139 views

ஆட்சியர் கனவு 34 💞

ஆதியின் கம்பெனியை இப்போது பாரதி தான் நிர்வகித்து வருகிறாள் ரவீணா, சக்தி உதவியுடன்…

சக்தி “எப்டி மா, அந்த பிராஜக்ட்ட நீ டேக்கோவேர் பண்ண.?”

பாரதி “எல்லாம் ஆதி மாமா கொடுத்த ட்ரைனிங் தான் மாமா. ரவீணா அக்கா எங்க.?” என்று கேட்டிட,

சக்தி “அவ மொழியன கூட்டிட்டு வர போய் இருக்கா மா” என்றான்.

அப்போது சரியாக உள்ளே நுழைந்தனர் தேவ்வும் ஹரியும்.

தேவ் “ஹாய் அண்ணா… எப்டி இருக்கீங்க.?” என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

ஹரியோ தன் கண்களால் பவியை தேடி கொண்டே உள்ளே வர, சக்தி “வா டா நல்லவனே. வா ஹரி” என்று சக்தியின் அழைப்பு காற்றில் தான் கேட்டது போல.

தேவ் ஹரியை இடித்து நிகழ்வுக்கு கொண்டு வர, அவனோ பவியைத் தேடித்தான் தன் விழிகளை சுழற்றி கொண்டு இருந்தான்.

சக்தி “டேய் ஹரி… என்ன டா.. யாரை தேடுற.?” என்று கேட்டிட,

ஹரி “ஹான். அது.. அது.. ஒன்னும் இல்ல… ஆபிஸ்ல நிறைய சேஞ்சஸ் இருக்கு.. அத.. அத தான் பாத்துட்டு இருந்தேன்” என்று சமாளித்தான்.

சக்தி “அதுவா… எல்லாம் பவியும் பாரதியும் தான் எல்லாம் பண்ணாங்க” என்றான் சலித்து கொண்டே…

தேவ் உள்ளே வந்ததும் பாரதி தன் அலுவலக அறைக்கு சென்று விட்டாள். இதை அனைவரும் கவனித்தாலும், தேவ் தான் அந்த அறையை வலியோடு பார்த்து கொண்டு இருந்தான்.

தேவ் “இன்னும் அவளுக்கு கோவம் போகலையா அண்ணா..?” என்று தன்னவளை எண்ணி கேட்டிட,

சக்தி “அவ நிறைய இழந்து இருக்கா டா… உனக்கும் தெரியும்.. நீ பண்ண வேலை அப்டி. அப்போ எப்டி அவளோட கோவம் குறையும்.? ஒன்னு திவி வரணும்.. இல்ல ஆதி வரணும். ரெண்டு பேர் வந்தாதான் இருக்கிற எல்லா பிரச்சனையும் தீரும்.”

தேவ் “கண்டிப்பா அண்ணி இருக்குற இடத்துல தான் அண்ணாவும் இருக்கணும். பாரதிக்கு தெரியும்லண்ணா, ஆதி அண்ணா எங்க இருக்காங்கன்னு. ஏன் இவ சொல்ல மாட்டிங்குறா.?” என்று ஆதங்கத்துடன் வினவ,

சக்தியும் அதை ஆமோதித்து “நூறு தடவைக்கு மேல கேட்டு பாத்துட்டேன். சொல்ல மாட்டிங்குறா டா” என்றான் இயலாமையுடன்.

அப்போது தன் நான்கு வயது மகன் இன்மொழியனை அழைத்துக் கொண்டு வந்தாள் ரவீணா.

தேவ் “வாங்க அண்ணி. எப்டி இருக்கீங்க.?” என்று வினவ,

அவனுக்கு பதில் ஏதும் கூறாமல் “சக்தி.. பாரதி எங்க?” என்று கேட்டுக்கொண்டே அவளின் அலுவலக அறைக்கு சென்றாள்.

இந்த இடைவெளியில் பவியைத் தேடி சுற்றிக்கொண்டு இருந்தான் ஹரி. இறுதியில் அவள் கண்களில் பட, அவளை ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்தான் ஆணவன்.

நாசிக்…

தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கடந்த காலத்தில் தன் நிலையையும் தற்போது தான் இருக்கும் நிலையையும் எண்ணிக்கொண்டு இருந்தாள் திவி.

திருமணத்திற்கு மறுநாள் பொழுது இனிமையாக புலர, தன்னவனை ரசித்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தாள் திவி. குளித்து விட்டு வந்தவள் இன்னும் ஆதி எழாமல் இருப்பதை பார்த்து தனக்குள்ளே சிரித்து கொண்டு வெளியில் சென்றாள். இவள் மலர்ந்த முகத்துடன் வருவதை பார்த்து பெற்றவர்கள் பல கனவு கோட்டைகளை கட்ட, அவர்களின் எண்ணங்களை கலைக்க விரும்பாது திவியும் அமைதி காத்தாள்.

