Loading

ஆட்சியர் கனவு 48 💞

ரவீ கூறியதை கேட்டு ஆச்சரியத்தில் இருந்தாள் திவி.

திவி “என்ன ரவீ சொல்ற.? நிஜமாவா.?” என்று நம்பாமல் வினவ,

ரவீ “அட ஆமா திவி. விஷ்ணுக்கும் சுப்ரியாக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு வருசம் ஆகுது. அதுவும் லவ் மேரேஜ் தெரியுமா.?”

திவி “எதே.! பார்ரா… லவ் மேரேஜா.? ம்ம்.. வாழ்த்துக்கள் டா அண்ணா”

விஷ்ணு “அவ ரொம்ப மாறிட்டா திவி மா. அவளால தான் உனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு சந்தனா மேல ரொம்ப கோபம். அப்ரோம் அவளே மனசு மாறிட்டா. இப்போ சந்தனா பத்தின டீடைல் எல்லாம் அவ தான் தந்து இருக்கா. “

திவி “என்ன.? என்ன சொல்றீங்க எல்லாம்? நான் போனதுக்கு அப்ரோம் என்ன தான் ஆச்சு.. அதை சொல்லுங்க.?” என்றிட, இப்பேச்சு துவங்கிய உடனே அவ்விடத்தில் இருந்து மறைந்தான் ஆதி.

சக்தி “நீ போன உடனே ரொம்ப பிரச்சனை தான் திவி மா. அதுவும் அந்த சந்தனா இருக்காலே என்ன பேசினா தெரியுமா.? அவளுக்கு நீயும் ஆதியும் ஒன்னு சேரக்கூடாது. அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவா.

ஆதிக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல திவி. நீ அவன் கிட்ட எதுவும் சொல்லாம இருந்து உனக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு தான் அவன் பயமே. அதுனால தான் அன்னைக்கு கூட அவன் அமைதியா இருந்தான். நீ சென்னை போன உடனே நானும் ஆதியும் சேர்ந்து கேரளால இருக்க அந்த ஹோம் டீடைல் கலெக்ட் பண்ணோம். அது முழுக்கு முழுக்க சந்தனா கண்ட்ரோல். பட் அவள அரேஸ்ட் பண்ண சரியான ஆதாரம் இல்லை. ராஜரத்தினம் அரேஸ்ட் பண்ண தான் எவிடன்ஸ் இருந்தது. ஓகே பர்ஸ்ட் அவர புடிப்போம்ன்னு அவரை அரேஸ்ட் பண்ணியாச்சு..”

திவி “ம்ம்.. தெரியும். நியூஸ்ல பாத்தேன்.” என்றாள் எவ்வித உணர்வும் இன்றி.

சக்தி “ம்ம்ம்… அப்போ கூட சந்தனா அடங்கல. அவ அழுது ரொம்ப ஆக்ட் பன்னதுனால பெரிப்பா கோகுலுக்கு சந்தனாவை கல்யாணம் செஞ்சி வச்சிட்டாரு” என்று கூற,

திவி “என்ன.. கோகுலுக்கா.? என்ன சொல்றீங்க?”

ரவீ “ஆமா திவி. நீ போனதுக்கு அப்ரோம் எல்லாம் தலைகீழா மாறிடுச்சு திவி. சந்தனாவ கோகுலுக்கு கல்யாணம் செஞ்சி வச்ச அப்ரோம் சரவணன் மாமா சொத்து எல்லாம் அவ தான் ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சா. அதுல ஆதியோட AD கன்ஸ்ட்ரக்சன்னும் வருது” திவி அவளை கேள்வியாய் பார்க்க,

பாரதி “சரவணன் மாமாவோட முதலீடுல தான் ஆதி மாமா கம்பெனி ஆரம்பிச்சாரு. அதுனால பெருமாள் மாமாவே அதை கோகுல் பேருக்கு மாத்தி கொடுக்க சொல்லிட்டாரு. நீங்களும் இல்ல அதுலயே மாமா ரொம்ப ஃபீல் ஆகி எல்லாமே கோகுல் பேருக்கு மாத்திட்டாரு.”

