Loading

ஆட்சியர் கனவு 35💕

அலுவலகத்தில் இருந்த திவிக்கு மீனாவிடம் இருந்து அழைப்பு வந்திட, தன் எண்ணக் கலவையில் இருந்து சற்று மீண்டு அழைப்பை ஏற்று வீட்டிற்கு விரைந்தாள் காரிகை.

உள்ளே நுழைந்தவுடன் எழில் அவளின் காலை கட்டிக்கொண்டு “மா நான் ரெடி.. போலாமா..?” என்று வினவ,

திவி “அம்மா பிரஷ் அப் ஆகிட்டு வரேன் டா செல்லம்” என்றாள்.

எழில் சரி என்று தொலைக்காட்சியை இயக்க, மீனாவிடம் திவி “எந்த ஸ்கூல்ல அப்ளிகேஷன் வாங்குன மீனா.?” என்று கேட்டாள், முகத்தை துடைத்து கொண்டே,

மீனா அத்தனியார் பள்ளியின் பெயரை சொன்னவுடன் திவியின் முகம் இறுகியது. “ஏன் அந்த ஸ்கூல்.? நான் உன்னை கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான அப்ளிகேஷன் வாங்க சொன்னேன்.?” என்று பொறிந்தாள்.

மீனா “இல்ல திவி நம்ம காம்பௌண்ட்ல எல்லா குழந்தைகளும் அங்க தான் படிக்கிறாங்க.. நம்ம எழிலும் அங்க படிச்சா நல்லா இருக்கும்ல அதான்” என்று கூற,

திவி “எல்லாரும் அங்க இருக்காங்கன்னு சேத்த சொல்றியா இல்ல.. உன் பேர்ல இருந்த ஸ்கூல்னு சேத்த சொல்றியா மீனா” என்றால் முகத்தில் கடுமையை கூட்டி.

மீனா “ஏய் அப்டிலாம் இல்ல திவ்யா… எழில் கூட கேட்டா”

திவி “என் புள்ள கேட்டாளா.? என்று எழிலை அழைத்தாள். எழில்.. ஆரா…” என்று கத்த,

அன்னையின் குரலில் வேகமாக வந்தால் பிஞ்சு.. எழில் “யது மா..” என்று கூற,

தன் மகள் அளவிற்கு அவள் முன் மண்டியிட்டு “எழில் உனக்கு அந்த ஸ்கூல் தான் வேணுமா.?” என்று கேட்க,

எழில் “ம்ம்.. ஆமா மா.. அங்க தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் பதிக்குறாங்க.. ப்ளீஸ் யது மா ” என்று இறைஞ்ச..

திவி “வேணாம் டா பாப்பா, அந்த ஸ்கூல். நாம கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கலாம் டா”

எழில் “ஆனா அங்க எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் யாரும் இல்லையே மா” என்றால் உதட்டை பிதுக்கியபடி,

மழலையவள் மொழிதனில் தன் கோபத்தை கைவிட்ட தாயவள் “எழில், அம்மா சொன்னா கேட்பில டா..? எதுக்கும் அழ கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கேன்ல கண்ணை தொட!” என்றிட,

மொட்டு கண்ணை துடைத்து நின்றது. திவி “இப்போ அம்மாக்கு சரியான சம்பளம் இல்ல டா… அண்ட் அம்மாக்கு நிறைய கடமை இருக்குன்னு சொல்லி இருக்கேன்ல.. அண்ட் நாம இன்னும் நல்ல நிலைமைக்கு வந்த உடனே நாம பிரைவேட் ஸ்கூல்ல படிக்கலாம் ஆரா” என்று எடுத்து உரைக்க,

மழைலைக்கு என்ன புரிந்ததோ தன் தாயவள் கஷ்டத்தில் இருப்பது புரிய, “மா.. அப்பா வந்தா நாம கஷ்டப்பட மாட்டோம்ல மா. நான்… நான் நீ சொல்ற ஸ்கூல்லயே படிக்குறேன் மா” என்றால் தன் தாயை கட்டிக்கொண்டு.

