Loading

ஆட்சியர் கனவு 30 💞

இரவு மணி இரண்டு. ஆதியின் அறையில் தேவ்வும் திவியும் கைகட்டியபடி தலை குனிந்து இருக்க, தி க்ரேட் அசிஸ்டன்ட் கமிஷ்னரும் அந்த நிலையில் தான் இருந்தான். காரணம் மூவரையும் ஆதி வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

ஆதி ” கொஞ்சம் கூட உனக்கு அறிவுன்னு ஏதாவது இருக்கா யது. எங்க சேஃப்டிலாம் பாக்குற, உன் சேஃப்டி நீ பாத்துக்க மாட்டிய” என்று திவியை திட்டி தீர்க்க,

தேவ்விடம் திரும்பியவன், “அவதான் கேட்டான்னா உனக்கு எங்கடா போச்சு, இந்த நேரத்தில இது அவசியமா? ஹான்.? இர்ரெஸ்பான்சிபில் இடியட்” என்று கத்தினான்.

தேவ் “அண்ணி! நீங்களே ரொம்ப பரவாயில்லை அண்ணி!” என்று முணுமுணுக்க,

திவி “ஏன் டா.? அப்படி என்ன நான் பண்ண .?” என்றாள் ஹஸ்கி வாய்சில்.

தேவ் “தப்பு பண்ணா ரெண்டு அறை விட்டு,  நாலு அட்வைஸ் பண்ணிட்டு போயிடுவீங்க.. ஆனால் அண்ணன், கிட்ட தட்ட ஒரு மணி நேரம்மா திட்ராரு..! முடியல..!” என்று கதறினான்.

திவி “நான்லாம் மாட்டுவேன்ணு சத்தியமா எதிர்பார்க்கல டா..! அதுவும் உன் கூட சேர்ந்து மாட்டுவேன்னு என் கனவுல கூட நினைக்கல” என்று கவலைப்பட,

தேவ் ” பண்றது எல்லாம் கேடி வேலை. இதுல என் கூட சேர்ந்து மாட்டுனது உங்களுக்கு அசிங்கமா தெரியுதா” என்று முறைக்க,

திவி ” எஸ் அஃப்கோர்ஸ்!” என்றாள் தோளைக்குலுக்கியபடி,

தேவ் “கடுப்பேத்தாதீங்க அண்ணி! சும்மா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி லாங் டிரைவ் போலாம்னு நைட்டு 11 மணிக்கு எழுப்பி கூட்டிட்டு வந்துட்டு இப்படி பச்ச புள்ளய திட்டுவாங்க வைக்கிறீங்களே” என்று கதற,

திவி “டேய்.. நீ பச்சை பிள்ளையா? ஒழுங்கா ஒரு வண்டி ஸ்டார்ட் பண்ண தெரியல.! நீ எல்லாம் படிச்சு என்னத்த? ஹ்ம்ம்.! நீ மட்டும் ஒழுங்கா ஸ்டார்ட் பண்ணி இருந்தா இந்நேரம் ஏற்காட்டுக்கே போயிருக்கலாம் எருமை!” என்றாள் கடுப்புடன்.

தேவ் பேச வருவதற்குள், ஆதி “அங்க என்ன ரெண்டு பேரும் தனியா மீட்டிங் போடுறீங்க.?” என்று முறைக்க,

திவி ‘ப்பபா.! என் ப்ரீத்தியாக்கு எவ்ளோஓஓ கோவம். இருந்தாலும் அழகாத்தான் இருக்கான்.! சோ ஸ்வீட் பேபி நீ!’ என்று அவனை ரசிக்க,

அவள் பார்வையில் ஆணவன் என்ன கண்டானோ அவளிடமிருந்த பார்வையைத் திருப்பி சக்தியை முறைத்தான் ஆதி, “உன்னையெல்லாம் யாரு டா போலீஸ் வேலையில சேர்த்தான்? தப்பு பண்ணா தண்டனை கொடுக்கணும் அதை விட்டுவிட்டு சப்போர்ட் பண்ண கூடாது” என்று அதட்டிட,

சக்தி “இதுக்கே இவன் இப்படி கத்துறான். இவ பண்ண சேட்டையெல்லாம் தெரிஞ்சா நம்மள போட்டுத் தள்ளிடுவான் போல” என்று ஆதியை பாவமாக பார்த்தான்.