தெய்வானை  “ஆதி எந்திரிச்சிட்டான திவி.?”

திவி “இல்ல அத்தை. அவன் இன்னும் எந்திரிக்கல.” என்று எப்போதும் போல் பேச, தெய்வானை சிரித்து கொண்டு, “சரி மா, இந்தா காஃபி. ரெண்டு பேருக்கும்.” என்று அவளிடம் கொடுத்தார்.

உள்ளே செல்ல போனவளை அவளின் தாயின் குரல் நிறுத்தியது.

ரோஜா “திவ்யா…? என்ன இது மாப்பிள்ளையை அவன் இவன்னு பேசுற..? அண்ணி என்ன நினைப்பாங்க.. மரியாதையா பேசு. அவர் உனக்கு மாமா தான. மாமான்னு கூப்டு திவ்யா” என்று அதட்டிட,

திவியும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ம்ம்.. சரி மா. ” என்று மட்டும் கூறிவிட்டு நகர,

மீண்டும் அவளை அழைத்து “என்ன நீ சுடிதார் போட்டு இருக்க, போ.. போய் புடவைய கட்டு”என்று கூற,

திவி “உனக்கு என் மாமியாரே பரவால்ல மா. அத்தையே ஒன்னும் சொல்லல” என்று சலித்துக்கொண்டாள்.

அப்போது அங்கு தெய்வானை வர “என்ன இங்க நின்னுட்டு இருக்க திவி. காஃபி கொண்டு போல.?” என்று வினவ,

திவி “அத்தை… நான் உங்க கிட்ட இப்போ ஒன்னு கேட்கணும்.” என்றாள்.

தெய்வானை “சொல்லு திவி.. என்ன விஷயம்.?”

திவி “தெய்வம்.. இப்போ நான் ஆதியை அவன் இவன்னு சொல்றதுல உனக்கு என்று தன் அன்னை தன்னை முறைப்பதை உணர்ந்து  உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா.?”

தெய்வானை “இல்ல டி, என் மருமகளே. ” என்று அவளை உச்சிமுகர,

ரோஜா இடைநுழைந்து “அண்ணி, வெளிலேயும் இப்டி பேசுனா எப்டி அண்ணி.?” என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்.

தெய்வானை “வெளிலாம் என் மருமக கரெக்ட்டா பேசுவா. ஆமாதான திவி ” என்று அவளிடம் கேட்க, வேகவேகமாக தலையை ஆட்டிவைத்தாள்.

தெய்வானை “அடுத்து என்ன டி.?”

திவி “இப்போ நான் புடவை கட்டனுமா.?” என்றால் பாவமாக..

தெய்வானை “கோவிலுக்கு போனும் திவி. அதுனால தான் அண்ணி சொல்றாங்க, சரியா. நீ போய்ட்டு வந்து மாத்திக்கோ. ஓகே வா… நாளைக்கு தான காலேஜ்.?” என்று கேட்க,

திவி “ஹான்.. ஆமா அத்தை.” என்று யோசனையுடனே தன் அறைக்குள் சென்றாள்.

முந்தைய நாள் இரவு ஆதி கண்ட கனவிற்கு பிறகு அவன் செய்த சீண்டல்களில் சிவந்தவள் அவனருகில் இருக்க, ஆதி “ஏய் குட்டச்சி, நீ எதுக்கும் பயப்படாத சரியா.. காலேஜ் நீ முடிச்சு உன் லட்சியத்தை அச்சீவ் பன்னவாட்டி தான் நமக்குள்ள எல்லாமே.” என்று அவள் மனமறிந்து கூற,

தன்னவனின் புரிதலில் அகமகிழ்ந்தவள், அவனின் மார்பில் தஞ்சமடைய, திவியின் காதில் ரகசியம் பேச ஆரம்பித்தான் ஆதி. “ஆனா, ஒரு கண்டீசன் டி செல்லம். நான் சொல்ற வரை நீ புடவை கட்ட கூடாது. அப்ரோம் மாமா சொன்ன வாக்க காப்பாத்த மாட்டேன், பாதுக்கோ.” என்று ஹஸ்கி வாய்ஸில் கூற, பெண்ணவள் அவனின் செயலில் செவ்வானமாய் சிவந்து தான் போனாள்.

இருந்தும் அதை மறைத்து கொண்டு, அவனை விட்டு விலக, “ஏய், பதில் சொல்லிட்டு தூங்கு டி. டீல் ஓகே வா..?” என்று வினவ,

திவி “அமைதியா படு டா, லூசு… நாளைக்கு ஒர்க் இருக்குள்ள” என்று கூற,

ஆதி தலையை ஆட்டிக்கொண்டு உறக்கத்தை தழுவினான்.