அவள் கூறிய வார்த்தை பெண்ணவள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்த, தன் மகளுக்கு போலி நம்பிக்கையை உருவாக்கியதை எண்ணி தன்னையே வெகுவாய் நொந்து கொண்டாள் திவி.

திவி ‘சாரி டா, நீ தினமும் அப்பா அப்பான்னு கேட்குறதுனால அப்பா வருவாருன்னு சொல்லி உன்னை நம்ப வச்சிட்டு இருக்கேன்.. சாரி எழில் மா.. அம்மாவ மன்னிச்சிடு டா’ என்று மனத்திற்குளேயே தான் பெறாத மகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தாள்.

எழில் திவியை விட்டு விலகி “நான் டி.வி பாக்குறேன். நீ சீக்கிரம் வா யது மா” என்று கூற,

திவி அவளின் நெற்றியில் முத்தமிட்டு “சரி டா மா” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

மீனா “இப்போ அப்டி என்ன உனக்கு சம்பளம் இல்ல… ஏன் அவளை அங்க சேர்க்கல.?” என்று கத்த,

திவி “இப்போ அதுல உனக்கு என்ன பிரச்சனை.?” என்று கேட்டாள் காரமாக.

மீனா “இதுவே நீ பெத்த பொண்ணா இருந்தா இப்டி அவ ஆசைக்கு தடையா இருந்து இருப்பியா.?”

திவி இந்த கேள்வியில் கொதித்தெழுந்தவள், “எழில் எப்போவும் என் பொண்ணு தான். இன்னொரு தடவை நீ இப்டி பேசுனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று எப்போதும் என்ற சொல்லிற்கு அழுத்தம் கொடுத்து கூறி விட்டு சென்றாள்.

இந்த சொல் மீனாவிற்கு தன்னிடம் இருந்து தன் உயிரை யாரோ பிரிப்பது போல் ஒரு வலி தோன்ற, அதை புறம் தள்ளிவைத்து விட்டு, “திவ்யா, ஒரு தடவை போய் பாரு… அங்க ஏதாவது உனக்கு சரி இல்லன்னு பட்டா நீ எழில்ல அங்க சேர்க்க வேண்டாம்.” என்றாள் பாவமாக,

திவி பெருமூச்சை ஒன்று விட்டவள் “என் புள்ளைய கூட சமாளிச்சிட்டேன். உன்னை சமாளிக்க முடியல மீனா. உன் ஆளு எப்டி தான் உன்னை சமாளிச்சானோ.?” என்று நொந்து கொள்ள,

மீனா “அவன பத்தி பேசாத. நான் சொன்னதை முயற்சி பண்ணி பாரு”

திவி “நான் ஒன்னு சொல்லவா மீனா.?”

மீனா தலையாட்ட, திவி “சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கு நாம படுற பட்ட கஷ்டங்கள்ல மறைமுகமாகவோ இல்ல நேரடியாகவோ சொல்லணும் மீனா. அது அவங்களுக்கு அனுபவம், அவசியம் கூட.. குழந்தைங்க கேட்குறது எல்லாம் கிடைக்கணும் தான், ஆனா அதுல அவங்க முயற்சிகூட இருக்கணும். வீட்ல நம்ம கூட இருக்காங்க. வெளில அவங்க சந்திக்க வேண்டியது ரொம்ப அதிகம். இப்போ இருந்தே கஷ்டம் நஷ்டம் இன்பம் துன்பம் எல்லாம் கடந்து வர அவங்க பழகனும். இல்லன்னா அனுசரணைன்னு ஒன்னு அவங்க கிட்ட வராது.