ஆதி “பேசுடா.. மூஞ்ச பாரு பண்றதுலாம் பண்ணிட்டு திருவிழால தொலைஞ்சு போன புள்ள மாதிரி” என்று அவனைத் திட்ட,

திவி “டேய் உன் நொண்ணனுக்கு சொந்தமா கூட டயலாக் பேச தெரியாதாடா.? கவுண்டமணி டயலாக் பேசுறான்” என்று சிரிக்க,

தேவ் அமைதியாக இருப்பதைப்பார்த்து இவளும் நிமிர, ஆதி அவளை முறைத்துக் கொண்டு இருந்தான். ” அய்யய்யோ ஹஸ்கி வாய்ஸ்ன்னு நெனச்சி சத்தமா பேசிட்டோமோ” என்று அவனை பார்க்க,

ஆதி “ரெண்டு பேரும் 50 தோப்புக்கரணம் போடுங்க” என்றான்.

தேவ் “சாரி அண்ணா” என்று விட்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான்.

திவி தான் இவன் கூறியதில் அதிர்ந்து “நான் என்ன சின்ன பிள்ளையா தோப்புக்கரணம் போட சொல்ற.?” என்று கத்த, அவன் முறைத்த முறைப்பில் “கால் வலிக்கும்ல்ல” என்றாள் மெதுவாக.

பாவம் ஆதி கடினப்பட்டு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு அவளை முறைக்க முயன்று கொண்டு இருந்தான். ஆதி “நீ பண்றது எல்லாம் சின்ன பிள்ளைங்க மாதிரி தான் இருக்கு.. ஒழுங்கா தோப்புக்கரணம் போடு” என்று அதட்டினான்.

“இவன் போன ஜென்மத்தில டீச்சராக இருந்து இருப்பானோ.?” என்று யோசித்துக் கொண்டிருக்க, ஆதி ” 100 தோப்புக்கரணம் போடு” என்றான். 

திவி “என்னது 100ஆ.?. 50 தான சொன்ன ?” என்று அதிர்ச்சியாய் வினவ,

ஆதி “அது சொன்ன உடனே போட்டு இருந்தா.. இப்போ 100 போடு” என்றிட,

திவி பாவமாக சக்தியை பார்த்தாள்.

ஆதி “என்ன பாக்குற.? அவனுக்கும் இருக்கு நீ போடு”” என்றதும்,

திவி “அப்போ சரி” என்று விட்டு தோப்புக்கரணம் போட்டாள்.

சக்திதான் ஒரு பார்வையிலேயே என்னை கோர்த்து விட்டாளே என்று புலம்பினான்.

ஆதி ” டேய்.. நீ 500 போடு டா” என்றான் மனதிற்குள் சிரித்துகொண்டே..

சக்தி “வாட்! என அதிர்ந்து, மச்சான் நான் வேணாம் இன்ஸ்டால்மென்ட்ல போடவா.?” என்று பாவமாக கேட்டான்.

ஆதி” ஏன்?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டிட, “இல்ல மச்சான் உங்களோட கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கு.. நாளைக்கு கால் வலியோட செய்யமுடியாதுல்ல என்றிட,

ஆதி “ஆமால சரி நீ அப்புறம் போடு” என்றான் மற்ற இருவரையும் பார்த்து கொண்டே..

திவியும் தேவ்வும் “விடுதலையா… இந்த வாழ்க்கை” என்று சோக கீதத்தோடு அவனைப் பார்க்க, சக்தி அமைதியாக நின்றிருந்தான்.

