Loading

ஆட்சியர் கனவு 41💞

தெய்வானையிடம் பாரதி பேசிக்கொண்டிருக்கையில் ராஜரத்தினம் மகிழுந்தில் தன் குடும்பத்தினருடன் வந்து இறங்க, பாரதி வேகாமாக சென்று தெய்வானையிடம் “அத்தை, சுப்ரியா இருக்குள்ள.. அது.. குடும்பத்தோட வந்து இருக்கு…”

தெய்வானை “யாரு டி அது…?” என்று புரியாமல் கேட்க,

பாரதி “அதான் அத்தை.. அன்னைக்கு ஆதி மாமாவ கட்டிக்க போறேன்னு சொன்னுச்சே ஒரு அரைமெண்டல். அதான் ” என்று இழுக்க,

தெய்வானை “இப்போ தான் நம்ம குடும்பம் ஒரு ஸ்மூத்தா போகுது.. இன்னைக்கு என்ன நடக்க போகுதோ.” என்று அவளையும் இழுத்து கொண்டு வெளியில் வந்தார்.

வாசலில் அனைவரும் இறங்கிட, சுப்ரியா “ஏன் மா,அவசியம் இங்க எல்லாம் வரனுமா.? எனக்கு அந்த திவி மூஞ்ச பாத்தாலே பத்திக்கிட்டு வருது” என்று தன் அன்னை கீதாவின் காதை கடித்தாள்.

கீதா “பிரியா.. இது உன் மாமா வீடு.. நீ ஏன் அவள நினைக்குற.? நமக்கு சொந்தம்னு இருக்குறவங்க இவங்க தான். அதுவும் சக்தியும் கோகுலும் இங்க தான் இருக்காங்க.. உங்க ரெண்டு பேரையும் அவங்களுக்கு கட்டி வச்சா, எங்க கடமை முடிஞ்சது..” என்று கூற,

சுப்ரியா “எதே, கோகுல் கூட வா.? அம்மா.. என்ன பேசுற நீ…? அக்கா” என்று ஏதோ கூற வருவதற்குள்,

ரத்தினம் “என்ன தொனதொனன்னு பேசிக்கிட்டு.. அமைதியா வாங்க.” என்று ஒரு அதட்டலை போட்டார். நால்வரும் உள்ளே செல்ல, தெய்வானை “வாங்க.. வாங்க” என்று கூறிவிட்டு “மாமா.. என்னங்க.. ” என்று அழைப்பு விடுத்தார்.

சிவஞானம் மற்றும் பெருமாள் தத்தமது அறையில் இருந்து வந்தனர்.

அந்நேரம் ஜாகிங்கை முடித்துக் கொண்டு வந்தனர் ஆதியும், சக்தியும்.

சக்தி “யார் கார் டா.? யார் வந்துருப்பா.?” என்று யோசனையுடன் வினவ,

ஆதி “வேற யார்.. உன் மாமன் தான்” என்றான் கேலிசிரிப்புடன்..

சக்தி “வாட்..? மை மாமா..? யாருடா அவன்.?”

ஆதி “ராஜரத்தினம்” என்றான் தோளை குலுக்கியபடி. இதனை கேட்ட சக்திக்கோ ஆயிரம் இடி தன் தலையில் இறங்குவது போல் ஆயிற்று. ஏற்கனவே கோகுல் அவர் சொல்வதே வேதவாக்கு என இருக்க, இன்று என்ன ஏழரையை கூட்ட வந்து இருக்கிறாரோ என்று தான் பயந்தான்.

ஆதியோ அவன் தோளில் தட்டி, “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” என்று பாடிவிட்டு செல்ல,

சக்தி “எனக்கு எது நடந்தாலும் இவனுக்கு கவலை இல்லை.  அப்படி என்ன நடக்கப் போகுதோ.. தர்மேந்திரா..” என்று தன் இரு கைகளையும் வான் நோக்கி வேண்டி விட்டு சென்றான்.

ஆதியும் சக்தியும் உள்ளே வர, ராஜரத்தினம் ஆதியை ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, “வாங்க மாப்பிள்ளை.. எப்டி இருக்கீங்க.. சக்தி உன் மாமா டா.. சின்ன வயசுல பாத்தது..” என்று சக்தியிடம் அளவளாவ, சக்திக்கோ அருகில் இருந்த சந்தனாவை பார்க்கும் போது கடுப்பு தான் வந்தது.

சந்தனாவோ முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாது ஆதியை தான் வெறித்து கொண்டு இருந்தாள்.