கேட்குறது எல்லாம் கிடைக்காது மீனா. கிடைச்சத ஏத்துக்கறதும் கிடைக்காதத நினச்சு பீல் பண்ணாம அதை கடந்து வரதும்தான் வாழ்க்கை. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்குறேன்” என்று அவளிடம் உரைத்துவிட்டு தன் மகள் விருப்பப்பட்ட பள்ளியிலேயே சேர்க்க ஒரு முடிவை எடுத்து விரைந்தாள், இவளின் சொல்லில் மீனா தான் உறைந்து நின்றாள் தான் செய்த தவறை எண்ணி.

இப்போது கூறிய இச்சொற்கள் அவளுக்கே திரும்பும் என்பதை அறியாத பாவை மகளை அழைத்தாள்.

திவி “எழில்… போலாம் வா.”

எழில் “அம்மா ஒரு தடவ கவின் படிக்குற ஸ்கூலுக்கு போய் பாக்கலாமா.?”என்றால் ஏக்கமாக.

திவி “அங்க தான் எழில் போறோம்.. ஓகே வா… எங்க என் எழில் செல்லம் சிரிங்க” என்று சொன்ன மறுநொடி,

எழில் குதித்து தன் அன்னையை கட்டிக்கொண்டாள் “யது மா… நிஜமாவா.?” என்று கண்கள் மின்ன கேட்ட தன் பெண்ணை பார்த்து என்ன நடந்தாலும் அவளை அங்கேயே சேர்க்க வேண்டும் என்ற முடிவுடன் தலையை ஆட்டினாள் திவி.

மழலை மொழி தான் எவ்வளவு அழகு. அவர்கள் கேட்டதை சாதித்துக்கொள்ளும் ரகசியம் என்னவோ அவர்கள் மட்டுமே அறிந்த மந்திரமாய் இருக்கிறது.

குழந்தைகள் கேட்பதை வாங்கி தரலாம்.. ஆனால் கேட்பதை எல்லாம் வாங்கி தர கூடாது. எல்லாம் கேட்டமாத்திரத்தில் பெற்றுவிட்டால் முயற்சி என்பது அறியாமல் போய் விடுவார்கள் குழந்தைகள். வெற்றி தோல்வி இரண்டும் அவர்கள் அறிய வேண்டும்.

திவியும் எழிலும் பள்ளியை அடைந்தனர். ஏற்கனவே அங்கு வரிசை நிறைந்து இருக்க, இவர்களின் எண் வரும்வரை காத்திருக்கும் படி கூறினர் அங்கு பணிபுரியும் ஒருவர்.

காத்திருந்த நேரம் முழுவதும் எழில் பேசிக்கொண்டே இருக்க தாயவள் அதை ரசித்து கொண்டு இருந்தாள். திவிக்கு அலுவலக அழைப்பு வர, “எழில்மா, அம்மாக்கு கால் வருது. நான் பேசிட்டு வரேன். நீ இங்கேயே இரு.” என்று சற்று தள்ளி பேசிவிட்டு வந்தாள்.

அவ்வளவு நேரம் மகிழ்ச்சியின் மறுஉருவமாய் இருந்த தன் மகள் இப்போது சோக வதனத்தை தாங்கியபடி இருக்க அன்னையவள் பதறி “எழில் மா என்ன ஆச்சு..? இவ்ளோ நேரம் நல்லா தான இருந்தீங்க..? யார் என்ன சொன்னா?” என்று கேட்க,

எழில் “யது மா, எல்லாரும் அப்பா அம்மா கூட வந்து இருக்காங்க.? ஆதி அப்பா வருவாரா மா.?” என்று குழந்தை ஏக்கமாக கேட்க,

அவள் கேட்ட கேள்வியில் திவி உறைந்தேவிட்டாள். என்ன பதில் கூறுவாள்.? இனி அவன் தன் வாழ்க்கையில் வேண்டாம் என்றே இவ்வளவு தூரம் பிரிந்து வந்து இருக்கிறாள். மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்று கொள்ளும் மனநிலையில் பெண்ணவள் இல்லையே.!

பிரிவு உடலுக்கு தானே மனதிற்கு இல்லையே என்பதை நித்தமும் அவன் எண்ணக்கலவையில் தவிக்கும் நொடிதனில் அறிவாள் ஆனால் குரங்கு மனது ஏற்றுக்கொள்ளத்தான் மறுக்கிறது.