அந்த நேரம் ஆதி அறையில் விளக்கு எரிவதை கண்ட கோகுல் என்னவென்று உள்ளே வர இவர்கள் செய்து கொண்டிருந்ததை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

கோகுல் “ஏன் இரண்டு பேரும் இந்நேரத்தில எக்ஸசைஸ் பண்ணிட்டு இருக்கீங்க.?” என்று சீரியஸ்ஸாக வினவ,

திவியும் தேவ்வும் அவனை வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் முறைத்தனர்.

சக்தி “எக்ஸசைஸ் இல்லடா தம்பி பனிஷ்மென்ட்.!” என்று கூற,

கோகுல் “பனிஷ்மென்ட்டா? அப்படி என்ன பண்ணாங்க.?” என்று கேட்டு, “ஆதி அண்ணா கிட்ட பனிஷ்மென்ட் வாங்கணும்னா இவங்க பெருசா ஏதோ செஞ்சு இருக்காங்க போல” என்று  நினைத்துக் கொண்டு இருந்தான்.

ஆதி இருவரையும் முறைத்துவிட்டு “அவங்கிட்டயே கேளு டா! என்ன பண்னாங்கன்னு” என்றான்.

தேவ்விடம் கோகுல் பார்வையால் கேட்டிட, தேவ் மேலே பார்த்தான். (பிளாஷ்பேக் சொல்ல போறாங்களாம்).

திவி படுக்கையில் அமர, ஆதி முறைத்தான். திவி ” அவன் ஃபிளாஷ்பேக் சொல்றவரை உட்காறேன் ப்ளீஸ்!” என்றிட, ஆதிக்கு தான் பாவமாக இருந்தது.

ஆதி திவியை அவளின் வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு திரும்பினான். திவிக்கு ஏனோ தூக்கம் தொலைதூரம் ஆனது. மனது இன்னும் குழப்பத்துடன் இருக்க, ஒரு நீண்ட நெடிய பயணம் செல்லலாம் என்று முடிவு செய்தாள்.

தன் அலைபேசியை எடுத்தவள், எப்பவும் போல் தேவ்விற்குஅழைப்பு விடுத்தாள்.

தேவ்” ஹலோ…! சொல்லுங்க அண்ணி.. என்ன இந்த நேரத்துல.?” என்றான்.

திவி ” நான் எதுக்கு போன் பண்னுவேன்னு உனக்கு தெரியாதாடா ரொம்ப மனசு ஏதோ மாதிரி இருக்கு. ஒரு லாங் டிரைவ் கூட்டி போறியா.?”  என்று வினவ,

தேவ்விற்கு  புரிந்தது. திவி, எப்போதும் ஏதாவது மனக்குழப்பம், மனது சரியில்லை என்றால் மட்டுமே தன்னிடம் இவ்வாறு கூறுவாள் என்று.

தேவ் கடிகாரத்தை பார்த்துவிட்டு,  “அண்ணி மணி பதினொன்று.. போய் தூங்குங்க” என்றான்.

திவி” டேய்… டேய்… ப்ளீஸ்டா..  இந்த ஒரு தடவை..  அப்புறம் உன்னை கேட்க மாட்டேன்” என்று கெஞ்சினாள்.

தேவ் யோசித்துவிட்டு “அண்ணி.. என் வண்டி சர்வீஸ்க்கு போயிருக்கு அண்ணி” என்றிட,

திவி “டேய்.. அதான் உன் நொண்ணன் வண்டி இருக்குல்ல.. அத எடுத்துட்டு வா டா.. ப்ளீஸ் டா..  நான் இனிமே உனக்கு அட்வைஸ்ஸே பண்ண மாட்டேன்” என்று கதை அளக்க,

தேவ் மனதுக்குள் புன்னகைத்துவிட்டு “ஒரு ஹாஃப் ஆன் ஹவர் அண்ணி வரேன்” என்றான்.