இப்போது அவனின் கூற்றை நினைத்து கொண்டு இருக்க, ஆதி எழுந்ததிலிருந்து கவனித்து தான் வருகிறான். அப்போது கட்டிலில் அமர்ந்து யோசித்தவள், அவன் தயாராகி குழம்பியை ருசித்துக்கொண்டே, தன்னவளின் நிலையை ரசித்துக்கொண்டு இருந்தான்.

எதேச்சையாக நிமிர, அலுவலகத்திற்கு தயாராகி மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு தன்னை காணும் தன்னவனை தான் கண்டாள் அலர்.

திவி என்ன என்று புருவத்தை தூக்கி வினவ, ஆதி அவளை நெருங்கி அமர்ந்து அவளின் தோளில் கையை போட்டு அமர, அவனின் நெருக்கத்தில் இவளுக்கு தான் பல்வேறு ரசாயனமாற்றங்கள்.

திவி “டேய், என்ன டா… .?”என்று கத்த,

ஆதி “ஹாஹான். என்ன சத்தம்.? ஸ்ஸ்ஸ்… ஆமா, என்ன என் குல்பிக்கு பலத்த யோசனை.? ரொம்ப நேரமா என்னமோ திங்கிங்.?” என்று கேட்டான் யோசனையாக,

திவி “அதுவா, அத ஏன் கேட்குற..?” என்று சலித்துக்கொள்ள,

ஆதி “அப்டி என்ன டி நான் தப்பா கேட்டுட்டேன். இப்டி சலிச்சுக்குற.?”

திவி “ஆதி, அத்தை கோவிலுக்கு போக சொன்னாங்க, நம்மள.”

ஆதி “சரி. அதுக்கு என்ன இப்போ.? போலாம் டி. அதுல என்ன பிரச்சனை உனக்கு.?”

திவி “ப்ச்.. அது பிரச்சனை இல்லை.. அத்தை என்னை.” என்று அவன் விழிகளை காண,

ஆதி “உன்னை..?”

திவி “என்ன புடவை கட்ட சொன்னாங்க டா” என்று தலையை நிமிர்த்தாமல் கூறினாள்.

தன்னவளின் நிலையை அறிந்தவன் அடக்க முடியாத சிரிப்பை அடக்கி கொண்டு “அதுக்கு என்ன.? கட்டு.” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

திவி “என்னது.? கட்டா.. டேய்.. ஆதி.” என்ற அவளின் குரல் காற்றில் தான் கரைந்தது.  ‘என்ன இவன் கட்டுன்னு சொல்லிட்டு போய்ட்டான். நேத்து என்ன சரக்கு ஏதாவது அடிச்சு இருந்தானோ.? அதான் காலைல எந்திரிச்சதும் மறந்துட்டான் போலயே. இப்போ என்ன பண்ண..?’ என்று யோசனையில் மூழ்க, தெய்வானையின் குரல் அவளின் எண்ணங்களை கலைத்ததினால் விரைந்து தயாராகினாள்.

சிவப்பு மற்றும் பிங்க் வர்ணம் கலந்த காட்டன் புடவையில் தயாராகி வந்தவளை விழி அகற்றாமல் பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.

அவனை ஒரு இடி இடித்து தன்னிலைக்கு கொண்டு வந்த தேவ், ” அண்ணா, அண்ணி செம்ம்ம்மையா இருக்காங்கள அண்ணா.?” என்று வினவ,

ஆதி ஆம் என்பது போல் தலையசைத்து, பின் அவன் தலையில் நங்கென ஒரு கொட்டு வைத்து “அவள நீ ஏன் டா சைட் அடிக்குற. கொன்றுவேன்.. ” என்று அதட்டினான்.

தேவ் “ஹலோ, இதுக்கு முன்னாடி எத்தனை டைம் நான் அண்ணியை புடவைல பாத்து இருக்கேன். நான் அண்ணி கிட்ட சொல்லிக்கூட இருக்கேன். அண்ணி ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க. நீங்க ஏன் அடிக்குரீங்க.?” என்று தலையை தேய்த்து கொண்டே வினவினான்.

பாரதி “டேய், அவங்க பொண்டாட்டிய சைட் அடிச்சா அடிக்காம கொஞ்சுவங்களா.? இன்னும் ரெண்டு போடுங்க மாமா.” என்று கூறினாள்.

தேவ் “துரோகி… இருங்க உங்கள அண்ணிகிட்டையே சொல்றேன் ” என்று திவியிடம் செல்ல,

பாரதி “மீ எஸ்கேப்.” என்று ஓடிட,

ஆதி ‘அவ என்ன பண்ணிடுவா?’ என்ற ரீதியில் நின்று இருந்தான்.

தேவ் “அண்ணி, உங்க புருஷன்கிட்ட சொல்லி வைங்க. சும்மா சும்மா என்ன அடிக்கிறாங்க..” என்று புகார் மனு கொடுத்தான்.

திவி “நீ என்ன டா பண்ண வாலு..?”

தேவ் “நான் ஒண்ணுமே பண்ணல அண்ணி. நீங்க நல்லா இருக்கீங்கன்னு சொன்னே. அதுக்கு தான் அண்ணா அடிக்குறாங்க.” என்றிட,

ஆதி இதற்கு திவி கூறப்போகும் பதிலுக்காக அவளை நோக்க, திவி, அவன் காதை திருகி, “எத்தனை தடவ சொல்லி இருக்கேன். இந்த மாதிரி லூசுத்தனமான வேலை பாக்காதன்னு. ஆதியை கடுப்பேத்துறதே உனக்கு பொழப்பாடா.?” என்றிட,

தேவ் “ஆஹா….. ஒன்னு கூடிட்டாங்கய்யா.. ஒன்னு கூடிட்டாங்க..” என்று நழுவ, அங்கு மெல்லிய சிரிப்பலை உருவாகிட,

தெய்வானை “அவன் அப்டி தான் ஆதி. நீ டென்ஷன் ஆகாத. அவளை கோவிலுக்கு அழைச்சிட்டு போய்ட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

ஆதி “அம்மா, கோவிலுக்கு போய்ட்டு அப்டியே நாங்க ரெண்டு பேரும் ஆபிஸ் போறோம் ம்மா ” என்று கூற,

அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.

ஆதி “அப்டி என்ன நான் தப்பா சொல்லிட்டேன். ஏன் என்ன இப்படி பாக்கிறீங்க.?” என்றான் யோசனையாக,

பெருமாள் “அது இல்லை ஆதி. நேத்து தான கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள ஆபிஸ்.?” என்று இழுத்தார்.

திவி “அத்தை, நான் தான் அவர்கிட்ட போலாம்னு சொன்னேன். நானும் கொஞ்சம் பிசினஸ் கத்துகிறேன். இதுல யாருக்காவது பிரச்சனையா.?” என்று கேட்டாள் பெருமாளை ஆராய்ந்தபடி,

சிவஞானம் “நீங்க போய்ட்டு வாங்க. பாத்து போய்ட்டு வாங்க. ஆதி, சாயங்காலம் சீக்கிரம் வரணும் ரெண்டு பேரும்” என்று கூறினார்.

ஆதி தன்னவளை யோசனையாக பார்க்க, திவி “சரிங்க தாத்தா. நாங்க சீக்கிரம் வந்திடுவோம்” என்று விட்டு இருவரும் கோவிலுக்கு சென்றனர்.

சேலத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவன் லிங்கங்கள் வீற்றிருக்கும் கோவிலுக்கு சென்று ஊர்த்துவலிங்கனை மனமார தரிசித்துவிட்டு புறப்பட்டனர் ஆதியும் திவியும்.

ஆதி “ஏய், நான் உன்னை புடவை கட்ட கூடாதுன்னு தான சொன்னேன். யாரை கேட்டு கட்டின.? ” என்று குறும்பாக கேட்டிட,

திவி “தோ பார்ரா… டேய், நான் கேட்டேன்ல? நீ தான கட்ட சொன்ன.? இப்போ என்ன மாத்தி பேசுற.?” என்று அதிர்ச்சியினூடே கூற,

ஆதி “அதுலாம் நான் அப்டி தான் சொல்லுவேன். மாமா கிட்ட நீ தான் இன்னொரு தடவ கேட்கணும். நீ மாமா கிட்ட கேட்கலை. சோ உனக்கு இன்னைக்கு பனிஸ்மெண்ட் இருக்கு” என்று ஏதோ மனதில் திட்டமிட்டு கூற,

திவி ‘சுத்தம்.. என்ன பண்ணபோறானோ?’ என்று மனதினுள் அவளுக்கு பயபந்து தான் உருண்டது. பயபுள்ள பனிஸ்மெண்ட்னு எதுலயாவது மாட்டி விட்டா என்ன பண்றதுன்னு பயம் தான்.

இருந்தும் அதை வெளிக்கொணராது “என்.. என்ன பனிஸ்மெண்ட்..?” என்று சிறுப்பிள்ளையாய் கேட்க,

வண்டியை சடன் பிரேக் போட்டவன் அவளருகில் வந்து அவள் விழிகளில் தன் பார்வையை கலக்க விட, திவியோ மிழிகளை இறுக கட்டிக்கொண்டாள்.