எழில் கேட்ட கேள்வியில் அமைதியாக இருக்க, அவர்களின் எண் வந்ததை உறுதிபடுத்திக்கொண்டு பள்ளி நிர்வாகியை காண சென்றனர் இருவரும்..

அங்கு திமிராக அமர்ந்து இருந்தான் அன்வர். “யெஸ் மிஸ் சாரி மிஸஸ் திவ்யதர்ஷினி ஆதித்யா. ப்ளீஸ் டேக் யுவர் சீட்..” என்று கூற,

பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்தாள் திவி. அன்வர் “அப்ரோம் என்ன விஷயம்.? கலெக்டர் காத்து அடிக்கடி என் ஸ்கூல் பக்கமே வீசுது..?” என்று தெனாவெட்டாய் அவன் கேட்க,

திவியும் முகத்தில் நக்கலை ஏற்றி “என்ன மிஸ்டர் பண்றது. என் கண்ணுக்கு இது மட்டும் தானே உறுத்திட்டு இருக்கு. கண்ணுல தூசி விழுந்தா உடனே எடுத்தடனும் இல்லையா. அதான் காத்து அடிச்சாவது தூசு போகுதான்னு பாக்குறேன்” என்றாள்.

அவளின் நக்கலில் ஏகத்துக்கும் கடுப்பானவன் தன் நிலையை முகத்தில் காட்டாது “மிஸஸ் ஆதித்யா.! காத்து அதிகமா வீசுனா தூசு அதிகம் தான் ஆகுமே தவிர குறையாது.. உங்க ஹஸ்பண்ட் இதுலாம் உங்களுக்கு சொல்லி தரலாயா.?” என்றான் கேலியாக..

அவனின் ஒவ்வொரு சொல்லும் திவிக்கு அடக்க முடியாத கோவத்தை ஏற்படுத்த, அருகே எழில் இருந்த ஒரே காரணத்தினால் அமைதி காத்தாள்.

மீண்டும் அவனே அப்ளிகேஷனை பார்த்து விட்டு “ஓ.. இதுக்கு தான் வந்து இருக்கீங்களா.? சாரி மிஸஸ் ஆதித்யா.. ஸ்டுடன்டோட பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் வந்தா தான் அட்மிஷன் தருவோம்”என்று கூற,

திவி ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள், பின் தன் நிலையை அவனிடம் காட்டாது இறுகிய முகத்துடன் அமர்ந்து இருக்க, எழில் “அம்மா அப்பாவ வர சொல்லுமா. ப்ளீஸ் மா”என்று கண் கலங்க,

அன்வர் “ஹான் வர சொல்லுங்க.. உங்க ஹஸ்பண்ட் உங்க கூட தான இருக்காரு. இல்ல, நீங்க அவரை விட்டு தனியா… ” என்று அவளை முழுதாக ஆராய்ந்து ஏற இறங்க பார்க்க, அவனின் சொல்லிலும் பார்வையிலும் பெண்ணவள் கூசிப்போனாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்த திவி “அச்சோ எழில் பேபி. சாரி டா பிளைட் லேட். தோ அப்பா வந்துட்டேன்” என்ற குரலில் அதிர்ச்சியானாள். அதிர்ந்தது அவள் மட்டும் அல்ல, அங்கு இருந்த அன்வரும் தான்.

எழிலுக்கு தான் ஏகபோக சந்தோசம். அவள் ஆதியின் காலை கட்டிக்கொண்டு “அப்பா, ஐய் அப்பா வந்துட்டாரு” என்று மகிழ்ச்சியில் இருக்க, திவி அவன் முகத்தை கூட காணவில்லை..