திவிக்கு எப்பவும் தேவ்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர். எந்த கவலை இருந்தாலும் அவனிடம் கூறி விடுவாள். ஆதிக்கு எப்படி திவியின் ஒரு வார்த்தை புத்துணர்வோ, அதே போல் தான் திவிக்கு தேவ்வின் ஆறுதலான ஒரு சொல்லும்..

இப்போதுதான் தேவ் ஆதிக்காக, திவியை  அண்ணி என்று அழைப்பது. இதற்கு முன் திவியை பெயர் சொல்லியே அழைப்பான். இருவருக்கும் வயது வித்தியாசம்  இருப்பினும் தோழமைகள் போலவே பழகுவார்கள். தேவ்வின் “திவி டோன்ட் வொரி.. பீ சில்மா” என்ற ஒரு வார்த்தை திவிக்கு அத்துணை புத்துணர்ச்சி தரும்..

தேவ் ஆதியின் அறைக்குள் செல்ல, ஆதியும் குளித்துக் கொண்டு இருந்தான். எப்படியோ தேடி ஆதியின் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் தேவ்..

கீழே வந்தவன், ஆதியின் வண்டியை முன் வாசல் வரை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான். இதையனைத்தையும் தன் அறையின் சாளரத்தின் வழியே ஆதி பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

ஹாஃல்ப் ஆன் ஹவர், ஒன் ஹவர் ஆனதால் கடுப்பான திவி, சக்தியை உடன் அழைத்துக்கொண்டு ஆதியின் வீட்டிற்கே வந்துவிட்டாள்.

ஆதி தன் மொபைலில் பைக் மோட்டை ஆக்டிவ் செய்து வைத்திருந்தான். வண்டியில் சாவியைப் போட்ட உடன் ஆதிக்கு அலராம் அடிக்க, சாளரத்தின் வழியே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

தேவ் முன் திவி கடுப்பாக நின்று கொண்டு இருந்தாள். திவி “டேய்.. எருமை.. ஒரு சாவியை சுட்டு பைக்கை உருட்டிட்டு வரத்துக்கு கூட உனக்கு தெரியாதா? பக்கி” என்று கத்த,

தேவ் “ஏய்.. லூசு.. வண்டி ஸ்டார்ட் ஆகல.. நான் என்ன பண்ண.?”என்று இவனும் கத்தினான்.

சக்தி”பெட்ரோல் இருக்காடா?”

தேவ்”அதுலாம் இருக்கு . ஆனா ஸ்டார்ட் ஆகலயே!” என்று சிறுகுழந்தையாய் கூற,

திவி “இருக்குற கடுப்புல இவன் வேற! தள்ளு டா தக்காளி!” என்று வண்டியின் அருகில் வந்தவள், ஏதேதோ வண்டியை ஆராய்ந்து கொண்டிருந்தாள். இந்த கேப்பில் ஆதி இவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை..

திடீரென்று யோசனை வந்தவளாய், வண்டியில் சில வேலைகள் செய்திட, வண்டி ஸ்டார்ட் ஆனது..

சக்தியும், தேவ்வும் அவளை “ஆ” வென பார்த்திட, திவி “ஈ.. புகுந்திட போகுது.. க்ளோஸ் இட்” என்று வாயை மூட சொல்ல,

சக்தி”என்ன பண்ண திவி.?” என்று ஆர்வமாய் கேட்டிட,

திவி “அதுலாம் தொழில் ரகசியம்..” என்றாள்.

அந்நேரம் ஆதிக்கு பைக் மோட் டீ ஆக்டிவ் என்று தகவல் வர, ஆதி “சரியான கேடி தான் டி நீ” என்ற குரலில் மூவரும் அதிர்ந்தனர்.