பெருமாள் “டேய் ரத்தினம்… வா டா.. வா.. என்ன ஒரு அதிசயம்.. இப்போ தான் நான் ஒருத்தன் இருக்குறது உன் கண்ணுக்கு தெரிஞ்சது போல” என்று கேட்க, அப்போது சத்தம் கேட்டு தேவ்வும் திவியும் வெளியே வந்தனர்.

தேவ் அறையில் இருந்து திவி வர, தேவ் ஒரு நிமிடம் அவளின் கைபிடித்து “அண்ணி.. நான் சொன்னதை நீங்க யார்கிட்டயும் சொல்ல கூடாது.. பிராமிஸ்.. அண்ணா கிட்ட கூட” என்று அவள் முன் கையை நீட்ட,

திவி சிரித்து கொண்டே “ஆதி பிராமிஸ்.. சொல்ல மாட்டேன்.. சரியா.. வா கீழ போலாம்”என்று அவனை அழைத்து கொண்டு படி இறங்கினாள்.

தேவ் அவளின் தோளை பிடித்தபடி இறங்க, அவன் மற்றவர்களை பார்த்து விட்டு, அமைதியாக அவளின் பின் வந்தான்.

திவி இவர்களின் வருகையை ஆராய்ந்தபடியே வர, இவர்களின் வருகையை ஒரு ஜோடி கண்கள் குறித்து கொண்டு தான் இருந்தது.

பெருமாளின் கூற்றில் ஆதி மட்டும் அல்ல, அனைவருமே அதிர்ந்து தான் போயினர்.

“என்ன ப்பா சொல்றீங்க..? இவரை உங்களுக்கு தெரியுமா.? ” – ஆதி.

பெருமாள் “இவன் என் சின்ன வயசு பிரண்ட் டா.. இப்போவும் கூட தான்.. போன வாரம் கூட இவனை வீட்டுக்கு வர சொன்னேன்.. அப்போ கூட ‘இல்லடா வேலை இருக்கு’ சொன்னான். இப்போ என்னடான்னா திடீர்னு வந்து நிக்கிறான்” என்று மகிழ்ச்சியில் கூறினார்.

திவியும் ஆதியும் தான் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொண்டனர்.

ரத்தினம் “டேய்.. இப்போ நான் உன் பிரண்ட்டா வரல டா.. நாம இப்போ சொந்தம் டா..” என்று கூற,

பெருமாள் “என்ன டா சொல்ற.?” என்று புரியாமல் வினவ,

ரத்தினம் “ராணி என்னோட தங்கச்சிடா” என்றார் வராத கண்ணீரை துடைத்து கொண்டு..

பெருமாள் “டேய் மச்சான்..” என்று அவரை ஆரத்தழுவி கொள்ள, அதிர்ச்சி என்னவோ தெய்வானை மற்றும் சிவஞானத்திற்கே. மற்ற அனைவரும் அறிந்தது தானே.!

தெய்வானை கூட பெயரை அறிந்து வைத்தாரேயன்றி நேரில் இப்போது தான் பார்க்கிறார்.

இதனை கண்ட திவிக்கோ ‘எங்க டா போய் முட்டிக்கலாம்’ என்று இருந்தது.

தெய்வானை “அண்ணா.. அண்ணி.. நீங்க இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.. இவங்க தான் உங்க பொண்ணுங்களா.? பேர் என்ன மா.?” என்றிட,

அவர்கள் கூறும் முன்பே, பெருமாள் “பெரியவ சந்தனா.. சின்னவ சுப்ரியா.. சின்னவ நம்ம திவி கிளாஸ் தான்.. உனக்கு தான் தெரியுமே.. அன்னைக்கு ஆதி பர்த் டேக்கு வந்து இருந்தாளே..” என்று கூறினார்.

உடனே திவி “அன்னைக்கே உங்களுக்கு தெரிஞ்சு இருக்குள்ள.? அப்போ ஏன் சொல்லல.?” என்று ஆராய,

பெருமாள் “போன வாரம் தான் திவி மா.. இவன் எல்லாரையும் அறிமுகப்படுத்தினான்” என்றார் உடனே..

தெய்வானை “சரி.. சரி எல்லாரும் உட்காருங்க.. எவ்ளோ நேரம் நின்னுட்டே இருப்பீங்க..?” என்று அனைவரையும் அமர வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தார் திவியை அழைத்து கொண்டே.