ஆதி “என்ன பாக்குறீங்க..? டைம் ஆச்சு எங்க சைன் பண்ணனும்.?” என்று அதிரடியாக கேட்க, அன்வர் எதுவும் பேசாது, அப்ளிகேஷன் மற்றும் அட்மிஷன் பேப்பர்களை அவனிடம் நீட்டினான்.

ஆதி கையெழுத்து இட்டுக்கொண்டே “மிஸ்டர் அன்வர், காத்து வீசுனா தூசு அதிகம் ஆகும் தான். ஆனா புயல் காத்து வீசுனா எதுவுமே கண்ணுக்கு தெரியாது. சும்மா சுழட்டிக்கிட்டு கொண்டு போயிடும். அண்ட் என் பொண்டாட்டிக்கு என்ன என்ன சொல்லி தரணும்னு எனக்கு தெரியும். இனிமே நான் அவ கூட தான் இருக்க போறேன்.. சோ மீட் யூ சூன்” என்று கூறிவிட்டு என் பொண்டாட்டி என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொண்டு பேச,  திவிக்கோ உள்ளுக்குள்ளே சொல்ல முடியாத உணர்வுகள்.

மூவரும் மகிழுந்தில் அமர, இதுவரை அமைதியாக இருந்த எழில் தன் தந்தை வந்தவுடன் தன் ஏக்கத்தை வார்த்தைகளால் தீர்த்து கொண்டு இருந்தாள்.

எழில் “அப்பா இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பி. நான் உங்களை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா பா” என்று கூற,

ஆதி “ஏன் பேபி… நீ மட்டும் தான் மிஸ் பண்ணியா” என்று ஓரக்கண்ணால் திவியை பார்த்து க்கொண்டு கேட்க,

அதில் அவனை பார்வையால் எரித்த திவி எதுவும் பேசாமல் சாலையில் தன் கவனத்தை பதித்தாள்.

எழில் “அப்பா.. எல்லாருமே மிஸ் பண்ணோம் பா… நான் யது மா.. பிஸ் கூட” என்று அவள் கூற,

ஆதி அவளின் அழைப்பில் பூரித்து போனான்.. திவி அதிர்ந்து, ‘கொஞ்சம் விட்டா இவளே போட்டு குடுத்துடுவா’ “எழில்.. அம்மா கிட்ட வா “என்று அவளை அழைக்க,

எழில் “மா.. நோ…எப்போவும் நான் உன்கூட தான இருக்கேன்… இனிமே நான் ஆதி பேபி கூட தான் இருப்பேன்.. ஆமா தான பேபி..” என்று கேட்க,

ஆதி “அப்டி சொல்லு பேபி… அம்மா இருக்காங்க.. இனிமே நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பேபி” என்று தன்னவளுக்கும் சேர்த்தே கூறினான்.

அவனின் பதிலில் மனது தாறுமாறாக துடிக்க, “ஸ்டாப் த கார்..” என்று கத்தினாள்.

எழில்”ஏன் மா..”

ஆதி “இப்போ என்ன.. எதுக்கு வண்டிய நிறுத்தனும்.. அண்ணா நீங்க வண்டிய எடுங்க”

திவி “நான்.. நான்..  கொஞ்சம் தின்க்ஸ் வாங்கனும்..” என்றிட

ஆதி “ஓகே.. பேபி, உனக்கு என்ன வேணும் வா ” என்று எழிலையும் அழைத்தான்.

எழில் திவியை பார்க்க, ஆதி “பேபி… இனிமே உனக்கு என்ன வேணாலும் என்கிட்ட தான் கேட்கணும்.. அம்மா கிட்ட கேட்காத பேபி” என்று கூற,

எழில் வேகமாய் தலையசைத்து “ஓகே பா.” என்று சொல்ல,

ஆதி “இனிமே நீ என்ன பேபின்னு தான் கூப்டனும் ஓகேவா பேபி”என்று கையில் நீட்ட,

அதில் ஹை பை அடித்து கொண்டு “ஓகே பேபி” என்றாள் அந்த சிறு வாண்டு.