ஆதி அவர்கள் பின்னால் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

தேவ் “அது வந்து அண்ணா.!” என்று இழுக்க, ஆதி மூவரையும் தீயாய் முறைத்துக் கொண்டு இருந்தான்.

திவி “ஹாய் ஆதி!.. குட் நைட்.. பை!” என்று நகர, அவளின் கையை பிடித்து முதுகுப்புறம் வளைத்தவன், “எங்க டி எஸ்கேப் ஆகுற.? ” என்று அவளை இழுத்துக் கொண்டு, “நீங்களும் ரூமுக்கு வாங்க டா ” என்று விட்டு சென்றான்.

மூவரும் பாவமாக அவன் அறைக்கு வந்தனர். ஒரு மணி நேரமாக அட்வைஸ் செய்து, திட்டித்தீர்த்தான். அனைத்தையும் தேவ் சொல்லி முடிக்க, கோகுல் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான்.

திவி “இவன் என்ன லூஸா.? இதுல என்னக் காமெடி இருக்குன்னு இப்படி சிரிக்கிறான்?” என்று யோசித்திட,

தேவ் “நம்ம குடும்பத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன்ல இருப்பாய்ங்க போல?” என்று பார்த்தான்.

ஆதி “அதான் சொல்லியாச்சுல.. கண்டினியூ” என்று கூற, தேவ்வும், திவியும் தோப்புக்கரணத்தை தொடர்ந்தனர்.

தேவ் முடித்து இருக்க, திவி தொடர்ந்தாள். ஆதி தேவ்வையும், கோகுலயும்அனுப்பி விட்டான்.

திவியும் தோப்புக்கரணம் போட்டு முடித்தாள். மணி மூன்றை தொட்டு இருந்தது.

ஆதி சக்தியிடம் ” கொஞ்ச நேரம் வெளில வெய்ட் பண்ணுடா.. உன் தொங்கச்சி வருவா” என்று அவனை அனுப்ப, பாவம் அவன் தான் திவியை பாவமாக பார்த்துகொண்டு போனான்.

திவியின் அருகில் வந்தவன், கட்டிலில் அவளை அமர வைத்து, காலைத்தூக்கி தன் மடி மீது வைத்தான். திவி பதறி “ஏய்.. என்ன செய்ற?” என்று கேட்க, அவன் முறைத்த முறைப்பில் அமைதியானாள்.

ஆதி மருந்தை எடுத்து அவள் காலில் தேய்த்து விட்டு கொண்டே “ரொம்ப வலிக்குதா?” என்றான் வருத்தமாக..

திவி “இல்லையே.. ரொம்ப நல்லா இருக்கு” என்று விட்டு, “ஆளப் பாரு.! பனிஸ்மெண்ட்டும் தருவாராம்.. கடைசில மருந்தும் போடுவாராம்.. டேய் நீ என்ன டிசைன் டா.. பட் இதுவும் நல்லா தான் இருக்கு” என்று மனதில் கோபமாய் ஆரம்பித்தவள் காதலாய் முடித்தாள்.

அவள் கூறிய பதிலில் வலியுடன் வலிமிகுந்த காலை நீவி விட்டான். “என் கிட்ட கேட்டா நான் கூட்டிட்டு போக மாட்டேனாடி.?” என்று ஏக்கமாய் கேட்டவனை, பார்க்கவே திவிக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

திவி “நீ உடனே கார் எடுத்துட்டு தான் வருவ.. அது மட்டும் இல்ல.. நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா தேவ் கூட கொஞ்ச நேரம் பேசுவேன்..இல்லன்னா இந்த மாதிரி லாங் ட்ரைவ் போவேன்” என்று சிறுபிள்ளையாய் கூறினாள்.

ஆதி அவளின் அருகில் வந்து, “நான் காலைல உன்கிட்ட என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா.?”என்று வினவ, திவி இல்லை என்று புரியாமல் அவனைப் பார்த்தான்.

