384 views

ஆட்சியரின் கனவு – 4

 

அனைத்து வலிகளையும் தன்னுள் கொண்டு குளுமையை பரிசளித்த நிலாமகள், தன் தூரத்துக் காதலனின் வருகையை எண்ணிக் காத்துக்கொண்டிருக்க, தன் காதலியை ஏமாற்றமால் கதிரவனும் தன் செங்கதிர்கள் படர விட்டு வருகை புரிய, கதிரவனின் பார்வையால் செம்மைப் பூத்து நிலாமகளை வெட்கம் பிடுங்க தன்னை மறைத்துக் கொண்டு கதிரவனை பணிக்கு அனுப்பினாள்.

அனைவரும் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்புடன் எழுகையில், எதிர்பார்ப்பிற்கு உரியவளோ கடும் காய்ச்சலில் படுத்துக் கொண்டிருக்கிறாள்.

தினமும் 5.00 மணிக்கே எழும் தன் மகள் 7.00 மணி ஆகியும் எழாமல் இருப்பதை கவனித்தவர், அவள் அருகே சென்றதும் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்தார் திவியின் தாய்.

அழகான 5 குருவிகளை உடைய குருவிக்கூடு திவியின் குடும்பம். தந்தை வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியுள்ளார். தாயுடன் சேர்ந்துத் தன் குடும்பத்தைக் காத்து வருகிறாள் மூத்த பெண் திவ்யதர்ஷினி. தன் இரட்டை சகோதரிகளுக்கு உற்ற தோழியாகவும் அடுத்தத் தாயாகவும் தன் பணியை செவ்வனே செய்கிறாள் திவி. திவியின் சகோதரிகள் பவித்ரா தேவி, பாரதி தேவி. பதினொன்றாம் வகுப்பு பயிலும் பள்ளிக் குருவிகள்.

திவிக்குக் காய்ச்சல் இருப்பதால் அவளால் கல்லூரிக்கு வர முடியாது என்ற தகவலை அவளின் டியூட்டர், ரவீணா மற்றும் அவர்களது தோழமைக்கு தெரியப்படுத்திய பின் அவளுக்குத் தேவையானதை செய்யத் தொடங்கினார் ரோஜா, திவியின் தாய்.

மணி 7.30. திவி “அம்மா, ப்ளீஸ் மா. நான் காலேஜ்க்கு போறேன் மா. இன்னைக்கு நெறய ப்ராஜெக்ட் சப்மிட் பண்னனும். மேஜர் க்ளாஸ் வேற இருக்கு. டெஸ்ட் இருக்கு மா.. ப்ளீஸ் மா.!” என்று கெஞ்சிக் கொண்டு இருக்க,

அவளின் அம்மா ” உனக்கு உடம்பு இப்டி கொதிக்குது. புரியுதா? இல்லையா?” என அவளைப் பார்க்க, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்தாள்.

ஏதோ யோசித்த அவரின் தாய், ” சரி, நீ முதல வாசல்வரை போ.” என்றிட, கேள்வியாய் அவரை பார்த்து விட்டு திவியும் நடக்க ஆரம்பிக்க இரண்டே அடியில் பிடிப்பு இன்றி கீழே விழுந்தாள்.

அம்மா “வாசல் வரையே மேடமால நடக்க முடியலையாம். இதுல காலேஜ்க்கு போராளாம். காமெடி பண்ணாம அமைதியா படு டி” என்றார்.

அம்மா‘ என்று சிணுங்கி கொண்டே அமைதியாக படுக்கையில் படுத்தாள்.
சிறிது நேரத்தில் அவளின் அம்மா கஷாயம் வைத்துக் கொடுக்க பல நிமிட போராட்டத்திற்கு பிறகு குடித்தாள். சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி அவளை ஆட்கொண்டது.

கல்லூரியில் அனைவரும் வரத் தொடங்கினர். இருபுரங்களும் அழகான மரங்கள். சிட்டுக்குருவிகளின் சத்தத்தில் அழகான நாய் தன் குட்டிகளுக்கு பால் புகட்டும் ரம்மியமான காட்சியை ரசித்துக் கொண்டும் தன் உயிர் தோழியின் வரவு இல்லாமலும் தன் வகுப்பை நோக்கிப் பயணித்தனர் ஆதியும் ரவீணாவும்..

அவர்களின் கேங்க் வந்துவிட, அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடனே வகுப்பிற்கு வந்தனர்.