திவிக்கோ உள்ளுக்குள் புகைச்சல் ‘பாத்து ஒரு நாள் கூட ஆகலை பேபியாம் பேபி.. அவன் வந்த உடனே என்ன மறந்துட்டா… இவன் ஒரு வார்த்தை பேசுறானா.. எருமை.. எருமை’ என்று நினைத்தாலும் மறுபுறமோ “அவன் இனி தேவையில்லை”  என்ற நிலையிலேயே நின்றது.

திவி ஒருபுறம் செல்ல, ஆதியோ எழிலுக்கு தேவையானதை வாங்க அழைத்து சென்றான். “பேபி உனக்கு என்ன வேணுமோ வங்கிக்கோ” என்று கூற,

வெகு நேரம் துழாவி இரண்டு பொம்மைகளை எடுத்தாள். “பேபி.. இது ரெண்டும் போதும்” என்று கூறினாள்.

ஆதி “ஏன் பேபி.. ரெண்டு போதுமா.?”

எழில் “போதும் பேபி.. எனக்கு ஒன்னு கவினுக்கு ஒன்னு” என்று கூறினாள் மழலை மொழிதனில்.

ஆதி “பேபி.. யாரு கவின் அண்ட் யாரு பேபி அந்த பிஸ்.?” என்று கேட்க,

எழில் சிரித்துவிட்டு “கவின் என் பிரண்ட் பேபி.. அப்ரோம் பேபி.. அவங்கள நான் தான் பிஸ் சொல்லுவேன்.. அவங்க அம்மாவோட பிரண்ட் மீனா பேபி.. அவங்க தான் எப்போவும் நீயும் அம்மாவும் ஒண்ணா இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.. பேபி.. உன் போட்டோ கூட அவங்க தான் காட்டுவாங்க” என்றாள்.

ஆதியோ ஏக்கமாக “யது என்ன பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டாளா பேபி”என்று கேட்க,

எழில் “பேபி அம்மா கிட்ட கேட்பேன். அம்மா அப்பா வெளியூர்ல இருக்காரு.. வருவாருன்னு சொல்லுவாங்க.. அப்ரோம் ஒரு நாள் அம்மா ரொம்ப அழுதாங்க பேபி.. நான் தூங்கிட்டேன்.. அம்மா பிஸ் கிட்ட சொன்னாங்க.. ஆதியை விட்டு பிரிஞ்சாலும் அவன மறக்க முடியாது மீனா.. அப்ரோம்.. அந்த வார்த்தைகள் எல்லாம் என்ன உயிரோட கொல்லுது மீனான்னு சொன்னாங்க பேபி.. நான் வந்ததும் தலைவலிக்குதுன்னு அம்மா தூங்கிட்டாங்க பேபி.. எனக்கு ஒண்ணுமே புரியல பேபி.. அம்மாக்கு என்ன ஆச்சு.?” என்று கேட்க,

தன்னவளை எண்ணி வருந்தியவன் தன் மகள் கேட்ட கேள்வியில் என்ன பதில் கூறுவது என்று அறியாமல் திணற, திவி “எழில் மா.. இந்தா நீ கேட்ட பொம்மை ” என்று அவளை தேடி வந்தாள்.

அவள் கையில் ஏற்கனவே இரண்டு பொம்மை இருக்க, “எழில் இவ்ளோ பொம்மை வேண்டாம் டா வா” என்று அவளை அழைத்தாள்.

எழில் ஆதியை பார்க்க, ஆதி “நீ வாங்கிக்கோ பேபி..” என்றான்.

அதில் திவி எழிலை முறைக்க “யாரும் இங்க என் புள்ளைய முறைக்க வேண்டாம்,  எல்லாத்துக்கும் நானே பில் பே பண்ணிட்டேன்” என்றான் சிலுப்பிக்கொண்டு.