ஆதி மெல்லிய குரலில் “இன்னைக்கு முழுக்க நீ புடவையில தான் இருக்கணும். அப்போ மாமா என்ன பண்ணாலும் இப்படியே அமைதியா இருக்கணும். இதான் பனிஸ்மெண்ட்” என்று கூற,

மதியவளோ சிவந்து போனாள் அவனின் நெருக்கத்திலும் குரலிலும்.

திவி அமைதியாக இருக்க, ஆதி மகிழுந்தை இயக்கி தன் அலுவலகம் முன்னே நிறுத்தினான். அப்போதும் திவி கண்ணை திறக்காமல் இருக்க,

ஆதி சிறு மூரலுடன் “நீ இப்போ இறங்குனா நாம ஆபிஸ் போய் வேலைய பாக்கலாம். இல்லனா…” என்று அவள் கன்னம் வருடிட,

திவி சட்டென கண்களை திறந்தவள் “நா.. நாம ஆஃபிஸ் போலாம்.” என்று இறங்கி வெளியே வந்தாள் அவசரமாக.

ஆதி மகிழுந்தை நிறுத்திவிட்டு, “வா போலாம் ” என்றிட,

திவி அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.

ஆதி “ஏன் டி அங்கேயே நிக்குற? வா போலாம்.”

திவி “ஆதி இங்க நமக்கு கல்யாணம் ஆனது யாருக்கும் தெரியாதுல.. ” என்று  ஏதோ சொல்ல வர,

ஆதி “இங்க நீ என் பி.ஏ. நான் உன் எம்.டி. அவ்ளோதான்.. போதுமா உள்ள வா” என்று அவளை அழைத்து கொண்டு சென்றான்.

அவளும் சம்மதமாக தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள். தன்னவன் உள்ளே நுழைந்ததும் மற்றவர்கள் தரும் மரியாதை, அவனின் மிடுக்கு, அதிகார தோரணை அனைத்தும் அவளை ஏனோ அறியாத காரணமாய் அவனுக்குள் விழவைக்கவே செய்தது.

சந்தனா “ஹே.! ஹாய் திவி, எப்டி இருக்க.? கல்யாணம்லாம் நல்ல படியா முடுஞ்சதா.?” என்று வினவ,

திவி அவள் மேல் எழுந்த இனம் புரியாத கோபத்தை அடக்கி கொண்டு “ஹான் நல்லா முடிஞ்சது..” என்றாள்.

ஆதி “திவி டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். கம் டூ மை கேபின்” என்று அவளை அழைக்க,

திவி “ஹான் ” என்று உள்ளே செல்ல இருந்தவளை தடுத்தாள் சந்தனா “திவி, உன்கிட்ட சில வியசம் பேசணும். நீ ப்ரேக்ல என் கேபின்க்கு வரியா.?” என்று கேட்க, அவள் என்ன தான் கேட்கப்போகிறாள் என்பதை உணர்ந்தவள் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

ஆதி முதலில் சந்தனாவையே திவிக்கு வேலை நுணுக்கங்களை கற்று தர முடிவு எடுத்து இருந்தான். ஆனால் அவளின் பேச்சு ஆணவனுக்கு கோபத்தை ஏற்படுத்த, அலுவலக மேலாளர் இன்னிசைமதியை அழைத்தான்.

ஆதியின் அறைக்குள் நுழைந்த திவி “ஆதி, உன் கேபின் செம்மையா இருக்குடா” என்றாள் அதை சுற்றி பார்த்துகொண்டே.

ஆதி “மிஸஸ் ஆதித்யா. இங்க நான் உன் எம். டி. சோ கால் மீ சார்” என்று புன்னகையோடு கூற,

திவி “எதே சார்ரா.. டேய் “என்று ஏதோ கூற வர,

சரியாக உள்ளே நுழைந்தான் இன்னிசைமதி.

திவி அமைதியாக இருக்க, மதி “குட் மார்னிங் சார்..” என்றவன் வாய்மொழி ஆதியிடம் இருக்க, விழிமொழியோ திவியிடம் தான் நிலைபெற்றது.

ஆதி “யெஸ் மதி. ஷீ இஸ் திவ்யதர்ஷினி மை பி.ஏ. நீங்க அவங்களுக்கு எப்டி ஒர்க் பண்னனும்னு சொல்லி கொடுங்க. பேசிக்ஸ். அப்ரோம் நான் பாத்துக்குறேன்” என்றான் கோப்பை ஆராய்ந்தபடி.

மதி “யெஸ் சார்.. ” என்று மட்டும் கூறி விட்டு வெளியேற,

ஆதி “திவி, ஃபாலோ ஹிம். அண்ட் உனக்கு இனிமே அது தான் கேபின் ” என்று தன் அறையில் ஏற்கனவே இருந்த கண்ணாடி அறையை காட்டினான்.

திவி அதை பார்த்து விட்டு “ஹான். ஓகே சார். இப்போ நான் கேபின்னுக்கு போனுமா இல்ல மதிய ஃபாலோ பண்னனுமா.?” என்று சார்க்கு அழுத்தம் கொடுத்து கேட்க,

ஆதி “ஏய் வாலு. மதி சொல்ற விஷயத்தை தான் டி ஃபாலோ பண்ண சொன்னேன். அவன இல்ல.” என்று அவளின் காதை திருக,

திவி “ஸ்ஸ்ஸ் எரும வலிக்குது டா.. ஸ்ஹா… சரி… கைய எடு “என்று கூறி காதை தேய்த்தாள்.

அவனை மனதில் வறுத்துக்கொண்டு வெளியேறிட, மதியோ ஆதியின் மேல் கொலைவெறியுடன் இருந்தான். மதி ‘என்னப் பொண்ணு டா.’ என்று அவளை ரசித்து மீண்டும் அவளை காண, அவளின் காதை ஆதி திருகியதை கண்டு ஏனோ அவனுக்கு அது கோபத்தை தான் ஏற்படுத்தியது. ‘என்ன தான் தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும் அது என்ன இப்படியா பண்றது?’ என்று மனதில் திட்ட,

திவியின் பேச்சில் நடப்பிற்கு வந்தான். திவி “ஹலோ..” என்று அவன் முன் கையசைத்து அழைக்க,

மதி “ஹான். ஹாய்.. ஐ.. ஐ ஆம்.. மதி.. இன்னிசைமதி” என்று கை நீட்ட,

திவி “ஹான்.. ஐம் மிஸஸ் திவ்யதர்ஷினி”என்று கை நீட்டினாள்.

மதி அவளின் கூற்றில் “ஆர் யூ மேரிட்.?” என்று வினவ,

திவி “யெஸ்.. நேத்து தான் கல்யாணம் ஆச்சு” என்றாள்.

மதி அடுத்து பேச வருவதற்குள், சந்தனா “திவி வா.. ” என்று அவளை அழைத்து கொண்டு சென்றாள்.

திவி அவளை கேள்வியாய் காண, சந்தனா “உனக்கு ஒன்னு தெரியுமா.? ஆதிக்கு கல்யாணம் ஆச்சு திவி” என்றிட,

திவியும் அதிர்ச்சியில் “என்னது அப்படியா.? யாரு.? உங்களுக்கு எப்டி தெரியும்.? சக்தி அண்ணா என்கிட்ட சொல்லவே இல்லை” என்று கூற,

சந்தனா ” நினைச்சேன். உனக்கும் தெரியாதுன்னு.  யாரோ யதுவாம். அவள நீ பாத்து இருக்கியா?”

திவி சிரிப்பை அடக்கி கொண்டு “இல்லையே.! எனக்கே நீங்க சொன்னது சாக் தான் பா ” என்றாள் அதிர்ச்சி தொனி மாறாமல்.

சந்தனா “நீ தான் இப்போ அவனுக்கு பி.ஏ. எப்படியாவது நீ தான் கண்டுபிடிக்கணும் யார் அந்த யதுன்னு “என்று கூற,

திவி “ஆதி சார்க்கு கல்யாணம் ஆனா உங்களுக்கு என்ன பிரச்சனை.?” என்று தன் யோசனையை கேட்டு வைக்க,

சந்தனா “நான் அவனை லவ் பன்றேன் திவி ” என்றதில், திவிக்கு அடக்க முடியாத கோபம் வந்தது என்னமோ உண்மையே.. இருந்தும் அதை மறைத்து கொண்டு, “எப்போ இருந்து.. ஆதி சாரும் உங்களை” என்று கேட்க அவளால் அந்த வார்த்தையை முடிக்க கூட திராணி இல்லை.

சந்தனா “இல்ல திவி. அவன் என்ன லவ் பண்ணல. நான் அவனை பி.ஜில இருந்து லவ் பன்றேன். அவனுக்காக தான் அவன் கம்பெனிலயே ஜாய்ண்ட் பன்னேன். அண்ட் தேங்க்ஸ் திவி” என்று கூற,

திவி அவளை எதற்கு நன்றி என்ற ரீதியில் காண “உன்னால தான் என் லவ்வ சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சது. இல்லனா எப்போ சொல்லி இருப்பேன்னு எனக்கே தெரியாது.” என்றால் சந்தனா.

திவிக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத வலி. தன்னவனை தனக்கு பிடித்தவனை வேறொருவர் காதலிப்பதாக கூற, ஏனோ அவளின் மனதில் சொல்ல முடியாத வலியும் கோபமும் ஆடவனின் மேலே தோன்றியது.

சந்தனா “சரி திவி டைம் ஆச்சு. நீ ஒர்க் பாரு. அப்ரோம் ஆதி திட்டுவான்” என்று அவளை அனுப்பி வைக்க, திவி ஏதோ சிந்தனையில் ஆதியை தேடித்தான் சென்றாள்.

அப்போது அவனின் அறையை திறக்க, உள்ளே இருந்து மதி வெளியே வந்தான். இருவரும் மோதிக்கொள்ள, மதியிடம் இருந்த கோப்புகள் கீழே விழுந்தது.

திவி “அயோ, சாரி இசை. நான் தான் பாக்கல.” என்று கோப்புகளை எடுத்து கொடுக்க, அவளின் அழைப்பில் இவன் தான் சிலையாகி இருந்தான். பின் “திவி, இனிமே என்ன இசைன்னே கூப்டுரிங்களா.?” என்று கேட்க,

திவியோ சிரித்துக்கொண்டே சரி என்ற தலையசைப்பை கொடுத்து விட்டு ஆதியை காண சென்றாள்.

இவர்களின் பேச்சை ஆதியும் கேட்டு கொண்டு இருக்க, திவியின் மேல் ஏனோ இனம்புரியாத கோபம் ஏற்பட அவள் வருவதை கண்டு அமைதி காத்தான்.

திவி “எனக்கு தலை வலிக்குது. நான் வீட்டுக்கு போகவா.?” என்று கேட்க,

ஆதி “என் கூட இருந்தா தான் உனக்கு தல வலிக்குமா?” என்று பட்டென பேச,

அவனின் வார்த்தையில் அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. திவி “அப்டிலாம் இல்ல. என்ன ஆச்சு உனக்கு.?” என்று கேட்க,

ஆதி “ஒன்னும் இல்ல.. நீ கிளம்பு” என்று கூற,

திவி “ஹலோ. மிஸ்டர் ஆதித்யன், கிளம்புன்னு சொன்னா, எப்டி போக.? நீங்க தான கூட்டி வந்தீங்க. திரும்ப யார் கூட்டிட்டு போவா?” என்று அவனை சீண்ட,

ஆதி “அதான் ரெண்டு கால் இருக்குள்ள நடந்து போ. இல்லன்னா இப்போ ஒருத்தனை இசைனு கூப்டல, போ அவன் கூட” என்றதும், அவன் ஏன் கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்தவள்,

திவி “நான் பஸ்ல போய்க்குறேன். நீ சீக்கிரம் வீட்டுக்கு வா” என்று மட்டும் கூறிவிட்டு புறப்பட்டாள்.

மனைக்கு விரைந்து வந்தவளிடம் அனைவரும் கேள்விகணைகளை தொடுக்க, அனைவரையும் சமாளித்தவள் அறைக்குள் தஞ்சமடைந்தாள்.

அறையிலும் அவனின் ஸ்பரிசமே அவளை நிலைகொள்ளாது செய்ய, சாளரத்திலேயே அமர்ந்து நெடுநேரம் அலைப்பாய்ந்த மனதை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.

இரவு பத்து மணியளவில் தான் வீட்டிற்கு வந்தான் ஆதி. அனைவரும் உறங்கி கொண்டு இருக்க, ஆதிக்காக வீட்டில் சோபாவிலேயே காத்துகிடந்து உறங்கியும் போனால் அவனின் மனையாள்.

அவளின் வதனமே மன வேதனையை உணர்த்த, எதுவும் பேசாமல் தன் அறைக்கு நுழைய படியேறினான். சத்தம் கேட்டதில் எழுந்த திவி “சாப்பிட்டு போலாம். ஒன்னும் அவசரம் இல்ல “என்று கூற, அவன் திரும்பி எதுவும் கூறாமல் சாப்பிட அமர்ந்தான்.

திவி அவனுக்கு உணவு பரிமாற, ஆதி எதுவும் பேசாமல் உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்றான்.

தன்னவன் மனநிலையை அறிந்தவள் பாத்திரங்களை எடுத்து வைத்து விட்டு, தன்னவனை காண சென்றாள்.

ஆதி மடிக்கணினியில் முகத்தை புதைத்து இருக்க, திவி “டைம் பதினொன்னு. தூங்களயா?” என்று வினவினாள்.

ஆதி “ஒர்க் இருக்கு.” என்று தலையை நிமிர்த்தாமல் பதிலளிக்க,

அவனருகில் வந்தவள் மடிக்கணினியை மூடி வைத்து விட்டு, “இப்போ உனக்கு என்ன டா பிரச்சினை.? ஏன் இப்படி இருக்க.?” என்று கேட்டாள் கோபமாக.

ஆதி எதுவும் பேசாமல் இருக்க, திவி “நீ சொன்ன வார்த்தைக்கு நான் தான்டா உன்மேல கோபப்படனும். என்னமோ நீ மூஞ்ச தூக்கி வச்சி இருக்க.?” என்று அதட்டி அவனருகில் அமர்ந்தாள்.

ஆதியின் கையை பற்றி “எந்த சூழ்நிலையிலும் நான் உன்கூட தான் மாமா இருப்பேன். புரியுதா.? இந்த புரிதல் இல்லாமா தான் நிறைய உறவுகள் பிரிஞ்சு போறாங்க” என்று அவனுக்கு உணர்த்த,

ஆதி தன்னவளின் சொல்லில் “நீ அவன் கூட பேசினது பிரச்சனை இல்லை யது. அவன் ஒரு பொண்ண லவ் பண்ணா. அந்த பொண்ணும் அவன இசைன்னு தான் கூப்பிடும். அதான் நீ அப்டி கூப்டவும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.  உனக்கே தெரியும்ல நான் பொஸஸிவ்னு..” அவளின் முகம் பாராமல் பேச,

திவி “தியா… ” என்று அழைத்தாள் மென்மையாக,

ஆதி அவளை காண, திவி “இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா.?” என்று கேட்டு, சந்தனா கூறியதை கூறினாள்.

திவி “அவ அப்டி பேசுனப்போ எனக்கு எவ்ளோ வலிச்சது தெரியுமா.? நமக்கு ரொம்ப புடிச்சவங்கள இன்னொருத்தர் அவங்க எனக்கும் வேணும்னு சொல்றப்போ அதுல இருக்க வலி என்னன்னு அதை உணரவங்களுக்கு மட்டும் தான் புரியும். காதல் இழப்பும் சரி நட்பு இழப்பும் சரி ரெண்டுமே கொடுமை தான். ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ நான் என்னைக்கும் உன்னை விட்டு போக மாட்டேன், சரியா?” என்று ஒரு நீண்ட விளக்கம் அளித்திட,

தன்னவளின் கூற்றில் தான் கூறிய சொல்லின் வீரியத்தை உணர்ந்தான் ஆதி. ஆதி “சாரி டி..” என்று கூற,

திவி  “ஹான் நீயே வச்சுக்கோ… அப்ரோம் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை இங்க எதுவுமே இல்லை ஆதி. என்ன பேசதான் யாரும் தயாரா இல்ல ” என்று தன்னவன் இடம் அறியாது பேசிய வார்த்தைகளை அவனுக்கு சுட்டி காட்டிட,

ஆதி “சாரி டி.. இதை நீ அங்கேயே சொல்லி இருக்கலாம்ல யது” என்று கேள்வியாய் கேட்டான்.

திவி “அட லூசு… நீ தான சொன்ன அங்க நீ எம்.டி. நான் உன் பி.ஏ. ன்னு. அங்க எப்டி இதுலாம் பேச.? சரி எனக்கு தலைவலிக்குதுன்னு சொன்னா ட்ராப் பண்ண வருவ பேசலாம்னு இருந்தேன். நீ தான் வரல” என்று கூற,

அவளை பின்னிலிருந்து அணைத்து கொண்டவன் “ச்ச.. என் பொண்டாட்டிக்கு எம்முட்டு அறிவு. இந்த அறிவு பொண்டாட்டிக்கு முட்டாள் புருஷன்னா இருக்கேனே!” என்று சலித்திட,

திவி “ஒத்துகிட்டா சரி ” என்று அவனை வாரினாள்.

ஆதி “ஏய்.. சும்மா சொன்னா என்னையவே கலாய்க்குரியா?” என்று அவளை அடிக்க வர, அவரிடமிருந்து தப்பித்து ஓடினாள் பெண்ணவள்.

திவியின் எண்ண அலைகளை தொலைபேசி மணி தன் பக்கம் திருப்ப, அதை செவிக்கு இணைத்து பேசினாள்.

திவி “ஹலோ.. சொல்லு மீனா”

மீனா “என்ன திவி பண்ற? இன்னைக்கு எழில்ல ஸ்கூல்ல சேத்தனும்ல. எப்போ வர.?” என்று கேட்டிட,

திவி “ஹான் ஆமால மறந்தே போச்சு. உடனே கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாள்.

வீட்டிலிருந்து தன் மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றாள் திவி.. அங்கு தலைமையாசிரியர் கேட்ட கேள்வி பெண்ணவளை வாட்ட, எழிலியின் தந்தை ஸ்தானத்தில் கையெழுத்து இட்டான் திவியின் ஆதி…

கனவு தொடரும்…. 🌺🌺🌺🌺🌺

கதையை பற்றி தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.. 😅🤗🤗🤗

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்