தான், இசையின் கவியிவள், திவியின் மீனாவாகியவள்.

திவி “மீனா…??”

இசை “கவி…??”

அன்வர் “அக்கா, வா வா..” என்றபடி அவளை உள்ளே அழைத்தான்.

மீனா இருவரையும் கண்ட அதிர்ச்சியில் இன்னும் மீளாமல் இருந்தாள். திவியின் சிறுவயது தோழி தான் மீனா. திவியோ பெரும் குழப்பத்தில் இருந்தாள், ‘இறந்ததாக சொன்னவள் இங்கு எப்படி?” என்ற வினா அவளை வண்டாக குடைய, திவி ஏதும் பேசாது அவளையேத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரேஷ்மா “அக்கா, இப்போ நீங்க திவி ரூம்ம யூஸ் பண்ணிக்கோங்க. நாளைக்கு நாம மாலேகான் போய்டலாம் அக்கா. மதிண்ணா நீங்க அன்வர் ரூம்க்கு போய்டுங்க. சீக்கிரம் பிரஷ் ஆகிட்டு வாங்க சாப்டலாம்” என்றாள்.

(மாலேகான் – நாசிக் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சியாகும். கிமா மற்றும் மௌசம் ஆறுகள் இணையுமிடத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் நாசிக்கை அடுத்த மிகப் பெரும் நகரமாக விளங்குகிறது.)

மீனாவைத் தொடர்ந்து திவியும் அறைக்குள் வர, அவளை எதிர்கொள்ள இயலாது மௌனம் காத்தாள் மீனா.

திவி “மீனா… நீ… நீ.. என்னை… நியாபகம் இருக்காடி? நான் தான் திவி திவ்யா..”

மீனா “நல்லாருக்கியா திவி?’ என்றவள் கண்ணீரோடு அவளை அணைத்துக் கொள்ள, திவி “மீனா… உனக்கு… உனக்கு…. ஒன்னும் இல்லை தானே?” என்றிட, அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதை உணர்ந்தவள் “எனக்கு ஒன்னும் இல்ல திவி. எல்லாம் அப்ரோம் சொல்றேன். நீ என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத” என்றாள். திவி அதை ஆமோதித்து, “இசைண்ணா உன்னை தான் லவ் பண்ணாங்களா?”

மீனா “ம்மம்.. ஆமா. எல்லாம் நான் சொல்றேன்.” என்று விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

இசையும் பலவித கேள்விகளோடு தயாராகி வெளியே வந்தான். இசை எதுவும் பேசாது மீனாவின் முகத்தையே ஆராய்ந்து கொண்டு இருந்தான். ஐவரும் ஒன்றாக உணவு உண்ண அமர, “நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ரேஷ். எவ்ளோ நாள் தெரியுமா அக்கா கூட இருக்கணும்னு நான் ஆசப்பட்டேன். இன்னைக்கு தான் நிறவேறி இருக்கு.” என்றான் அன்வர்.

ரேஷ்மாவும் “நானும் தான் அன்வர். அண்ணா இங்க வந்தது எனக்கு அவ்ளோ ஹாப்பி. சாப்ட்டு எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. நானும் அன்வரும் ஷாப்பிங்க் போய்ட்டு வந்துடுறோம்.” என்றாள்.

உணவை உண்டு முடித்தனர். ஏனோ அன்வர் ரேஷ்மாவைத் தவிர மற்ற மூவருக்கும் உணவு இறங்கவில்லை.

அவர்கள் வெளியே சென்றதும் இதுவரை தன் மனதில் பாரமாய் இருந்த விஷயம்தனை இறக்கத் தொடங்கினாள் கவிமீனா.

திவி “என்ன டி ஆச்சு உனக்கு? நீ எப்படி அன்வர் அக்காவா? சேலம்ல தான இருந்த? உன் அப்பா பிசினஸ்மேன்னா? இசை அண்ணா உன்னை லவ் பண்றாங்களா? இப்போ நீ பிரக்னன்டா வேற இருக்க? அய்யோ எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு டி?” என்று கதறினாள்.

இசை இன்னும் கூட அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனின் பார்வையும் மாறவில்லை அவள் மீதே குத்திட்டு நின்றது.

மீனா “நான் சாகல திவி. அது ஒரு டிராமா. அத பண்ணது இசையோட தங்கச்சியும், அவ அப்பாவும் தான் திவி.” என்றாள்.

திவியும் இசையும் அதிர, “அதுக்கு கூட்டு இந்த அன்வர் கூட” என்று கதறினாள் மீனா.

 

கனவு தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்