சக்தி “ஆதி தான் திவி உன்னால ரொம்ப காயப்பட்டு இருக்கான். உன்னை நினைச்சு பர்ஸ்ட் டைம் குடிக்க ஆரம்பிச்சான் மா” என்றவனின் குரல் கம்ம, அவனின் கையை ஆதூரமாக பிடித்தாள் ரவீணா.

தன்னை நிதானித்து கொண்டவன், “அப்ரோம், மொழியன் பிறந்த அப்ரோம் என்னமோ ஆதி கூட தான் ரொம்ப நேரம் இருந்தான். ஆதி தான் மொழிக்கு எல்லாம். அப்ரோம் ஆதியே புது கம்பெனி ஓபன் பண்ணான். தேவ், ஹரி, பாரதி, பவி ன்னு எல்லாரும் ஹெல்ப் பண்ணாங்க. தேவ் ,ஹரியை ஆதி தான் கோகுல் கூட இருக்க சொன்னான். பாரதி தான் ஆதிக்கிட்ட ரொம்ப கெஞ்சி கம்பெனியை அவ பொறுப்புல எடுத்துகிட்டா. ரவீயும் அப்பப்போ கவனிக்க ஆரம்பிச்சா. ஆதி இப்போ அந்த வீட்ல இல்ல. நீ இல்லாம இனி அங்க போக மாட்டேன்னு சொல்லி தனியா தான் இருக்கான், இன்னும் கூட.

சந்தனா பொறுத்த வரை தேவ் ஹரி அவங்களுக்கு கீழ, சுப்ரியா இப்போ வக்கீல் அதுனால லீகல் அட்வைஸரா அவள கூட வச்சி இருக்கா. பெரிப்பா அவ சொல்றது தான் வேத வாக்கா இருக்காரு. பெரிம்மா அந்த வீட்ல ஜடம் மாதிரி தான் இருக்காங்க. செல்வி அம்மா கூட சந்தனா சொல்றது தான் கேக்கிறாங்க. நாங்களும் அங்க இருக்க பிடிக்காம ஆதி கூடவே வந்துட்டோம். அண்ட் முக்கியமான விஷயம், சந்தனா பத்தின டீடைல் எல்லாம் ஆதிக்கிட்ட தான் இருக்கு. அவ பண்ண வேலைலாம் ரொம்ப கொடூரம் திவி. அதை இன்னும் தெளிவா ஆதி சொல்ல மாட்டிங்குறான். இதுலாம் சந்தனா நம்ம குடும்பத்துல செஞ்ச விஷயம். இன்னும் ஊருல பல பேரோட வாழ்க்கையை என்ன பண்ணி தொலைச்சான்னு தெரியல.?” என்றான் ஆத்திரம் பொங்க கூறினான்.

இவன் கூற்றில் திவி தன்னவனை தான் தேடினாள். மனதில் பெரும் பாரம் குடியேற, இவர்களுக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

தேவ் “அண்ணா, உங்களை தேடி கண்டுபிடிச்ச அப்ரோம் தான் எங்களுக்கு நிம்மதி. நீங்க வந்து தான் அந்த சந்தனாவ அரேஸ்ட் பண்ணனும் அண்ணி. அண்ட் நாம இனிமே ஒண்ணா இருக்கணும்” என்றிட, அவனின் தலையை ஆதரவாக வருடியவள், “கண்டிப்பா வரேன். நானும் இவ்ளோ நடந்ததுக்கு ஒரு காரணம். அப்ரோம் நம்ம கூட இன்னும் சிலர் ஊருக்கு வருவாங்க..” என்று நிறுத்திட,

“அவங்களையும் கூப்டு யது. நாம நாளைக்கே கிளம்பனும்” என்றபடி ஆறெழிலை தூக்கியபடி வந்தான், ஆதி.

திவி தன்னவனை புன்னகையோடு நோக்கி, “எழில், போய் கவினையும் கவின் அப்பாவையும் வர சொல்லு டா” என்றதில், பெரும் அதிர்ச்சி மீனாவிற்கே.

அனைவரும் அமைதியாக இருக்க, மீனாவோ கலங்கியபடி நின்றாள்.

எழில் கவினையும் அவன் தந்தையையும் அழைத்து கொண்டு வர, “இனிமே மீனா கவின் அண்ட் இசை அண்ணாவும் நம்ம கூட தான் இருப்பாங்க” என்று கூறி முடித்ததில் பெரும் அதிர்ச்சி ஆனது சக்தி தான்.