தெய்வானை “திவி மா.. நீ சீக்கிரம் ஒரு குளியல் போட்டு வா.. அப்டியே ஆதியையும் குளிச்சிட்டு வர சொல்லு.. சீக்கிரம் வா ஓடு..” என்று அவளை அறைக்குள் அனுப்பினார்.

திவி ஆதியை அழைத்து கொண்டே அறைக்குள் நுழைய சந்தனா இருவரையும் கொலைவெறியில் பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆதி “ஏய் குட்டச்சி, இன்னும் குளிக்காம என்ன டி பண்ண.?” என்று அவளை நெருங்க,

திவி “தேவ்க்கு எக்ஸாம் வருதுல. அதான் சம் டௌப்ட்ன்னு சொன்னான்.. சொல்லி கொடுத்துட்டு வரேன்.”  என்றாள் பின்னே சென்று கொண்டே..

ஆதி “சரி.. என்னவாம்.. இன்னைக்கு மேடம் குளிக்காம செமயா இருக்கீங்க.? என்ன மேட்டர்..?”

திவி “மார்னிங்கே ஒரு குட் நியூஸ் காதுல விழுந்துச்சா.. அதான்..” என்றாள் தேவ் சொன்னதை நினைத்து கொண்டு.

ஆதி “என்ன நியூஸ்ன்னு சொன்னா மாமாவும் ஹாப்பியா இருப்பேன்ல” என்று அவள் இடையை இறுகபற்றி இழுக்க,

திவி “அது.. அது… சொல்ல மாட்டேனே… என்ன பண்ணுவ.?” என்று அவனுக்கு அழகு காட்டினாள்.

ஆதி “நீ சொல்லலன்னா நான் உன்னை விட மாட்டேனே.. நீ என்ன பண்ணுவ?” என்று அவள் இதழ் நோக்கி குனிய, திவி அவன் அருகாமையில் தன்னை மறந்து, தன்னவனுக்கு இசைந்து கொடுக்கும் நோக்கில் தன் நேத்திரங்களை மூடினாள்.

ஆதி சிரித்து கொண்டே, அவளின் நெற்றியில் ஒரு தட்டு தட்டி, வேகமாக குளியறைக்குள் புகுந்தான்.

திவியோ கண்களை திறந்து திருத்திருவென விழிக்க, “டேய்.. எரும.. வெளிய வா டா.. இதுக்கு தான் என்ன வம்பு பண்ணியா.. பக்கி.. அத்தை சீக்கிரம் வர சொன்னாங்க டா.. டேய்.. அச்சோ.. உன்னை.. வெளிய வா டா மவனே.. உனக்கு இருக்கு..” என்று அவள் கதவு முன்னே கத்தி கொண்டு இருக்க,

ஆதி உள்ளிருந்து “நானே கசகசன்னு இருக்குன்னு இருக்கேன்.. நீ முதல குளிக்க போய்ட்டா.. கீழ என்ன பிளான்னு எனக்கு தெரியாது பேபி.. ” என்றான் சிரித்து கொண்டே..

திவி “டேய் லூசு … அந்த வெங்காயத்தை நான் கீழ போனா தெரிஞ்சிக்கிட்டு சொல்ல மாட்டேனா.. என் வென்று.. சீக்கிரம் வா டா..” என்று அவள் கதறினாள்.

ஆதி “குட்டச்சி.. நான் வேணா இதுக்கு ஒரு ஐடியா சொல்லவா..?” என்று மருகிய குரலில் கேட்க,

திவி ‘இவன் குரலே சரி இல்லை.. ஐடியா என்ன லட்சணத்துல இருக்கோ..?’ என்று எண்ணி விட்டு, ஹான்.. சொல்லும்.. சொல்லி தொலையும்..” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு..

ஆதி “இப்டி கேட்டாலாம் சொல்ல மாட்டேன் செல்லம். எங்க சிரிச்சிக்கிட்டே கேளு யது மா..”

அவ்வளவு தான் திவி பிளாட். அவனின் இந்த அழைப்பு பெண்ணவளை ஏதோ செய்ய, “ஹான்.. சொல்லு சொல்லு.. என்ன ஐடியா மாமா..” என்று இவளும் அவனை குழைந்தே அழைத்தாள்.

அதில் ஆதி என்ன கண்டானோ “உன் ட்ரஸ் எல்லாம் எடுத்துக்கோ..”

திவி “சரி..”

ஆதி “அப்டியே உள்ள வா.. ரெண்டு பேரும் ஒண்ணா குளிக்கலாம்..”