திவி எதுவும் பேசாமல் இருக்க, எழில் “யது மா.. இனிமே நமக்கு கஷ்டமே இல்ல.. அதான் அப்பா வந்துட்டாரு ல” என்று கிளம்பும் முன் தன் அன்னையவள் கூறியதற்கு பதில் கூற, ஆதி தான் பிள்ளையின் சொற்களில் முகம் முழுதும் பூரிப்புடன் பார்த்தான்.

ஆனால் திவியோ இறுகிய முகத்துடன் “டைம் ஆச்சு எழில் போலாம்” என்று அவளை அழைக்க,

எழில் “ஹான் போலாம் மா.. வா பேபி போலாம்” என்று ஆதியையும் அழைத்தாள்.

திவி “அப்போ என் கூட நீ வரமாட்டியா எழில்.?” என்று கேட்க,

எழில் “நீ தான மா சொல்லி இருக்க.. அப்பாவும் நீயும் வேற வேற இல்ல.. ரெண்டு பேரும் ஒன்னு தான்னு.. சோ நான் அப்பா கூட வரேன்.. நீ முன்னாடி போ மா” என்றிட,

என்றோ கூறிய வார்த்தை இன்று தனக்கே எதிராய் அமைவது ஏனோ பெண் மனது ஏற்று கொள்ளவே இல்லை.. திவி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மகிழுந்தில் ஏறினாள்.

ஆனால் ஆதியோ எழிலின் பதிலில் பூரித்து தான் போனான். “பேபி.. இனிமே நான் எப்போவும் உங்களை விட்டு போக மாட்டேன் பேபி..” என்று எழிலை அணைத்துகொண்டான்.

எழிலும் ஆனந்த பெருக்குடன் அவனை அணைத்துகொள்ள, மூவரும் மகிழுந்தில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.

அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தவுடன் எழில் பார்க்கும் அனைவரிடமும் “என் அப்பா, மை டேடி” என்று சொல்லிக்கொண்டே வந்தாள். திவிக்கோ என்றும் இம்மகிழ்ச்சி அவள் வாழ்க்கையில் நீடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, மற்றொரு மனமோ அவளை கண்டு ஏளனமாக சிரித்தது. ‘நீ மறுபடியும் பழைய மாதிரி ஆகாத.. அவன் உன் ஆதி. ஒரு சான்ஸ் கொடுத்து பாரேன்’ என்றிட,

திவி “அவனே வந்து பேசட்டும்” என்று இவள் அமைதி காக்க, ஆதி “திவியே வந்து பேசட்டும்” என்றும் இவனும் ஒன்றாக உள்ளே நுழைய, மீனாவோ அதிர்ச்சியின் உச்சியில் இருந்தாள்.

மீனா “நில்லுங்க.. நான் ஆரத்தி எடுக்குறேன்” என்று வேகமாக அடுக்களைக்குள் செல்ல, திவியின் “வேண்டாம் மீனா..” என்ற குரல் காற்றில் தான் கரைந்தது.

ஆதி தன்னவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவனின் பார்வை ஏனோ பெண்ணவளுக்கு ஒரு வித படபடப்பை ஏற்படுத்த உள்ளே நுழைந்து அறைக்குள் அடைந்து விட்டாள்.

இங்கு மீனா வந்து பார்க்கையில் திவி இல்லாது போக, மீனா ஆதியை பாவமாக பார்த்தாள். ஆதி “விடுங்க மீனா.. பாத்துக்கலாம்” என்று ஆதி புன்னகை மாறாமல் எழிலை அழைத்து கொண்டு சென்றான்.

அப்போது கவின் உள்ளே வர, மீனா “ஏய்.. கவின் வா வா.. எழிலு கவின் வந்து இருக்கான் பாரு” என்று தான் தாமதம்.

எழில் ஆதியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் “கவின், அப்பா கவின்.. வந்துட்டாரு.. நீ சொன்னல. நீ சொன்ன மாதிரியே அப்பா வந்துட்டாரு கவின்” என்று அவள் குதுகளிக்க,

மகளவளின் ஆனந்தம் கவினையும் தொற்றி கொள்ள, கவின் “ஹான் அம்மா சொன்னாங்க ஆரா.. அதான் பாக்க வந்தேன்.. நான் தான் சொன்னேன்ல.. ”  என்று கூறினான்,

ஆதி “அப்டி என்ன செல்லம் சொன்னிங்க.?” என்று கேட்டான் கவினிடம்.

கவின் “அங்கிள் நாங்க பார்க்ல விளையாடுறப்போ மத்தவங்க உன் அப்பா உன்கூட இல்ல.. நீ எப்டி பிறந்தன்னு கேட்டாங்க.. அதுல இருந்து தினமும் ஆரா அழுவா.. அது என்னமோ தப்புன்னு தோணுச்சு அங்கிள். அதான் நான் ஆரா கிட்ட சொல்லுவேன் கண்டிப்பா ஆதி அப்பா வருவாருன்னு” என்று மழலை மொழியில் சொல்ல,

ஆதிக்கு தான் வார்த்தையே வரவில்லை. சில நேரங்களில் பெரியவர்கள் நாம் அனைத்தும் அறிந்தும் சிறுப்பிள்ளைத்தனமாக சண்டையிட்டு கொள்கிறோம்.. ஆனால் சிறுபிள்ளை இவர்கள் அனைவருக்கும் மருந்தாக மாறுகின்றனர் அல்லவா..

ஆதி குழந்தைகளோடு குழந்தையாக மாறி இருவரிடமும் விளையாடி கொண்டு இருக்க, சத்தம் கேட்டு வெளியில் வந்தாள் திவி.

அவள் வதனமே எடுத்து கூறியது அவள் அறைக்குள் முடங்கி அழுது இருக்கிறாள் என்று. ஆனால் ஆதி எதுவும் கேட்கவில்லை.. மீனா “என்ன ஆச்சு திவி.. ஒரு மாதிரி இருக்க?”

திவி “தலைவலி..” என்ற ஒற்றை சொல்லில் நிறுத்தி கொண்டாள்.

எழில் “பேபி.. அம்மா டென்ஷன் ல இருக்காங்க.. நீ போய் சமாதானம் பன்னு.. அம்மாக்கு உன் மேல தான் கோபம்” என்று கூற,

ஆதி “உனக்கு எப்டி பேபி தெரியும்.? “

எழில் “நான் யது மா பொண்ணு பேபி” என்றாள் கைத்தட்டி சிரித்து கொண்டே..

இந்த வார்த்தை அவனிற்கு “நான் ஆதி பொண்டாட்டி டா” என்ற தன்னவளின் வார்த்தை நினைவு வர, அனிச்சையாக அவன் முகம் புன்னகையை தழுவியது.

ஆதி “ஓகே பேபி.. நான் பாத்துக்குறேன்..” என்று சொல்லிவிட்டு மீனாவுடன் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டான்.

திவி டைனிங் டேபிளில் தலை சாய்த்து படுத்து இருக்க, சமையல் அறைக்கு சென்றவன் சூடாக இரண்டு குழம்பியை கலக்கி கொண்டு வந்தான். அவள் அருகில் வைத்தவன் “நம்ம பொண்ணு நல்லா பேசுரால” என்று கேட்க,

உடனே எழுந்தவள் “அவ என் பொண்ணு.. நம்ம பொண்ணு இல்ல ” என்றாள் அடக்கிய கோபத்துடன்.

ஆதி “உன் பொண்ணு தான் நான் வராத வரை.. இப்போ அவ நம்ம பொண்ணு.. காட் இட்” என்று சொன்னான்.

திவி “நமக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு மிஸ்டர் ஆதித்யா” என்று இவளும் அதே தொனியில் சொல்ல,

ஆதி “எப்டி டி நான் சைன் பண்ணாம உனக்கு என்கிட்ட இருந்து டிவோர்ஸ் கிடைக்கும்” என்றான் மிரட்டலாக.

அவனின் பதிலில் திவிதான் ஆடிபோனாள்.

கனவு தொடரும்🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்