இன்னிசைமதி. ‘தன் காதலை தேடி சென்றவன், ஆதியின் அழைப்பில் திரும்பி வருகையில் கண்டான் அவளின் காதலியை கவிமீனா. நிறைமாத பெண்ணாக தன் கண் முன் காட்சியளித்தவளை சிலைபோல் அவன் கண்டு திகைத்து இருந்தான். அவள் முன் நின்றவனை கூட அடையாளம் தெரியவில்லை பேதையவளுக்கு பசியின் கொடுமையால்.

அவளை அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தவன் அவள் பிரசவத்தின் வரையில் மட்டுமல்ல இன்றும் தன்னவளுக்கு துணையாக இருக்கின்றான். இன்னும் பழைய நிகழ்வு பற்றி அவனும் கேட்கவில்லை, இவளும் கூறவில்லை. கவினுக்கு தந்தையாகவும், தன்னவளுக்கு துணையாகவும் இருக்கின்றான்”

இன்னிசைமதியை கண்ட சக்தி அவனை அணைத்துகொள்ள, இத்தனை வருட பிரிவு அதில் வெளிப்பட்டது.

சக்தி “அப்போ உன்னோட கவி..?”

திவி “இதோ.. இவ தான் மீனா. கவிமீனா”

இன்னிசை புன்னகைக்க, “ப்பா.. ” என்றபடி அவனின் காலைக் கட்டிக்கொண்டான் கவின்.

மீனா “கவின்..”

கவின் “போ மா.. நீ தான் என்னை பேச வேண்டாம் சொன்னல.? இப்போ பேசாத போ.. நான் எழில் கூப்டான்னு தான் வந்தேன்”

மீனா கண் கலங்க, அதை தாங்க இயலாதவன் “கவின்.. அம்மா கிட்ட அப்படி பேச கூடாது. நீ சரியா சாப்டாதனால தான அம்மா அப்படி சொன்னாங்க” என்று அதட்ட,

எழில் “ஆமா கவின். பிஸ் பாவம். நீ பேசுலன்னு பீல் பண்ணுவாங்க.. நம்மனால யாரும் பீல் பண்ண கூடாதுல.. பேசு கவின்” என்று கூறினாள்.

தன் தோழி கூற்றை ஏற்றவன், “சாரி மா” என்றான் உதட்டைப் பித்துக்கியபடி.

மொழியன் “மா.. நான் ஆதிப்பா கூட பை போய்ட்டு வரேன்மா”

ரவீ “நோ மொழியா.. நாம ஊருக்கு போய் போய்க்கலாம். எழில் கவின்லாம் சமத்தா இருக்காங்கள. நீ தான் சேட்டை பண்ற” என்று கடிந்தாள்.

மொழியன் அழுக தயாராக, திவி “அச்சோ.. என் செல்லம் அழ கூடாது. நாம சாப்ட்டு பை போலாம் சரீங்களா?” என்று சமாதானம் செய்தாள்.

அவனும் அதை ஆமோதித்த படி அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க, பாவம் இரண்டு ஜீவன்கள் பொறாமையில் எரிந்தது.

ஆதி “பேபி.. பாரேன். உன் அம்மா நம்மல கண்டுக்கவே மாட்டிங்குறா!”

எழில் “விடு பேபி.. நைட் நாம யதும்மாவ விட்டு தூங்கிடலாம்.. ஓகே வா?”

ஆதி “ஓகே பேபி” என்று தன் மகள் கன்னத்தில் முத்தமிட்டான்.

பாரதி “எனக்கு பசிக்குது.. கா”

மீனா “கொஞ்ச நேரம் நான் ரெடி பன்றேன்.. மா”

திவி “வேண்டாம் மீனா. நீ பேக் பண்ற வழிய பாரு. நான் சமைக்கிறேன். இசை ண்ணா நீங்களும் திங்ஸ் பேக் பண்ணுங்க.. நாம நாளைக்கு சேலம் போறோம். இனிமே அங்க தான் “

இன்னிசை “என்ன திவி திடீர்னு.?”

திவி “எனக்கே திடீர்னு தான் சொன்னாங்க.. நீங்க கிளம்புங்க.” என்று கூற, பதிலேதும் கூறாமல் தன் இருப்பிடம் சென்றான். மறந்தும் ஆதி இவனிடம் பேசவில்லை.

திவி அடுக்களைக்குள் செல்ல, எழிலை பாரதியிடம் கொடுத்து விட்டு தன் மனையாளை பின் தொடர்ந்தான் ஆதி.

எழில் கவின் உடன் சென்று விட, இசையை சக்தியும் மீனாவை மற்றவர்களும் தொடர்ந்தனர்.

ஆதி “யது..!”

திவி அடுப்பு திட்டிற்கு அருகில் அவனுக்கு முதுகு காட்டி நின்று இருக்க, பின்னே அவளை அணைத்து அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான் ஆதி.

திவி எவ்வித பிரதிபலிப்பும் தராமல் இருக்கவே, அவளை தன் முன் திருப்பியவன் கண்டது கலங்கிய அவள் முகத்தையே.

ஆதி “என்ன டா.?” என்ற அழைப்பு மென்மையாகிட, தன்னவன் மார்பில் தஞ்சம் புகுந்து தன் வலியை விரட்ட எண்ணினாள்.

அவளின் தலையை கோதியவன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம் யது. எனக்கு தெரியும், நீ அங்க இருந்து வந்த அப்ரோம் எவ்ளோ கஷ்டப்பட்டன்னு. ரிலாக்ஸ் யது. பழசுலாம்  மறந்திடு. இனிமே உனக்கு நான் நம்ம எழில் மட்டும் தான் சரியா?” என்றிட,

வலியோடு அவனை ஏறிட்டவள், தன் வயிற்றின் மீது அவனின் கை வைத்து “அங்க இருந்து வந்த ரெண்டு மாசத்துல… ஒ… ஒ.. ஒரு ஆக்சிடன்ட்ல நம்ம.. நம்ம குழந்தை..” என்று மூச்சு விட சிரமப்பட்டவள், தேம்பி அழத் தொடங்கினாள். 

அவளின் முதுகை சாந்தமாக தடவியன் “எனக்கு தெரியும் டி. அழாத. நம்ம குழந்தை எங்கையும் போல.. கண்டிப்பா நிச்சயம் வரும். சரியா?” என்று அவளை சமாதானம் செய்தான்.

திவி அவனை இறுக அணைத்து கொள்ள, தன்னவளை தன்னோடு இணைத்துக் கொண்டான்.

“அங்க இருந்து நான் வந்த அப்ரோம்..” என்று திவி கூற, அவளின் இதழில் தன் கையை வைத்து அமைதிப்படுத்தியவன் “எனக்கு எல்லாம் தெரியும். எல்லாம். சரியா.. நீ எதுவும் சொல்ல தேவையில்லை”

திவி “இல்ல ஆதி. நான் சொல்லணும். பிளீஸ் டா” என்றிட,

ஆதி தன் அணைப்பை தளர்த்தாது “சரி சொல்லு…”என்றான்.

மீனாவின் அறையில் அனைவரும் கூடியிருக்க, பாரதி “அக்காக்கு உங்களை எப்படி தெரியும்.? நீங்க எப்படி அக்கா கூட.? அக்கா..  அக்கா அங்க இருந்து வரப்போ பிரகணன்ட்ஆ இருந்தாங்க.. உங்க கூட எப்படி.? எழில், அக்கா பொண்ணா.?” என்று கேள்வி மேல் கேள்வியை தொடுத்தாள், மற்றவர்களும் அதையே பார்வையில் தொக்கி பார்க்க, மீனா பெருமூச்சு விட்டு கூறத் தொடங்கினாள்.

சக்தி “இவ்ளோ நாள் இங்க தான் இருந்தியா மதி.?”

இசை கவினை கண் காட்டிவிட்டு  “கவின் உன் டிரஸ்லாம் பேக் பண்ணு கண்ணா. நான் அங்கிள் கூட பேசிட்டு வரேன்” என்றான். கவினும் சென்று விட,

இசை “ஆமா சக்தி. திவி, நான், மீனா, அன்வர், ரேஷ்மா எல்லாரும் ஒண்ணா தான் இருந்தோம். ஒரு வருஷம் முன்னாடி வரை..” என்று நிறுத்தியவன் தன் கடந்த நாட்களை கூறத் தொடங்கினான்.

கனவு தொடரும்.. 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்