திவி “என்னது..? டேய்.. வர வர உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு.. நீ சீக்கிரம் வெளிய வா..” என்று அதட்டினாலும், அவன் கூற்றிற்கு பெண்ணவள் முகம் சிவப்பு பூசிட தவறவில்லை.

ஆதி “இது என்ன கொடுமை மக்களே. அவ தான எங்க அம்மா சீக்கிரம் வர சொன்னாங்கன்னு சொன்னா. நானும் பெருந்தன்மையா வர தானே சொன்னேன்.. இதுக்கு எனக்கு கொழுப்பான்னு கேட்குறா..? நாம உதவி செய்ய நினைச்சது தப்பா…? ஹ்ம்ம்.. நல்லத்துக்கு இங்க காலமே இல்லப்பா” என்று புலம்ப,

திவி “என்ன அங்க முணுமுணுப்பு..?”

ஆதி “சும்மா பேசிட்டு இருக்கேன் டி செல்லம்.. இதோ அஞ்சே நிமிஷம் மாமா வந்துடுறேன்.. ” என்று விட்டு ‘வெளியே புலியாவே இருந்தாலும் பொண்டாட்டி கிட்ட எலி தான் டா நம்ம நிலமை.. ஆதி. இவள கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் டா..’ என்று குளித்துவிட்டு வந்தான்.

விரைந்து  அவள் உள்ளே சென்றாள்.

கீழே சமையல் அறையில், கீதா “அண்ணி.. என்ன சமைக்கிறீங்க..?”

தெய்வானை “இன்னைக்கு சண்டேல அண்ணி.. நான்வெஜ் தான்.. அதுவும் திவி வேற கேட்டா.. சீக்கிரம் சமைக்கணும்..” என்று பரபரக்க, திவியின் பெயரை கேட்டதும் கீதாவின் முகம் கறுத்துவிட்டது.

தெய்வானை “பாரதி, இந்தா முதல எல்லாருக்கும் இந்த ஜூஸ் குடு.. அப்ரோம் அப்டியே திவிய கூட்டிட்டு வா..” என்று அனுப்பி வைத்தார்.

பாரதி அந்த பக்கம் சென்றதும். கீதா தன் வேலையினை ஆரம்பித்தார். “ஏன் அண்ணி, கேட்குறேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்.. நம்ம ஆதியும் திவியும் சந்தோஷமா தான இருக்காங்க..?”

தெய்வானை சிரித்து விட்டு “அவங்களுக்கு என்ன அண்ணி.. சந்தோஷமா தான் இருக்காங்க.. திவி நான் பாத்து வளந்த பொண்ணு. ஆதி என் கொழுந்தனார் வளர்ப்பு. என் மருமக இல்ல அண்ணி. என் மக அவ..” என்று பெருமை பேசினார்.

கீதா விடாமல் “அண்ணி, கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு..  நல்ல விஷயம் ஏதாவது அண்ணி..?” என்று முதல் குண்டை தூக்கி போட்டார்.

தெய்வானை “அண்ணி, இன்னும் திவி படிப்பு முடிக்கல..  இன்னும் ஒரு வருஷம் இருக்கு அண்ணி. அதான் நான் முதல படிப்பை முடிக்கட்டும். அப்ரோம் பாத்துக்கலாம்ன்னு சொன்னேன் அண்ணி.” என்றார். இருந்தும் அவர் மனதில் அந்த ஏக்கம் இருக்கத்தான் செய்தது, இப்போது துளிர்விட்டது..

கீதா “என்ன அண்ணி, நான் முதல்ல சந்தனாவ ஆதிக்கு தான் கட்டி வைக்கணும்னு நினைச்சேன். அப்ரோம் பாத்தா நீங்க யாருக்கும் சொல்லாம திவியை ஆதிக்கு முடிச்சிடீங்க ” என்றார் தன் மகள் ஆதியை விரும்பியதை மனதில் கொண்டு.

தெய்வானை “தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி… சின்ன வயசுலயே முடிவு பண்ணது.. ஆதிக்கு தான் திவின்னு.. இவர்களும் ஒருத்தர ஒருத்தர் விரும்புனாங்க.. அது மட்டும் இல்ல அண்ணி.. என் ஆதி இப்போ இங்க இருக்கான்னா அதுக்கு முழு காரணமும் திவி தான்.. சின்ன வயசுலயே அவ ரொம்ப பொறுப்பு. சொன்ன மாதிரியே என் பிள்ளைய என் கூட சேர்த்துட்டா” என்றார் பூரிப்போடு..