இன்று வகுப்பில் தேர்வு என்பதால் 10 மணிக்கு தான் வகுப்பு ஆரம்பிக்கும் என்று தகவல் வந்தது. ஆதலால் அனைவரும் க்ரவுண்டிற்கு செல்ல, ரவீணாவும் சென்றாள். விஷ்ணு எதையோ பறிகொடுத்தவன் போல் இருக்க, மற்ற அனைவருக்கோ திவியின் உடல்நிலை குறித்த கவலையேக் குடிக்கொண்டது. அதில் ஒருவரோ சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.

ஆதிக்கோ திவியின் உடல் நிலை ஒரு வித வலியைக் கொடுக்க, அவள் வராதது இவனுக்கு ஏமாற்றத்தையும் எப்போது காண முடியும் என்ற ஏக்கத்தையுமே தந்தது.

ஆதி “ரவீணா, நான் விஷ்ணு கூட பேசணும். அவன வர சொல்லு.”

ரவீணா “இரு ஆதி.” என்று விட்டு விஷ்ணு அருகில் சென்று “உன்கிட்ட ஆதி பேசணுமா வர சொன்னான்” என்று எங்கோ பார்த்தபடி கூறி விட்டு முன்னே நடந்தாள். திவியின் வார்த்தைகளும் மற்றவர்களின் ஒதுக்கமும் விஷ்ணுவைத் துடிதுடிக்க செய்தது.

விஷ்ணு “சொல்லு டா”

ஆதி “எதுக்கு திவ்யாவ அடிச்ச? அவள பத்தி உனக்கு தெரியாதா? அவ எது பண்ணாலும் அதுல ஒரு ரீசன் இருக்கும்னு நீ தான சொன்ன.? அவள ஒன் வீக்கா ஃபாலோ பன்னது உனக்கு தெரியும்ல அப்போ ஏன் அத பத்தி அவகிட்ட சொல்லல.? அவள நம்பாம தான அவள அடிச்ச? அப்படிதானே?” என்று பொறுமையாக ஆரம்பித்தவன், சற்றுக் கோபத்துடன் கூடிய ஆதங்கத்துடன் கேட்டான்.

விஷ்ணு “நிறுத்துரியா? அவள நம்பல நம்பலன்னு சொல்றிங்கள? அவள நம்பாம நான் அவள அடிக்கல. அவள சுத்தி என்ன நடக்குதுன்னு புரியாம இருக்காளேன்னு தான் அடிச்சேன். அவள ஃபாலோவ் பன்னது ஒரு பையன், ஆனா காலைல பேசுனது வேற ஒரு பையன். அது யாருக்காவது தெரியுமா.? யாருக்கு என்ன.? திவிக்கே இது தெரியாது. அதான் அவள அடிச்சேன். ஆனா அது அவள விட எனக்கு எவ்ளோ வலிகுதுன்னு எனக்கு தான் தெரியும்.” என்று கத்திய குரல், குற்ற உணர்ச்சியோடு முடிந்தது.

அவனது பதிலில் அனைவருமே அதிர்ந்து தான் போயினர். விஷ்ணு பேச ஆரம்பிக்கும் முன்பே அங்கு இருந்து சென்ற சுப்ரியாவை யாரும் அறிந்திருக்கவில்லை.

ஆதிக்கோ உடன்பிறவா சகோதரப் பாசத்தைக் கண்டு, என்ன மாதிரியான உறவுகள் இவர்கள் என்று பூரிப்பு எழ, தனக்கும் இவ்வாறு அமைவர்களா.? என்ற ஏக்கமும் உடன் எழுந்தது.
 

ஆதி என்ன நினைத்தானோ கண் கலங்க விஷ்ணுவை அணைத்துக்கொண்டவன் “திவி ரொம்ப லக்கில டா” என்று கூறினான்.

விஷ்ணு மறுப்பாக தலையசைத்து “நான்தான் டா ரொம்ப லக்கி” என்று புன்னகையோடு கூறினான். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ,

தரனேஷ் “டேய், டைம் ஆச்சு. நேத்து நடந்த பிரச்சனைல நான் ஒண்ணுமே படிக்கல. இப்போ டெஸ்ட் என்னடா பண்றது.? மச்சான் எவனாவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்கடா. நீங்க நல்லா இருப்பீங்க” என்று இரு கை கூப்பி வேண்டினான்..

ஆதியோ அதிர்ந்து “என்னாது டெஸ்ட்டா? டேய் மச்சி நேத்து தாண்டா நான் காலேஜ்க்கு சேந்து, காலைல தாண்டா சிலபஸ்ஸயே பாத்தேன். இன்னைக்கு டெஸ்ட்டா? ஓ காட்.! என்னா டெஸ்ட்?” என்று சீரியஸ்ஸாக கேட்டான்.