ஆதி காலையிலேயே கூறி இருந்தான். இனி எந்த உணர்வாக இருந்தாலும் தன்னிடம் மட்டுமே காட்ட வேண்டும் என்று.. இப்போது அவள் இந்நேரத்தில் சென்றதுக்கு மட்டும் அவன் இவ்வாறு செய்யவில்லை, தன்னிடம் கூறாமல் தன் தம்பியிடம் கூறி வெளியில் செல்ல இருந்தது தான் அவனுள் பொஸஸிவ்வை ஏற்படுத்த, தன்னை மீறி அவள் மேல் வேறு யாரும் உரிமை எடுக்க கூடாது என்று எண்ணிதான் இவ்வாறு செய்தான். ஏனோ தான் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்று கூட அவனால் யோசிக்க முடியவில்லை.. தன் காதல் அவளுக்கு மட்டுமே.. அதே போல் அவள் காதலும் தனக்கு மட்டுமே என்று எண்ணம் அவனை ஆட்டிப்படைத்தது.

அவளின் வலி இவனின் உயிர் ஆழம் வரை சென்று தாக்க, மனதளவில் தன்னையே நொந்து கொண்டான் ஆண்மகன்.

ஆதி “உன்கிட்ட ஒண்ணு கேக்கணும் டி”

திவி “ம்ம்ம்.. கேளு..”

ஆதி “புடவை எடுக்குறப்போ ரவீயும் நம்ம கூட தான் இருந்தா. அதுக்கு அப்ரோம் நீ ஏன் ரவீய பாக்க பார்க்குக்கு போன.?”

திவி ‘அயோ, கரெக்ட்டா பாய்ண்ட்ட பிடிக்குறானே..’ “அது சக்தி அண்ணாவால தான்”

ஆதி “என்ன, சக்தியாலயா?”

திவி “ஹ்ம்ம்.. ஆமா.. உடனே அது என்னதுன்னு கேக்காத. அது ஒரு விஷயம் நேரம் வரப்போ சொல்றேன். ஓகே வா.?”

ஆதியும் சரி என்றான்.  பின், ஆதி அவளின் தலையை வருடி, ஓரு ஆழ்ந்த நெற்றி முத்தம் வைத்திட, திவிக்கு மனது லேசானது போல் ஒரு உணர்வு..

ஆதி “நீ வீட்டுக்கு போ.! விடிஞ்ச உடனே காலைல ஆபீஸ்ல வந்து என்னைப் பாரு.. ஓகே வா.!” என்று கூறினான்.

அம்முத்தத்தை உணர்ந்து கொண்டே, திவி “சரி” என்று தலையை ஆட்டினாள்.

திவி கட்டிலில் இருந்து இறங்கி நடக்கத் தடுமாறிட, ஆதி அவளைக் கைத்தாங்கலாக கீழே அழைத்து வந்தான்.

திவி அவனைப் பார்க்க, ஆதி “என்னடி குட்டச்சி.?” என்றான் குறும்பாய்..

திவி “இல்ல.. நடக்க முடியல.  தூக்கிட்டு போவன்னு நினைச்சேன்” என்று கூற,

ஆதி “ஏய்.. குட்டச்சி.. நீ ரொம்ப படம் பாக்குற போல.. இதுலாம் கல்யாணத்துக்கு அப்ரோம் தான்.. ஒழுங்கா ரெஸ்ட் எடு” என்று அழைத்து வந்தான்.

திவி ‘ஆமா.. கிஸ்லாம் அடிப்பானா.. தூக்கிட்டு போறது கல்யாணத்துக்கு அப்ரோம் தானா.. அவ்ளோ நல்லவனா டா நீ?’ என்று மனதிற்குள் கேட்டாலும் வெளியில் அவனை ரசிக்கத் தான் செய்தாள்.

ஆதி “நாளைக்கு மீட் பண்ணலாம்.. குட் நைட்” என்று சக்தியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

கனவு தொடரும்.. 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்