கீதா “சரிங்க அண்ணி.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. திவியை ஆதியோட பேரை சொல்லி கூப்பிட விடாதீங்க அண்ணி.. நம்ம பழக்கம் அது இல்லை..” என்று ஒரு சிறு துரும்பை கிள்ளி விட்டு சென்றார்.

பாரதி ஆதி அறைக்குள் நுழைய, தேவ் அவளிடம் எப்படி பேசுவது என்று அறியாமல் திணறி போனான். காதல் என்று ஊர்ஜிதம் ஆன பின்னர் மீண்டும் தன்னவளை சீண்ட மனம் லயிக்கவில்லை. அவளையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.

பாரதி “மாமா.. அக்கா எங்க..?”

ஆதி “குளிச்சிட்டு இருக்கா டா குட்டிமா.. கொஞ்ச நேரம் வந்துடுவா.” என்றான் சிரித்துக் கொண்டே..

பாரதி “மாமா.. சீக்கிரம் அக்காவ வர சொல்லுங்க.. கீழ அந்த கீதா சித்தி அத்தை காதுல அக்காவ பத்தி ஏதோ சொல்லிட்டு இருக்கு.” என்றாள்.

ஆதி தலையை ஆட்டி கொண்டு, “அது இருக்கட்டும்.. நீங்க நேத்து என்ன காலேஜ் முன்னாடி நின்னுட்டு இருந்தீங்க..? அதுவும் பவியோட.?”

என்ற கேள்வியில் அதிர்ந்து விட்டாள் அலரவள்…..

 

 

தன் அறைக்குள் சென்ற சக்தி, ஆறு மாத காலமாக காணாத தன்னவளின் நினைவில் அமர்ந்தான். இறுதியாக ஆதி திவியின் திருமணத்தில் பேசியது. அன்று அவள் முன் தன் காதலை வெளிப்படுத்திய தருணம், அவள் கூறிய சொற்களால் காத்து கொண்டு இருக்கிறான். ஆறு மாத காலமாக.

இவன் காத்து கொண்டும், அவள் அங்கு இவனின் நினைவில் தகித்து கொண்டும் இருக்கிறாள். பசலை நோயால் வாடி வதங்கி இருக்கிறாள்.

இதற்கு இடையில் ரத்தினத்தின் பகடை ஆட்டம் இந்நால்வரின் வாழ்க்கையையும் புரட்டி போடவே முதல் அடியாக இன்று வருகை தந்து இருக்கின்றார் என்பதை யாரும் அறியவில்லை.

ஆதி கேட்ட வினாவில் பாரதி அதிர்ந்து நிற்க, திவி குளித்து விட்டு வெளியே வந்தாள்.

ஆதி உடனே பேச்சை மாற்றும் பொறுட்டு “திவி சீக்கிரம் போ. அம்மா  உன்னை கூப்பிட்டு ஆள அனுப்பிட்டாங்க.. “என்று அனுப்பி வைத்தான்..

பாரதியும் எதுவும் கூறாமல் திவியை அழைத்து கொண்டு சென்று விட்டாள், பல வித யோசனைகளுடன்…

இன்றுடன் ரவீணா கூறிய கெடுவில் பாதி நாட்கள் சென்று இருக்க, தன் அலைபேசியில் அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

அன்றைய நினைவில் சென்று கொண்டே.

திவியின் திருமணம் முடிய, ரவீணா புடவையில் சக்தியை ஏங்க வைத்து கொண்டே இருந்தாள். ஒவ்வொரு

நிமிடமும் அவளை அள்ளி அணைக்க துடிக்கும் கரங்களை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.

“அயோ… கொல்றாளே… வர வர என் ஜிலேபியோட அழகு கூடிக்கிட்டே போகுது.. அம்மு.. இன்னைக்கு நான் கண்டிப்பா என் காதலை சொல்றேன்டி..” என்று சபதம் மேற்கொண்டான்.

ரவீணா “சக்தி.. சக்தி..” என்று அவனை உலுக்கிட, நினைவு வந்தவனாய், “ஹான்.. சொல்லு டா.. ” என்றான்.

ரவீணா “சக்தி.. எனக்கு அந்த ஐஸ்கிரீம் வாங்கி தாங்க சக்தி.. என்ன உங்க தங்கச்சி கல்யாணம்? அவ பிரண்ட்க்கு எக்ஸ்டரா ஒரு ஐஸ் கூட இல்லையா..?” என்று உதட்டை பித்துக்கியபடி கூற,

அதில் விழுந்தவன் “அட, இதுக்கு ஏன் இப்படி.. இரு வாங்கி தரேன்..” என்று அவரிடம் சென்று, “அண்ணா.. இவங்க கேட்குற ஐஸ்கிரீம் தாங்க” என்றான்..