கவிதா “ஆமா நீ ஏன் ஆனா ஊனா சீரியஸ் ஆகுற? அதுலாம் திவி இருக்காள்ள பாத்துக்கலாம்” என்று ஒரு ஆர்வத்தில் கூற அனைவரும் அவளை தீயாய் முறைத்தனர்.

அப்போது தான் தான் என்னக் கூறினோம் என்று உணர்ந்தவள் ‘ஈஈஈ ஈஈஈ’ என்று அசடு வழிய, அனைவரும் ஒன்றாய் அவளை பார்த்து துப்பினர்.  “அய்ய சீசீ! அரசியல்ல இதுலாம் சாதரணமப்பா” என்று கவுண்டமணி தொனியில் கூறி முகத்தை துடைத்துக் கொண்டாள்.

அப்போது சரியாக ரவீணா போன் அதிர அதைப் பார்த்தவள் அளவில்லா புன்னகையுடன் “ஏய், இங்க பாருங்க! திவி கால் பன்றா” என்றிட அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

கனகவள்ளி ரவீணாவிடமிருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட, திவிஎடுத்ததுமே”ஓய் ரவீ, டெஸ்ட் எழுதல, போன் அட்டெண்ட் பண்ணிட்ட.?” என்றிட,

ரவீ “எங்க திவி யாருமே படிக்கல. நீ நேத்து கண்டெண்ட் சொல்றன்னு கூட்டிட்டு வந்த அப்புறம் ஏது ஏதோ நடந்துச்சு” என்று விஷ்ணுவை பார்க்க, அவனோ திவி தன்னைப்பற்றி கேட்பாளா? என்று ஆர்வமாய் போனையே பார்த்து கொண்டு இருந்தான்.

ஆதிக்கோ அவளின் உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பதே மனதில் ஓட, ‘யாராவது அவளுக்கு உடம்பு எப்டி இருக்குன்னு கேளுங்கடா. கன்னம் வேற நேத்து வீங்கி இருந்துச்சு, யாருமே கவலை இல்லாம உங்க வேலையிலேயே குறியா இருக்கீங்க’ என்று மனதில் கருவிக்கொண்டு இருந்தான்.

அவனின் எதிர்பார்ப்பை சரி செய்யும் விதமாக சபரி “திவ்யா உடம்பு எப்டி இருக்கு? காய்ச்சல் பரவாயில்லையா?” என்று கேட்க, ஆதியோ அவனை ‘ஸ்ஸ்ப்ப்பா உனக்காவது தோணுச்சே, நன்றிடா தெய்வமே!’ என்ற ரீதியில் பார்த்தான்.

திவி “ஹான் இப்போ பரவாயில்ல.  அம்மா கஷாயம் வச்சு குடுத்தாங்க குடிச்சேன். அப்புறம் ஆவி புடிச்சேன். பெட்டர். விஷ்ணு எங்க.?” என்று ஆர்வமாய் கேட்டவள் ஆதியும் அங்குதான் இருப்பானோ என்று ஒரு வித எதிர்ப்பார்ப்போடு கேட்டாள்.

விஷ்ணு என்ற வார்த்தை விஷ்ணுவிற்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்க போனை வாங்கி, “சாரி திவி! நான் உன்னை எப்பவும் நம்புவேன் திவி. ஐ ஆம் சாரி திவி. உன்னை அடிச்சது எனக்கு ரொம்ப வலிக்குது. திவி இந்த அண்ணன மன்னிப்பியா?” என்று கண்ணில் நீர் மல்க கேட்டான். அவனின் செய்கையில் அனைவருமே அதிர்ந்து தான் போயினர்.

திவிக்கோ தன் கண்களிலும் நீர் கோர்க்க, “அண்ணா, அழாத! எனக்கு ஒன்னும் இல்ல, நீ பீல் பண்ணாத. நீ தான அடிச்ச. என்ன அடிக்க எல்லா ரைட்ஸும் உனக்கு இருக்கு. நீ அழக்கூடாது. என் மேல ப்ராமிஸ்” என்றிட,

அடுத்த நொடி “இல்ல திவி இல்ல, நான் அழல” என்றான்.

திவி சிரித்துக் கொண்டே “ம்ம்ம்… தட்ஸ் மை சகோ! ஆமா நான் இந்நேரம் ஆவி புடிச்சேன்னு சொன்னதுக்கு 2,3 கமெண்ட் வந்து இருக்கணுமே ஏன் யாரும் ஏதும் சொல்லல? நானும் என் அண்ணனும் ரொம்பவா பாசமலர் படம் ஓட்டுறோம்.?” என்றிட, அனைவரும் சகஜ நிலைக்கு வந்து “ஆமா, ஆமா! பாசமலர் 2,3ய பீட் பண்ணி போகுது” என்று ஒன்றாக கூற,

திவி “உங்களுக்குலாம் பொறாமை. என்று விட்டு டெஸ்ட் எழுதுங்க நான் இருக்கேன்” ” என்றாள்.