அவர் தயங்க “நீங்க தாங்க அண்ணா.. அமௌண்ட் பத்தி யோசிக்க வேண்டாம்..” என்றதில், அவர் தயக்கத்துடனே ரவீணாவிற்கு ஒரு கப்பை தர, அவள் கையில் வாங்கிய அடுத்த நொடி, அந்த இடம் சுற்றி குழந்தைகள் பட்டாளம் தான் நிறைந்தது..

இப்போது தான் சக்தி உணர்ந்தான் அவர் ஏன் தயங்குனார் என்று… சக்தி ரவீணாவை முறைக்க “ஈஈஈ.. அது வந்து சக்தி, குழந்தைங்க எல்லாம் கேட்டாங்கலா.. அதான் போலீஸ்கார்..” என்று அசடு வலிந்தாள்..

சக்தி அவளின் முக பாவத்தை ரசனையுடன் பார்த்து விட்டு “ரவீணா.. ஐ லவ் யூ” என்றான் ஒற்றை வரியில்..

அவனின் சொல்லில் ரவீணா அதிர்ந்து நின்றாள். பின் தன்னிடம் விளையாடுகிறான் என்று எண்ணி “போலீஸ்கார் சும்மா சொல்லாதீங்க.. அப்ரோம் திவி கேட்டா அடிச்சிடுவா” என்க,

சக்தி “விளையாடல ஜிலேபி. சீரியஸ்..  ஐம் இன் லவ் வித் யூ.. ஜிலேபி..” என்றான்.

ரவீணா “நான் படிக்கணும் சக்தி.. திவி மாதிரி தைரியம்லாம் எனக்கு இல்லை.. அன்னைக்கு நான் என் பிரண்ட் உங்கள லவ் பண்றத தான் சொல்ல வந்தேன்.. ஆனா நீங்க என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க.. பட் இப்போ நீங்க என்ன லவ் பன்றேன்னு சொல்றீங்க.  அன்னைக்கு சொன்ன வார்த்தைகள் நான் சொல்லணும்னு அவசியம் இல்லை.. இப்போ நான் படிக்கணும்.. ஒரு வருஷம் உங்களால வைட் பண்ண முடியுமா..? என்ன பாக்காம.? பேசாம.?”

சக்தி “அன்னைக்கு நான் வார்த்தையை விட்டு இருக்க கூடாது தான் ரவீணா.. என்னை மன்னிச்சிடு.. நான் வெய்ட் பண்ணா நீ என்னை ஏத்துப்பியா..?” என்றான் பாவமாக..

ரவீணா “எனக்கு உங்க மேல அன்பு இருக்கு சக்தி.. எனக்கு அந்த ஒரு வருஷம் யோசிக்க டைம் வேணும்.. “

சக்தி “டேக் யூர் ஒன் டைம்.. நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. ” என்று தனக்கே உரிய தோரணையில் விலகி கொண்டான்.

அன்றிலிருந்து இன்று வரை இவன் அவளை நெருங்கிடவில்லை.. சொன்ன வாக்கை காப்பாற்றி கொண்டு இருக்கிறான்..

ஆனால் அவளோ அவனை எண்ணியே காலத்தை கழித்து வருகிறாள். ஒரு நாள் தன்னை காண வரமாட்டானா.. அவ்வாறு வந்தால் உடனே அவனின் நெஞ்சில் சாய்ந்து அவனவளாக இருக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கிறாள்..

ஆனால் இவள் அறியாதது, தினமும் அவளை காணாமல் இவனுக்கு தான் காலம் ஓடாது.. மறைந்து நின்று அவளை பார்த்த பிறகே அவனுக்கு அடுத்த வேலை..

தன் எண்ண அலைகளில் இருந்து மீண்டவன், குளியறைக்குள் புகுந்தான்.

திவி விரைந்து தெய்வானைக்கு உதவிட, கீதாவிற்கோ தன் மகள் இடத்தில் இவளை வைத்து பார்க்கவே முடியவில்லை..

இறுதியில் ராஜரத்தினம் கேட்ட கேள்வியில் ஆதி திவிக்கு அதிர்ச்சி என்றால், சக்திக்கோ உலகம் ஸ்தம்பித்து போனது…

கனவு தொடரும்🌺🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்