தரனேஷ் “தெய்வமே, என் வயித்துல பால வாத்த, சீக்கிரம் கிளம்பி வா!” என்றான்.

திவி “கிளம்பிலாம் வர முடியாது. பாவம் சார் அன்னைக்கு நடத்துனது யாருக்குமே புரியலன்னு எல்லாரும் சொன்னாங்க, சோ, ஒரு எஸ்ஸே காப்பி வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டுட்டேன். எல்லாரும் பார்த்தாவது எழுதுங்க. அண்ட் வாட்சப் க்ரூப்ல இல்லாதவங்க புளுடூத் மாட்டிக்கோங்க நான் டிக்டேட் பன்றேன்” என்றிட,

ஆதியோ மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான். பின்னே அவன் மட்டுமே அந்த க்ரூப்பில் இல்லை என்பது அவளும் அறிந்ததே. தெரிந்தேதான் அவ்வாறு கூறினாள்.

திவி  ரவீணாவிடம் “யார் யார் ரவீ வாட்சப் க்ரூப்ல இல்ல?” என்று ஒன்றும் அறியாதவள் போல் வினவ,

ரவீ “எனக்குத் தெரிஞ்சு ஆதி நியூ கமர் அவங்க மட்டும் தான் இல்ல” என்றிட,

திவி “ஓ ஓ ஓ.. ஓகே! ரவீ அவங்கள எனக்கு கால் பண்ண சொல்லு. நான் டிக்டேட் பன்றேன்”
 

ரவீ “ஆர் யூ ஷ்யர்? உடம்பு பரவாயில்லல திவி.? நீ ரெஸ்ட் எடு. அவங்கள நம்ம க்ரூப்ல ஆட் பண்ணிட்டு அகேயின் அந்த எஸ்ஸேவ சென்ட் பண்ணிடு. நீ எதுக்கு ஸ்டரைன் பண்ணிட்டு இருக்க.? நீ பர்ஸ்ட் ஹெல்த்த பாரு திவி” என்றாள். திவியும் சரி என்று கூறி விட்டாள்.

ஆதியோ ‘இவள என்ன செய்யலாம்?’ என்ற ரீதியில் முறைத்தான்.

ஆதி வந்த நாளிலிருந்தே திவியை பார்ப்பதும் அவள் பெயரைக் கேட்டால் ஏற்படும் ஒரு வித ஈர்ப்பையும் ரவீ கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

விஷ்ணு ஆதியின் எண்ணை திவிக்கு அனுப்பினான். அதன் பிறகு செவ்வனே தன் வேலைகளை அனைவரும் செய்தனர். (அதாங்க பாத்து எழுதுறது)

திவிக்குத் தன்னை பின்தொடர்ந்தவன் யாரென்று அறிந்தும் அதனை வெளியில் சொன்னால் பெரிய விபரீதம் ஆகிவிடும், முக்கியமாக நண்பர்கள் பட்டாளத்திற்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று தன் மனதிலேயே வைத்துக் கொண்டாள்.

திவ்யாவிற்கு காய்ச்சல் சரியாக மூன்று நாட்கள் ஆன வேளையில் அனைவரும் அவளைக் காணாமல் துடித்து தான் போயினர், முக்கியமாக ஆதி.

ஆதி கல்லூரியில் சேர்ந்து நான்கு நாட்கள் ஆகி விட அனைவரிடமும் நெருங்கி விட்டான், நான்கு நாட்கள் திவியை காணாது ஏமாற்றத்துடனே தன் மாளிகைக்கு திரும்பினான்.

அன்று விஷ்ணு கூறியதில் இருந்து ஏதோ ஒன்று உறுத்தல் இன்னும் அவன் மனதில் இருந்துக் கொண்டு தான் இருந்தது. ஒரு வித வலியில் தன் படுக்கையில் சாய்ந்தவன் அப்படியே உறங்கி போனான்.. திடீரென்று யது யது என்ன விட்டு போகாத யது..”  என்று கத்திகொண்டே எழுந்தான். அவனின் கண் முன்னே ஆறு வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் நிழலாடியது..

கனவு தொடரும்…🌺🌺

 
கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க… உங்க கமெண்ட்ஸ்  குடுத்துட்டு போங்க..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment